All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனுவின் "உன் கன்னக்குழியில் வீழ்ந்தவன் நானடி..." - கதை திரி

Status
Not open for further replies.

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
UKVN-2:

1
"அருண், ஐ லவ் யூ" என்று சிறு வெட்கமுடன் அவனது கண்களை பார்த்து கீழே தரை பார்த்து ஒருவாறு கூறிவிட்டாள் சம்யுக்தா. அவள் கூறி முடித்தவுடன், அவனது கண்களில ஒரு விரக்தி சிரிப்புடன், அவளை பார்த்து பயங்கரமாக சிரிக்க தொடங்கினான். அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அவள் முழிக்க, அவளது வாயில்இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. அருண், நின்ற இடத்தில் இருந்தே கீழே விழுந்த அவளை பார்த்து புன்னகை செய்தான்.

"நான் என்ன தப்பு பண்ணுனேன் பேபி.. எதுக்கு நீ என்னை ஏமாத்துனாய்..உனக்கு என்னோட உயிர்தான் வேணும்னா என்கிட்டேயே கேட்டிருக்கலாமே.. நானே சந்தோஷமா உனக்கு என்னோட உயிரை கொடுத்து இருப்பேனே.. போயும் போயும் ஒரு சின்ன குழந்தைகிட்ட உன்னோட கொடூரத்தை காமிச்சிருக்கியே.. நீ
எல்லாம் பொண்ணா.. ராட்சசிடி.." என்று ஏக்கத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடித்தான்..

" அருண்.. பிளீஸ்.. நான் சொல்லவருவதை கேளுங்களே.." என்று தன்னிலை விளக்கம் குடுக்க முயல,
அவனோ ," உன்னை என்னோட கையாலையே கொல்லணும்னு இருந்தேன்..அதுனாலதான் உனக்கு குடுத்த ஜூஸ்ல விஷத்தை கலந்து குடுத்தேன்.. எத்தனை உயிரா உன்னை காதலிச்செனோ இப்போ அந்த அளவிற்கு உன்னை வெறுக்கிறேன்.. " என்று அவளை பார்த்து கத்தினான்..

" நீங்க என்னை வெறுத்தாலும் உங்ககிட்ட என்னோட காதலும் இருக்கு அருண்.. இல்லேன நீங்க நேத்து என்னோட .. என்கிட்ட உரிமை எடுத்திருக்கமாட்டீங்க..இப்பவும் உங்க மனசுல நான் இருக்கேன் ... அதுவே எனக்கு போதும்.. உங்கக்கூட நான் ஒரு நாள் வாழ்ந்துட்டேன்.. உங்க கையால சாகபோறேன்.. அதுவே
எனக்கு நிம்மதி.. நான் பண்ணுனது தப்புதான் ... ஆனால் வருண் விசயத்துல நான் தப்பு பண்ணுலை.. அதை மட்டும் நம்புங்க.." என்று உயிரை கையில் தேக்கியபடி வாயில் ரத்தம் வழிய, திக்கி திணறி ஒருவாறு கூறி முடித்தாள்..

2
அவள் பேசியதை கேட்டவன் மாநாடு காதலின் பால் உருக்கத்தான் செய்தது..இருந்தும் அவள் மேல் உள்ள வெறுப்பு அவள் சொல்வதை , அவளின் காதலை,ஆதங்கத்தை அவனின் மனதில் பதிய மறுத்தது.. விளைவு .. இன்று அவளின் உயிர்க்கு உயிரான காதல் மனைவி , உயிரோடு வதைபடுகிறாள் அவனின் கைகளால்..
அன்று வழிய சென்று தனது காதலை உணர்த்தியவன், இன்றோ அவளின் காதலை உணராமல் வெறுப்புடன் நோக்குகிறான்..அன்று வெறுப்புடன் இருந்தவள் , இதோ இன்று அவனது காதலில் உயிரை விட்டுக்கொண்டு இருக்கிறாள்..தனது கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள்..

