All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறையின் உள்ளே விவேக் அந்த கடிதத்தினை கண்டு அளவிட முடியா சந்தோஷத்தில் இருந்தான் என்றால். தீபக்கோ, வெளியில் தன் மனதோடு புலம்பி கொண்டிருந்தான்.



‘ஐய்யோ..! ஐய்யோ..! அந்த பொண்ணு சூர்யா, அப்படியே இவன் கிட்ட இருந்து தப்பிச்சி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடும்ன்னு நினைச்சா, இந்த லெட்டர் வந்து என் மொத்த நினைப்பிலையும் மண் அள்ளி போட்டுடுச்சே இவன் அந்த பிள்ளைய லவ் பண்ணாலும் பரவாயில்ல காதலுக்காக இவன் பண்ற எல்லா பைத்தியக்காரத்தனத்தையும் பொறுத்துக்கலாம். இவனுக்கு அந்த பொண்ணு மேல லவ்வும் இல்ல அந்த பொண்ண மட்டும் இல்ல வேற எந்த பொண்ணு மேலயும் இவனுக்கு எதுவும் வராது.



இவனோட தேவை, தேடல் எல்லாம் வேற, ஒண்ணுதுக்கும் பெறாத ஒரு விஷயத்துக்காக உப்பு சப்பு இல்லாத ஒரு காரணத்திற்காக அவனும் சந்தோஷமா இருக்க மாட்டீங்கறான் அந்த பெண்ணையும் நிம்மதியா இருக்க விட மாட்டீங்கறான். நீ ரொம்ப ஓவரா தான்டி போற, என்னைக்கு எவன்கிட்ட அடிபட போறியோ தெரியலை’.



எப்பவும் குடும்ப பெண்களிடம் வம்பிற்கு போகாதவன், சூர்யா விஷயத்தில் மட்டும் சற்று தடுமாற அதற்கு சூர்யாவின் செய்கை அவனின் கோபத்தினை வளர்த்துவிட்டது.



பாவம் தீபக்கிற்கு தெரியவில்லை. அவன் அதனை ஒரு சின்ன நிகழ்வாக பார்க்கிறான். ஆனால் விவேக்கோ, அதனை தன் வாழ்வில் தனக்கு நிகழ்ந்த மிகப்பெரும் அவமானமாக அதனை கருதுகிறான் என்று...



ஒருவரின் பார்வையில் தான் எத்தனை வித்தியாசம் ஒருவர் தன் வாழ்க்கையினை பார்க்கும் பார்வையில் தான் அவரின் வாழ்வில் இன்பம் துன்பம் எல்லாம் இருக்கும். ஒற்றை பிள்ளையாய் பிறந்து பெற்றோரின் செல்லத்திலும் செல்வத்திலும் வளர்ந்து, கேட்டது அனைத்தும் (அது அன்பாலோ அல்லது அதிகாரத்திலோ) கிடைக்க பெற்று... தன் ஆசை, தன் விருப்பம், தன் மகிழ்ச்சி என அனைத்தையும் தன்னுடைய நலத்தினை மட்டும் முக்கியமாக கருதும் ஒருவனுக்கு...



தன்னிடம் வேலை செய்யும் ஒரு பெண் தன்னை அடித்ததை அவனால் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த ஆத்திரகாரனுக்கு இன்னமும் தன்னுடைய தவறு புரியவில்லை. சூர்யாவின் செய்கையில் ஆத்திரத்தில் அறிவிழந்து அவளின் வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்கி விட்டான்.

அவனுக்கு அவன் செய்துக் கொண்டிருக்கும் காரியத்தின் வீரியம் புரியவில்லை. புரியும் பொழுது அவனின் நிலை..?



அவன் உயிரானவள்…
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 31



விவேக், தீபக்கை அழைத்து அக்கடிதத்திற்கு சம்மதம் என பதில் அனுப்ப சொல்ல, தீபக்கும் அவன் சொன்னதை செய்து முடிக்க அதன் பிறகு காரியங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தேறியது.



என்னதான் அதிவேகமாய் காரியங்கள் நடந்தாலும் ஒன்றரை மாதங்கள் கடந்து விட விவேக், பாரீஸ் செல்ல அனைத்துவித ஏற்பாடுகளும் தயாராகி இதோ கிளம்ப போகிறான் கூடவே தீபக்...



விவேக் மனத்திலோ வன்மமும், பழிவெறியும் நிறைந்திருக்க, தீபக்கோ ‘இவன் தனியா போய் அடிவாங்காம கூட என்னையும் கூட்டிகிட்டு போறானே கடவுளே என்னை மட்டும் கொஞ்சம் காப்பாத்தி விட்டுடு’ என வேண்டிக் கொண்டான்.



பாரீஸ் மாநகரம்...



தன் முன்னே அமர்ந்து யோசனையுடன், “இதெல்லாம் சரிபட்டு வருமா “ என கேட்ட ஹரிஷிடம்,



“ இதுதான் சரியாக வரும்” என கூறிய நேத்ரன் தொடர்ந்து “ஹரி, எனக்கு சூர்யா கிட்ட கல்யாணத்தை பத்தி பேசவே கொஞ்சம் இல்ல, ரொம்ப தயக்கமா இருக்கு. எல்லாம் தெரிஞ்ச நாமே அவளை மேலும் நோக்கடிக்க கூடாது. அதனால தான் இந்த பிளான்.



சூர்யா, விவேக்கை தைரியமா பேஸ் பண்ணிட்டா போதும் அவளுக்கு அவன் மேல இருக்க பயம் தெளியணும். அவளுக்கு அவன் மேல இருக்குறது பயம்னு கூட சொல்ல முடியாது எங்க முதல்ல நடந்த மாதிரி திரும்பவும் அவனால ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு ஒரு வித தவிப்பு, அந்த கல்யாணத்தில் பண்ணின மாதிரி விவேக் மறுபடியும் கலாட்டா பண்ணி அத்தனை பேர் முன்னாடியும் தன்னால தன் குடும்பம் மறுபடியும் கூனிக்குறுகி நிற்க வேண்டி வருமோ அப்படிங்கிறது தான் சூர்யாவோட தவிப்பிற்கு காரணம்...”



“ அதை எல்லாம் விட அவன் சூர்யா பத்தி சொல்லுறதை நான் கேள்விப்பட்டா அவளை பத்தி நான் என்ன நினைப்பேனோன்னு வேற கவலை.

என்கிட்ட அன்னைக்கு சூர்யா அவளோட கடந்த காலத்தினை சொல்ல வரும் பொழுது நான் தடுத்திட்டேன். ஆனா இன்ன வரைக்கும் அவளுக்கு என்கிட்ட அதை சொல்லுற தைரியம் வரலை. இல்ல அந்தளவுக்கு நான் அவளுக்கு நம்பிக்கை குடுக்கலையான்னு எனக்கு தெரியலை... நம்ம நாட்டுல ஆம்பிளைங்க தப்பு செஞ்சா அதை யாரும் பெருசா எடுத்துக்க மாட்டீங்கறாங்க. அதே பெண்கள் தப்பு செஞ்சா அதை எவ்வளவு பூதாகரமா சொல்ல முடியுமோ சொல்றாங்க இதில் இன்னமும் கொடுமை என்னன்னா தப்பே செய்யாம பாதிக்கப்பட்ட பெண்களையும் இவங்க விட்டுவைக்கிறது இல்லை”.



“ புரணாத்திலேயே சீதை தான்டா, தன்னோட நன்னடத்தையையும், கற்பையும் நிரூபிக்க தீக்குளிச்சா…!”



ஏற்கனவே என் சூர்யா அது மாதிரி ஒரு சூழ்நிலையில் சிக்கி ரொம்ப கஷ்டப்பட்டு வெளிய வந்திருக்கா. இன்னும் இன்னும் அவளை அப்படி ஒரு சூழ்நிலையில் நிற்க வைத்து மீண்டும் அவளை தீக்குளிக்க நான் விடமாட்டேன். யார் முன்னாடியெல்லாம் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு தலைக்குனிஞ்சு நின்னாளோ அவங்க முன்னாடி எல்லாம் என் மனைவியா அவ தலைநிமிர்ந்து நிக்கணும் அதுக்கு அந்த விவேக் அவன் ப்ளே பண்ணதை அவனே ஒத்துக்கணும் மறுபடியும் இந்த மாதிரி அவன் சூர்யாகிட்ட மட்டும் இல்ல யார் லைப்லையும் விளையாட கூடாது அதுக்கு தான் இந்த திட்டம்”.



“ கமல், இதுக்கு அவனை ரெண்டு தட்டு தட்டி உண்மைய சொல்ல சொன்னா சொல்லிட்டு போக போறான்” என ஹரிஷ் கூற.



நேத்ரனோ மறுப்பாய் தலை அசைத்து, “இன்னைக்கு சொல்லுவான் நாளைக்கே வெளிய போய் இன்னும் கேவலமா சூர்யாவை பத்தி சொல்லுவான். இதை கொஞ்சம் பொறுமையா தான் ஹாண்ட்டில் பண்ணனும் கொஞ்சம் தப்பா போனாலும் அவன் சொன்னது எல்லாம் உண்மை அப்படின்னு சாதிப்பான். எனக்கு முதல்ல இருந்தே சூர்யா, அந்த விவேக்கிட்ட ஒதுங்கி போறது பிடிக்கலை ஹரி. அவளோட தவிப்பும், துடிப்பும் புரிஞ்சதுக்கு பிறகு இதுக்கு ஒரு முடிவு வேணும், எப்பவா இருந்தாலும் இந்த விஷயம் சூர்யா மனசுல உறுத்திக்கிட்டே இருக்கும். அதுக்கு தான் இந்த வழி அதுவும் இல்லாம அந்த விவேக்கிற்கும் புரியணும் சூர்யாவை இனிமே நெருங்க முடியாதுன்னு”.



“என்னமோ டா நீ சொல்லுற, சூர்யாவிற்கு எந்தவித இடைஞ்சலும் வராம பார்த்துக்கணும், அது போதும் எனக்கு எவ்வளவோ செய்றோம் இதை செய்ய மாட்டோமா பார்த்துக்கலாம் விடு மச்சான். ஆனாலும் அந்த விவேக் பையனுக்கு நீ ரொம்ப தான் பாவம் பார்க்குற” என்ற ஹரிஷிடம்.



“ எல்லாம் ஒரு பாசம் தான்” என கூறி கண்சிமிட்டி சிரித்தான் நேத்ரன்.

**************************



சூர்யாவை ஒரு வழியாக சமாளித்து அலுவலகம் வர சம்மதிக்க வைத்தது ஒரு பாடு என்றால். அவளோ அனைத்து ஊழியர்களையும் போல் தான் தானும் அலுவலகம் செல்வேன் என்ற சூர்யாவை பெரும் பாடுபட்டு... தன்னுடைய உறவினளாக, அதுவும் அவனின் வருங்கால மனைவியாக அவன் அறிமுகப்படுத்த சூர்யா அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லை.



“ தனு, என்ன விளையாடுறீங்களா..? ஒரு சாதாரண ஸ்டாஃப்பா நான் அங்கே வேலைக்கு வருவேன். இப்படி ஒரு உறவோட உரிமையா வர எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அதுவும் இல்லாம இந்த விஷயம் அத்தம்மாக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க” என்றவளை.



‘ என் செல்ல தர்பூஸ், எங்க அம்மாவுக்கு ஆல்ரெடி கொஞ்ச டவுட் தான். ( ஐய்யோ..! நேத்ரா உங்க மம்மி கான்பார்ம் பண்ணி ரொம்ப நாளாச்சி).

இதை நான் சொன்னா உடனே கல்யாணம் எப்ப வச்சிக்கலாம்னு தான் கேப்பாங்க உனக்காக தான் உன்னோட மனச சங்கடபடுத்த கூடாதுன்னு தான் இவ்வளவு பொறுமையா இருக்கேன். உன்கிட்ட மட்டும் என்னால அதிரடியா நடக்க முடியலை டாலி. அப்படி மட்டும் என்னால அதிரடியா முடிவெடுக்க முடிஞ்சிருந்தா எப்பவோ நீ என் மனைவியா இருந்திருப்ப’ என தனக்குள் சொல்லி கொண்டு ஒரு பெருமூச்சினை வெளியேற்றினான் நேத்ரன்.



“ அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்…” என சமதானம் கூறி சூர்யாவை சம்மதிக்க வைத்தான்.



சூர்யாவிற்கு முதலில் சிறு தயக்கங்கள், தடுமாற்றங்கள் இருந்தாலும்... தன்னவனின் அருகாமையும், அவனின் காதலும் சூர்யாவிற்கு ஒரு நிமிர்வையும், தைரியத்தையும் கொடுக்க. ஜெயஸ்ரீயின் துணைக் கொண்டு ஓரளவிற்கு நேத்ரன் இல்லாத வேளைகளில் தனியாக செயல்பட தொடங்கினாள் சூர்யா.



அவளின் மாற்றங்கள் நேத்ரனிற்கு மகிழ்ச்சி அளித்தாலும் மனத்தின் ஓரத்தில் ஒரு பயம் இருந்துக் கொண்டே இருந்தது. தன்னுடைய திட்டம் பலித்தால்... சூர்யாவிடம் தான் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ, அதில் நூற்றில் ஒரு பங்காக தன் எதிர்பார்ப்பிற்கு நேர்மறையாக மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளதை நினைத்து நேத்ரன் சிறு கலக்கம் கொண்டான்.



இவ்வனைத்தையும் சிந்தித்துக் கொண்டிருந்தவன் கவனத்தினை சூர்யாவின் குரல் கலைக்க அவளை கண்டவன் மெய்மறந்து சிலையென உறைந்துவிட்டான்.



இதோ சூர்யா அலுவலகம் செல்ல ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகிவிட, இன்று அவர்கள் புதிதாக டை-ஆப் செய்துக் கொண்ட அனைத்து ஹோட்டல்களின் உரிமையாளர்களும் இன்று கமல் ஹோட்டல்ஸில் நடை பெரும் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள இன்விடேசஷன் அனுப்பி இருந்தனர்.



அந்த விழாவிற்கு செல்ல கிளம்பி வந்தவளை பார்த்து தான் நேத்ரன், கண் இமைக்கவும் மறந்து நின்றான்.



கனகாம்பர பூ நிறத்தில் அழகிய டிசைனர் சேலை அணிந்து வானில் உள்ள நக்ஷத்திரங்கள் அனைத்தையும் சேலையில் வைத்து தைத்தது போல் வர்ணஜாலம் காட்டி மின்ன... அதற்கு போட்டியாக கழுத்திலும் காதிலும் வைரங்கள் ஜொலிக்க விண்ணுலக மங்கையென நடந்து வந்தவளை தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான் நேத்ரன்.



சூர்யாவோ, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன்னவனை நோக்க வெள்ளை முழுக்கை சட்டையும், அதற்கு மேல் ஃபுல் பிளாக் சூட்டில் ஆண்மை மிளிர, கம்பீரமாய் நின்றிருந்தவனின் அழகில் மயங்க ஒருவர் மற்றொருவர் தங்கள் இணையில் அழகில் மெய்மறந்து நின்றனர். முதலில் சுயவுணர்வு பெற்ற சூர்யா. நேத்ரனின் கண்களில் வழியும் காதலிலும் அதற்கு இணையான தாபத்திலும், தன் கன்னங்கள் சிவக்க அவனின் பார்வையினை எதிர்கொள்ள முடியாமல் தன் விழிகளை தழைத்துக் கொண்டு, “ தனு, கிளம்பலாமா..?” என கேட்க, அதில் தன்னுணர்வு மீண்டவன் சூர்யாவை நோக்கி கைநீட்ட, அக்கரங்களில் பாந்தமாய் வந்து அடைக்கலம் ஆனாள் சூர்யா.



தன்னுயிரானவளின் வெட்கத்தில் கர்வம் கொண்டவன், சூர்யாவை மென்மையாக அணைத்து அவளின் கன்னத்தில் பூத்திருக்கும் ரோஜாக்களுக்கு தன் உதடுகளால் பரிசளித்து மீண்டும் ஒருமுறை தன்னோடு இறுக்கி கொண்ட நேத்ரன். அவளை மனமே இல்லாமல் விடுத்தான்.



“ நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க டாலி, சரி வா கிளம்பலாம் நேரம் ஆயிடுச்சி…” என்றான்.



ஹரிஷும், ஜெயஸ்ரீயும் முதலிலேயே சென்று இருந்தார்கள். அங்கே விழாவின் ஏற்பாடுகளை கவனிக்க. நேத்ரனும் சூர்யாவும் கிளம்ப, அங்கு வந்த ப்ரேமாவிடம் அவர்கள் இருவரும் விடைபெற்று செல்ல, அவர்களின் ஜோடி பொருத்தத்தினை கண்டு மனத்திற்குள் பூரித்து போனார்.



சூர்யாவோ நிகழ போவதை அறியாமல் மிகவும் மகிழ்ச்சியாக தன்னவனோடு கிளம்பினாள்.

பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு சென்ற விவேக்கோ அனைத்து ஊழியர்களிலும் சூர்யாவை தேடிக் கொண்டிருந்தான்…



காரினில் வரும் பொழுதே நேத்ரனுக்கு ஹரிஷ் மெசேஜ் அனுப்பி இருந்தான். விவேக் வந்து விட்டதாக நேத்ரனுக்கு சூர்யாவினை நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் படப்படப்பாக இருந்தாலும் வெளியில் சாதாரணம் போல் காட்டிக்கொண்டான்.



அவனின் ஒரு மனம் சூர்யா, தன் அனைத்து மனக்காயங்களில் இருந்தும் சீக்கிரம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலும் மற்றொரு மனமோ அவள் விவேக்கினை நேரில் பார்த்தால் என்னமாதிரி நடந்துக் கொள்வாளோ என சற்று பயம் கொண்டது.



தான் அவள் மேல் கொண்ட காதல் மீதும் தன் மீது கொண்ட தைரியத்திலும், அதைவிட தன்னவள் தன் மீது கொண்ட காதலில் அளவிட முடியாத அதிக நம்பிக்கை கொண்டு நடப்பது நடக்கட்டும் என துணிந்து நேத்ரன் சூர்யாவை பார்ட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்திருந்தான்.



சூர்யாவோ நிகழ போவதை அறியாமல் மிகவும் மகிழ்ச்சியாக நேத்ரனோடு அளவளாவி கொண்டிருந்தாள்.



விவேக்கோ தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தாமல், சூர்யாவின் மகிழ்ச்சியை கெடுப்பதே தன் முக்கிய வேலை என அங்கிருந்த அனைவரையும் விடுத்து அவனின் கண்கள் வன்மம் கொண்டு சூர்யாவை தேடி கொண்டிருந்தன.



விவேக்குடன் வந்த தீபக்கோ அவனின் செய்கையை பார்த்து தலையில் அடித்து கொண்டு அங்கு வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். ( யாராவது ஒருத்தராவது வந்த வேலைய பார்க்கணும் இல்லையா).



இத்தனை நாள் கிரகணம் மறைத்த நிலவாய் இருந்தவள் தன்னவனின் காதல் தந்த நிமிர்விலும் அழகிலும் முழு நிலவாய் பிரகாசிக்க. அங்கிருந்த பலர் சூர்யாவை மரியாதையுடன் பார்க்க சிலர் பொறாமையில் நோக்க இருவகை பார்வைகளையும் எந்தவித தயக்கமும், மாற்றமும் இன்றி எதிர்கொண்டவள் தன்னவனின் கரம் பற்றி ஒரு ராணியின் தோரணையோடு வலம் வந்தாள்.(இதெல்லாம் சரி அந்த விவேக்கை பார்த்தா இதே கெத்தை மைண்டைன் பண்ணனும் ஓகே).



கமலநேத்ரனோ நரிக்கு பொறி வைத்து காத்திருக்க அதில் ஓநாயும் வந்து சிக்கிக்கொள்ளும் என அவன் எதிர்பார்க்கவில்லை. ( நாம ஒண்ணு நினைச்சா விதி வேற மாதிரி விளையாடுது).



தன் அருகிலேயே சூர்யாவை நிறுத்திக் கொண்டிருந்தவன். தன் தொழில் துறை நண்பர் அழைக்க, அங்கே ஆண் பெண் பேதமின்றி மது அருந்திக் கொண்டிருக்க அங்கே நேத்ரன் செல்ல முற்பட, சூர்யா தான் இங்கேயே இருந்து கொள்வதாக சொல்ல அவளை வற்புறுத்த மனம் இல்லாமல் தன் கண் பார்வையின் தூரத்தில் தானே உள்ளாள் என்று அவரை நோக்கிச் சென்றான் நேத்ரன்.



ஹரிஷ் இது போன்ற தொழில் சம்பந்தமான பார்ட்டிகளில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டான். அது அவனின் தொழிலுக்கு பெரும் இடைஞ்சல் பலபேருக்கு ஹரிஷ், ஒரு துப்பறிவாளன் என தெரியாது அப்படி அறிந்தவர்களும் இவனின் முகம் அறியார் நெருங்கிய ஒருசிலருக்கு மட்டுமே அவனை தெரியும். தெரிந்தவர்களும் அவனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவனும் தன்னுடைய தந்தையின் தொழிலை முன்னிருத்தியோ அல்லது நேத்ரனின் நண்பன் என்ற முறையிலோ பட்டும் படாமலும் கலந்து கொள்வான். ஆதலால் நேத்ரன் ஹரிஷை அருகில் அழைக்கவில்லை. மற்றபடி அவர்களின் பார்வை வட்டத்துக்குள் சூர்யா இருக்கும்படி பார்த்து கொண்டனர்.



வாய் அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் கண்கள் சூர்யாவை நொடிக்கு ஒரு முறை காண தவறவில்லை.



நேத்ரன் சூர்யாவை விட்டு மறுபுறம் நகர்ந்ததும் ஹரிஷ், ஜெயஸ்ரீயை சூர்யாவின் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொண்டான். இருவரும் பேசிக்கொண்டிருகையில் ஒருவன் முழுபோதையில் தடுமாறிக் கொண்டே வந்தவன், மற்றவர்கள் அவனை கவனித்து சுதாரிக்கும் முன் சூர்யாவை இடித்து விட பெண்மைக்கே உரிய அனிச்சை செயலாக அவள் அவனை அறைந்திருந்தாள்.



அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவன், மீண்டும் எழும்ப அவனை கண்டு சூர்யா, தன் மேனியில் ஆயிரம் கரப்பான்கள் ஊர்வது போல் ஒரு அருவெறுப்பு அவள் முகத்தில் அதனையும் தாண்டி ஒரு சிறு கலக்கம் ( ஏம்மா, நீ அடிக்கிறத விடமாட்டியா)...





யாரிடமோ பேசிக்கொண்டிருந்த நேத்ரன் விஷயம் அறிந்து பதட்டத்துடன் சூர்யாவை நோக்கிவர தாயைக் கண்ட சேய் என அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தாள்.



அதற்குள் இவர்களை சுற்றி கூட்டம் சேர நேத்ரன் ஹரிஷை பார்க்க, ஹரிஷ் அவனின் ஆட்களுக்கு கண்களில் கட்டளையிட குடிபோதையில் தடுமாறியவனை அங்கிருந்து அப்புற படுத்தினார்கள். ( அவன் யார் என்று அறியாமலே அங்கிருந்து வெளியேற்றி இருந்தார்கள். அவனை பற்றி அறிந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க ஹரிஷ் மற்றும் நேத்ரன் விட்டிருக்கமாட்டார்கள்) நடந்த அசௌகாரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு பார்ட்டியை தொடர நேத்ரன் கோர அனைவரும் கலைந்து சென்றனர்.



