All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனுவின் "உன் கன்னக்குழியில் வீழ்ந்தவன் நானடி..." - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

எனக்கும் கதை எழுதனும் என்று ஒரு ஆசை.. அதை இந்த தளத்தில் எழுதுவதற்கு அனுமதி தந்து திரி அமைத்து குடுத்த ஸ்ரீ கலா சகோதரிக்கு மிக்க நன்றி..

எனது கதையின் பெயர்

உன் கன்னக்குழியில் வீழ்ந்தவன் நானடி

சாதாரண கரி பட்டை தீட்டபடும் போது வைரமாக ஜொலிக்கிறது. அதேபோல
அறிமுக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வாசகர்களாகிய உங்களின் கருத்துக்கள் மூலம் பட்டை தீட்டும் போது வைரம் போல ஜொலிக்க ஆரம்பிக்கும்.

நீங்களும் எனது கதையை படித்து விட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். அது என்னை பட்டை தீட்டி கொள்ள உதவும்.

இது ஒரு காதல் கதை..சாதாரணமான காதல் கதை என்னுடைய பாணியில் ... உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் முதல் அத்தியாத்துடன் வருகிறேன்..

இப்படிக்கு,
தனு
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு சின்ன டீஸர்:


"அருண், ஐ லவ் யூ" என்று சிறு வெட்கமுடன் அவனது கண்களை பார்த்து கீழே தரை பார்த்து ஒருவாறு கூறிவிட்டாள் சம்யுக்தா.



அவள் கூறி முடித்தவுடன், அவனது கண்களில ஒரு விரக்தி சிரிப்புடன், அவளை பார்த்து பயங்கரமாக சிரிக்க தொடங்கினான். அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அவள் முழிக்க, அவளது வாயில்
இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது.


அருண், நின்ற இடத்தில் இருந்தே கீழே விழுந்த அவளை பார்த்து புன்னகை செய்தான்.


அவளோ ,"என்னை மன்னித்து விடு அருண். உனக்கு செய்த துரோகத்திற்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான்.." என்று தனது இறுதி மூச்சை கையில் பிடித்துக்கொண்டு அவனை நோக்கி வேண்டினாள்.



"உன்னோட காதலர் தின பரிசு ..
நீ இத்தனை நாள் ஆசைப்பட்ட ஒரு பரிசை நானே உனக்கு தருகிறேன்..என்னோட உயிர்.. இதுக்காக என்னோட காதலை கொச்சை படுத்தி விட்டாய்.இன்னைக்கு நான் உனக்கு அதை பரிசா தருகிறேன் . உன்னோட காதல் பொய்யா இருக்கலாம். என்னோட காதல் உண்மை.. உன்னோட துரோகத்தை என்னால் மன்னிக்க இயலும். ஆனால் அவர்களால மன்னிக்க இயலுமா என்று தெரியவில்லை. அதுனால் இந்த முடிவு."
என்று அவனும் சரிந்து கீழே விழுந்தான்.

"சோ sad... பாவம் .. ரெண்டு பேருமே செத்து போய்ட்டாங்க.. என்னோட பிளான் வெற்றி அடைந்து விட்டது...இனிமேல் என்னோட ராஜ்ஜியம் தான்.." என்று பேய் போல சிரித்து தனது வெற்றியை கொண்டாடிகொண்டு இருந்தாள் திவ்யா..


images (2).jpeg
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு சிறிய அறிவிப்பு :

நான் அழகிய சங்கமம் போட்டிக்கு கதை எழுதுவதால் என்னால் இங்கே கதைகளை பதிவிட முடியவில்லை.
அங்கே கொஞ்சம் அதிக முயற்சி .எடுத்து ஓட்டை லேப்டாப்-ஐ வைத்து பதிவுகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

அந்த கதை முடிந்தவுடன் ஸ்ரீமாவிற்கு அனுப்பிவிட்டு, இங்கே தொடர்ந்து பதிவுகளை தருகிறேன் ..

கால தாமத்திற்கு அனைவரும் என்னை மன்னிக்கவும்.

ஏப்ரலின் கடைசி தினங்களில் ..முதல் அத்தியாயதோடு உங்களை சந்திக்கிறேன்..