"என்ன கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாயா ... இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?.. காதலர் தினம்.. காதலர்களுக்கு தான் அந்த தினம் எல்லாம்.. உனக்கு எனக்கு அதெல்லாம் இல்லை.. அதுக்கான தகுதி உனக்கில்லை.. உன்னை காதலித்து கல்யாணம் செய்ததால் எனக்கும் அந்த தகுதி இல்லை.. இருந்தாலும் சாகபோற உனக்காக நான் ஒண்ணு வச்சிருக்கேன்.. என்ன தெரியுமா?" என்று அடக்கபட்ட இயலாமை கோபத்துடன் கேட்டான்..

விசத்தின் தாக்கத்தால், கண்கள் மறுகிய நிலையில் , அவனது பிம்பத்தை தனது இதயத்தில் சேமித்துக்கொண்டு இருந்தாள் அந்த பேதையவள்.. அவன் கூறிய விஷயங்கள் அவள் காதை சென்றடைந்தாலும் மனமோ அவனது கோபத்தை ரசித்தது.. 'இந்த நிலையில் என்னால் வருணின் மரணத்தை விளக்க முடியவில்லை.. ஒரு நாள் உண்மை தெரியவரும்.. ஆனால் உனக்கு மட்டும் உண்மை தெரியவேக்கூடாது... அது தெரிஞ்ச நீ தாங்கவே மாட்ட அருண்... ' என்று மனதில் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தவள்.. அவனின் பேச்சை கண்டுகொள்ளவில்லை..

3
அவனோ கண்கள் மறுகிய நிலையில் இருக்கும் அவளை கண்டு இளகிய மனத்தினை அடக்கியவன், "பரிசு.. இந்த காதலர் தினத்திற்காக நான் உனக்கு தரும் காதல் பரிசு.. உன்னோட காதலர் தின பரிசு .. நீ இத்தனை நாள் ஆசைப்பட்ட ஒரு பரிசை நானே உனக்கு தருகிறேன்..என்னோட உயிர்.. இதுக்காக என்னோட
காதலை கொச்சை படுத்தி விட்டாய்.இன்னைக்கு நான் உனக்கு அதை பரிசா தருகிறேன் . உன்னோட காதல் பொய்யா இருக்கலாம். என்னோட காதல் உண்மை.. உன்னோட துரோகத்தை என்னால் மன்னிக்க இயலும். ஆனால் உன்னால போன ஒரு உயிரை அவர்களால் மன்னிக்க இயலுமா என்று தெரியவில்லை. அதுனால்
இந்த முடிவு." என்று அவனும் சரிந்து கீழே விழுந்தான்.

அவன் சரிந்து விழுந்ததை கண்டவள், அவன் அருகே செல்ல முயற்சிக்க , அவளால் முடியவில்லை.. உடலில் உள்ள பாகங்களில் விஷம் பரவ கைகளும் கால்களும் மரத்து வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் ஒழுக, இருந்தவள் , அவனை நோக்கி தனது இடுப்பின் மூலம் நகர முயற்சிக்க , அந்தோ பரிதாபம் அதுவும் அவளை சதி செய்தது.. அவளால் நகர முடியவில்லை.. இருந்தும் முயற்சிசெய்தாள்.. அணையபோகும் விளக்கின் ஜோதி போல, அந்த கடைசி நிமிடத்தில் அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று உந்த, அவள் அவனின் முகத்தருகே சென்று விழுந்தாள்.. தனதுகைகளை கொண்டு அவனது முகத்தை தடவ, அதில் விழித்தவன் , அவள் இருந்த நிலையை கண்டு கண்ணில் கண்ணீர் பெருக அவளை தன் மடியில் படுக்க வைத்து அழுதான்.. அதற்கு காரணம் அவன் என்பதை மறந்து அவளது முகத்தை வருடி அழுதுகொண்டு இருந்தான்..

7379

என்ன இருந்தாலும் அவனின் காதல் மனைவி அல்லவா.. அவள் மீது இருந்த வெறுப்பு அவளை கொல்ல தூண்டியது.. இப்போது அதே காதல் அவளின் நிலையை நினைத்து வருந்த வைக்கிறது.. அவளது இறுதி சில மூச்சுக்கள் அவனது மடியில் இருந்தபடி விட, கண்கள் சொருக , "யுக்தா.. யுக்தா... யு..க்தா.. " என்று அவளை
தட்டி எழுப்ப, அவனது பின் மண்டையில் இரும்பால் அடி விழுந்தது....'யுக்தா' என அவன் கீழே சாய, அவளோ பதறி, இழுக்க அவளது இறுதி மூச்சு உயிர் எல்லாமே அடங்கியது.. மீண்டும் அவனது மண்டையில் அடி விழ திரும்பி அந்த அடித்த உருவத்தை பார்த்தான்.. அருணின் விழிகள் அங்கே இருந்தவர்களை
மனதில் பதிய வைத்தது.. அவன் வாய் திறக்க , அவனது வாயிலும் அடிக்க , அப்போது உள்ள வந்த
திவ்யா ,"இன்னும் இவன் சாகவில்லையா.. " என்றபடி உள்ளே வந்தாள்..