சத்தம் வந்த திசையில் பார்த்த விவேக் அதிர்ந்தான். சாதாரண ஊழியர்களுக்கு மத்தியில் தான் தேடியவள் ஒரு அரசியின் கம்பீரத்தில் நின்றுக் கொண்டிருப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.





விவேக் சூர்யாவின் இந்த பரிணாமத்தினை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் அதிர்ந்த நிலையே எடுத்துரைக்க, இவளுக்கு யாரையாவது அறையணும் என கோபம் கொண்டவனுக்கு பெண்களின் நுண்ணுணர்வுகள் புரியவில்லை.



அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சூர்யா யாரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறாள் என்பதை அறிந்து, கமலநேத்ரனின் ஆளுமை நிறைந்த கம்பீர தோற்றத்தினை கண்ட விவேக், அவன் ஏதோ ஒரு செல்வ சீமான் என்ற நினைப்பில் நேத்ரனை பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க.



ஆனால் அவனோ உலக முழுவதும் தொழில் செய்யும் வர்த்தக உலகத்தின் முடிசூடா மன்னன் “திரு.கமலநேத்ரன்” என்றும் “கமல் குரூப் ஒப் கம்பெனிஸின்” ஏகபோக ஒரே வாரிசு என்பதினை அறிந்து பேரதிர்ச்சியுற்றான்.



சூர்யாவோடு நெருக்கமாக இருந்தவன் இத்தகைய பலம் பொருந்தியவனாக இருப்பான் என விவேக் எண்ணவில்லை. அதைவிட நேத்ரனின் கண் அசைவில் காரியங்கள் நிகழ்வதையும், அவனின் ஒரு சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவதையும் கண்டு பிரமித்து போனான்.



இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல் சூர்யாவை நேத்ரன் ஒரு சேய் என தாங்குவதையும், அதுவும் சூர்யா நேத்ரனின் அணைப்பில் பாந்தமாய் அடங்குவதை கண்டவன்.



தன்னை நெருங்குபவர்களை பெயருக்கு ஏற்றார் போல் சுட்டெரிப்பவள், இன்று குளிர் தென்றலாய் மாறி நேத்ரனை தழுவி இருப்பதை காண காண தன் கண்களையே நம்பமுடியவில்லை விவேக்கிற்கு...



இவர்களின் இணக்கம் விவேக் ஏற்கனவே அறிந்தது தான் என்றாலும் கண்ணெதிரில் கண்டவனின் மனம் சினம் கொண்டது. எப்படி இவர்களை பிரிப்பது என யோசிக்க தொடங்கினான். முதலில் சூர்யாவின் சந்தோஷத்திற்கு காரணமானவனை (நேத்ரனை) சந்திக்க வேண்டும் என முடிவு செய்திருந்தவன். நேத்ரனின் பலம் அறிந்த பின் சூர்யாவினை சந்திக்க முடிவு செய்துக் கொண்டான்.



தன் மீதான அவளின் பயம் விவேக் அறிந்தது தான் என்றாலும் நேத்ரன் அருகில் இருக்கும் பொழுது சூர்யாவை நெருங்கமுடியாது என்பதை நன்கு உணர்ந்தவன், அவளை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருந்தான்.



விவேக்கின் வருகை உணர்ந்து சூர்யாவை தன் கை அணைவிலேயே வைத்துக் கொண்டிருந்த நேத்ரன், அவளை தனிமையில் விவேக் நெருங்குவதை அவன் விரும்பவில்லை. விவேக்கை, சூர்யா நேரில் பார்க்கும் பொழுது தன்னவளுக்கு தன் அருகாமையில் பலம் அளிக்க முயன்றவனுக்கு தெரியவில்லை. சூர்யா தனியாக வேறொருவனை சந்திக்க போவதை...



அவள் உயிரானவன்…



அத்தியாயம் 32



இவ்வளவு நடந்த பின்பும் சூர்யா, நேத்ரனின் அணைப்பில் இருந்து விலகவில்லை. அவன் மார்பில் ஒன்றியவளின் நடுக்கம் இன்னும் குறைய வில்லை சூர்யாவை தன் அணைப்பில் இருந்து விலக்காமல் மெல்ல நடத்திக் கொண்டு பார்ட்டி நடக்கும் இடத்தில் இருந்து வெளியில் வந்தான்.



பார்ட்டி அவர்களின் ஹோட்டல் வளாகத்திலேயே நடப்பதால் ஹோட்டல் உரிமையாளருக்கு என தனியாக இருக்கும் அறைக்கு சூர்யாவை அழைத்துச் சென்றான்.



நேத்ரனின் இழுப்பிற்கு ஏற்றவாறு ஒரு உயிருள்ள பொம்மை போல் இயங்கினாள் சூர்யா. பார்ட்டிக்கு வரும் பொழுது இருந்த மனநிலை முற்றும் மாறி இருக்க, அவளின் நிலைக் கண்டு கலங்கினான் நேத்ரன். அவன் கணக்கிட்டு செய்தது ஒன்று நிகழ்ந்தது வேறாக இருக்க, ஒன்றும் புரியவில்லை நேத்ரனுக்கு...

விவேக்கை சூர்யா பார்க்கவில்லை என்பதை அறிந்திருந்த நேத்ரன், அவளின் தற்போதைய நிலைக்கு காரணம் விளங்கவில்லை அந்த வித்தகனுக்கு... மெல்ல அவளை அங்கிருந்த படுக்கையில் படுக்கவைக்கும் பொருட்டு தன் அணைப்பிலிருந்து அவளை விலக்க முயல, அப்பொழுதான் சூர்யா என்ற பொம்மைக்கு உயிர் வந்தது.



நேத்ரனின் அணைப்பில் இருந்து விலக சூர்யா மறுத்தவள் முன்னிலும் இறுக்கமாக நேத்ரனை அணைத்து கொண்டவளின் உடலின் நடுக்கம் மேலும் அதிகரிக்க, கால்கள் இரண்டும் துவண்டு நிற்க முடியாமல் விழப்பார்க்க அதனை உணர்ந்து நேத்ரன் சூர்யாவின் இடையில் கரம் கொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்து கொள்ளும் முன்னே சூர்யா, நேத்ரனோடு அந்த பஞ்சு மெத்தையில் சரிய, அப்பொழுது தான் கவனித்தான். சூர்யாவின் விழிகள் மூடி இருந்தாலும் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவளின் உதடுகளோ, “நான் தப்பான பொண்ணு இல்ல தனு” என மீண்டும் மீண்டும் முணுமுணுத்து கொண்டிருந்ததை... இவ்வளவு நேரமும் சூர்யாவை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலும் அவளை மற்றவர் முன் காட்சி பொருளாய் நிறுத்த விரும்பாமலும் அவசர அவசரமாக அங்கிருந்து அழைத்து வந்தவன் அவளின் மாற்றத்தை கவனிக்கவில்லை.



சூர்யாவின் நிலை அறிந்தும் அவளை கவனிக்க தவறிய தன்னை தானே நொந்து கொண்டவன், “ஷிட்...” என கூறி தன் நெற்றியில் அடித்துக் கொண்டே சூர்யாவின் கண்ணீரை துடைத்து விட்டவன்.



“ டாலி, கண்ணை தொறந்து என்னை பாரும்மா” என அவளின் தோள்களை பற்றி அழுத்தி அசைக்க சூர்யாவிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை. நேத்ரன், அவளை எழுப்ப செய்த முயற்சிகள் எல்லாம் வீணாய் போக சூர்யாவின் விழிகள் கண்ணீரை சிந்திக் கொண்டிருக்க அவளின் இதழ்களோ மீண்டும் மீண்டும் “நான் தப்பான பொண்ணு இல்ல தனு… நான் தப்பான பொண்ணு இல்ல தனு…” என்பதையே மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருக்க, நேத்ரனுக்கு என்ன செய்வது என புரியாமல் திகைத்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் புலம்பலை பொறுக்க முடியாமல் தன் உதடுகளால் அவளின் இதழ்களை சிறை செய்ய, மெல்ல மெல்ல அவளின் முணுமுணுப்பு குறைய தொடங்கியது.



சூர்யாவின் முகத்தை பார்த்தவன், அவளின் விழிகள் அப்பொழுது தான் கண்ணீரை நிறுத்தி இருக்க எங்கே தான் மீண்டும் விலகினால் அவளுக்கு இன்னும் நடுக்கம் அதிகரித்து விட கூடுமோ என பயந்து, படுத்தவாக்கிலேயே ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டு. மற்றொரு கையால் அவளின் முகத்தில் கலைந்து புரண்டுக் கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கி விட்டவன், அவளின் முகத்தில் இருந்த கண்ணீர் கோடுகளை கண்டு வருந்ததோடு “ ஏன் டாலி, உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்திக்கற நீ இவ்வளவு கஷ்டப்பட நான் தான் காரணமோன்னு எனக்கு தோணுது. நான் மட்டும் உன்னை பார்த்ததும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருந்தா உனக்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது இல்லை. அட்லீஸ்ட், உன்னோட கல்யாண இன்விடேஷன் பார்த்தாவது நான் இந்தியா வந்திருந்தா உனக்கு இந்தளவு மனசங்கடமும், காயங்களும் ஏற்பட்டிருக்காது இல்ல செல்லம்மா ஏற்படவும் நான் விட்டிருக்க மாட்டேன். நீ இன்னும் அந்த விவேக்கை பார்க்கலை. அப்படி இருந்தும் நீ இவ்வளவு பாதிக்கப்படுறனா... அப்ப நீ அடிச்சது உன்னை காதலிக்கறேன்னு சொல்லி கல்யாண மேடை வரை வந்து உன்னை தவிக்க விட்டவனா தான் இருக்கணும்” என அவனின் மனம் சரியாக கணிக்க, “அவன் உன் லைப்ல எந்த பிரச்சனையும் பண்ணாம விலகிட்டான்னு நினைச்சு விட்டுட்டேன். அவன் உன்னோட மனசில இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பான்னு நினைக்கலை கியூட்டி... நீ இப்படி கண்ணீர் வி்டுறதை பார்க்க பார்க்க என்னை எனக்கே பிடிக்கலை டாலி...”



“ யாருடி சொன்னா நீ தப்பான பொண்ணுன்னு உன்னை அப்படி சொன்னவங்க தான் தப்பானவங்களா இருப்பாங்க. உன்னை இனிமே ஒரு வார்த்தை யாரும் தப்பா பேச விடமாட்டேன். இட்ஸ் மை ப்ரோமிஸ் முன்னாடி உன்னை கஷ்டப் படவிட்டதுக்கு ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடி தர்பூஸ்” என கண்கள் கலங்க கூறிக் கொண்டே அவள் முகம் முழுதும் முத்திரை பதிக்க,(அவ தெளிவா இருக்கும் பொழுது இதெல்லாம் சொல்லாம இப்ப சொல்றியே தம்பி).



நேத்ரனின் கண்ணீரிலா..? அவனின் இதழோற்றலிலா..? அல்லது அவனின் வார்த்தைகளிலா..? ஏதோ ஒன்றில்,

மெது மெதுவாய் அவளின் உடல் நடுக்கம் குறைய அவளின் கைகள் தங்களின் இறுக்கத்தினை தளர்த்திக் கொண்டாலும் நேத்ரன் அவளிடம் இருந்து விலகாமல் அவளை அணைத்தவாறே படுத்திருக்க.



சூர்யாவோ, அதிர்ச்சி தந்த அயர்வில் உறங்க நேத்ரனோ தன்னவளின் முகத்தில் தன் பார்வை பதித்திருத்தவன் எவ்வாறு, எப்படி துயில் கொண்டான் என அறியாமல் துயில் கொள்ள அங்கே தன்னுடைய அறையில் விவேக், நித்திரை வராமல் சூர்யா மற்றும் நேத்ரன் இருவரையும் எப்படி பிரிப்பது சூர்யாவின் மகிழ்ச்சியை எவ்வாறு கெடுப்பது என்ற யோசனையில் இருந்தான்.

*********************************



அதிகாலை வேளையில் வழக்கம் போல் விழித்த சூர்யா, நேத்ரனின் நெஞ்சத்தில் தலை வைத்து படுத்திருக்க தலையணை என நினைத்து அதில் முகம் புரட்ட மென்மைக்கு பதில் திண்மையை உணர்ந்து விழி திறந்து பார்க்க, தான் ஒரு ஆணின் மார்பில் முகம் புதைத்து இருப்பதை அறிந்து ஒரு நொடி துணுக்குற்றாலும், அந்த ஸ்பரிசத்திலும், தன்னவனுக்கே உரிய பிரத்யேக வாசத்திலும், நேத்ரனை கண்டு கொண்டவள், வெட்கம் அதிகரிக்க அவனின் அணைப்பில் இருந்து விடுபட எண்ணி தன் மேலிருந்த நேத்ரனின் கரங்களை விலக்க.



அவனோ முன்னிரவின் நினைவில் சூர்யாவை முன்னிலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், “ஒண்ணும் இல்லை டாலி ஜஸ்ட் ரிலாக்ஸ்” என கூறி அவளின் முதுகை தடவி கொடுக்க, அதில் சூர்யாவிற்கு நேற்றைய நிகழ்வுகள் எல்லாம் படம் போல் கண் முன்னே காட்சிகளாய் விரிய அவளின் உடலில் நடுக்கம் ஏற்பட குரலிலும் நடுக்கத்துடன் “ தனு “ என அழைத்தாள்.



நேத்ரனுக்கு சூர்யாவின் குரல் கேட்ட மாத்திரத்தில் தூக்கம் தொலைவில் ஓடிபோக அவளின் நடுக்கத்தினை அறிந்திருந்தாலும் எந்தவித பதட்டமும் இல்லாமல் சாதாரணம் போல், மெதுவாக கண்கள் திறந்து அவளை பார்த்து வசீகரிக்கும் புன்னகையுடன், “குட் மோர்னிங் டாலி” என கூற...



அவனின் புன்னகையில் சற்று தெளிந்தவள், பதிலுக்கு அவனுக்கு காலை வணக்கம் சொல்லி, அவன் அணைப்பில் இருந்து விலக பார்க்க,

அவளை தடுத்தவன் “ஏன் டாலி நைட் ஃபுல்லா இப்படி தான் இருந்த, இப்ப மட்டும் ஏன் விலக பார்க்குற” என கேட்டான்.

நேத்ரனின் முகத்தை ஆழ்ந்து நோக்கியவள், அவனின் முகத்தில் ஏதாவது வெறுப்போ, தவிப்போ அல்லது தன்னிடம் எதையாவது அறிந்து கொள்ளும் ஆர்வம் தென்படுகிறதா என பார்க்க.



ஆனால் நேத்ரனின் முகமோ நிர்மலமாக இருக்க சூர்யாவால் எதையும் கண்டறிய முடியவில்லை. ( அடப்போமா யாருக்கு டெஸ்டிங் வைக்குற அவனெல்லாம் இந்த விஷயத்தில் டாக்டர்(phd) பட்டம் வாங்கினவன், நீ டக்குனு பார்த்தாலே அவன் முகத்தில் இருந்து எதையும் புரிஞ்சிக்க முடியாது. நீ வேற தனுன்னு கூப்பிட்டு அவன் மூஞ்சியை பார்க்குறதுக்குள்ள அவன் ஆயிரம் ரியாக்ஷன் மாத்துவான் ).



தன் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டுருந்தவளிடம், “நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் டாலி, இப்படியெல்லாம் பார்த்துவைக்காதேன்னு, அப்புறம் நடக்கும் எதுக்கும் நான் பொறுப்பில்லை” என தன் ஒற்றை கண் சிமிட்டி கூற.

நேத்ரன் சொல்லியதை கேட்டு சூர்யாவின் முகம் செந்தாமரையென சிவக்க அவனின் அணைப்பு சற்று தளர்ந்து இருப்பதை உணர்ந்து அவனின் அணைப்பில் இருந்து விலகியவள், அவனுக்கு தன் முகத்தை காட்டா வண்ணம் திரும்பி அமர்ந்துக் கொண்டாள் சூர்யா.



நேத்ரனும் அவள் அருகில் எழுந்து அமர்ந்து கொள்ள,அவனின் முகத்தை தவிப்போடு நோக்கியவள், “ உங்களுக்கு என்கிட்ட கேட்க எந்த கேள்வியும் இல்லையா..?” என படப்படப்போடு கேட்க.



“ அது நிறைய இருக்கு “ என கூறியப்படி அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டவன், “நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாமா டாலி” என கேட்க.



சூர்யாவோ, நேத்ரன் நேற்றைய நிகழ்வை பற்றி கேட்பான் என ஒரு வித பயத்தோடு அவனை பார்த்திருந்தவள்,அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை சூர்யா எதிர்பார்க்கவில்லை அதலால் அவனை 'பே' என தன் விழிகளை விரித்து பார்க்க.



அந்த விழிகளில் கவரப்பட்டு அதற்கு ஒரு மென்முத்தம் பதித்து, “ நிஜமா என்னால முடியலை டாலி, ஐ நீட் யூ வெரி பாட்லி சோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா டாலி..?” என நேத்ரன் கேட்க, மனம் நிறைய தன்னவன் மீது நேசம் இருந்தாலும் நேற்று அவனை கண்டதும் தன் வாழ்வில் நடந்தது அனைத்தும் சூர்யவிற்கு நினைவிற்கு வர





நேத்ரனுக்கு, என்ன பதில் கூறுவது என தெரியாமல் தடுமாற நேத்ரனின் இதயத்தில் ஒருவித வலி எழுந்தது தன்னவளின் அமைதியில், இருவர் மனத்திலும் ஒருவர் மீது ஒருவர் கரைக்காண முடியா அளவிற்கு காதல் இருந்தாலும் அவளோ, தன்னிலை அறிந்தால் தன்னவனின் காதலை எங்கே இழந்து விடுவோமோ என பயம் கொள்ள...

சூர்யாவிடம் இருந்து எழுந்த நேத்ரன், அங்கிருந்த ஜன்னல் கம்பிகளை பற்றி கொண்டான். தனக்கு ஒரு ஆபத்து என்றால் உயிர் துடிப்பவள், தன்னை தன் உயிருக்கு மேலாய் நேசிப்பவள், அவனிற்கு நன்றாக தெரியும் திருமணம் பற்றி கேட்டால் சூர்யா தயங்குவாள் என்று இருந்தும் பெண்ணவள் தயங்குவதை அவனின் நேசம் கொண்ட நெஞ்சத்தினால் தாங்க முடியவில்லை.



அதனால், “ ஏன் சூர்யா, என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டம் இல்லையா..? இல்லை என்னோட காதலில் உனக்கு நம்பிக்கை இல்லையா..?” என கேட்க.



அவனின் கேள்வி அவளின் உயிர்வரை சென்று வலிக்க செய்ய, அப்பொழுது தான் உணர்ந்தாள் சூர்யா தன் தவறை… திருமணம் பற்றி நேத்ரன் கேட்ட பொழுது தன்னுடைய அமைதியில் இப்படி தானே அவனுக்கும் வலித்திருக்கும் என புரிந்து கொண்டவள் விழிகளில் நீர் கசிய “தனு…” என அவனை அணைத்து கொண்டாள். அவளின் கண்ணீர் அவனின் முதுகை நனைக்க, தன் மனவலியில் வார்த்தைகளை விட்டவன், தன்னுயிரானவளின் அணைப்பிலும், கண்ணீரிலும் முழுதாக கரைந்தவன்.



முதுகில் இருந்து தன் தோள் வரை தழுவி இருக்கும் சூர்யாவின் கரங்களை பற்றி தன் முன் அவளை நிறுத்தியவன் அவளின் நாடி தொட்டு நிமிர்த்தி அவளின் நெற்றியில் முத்தம் பதித்து, “சாரி…” என சொல்ல.



அவனின் முத்தத்தினை கண் மூடி ஏற்றவள், அவனின் மன்னிப்பில் பதறி விழி திறந்தவள் அவனின் உதடுகளை தன் தளிர் கரங்களால் மூட, முடிய அவளின் விரல்களுக்கும் முத்தமிட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் நேத்ரன்.



சூர்யா, அவனின் மார்பில் இருந்து தன் முகத்தை நிமிர்த்தி அவனின் முகம் பார்த்து, “தனு, நான் நைட் ஏதாவது வித்தியாசமா ரியாக்ட் பண்ணேனா..?” என கேட்க.



‘இல்லையே நேத்துதான் ரொம்ப கரெக்ட்டா நடந்துகிட்ட என்னைய இறுக்கி அணைச்சிக்கிட்டு தூங்கின’ என மனத்திற்குள் கூறிக் கொண்டவன்... வெளியில் சாதாரணம் போல் முகத்தை வைத்து கொண்டு, “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே” என கூற.



“ பொய் சொல்லாதீங்க தனு, ந... நா... நான்... நே..த்...து... ஒ...ஒருத்தனை அடிச்சேன்... இல்லையா... அவன்... அவன்... எ... என்” என சூர்யா சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே அவளின் இதழ்களுக்கு தன் விரல்கள் கொண்டு தடை விதித்தவன்.



“ வேண்டாம் டாலி, எனக்கு உன்னை பத்தின எந்தவித எக்ஸ்பிளனேஷனும் தேவை இல்லை” என்றவன் மனத்திற்குள் ‘அவன் உனக்கு உங்கப்பா பார்த்த மாப்பிள்ளை என்பதை உன் வாயால் சொல்வதை கூட கேட்க நான் விரும்பவில்லை. உனக்கு காதல், கல்யாணம் அப்படின்னு சொன்னா முதலில் என் நினைவும், என் முகமும் மட்டும் தான் உன் நினைவில் வரணும். அதுக்கு தான் இத்தனை நாள் பொறுமையா இருந்த நானே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்’ என ஒரு பெருமூச்சினை வெளி ஏற்றியவன்.



“ உன்னோட பாஸ்ட் பத்தி எனக்கு தெரிஞ்சிக்க விருப்பம் இல்லை, இப்ப இந்த நொடி என்னை நேசிக்கிற சூர்யா, நான் நேசிக்கிற என் டாலி தான் எனக்கு முக்கியம் சோ உனக்கு நானும், என்னுடைய காதலும் தான் முக்கியமானதா இருக்கணும். உன்னோட கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை எனக்கு நம்மோட நிகழ்காலமும் எதிர்காலமும் தான் நிஜம். அதனால நீ சூர்யாவா இருந்தப்ப உன்னை பாதிச்ச விஷயமோ இல்ல அது சம்பந்தப்பட்ட நபர்களையோ சந்திக்க நேர்ந்தா சூர்யாவா அவங்களை பார்த்து பயப்படாம, Mrs.சூர்யா கமலநேத்ரனா அவங்களை தைரியமா எதிர்கொள்ளணும். உனக்கு எப்பவுமே நானும், நம்முடைய காதலும் பக்கபலமா இருப்போம்னு நம்பணும்” என.



(இவ்வளவு சொன்னியே ராசா, உன்னை எனக்கு 5 வருஷம் முன்னாடி தெரியும் பார்த்த நொடியில் இருந்து உன்னை காதலிக்குறேன்னு சொன்னியா உன்னோட கடந்த காலத்தை பத்தி கவலை இல்லைன்னு சொன்னியே அது எனக்கு தெரியும்னு சொன்னியா உன் டாலி, உனக்கு பெரிய ஆப்ப ரெடி பண்ண போறா அப்ப தெரியும் உனக்கு. காதல் வந்தா எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும் முட்டாளா ஆயிடுவாங்களோ…?).