இப்படிக்கு

உங்கள் தனு......
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

இன்று முதல் இரண்டு அத்தியாயங்களுடன் விரைவில் வருகிறேன்...

நன்றி...

இதோ நம்ம ஹீரோ அண்ட் ஹீரோயின்...

Geetha_Govindam_3.jpeg
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
UKVN - 1:

மாலை மங்கி இரவின் தொடக்கத்தில் சென்னை மாநகரின் வெளியே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக வாங்கபட்ட ஆடி கார் சாலையை கிழித்து சென்று கொண்டு இருந்தது.
அதில் உள்ளே இருந்தவனின் மனமோ உலைகலனை விட அதிகமாக கொதித்துக்கொண்டு இருந்தது. அதை தனது விரிந்த புன்னகை முகத்தில் மறைத்தபடி, வேகமாக சென்று கொண்டு இருந்தான்.

அவனது அருகில் அமர்ந்து இருந்தவளோ , அவனது வேகத்தை கண்டு பயப்படாமல், அவனையே காதலாக பார்த்துக்கொண்டு இருந்தாள்..

அவன் திரும்பி பார்க்க, அவளது கண்களில் தோன்றிய காதலில் ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும் , அதை அவளது நடிப்பு என்று ஒதுக்கிதள்ளினான்.. அவளை பார்த்து சிரித்துவிட்டு , இன்னும் வேகமாக வண்டியை செலுத்திக்கொண்டு அவனது ரிசார்ட் க்கு சென்றான்..

பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் இறங்கி மறுபக்கம் சென்று அவளை தனது கைகளில் ஏந்திக்கொண்டு அவனது அறைக்கு சென்றான்..

கைகளில் இருந்தவளோ , அவனது அணைப்பில் முகம் சிவக்க அவனை பார்க்க முடியாமல் நெஞ்சிலேயே சாய்ந்து அவனது இதயதுடிப்பை ரசிக்க தொடங்கினாள்..

அவள் மனமோ ,'நான் இறந்தாலும் இந்த இதயத்தை இதன் துடிப்பை கேட்டுக்கொண்டே இறக்கவேண்டும், கடவுளே .. எனது இந்த கோரிக்கையை மட்டும் நிறைவேற்றி விடு.' என்று கடவுளிடமும் கோரிக்கை வைத்தாள்..

அறைக்குள் நுழைந்தவன் , அவர்களுக்கென்று தனியாக அழகாக அமைக்கபட்ட முதலிரவு அறையை பார்த்து விட்டு, அவளை பெட் மீது கிடத்தினான்..

அவனது இதயதுடிப்பு தன்னை விட்டு விலகிடுமோ என்ற பயத்தில் விழித்தவள் ,அவன் தன்னை பெட் மீது விட்டவுடன் , அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து , அவனை தனது முகத்தின் அருகே இழுத்தாள்.

அவனது கண்களை நேராக பார்த்து, " அருண் ...ஐ அம் இன் லவ் வித் யு.. ஐ நோ.. நீயும் என்னை லவ் பண்ணுற.." என்று கூறியவள் அவனை பேசவிடாமல் அவனது இதழ்களை சிறை செய்தாள் சம்யுக்தா..

அவளது காதலில் கட்டுண்டவன் கணவனாக அவளிடத்து உரிமை எடுக்க தொடங்கினான் மனதில் உள்ள கோபங்களை மறந்துவிட்டு..அவனது தேடல் தொடங்கி, அவளுள்ளே புதைந்தவன் மனதில் நிம்மதி கூடி
ஏறியது.. அதன் கூடவே அவள் மீது உள்ள வெறுப்பும்..தனது கூடலை முடித்துக்கொண்டு அவளை விடுவித்தவன் உறங்காமல் காலை செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தான்..

மறுநாள் காலை எழுந்தவள் ,அவன் அருகில் இல்லாது, நேற்றைய நிகழ்வை நினைத்து அவளது முகம் செம்மையுற்றது..

அவள் குளித்து தயாராகி வர, அருணோ அவளிடம் ஜூஸ் குடுத்தான்.. அதை வாங்கி பருகியவள் அவனை பார்த்துக்கொண்டே அதை ரசித்து ருசித்து பருகினாள்..