4
உள்ளே வந்தவள் , அருணை பார்க்க , அருகே இருந்தவன் அவனது முடியை பிடித்து முகத்தை திவ்யாவிற்கு காட்ட, அவளோ குனிந்து , "சோ சேட்.. இதுக்கு நீ உன் கையாலையே உன்னோட ஆசை அருமை காதல் மனைவியை கொன்னுட்ட.. பாவம் அவள் ..இல்லை இல்லை .. பாவம் எல்லாம் இல்லை .. அவளுக்கு
தேவை தான்.. எனக்கு தெரியாம அவ உன்னோட வாழ்க்கைக்குள்ள வந்தது அவளோட தப்பு.. நீ ஆசைப்பட்ட பாரு அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. அவ சாகணும்.. உன்னோட கையால அவளை கொல்லணும்னு நினைத்தேன் .. அதேமாறி பண்ணிடியேடா.. வெரி குட்... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..
அதேமாறி நீ என்னோட சந்தோஷத்தை பார்த்துட்டே செத்து போ.. " என்று இரும்பு தடியால் அடிக்க ,அவனது உயிர் அவனை விட்டு பிரிந்தது..

வேலை முடிந்த திருப்தியில், சோ சேட்.. பாவம் .. ரெண்டு பேருமே செத்து போய்ட்டாங்க.. என்னோட பிளான் வெற்றி அடைந்து விட்டது...இனிமேல் என்னோட ராஜ்ஜியம் தான்.." என்று பேய் போல சிரித்து தனது வெற்றியை கொண்டாடிகொண்டு இருந்தாள் திவ்யா..

தகவல் சொல்லவேண்டியவர்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி , மருத்துவமனைக்கு எடுத்து சென்று போஸ்ட் மார்ட்டம் பண்ணியஉடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறக்கினாள் திவ்யா..

அதன் பின் நடைபெறவேண்டிய சடங்குகள் இருவரது வீட்டினரின் முன்னிலையில் நடக்க, வஞ்சத்திலும் சூழ்ச்சியிலும் ஏமாந்து இரு உயிர்கள் பறிபோனது.. இரு உடல்களும் ஒன்றாக வைத்து சிதையூட்ட ஏற்பாடு செய்ய , திவ்யா அதனை தடுத்து தனித்தனியாக சிதையூட்ட செய்தாள்.. இருவரது உடல் கூட ஒன்று
சேரக்கூடாது என்ற நல்ல எண்ணம் தான் ..

மனதில் காதல் இருந்தும் வெறுப்புடன் இருந்த இருவரும் தங்களது தவறை உணராது உயிரைவிட்டனர்.. அவர்களின் இதயமில்லா உடலும் எரிந்து சாம்பல் ஆனது...

இதோ இத்தோடு அருண் - சம்யுக்தா கதை முடிந்ததாக எண்ணி சந்தோசபட்டுக்கொண்டிருக்கும் திவ்யா, செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிப்பாளா? அதை இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்..

ac.jpg
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6
" அம்மா.. அம்மம்மா... அம்மா...அம்மா அம்மம்மா.." என்று டேபிளில் தாளம் தட்டியபடியே அம்மாவை கூப்பிட்டாள் குழலி என்னும் வண்டார் குழலி...