நேத்ரன் கூறியவற்றை கேட்டு சூர்யா, புரிந்ததாக தலை அசைத்தாள். ஏற்கனவே அவள் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தாலும் திடீர் என அவனை கண்டவுடன் அவளின் மனத்திடம் குறைந்து பயம் கொண்டது, இப்பொழுது நேத்ரனின் கூற்றில் முற்றும் தெளிந்தவள், இனி எத்தகைய சூழ்நிலையிலும் பயம் கொண்டு, தன்னிலை இழக்க கூடாது என உறுதி எடுத்து கொண்டாள். அவளின் உறுதி விவேக்கினை கண்டால் விழுமோ..? அல்லது தன்னவனின் காதல் அவளின் பயத்தினை வீழ்த்துமோ..? பார்ப்போம்...



அவன் உயிரானவள்…
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 33



நேத்ரன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு அவனின் அணைப்பில் பூனைக்குட்டியாக அடங்கி இருந்தவளை தன்னோடு அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் அமர்த்தி இருவருக்கும் காபி வரவழைத்து அவளுக்கு கொடுத்து தானும் பருகினான். இன்னமும் தன்னுடன் ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்திருந்தவளை கண்டவனுக்கு சற்று முன் தோன்றிய மனசுணக்கம் கூட காணாமல் போக, சூர்யாவின் தோளினை சுற்றி தன் கை கொண்டு அணைத்தவன்.



“ டாலி, இப்படியே இருக்க எனக்கும் ஆசையா தான் இருக்கு. பட், இன்னைக்கு 10 மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுல நாம ரெண்டு பேரும் கட்டாயம் கலந்துக்கணும்... ஆல்ரெடி மணி 9 ஆக போகுது..”“ என கூற.



அதுவரையில் அவனின் அணைப்பில் அடங்கி இருந்தவள் அவனை விலக பார்க்க... அந்த கள்வனோ, அவளை விட்டு விலகாமல் மேலும் மேலும் அவனின் நெருக்கத்தினையும் அணைப்பின் இறுக்கத்தையும் அதிகரிக்க...



நேத்ரனின் செய்கையில் வெட்கம் கொண்டவள், அவனின் கரங்களில் இளகி குழைந்துக் கொண்டே,

“த... தனு மீட்டிங் இருக்கு லேட் ஆகுது சொன்னீங்க... கிளம்ப வேண்டாமா..?” என மயக்கம் நிறைந்த குரலில் கேட்க...

“ ம்...ம்...ம்…” என்றவன் அந்த மயக்க நிலையில் இருந்து விடுபட விரும்பாமல் இருக்க…



எப்பொழுதும் அவனை கவரும் அவளின் கழுத்தில் உள்ள மச்சம் இன்றும் அவனை மயக்க… அதில் தன் உதடுகளை பதித்தவன் அங்கேயே சில நொடிகள் நிலைக்க சூர்யாவின் நிலை தான் சொல்ல முடியாமல் போனது.



அவர்களின் மோன நிலையை கலைப்பது போல் நேத்ரனின் தொலைபேசி ஒலிக்க… அதில் மீண்டவர்கள்...



சூர்யா, நேத்ரனின் முகம் பார்க்க முடியாமல் அமர்ந்திருக்க அவளின் நிலையுணர்ந்த நேத்ரன் அவளின் நாடியை பிடித்துயர்த்தி தன் முகம் பார்க்க செய்தவன், அவளின் நெற்றியில் தன் நெற்றியை முட்டி மென்னகை சிந்தி, “நீ போய் குளிச்சிட்டு வா, அதுக்குள்ள நான் உனக்கு டிரஸ் அரேஞ்ச் பண்ணுறேன்” என கூறியவன் சூர்யாவின் கன்னம் தட்டி, “ம்... சீக்கரம் ரெடி ஆகு” என சொல்லி தன் அலைபேசியோடு முன்னறைக்கு செல்ல.



செல்லும் அவனையே விழிகளில் நேசம் வழிய பார்த்து கொண்டிருந்தாள் சூர்யா. பின்பு தன்னவன் சொல்லி சென்றது நினைவில் வர, தன் தலையில் லேசாக தட்டி கொண்டவள், முகம் புன்னகை பூக்க குளியல் அறை நோக்கி சென்றாள்.



அழைப்பது ஹரிஷ் என அறிந்த நேத்ரன், அவனிடம் தனிமையில் பேசவே வெளியில் வந்தான்.



நேத்ரன் அழைப்பை எடுத்ததும் அவனை பேசவிடாமல்... தொடர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான் ஹரிஷ்.



“ டேய் கமல், சூர்யா எப்படி இருக்கா..? ஒண்ணும் பிரச்சனை இல்லையே ஏன் நைட் வீட்டுக்கு போகலை என்ன எதுன்னு ஒரு கால் பண்ணி சொன்னியாடா..? அம்மாவையும், ஜெய்யையும் சமாளிக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி அம்மாவே பரவாயில்லை என்கிற அளவிற்கு இந்த கொத்தவரங்கா என்னை படுத்தி எடுத்திட்டா மிடியலை டா சாமி” என கூறி ஒரு பெரும் மூச்சினை வெளியேற்ற.



நேத்ரனோ, “அடங்குடா, கால் பிக் பண்ணா எதிரில் இருக்குறவனை பேச விடாம பேசுறதே உனக்கு பொழப்பா போச்சி உன் பாசமலருக்கு ஒண்ணும் ஆகலை இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் சூர்யாவும் மீட்டிங் நடக்குற இடத்திற்கு வந்திருவோம்… நீயும் ஜெயஸ்ரீயும் அங்கே வந்திடுங்க...



அப்புறம்… தன் நெற்றியை நீவி கொண்டவன் சூர்யா, நேத்து ஒருத்தனை அடிச்ச இல்லையா அவனை நம்ம ஆளுங்க கூட்டிக்கிட்டு போனாங்க அவன் இப்ப எங்க இருக்கான்” என வினவ.



ஹரிஷோ, “அவன் நம்ம ஹோட்டலில் தான் ஸ்டே பண்ணி இருக்கான். அவனோட பிரெண்ட்ஸ் யாரோ நேத்து நடந்த பார்ட்டியை அட்டெண்ட் பண்ண வந்திருக்காங்க கூடவே அந்த பக்கியும் தொத்திகிட்டு வந்திருக்கு. வந்த இடத்தில் சும்மா இல்லாம, ஏழரைய கூட்டி விட்டுடிச்சி, குடிச்சிட்டு அப்படியே மட்டை ஆகாம சூர்யாகிட்ட போய் இடிச்சி, அவளை அப்செட் ஆக்கி” என புலம்பியவன், வாய்க்குள்ளே அவனை ( குடிக்காரனை) வண்ணம் வண்ணமாய் திட்டினான்.



“ ஏன்டா கமல், அவனை பத்தி இவ்வளவு விசாரிக்கிற எனிதிங் சீரியஸ்” என்றவனிடம், “சூர்யாவோட பயம் விவேக்னா, அவளோட கஷ்டத்திற்கு அவன்தான்டா காரணம், விவேக் ஒருவிதத்தில் அவளோட மனசை காயப்படுத்தினான்னா இந்த வீணாபோனவன், அவளோட மனசை கொன்னவன்” என அந்த குடிக்காரனை பற்றி கூறி, அவனை க்ளோஸா வாட்ச் பண்ண சொல்லிய நேத்ரன் வார்த்தைகளை கடித்து துப்ப...





அதில் நேத்ரனின் கோபத்தினை அறிந்து கொண்ட ஹரிஷ், “ சரி மச்சான் அவனை நான் பார்த்துக்குறேன், நீ சூர்யாவை பார்த்து அழைச்சிக்கிட்டு வா, திரும்பவும் கேக்குறன்னு கோவப்படாதே, கண்டிப்பா இப்படி ஒரு சிச்சுவேசன்ல சூர்யா அந்த விவேக்கை மீட் பண்ணியே ஆகணுமா..? எதுக்கும் இன்னொரு தடவை யோசிடா” என.



நேத்ரனோ, தன் கேசத்தினை கோதிக் கொண்டவன். தன் மனத்திற்குள் ‘இது சூர்யாவுக்கு மட்டும் இல்லடா, எனக்கும் இது விஷபரீட்சை தான். அவளோட பயத்தினை விட்டு என்னோட காதலை முழுசா நம்பணும். அப்படி மட்டும் அந்த விவேக்கை பத்தின பயத்தினை சூர்யா கடந்து வந்துட்டா, என்னை விட யாரும் சந்தோஷபட மாட்டாங்க. என்னோட காதலும், இத்தனை வருட காத்திருப்பும் முழுமை அடைஞ்சிடும். நான் என்னோட காதலையும், என் டாலியையும் முழுசா நம்புறேன். கண்டிப்பா என்னை ஏமாத்த மாட்டாங்க” என தனக்குள் சொல்லிக்கொண்டவன்.





“ ம்ஊ…” என ஆழ்ந்து சுவாசித்தவன். ஹரிஷிடம், “என் காதலை என் டாலி கண்டிப்பா தோக்கவிட மாட்டா, சோ மீட்டிங்கான அரேஞ்சுமெண்ட்ஸ் எல்லாம் பண்ணிடு ஓகே” என கூறி தொடர்பை துண்டித்தான்.



அப்பொழுது தான் நேத்ரனுக்கு நியாபகம் வந்தது. சூர்யாவிற்கு உடை தயார் செய்வதாக சொன்னது அவசர அவசரமாக அங்கு ஹோட்டலின் உள்ளே உள்ள ஆடையகத்திற்கு அழைத்து அழகிய மாந்தளிர் பச்சை நிறத்தில் ஒரு மென்பட்டு புடவையை சூர்யாவிற்காக தருவித்தவன், அதற்கு தேவையான மற்றவற்றையும் சொல்லி இன்னும் 10 நிமிடங்களில் கொண்டு வந்து தர சொன்னவன் சூர்யாவை காண சென்றான்.



சொன்னது போல் பத்து நிமிடங்களுக்குள் எல்லாம் வர அந்த அறையில் வைத்தவன், குளியல் அறையில் இருந்த சூர்யாவிடம், அவளை தயாராக சொல்லிவிட்டு மற்றொரு அறையில் நேத்ரன் தயார் ஆக சென்றான்.



இருவரும் ரெடி ஆகி வர, நேத்ரன் தான் தேர்ந்தெடுத்த உடையில் அழகுற தயாராகி வந்தவளை உச்சி முதல் பாதம் வரை கண்களால் ஸ்பரிசித்தவன், அவளிடம் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்ற அவளை ஆராய்ச்சியாய் நோக்கினான்.



நேத்ரன் சூர்யாவிற்கு புடவை எடுக்கும் பொழுதே அதற்கு பொருத்தமான அக்ஸஸ்சரிசும் தேர்ந்தெடுத்திருந்தான். மற்ற அனைத்து அணிகலனையும்அணிந்திருந்தவளின் கழுத்து மட்டும் வெறுமையாய் இருந்தது… என்னவென்று கேட்டவனிடம் அந்த கழுத்தணியில் உள்ள ஹூக் திறக்க முடியவில்லை என்றும்... அழுத்தினால் எங்கே நசுங்கியோ அல்லது உடைந்து விடுமோ என்பதினால் போடவில்லை என்றவள். அவன் வாங்கி கொடுத்தது உடைவதை அவள் விரும்பவில்லை என்று சேர்த்து கூறனாள்.



“ சரி மாற்றி கொள்ளலாம்” என்ற நேத்ரனை, தன் இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி சூர்யா முறைக்க...



நேத்ரனோ, “ என்ன விஷயம்…?” என தன் புருவத்தினை ஏற்றி கேட்க,



“தனு, இவ்வளவு நேரமும் டைம் ஆகுது ஆகுதுன்னு என்னை எவ்வளவு அவசர படுத்தினீங்க இப்ப என்னென்னா போய் ஜூவெல் மாத்திட்டு வரலாம் சொல்றீங்க… ஒண்ணும் வேணாம் அதை அப்புறம் மாத்திக்கலாம். இப்ப வேணும்னா நேத்து அத்தம்மா கொடுத்த நகையை போட்டுக்குறேன் “ என கூறியவளை தடுத்து நிறுத்தியவன். “அது இந்த ட்ரெஸ்ஸுக்கு சூட் ஆகாது டாலி” என கூறி தன் ஷர்ட் காலரை சரி செய்துக் கொண்டே சிந்தித்திருந்தவன், திடீரென கண்கள் மின்ன தன் கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை கழட்டி சூர்யாவில் கழுத்தில் அணிவித்திருந்தான். ( டேய், உன்னோட தாத்தா, விமர்சையா உன்னோட கல்யாணத்தை நடத்த நினைச்சா நீ இப்படி பொசுக்குனு நாலு சுவத்துக்குள்ள சத்தமே இல்லாம ஒரு செயின் போட்டு கல்யாணத்தை முடிச்சிட்டியே ராசா).



அணிவித்தவன் அவளை பார்த்து, “இட் சூட்ஸ் யூ வெரி மச் “ என கூறி புன்னகை புரிய, (செய்றதையும் செஞ்சிட்டு காம்ப்ளிமெண்ட் வேற கொடுக்குற).



நேத்ரன், அந்த நிகழ்வினை சாதாரணமாக எடுத்து கொள்ள சூர்யா தான் உறைந்து நின்று விட்டாள். அவளின் நிலை கண்டு, ( பாவம், புள்ள மிரண்டு போயிடுச்சி).



“ டாலி, என்ன அப்ப அப்ப பிரீஸ் ஆகி போற, ஏன் நான் அவ்வளவு அழகா இருக்கேனா..? “ என கூறி கண்சிமிட்ட, ( பண்றதையும் பண்ணிட்டு, பேச்சு வேற) அவனின் அந்த பாவனையில் சூர்யா தன்னை மறந்து நேத்ரனின் நெஞ்சில் சாய, அவளை தன்னோடு அரவணைத்துக் கொண்டான். அவளின் உயிருக்கு உயிரானவன்...

*******************************



மிக பிராம்மண்டமாக இருந்த அந்த கான்பிரன்ஸ் அறையில் அனைவரும் கூடி இருக்க விவேக்கும், அவர்களில் ஒருவனாக சூர்யாவை எதிர்பார்த்து கொண்டிருந்தான்.



கமலநேத்ரனும், சூர்யாவும் அந்த அறையினுள் செல்ல, அதுவரை அமைதியாக இருந்த இடம் சற்று பரபரப்புக் கொண்டு, மீண்டும் அமைதி நிலவ...



அனைவருக்கும் தன் வணக்கங்களை தெரிவித்துக் கொண்ட நேத்ரன், அங்கிருந்த பலருக்கு சூர்யாவை தெரிந்திருந்தாலும்… மீண்டும் ஒருமுறை அவளை அனைவருக்கும் தன்னுடைய வருங்கால மனைவி என்றும் இந்த நிறுவனத்தின் M.D என அறிமுகப்படுத்த... ( நேத்ரா, பாவம் சூர்யா ஒரு நாளைக்கு ஒரு அதிர்ச்சி கொடு இப்படி தொடர்ந்து குடுத்தா அந்த புள்ளை என்ன பண்ணும்).

அங்கிருந்தவர்கள் எல்லோரும் சூர்யாவிற்கு வணக்கமும், வாழ்த்துக்களும் தெரிவிக்க… இதில் அதிர்ந்து நின்றவர்கள் இருவர் மட்டுமே...



அது வேறு யாரும் இல்லை, சூர்யா மற்றும் விவேக். சூர்யா, நேத்ரனின் இந்த அறிவிப்பை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. சூர்யாவை, வேலைக்கு வர வைக்கவும், அவளை தன்னுடைய வருங்கால மனைவியாக அறிமுகப்படுத்தவும்... நேத்ரன் எவ்வளவு பாடுப்பட்டான் என்பது அவனுக்கு தான் தெரியும். இதில் அவன் அவளை M.D என கூறியவுடன் அதிர்ந்தவள், முயன்று தன் உணர்வுகளை சமன் செய்து சாதாரணம் போல் காட்டிக் கொண்டாள்.



விவேக்கிற்கோ பேரதிர்ச்சி காரணம், சூர்யா தன் கைகளால் தொட முடியாத உயரத்திற்கு செல்வது அவனை மேலும் மேலும் கோபம் கொள்ள செய்தது. ( அது மட்டும் தான் இப்பத்திக்கு உன்னால முடியும்).



மீட்டிங் தொடங்கி அவரவர் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர். ஒரு வழியாக பேச்சு வார்த்தைகளும் முடிவிற்கு வர அங்கிருந்த அனைவரையும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறியும் பொருட்டு தங்களை தாங்களே அறிமுகம் செய்து கொள்ள… அனைவருக்கும் இன்முகத்தோடு பதில் சொல்லிக் கொண்டு வந்தாள் சூர்யா. அவளை சிறு யோசனையோடு தன் பார்வையால் தொடர்ந்துக் கொண்டிருந்தான் நேத்ரன்.



விவேக்கின் முறை வந்தவுடன், அனைவரையும் போல் அவனையும் சாதாரணமாக எதிர்கொண்டவள், அவனின் குரலிலும், பார்வையிலும் ஒரு நொடி பயந்து மிரண்டாலும்.



சூர்யா, அடுத்த நொடி தன்னவனின் நினைவில் அவனின் காதல் கொடுத்த துணிவில் விவேக்கை தைரியமாக முகத்தில் எந்தவித எதிர்மறை உணர்வுகளும் காட்டாது, அதே புன்னகையுடன் கடந்து செல்ல.

தன்னை பார்த்தவுடன் பயந்து நடுங்குவாள், அல்லது தன்னிடம் பார்வையால் கெஞ்சுவாள் என விவேக் நினைக்க சூர்யாவோ மற்றவர்களிடம் எப்படி பேசினாலோ அப்படியே அவனிடமும் பேச.



சூர்யாவின் இச்செய்கை விவேக்கிற்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் விட்டது போல் ஆக, சூர்யாவிற்கு தன்னை அடையாளம் தெரியவில்லையா..? இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொள்கின்றாளா..? என புரியாமல் மண்டை காய… சூர்யாவினை, தனியாக சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருந்தான்.



சூர்யாவின் நிலைமையோ விவேக்கை கண்ட நொடி உள்ளுக்குள் பயபந்து உருள நடுங்கி பதறி துவள காத்திருக்கும் உள்ளத்தினையும் உடலினையும் மிகவும் பாடுபட்டு, நேத்ரன் கூறிய வார்த்தைகளை முயன்று நினைவுக்கு வரவழைத்து ஒருவழியாக அவனிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல்… அவனை கடந்து வருவதற்குள் போதும் போதும் என்றானது. இருந்தும் அவளின் மனம் நேத்ரனின் அருகாமையை விரும்பியது.



சூர்யாவின் ஒவ்வொரு அசைவினையும் படம் பிடித்து கொண்டிருந்த நேத்ரனுக்கு முதலில் அவளின் பயம் மற்றும் பதட்டத்தினை கண்டவுடன், ஒரு நொடியே ஆனாலும் அவன் உள்ளத்தில் வலியெடுக்க…



கண் இமைக்காமல் அவளையே நோக்கி கொண்டிருந்தான். அடுத்த நொடி அவளின் பதற்றம் பொய்யோ என எண்ணும் வகையில் சூர்யாவின் நிமிர்வு கண்டு நேத்ரனின் உதடுகளில் ஒரு கர்வ புன்னகை மிளிர… ‘அவ்செம் டாலி, இந்த நிமிர்வு தான் உன்கிட்ட நான் எதிர்பார்த்தேன். இனிமே இருக்கு அவனுக்கு’ என தனக்குள் கூறிக் கொண்டான்.



மீட்டிங் முடிந்து அனைவருக்கும் அங்கேயே உணவிற்கு ஏற்பாடு செய்திருக்க (பப்பே முறையில்) அனைவரும் தங்களின் விருப்பமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு உண்ண தொடங்கினர்.



அங்கு தனியாக அமர்ந்திருந்த சூர்யாவை கண்ட விவேக், இது தான் சரியான தருணம் என நினைத்து அவளிடம் பேச சென்றான். இதை சற்று தூரத்தில் இருந்தே நேத்ரன் பார்த்து விட, அவனும் அவர்களை நோக்கி சென்றான். சூர்யாவிற்கு உணவினை எடுக்க சென்ற ஜெயஸ்ரீ உணவு அடங்கிய தட்டுடன் சூர்யாவை நோக்கி வர அவளை தடுத்த நேத்ரன். அவளின் கையில் உள்ள உணவு தட்டினை தான் பெற்றுக் கொண்டு அவளை ஹரிஷ் இருந்த பக்கம் அனுப்பி விட்டு, சூர்யா அருகில் செல்லும் முன்பு விவேக் அவளை நெருங்கி இருந்தான்.

அவனை கூட்டத்தில் கண்ட பொழுதே அவன் தனிமையில் தன்னை சந்திக்க முற்படுவான் என அறிந்து வைத்திருந்தாள் சூர்யா. முடிந்தவரை அவனிடம் தனிமையில் சிக்கக் கூடாது என்றும் அப்படி அவனை சந்திக்க நேர்ந்து விட்டால் அவனிடம் பயம் கொள்ளக்கூடாது என பலமுறை தனக்குள்ளேயே சொல்லி சொல்லி உருவேற்றிக் கொண்டவள். இப்பொழுது அவனை தன் அருகில் கண்ட பொழுது அவளின் உடலில் சிறுநடுக்கம் ஏற்பட்டாலும் அதனை மறைத்து கொண்டு அவளின் முகத்தில் எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல், இதழ்களில் உள்ள புன்னகை வாடாமல் பார்த்துக்கொண்டாள்.



இது அனைத்தையும் மீறி சூர்யாவின் கண்கள் தன்னவனை தேட அவளின் தேடலை அறிந்தவன் போல் நேத்ரன் அவளை நோக்கி வருவதை கண்டுக்கொண்டவள் உடலில் புதுதெம்புடன் விவேக்கினை சந்திக்க தயாரானாள் சூர்யா.



விவேக், சூர்யாவை நெருங்கியவுடன் மிகவும் பணிவுடன் வணக்கம் கூறி, நலம் விசாரிக்க... அவனின் குரலில் உள்ள பணிவு, அவனின் பார்வையில் சிறிதும் இல்லை. அதில் வெஞ்சினமும், பழிவெறியும், ஏளனமுமே நிறைந்திருந்தது.



“ என்ன மேடம், இந்தியாவில இருக்கிற வரை தான் நீங்க கற்பு, கலாச்சாரம் இதை எல்லாம் கடை பிடிப்பிங்களா..? நாட்டை விட்டு வந்த உடனே, அதெல்லாம் மறந்து போயிடுமா..?

ஏன் கேட்கிறேன்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெரிய பத்தினின்னு சொல்லிக்கிட்டு உன்னை கட்டிபுடிச்சேன்னு என்னை அடிச்சி அவமானப்படுத்தின, ஆனா நேற்று நீயே வேறொருத்தனை கட்டிக்கிட்டு நிக்குறீயே அதான் கேட்டேன். இல்ல அவன் என்னை விட பணக்காரன் அப்டிங்கறதுனால உன்னோட கொள்கையெல்லாம் விட்டுட்டியா..?”.



“சும்மா சொல்லக் கூடாது உங்க அப்பன் உனக்கு பார்த்த மாப்பிள்ளைய விட இவன் ரொம்ப நல்லாவே இருக்கான்.( எங்கேயோ கருகுற வாடை வருது). அவனே நான் சொன்னதை நம்பி, கல்யாண மேடையிலேயே உன்னை அம்போன்னு விட்டுட்டு போனான். இவன் எம்மாத்திரம்” என கூறி ஒரு எள்ளல் நகை புரிய.