அவனிடம் கண்ணாடி டம்பளரை தந்தவள் , நெருங்கி அவனருகே சென்று,"அருண், ஐ லவ் யூ" என்று சிறு வெட்கமுடன் அவனது கண்களை பார்த்து கீழே தரை பார்த்து ஒருவாறு கூறிவிட்டாள் சம்யுக்தா.

7213
அவள் கூறி முடித்தவுடன், அவனது கண்களில ஒரு விரக்தி சிரிப்புடன், அவளை பார்த்து பயங்கரமாக சிரிக்க தொடங்கினான். அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அவள் முழிக்க, அவளது வாயில்இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது.

அருண், நின்ற இடத்தில் இருந்தே கீழே விழுந்த அவளை பார்த்து புன்னகை செய்தான்.
***********************************************

சென்னை விமான நிலையம்..

வழக்கம் போல , செக்கிங் செக்யூரிட்டி என்று அனைத்தையும் முடித்துவிட்டு வெளியே வந்த விஜய் , அவனது கைபேசிக்கு வந்த கார் நம்பரை தேடிபார்க்க, அதனுள் ஏறினான்..

"டிரைவர் .. கோ டூ சோழ பேலஸ் " என்று கட்டளையிட்டு தனது மொபைலை நோண்ட, வண்டியும் வேகமெடுத்து சென்னை டிராஃப்பிக்கில் மாட்டி ஒருவாறு வந்துகொண்டு இருக்க , காரின் வேகம் மட்டுபட்டு நின்றது.
டிரைவர் அவனிடம் மன்னிப்பு வேண்டி , வண்டியின் பேனட்டை திறந்து அதை சரிபார்க்க , உள்ளே ஏ‌சியின் வழியாக வந்த குளோரோஃபார்ம் உபயத்தில் , விஜய் மயக்கமானான்.. அவனது உடமைகள் எல்லாவற்றையும் வீசி எறிந்துவிட்டு, வேறு உடை அணிய வைத்து அவனை அவர்களது இடத்திற்கு கூட்டிசென்றார்கள்..


அந்த நாள் மாலை... சென்னையில் உள்ள அனைத்து காவலர்களும் முடுக்கிவிடப்பட்டு விஜயை தேடும் பணியினை மேற்கொண்டனர்..பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்..

மறுநாள் அனைத்து செய்திகளிலும் இதே செய்திதான்..

'நேற்று காலை , பிரபல சினிமா நடிகரும், தொழிலதிபருமான விஜய் தேவ் என்னும் VDK சில மறைமுகமான இயக்கங்களால் கடத்தபட்டுள்ளார்.. இதுவரை அவரை பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.. '

7212

யார் அவர்கள்... விஜயை எதற்கு கடத்தவேண்டும்?...
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரண்ட்ஸ்...

உன் கன்னகுழியில் வீழ்ந்தவன் நானடி - முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன் ... படித்துவிட்டு தங்களது கருத்துக்களை கூறவும்..

 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

உன் கன்னக்குழியில் வீழ்ந்தவன் நானடியில் இருந்து ஒரு சின்ன டீ..

"மேடம்.. உங்க பேரு என்னானு நான் தெரிஞ்சுக்கலமா?" என்று கேட்ட நெடியவனை பார்த்து,சிறிது யோசித்துவிட்டு "வண்டார் குழலி" என்று கூறினாள்..

அவளது பெயரை உச்சரித்து பார்க்க முடியாமல்,
"எதுவாவேனா இருந்துட்டு போகுது.. இனிமேல் உன்னோட பேர்.. ஜிங்கிலி.. சரியா..இந்த என்னோட பேக்கை தூக்கிட்டு வா.." என்று முன்னே நடக்க தொடங்கினான் VDK என்னும் விஜய்..

அவனை முறைத்துக்கொண்டு இருந்தவள் அவன் முன்னே செல்ல, அங்கே இருந்த இடத்தை பார்த்து பயந்து, அதற்கு அவனுடனே செல்லலாம் என்று பின்னாலயே ஓடினாள்..