"ஏண்டி இந்த கத்தி கூப்பாடு போடுற.. என்ன வேணும்.." என்று எரிச்சலுடன் மசாலா செய்த கையுடன் வந்து நிற்க, " சும்மா கூப்பிட்டு பார்த்தேன்..சரி சரி ..என்னை இவ்வளோ பாசமா பார்க்குறதை விட்டுட்டு ஒரு பாயசத்தை ரெடி பண்ணு மம்மி..." என்று மீண்டும் அம்மா பல்லவியை தொடங்க," ஏண்டி ஏழு கழுதை
வயசாகுது.. இன்னும் நீ கிச்சன் பக்கம் எட்டி பார்க்கமாட்டேன் இங்க உக்காந்து வக்கணையா தின்னுட்டு இருக்க.. அதுல உனக்கு பாயசம் வேற வேணுமாக்கும்.. இன்னைக்கு உனக்கு ஒன்னும் கிடையாது.. வெறும் ரசம் தான்.." என்று கூறிவிட்டு உள்ளே செல்ல,
"அம்மா.. என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க.. எங்கம்மா சாப்பாட்டுல எனக்கு உப்பு போட்டு தான் குடுப்பாங்க.. இனிமேல் இந்த வீட்டுல இங்க உக்காந்து நான் சாப்பிட மாட்டேன்.. இது எங்க அம்மா கங்கம்மா.. ச்சீ.. சரசம்மா மேல சத்தியம் சத்தியம்.. " என்று வராத கண்ணீரை துடைத்து விட்டு
அன்னையை நோக்கினாள்..

7380

அவர்கள் பதில் பேசாமல் இருக்க,' அச்சோ இன்னைக்கு லஞ்ச் கட்டா.. பேசாம வாயை வச்சுகிட்டு சும்மா இருந்து இருக்கலாம்.. ஹ்யோ. சிக்கன் மட்டன் மீன் எல்லாமே போட்சே... சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்..' என்று நினைத்து விட்டு டிவியை ஆன் செய்து பார்த்தாள்..

மதிய நேரம் என்பதால் சமையல் குறிப்புகள் செய்முறைகள் என்று அதில் ஓட கடுப்பானவள், பாட்டு சேனலை போட்டாள்.. அதிலும் கல்யாண சமையல் சாதம் .. இந்த பொறப்புதான் பாடல் வர அதில் மேலும் கடுப்பனாவள் சிரிப்பொலி சேனலை போட அங்கே ஒரு படத்தில் ராமராஜன் அவர்கள் கவுண்டமணி வீட்டில் ஒரு இலை முழுக்க சாப்பாடு வைத்து சாப்பிடுவதை பார்த்து டிவியை ஆப் செய்துவிட்டு தனது வயிற்றை பார்த்து புலம்பினாள்..' எவந்தான் கண்டுபிடிச்சனோ.. இந்த பசியை.. ஒரு ஜான்.. இல்லை இல்லை அரை ஜான் வயிற்றுக்கு என்ன பாடு படவேண்டி இருக்குது... ம்ம்ம்.. ம்ம்ம்.. வாசனை தூக்குதே... இப்போ எப்படி அங்க போகிறது... ' என்று யோசித்துக் கொண்டே செல்கிறாள்..
7383

7
கிட்சென் அருகில் சென்று ,"அம்மா.. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா..தாயிற்சிறந்ததொரு கோவிலும் இல்லை.. தாயில்லாமல் நானும் இல்லை.. " என்று ஒரு ரோஜாவை அவர்கள் கையில் குடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தாள்..

அவள் அம்மா அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,"லூசா நீ.. அன்னையர் தினம் நேத்து.. காலண்டர்ல தேதி கிழிக்கமா இருந்தா நேத்து இன்னைக்குன்னுஆகிடுமா.. நீ எவ்ளோ தகிடுதித்தம் பண்ணினாலும் உனக்கு இன்னைக்கு நோ சிக்கன் நோ மட்டன்..ஒரு பீஸ் ஃபிஷ் தான்... போய் உட்காரு.." என்று சொல்ல..

" மம்மி... நான் உங்க மேல சத்தியம் பண்ணிருக்கேன் மம்மி.. அதுனால எனக்கு போட்டுதாங்க.. நான் சோபால படுத்துகிட்டு சாப்படுறேன்.. " என்று கூறி முடிக்கும் முன் அவள் தலையில் நான்கு கொட்டுகளை வைத்தவர் , தட்டில் இருந்த ஒரு மீனையும் எடுத்துகொண்டு உள்ளே சென்றார்..