சூர்யாவோ, “அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அவனை நீங்க துரத்தி விடலைனா இப்படி ஒருத்தரை நான் என்னோட லைப்ல மிஸ் பண்ணி இருப்பேன். அதுக்கு உங்களுக்கு தான் நான் ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்” என இதழ்களில் புன்னகை பூக்க முகத்தில் மலர்ச்சியுடன் கூற…



சூர்யாவின் நன்றி நவிலலில் விவேக்கின் முகம் தான் இஞ்சி தின்ற குரங்கு போல் ஆகியது. தன்னை கண்டுக்கொள்ளாமல் இருந்தவளிடம் சென்று அவளின் வாழ்வில் நடந்த, கசப்பான விரும்பத்தகாத பழைய நிகழ்வுகளை பற்றி சொன்னால் சூர்யாவின் கண்களில் பயமும், கண்ணீரும் போட்டி போட்டு கொண்டு வெளிப்படும் என விவேக் நினைக்க… சூர்யாவோ, அவனின் நினைப்பில் ஒரு கூடை அல்ல ஒரு லாரி மணலை கொட்டினாள். தன்னுடைய பதிலால்...



விவேக், மேற்கொண்டு பேச ஆரம்பிக்கும் முன்னே நேத்ரன் சூர்யாவினை நெருங்கி, அவளின் இடையில் கைகோர்த்து அவளை தன்னோடு அணைத்து கொண்டவன், “ என்ன டாலி, சாப்பிடுற ஐடியா இல்லையா..? எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது அதான் நானே வந்துட்டேன்” என சூர்யாவிடம் கூறியவன்.



விவேக்கினை அப்பொழுது தான் காண்பது போல,

“ எஸ்கியூஸ் மீ, ப்ளீஸ்” என கூறி அவளுக்கு உணவினை ஊட்ட முற்பட அதனை தடுத்தவள், “தனு, இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்… அதுவும் சென்னை, இவங்க ஹோட்டல்ல தான், நான் கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். இவரோட பெயர்” என அவள் சொல்ல ஆரம்பிக்க…



“ Mr.விவேக்” என கூறி அவனின் மொத்த ஜாதகத்தினையும் சொல்லி இருந்தான் நேத்ரன். அவனை ஆச்சர்யமாக சூர்யா பார்க்க.



“ இட்ஸ் நோட் எ பிக் இஸ்யூ… இங்க வந்திருக்குற ஒரு ஒருத்தரை பத்தியும் புல் டீடெயில்ஸ் எனக்கு தெரியும்” என கூறி புன்னகத்தவன், மீண்டும் அவளுக்கு உணவினை ஊட்ட. சூர்யா, நேத்ரனை பார்க்கும் பார்வையில் காதல் கசிந்துருக இம்முறை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் சூர்யா.



நேத்ரன், விவேக்கினை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை…



நேத்ரனும், சூர்யாவும் தங்கள் உலகில் மூழ்கி இருக்க… வேறு வழி இல்லாது விவேக் தான் அங்கிருந்து நகரும் படி ஆனது.



முன்பை விட விவேக்கின் மனத்தில் கோபம் கொளுந்து விட்டு எரிய அவன் அங்கிருந்து கிளம்பும் முன் விடைபெறுவது போல், சூர்யாவிற்கு ஒரு துண்டு சீட்டை கொடுத்து விட்டு சென்றான்.



அதை தூக்கி எறிய சென்றவள், கடைசி நிமிடத்தில் மனத்தினை மாற்றி கொண்டு அந்த பேப்பர் துண்டினை பத்திரப்படுத்தினாள்.



அன்றைய கூட்டம் முடிந்து நால்வரும் வீட்டிற்கு திரும்ப அவர்களை எதிர் கொண்ட பிரேமாவிடம் சூர்யா, நேற்று வீட்டிற்கு வராதாததிற்கு மன்னிப்பு கேட்க.



பிரேமாவோ, “ அதனால என்னடா ம்மா, பார்ட்டி முடிய நேரம் ஆயிடுச்சி அதனால அங்கேயே தங்க வேண்டியதா போச்சு இதுக்கெல்லாம் யாராவது சாரி சொல்லுவாங்களா போடா, போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என கூறி சூர்யாவை மேலே அனுப்பி வைத்தார்.



பிரேமா சொல்ல சொல்ல சூர்யா, நேத்ரனை பார்க்க… அவன் தன் கண்களை மூடி திறந்து தலையினை மறுப்பாக அசைத்து வாயில் தன் சுட்டு விரலை வைத்து எதுவும் சொல்ல வேண்டாம் என சைகை செய்ய சூர்யாவும் அமைதியாக தன்னுடைய அறைக்கு சென்றாள்.



அறைக்குள் நுழைந்ததும் குளியல் அறைக்குள் சென்று, தன் மன வெம்மை அகல குளிர்ந்த நீரின் அடியில் நிற்க… அந்நீரினாலும் அவளின் மன வெம்மையினை போக்க முடியவில்லை.



ஒரு வழியாக குளித்து முடித்து வந்தவளுக்கு, அப்பொழுது தான், விவேக் கொடுத்து சென்ற சீட்டு ஞாபகம் வர… அதை எடுத்து அதில் உள்ளதை படிக்க ஆரம்பித்தாள்.



அதில்,

“ ரொம்ப தைரியம் வந்துடுச்சு போல

இவன் பார்க்க நல்லா இருக்கான் வசதியும் கூட இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம்னு நினைக்காதே அது ஒரு நாளும் நடக்காது நடக்க விட மாட்டேன்

இவன் வெளிநாட்டுக்காரனா இருந்தா கூட நான் சொல்லுறதை பத்தி கவலை பட மட்டான். பட் இவனோ வெளிநாட்டு வாழ் இந்தியன் அதுவும் தமிழன்… சோ, எல்லா ஆம்பிளைகளுக்கும் இருக்கும் மென்டாலிட்டி தான் இவனுக்கும் இருக்கும். தனக்கு வரபோற மனைவி தனக்கு மட்டும் சொந்தமானவளா, தன்னுடைய மனைவி உணருற, ஸ்பரிசிக்குற முதல் ஆண் தானா இருக்கணும்னு தான் எல்லாரும் நினைப்பாங்க.



ஸ்டில், நீ வெர்ஜின் தான்… ஆனா அது உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். நான் சொல்லுறதை கேட்டும், என்கிட்ட இருக்குற உன்னோட போட்டோஸ் பார்த்தா யாரும் அப்படி சொல்ல மட்டாங்க.



இப்படி எல்லாம் செய்றானே, இவனுக்கு நம்ம மேல இன்னும் ஆசையோன்னு தப்பு கணக்கெல்லாம் போட்டுடாதே. ஒரு காலத்தில் உன்னை அடையணும்னு எனக்கு ஆசை இருந்தது. பட் இப்ப எனக்கு வேண்டியது எல்லாம் உன்னோட கண்ணீர் மட்டும் தான். நீ உன்னோட லைப்ல சந்தோஷமா, நிம்மதியா இருக்கவே கூடாது. உன்னோட வாழ்க்கை முழுக்க அவமானம் மட்டும் தான் மிஞ்சி இருக்கணும். இதுனால எனக்கு என்ன கிடைக்க போகுதுனு நினைக்கிறியா..? பெருசா ஒன்னும் இல்லை ஜஸ்ட் ஒரு சின்ன திருப்தி அவ்வளவு தான் .

சீ யூ சூன்…”.

என இருக்க. அதை படித்ததும் அந்த சீட்டினை கசக்கி எறிந்தவளின் உடல் முழுவதும் தீப்பற்றியது போல் எரிய இவ்வளவு நேரம் இருந்த திடம் காணாமல் போக, அவளின் உடல் நடுக்கம் கொண்டு துவள தன் அறையினை ஒட்டியுள்ள பால்கனியில் கால்களை மடித்து அதனை கைகளால் கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்து அமர்ந்து விட்டாள் சூர்யா.



அவள் உயிரானவன்…


அத்தியாயம் 34



சூர்யா, விவேக் குடுத்த கடிதத்தினை படித்ததும் அவளின் மனத்தினை பயம் கவ்வியது என்னமோ உண்மை தான்...



சிறு அமைதிக்கு பிறகு, சூர்யாவிற்கு காலையில் நேத்ரன், கூறியது அனைத்தும் அட்சர சுத்தமாக காதில் ஒலித்தது.



“ உன்னோட பாஸ்ட் பத்தி எனக்கு தெரிஞ்சிக்க விருப்பம் இல்லை. இப்ப இந்த நொடி என்னை நேசிக்கிற சூர்யா, நான் நேசிக்கிற என் டாலி தான் எனக்கு முக்கியம்... சோ, உனக்கு நானும், என்னுடைய காதலும் தான் முக்கியமானதா இருக்கணும்... உன்னோட கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை எனக்கு நம்மோட நிகழ்காலமும், எதிர்காலமும் தான் நிஜம் அதனால நீ சூர்யாவா இருந்தப்ப உன்னை பாதிச்ச விஷயமோ, இல்ல அது சம்பந்தப்பட்ட நபர்களையோ சந்திக்க நேர்ந்தா, சூர்யாவா அவங்களை பார்த்து பயப்படாம Mrs.சூர்யா கமலநேத்ரனா, அவங்களை தைரியமா எதிர்கொள்ளணும்... உனக்கு எப்பவுமே நானும், நம்முடைய காதலும் பக்கபலமா இருப்போம்னு நம்பணும்...” அவனின் வார்த்தைகள் நினைவிற்கு வந்ததும் சூர்யாவின் இதழ்களில் ஒரு இளநகை பூக்க.



‘கண்டிப்பா, உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தனு, எனக்கு ஒரு பிரச்சனைன்னா நீங்க எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நான் முழுசா நம்புறேன்…’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். ( ராசாத்தி, இதே வார்த்தையை இப்படியே ஞாபகம் வச்சிக்க மறந்துடாத, பின்னால யூஸ் ஆகும்).



விவேக்கின் கடிதத்தில் உள்ள கடைசி வரிகள், அவளுள் ஒருவித கோபத்தினை கொடுக்க, ‘இன்னும் நீ திருந்தல இல்லடா, உனக்கு நான் அழுறதை பார்க்கணுமா..? நான் “சூர்யா சிவரத்தினமா…” இருக்கும் பொழுதே உன்கிட்ட நான் அடிப்பணியல, இப்ப எனக்கு என்னோட தனு, உறுதுணையா பக்கபலமா இருக்காரு… உன்கிட்ட நான் பயந்து ஒதுங்கி இருந்ததுக்கான காரணம், என் பொருட்டு என்னோட குடும்பம் மத்தவங்க முன்னாடி தலைகுனிய கூடாதுன்னு தான். நீ என்னடா என்னை பத்தி என் தனுகிட்ட சொல்றது, நான் சொல்றேன் டா, நீ என்னயெல்லாம் பண்ணினனு... இதுவரை நீ பார்த்த சூர்யா வேற, இனிமே நீ பார்க்க போற சூர்யாவே வேற… இனிமே நான் உன்னை கண்டு ஒதுங்கி போக மாட்டேன். உன்னை பேஸ் பண்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். உன்னால நான் அடைஞ்ச வேதனை, அவமானம் இதுக்கெல்லாம் உனக்கு நான் பதில் கொடுக்கல... நான் சூர்யா இல்லடா’ என தன் மனத்திற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.



இவ்வளவு நேரமும் சஞ்சலம் கொண்ட சூர்யாவின் மனது, இப்பொழுது அப்படியே அந்த ஏகாந்த சூழலில் தன்னவனின் நினைவுகளில் மூழ்கி விழிகளை மூடி அமர்ந்திருந்தாள்.



நேத்ரன், தன் அன்னையிடம் நேற்று இரவு நடந்தவற்றை சொல்லவில்லை, காரணம் பிரேமாவின் மனநிலை, உடலளவில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சூர்யா விஷயத்தில் அவரின் மனநிலை பாதிக்கபடும் என நேத்ரன் அதனை கூறவில்லை, சூர்யாவினையும் சொல்ல அனுமதிக்க வில்லை.



சிறிது நேரம் கழித்து சூர்யாவின் அறைக்கு வந்த நேத்ரன், அறை கதவினை தட்ட எந்தவித பதிலும் இல்லாது போகவே சற்று பதட்டம் கொண்டவன், கதவின் பிடியில் கை வைக்க அது திறந்துக் கொண்டது.



பதட்டத்துடன் அவளின் அறைக்குள் நுழைய, அங்கே வெறுமையான அறையே அவனை வரவேற்க, அவன் கண்கள் அவ்வறையை ஆராய முன்னேறி சென்றவன் கால்களில் தட்டுப்பட்டது. சற்று முன்பு சூர்யா எறிந்து சென்ற காகித துண்டு… யோசனையோடு அதனை எடுத்து என்னவென பார்க்க… அது ஒரு கடிதம் போல் இருக்க, அதில் உள்ளதை படிக்க ஆரம்பித்த நேத்ரனின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

இப்பொழுது மட்டும், விவேக் நேத்ரனின் கண்ணெதிரில் இருந்தால் அவனின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். ஏன் அவனை கொல்லும் அளவிற்கு வெறி உண்டானது பெரும் முயற்சி செய்து தன் கோபத்தினை கட்டுப்படுத்தியவன் அந்த காகிதத்தை, தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்டு மீண்டும் சூர்யாவினை தேட...



அங்கே பால்கனியில், இருளில் தன்னை குறுக்கிகொண்டு அமர்ந்திருக்கும் சூர்யாவினை கண்டு நேத்ரனின் காதல் கொண்ட மனது துடித்தது. ‘எத்தனை தடவை சொல்றதுடி தர்பூஸ், ஏதாவது உனக்கு கஷ்டம்னா, உன்னை தாங்க என்னோட தோள்கள் இருக்கு. இப்படி தனியா நீ தவிக்கிறத பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி (ஐய்யோ, நேத்ரா இப்பதான் அவளே தெளிஞ்சி இருக்கா, மறுபடியும் நீ ஏன்டா, முதல்ல இருந்து ஆரம்பிக்கிற..? மீ பாவம் அதை விட ரீடெர்ஸ் ரொம்ப ரொம்ப பாவம் மிடியல). இன்னமும், உனக்கு என்கிட்ட என்ன தயக்கம்’ என மனதோடு அவளிடம் சண்டை போட… ( டேய், அவ அவளோட கடந்த காலத்தினை பத்தி சொல்ல வரும் பொழுது எல்லாம் எதையாவது சொல்லி அவளோட வாயை அடைச்சிட்டு, இப்ப ஏன் சொல்லலை அப்படின்னு வருத்தப்படுற ஐய்யோ..! ஐய்யோ..! உன்னோட ரொம்ப குஷ்டம் ச்ச… ச்ச… கஷ்டம்பா).



ஒரு மனது அவளின் செய்கையில் வலித்தாலும், அவனின் இன்னொரு மனதோ அவளுக்காக பரிந்து கொண்டுவந்தது. இறுதியில் அவனின் காதல் மனமே ஜெயிக்க...



சூர்யாவின் அருகில் சென்ற நேத்ரன், அவளின் தலையினை மிக மென்மையாக வருட, அந்த ஸ்பரிசத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒரு மென்னகையோடு தன் கரத்தினை நேத்ரனை நோக்கி நீட்ட நீட்டிய கரத்தினை பற்றி அவளின் அருகில் அமர்ந்தான் நேத்ரன். அமர்ந்தவனின் உள்ளத்தில் குழப்பங்கள் எழ காரணம், சூர்யாவின் சிரித்த முகம் அந்த பேப்பரில் உள்ளதை படித்து விட்டு மனம் வருந்துகிறாள் என அவளின் மேல் இவன் கோபம் கொள்ள… அவளின் இந்த மாற்றம் நேத்ரனுக்கு சந்தோஷத்தினை கொடுக்க… அவளை இன்னும் நெருங்கி அமர்ந்துக் கொண்டான்.



தன் அருகில் அமர்ந்தவன், மடியில் படுத்துக் கொண்டாள் சூர்யா… இவ்வளவு நேரம் அவளோடு தன் மனத்தில் இட்ட சண்டைகள், அவனின் வருத்தம் எல்லாம் சூர்யாவின் இந்த ஒரு செயலில் பகலவனை கண்ட பனிப்போல் விலக நேத்ரனின் உதடுகளில் புன்னகை படர, ஒரு தாயின் பரிவோடு, தன்னுயிரானவளின் தலையினை வருடி கொண்டே, “ ஏன் டாலி, இங்க வந்து இப்படி உட்காந்திருக்க..? ஆர் யூ ஆல் ரைட்..?” என கேட்டான் அவளின் மனத்தினை அறியும் பொருட்டு…



அவன் மடி மீது படுத்துக் கொண்டே, “ஒண்ணும் இல்லை தனு, நான் நல்லா தான் இருக்கேன். கொஞ்ச நேரம் என் கூடவே இருக்கீங்களா..? நீங்க என் பக்கத்தில் இருந்தா, ஐ பீல் மச் பெட்டெர்” என கூறி விழி மூடிக் கொண்டாள் சூர்யா.



சிறுது நேரம் அமைதியில் கழிய, ஒரு முடிவுடன் விழி திறந்தவள், “ தனு, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” (உங்களை முன்னாடியே சந்திச்சி இருந்தா எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருக்காது, அதை சொல்ற சங்கடமும் எனக்கு வராமல் போய் இருக்கும் ) என எண்ணியவளின் விழிகளில் பரிதவிப்பு அப்பட்டமாக தெரிய, சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தவன், தன்னவளின் இந்த பார்வையில் நேத்ரனின் உள்ளத்தில் உதிரம் கசிந்தது.



தன்னவளின் பார்வையில் உள்ள தவிப்பினை சரியாக புரிந்துக் கொண்டவன், அதற்கான காரணத்தினை தவறாக அர்த்தம் செய்து கொண்டான். ‘ஏன்டீ, கொஞ்சம் கூடவா உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சு’ ( நேத்ரனுக்கு தெரியவில்லை இதே வார்த்தைகளை எதிர்காலத்தில், தன்னவள் தன்னை பார்த்து கேட்பாள் என்று) என மனம் வருத்தம் கொண்டான்.



என்னதான் அவளின் மீது வருத்தம் ஏற்பட்டாலும்… நேத்ரனின் கைகள் அவளின் தலையினை வருடுவதை நிறுத்த வில்லை. தன்னவனின் அமைதியில் மீண்டும் அவனை அழைக்க இம்முறை, “ ம்…” கொட்டினான் நேத்ரன்.



“உங்களுக்கு இப்ப ஏதாவது முக்கியமான வேலை இருக்கா..? எனக்கு உங்ககிட்ட கொஞ்ச பேசணும்” என கூறி அவன் முகம் பார்க்க நேத்ரனோ, சூர்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையில் குழப்பம் அடைந்தவள், அவனிடமே, “ஏன் தனு இப்படி கோபமா பார்க்குறீங்க..?” என கேட்க.



“ உனக்கு எத்தனை தடவை சொல்றது ரியா, யூ ஆர் மை பெட்டர் ஹாஃப், என்னில் சரிபாதி நீ, உனக்கு என்கிட்ட பேசணுமா, தனு எனக்கு உங்ககிட்ட பேசணும் வாங்க அப்படின்னு கூப்பிடுறதை விட்டுட்டு, பேசலாமா..?னு பர்மிஷன் கேட்குற” என கோபமாக ஆரம்பித்து ஆற்றாமையில் முடிக்க.



( தம்பி, அவசர பட்டு வாயவிடாத )



அவனின் மடிமீது தலை வைத்து படுத்திருந்தவள், எழுந்து அமர்ந்துக்கொண்டாள். அதற்கும் சூர்யாவினை பார்த்து, “ இப்ப எதுக்கு எழுந்த..?” என முறைத்தான் நேத்ரன்.



“ தனு, இப்ப எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது இப்படியெல்லாம் பேசுனீங்கன்னா… எனக்கு கஷ்டமா இருக்கு…” என கூறியவள், அவனை இன்னும் நெருங்கி அமர்ந்துக் கொண்டு, “உங்க மடியில படுத்துக்கிட்டு, நீங்க தலை கோதிவிட்டா எனக்கு தூக்கம் தான் வரும்… அப்புறம் நான் பேச வந்ததை பேச முடியாது” என கூறினாள்.



நேத்ரனோ, மனத்திற்குள் ‘நீயென்ன நம்ம கல்யாணத்தை பத்தியும், ஹனிமூன் பத்தியுமா பேச போற, அந்த கடங்காரன் விவேக் பத்தி பேச போற அதுக்கு நீ தூங்கறதே எனக்கு நல்லது’ என பெரும் மூச்சினை வெளியேற்றியவன், மௌனமாக இருக்க… அதனையே சம்மதமாக எடுத்துக் கொண்டவள், பேச தொடங்கினாள்.



“ தனு, உங்களுக்கு என்னை பத்தி எந்தளவிற்கு தெரியும்னு எனக்கு தெரியாது… நான் ஏன் வெளிநாட்டிற்கு வந்தேன் அப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?” என ஆரம்பிக்க.



நேத்ரனோ குரலில் சிறு கண்டிப்புடன், “ டாலி, நான் தான் ஏற்கனவே சொ…” என பேச ஆரம்பித்த நேத்ரனின் வாயின் மேல் தன் கை கொண்டு மூடியவள், அவனை பார்த்து எதுவும் சொல்லாதே என தலையசைத்தவள், “ எந்தவித மறுப்பும், தடையும் சொல்லாதீங்க இந்த ஒரு தடவை நான் சொல்றதை எனக்காக கேளுங்க… இது என்னோட மனத்திருப்திக்காக ப்ளீஸ், தனு” என கெஞ்ச.



நேத்ரனால் மேற்கொண்டு எதுவும் கூறமுடியவில்லை. அவன் அமைதிகாக்க, அதுவே சூர்யாவிற்கு போதுமானதாக இருந்தது.



ஹோட்டல் அறையில் விவேக், சூர்யாவின் மாற்றத்தினை ஜீரணிக்க முடியாமல் அந்த அறையின் நீள அகலத்தினை அளந்துக் கொண்டிருந்தான். அவனின் சிந்தனை முழுவதும் சூர்யாவினை சுற்றியே இருந்தது.

*******************************************



இரண்டு வருடங்களுக்கு முன்…..

சூர்யா தன் இளங்கலை படிப்பினை முடித்து, ஒரு வழியாக சிவாவின் உதவியோடு காயூவை சரி கட்டி முதுகலை பட்ட படிப்பின் முதல் வருடத்தினை வெற்றிகரமாக முடித்து… இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க காத்திருந்தாள்.



சிவரத்தினம், ஒரு புகழ் பெற்ற வங்கியின் மேலாளர், அவரின் நன்நடத்தையும், மற்றவரை மதிக்கும் குணமும், கை மற்றும் வாய் சுத்தமும்… அவருக்கு பெரும் மதிப்பும் மரியாதையையும் பெற்று தந்தது.



சிவரத்தினம் மேலாளராக உள்ள கிளையின் ஒரு முக்கிய வாடிக்கையாளர் தாருகேஷ்... தாருகேஷ், பணக்கார வீட்டின் ஒரே வாரிசு, அழகன். அவனின் தந்தை சிறுவயதிலேயே தவறி விட, தாயின் பாசத்திலும், பணத்தின் அரவணைப்பிலும் வளர்ந்து வந்தான். அவனின் தாய் சாந்தியம்மாவிற்கு தன் மகனிற்கு பாசத்தினை காட்டி வளர்க்க தெரிந்த அளவிற்கு… நல்ல பண்புகளை கற்றுத்தர மறந்துவிட்டார். அதன் பலன் தாருகேஷ், தன் கல்லூரி காலத்திலேயே அவன் மது, மாது என அனைத்து கெட்ட பழக்கங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அதைவிட அது தன் அன்னையினை எட்டாதாவாறு பார்த்துக் கொண்டான். வெளிச்சத்தில் உத்தமனாகவும், இருளில் கயவனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தான்.