' டேய் தாடிபயலே.. என்னோடது எவ்ளோ அழகான தமிழ் பெயர்.. அதை விட்டுட்டு ஜிங்கிலின்ன சொல்லுற.. இருடா எனக்கும் ஒரு நேரம் வரும்.. இன்றையில் இருந்து நீ டும்கிடும் என்று குழலியால் அழைக்கப்படுவாய்' என்று மனதிற்குள்ளேயே கருவினாள்..

அவளிற்கு பசி எடுக்க, அவன் அறியாமல் பேக்கை திறந்தவள், அதில் உள்ள பழங்களை சாப்பிட்டுக்கொண்டு அவன் பின்னாடியே வந்தாள்.

அவள் வருவதை அவள் அணிந்து இருந்த கொலுசின் மூலம் அறிந்தவன் பின்னால் அவளை பார்க்காமல் இருக்க, அவளோ இருந்த 3-4 பழங்களையும் உள்ளே தள்ளிகொண்டு இருந்தாள்..


அவனிற்கும் பசி எடுக்க, அவளிடம் "ஜிங்கிலி, அந்த பேக்ல பழம் இருக்கும் .. எனக்கு ஒன்னு குடுத்துட்டு நீ ஒன்னு சாப்பிடு.." என்று கூற அவளோ செய்வது அறியாமல் பேந்த பேந்த முழித்தபடி நின்று இருந்தாள்..

"என்ன ஜிங்கிலி," என்று அவளை நெருங்கி யவன், அவளிடமிருந்து பேக்கை பறித்து பார்க்க அதில் ஒரு பழம் கூட இல்லை..

" ஏண்டி.. நீ சாப்டுறபோ ஒரு பழம் எனக்கு வைக்கணும்னு தோணுச்சா.. சரி சாப்டுறப்போ என்கிட்ட கேட்டியா.." என்று அவள் தலையில் மீண்டும் அடித்துவிட்டு முன்னே சென்றான்..

' டேய்.. நீ ஒரு நாள் இல்ல ஒரு நாள் என்கிட்ட வசமா மாட்டுவடா.. அன்னைக்கு இருக்கு உனக்கு கச்சேரி.' என்று மனதில் நினைத்ததை வெளியே சொல்லமுடியாமல் அவன் பின்னே சென்றாள் குழலி என்னும் ஜிங்கிலி..
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

சும்மா போர் அடிச்சது... அதான்
உன் கன்னக்குழியில் வீழ்ந்தவன் நானடியில் இருந்து ஒரு சின்ன டீ..
Update today nyt.. ok va...

**†******************


"ஜிங்கிலி.. என்ன ஆச்சு உனக்கு.. ஏன் ஒரு மாதிரியாக இருக்க.." என்று அக்கறையுடன் கேட்டவனை மனதில் வைது கொண்டே வெளியே சிரித்தபடி " ஒன்னுமில்லை...."
என்று கூறினாள்..

' வந்துட்டான்.. என்னனு கேட்டுகிட்டு.. மனுஷனுக்கு பசி உயிர் போகுது.. இவன் மட்டும் ஏதோ தின்னுட்டு வந்துட்டான்..
ஒரே ஒரு பழம் தெரியாம தின்னுபோட்டென்.. அதுகுன்னு இவன் எனக்கு ஒண்ணுமே தரலையே.. எங்கோயோ எதையோ நல்ல தின்னுட்டு என்கிட்ட என்னாச்சு அப்படின்னு எங்கிட்யே கேகுறான்..டேய் டும்கிடும்.. உனக்கு இருக்கு டா.. எனக்கு ஒரு காலம் வராமலா போய்டும்..' என்று அவனை முறைத்தவாரு உதட்டை சுளிக்க, அவன் அதை பார்த்துவிட்டு அவளது கைகளை பின்னால் இழுத்துபிடித்து நக்கலாக," என்ன ஜிங்கிலி மனசுக்குள்ள என்னை திட்டுறபோல..இந்த உதட்டை சுளிக்கற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத.." என்று மற்றொரு கையால் தலையில் தட்டியபடி கூறினான்..