குழலியோ,' சரசு .. உனக்கு வர வர பிள்ளை மேல கைவைக்க பயந்துகிட்டு அவ சாப்பாட்டு மேல கை வைக்குற.. இரு உன்னை அப்பாகிட்ட மாட்டிவிடுறேன்... ஹையையோ...வடை போட்சே.. மீனு போச்சே.. சிக்கன் மட்டன் மற்றும் அதன் உடல் உறுப்புக்கள் எல்லாம் போச்சே.. என்று சோகமாக தந்தை கிருஷ்ணனின் வரவிற்கு காத்திருந்தாள் நாம் கதையின் நாயகி குழலி.. அப்படியே சோபாவில் படுத்தபடி உறங்கிவிட்டாள்..

சரசு சமையலறை வேலைகளை முடித்துவிட்டு , ஒரு குளியல் போடலாம் என்று குளியல் அறை நோக்கி செல்ல , அதை உறங்குவது போல கவனித்துக்கொண்டு இருந்த குழலி , அவர் உள்ளே சென்றதும் சமையலறை நோக்கி சென்று தனக்கு தேவையானதை முகர்ந்தே ,'இது சிக்கன் வறுவல்', 'இது
சுக்கா', இது மட்டன் ஃப்ரை', இது மட்டன் சூப், இது ஃபிஷ் ஃப்ரை, மீன்குழம்பு, மட்டன் கிரேவி, சிக்கன் லாலிபாப்.. மட்டன் ஈரல்,கிட்னி.. அடேங்கப்பா.. பையன் வாரான்னு எத்தனை ஐட்டம்.. இன்னைக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான் என்று தட்டில் அளவாக எல்லாவற்றையும் வைத்து டேஸ்ட் பார்த்து விட்டு ,
அங்கேயே தட்டை கழுவி வைத்துவிட்டு பழையபடி உறங்க சென்றாள்..

8
7381
உள்ளே கிருஷ்ணன் வந்ததும் , அவர் வாசலில் உறங்கும் மகளை பார்த்து சிரிப்படன் உள்ளே சென்று குளித்துவிட்டு, அவளது பாதத்தை தனது மடி மீது வைத்து பிடித்துவிட்டார்.. அவளுக்கு இதமளிக்க அரைக்கண்களுடன் விழித்தவள் , அவளது அப்பாவை நோக்கி , " கிச்சு, சரசு எனக்கு சாப்பாடே போடுல கிச்சு.. நீ என்னானு கேளு" என்று அவரது மடியில் தலை வைத்து படுத்து உறங்கிவிட்டாள்.. உறங்குவது போல நடித்துக்கொண்டு இருந்தாள்..
அவளைபற்றி அறிந்த அவளது தந்தை , "ஏய்.. சரசு .. இங்க வா .. எதுக்கு பிள்ளைக்கு சாப்பாடு போடாம இருக்க? அறிவில்லை உனக்கு .. பாவம் என் பொண்ணு பசியால வாடி போய்ருக்கா.. " என்று சரசை சிரித்துக்கொண்டு திட்ட ,சரசுவோ ," இது உங்களுக்கே நல்ல இருக்க.. ஏழு கழுதை வயசாச்சு.. கொஞ்சமாவது எனக்கு வீட்டுல ஹெல்ப் பண்ணனுமில்ல.. ஒண்ணும் பண்ணுறது இல்லை.. இவளுக்கு எல்லாம் நீங்க சப்போர்ட்.. அந்த தெனாவெட்டுல இவ இப்படி இருக்க , அடியே.. கூறுக்கெட்டவளே.. போதும் நடிச்சது.. எந்திரி.. " என்று அவளது தலையில் கொட்டிவிட்டு உள்ளே சென்றார்..