இதில் கொடுமை என்னவென்றால், பல பெண்களின் வாழ்க்கையில் காதல் என்ற பெயரில் விளையாடியுள்ளான். அவனின் வெளித்தோற்றம் மற்றும் வசதிக் கண்டு பல பெண்கள் அவனின் காதல் நாடகத்தினை நம்பி, அவனிடத்தில் தன்னை இழந்தவர்கள் அநேகம் திருமணம் செய்ய கேட்பவர்களை பணம் கொண்டு அவர்களின் வாயடைத்தான். பணத்திற்கு மயங்காதவர்களும் இவனின் குணம் கண்டு ஒதுங்கிக் கொண்டனர். இவ்வாறாக அவன் கல்லூரி படிப்பு முடிந்து, அவனின் குடும்ப தொழிலை அவன் கையில் எடுத்து, அந்த தொழிலை இவன் மென்மேலும் வளர்க்க வில்லை என்றாலும், அதனை அழிக்கவில்லை, அதனால் அவனின் இருள் வாழ்க்கை எந்த வித இடையூறும் இன்றி போனது.



சிறிது சிறிதாக தாருகேஷின் நடவடிக்கைகள் சாந்தியம்மளை எட்ட துடித்து போனார் தன் மகனின் நடத்தையில், அதனால் கூடிய விரைவில் அவனிற்கு திருமணம் செய்து வைத்தால் மகன் திருந்தி விடுவான் என அனைத்து தாய்மார்களை போல அவரும் எண்ணினார். (இவங்க புள்ளைய தறுதலையா வளர்க்க தெரியாம வளர்ப்பாங்களாம் எங்கிருந்தோ ஒருத்தி வந்து திருத்துவாளாம் நல்ல கதையா இருக்கே). தெரியாம சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறினால் திருத்த முடியும். தப்பு செய்ய சூழ்நிலை உருவாக்குறவங்களை எப்படி திருத்த முடியும். அவர்கள் திருந்துவார்களா..? பாவம், அதை இந்த தாயுள்ளம் ஏற்குமா..?



தாருகேஷின் அன்னை அவனிற்கு திருமணத்திற்கு மும்முரமாக பெண் தேட, இதை அறிந்தவன் அன்னையிடம் திருமணம் வேண்டாம் என சண்டையிட, திருமணம் செய்து கொண்டால்தான் இந்த சொத்துகள் எல்லாம் அவனிற்கு கிடைக்கும் என்றும், அப்படி திருமணம் செய்ய மறுத்தால் இந்த சொத்துக்கள் அனைத்தையும் தருமத்திற்கு எழுதிவைத்து விடுவதாக சொல்லவும் சற்று இறங்கி வந்தான். (இந்த சொத்துக்கள் எல்லாம் அவனின் தந்தையின் சுயசம்பாத்தியம், அவர் இறக்கும் பொழுது இவன் சிறுவன் என்றதால் அவர் தன் மனைவி மீது எழுதி வைத்தார் ).



திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவன், அவர் பார்க்கும் பெண்களை திருமணம் செய்ய முடியாது என்றும் தான் விரும்பும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூற, மகன் இந்தளவிற்கு இறங்கி வந்ததே பெரிது என்று எண்ணியவர் அவனின் விருப்பத்திற்கு சரியென்றார். பாவம் அவருக்கு தெரியவில்லை அவனின் எண்ணம்…



தாருகேஷோ, தனக்கு ஒரு மனைவியை தேடாமல்… தன் திட்டத்திற்கு ஒரு துணையை தேடினான். ஏனெனில் அவனிற்கு இந்த கல்யாணம், குடும்பம் போன்றவற்றில் பெரிதாக ஈடுபாடு இல்லை. மனைவி என்று ஒருத்தி வந்தால், தன்னுடைய உல்லாசவாழ்விற்கு தடையாக இருப்பாள். தன்னை போல உள்ளவளை கல்யாணம் செய்வது போல் நாடகமாடி, தன் அன்னையிடம் இருந்து சொத்துக்களை கைபற்ற எண்ணினான்.

******************************************



ஆறு மாதங்கள் கடந்த நிலையில்….

ஒரு நாள் சூர்யா, சிவாவின் வங்கிக்கு சென்றவள். அங்கு வந்த தாருகேஷின் பார்வையில் விழுந்தாள் சூர்யா.



சூர்யாவின் அழகு அவனை பித்தம் கொள்ள வைத்தது. சிறிது நாட்கள் அவளைறியாமல் அவளை பின்தொடர்த்தவன். அவளை பற்றி முழுதாக தெரிந்துக் கொண்டான். அதில் அவனிற்கு புரிந்த விஷயம் மற்ற பெண்களை போல் சூர்யாவை எளிதாக தன் காதல் வலையில் சிக்க வைக்கமுடியாது என்பதும், அவளை அடைய ஒரே வழி திருமணம் தான் என விளங்க.



தான் திருமணம் செய்துக் கொண்டால் தான் சொத்தும் கிடைக்கும், அழகு பதுமையாய் இருக்கும் சூர்யா தனக்கு வேண்டும் என்றால் கல்யாணமே அதற்கு தீர்வு எனவே தாருகேஷ், சூர்யாவுடன் தன் திருமணத்தினை நடத்துவதற்காக திட்டத்தினை அவனின் மனம் வேகமாக கணக்கிட தொடங்கியது.



அதற்கு முதல் படியாக, சிவரத்தினத்திடம் நற்பெயர் எடுக்க முடிவு செய்தான். அதற்காக தன் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆகும் செலவின் பெரும் பகுதியை இவர்கள் நிறுவனமே ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்து, அதற்கு தன் தாயாரின் பெயரில் டிரஸ்ட் அமைத்து அதற்கு புது வங்கி கணக்கு தொடங்கி, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையினை தங்கள் நிறுவன கணக்கில் இருந்து ட்ரான்ஸ்பெர் செய்ய வந்திருந்தான். இதனை அவனின் ஒரு தொலைபேசி அழைப்பிலோ அல்லது அவர்களின் ஊழியர்களே செய்திருக்க முடியும். சிவாவிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்து கொள்வதற்காகவே இந்த வருகை... மெது மெதுவாக தான் நல்லவன் என்னும் எண்ணத்தினை சிவாவின் மனத்தில் பதித்தான் தருகேஷ்...





 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 35



இன்னும் ஓரிரண்டு மாதங்களில் சூர்யாவின் படிப்பு முடிந்து விடும் என்ற நிலையில், அவள் பயின்ற கல்லூரிலேயே கேம்பஸ் இன்டெர்வியூ நடக்க அதில் தேர்வாகினாள் சூர்யா.



சிவாவிடம், காயத்ரி சூர்யாவின் திருமணத்திற்காக பேச தொடங்கினார்.



“ இங்க பாருங்க, அப்பாவும் பொண்ணும் என்ன என்னமோ சொல்லி இந்த ரெண்டு வருஷத்தை கடத்திட்டீங்க. இப்ப சூர்யாவோட படிப்பும் முடிய போகுது, அவளுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிடனும்னு தோணுது. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமே…” என கூற.



“ என்ன அவசரம் காயூ, குட்டிம்மா இப்பதான் ஒரு வேலைக்கு செலக்ட் ஆகி இருக்கா... கொஞ்சநாள் பொறுத்து பொறுமையா பண்ணலாமே..?” என்ற சிவாவை முறைத்த காயத்ரி, “என்ன விளையாடுறீங்களா..? அப்பாவும் பொண்ணும், முதல்ல படிக்கட்டும் சொன்னீங்

க, இப்ப வேலைக்கு போகட்டும் சொல்றிங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல” என பொறிய…



சிவாவின் முகத்தில் கவலை குடியேற, “சூர்யா இன்னும் எனக்கு குழந்தையா தான் தெரியிறா” என கூற.



காயத்ரிக்கு தன் கணவரின் மனநிலை புரிந்தது, தன் மகளை பிரிய முடியாமல் தவிக்கும் அவரை நினைத்து சிரிப்பதா..? இல்லை அழுவதா..? என தெரியவில்லை.



“எல்லா அப்பாவிற்கு தன் மகள் குழந்தையா தான் தெரிவா, அதுக்காக எல்லாம் அப்படியே விட முடியாது, என்னால என் பொண்ணை ரொம்ப தூரத்தில் எல்லாம் கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது. அதனால அவளை சென்னையிலேயே செட்டில் ஆகுற மாதிரி மாப்பிள்ளை பாருங்க” என தன் கணவரின் மனம் அறிந்து அதற்கு வழி கூறினார் காயத்ரி.( நேத்ரா, அவங்களுக்கு சென்னை மாப்பிள்ளை தான் வேணுமாம் பாரீஸ் மாப்பிள்ளை வேண்டாமாம்).



பாவம் அவர்களுக்கு தெரியவில்லை, தாங்களே தங்கள் மகளை வரும் காலத்தில் தூரதேசம் அனுப்புவோம் என்று…



மேலும் சில தினங்கள் செல்ல, ஒரு நாள் காலையில் தன் அன்னையுடன் சிவாவினை காண வந்திருந்தான் தாருகேஷ்.



இங்கு சிவாவினை காண வருவதற்கு முன்பு…

தன் அன்னையிடம், தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளை கல்யாணம் பண்ணிக் கொண்டால் தான் நல்லப்படியாக திருந்தி வாழ்வதாக கூறி நல்லவன் வேடம் போட்டவன், அவரை நம்ப வைக்க, தன் பழைய இருள் வாழ்வில் இருந்து சிறிது விலகி இருந்தான். தற்பொழுது அவனின் குறி சூர்யா... மகன் சொல்லுவதை அந்த தாயுள்ளமும் நம்பி இதோ அவர் சிவாவின் முன் நிற்கின்றார்.

****************************



தன் முன் வந்து நின்றவனைக் கண்டு உள்ளுக்குள் யோசனையாக இருந்தாலும் வெளியில் அவனை புன்னகையுடன் வரவேற்றார் சிவா.



“ வாங்க தாருகேஷ், உட்காருங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க” என அலுவலக விஷயமாக பேச ஆரம்பிக்க அப்பொழுது தான் கவனித்தார் அவன் தனியாக வரவில்லை என்பதை...



“ வணக்கம் சார், இவங்க தான் என்னோட அம்மா திருமதி. சாந்தியம்மாள், நான் உங்க கிட்ட ஆஃபீஸியலா பேச வரலை பர்சனலா பேச வந்திருக்கேன். பேசலாமா..?” என பவ்யமாய் கேட்பவனிடம் மறுக்க முடியாமல் தலையசைத்தார்.



“என்னடா, இவன் இப்படி வந்து கேட்குறான்னு தப்பா நினைச்சிக்காதீங்க சார், நான்… நான்… உங்க பொண்ணு சூர்யாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் சார், அதுக்குத்தான் என் அம்மாவோட உங்ககிட்ட பேச வந்திருக்கேன். உங்களுக்கு இதுல விருப்பம் இருந்தால் உங்க வீட்டுக்கே வந்து பெண் கேட்குறேன் சார், இப்பவே உங்க வீட்டுக்கு வந்திருப்பேன். உங்களை சங்கடப் படுத்தக் கூடாதுனு தான் இப்படி தனியா இங்க வந்து கேட்குறேன், நான் மட்டும் தனியே வந்து பேசுனா தப்பா நினைக்க போறீங்கனு தான் என் அம்மாவோட வந்திருக்கேன் சார்” என நயமாக பேச.



அவனின் வார்த்தை ஜாலத்தில் மயங்கிய சிவரத்தினம், இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா என மனம் மகிழ்ந்தவர் காயத்ரியிடமும், மற்றவர்களிடமும் பேசிய பிறகே எதையும் முடிவு செய்ய முடியும் என நினைத்து கொண்டவர்.



“இது நான் மட்டும் முடிவு செய்ற விஷயம் இல்ல வீட்டுல என் மனைவிக்கிட்ட பேசிட்டு என் முடிவை சொல்றேன்…” என கூற.



அதுவரை அமைதியாக இருந்த சாந்தியம்மாள், “தாருகேஷ், எனக்கு ஒரே பையன், அவனுக்கு வர போற மனைவியை நான் என் சொந்த மகள் மாதிரி பார்த்துப்பேன். நீங்க அண்ணிக்கிட்ட கலந்து பேசிட்டு உங்க முடிவை சொல்லுங்க அண்ணா…” என கூறி கரம்குவித்து விடைபெற.

சிவாவுக்கு, தாருகேஷின் பேச்சில் நல்ல பையன் என்ற எண்ணம் உருவாகி இருக்க… அவனின் அன்னை பேசிய விதம், அவரின் நடவடிக்கைகளை கண்டு நல்ல குடும்பம் என அவர்களின் மேல் நம்பிக்கையும், நன்மதிப்பும் தோன்றியது.

**********************



காயத்ரியிடம் விஷயத்தினை கூற மகிழ்ந்தவர், அவர்களை பற்றி விசாரித்து முடிவு செய்யலாம் என்றார்.



இவர்கள் விசாரித்தவரை தாருகேஷ் பற்றி எந்தவித எதிர்மறையான தகவலும் இவர்களுக்கு கிடைக்கவில்லை, கிடைக்கவில்லை என்பதனை விட தாருகேஷ் கிடைக்க விடவில்லை என்பது தான் உண்மை...



ஏற்கனவே நல்லவன் வேடம் போடுபவன், இப்பொழுது இவர்கள் தன்னை பற்றி விசாரிப்பார்கள் என அறிந்து அதற்கு தக்கவாறு நடந்துக் கொண்டான்.



சிவாவிற்கும், காயூவிற்கும் இந்த சம்பந்தத்தில் முழு திருப்தி ஏற்பட காரணம், தங்களை விட வசதி படைத்தவர்கள், சொந்த தொழில், எந்தவித பிக்கல் பிடுங்கல் இல்லை… மாப்பிள்ளை பார்க்க அழகா இருக்கார், மாமியார் குணம் தங்கம். அதுவும் இல்லாமல் மாப்பிள்ளை சென்னைவாசி, தங்களின் மகள் தங்களை விட்டு தூர எங்கும் செல்லாமல் அவளை அருகில் வைத்துக் கொண்டே அவள் குடும்பம் நடத்தும் அழகை பார்க்கலாம் என பெற்றவர்கள் மனம் பூரித்து தான் போனது. இது போதாதா அவர்களுக்கு, இந்த சம்பந்தத்தினை சரி என சொல்ல.



கணவன் மனைவி இருவருக்கும் முழு திருப்தி ஏற்படவுடம், இந்த விஷயத்தினை சூர்யாவிடமும், ஜீவாவிடமும் பேச ஜீவாவிற்கு இந்த விஷயத்தை கேள்வியுற்றவுடன் அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, தன் அக்காவின் திருமணம் அவனுக்கு கசக்கவா செய்யும், சூர்யாவிற்கு தான் இந்த திருமணத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை…



தன் தந்தையிடம் வந்தவள், “அப்பா, எனக்கு இன்னும் காலேஜ் முடியலை, அதுவும் இல்லாமல் எனக்கு வேலைக்கு போகணும்னு ஆசையா இருக்குப்பா… ( எதிர்காலத்தில் ஏன் அந்த வேலைக்கு போனோம்னு வருத்தப்படுவம்மா)... எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம், ப்ளீஸ் ப்பா “ என கெஞ்ச.



சிவாவோ “குட்டிம்மா, உன்னோட ஆசைக்காக தான் உன்னை மாஸ்டர் டிகிரி படிக்க வச்சேன் காலேஜ்ல நடந்த இன்டெர்வியூல நீ செலக்ட் ஆகியிருக்க இதெல்லாம் ஓகே… அப்பாக்கு, உன்னோட கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல… நாங்க என்ன நாளைக்கே கல்யாணம்னா சொல்லுறோம்… இந்த மாப்பிள்ளை எங்க எல்லாருக்கும் பிடிச்சி இருக்கு, உனக்கும் பிடிச்சி இருந்தா மேற்கொண்டு பேசலாம்… இல்ல வேற மாப்பிள்ளை பார்க்கலாம், கல்யாணம் ஆகுற வரைக்கும் வேலைக்கு போ, கல்யாணம் முடிச்சிட்ட பிறகு மாப்பிள்ளை வீட்டுல சரி சொன்னா வேலைக்கு போ, இல்லைன்னா விட்டுடு அதவிட்டுட்டு மொத்தமா கல்யாணமே இப்பத்திக்கு வேண்டாம் சொல்லக் கூடாது குட்டிம்மா” என…



அதற்குள் காயத்ரி, “என்ன அவகிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க, அதுக்குத்தான் சொன்னேன், இவ யுஜி முடிச்ச உடனே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு, நீங்க தான் குழந்தை ஆசைப்படுறா மாஸ்டர் டிகிரி படிக்கட்டும், அப்புறம் கல்யாணம் பண்ணலாம் சொன்னீங்க… இப்ப வேலைக்கு போகணும்னு சொல்லுறா. இப்ப இந்த சம்பந்தத்தை வேணாம் சொல்லிட்டா, மறுபடியும் இப்படி ஒரு சம்பந்தம் நமக்கு கிடைக்காது, என்னால இவளை ரொம்ப தூரத்தில் எல்லாம் கல்யாணம் பண்ணிக்குடுத்திட்டு, இங்க நிம்மதியா இருக்க முடியாது… எனக்கு நினைச்ச உடனே என் பொண்ணை பார்க்கணும், அதுக்கு இப்படி சென்னையிலேயே இருந்தா தான் வசதிப்படும் இதோ மாப்பிள்ளை போட்டோ, பார்த்து பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லு…” என காயூ படபடக்க.



சூர்யாவிற்கோ, பெற்றோரின் மனநிலை புரிய போட்டோவை பார்க்காமலேயே, “உங்க இஷ்டம் தான் என் இஷ்டம், உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு பிடிச்சிருக்கு” என கூறினாள்.

காயூ, தன் மகளின் கன்னம் வழித்து நெட்டி முறிக்க… சிவா, அருகில் வந்து தன் தோளோடு அணைத்து கொண்டார்.



சூர்யாவும், தந்தையின் தோளில் சாய்ந்து கொள்ள அவளின் தலையினை வருடிக் கொடுத்தவர், “சூர்யா, எங்க மேல வருத்தமாடா, இந்த கல்யாணத்திற்கு ரொம்ப கம்பல் பண்ணுறோம்னு தோணுதா..?” என வினவ, இல்லை என சூர்யா தலை அசைக்க…



“உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்ல, நீ நம்ம வீட்டு இளவரசிடா, உன்னை எங்களைவிட எல்லாவிதத்திலையும் சிறப்பா, எந்த ஒரு குறையும் இல்லாம பார்த்துக்குற ஒருத்தன் கையில் உன்னை பிடிச்சி கொடுத்தா தான், எங்களால நிம்மதியா இருக்க முடியும். (ஐய்யோ..! சிவா அதுக்கு இவன் சரிப்பட மாட்டான்). இப்ப வந்திருக்குற இடம், ரொம்ப நல்ல இடம், மாப்பிள்ளையும் அவர் குடும்பமும் அருமையானவங்க… போட்டோ பாருடா, உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருந்தா அவங்களை பொண்ணு பார்க்க வர சொல்லலாம்” என சொல்ல.



சூர்யாவோ, “எனக்கு போட்டோ பார்க்க வேண்டியது இல்லப்பா, நான் அப்ப சொன்னதுதான், உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் பரிப்பூரண சம்மதம்… அப்புறம், இந்த பொண்ணு பார்க்குற விசேஷம் எல்லாம் வேண்டாமே..? ப்ளீஸ்ப்பா” என கெஞ்ச,



சிவா காயத்ரியை பார்க்க, அவரும் கண்மூடி திறக்க, “சரிடா, நான் அவங்க கிட்ட சொல்லிடுறேன். நேரா நாம நிச்சயத்தார்த்தமே செஞ்சிக்கலாம்னு ஆமா உனக்கு எப்படா எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது” என கேட்க,



“ இன்னும் பத்து நாள்ல ஸ்டார்ட் ஆகுது. எக்ஸாம் எல்லாம் முடிஞ்சி ஒரு மாசம் அந்த ஹோட்டல்ல ட்ரைனிங் பீரியட் அப்புறம் தான் ஜாப் கான்பார்ம் பண்ணுவாங்க…” என சூர்யா கூற,



“ சரி குட்டிம்மா, நீ போய் உன் வேலைய பாருடா” என அவளை அங்கிருந்து அனுப்ப, சூர்யா நேராக சென்றது தோட்டத்திற்கு தான். அந்த பூச்செடிகளை பார்த்ததும் அவளுள் ஒரு இதம் பரவ, அங்கு இருந்த கல் மேடையில் அமர்ந்துவிட்டாள்.



இவ்வளவு நேரமும், பெற்றோர் மற்றும் தமக்கையின் பேச்சு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்த ஜீவா, சூர்யா தோட்டத்திற்கு செல்வதை பார்த்தவன் அவளை தொடர்ந்து சென்றவன் அவள் அருகில் அமர்ந்தவன்.



“ என்ன பூசணி, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா..? மாப்பிள்ளை போட்டோக்கூட பார்க்காம வந்துட்ட” என கேட்க.



“ ம்ச்... பிடிக்குது பிடிக்கலை இல்லடா பிரச்சனை மனசு என்னமோ மாதிரி இருக்கு சம்திங் டெல்ஸ் மீ, “ ஹி இஸ் நாட் மைன்” என்னவோ உறுத்தலாவே இருக்கு. ( அது ஒண்ணும் இல்லம்மா, ஒருத்தன் உன்னை உருகி உருகி உயிருக்கு உயிரா காதலிக்கறான், அதனால இருக்குமோ, நியூடோன்ஸ் 3rd லா... everyaction there is a equal and opposite reaction)... இதே மைண்ட் செட்டோட எது செஞ்சாலும் சரிவராது. ஒருவேளை என்னோட நினைப்பு தப்பாக்கூட இருக்கலாம், அதான் போட்டோ பார்க்கலை, எப்பவும் அம்மா அப்பா எனக்கு நல்லது தான் செய்வாங்க. சோ நடக்குறது நடக்கட்டும்” என்றாள்.



“ஐய்யோ..! பூசணி, தத்துவம் எல்லாம் பின்ற போ ரொம்ப யோசிக்காத உனக்கு பிடிக்காத எதையும் யாரும் உன் மேல திணிக்க மாட்டாங்க, எப்பவும் உனக்கு நாங்க உறுதுணையா இருப்போம். சரி அதைவிடு இப்ப புதுசா போற ஹோட்டல்ல இருக்க ரிஷப்ஷனிஸ்ட் எல்லாரையும் பிரென்ட் பண்ணிக்கோ, அப்படியே எனக்கும் இன்ட்ரோ பண்ணிவிடு, எனக்கு பின்னாடி யூஸ் ஆகும்…” என ஜீவா கூற.



முதலில் அவன் சொல்லியது சூர்யாவிற்கு புரியவில்லை, புரிந்ததும் அவனை மொத்த தொடங்கினாள்.