அவ்ளோ சிறுபிள்ளை போல காலை தரையில் உதைத்து ' டேய் டுக்கிடும்.. இன்னைக்கு உன்ன என்ன பாடுபடுத்த போறேன்னு பொறுத்து இருந்து பாருடா..அப்போ நீ எவ்ளோ கெஞ்சினாலும் ஏன் நீ என்னோட கால்லையே விழுந்தாலும் உன்னை வச்சு செய்வேன் டா.. அப்படி செய்யல என்னோட பேரு ஜிங்கிலி .. ச் சீ.. அவனோட சேர்ந்து நாமளே அப்படி கூப்பிடுறோம்.. ச்ச..ச்சா.. என்னோட பேரு ஜிங்கி.. வண்டார் குழலி இல்லை..' என்று மனதிற்குள் சபதம் மேற்கொண்டு அவனை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே செல்கிறாள்..

****************
சோதனை மேல் சோதனை ...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி..
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...

***†*********"

யாருக்காக இது யாருக்காக...
இந்த சாப்பாடு..இந்த பழம் ..இந்த உணவு... யாருக்காக இது யாருக்காக..


"சாப்பாடே வந்துவிடு என்னிடம்...பசியே போய்விடு அவனிடம்..."

மரணம் என்னும் தூது வந்தது..
அது பசி என்னும் வடிவில் வந்தது .
சொர்க்கமாக நான் நினைத்தது..
பின் நரகமாக மாறிப்போனது...

யாருக்காக இது யாருக்காக...
இந்த சாப்பாடு..இந்த பழம் ..இந்த உணவு... யாருக்காக இது யாருக்காக..

பழத்தை தானே நான் எடுத்தது..
கை இன்னொரு பழத்தின் மீது விழுந்தது..
பசியை தானே நான் நினைத்தது..
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது..

"எழுதுங்கள் என் கல்லறையில்.. அவன் இரக்கமில்லாத மனிதன் என்று..." என்று கர்ணகொடுரமாக பாடிக்கொண்டு இருந்தாள்..

அதை கேட்க முடியாமல் இருந்தும் கேட்ட சொற்களை கண்டு அவன் விழுந்து விழுந்து சிரித்துகொண்டு இருந்தான்...


images (18).jpegimages (19).jpeg
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன டீ:

ஹாய் பிரெண்ட்ஸ்...

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

உன் கன்னக்குழியில் வீழ்ந்தவன் நானடியில் இருந்து ஒரு சின்ன டீ..

நம்ம குழலி vs அவங்க அம்மா சரசு..

நேத்து சொன்ன அப்டேட்ஸ் போட முடியவில்ல.. மன்னிச்சு ப்ரெண்ட்ஸ்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி அப்டேட் போற்றுவேன்.. ஓகே வா ப்ரெண்ட்ஸ்...

******************""**********

" அம்மா.. அம்மம்மா... அம்மா...அம்மா அம்மம்மா.." என்று டேபிளில் தாளம் தட்டியபடியே அம்மாவை கூப்பிட்டாள் குழலி என்னும் வண்டார் குழலி...

"ஏண்டி இந்த கத்தி கூப்பாடு போடுற.. என்ன வேணும்.." என்று எரிச்சலுடன் மசாலா செய்த கையுடன் வந்து நிற்க, " சும்மா கூப்பிட்டு பார்த்தேன்..சரி சரி .. என்னை இவ்வளோ பாசமா பார்க்குறதை விட்டுட்டு ஒரு பாயசத்தை ரெடி பண்ணு மம்மி..." என்று மீண்டும் அம்மா பல்லவியை தொடங்க," ஏண்டி ஏழு கழுதை வயசாகுது.. இன்னும் நீ கிச்சன் பக்கம் எட்டி பார்க்கமாட்டேன் இங்க உக்காந்து வக்கணையா தின்னுட்டு இருக்க.. அதுல உனக்கு பாயசம் வேற வேணுமாக்கும்.. இன்னைக்கு உனக்கு ஒன்னும் கிடையாது.. வெறும் ரசம் தான்.."
என்று கூறிவிட்டு உள்ளே செல்ல,
"அம்மா.. என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க.. எங்கம்மா சாப்பாட்டுல எனக்கு உப்பு போட்டு தான் குடுப்பாங்க.. இனிமேல் இந்த வீட்டுல இங்க உக்காந்து நான் சாப்பிட மாட்டேன்.. இது எங்க அம்மா கங்கம்மா.. ச்சீ.. சரசம்மா மேல சத்தியம் சத்தியம்.. " என்று வராத கண்ணீரை துடைத்து விட்டு அன்னையை நோக்கினாள்..