'நாம நடிச்சது தெரிஞ்சுடுச்சோ.. அவ்வளவு கேவலமாவா நடிக்கிறோம்' என்று வரும் ஆனா வராது என்ற பாணியில் சொல்லிவிட்டு தந்தையுடன் சாப்பிட சென்றாள்.. சரசுவிடம், பையன் அலுவக வேலையாக இருப்பதால் இன்று வரமுடியாது என்று கூறி இருப்பதை சொல்ல,நம்ம குழலியோ ,' அடச்சே.. இது தெரிஞ்சு
இருந்தா முன்னாடி நாம நிறைய எடுத்து சாப்பிட்டு இருக்கலாமே.. டேய் விதுஷ்.. நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னோட சாப்பாட்டுல கை வைக்குறடா....' என்று மனதில் நினைத்துவிட்டு, தனது பெரிய தட்டை எடுத்து வைத்து ," சரசு .. அதான் உன் பையன் வரலையே.. சோ சாப்பாடு எல்லாம் வீணாகிடும்.. அதுனால எல்லாத்தையும் எனக்கு வை.. நீ ஒரு துண்டு தரமாட்டேனு சொன்ன.. பார்த்தியா கடவுளை.. அத்தனையும் எனக்கே எனக்குனு குடுத்துட்டார்.. இதுக்குதான் கொஞ்சமாவது நல்ல மனசு வேணும்னு சொல்லுறது.. சரி சரி. பாசமா பார்க்காத.. சீக்கிரம் வை.. நான் படுத்துட்டே சாப்பிடணும்.. என்ன முழிக்கற.. உன்மேல சத்தியம் பண்ணுனேன்ல, இனி இங்க உட்கார்ந்து சாப்பிடமாட்டேனு.. அதான் ஹால்ல டி‌வி பார்த்துட்டே சாப்டிறேன்.." என்று அனைத்தையும் வாங்கிக்கொண்டு சென்று சாப்பிட்டாள்.. மனதில் ,' கல்யாண சமையல் சாதம்.. அசைவகறிகளும் பிரமாதம் ... ' என்று கவுண்ட்டர் குடுத்தபடியே ரசித்து ருசித்து சாப்பிட்டாள்..

7382
*****************************************************************************************************************************************

ஹாய் ஃபிரண்ட்ஸ்..

இதோ உன் கன்னகுழியில் வீழ்ந்தவன் நானடி - இரண்டாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன்.. படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிரவும்...

 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..

எல்லாரும் நலமா இருக்கீங்களா?...


என்னடா இவ கதை எழுதுறேனு ஆரம்பிச்சு ஆடிக்கு ஒருக்கா அம்மாவாசைக்கு ஒருக்கா.. அப்டேட்ஸ் குடுக்குறாளே அப்படின்னு என்மேல செம கோவத்துல இருக்கீங்க போல..
எனக்கே புரியுது ப்ரெண்ட்ஸ்..

என்னை எல்லாரும மன்னிச் சுடுங்க ப்ரெண்ட்ஸ்.. ரம்ஜான் பண்டிகை அப்போ பல்க்கா அப்டேட்ஸ் தரேன்னு சொல்லியிருந்தேன்.. அதை என்னால குடுக்க முடியலை.. நான் பாதி டைப் பண்ணிவச்சு இருக்க லேப்டாப் வொர்க் ஆகலை.. அதுல இருந்து என்னோட பைல் டிரான்ஸ்ஃபர் பண்ண முடியலை.. அதுக்குள்ள நானும் கொஞ்சம் பர்சனல் வொர்க் ல பிஸி ஆகிட்டேன்..

இனி நான் அப்டேட்ஸ் எல்லாம் மொபைலில் தான் புதுசா டைப் பண்ணும்.. அதுக்கு கொஞ்சம் கொஞ்சம் டைம் வேணும்.. அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் pannikongha ப்ரெண்ட்ஸ்.. தென் மொபைல் டைபிங் அதுனால அப்டேட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா வரும்.. அதாவது part a ,part b .. ippad than குடுக்க முடியும் ப்ரெண்ட்ஸ்.. ஓகே வா...

அப்புறம் இன்னொரு விசயம்... என்னோட முதல் கதையை நான் இங்கே பதிவிட போகிறேன்.. சில திருத்தங்களுடன்.. லாஸ்ட் வீக் தான் அந்த ஐடியை நான் லாகின் செய்தேன்.. அந்த கதை logic Ellam illai.. first எழுதினேன்.. எப்படி இருக்குன்னு படிச் சு பாருங்க... முடிந்தவரை டெய்லி அப்டேட் குடுக்கறேன்...

பின்குறிப்பு:
மொபைலில் ஈசியா டைப் செய்வ து எப்படி என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.. நான் ஒரு ஒரு வார்த்தையா தேடி கண்டுபிடித்து டைப் செய்ய நேரமாகிறது..
 
Status
Not open for further replies.
Top