“ நீ கடலை போடுறதுக்கு நான் பிரென்ட் பிடிச்சி, உனக்கு இன்ட்ரோ பண்ணனுமா..? பக்கி செத்தடா” என அவனை துரத்த…



சூர்யாவின் கைகளுக்கு சிக்காமல் தள்ளி நின்றுக்கொண்டு, “ஏய், உனக்கு ஏண்டி பொறாமை அவங்க எல்லாம் ஸ்லிம்ஆ, அழகா இருப்பாங்க” என



அவளின் தோற்றத்தினை பற்றி சொன்னவுடன், சூர்யாவிற்கு மேலும் கோபம் வர… அவனை விடாமல் துரத்தியவள், ஜீவா போய் காயத்ரியிடம் முறையிட அவர் இருவரையும் பாரபட்சம் இன்றி வசை பாட, ஒருவரை ஒருவர் பழிப்பு காட்டிக்கொண்டு வந்து சிவாவிடம் அமர்ந்தார்கள்.



சூர்யா, சிவாவின் மடியில் படுத்துக் கொள்ள, அவர்களை திட்டிக் கொண்டு வந்த காயூ இதனைக் கண்டு, “இன்னும் உங்க பொண்ணை மடில போட்டு கொஞ்சுங்க…” என நொடித்து கொண்டார்.



சூர்யாவோ, “உனக்கு பொறாமை ம்மா” என கூறி தந்தையுடன் ஹய் ஃபை கொடுக்க…



சிவா, காயூவை அப்படியா என பார்த்து வைக்க…



அதில் காயத்ரி முகம் சிவந்து விட்டது, “விவஸ்தை கெட்ட மனுஷன், பிள்ளைகளை வச்சிக்கிட்டு பார்க்குற பார்வையை பாரு “ என அதற்கும் நொடித்தார்…



ஜீவாவோ, காயத்ரியின் அருகில் வந்து…



“கண்ணும் கண்ணும் கலந்து

சொந்தம் கொண்டாடுதே

எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே

கண்ணும் கண்ணும் கலந்து

சொந்தம் கொண்டாடுதே”

என பாட அவனின் கேலி புரிந்த காயத்ரி, “எடு அந்த கரண்டியை” என, ஜீவா அவர் கைக்கு அகப்படாமல் ஓடிவிட்டான்.



இதனை கண்டு சூர்யா வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, சிவாவினாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை…



பாவம் அவர்களுக்கு தெரியவில்லை, இந்த கலகலப்பும், சந்தோஷமும் இன்னும் சில நாட்களே என்று…



அவளின் உயிரானவன்...

அத்தியாயம் 36



சூர்யா வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன... அவளின் பயிற்சி காலம் முடிந்து, அந்த ஹோட்டல் நிறுவனத்திலேயே பணியில் சேர்ந்து விட்டாள்.



இதற்கிடையில் தாருகேஷ், சூர்யாவின் மனத்தினை கவர பல வழிகளில் முயன்றான். முயற்சி மட்டுமே அவனால் செய்ய முடிந்தது சூர்யாவின் கவனத்தினை கூட தன் பக்கம் திருப்ப முடியாதவன், எங்கிருந்து அவளின் மனத்தினை நெருங்க முடியும்.



சிவரத்தினம், தாருகேஷ் மற்றும் அவனின் அன்னையினை சந்தித்து , தங்களின் சம்மதத்தினையும், சூர்யாவின் வேண்டுகோளையும் தெரிவித்தார்.



சாந்தியம்மாள் சற்று தயங்கவும், சிவரத்தினம் சூர்யாவின் தேர்வு மற்றும் அவளின் பயிற்சி பற்றி கூறி… தங்களின் யோசனையை பற்றி கூற, அவருக்கும் அதுவே சரியெனப்பட பெண்பார்க்கும் படலம் தவிர்த்து, நேரே நிச்சயம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்க, தங்களின் குடும்ப ஜோசியரிடம் நிச்சயத்திற்கு நாள் குறித்து சொல்வதாக சாந்தியம்மாள் சொல்ல, சிவா மகிழ்வுடன் விடைபெற, தாருகேஷிற்கு தான் சப்பென்று ஆகிவிட்டது.



சூர்யாவின் நல்ல நேரமோ, அல்லது தாருகேஷின் கெட்ட நேரமோ தெரியவில்லை. நிச்சயத்திற்கு நாள் குறிக்க செல்ல அந்த ஜோசியரோ தற்பொழுது எந்த நாளும் இவர்களின் ஜாதகத்திற்கு பொருத்தமாக இல்லை. மூன்று மாதம் கழித்து தான் நாள் இருப்பதாக கூற சாந்தியம்மாளோ, நிச்சயம் மற்றும் திருமணத்தினை ஒன்றாக நடத்த முடிவெடுத்து நாள் குறித்துக் கொண்டு வந்தார்.



அவரின் பயம் அவருக்கு, எங்கே நாட்களை கடத்திக் கொண்டே சென்றால் திரும்ப தன் மகன் தவறான பாதையில் சென்றுவிடுவானோ..? என்று பயந்தார். அவர் தன் முடிவினை சிவரத்தினத்திடம் தெரிவிக்க அவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.



அனைவரும் இந்த முடிவினை ஏற்றுக்கொண்டு அதற்குரிய வேலைகளை பார்க்க தொடங்கனர்… சூர்யாவோ, நடப்பது நடக்கட்டும் தன் திருமணம் எப்படியும் பெற்றோர் முடிவுபடி யாரோ ஒருவருடன் நடக்கத்தான் போகிறது… அதனால் இந்த திருமணத்தினை முழுமனதுடன் ஏற்க முடியவில்லை என்றாலும், தன் பெற்றோரின் பொருட்டு அமைதி காத்தாள்.



இதில் அதிருப்தி அடைந்த ஒரே ஜீவன் தாருகேஷ் தான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த திருமணத்தினை நடத்தி, அதன் மூலம் சொத்தினை கைப்பற்ற அவன் எண்ணமிட...



இந்த மூன்று மாத இடைவெளியினை அவன் எதிர்பார்க்கவில்லை. பாவம், அவனும் எவ்வளவு நாட்களுக்கு தான் நல்லவனாக நடிக்க முடியும். இயல்பிலேயே நல்லவனாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நல்லவனாக ஒருவன் எப்படி தொடர்ந்து நடிக்க முடியும். ஆப்பில் சிக்கிய குரங்கென முழிபிதுங்கி நின்றான் தாருகேஷ்.

*****************************************



சிவரத்தினம், சூர்யாவிடம், “குட்டிம்மா,நீ சொன்ன மாதிரி, பொண்ணு பார்க்குறது வேண்டாம் அப்படின்ன அவங்களும் சரி சொன்னாங்க... மாப்பிள்ளையும், தொடர்ந்து உன்னை சந்திக்க என்கிட்ட பெர்மிஷன் கேட்குறார், நீயும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்குற என்னடாம்மா, மாப்பிள்ளை ஏதாவது தப்பா நினைச்சிக்க போறாரு” (அவன் அப்படியே சரியா நினைச்சிட்டாலும் விளங்கிரும்).



“அப்பா, அவரோட அம்மா, நம்ம வீட்டுக்கு வந்து என்னை பார்த்திட்டு போறதை நான் எப்பவாவுது தடுத்து இருக்கேனா..? இவரையும் வீட்டுக்கு வர சொல்லுங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என சூர்யா கூற.



“ நானும் பல தடவை அவரை, வீட்டுக்கு கூப்பிட்டு பார்த்திட்டேன். அவர் வரமாட்டீங்கராரு. உன்னோட விருப்பத்திற்கு அவங்க மதிப்பு கொடுத்த மாதிரி, அவரோட விருப்பத்தையும் நாம பார்க்கணும் இல்லம்மா, அதுவும் இல்லாம கல்யாணம் முடிவானதுக்கு பின்னாடி, இப்படி சந்திக்குறது எல்லாம் பெரிய விஷயம் இல்லடா குட்டிம்மா, இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம்டா” என கூறினார்.



‘ஐய்யோ..! அப்பா நான் எப்படி என்னோட மனநிலையை உங்ககிட்ட சொல்லுறதுன்னு தெரியலை. எனக்கு இந்த கல்யாணத்தில் பெருசா எந்தவித எதிர்பார்ப்போ, மகிழ்ச்சியோ, ஆர்வமோ இல்லை ஒருவேளை, கல்யாணத்திற்கு முன்னாடி அவரை பார்த்து என்னோட மனசு அவரை ஏத்துக்கலைன்னா என்ன பண்ணுறதுன்னு தான் பொண்ணு பார்க்க கூட வரவேணாம்னு சொன்னேன். அதுனால தான் போட்டோவையும் நான் பார்க்கல, எனக்கு நீங்க முடிவு பண்ணி இருக்குற மாப்பிள்ளை மேல எனக்கு ஈடுபாடோ, ஈர்ப்போ வரலை, அவரை பார்க்காமலே எப்படி இப்படி சொல்லுறனு நீங்க கேட்கலாம், பட் என்னோட மனசு இவரை, இந்த திருமணத்தை அக்ஸப்ட் பண்ண மாட்டீங்குது… ஒருவேளை ஆரம்பத்திலேயே இந்த கல்யாணம் வேண்டாம் சொன்னதுனால இப்படி எனக்கு தோணுதோனு ஒரே குழப்பமா இருக்கு. அதுக்கு தான் அவரை கல்யாணம் முடிஞ்ச பிறகுன்னா ஒரு சொந்தத்தோடு பார்க்க முடியும். என் மனசுலையும் இப்ப இருக்க எந்த குழப்பமும் இருக்காது. அதற்கு தான் அவரை நான் அவோய்டு பண்ணுறேன். எனக்கே நான் யோசிக்குறது சரியா தப்பான்னு தெரியாத குழப்பத்தில் இருக்கேன். மேலும் உங்களையும் குழப்ப வேணாமுன்னு தான் நான் எதையும் வெளியில காட்டிக்கலை சாரிப்பா’

என தன் மனதோடு சொல்லிக் கொண்டவள்,



“ இன்னும், ஒரு மாசம் தானே ப்பா இருக்கு எப்படியும் புடவை எடுக்க, அது இதுக்குன்னு பார்த்துக்க தானே போறோம். இப்ப தனியா எதுக்கு” என சொல்லிக் கொண்டு வந்தவள், (அப்ப மட்டும் நீ அவனை அப்படியே பார்த்துட்டாலும் ) சிவாவின், பார்வையில் அவளின் வார்த்தைகள் வாய்குள்ளேயே அடங்கி விட்டன.



சிவா, சூர்யாவை வருத்தத்தோடு பார்த்தவர். “குட்டிம்மா, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா..? அதான் மாப்பிள்ளைய பார்க்க இஷ்டம் இல்லாம இருக்கியா..? அப்பா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறனா..?” என வெறுமையான குரலில் வலியோடு கேட்க.



“அப்பா, என்னப்பா இப்படி எல்லாம் பேசறீங்க… உங்களால உங்க குட்டிம்மாவிற்கு கஷ்டம் குடுக்க முடியுமா..? நான் எங்க அவரை பார்க்க மாட்டேன் சொன்னேன். வீட்டுக்கு வர சொன்னேன் தானே…. எனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் நீங்க உங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க, இப்ப என்ன நான் அவரை சந்திக்கணும்… ஓகே பார்க்கலாம் சொல்லுங்க” என தன் மனத்தினை மறைத்துக் கொண்டு கூறினாள் சூர்யா.



அப்பொழுதும், தன் தந்தையின் முகம் தெளியாததை கண்டு, “ ப்பா” என அவர் தோளில் சாய, சூர்யாவின் தலையினை வருடிக் கொடுத்தவர், “நீ சொல்றது எல்லாம் நிஜம் தானே குட்டிம்மா” என மீண்டும் வினவ.



அவரை நிமிர்ந்து முறைத்து பார்த்துக்கொண்டே, “இதுக்கெல்லாம் ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதி கையெழுத்து போட முடியாது” என கூற.



அவள் கூறிய பாவனையில் அவள் தந்தை சிரித்துவிட்டார்…



“ வாலு, உன்னை மாப்பிள்ளை நாளைக்கு காலையில் உன்னோட ஹோட்டல் பக்கத்தில் இருக்குற கஃபேல மீட் பண்றதா சொல்லி இருக்கார். டைம் மட்டும் உன்னையே கால் பண்ணி கன்பார்ம் பண்ண சொன்னார்”



“என்னது நாளைக்கா..? ஐய்யோ..! அப்பா, நாளைக்கு எங்க ஹோட்டலுக்கு M.Dயோட சன் புதுசா பொறுப்பெடுத்துக்க வராங்க… நாளைக்கு எல்லாம் சான்ஸ்சே இல்லை இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்னு சொல்லுங்க ப்ளீஸ்...” என அவரின் தாடை பற்றிக் கெஞ்சினாள்.



சிவரத்தினமோ, “சாரிடா குட்டிம்மா, நீ ரொம்ப நாள் மாப்பிள்ளைய தவிர்க்கவும் நான் நாளைக்கு கண்டிப்பா உன்னை சந்திக்கலாம்னு அவருக்கு ப்ரோமிஸ் பண்ணிட்டேன். இப்ப நீ ஏதாவது காரணம் சொன்னா அவரு கண்டிப்பா தப்பா நினைக்க சான்ஸ் உண்டு. சோ எப்படியாவது நாளைக்கு அவரை மீட் பண்ண பாருடா” என சொல்லிவிட்டு செல்ல.



என்ன செய்வது என புரியாமல் யோசனையில் சூர்யா அமர்ந்திருக்க தந்தை சொல்வதில் உள்ள நியாயம் புரிப்பட… தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அழைத்து, M.Dயோட சன் எப்பொழுது வருகிறார் என கேட்டு அறிந்துக் கொண்டவள், தான் தன் சொந்த வேலையாக செல்வதால் ஒரு மணி நேரம் தாமதமாக வர நேரலாம் என கூறி அனுமதி பெற்றுக்கொண்டவள்…. தாருகேஷிற்கு ஒரு மெசேஜ் செய்துவிட்டு… நாளை அவனை எப்படி எதிர்கொள்வது என யோசிக்க தொடங்கினாள் சூர்யா.



வேலைக்கு சேர்ந்த இத்தனை நாட்களில் எந்தவித அனாவசிய விடுமுறையோ அல்லது நேரம் கடந்து வருவதோ மற்றவர்களுடன் அனாவசியமாக

கதையளப்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடாது தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்தவள், முதல் முறையாக பெர்மிஷன் கேட்பதால் அவளின் மேல் அதிகாரி எந்த வித மறுப்பும் சொல்லவில்லை…
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 37



மறுநாள் காலை ஒன்பது மணியளவில் தாருகேஷ், காபி ஷாப் வாசலில் நிற்க... சூர்யா, இளம் ரோஜா நிறத்தில் மெல்லிய சரிகை வைத்த புடவையில், எந்தவித ஒப்பனையும் இன்றி தேவதையாய் காட்சி தந்தவளை கண்டு… அவன் கள்ளுண்ட மந்தி என நின்றான்.



ஏற்கனவே பெண்களை போக பொருளாகவும், பள்ளியறை பாவைகளாகவும் நினைப்பவனின் முன்னாள் தெய்வீக அழகோடு நிற்கும் சூர்யாவையும் அவன் கண்கள் ரசிக்கும் (அழகினை கண்டால் மனத்தில் தோன்றும் ஒருவித உணர்வு). பார்வை பார்க்காமல் அவளை புசிக்கும் வேட்டை பார்வை பார்த்தான்… அவனின் பார்வைதனை பாவை அறியாமல் சதி செய்தது அவனின் கருப்பு கண்ணாடி.



கண்களில் காமம் வழிய சூர்யாவினை நோக்கி அடியெடுத்து வைத்து அவளை அணைக்க முற்பட, அனிச்சை செயலாக சூர்யா நகர்ந்துவிட்டாள்,அதில் தாருகேஷிற்கு அவள் மீது உள்ள மயக்கம் மறைந்து அங்கே கோபம் துளிர்விட முயன்று தன் கோபத்தினை வெளிக்காட்டி கொள்ளாமல் சூர்யாவிடம் சாதாரணம் போல் என்னவென கேட்டான்.



அதில் சற்று சங்கடமாக உணர்ந்த சூர்யா தங்களை சுற்றி பார்த்து வைக்க…



தாருகேஷோ, அதனை அவளின் வெட்கம் என புரிந்துக் கொண்டு, “ஓ… சாரி பேபி, இட்ஸ் ஜஸ்ட் எ போர்மல் ஹக்(its just a formal hug) அண்ட் அல்சோ ஐ அம் யுவர் பியூசர் ஹப்பி (hubby)” என கூறி தோள்களை குலுக்கிக் கொண்டவன், “இட்ஸ் ஓகே… வா உட்கார்ந்து பேசலாம்…” என அழைக்க.



சூர்யாவிற்கு தான் தான் என்னமாதிரி உணர்கிறோம் என புரியாமல் ஒருவித அவஸ்தைக்கு ஆளானவள்… அவனுக்கு எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள்.



சூர்யா ஒன்றும் கை கொடுத்தால் கற்பு போய்விடும் என எண்ணும் அளவிற்கு கட்டுப்பெட்டி இல்லை. ஏதோ ஒன்று அவளை தாருகேஷை நெருங்க விடாமல் தடுத்தது.



தாருகேஷிற்கோ, அவளின் ஒவ்வொரு செயலும் அவனின் கோபத்தின் அளவை கூட்ட... ‘என் பக்கத்தில் உட்கார்ந்தா இவளோட கற்பு குறைஞ்சிடுமோ…? ரொம்பத்தான் பண்றா இருடி கல்யாணம் முடியட்டும் அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி…’ என மனத்திற்குள் சொல்லிக்கொண்டவன், வெளியில் சூர்யாவினை இம்ப்ரெஸ் பண்ணுகிறேன் என்ற பெயரில் அவளின் அழகினை புகழ... ( நமக்கு எது தெரியுமோ, அதை பத்தி மட்டும் தானே பேச முடியும்).





ஒருக்கட்டத்திற்கு மேல் அவனின் பேச்சினை பொறுக்க முடியாது சூர்யா அவனிடம், “சாரி எனக்கு கொஞ்சம் அவரசமா போக வேண்டி இருக்கு சம் இம்போர்ட்டண்ட் ஒர்க்… நாம இன்னொரு நாள் சாவகாசமா பேசலாம். நீங்க வேணா உங்களுக்கு எப்ப பிரீயா இருக்கோ வீட்டுக்கு வாங்க” என கூறியவள் கிளம்புவதில் அவசரம் காட்ட.



தாருகேஷோ, பல்லைக் கடித்து தன் கோபத்தினை கட்டுப்படுத்தியவன் மனத்திற்குள் ‘இவளுக்கு மட்டும் தான் வேலை இருக்கும். நாங்கெல்லாம் என்ன வெட்டியா இருக்கோமா…? என்னது வீட்டுக்கு வரவா..? உங்க அம்மா நான் சந்தோஷ படுவேன்னு உன்னைப் பத்தி பேசியே ப்ளேடு போடுவாங்க. உன்னோட தம்பி நீங்க என்ன பண்றீங்க அப்படி இப்படின்னு என்னை பத்தி தோண்டி துருவுவான். அன்னைக்கு கொஞ்ச நேரம் வெளியில் பார்த்ததுகே என்னை பேசியே ஒருவழி பண்ணிட்டாங்க இதுல உங்க வீட்டுக்கு வந்தா சுத்தம், உனக்கு ரொம்ப தான்டி கொழுப்பு ஏதோ கொஞ்சம் பார்க்குற மாதிரி குடும்ப குத்து விளக்கா இருக்கியேன்னு ஆசைப்பட்டேன், கல்யாணம் பண்ணாம உன் மேல கை வைக்க முடியாது அதுக்காவும், எங்க அம்மா கல்யாணம் பண்ணா தான் சொத்துன்னு சொல்லிட்டாங்க அதுனாலையும் தான் உன் பின்னாடி இப்படி சுத்திக்கிட்டு இருக்கேன்’,



‘ஓரே கல்லுல ரெண்டு மாங்காய் கணக்கா சொத்துக்கு சொத்தும் வரும் கூடவே நீயும் கிடைப்ப. நானும் லைப்லோங் என்னோட வாழ்க்கையை இப்படியே ஜாலியா வாழலாம் உன்னால அதுக்கு எந்தவித இடைஞ்சலும் இருக்காது. அப்படியே நீ ஏதாவது பிரச்சனை பண்ணினா உன்னை ஆப் பண்றதும் ஈஸி உனக்கு தான் உன் குடும்பம்னா அவ்வளவு பிடிக்குமே, தப்பு தப்பு உயிராச்சே… சோ உன்னோட பிரச்சனைய நீ யாருகிட்டையும் சொல்லமாட்டே மீறி சொன்னீனா உன்னோட லைப் வீணா போயிடிச்சின்னு பீல் பண்ணி உன்னோட அப்பாவும் அம்மாவும் உயிரையே விட்டுடுவாங்க சீப் மிடில் கிளாஸ் மெண்டாலிட்டி… நல்லா பூசணிக்காக்கு கை கால் முளைச்ச மாதிரி இருந்துகிட்டு ( டேய், அவ எப்படா சொன்னா நான் ஐஸ்வர்யா ராய்க்கு தங்கச்சின்னு ) என்ன பேச்சு பேசுற இதுக்கெல்லாம் பின்னாடி நல்லா அனுபவிப்ப டீ...’ எனக் உள்ளே கருவிக் கொண்டு வெளியே இளித்து வைத்தான்.(டேய், நீ நினைக்குறது எல்லாம் அவளுக்கு மட்டும் தெரிஞ்சிது உன்னைய சாமியாடிடுவா).



“ ஒரு டூ மினிட்ஸ் சூர்யா, உனக்காக ஒரு சின்ன கிப்ட்” என கூறி அவளின் முன்னால் ஓரு சிறு பெட்டியை திறந்து நீட்டினான்.



சூர்யா என்னவென பார்க்க… அதில் ஒற்றைக்கல் வைர மோதிரம் அவளை பார்த்து கண்சிமிட்டியது…



அவள் மறுப்பு செல்வதற்குள் சூர்யாவின் இடக்கையினை பற்றி அதில் அந்த மோதிரத்தினை போட போக, சூர்யாவோ கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று தன் கையினை அவனிடம் இருந்து உருவிக் கொண்டவள், “என்ன பண்றீங்க தாருகேஷ், அதான் இன்னும் ஒரு மாசத்தில் நமக்கு எங்கேஜ்மெண்ட் பண்ணப்போறாங்க அப்புறம் எதுக்கு இப்ப ரிங் எல்லாம்” என சற்று எரிச்சல் கலந்த குரலில் கேட்க.



சூர்யா கையை உருவியதும் அவளின் உதாசீனம் இத்தனை நேரம் கட்டுப்படுத்திய கோபம் தன் எல்லையை கடக்க, கண்கள் சிவந்து அவளை கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் போல் இருக்க... இப்பொழுது தான் கோபம் கொண்டால் இத்தனை நாள் போட்ட நல்லவன் வேஷம் கலைந்துவிடும் என முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், “இந்த ரிங் என்னோட லவ்வ உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உனக்கு ஏதாவது கிப்ட் கொடுக்கணும்னு நினைச்சேன் அதான் என்றவன் காதலோடு சொல்ல வேண்டியதை கயமையோடு “ஐ லவ் யூ பேபி” என கூறினான் தாருகேஷ் …



அவன் சொல்லிய வார்த்தைகள் அவளுள் சந்தோஷத்தினை பரவாமல் சங்கடப்படுத்த… அந்த இடம் விட்டு அகன்றால் போதும் என நினைத்தவள், “சாரி, எனக்கு கிப்ட் எதுவும் வேணாம்” என கூறி, அவனின் பதிலையும் கூட எதிர்பார்க்காமல் விடைபெற…



தாருகேஷிற்கோ, தன் வாழ்நாளில் இப்படி யாரும் அவனை புறக்கணித்து சென்றது கிடையாது. அதில் வெஞ்சினம் கொண்டவன், ‘போடி போ, கல்யாணம் முடியட்டும் அப்புறம் எங்க தப்பிச்சி போறன்னு நானும் பார்க்குறேன். எனக்கு மட்டும் ஒரு சான்ஸ் கிடைச்சா உன்னோட லைப்லையே மறக்கமுடியாத அளவிற்கு அசிங்கப்படுத்தி அவமானப் படுத்துவேன்’ ( தனக்கு வரப்போகும் மனைவியின் மான, அவமானம் தன்னை சார்ந்தது என புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் இவன் எல்லாம் எதில் சேர்த்தி) என மனத்திற்குள் சபதம் செய்துக் கொண்டான். ( உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறதை விடவா).