அவர்கள் பதில் பேசாமல் இருக்க,' அச்சோ இன்னைக்கு லஞ்ச் கட்டா.. பேசாம வாயை வச்சு
கிட்டு சும்மா இருந்து இருக்கலாம்.. ஹ்யோ. சிக்கன் மட்டன் மீன் எல்லாமே போட்சே... சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்..' என்று நினைத்து விட்டு டிவியை ஆன் செய்து பார்த்தாள்..

மதிய நேரம் என்பதால் சமையல் குறிப்புகள் செய்முறைகள் என்று அதில் ஓட கடுப்பானவள், பாட்டு சேனலை போட்டாள்..
அதிலும் கல்யாண சமையல் சாதம் .. இந்த பொறப்புதான் பாடல் வர அதில் மேலும் கடுப்பனாவள் சிரிப்பொலி சேனலை போட அங்கே ஒரு படத்தில் ராமராஜன் அவர்கள் கவுண்டமணி வீட்டில் ஒரு இலை முழுக்க சாப்பாடு வைத்து சாப்பிடுவதை பார்த்து டிவியை ஆப் செய்துவிட்டு தனது வயிற்றை பார்த்து புலம்பினாள்..

' எவந்தான் கண்டுபிடிச்சனோ.. இந்த பசியை.. ஒரு ஜான்.. இல்லை இல்லை அரை ஜான் வயிற்றுக்கு என்ன பாடு படவேண்டி இருக்குது... ம்ம்ம்.. ம்ம்ம்.. வாசனை தூக்குதே... இப்போ எப்படி அங்க போகிறது... ' என்று யோசித்துக் கொண்டே செல்கிறாள்..

கிட்சென் அருகில் சென்று ,"அம்மா.. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா..
தாயிற்சிறந்ததொரு கோவிலும் இல்லை.. தாயில்லாமல் நானும் இல்லை.. " என்று ஒரு ரோஜாவை அவர்கள் கையில் குடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தாள்..

அவள் அம்மா அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,"லூசா நீ.. அன்னையர் தினம் நேத்து.. காலண்டர்ல தேதி கிழிக்கமா இருந்தா நேத்து இன்னைக்குன்னு ஆகிடுமா.. நீ எவ்ளோ தகிடுதித்தம் பண்ணினாலும் உனக்கு இன்னைக்கு நோ சிக்கன் நோ மட்டன்..ஒரு பீஸ் ஃபிஷ் தான்... போய் உட்காரு.." என்று சொல்ல..

" மம்மி... நான் உங்க மேல சத்தியம் பண்ணிருக்கேன் மம்மி.. அதுனால எனக்கு போட்டுதாங்க.. நான் சோபா ல படுத்துகிட்டு சாப்படுறேன்.. " என்று கூறி முடிக்கும் முன் அவள் தலையில் நான்கு கொட்டுகளை வைத்தவர் , தட்டில் இருந்த ஒரு மீனையும் எடுத்துகொண்டு உள்ளே சென்றார்..

குழலியோ,' சரசு .. உனக்கு வர வர பிள்ளை மேல கைவைக்க பயந்துகிட்டு அவ சாப்பாட்டு மேல கை வைக்குற.. இரு உன்னை அப்பாகிட்ட மாட்டிவிடுறேன்... ஹையையோ...வடை போட்சே.. மீனு போச்சே.. சிக்கன் மட்டன் மற்றும் அதன் உடல் உறுப்புக்கள் எல்லாம் போச்சே.. என்று சோகமாக தந்தை கிருஷ்ணனின் வரவிற்கு காத்திருந்தாள்..

images (20).jpeg
images (21).jpeg
 
Status
Not open for further replies.
Top