**********************



விவேக், சூர்யா வேலை செய்யும் ஹோட்டல் நிறுவனரின் ஒரே மகன்… ராஜேஷ் மற்றும் ஸ்ரீவித்யா தம்பதியரின் தவப்புதல்வன்… மேலை நாடு சென்று படித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளவன்… அவன் அங்கு சென்று கல்வி கற்றானோ இல்லையோ, அங்குள்ள பழக்கவழக்கம், அந்நாட்டின் கலாச்சாரம், வாழ்வியல் முறை என ( அவனுக்கு சாதகமாய் உள்ள) அனைத்தையும் ஐயம்திரிபுற கற்றான்.

அவனின் தோற்றமும் அவனிடம் உள்ள பணமும், அவன் விரும்பியது எல்லாம் அவனிற்கு கிடைக்க துணை புரிந்தது.



படிப்பு முடிந்ததும் இப்படியே பொறுப்பில்லாமல் பப், டிஸ்கோத்தே என ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன், தன் தாயின் விருப்பத்திற்காக அவர்களின் ஹோட்டல் நிர்வாகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டான்.



இதோ விளையாட்டு போல் விவேக் பொறுப்பெடுத்து ஒரு வாரம் ஓடி விட்டது. ஆனாலும் இன்று வரை விவேக்கும் சூர்யாவும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. முதலிலேயே அவர்கள் இருவரும் சந்தித்திருந்தால் முதலாளி தொழிலாளி என்ற முறையில் எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்றிருக்கும். இல்லை பின்னாளில் ஏற்பட போகும் அனர்த்தங்களை தவிர்த்து இருக்கலாம். ஆனால் என்ன செய்ய விதி வலியது.



அன்று, தாருகேஷிடம் தான் நடந்து கொண்டதை தன் தந்தையிடம் கூறி விடுவானோ..? அதில் தந்தையின் மனம் வருந்துமோ..? என சூர்யா சற்று கவலைப்பட, அவளின் கவலைக்கு அவசியமே இல்லாமல் அவன் அதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அதே வேளை தினமும் சூர்யாவினை வழியில் சந்திப்பது, போனில் அழைப்பது மெசேஜ் செய்வது என அவளிடம் காதல் வளர்ப்பதாக எண்ணி அவளுக்கு தன் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தான்.



இன்று காலையிலும் அப்படி தான் சூர்யா வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தாள். அவளை எப்பொழுதும் போல் வழிமறித்து பேச தொடங்கினான் தாருகேஷ். அவனின் உளறலை பொறுத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தவளை,

“சூர்யா, ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ ரியலி ஐ லவ் யூ வெரி மச்... நீ ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டுற..? என்னை ஏன் அவோய்டு பண்ணுற..? என கேட்டு அவளின் கரம் பற்றி இழுத்தான்.



அதில் கோபம் கொண்டவள், “இங்க பாருங்க தாருகேஷ், நீங்க எங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையா இருக்கலாம். அதுக்காக ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம். இது மாதிரி கை தொட்டு பேசுற வேலை எல்லாம் வேண்டாம். உங்களை புரிஞ்சிக்கறதோ இல்ல பழகுறதோ எதுவா இருந்தாலும் கல்யாணத்திற்கு அப்புறமா பார்த்துக்கலாம்” என கூறிவிட்டு விடு விடுவென நடந்து சென்று விட்டாள் சூர்யா.



இதே யோசனையோடு ஹோட்டலை அடைந்தவள், வேகமாக தன் இருப்பிடம் செல்ல எதிரில் வருவது யாரென கவனிக்காமல் அவரின் மீது மோத சென்று கடைசி நிமிடத்தில் சுதாரித்து விலகி மன்னிப்பு கேட்டுவிட்டு தான் மோத இருந்த நபர் ஆணா..? அல்லது பெண்ணா..? என அறியாது சூர்யா, தன் நடையினை தொடர,



அவள் மோத இருந்த நபர் தான் ஒரு சில நிமிடங்கள் உறைந்து நின்று விட்டான். அவன் வேறு யாரும் இல்லை விவேக் தான்…



“வாவ்..! வாட் எ கிளாசிக் பியூட்டி…” என வாய்விட்டே கூறியவன் அவளை கடந்து சென்று விட்டான்.



விவேக்கினை பொறுத்தவரை அழகாய் உள்ள எல்லாம் பிடிக்கும், அதுவும் அழகாய் உள்ள இளம் பெண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனிற்கு இந்த காதல், கல்யாணம் போன்றவற்றில் நம்பிக்கையும் கிடையாது. மற்றவருக்கும் அவன் அந்த நம்பிக்கையினை கொடுக்க மாட்டான்.



அவனிடம் காதல், கல்யாணம் என நெருங்குகையில்… அவன் சொல்லும் ஒரே வார்த்தை... “ ஐ லைக் யூ… கிவ் மீ கம்பெனி டுடே... அஸ்க் மீ லைக் தட், டோன்ட் சே ஐ லவ் யூ ஓர் ஐ வான்ட் டு மேரி யூ… ப்ளா... ப்ளா… ப்ளா…” என்பான்.



இதுவரை அவனாக எந்த பெண்ணையும் நெருங்க முயன்றதில்லை. இவனின் தோற்றம் கண்டு தான் அனைவரும் இவன் பின்னால் வருகின்றனரே. அவன் வாழ்வில் இதுவரை ஏமாற்றத்தினையோ,

அவமானத்தையோ, சந்தித்ததில்லை… அப்படி சந்தித்தால் அவனின் நிலை... அதை அவனிற்கு தந்தவர்களின் நிலையும் என்னவாகும்..?



அவளின் உயிரானவன்...




 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 38



சூர்யாவிற்கு... என்ன செய்த பொழுதும் வேலையில் அவள் மனம் ஒட்டவில்லை…



ஆதலால் ஜீவாவை அலைபேசியில் அழைத்து, தன்னை வந்து கூப்பிட்டுக்கொள்ளுமாறு சொல்ல… அவனின் ஏன்..? என்ன..? எதற்கு..? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் ஏதோ ஒரு பதில் சொல்லி சமாளித்து காயூவிற்கு தெரியாமல் வர சொன்னாள்.



பின்னே, அவரிடம் யார் பேச்சு வாங்குவது…

திருமணம் நெருங்க நெருங்க சூர்யாவின் மனக்குழப்பம் அதிகரிக்க அதற்கு ஒரு வடிக்காலாகவே அவள் வேலைக்கு வருவது… இது தெரியாமல் அவர் வேலையை விட சொன்னால் பாவம் அவளும் தான் என்ன செய்வாள்.



‘ஷப்பா… எவ்வளவு கேள்வி கேக்குறான். இவனை கூப்பிட்டதுக்கு பதில் நான் தனியாவே போய் இருப்பேன். அந்த லூஸு தாருகேஷ் தொல்லை மட்டும் இல்லைனா, அவன் இம்சை தாங்கலை நான் தனியா எங்க போனாலும், எனக்கு பின்னாடியே வரான்…’ என மனத்திற்குள் ஜீவாவையும் தாருகேஷையும் பாரபட்சம் இல்லாமல் திட்டி தீர்த்தாள் சூர்யா.



ஜீவா வரும் வரை, தனிமையில் அமர்ந்திருக்க மனம் இல்லாது… ஹோட்டலை சுற்றி பார்வையிடலாம் (அவளின் வேலைகளில் இதுவும் ஒன்று) என ரிசெப்சன் நோக்கி நடந்தாள்.

************************************



வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வந்த விவேக்கிற்கு ஏனோ, காலையில் பார்த்த பெண்ணின் நியாபகமாகவே இருந்தது.



இதுவரை அவனின் முகம் பார்த்து குறைந்த பட்சம் ஒரு புன்னகையுடனாவது கடந்து சென்ற பெண்களே அநேகம்... இவனும் பதிலுக்கு ஒரு சிறு புன்சிரிப்போ அல்லது ஒரு கண்சிமிட்டலோடு அவர்களை கடந்து விடுவான். அத்தோடு அவர்களை பற்றி மறந்தும் விடுவான். முதல் முறையாக ஒரு பெண் அவனை நிமிர்ந்து பார்க்காமல் சென்றுள்ளாள். அவளை மறுபடியும் பார்க்காமல் இருந்திருந்தால் அவனும் அவளை அன்றோடு மறந்தும் இருப்பான். கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்ற சொல்லிற்கு ஏற்ப ஆனால் விதி…



ஹோட்டலை சுற்றி வந்த சூர்யாவினை விவேக் மறுபடியும் பார்த்தான். ஒருமுறை இல்லை பலமுறை அவளுடன் பேசவேண்டும் என்ற ஆசையில் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் என்னமோ சாதாரணமாக தான் பேச சென்றான். இந்த சந்திப்பு இருவருக்கும் மகிழ்ச்சியை தரப்போவதில்லை என்பதை பாவம் விவேக் அந்த கணம் அறியவில்லை.



சிறுவர்களுக்காக உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் சூர்யா. அந்த கள்ளம் கபடம் அறியா வெள்ளைமனம் கொண்ட பிள்ளைகளின் சிரிப்பிலும் அவர்களின் உற்சாகத்திலும் இதுவரை அவளின் மனத்தினை அழுத்திக் கொண்டிருந்த உணர்வில் இருந்து விடுபட்ட ஒரு நிம்மதி அவளை ஆட்கொள்ள… இந்த நிம்மதி நிலைக்க போவது இன்னும் சில நொடிகளே என அறியாது அவர்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.



அவள் அருகில் வந்தவன், அவளின் பின்புறமாக நின்று அவளின் காதருகில் “ ஹாய் பியூட்டி” என அழைக்க…



திடீர் என கேட்ட சத்தத்தினால் சட்டென்று திரும்பிய சூர்யா, நிலைதடுமாறி விழ பார்க்க அவள் விழாமல் இருக்க தாங்கிய விவேக், அவளிடம் “ஹாய், டோன்ட் கெட் பனிக் இட்ஸ் மீ ஒன்லி… யூ ஆர் சோ கார்ஜியஸ்...” என இன்னும் இன்னும் சொல்லி கொண்டே போக…



முதலில் அதிர்ந்த சூர்யா, பிறகு அவன் கூறியவற்றை கேட்க கேட்க அவளின் கோபம் பலமடங்காக, காலையில் தாருகேஷ் செயலினால் ஏற்பட்ட எரிச்சல் எல்லாம் சேர்த்து சூர்யாவின் பொறுமையை எல்லையை கடக்க செய்ய...



அப்புதியவனை தீ பார்வை பார்த்தவள், அவனை விட்டு விலகி செல்ல, விவேக்கோ செல்பவளின் கரம் பற்றி “பியூட்டி, யூ ஆர் டிஸ்ட்ர்பிங் மீ எ லோட், இதுவரை நான் இப்படி எந்த பொண்ணு பின்னாடியும் போனதில்லை… பொண்ணுங்க தான் என்னை தேடி வருவாங்க... பாஸ்ட் டைம் இன் மை லைப், நான் ஒரு பொண்ணு பின்னாடி வரது ஐ வான்ட் டூ ஸ்பெண்ட் சம்மோர் டைம் வித் யூ…” என்றவன் இன்னும் என்ன சொல்லி இருப்பானோ..?



“ பளார்…” என ஒரு சத்தம்… ஆம் சூர்யா அவனை அறைந்திருந்தாள். முதலில் விவேக் சூர்யாவினை தாங்கி பிடித்த பொழுது சூர்யா கோபம் கொண்டாலும் அவனை கடந்து செல்லவே முற்பட்டாள். சாதாரணமாக இவ்வளவு கோபம் கொள்ள மாட்டாள். இன்று காலையில் தாருகேஷின் செயல்... மற்றும் விவேக்கின் பேச்சு மற்றும் அவனின் செய்கை சூர்யாவை தன்னிலை மறக்க செய்தது.



விவேக்கினை அறைந்து விட்டு, “ ச்சீ...” என கூறி, அவனிடம் சிக்கியுள்ள தன் கரத்தினை ஒரு உதறலில் உருவிக் கொண்டு அவனை திரும்பியும் பாராமல் சென்று விட்டாள்.



விவேக், தன் வாழ்நாளில் இப்படி ஒரு அவமானத்தினை இதுவரை சந்தித்ததில்லை... அங்கே, நிறையபேர் இல்லை என்றாலும்... அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இருக்க தன்னுடைய ஹோட்டலில் தன்னை ஒருவர் அடிப்பது அதுவும் ஒரு பெண் தன்னை அறைந்தது... அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.



அவனிற்கு தான் என்ன தவறாக சொன்னோம்... என்பது புரியவில்லை. ( டேய், நீ சொன்னது எல்லாமே தப்பு தான்டா).



நாம சொன்னதிற்கு விருப்பம் இருந்தால், ‘ஓகே சொல்லி இருக்கணும்... அதற்கு விருப்பம் இல்லையா சாரி சொல்லிட்டு போய்கிட்டே இருக்கணும்... அதை விட்டுட்டு எதுக்கு அடிச்சி சீன் கிரீயேட் பண்ணனும்...’ அதுவும், என்னை பார்த்து, “ ச்சீ... சொல்லிட்டு போறா..? உன்னை பார்த்து எல்லாரையும் அந்த வார்த்தை சொல்ல வைக்கிறேன். யூ ஹவ் டூ பே போர் திஸ்... ஏன்டா, இவனை அறைஞ்சோம் அப்படின்னு ஒவ்வொரு நாளும் உன்னை கதற விடலை என் பெயர் விவேக் இல்லை... வெளிய தலை காட்ட முடியாமல் நீ கடைசியா என்கிட்ட தான் வரணும் வரவைப்பேன்’ (போடா, அந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கவே நடக்காது).



தன் வாழ்நாளில் இப்படி ஒரு அவமானம், உதாசீனத்தை விவேக் இது வரை சந்தித்ததில்லை என்பதினால் இந்த நிகழ்வு அவனிடம் மிகவும் மோசமான மனநிலையினை உருவாக்கி இருந்தது.



அங்கிருந்து வெளியேறிய சூர்யா, ஜீவாவினை வர சொன்னதையும் மறந்து வீட்டிற்கு செல்ல ஹோட்டலை விட்டு வெளியேற, சரியாக ஜீவா அவளை அழைத்து செல்ல வர, தமக்கையின் முகத்தினை பார்த்தவன், ஏதோ தவறாகபட அப்பொழுது அதை பற்றி கேட்காமல் அவளை வீட்டிற்கும் அழைத்து செல்லாமல் அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றான்.



அதுவரை கோபத்தில் இருந்த சூர்யா, வீட்டிற்கு செல்லாமல் வண்டி வேறு வழியில் செல்வதை பார்த்து எங்கே என அவள் கேட்பதற்குள், ஜீவாவின் வண்டி பூங்காவிற்குள் நுழைந்து இருந்தது. சூர்யா, “ இங்கே எதற்கு..?” என கேட்க, “சொல்கிறேன் வா” வென அவளை அழைத்துச் சென்ற ஜீவா, அங்கிருந்த ஒரு மரத்தின் அருகில் உள்ள பெஞ்சில் அமர்ந்து, அவளையும் அமர வைத்து என்னவென கேட்டான், முதலில் அவன் கேட்பது புரியாமல் முழித்தவள், பின்பு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள். (தாருகேஷ் விஷயம் தவிர்த்து)...



சூர்யா சொல்லியதை கேட்டவனிற்கோ, முதலில் கோபம் வந்தது. பின் தானும் கோபம் கொண்டு எதையாவது செய்து வைத்தால் சூர்யாவின் திருமணம் என்ன ஆகும் அவள் வேலையை இன்னும் சில நாட்களில் விட போவதால் அங்கு சென்று எந்த பிரச்சனையும் செய்து சூர்யாவின் மனநிம்மதியை அது பாதிக்க கூடாது என முடிவு செய்தவன், அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு, “ஏய் பூசணி, அவன் பார்க்க ஆள் வேற நல்ல வசதியான வீட்டு பையன் மாதிரி இருக்கான்னு சொல்ற... ஒருவேளை பாரின் ரிட்டர்னா இருக்க போறான். அதனால அப்படி கேட்டு இருப்பான் நீ சாதாரணமா நோ சொல்லி இருந்தாலே அவன் இட்ஸ் ஓகே அப்படின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருந்திருப்பான். இதுக்கு போய் நீயும் டென்ஷன் ஆகி அவனையும் டென்ஷன் பண்ணி” என ஜீவா சொல்லிக்கொண்டு போக சூர்யாவிற்கும் தான் நடந்து கொண்டது அதிகப்படியாக தான் தோன்றியது.

‘தன் விருப்பமின்மையை சொல்லி இருந்தால் அவன் விலகி சென்று இருப்பானோ..? நாளை சென்று அவனை யாரென விசாரித்து அடித்ததிற்கு சாரி சொல்லவேண்டும்’ என நினைத்து கொண்டாள். ( ரொம்ப சீக்கிரமா சாரி சொல்றமா)...



தன் அக்காவின் முகப்பாவனைகளையே கவனித்து கொண்டிருந்தவன், அவளின் முகத்தில் கோபம் போய் தெளிவு வந்ததை கண்டு திருப்தியுற்றவன், இனி எந்தவித பிரச்னையும் இல்லை என முடிவுக்கு வந்தவன், சூர்யாவிடம் சிறிது நேரம் வம்பிழுத்த பிறகே இருவரும் வீடு நோக்கி சென்றனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை இனிமேல் தான் பிரச்சனை என்று...



அதே நேரம் விவேக், அவனின் அலுவலக அறையில் உள்ள சிசிடிவியில் உள்ள சூர்யாவின் படத்தினை காட்டி அவள் யார் என முழு தகவலையும் அறிந்திருந்தான். அவள் தங்கள் ஹோட்டலில் வேலை செய்வதை அறிந்து இன்னமும் சீற்றமுற்றான். தான் அவளின் முதலாளி என தெரிந்தும் தன்னை அவள் அவமதித்ததாக நினைத்தான். ( நீயா போய் தானே டா, வான்டாட்டா போய் வாங்கிக்கிட்ட, அந்த புள்ள ஒதுங்கித்தானே போச்சி)...

************************



மறுநாள் சூர்யா எப்பொழுதும் போல் ஹோட்டல் வர, அவளை முதலாளி அழைப்பதாக கூற, அங்கே சூர்யா ராஜேஷை எதிர்பார்த்து செல்ல அங்கே முதலாளி இருக்கையில் அமர்ந்திருந்தது சாட்சாத் விவேக் தான். அவனை அங்கு பார்த்து முதலில் அதிர்ந்தாலும்... உடனே தன் முகத்தினை சரி செய்து அவனிற்கு வணக்கம் சொல்ல அதற்குள் ராஜேஷும் அங்கே வர அவரோ சூர்யாவிடம்...



“ வாம்மா சூர்யா இவர் பேர் விவேக், என்னோட ஒரே மகன், இனிமே இந்த நிர்வாகம் எல்லாம் இவர்தான் பார்த்துக்க போறார். இதெல்லாம் உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்... ( அய்யோ, விஷயம் தெரியும் ஆனா தெரியாது அதான் பிரச்சனையே புது M.D வராருனு தெரியும் அது இந்த மூஞ்சிதான் அப்படின்னு தெரியாம போச்சி). இப்ப எதுக்கு கூப்பிட்டேனா, இந்த வீக் எண்ட், ஆஃபீசியலா ஒரு கெட் டூ கெதர் வச்சி நம்ம ஸ்டாப் அண்ட் நம்ம பிசினஸ் ரிலெட்டட் பெர்ஸன் எல்லாரையும் இன்வைட் பண்ணி அனௌன்ஸ் செய்யலாம்னு இருக்கேன். அது சம்பந்தமா யார் யாருக்கு இன்விடேஷன் சென்ட் பண்ணனும் அப்புறம் அதனோட அரேஞ்சமென்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் பார்த்து பண்ணிடுமா, உனக்கு ஏதாவது டவுட் இருந்தா விவேக்கிட்ட கேட்டுக்கோ, அப்புறம் பங்சனிற்கு உன் பாமிலியோட வந்துடுமா” என கூறியவர்,



அடுத்த வேலை பார்க்க வெளியில் செல்ல சூர்யாவோ கிடைத்த சந்தர்ப்பத்தினை நழுவ விடாது விவேக்கிடம் மன்னிப்பு கேட்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன், “இட்ஸ் ஓகே” என கூறி அடுத்த வேலையை பார்க்க சூர்யாவிற்கு தான் குழம்பி போனது. இவன் என்ன ரியாக்ஷன் கொடுத்து விட்டு போகிறான் என்று…



விவேக்கின் மனமோ ‘அத்தனை பேர் முன்னாடி அறைஞ்சிட்டு இப்ப தனியா வந்து சாரி சொல்ற… எனக்கு இருக்குற கோபத்தில் இந்த பார்ட்டியிலேயே உன்னை பழிவாங்கணும்னு தான் என் மனசு துடிக்குது. பட் இங்கே உன்னை அவமானப்படுத்தினா உனக்கு அவ்வளவா வலிக்காது. இதே உன்னோட கல்யாணத்தில் நடந்தா அதனோட வலி இன்னும் ஜாஸ்தியா இருக்கும். அவமானத்தோட வலி என்னனு உனக்கு புரியவைக்குறேன்’ என உள்ளுக்குள் கருவி கொண்டான்.



இதோ அந்த கெட் டூ கெதர் செல்ல சூர்யா தயாராகி விட்டாள். காயத்ரியும் சிவாவும், அவளின் கல்யாணம் விஷயமாக காஞ்சிபுரம் வரை செல்வதால் அவர்கள் வரவில்லை. ( நேத்ரனின் தாத்தா பாட்டிக்கு பத்திரிகை வைக்க சென்றுள்ளனர்). ஜீவாவிற்கு ஒரு முக்கிய அலுவல் காரணமாக அவளை ஹோட்டலில் கொண்டு வந்து விட்டவன், சிறிது நேரம் கழித்து வருவதாக சொல்லி சென்றான். தான் திரும்பும் பொழுது தன் தமக்கை இருக்கும் நிலையினை முன்பே அறிந்திருந்தால் அவளை விட்டு தனியே சென்றிருக்க மாட்டானோ..? என்னவோ..?



பார்ட்டி ஆரம்பித்து எல்லாம் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது. அங்கு சூர்யா மட்டும் தனியாக நின்றிருந்தாள். சகஊழியர்கள் அனைவரும் இவளை நோக்கி ஸ்னேக முறுவல் மற்றும் ஒரு சிறு தலை அசைப்புடன் விடைபெற்று அவர் அவர் குடும்பங்களுடன் சேர்ந்துக் கொண்டனர். விவேக்கிற்கு இது வசதியாக போய்விட மற்றவர் அறியாமல் அவள் குடிக்கும் பானத்தில் போதை வஸ்து கலந்துவிட, இதனை அறியாமல் சூர்யா அதனை சிறிது அருந்தியவள், அதன் சுவை மாறுபட்டு இருக்க, அதனை குடிப்பதா..? இல்லை கீழே வைப்பதா..? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த வாண்டுகளில் ஒன்று வேகமாய் வந்து இவளின் மீது மோத மீதம் இருந்த பானம் முழுவதும் அவளின் உடையில் கொட்டிவிட, இதை பார்த்த விவேக்கிற்கோ, 'ச்சே... தப்பிச்சிட்டாளே' என்றிருந்தது.

அந்த வாண்டோ, எங்கே அவள் திட்டி அல்லது அடித்து விடுவாளோ என பயந்து சிட்டாக ஓடி மறைந்தது. சூர்யாவும் தன்னை சுத்தப்படுத்தி கொள்வதற்காக கழிப்பறை நோக்கி சென்றாள்.



பாதி பானம் தானே சிந்தியது மீதியை குடித்திருந்ததால் சூர்யாவின் பார்வை தெளிவில்லாமல் போக தன் தலையினை குலுக்கி தன்னை சமன் செய்துக் கொண்டவள், மிகவும் பிரயத்தனப்பட்டு நடந்தவள்.



தன்னை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே, ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்தவள், முயன்று தன்னை நிலைப்படுத்தி கொண்டு ஜீவாவிற்கு அழைத்து சீக்கிரம் வர சொல்ல நினைக்க அவளின் கரங்களில் இருந்து அலைபேசி பறிக்கப்பட யார்..? என்ன..? என அறியும் முன் அவளை ஒரு அறையினுள் தள்ளி கதவை சாத்தி இருந்தான் விவேக். ( அவன் தள்ளியதில் அக்கதவு சரியாக லாக் ஆகவில்லை).



சூர்யாவிடம் இருந்து வந்த அழைப்பு பாதியில் நின்று போக ஜீவா அவளுக்கு மறுபடியும் அழைக்க அவளின் அலைபேசி அணைத்து வைக்க பட்டதாக ரெகார்டாட் வாய்ஸ் வர மொபைல் சார்ஜ் இல்லாமல் கட் ஆகி விட்டது என நினைத்து, ‘சார்ஜ் போடாம என்ன தான் செய்வாளோ குண்டு பூசணி’ என தன் தமக்கையை திட்டி விட்டு, மணி பார்க்க அது எட்டு என காட்ட.



‘ஜீவா, அவ கல்யாண பொண்ணுடா அதனால ரெண்டு பேரும் போனோமா வந்தோமான்னு நேரத்தோட வீட்டிற்கு வந்துடணும்’ என காயூ சொன்னது நினைவிற்கு வர, ‘லேட்டா போனோம் பூசணி, காயூகிட்ட போட்டு கொடுத்திடுவா, அப்புறம் காயூ காதுல ரத்தம் வர வரை பேசுவாங்க’ என மனத்திற்குள் புலம்பிக்கொண்டே கிளம்பினான்.



இங்கே சூர்யாவோ, அரை மயக்க நிலையில் இருக்க விவேக் அவளை அங்கு இருந்த கட்டிலில் கிடத்தி இருந்தான். அவளுக்கு உணர்வு இருந்தாலும் அவளின் புலன்கள் அனைத்தும் அவளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட மறுக்க, மரத்த நிலையில் இருக்க அவளின் உள்ளுணர்வு மட்டும் தான் ஏதோ தவறான சூழலில் இருக்கின்றோம் என அறிவுறுத்த எப்படி தப்புவது என புரியாத நிலையில் இருந்தாள்.



விவேக்கோ, சூர்யாவிடம் “என்னடா இவன் எதுக்கு நம்மள இப்ப இப்படி இழுத்துகிட்டு வந்து இருக்கான்னு பார்க்கிறீயா பேபி..? எனக்கு எப்பவுமே நானா தேடிப் போறதை விட தானா என்னை தேடி வரதுதான் பிடிக்கும். உன் விஷயத்தில் தான் நான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆனேன். அதனால ஜஸ்ட் உன் கூட பழகி பார்க்கலாம்னு ஆசை பட்டு பேச வந்தா நீ என்னமோ பெரிய இவ மாதிரி உன் கைய தொட்டேன்னு என்னை அறையிற, ச்சீ... சொல்ற இப்ப உன்னை தொடாமலே நீ என்னை பார்த்து சொன்ன அதே வார்த்தையை எல்லோரும் உன்னை பார்த்து சொல்ல வைக்க போறேன் எப்படின்னு பார்க்குறியா பேபி..? இதோ இப்படி தான்” என்றவன் தன் மேல் சட்டையினை களைந்து சூர்யாவின் பக்கம் நெருங்க…



திடீர் என தான் இழுப்படவும் அதிர்ந்திருந்தவள், விவேக்கினை கண்டவுடன் சூர்யாவின் அதிர்ச்சி பலமடங்காக, அவன் பேச பேச அவளின் மனத்தினை பயம் கவ்விக் கொண்டது. தன் சொல் பேச்சு கேட்காத தன் உடலினை முயன்று தன் கட்டுக்குள் கொண்டு வந்தவள். அவன் அவளை நெருங்கும் முன்னர் விலக முற்பட அவளின் விலகல் கண்டு விவேக், சூர்யாவின் மேலாடையினை பற்றி இழுக்க ஏற்கனவே தள்ளாட்டத்தில் இருந்த சூர்யா, அவனின் இழுப்பிற்கு ஏற்ப கட்டிலில் குறுக்காக விழ, அவளோடு சேர்த்து விழுந்தவன் சூர்யா மீண்டும் விலகும் முன் தன் கரத்தில் வைத்திருந்த அலைபேசியில் அவர்கள் இருவரையும் படம் பிடிக்க ஒருவரை ஒருவர் தீண்டாமல் இருந்தாலும்… புகைப்படத்தினை பார்ப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் தோணும்படி இருந்தது.



விவேக், புகைப்படம் எடுத்ததை அறிந்து சூர்யா அவனை தள்ளிவிட முயல… “நோ... நோ… பேபி, நோ டச்சிங் ஐ அம் ஆல்வேஸ் ஜென்டில் மேன், அதுவும் இல்லாம இவ்வளவுக்கு பிறகும் நான் உன்னை தொட்டால் அது எனக்கு தான் அசிங்கம்…” என்றான்.



சூர்யா அவனிடம், ச… சார் நா…ன் உ… உங்களை ப…பத்தி நீ… நீங்க யா… யா… ருன்னு தெ… தெரியாம அ... அறைஞ்சிட்டேன் அ… அது… க்குத்தான் நான் உங்க கிட்ட ம… மன்னி… ப்பு கேட்டுட்டேனே… ப்… ப்ளீஸ் என்னை மன்… மன்னி… ச்சிடுங்க சார்” என விவேக்கிடம் வார்த்தைகள் தெளிவில்லாமல் குழறியபடி தன்னை விட்டு விடும் படி அவனை அறைந்தத்திற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு வேண்டியும், அவன் அவளை மன்னிப்பதாய் இல்லை. பெண்ணவளின் கண்ணீருக்கு கூட அவனின் கல் மனம் கரையவில்லை.



இன்னும் இன்னும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் படங்கள் எடுப்பதிலேயே குறியாய் இருக்க… இனி இவனிடம் பேசுவது வீண் என உணர்ந்த சூர்யா, தன் ஒட்டுமொத்த பலத்தினையும் கூட்டி அவனை தன் அருகில் இருந்து தள்ளியவள், அவன் மீண்டும் சுதாரிப்பதற்குள் அவ்வறையினை விட்டு வெளியேறி இருந்தாள்.



அவளை பின்தொடர முயன்றவன், இந்நிலையில் தங்களை யாராவது பார்த்தால் அதுவேறு ஒரு பிரச்சனையாகி விஷயம் தன் தந்தை வரை செல்லும் அப்புறம் தன் திட்டம் நிறைவேறாது என நினைத்து எடுத்தவரை லாபம் என விட்டுவிட்டான்.



தன் மேலாடை அவனிடம் சிக்கிக்கொள்ள, தலை கலைந்து, வாந்தி எடுத்ததினாலும்… விவேக் மேல் உள்ள கோபத்தினாலும், அழுததினாலும்அவளின் முகம் சிவந்து இருக்க… தள்ளாடிய நடையோடு அவள் பார்க்கிங் ஏரியா வர, அப்பொழுது தான் வந்த ஜீவா, யாரோ ஒரு பெண் தள்ளாடி வருவதை பார்த்தவன். இவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அப்பெண் மயங்கி விழ யாரோ எவரோ என அருகில் சென்று பார்த்த...



ஜீவாவிற்கு உயரழுத்த மின்சாரம் தாக்கியது போல் இருந்தது அப்பெண்ணை பார்த்தும்… அப்பெண் வேறு யாரும் இல்லை சூர்யா தான்.



விவேக்கிடம் இருந்து தப்பினால் போதும்… என தன் மொத்த சக்தியையும் திரட்டி தப்பி வந்தவளால், ஓரளவிற்கு மேல் நடக்க இயலவில்லை. உட்கொண்ட போதை வஸ்து, அதனோடு விவேக்கின் பேச்சினால் ஏற்பட்ட அதிர்ச்சி என எல்லாம் சேர்த்து அவளை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது.



தன் தமக்கையின் நிலை பார்த்து ஜீவாவிற்கு ஒன்றும் புரியவில்லை…



“சு… சூர்யா… சூர்… சூர்யா…” என அவளை அசைத்து பார்க்க தன்னிலை மறந்த நிலையிலும், “விடுடா, நான் தான் உன்னை அடிச்சதுக்கு சாரி சொல்லிட்டேன் இல்ல… அப்புறம் ஏன்டா இப்படி பண்ற..?” என சொல்ல, தீச்சுட்டார் போல் தன் கரங்களை அவள் மேல் இருந்து எடுத்து விட்டான் ஜீவா.



சூர்யா சொல்லிய வார்த்தைகளை கேட்ட ஜீவாவிற்கு தன் காலுக்கு அடியில் பூமி நழுவுவதை போல் இருந்தது.



ஏற்கனவே, அவளின் நிலைக் கண்டு கலங்கியவன், அவளின் சொல்லில் இப்பொழுது முற்றும் செயல் இழந்து நின்றுவிட்டான், எல்லாம் ஒரு நொடி தான். தன் அக்காவை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த முகம் தெரியா மனிதன் மேல் கொலைவெறியே வந்தது. அதைவிட தன்மேல் அளவில்லா கோபமும், ஆத்திரமும் வந்தது.



சூர்யா நடந்ததை சொல்லிய பொழுதே தான் அதனை என்னவென கவனித்திற்க வேண்டுமோ..? இன்று தனியா அவளை அனுப்பி இருக்க கூடாதோ..?



தன்னுடைய அலட்சியமும், விளையாட்டுத்தனமும், பொறுப்பற்ற செயலே தன் அக்காவின் நிலைக்கு காரணம் என மனம் குமுறினான்.



தன்னிலை மீண்ட ஜீவா சுற்றுப்புறம் உணர, அனைவரின் முன்பும் சூர்யாவினை காட்சி பொருளாக்க விரும்பாமல் அவ்விடம் விட்டு அகன்றான்.



செல்லும் வழியில் தன் நண்பனின் சகோதரியை அழைத்து சூர்யாவிற்கு உடல் நிலை சரி இல்லை என கூறி அவரை வீட்டிற்கு வருமாறு சொன்னவன் கைகளில் அவனின் வாகனம் பறந்தது.



ஜீவா வீட்டிற்கு வந்து சேரவும், மருத்துவர் வரவும் சரியாக இருக்க அவரிடம் சூர்யாவின் மயக்கம் பற்றி கூறி என்னவென பார்க்க சொல்ல.



அவளை பரிசோதித்ததில் போதை மருந்து உட்கொண்டதால் வந்த பாதிப்பு என்றும்... அதற்கு மாற்று மருந்து கொடுத்து உள்ளதாகவும் சொல்லி… அவன் பயப்படும் படி சூர்யாவிற்கு எந்த கெடுதலும் நடக்கவில்லை என கூறிச் சென்றார்.



அவர் சொல்லிச்சென்ற வார்த்தையில் தான் ஜீவாவின் உலகம் மறுபடியும் சுழல ஆரம்பித்தது… இருந்தாலும் நடந்தது என்னவென அறியும் பொருட்டு சூர்யா கண்விழிக்கும் வரை காத்திருந்தான்.



அவனின் உயிரானவள்...




 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 39



மிக மிக நீண்ட நெடிய கொடிய இரவாகி போனது ஜீவாவிற்கு. எப்பொழுதடா விடியும் சூர்யா எப்பொழுது விழிப்பாள் என இருந்தது… அவனின் காத்திருப்பிற்கு ஒரு முடிவு போல், சூர்யாவிடம் சிறு அசைவு தெரியவும் தான் சற்று நிம்மதி கொண்டான்.



பிரியமறுக்கும் இமைகளை முயன்று திறந்து பார்த்தாள் சூர்யா. அவளின் பார்வை வட்டத்திற்குள் ஜீவா விழ அவனை கண்டு சோம்பலாக புன்னகைத்தவள், அவனிற்கு, “குட் மோர்னிங்” சொல்ல…



ஜீவாவோ மனத்திற்குள் ‘உன் குட் மோர்னிங்க்ல தீய வைக்க… நைட் முழுக்க என்ன தூங்கவிடாம பண்ணிட்டு குட் மோர்னிங்ஆ சொல்ற… குட்ட்டட்ட்டட்ட்டட்ட் மோர்னிங் நைட் இவ சொன்னதை நாம சரியாதான் கேட்டோமா..? இல்லையா..?’ என ஜீவாவிற்கே தன் கேட்கும் திறன் மேல் சந்தேகம் வந்து விட.



தானாக எதுவும் சொல்லி அவளை குழப்பக் கூடாது என நினைத்தவன், அவளிடம் மெதுவாக “பார்ட்டி எப்படி நடந்தது” என கேட்க…

சூர்யாவோ தோள்களை குலுக்கி, “சரியா ஞாபகம் இல்லடா, ஜூஸ் குடிச்சிட்டு இருக்கும் பொழுது மேல கொட்டிடுச்சி, கிளீன் பண்ண வாஷ்ரூம் போனேன். ஒரு மாதிரி மயக்கம் வரமாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு ஒண்ணும் நினைவில்லை. நீ எப்ப வந்த, நாம எப்படி வீட்டிற்கு வந்தோம்” என அவனையே கேள்வி கேட்டாள் சூர்யா.



ஏனெனில், அவளிற்கு நேற்றைய இரவு நடந்தது எதுவும் நினைவில்லை… சிலருக்கு அப்படித்தான் போதை தெளிந்தவுடன், போதையில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்துவிடும். அதுவும் இல்லாமல் மனம் விரும்பாத விஷயங்கள் நடைபெறும் பொழுது ஏற்படும் அதிக அதிர்ச்சி காரணமாகவும், அந்நிகழ்வுகள் தற்காலிகமாக மறந்து விடும் இதுவே சூர்யா விஷயத்தில் நடைபெற்றது.



ஜீவா, அவளின் கேள்வியில் குழம்பியவன், அவளிடம், “எனக்கு ஹோட்டல்ல இருந்து கால் வந்தது நீ மயங்கிட்டேன்னு நானும் ஆல்ரெடி ஹோட்டல் ரீச் ஆயிட்டேன் சோ அப்படியே உன்னையும் கூட்டிகிட்டு வந்துட்டேன்” என கூற…



அவள் மேலும் ஏதோ கேட்க வர, அவளை பேசவிடாமல், “ போ, போய் பிரெஷ் ஆகி வா…” என சொல்ல…



சூர்யா, இவனை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே குளியலறை சென்றவுடன் இவன் இந்த பக்கம் அந்த மருத்துவரிடம் சூர்யாவை பற்றி சொல்ல அவரும் சிலருக்கு இப்படி நடக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் இது தற்காலிகமானது என்றும் இதில் பயப்படும்படி எதுவும் இல்லை, தானாகவே சரியாகிவிடும் என கூறினார்.



ஜீவாவிற்கு இது ஒருவிதத்தில் மகிழ்ச்சியையே கொடுத்தது. இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் இருக்க… சூர்யாவின் மனத்தினை எதுவும் பாதிக்கவோ, அவளின் சந்தோஷத்தினை குலைக்கவோ கூடாது என நினைத்தவன், இனி சூர்யாவை திருமணம் முடியும் வரை வேலைக்கு அனுப்ப கூடாது என முடிவெடுத்தான்.



ஜீவாவை பொறுத்த வரை ஹோட்டலில் தங்கியுள்ள யாரோ ஒருவனை சூர்யா அடித்ததால், அவளிடம் வம்பு செய்ததாக அதனால் அவளை வேலைக்கு அனுப்பாமல் இருந்து விட்டால் மேலும் பிரச்சனை வர வாய்ப்பில்லை என நினைத்துக்கொண்டான்.



ஆனால் அவனுக்கு தெரியவில்லை ஏற்கனவே பிரச்சனை தயாராகி இவர்களை தாக்க காத்திருக்கிறது என்றும். அவனின் சகோதரி தன் நிம்மதி, சந்தோசம் என அனைத்தையும் இழந்து நிற்க போகிறாள் என்பதை அவன் அப்பொழுது அறிந்திருக்கவில்லை…



ஊரில் இருந்து வந்த காயூவிடம் என்ன சொன்னானோ அவர் சூர்யாவை வேலைக்கு செல்ல அனுமதிக்க வில்லை.

சிவாவும், “ கல்யாணம் முடியும் வரை வீட்டுல இருடா குட்டிம்மா” என… சூர்யாவால் அதை மீற முடியவில்லை. முதலிலேயே அவள் திருமணம் முன்னிட்டு நோட்டீஸ் கொடுத்ததினால் யாரும் ஏதும் கேள்வி எழுப்பவில்லை.



இங்கே விவேக்கோ, அவனும் சூர்யாவும் இணைந்து இருக்கும் படங்களை பார்த்துக்கொண்டிருந்தான். இப்படங்கள் போதுமா..? தான் சொல்வதை மற்றவர்கள் நம்புவார்களா..? அவளின் திருமணம் தடைப்படுமா..? என பலவாறாக யோசித்தவன், ( இப்படி இந்த விஷயத்திற்கு யோசிக்கிறத விட்டுட்டு நல்ல உருப்படுற விஷயமா யோசிச்சி இருந்தா நீ உருப்பட்டு இருப்ப விதி என்ன பண்ண முடியும்). மேலும் ஒரு சில படங்கள் மார்ஃபிங் மூலம் கண்கொண்டு பார்க்க முடியா நெருக்கத்தில் இருப்பது போல் தயார் செய்துக் கொண்டான்.



அவனின் ஆத்திரமும், கோபமும் ஒரு பெண்ணின் வாழ்வையே கேள்விக்குறியாக்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.



மனம் முழுதும் வன்மம் கொண்டு சூர்யாவின் திருமண நாளிற்காக காத்துக்கொண்டுருந்தான்.



இதோ அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் விடிந்தால் சூர்யாவின் திருமணம்… பெரியவர்கள் அனைவரும் முடிவு செய்ததுபோல் திருமணத்திற்கு முதல்நாள் இரவு நிச்சயம் நடந்து கொண்டிருந்தது.



இருவீட்டு பெரியவர்களும் தாம்பூலம் மாற்றிக்கொள்ள… மணமக்களுக்கு நலங்கு வைத்து மோதிரம் மாற்றிக்கொள்வதற்காக, சூர்யா தாருகேஷ் இருவரையும் மேடைக்கு வரசொல்ல…



தாருகேஷோ, அழகு சிலையென தன் அருகில் நின்றிருக்கும் சூர்யாவை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கீழிருந்து மேலாக பார்த்துவைக்க… சூர்யாவிற்கு தான் அவன் பார்வையில் எப்பவும் போல் ஒருவித அசௌகரியம் தோன்ற முயன்று தன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் புன்னகையோடு இருக்க பெரும்பாடுப்பட்டு போனாள்.



அன்று தான் மோதிரம் அணிவிக்கும் பொழுது சூர்யா, தன் கையை உருவிக் கொண்டதை நினைத்து பார்த்த தாருகேஷ், இப்ப உன்னால் என்ன பண்ண முடியும் என சூர்யாவை பார்த்துக்கொண்டே இடது கையை அவள் தருவதற்கு முன்பு தானாகவே பற்றி மிகவும் பொறுமையாக தொட்டு தடவி மோதிரம் அணிவிக்க நியாயமாக கணவனாக வர போகிறவன் தொட்டால் வெட்கமும் சிலிர்ப்பும் வரவேண்டும். ஆனால் சூர்யாவிற்கு ஆத்திரமும் கோபமும் தான் வந்தது. அனைவரின் முன்பு என்ன செய்து கொண்டிருக்கிறான் இவன் என பல்லைகடிக்க அவனோ அவளின் கையை விடுவதாக இல்லை அதனால் அவளே முயன்று தன் கையை உருவிக் கொண்டாள். இதை யாரும் கவனிக்கவில்லை என்றாலும் இருவர் கவனித்தனர். ஒருவன் ஜீவா, மற்றவர் சாந்தியம்மாள்... மகனின் திருமணம் எந்தவித குறையும் இல்லாமல் நடைபெற வேண்டும் என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்பவரின் கண்களில் சூர்யாவின் செய்கை தப்பவில்லை. அவரின் மனத்திற்குள் இவ்விஷயம் நெருடலாக இருந்தாலும் பெரிதுப்படுத்தவில்லை.



ஜீவா, தனிமையில் சூர்யாவிடம் என்னவென கேட்டக… ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாள்.



சூர்யாவோ, தாருகேஷின் கையை பட்டும் படாமல் தீண்டியபடி மோதிரம் அணிவிக்க ஒருவழியாக அனைத்து சடங்குகளும் முடிந்தது.



தாருகேஷிற்கோ, சொத்தும் சூர்யாவும் இனி தன்வசம்... இனி தன் இஷ்டம்போல் வாழ்க்கையினை வாழலாம் என்ற எண்ணத்தில் அவன் விடியலை ஆவலாக எதிர்நோக்க…



சாந்தியம்மாளோ, எங்கே தன் மகனின் வாழ்க்கை அழிந்துவிடுமோ என்று அஞ்சி இருந்தவர் இத்திருமணத்தால் தன் மகனின் வாழ்வு வளம் பெற்றுவிடும் என்ற எண்ணத்திலும்...



சிவரத்தினம் மற்றும் காயத்ரி இருவரும் தம் மகளின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக விளங்கும் என்ற எண்ணத்தில் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைய... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் விடியலுக்காக காத்திருந்தனர்.



இவர்களின் அனைவரின் எண்ணத்திலும் மண் அள்ளிபோட ஒருவன் கத்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல்… அவரவர், வேலையில் மூழ்கி இருந்தனர்.



அதிகாலைவேளை அந்த மண்டபம் முழுவதும் மங்கள இசை முழங்க... வேதியர் மந்திரம் ஓத, வானில் இருந்து இறங்கி வந்த தாரகை பெண்ணுரு கொண்டது போல், சர்வ அலங்காரங்களுடன் மணமேடை நோக்கி நடந்து வந்து தாருகேஷின் பக்கத்தில் அமர்ந்தாள் சூர்யா.



ஐயர்… சொல்லியபடி வாயும் கையும் செய்தாலும் அவளின் மனமோ, ‘பெருமாளே, இது சரியா..? தப்பா..?எனக்கு தெரியலை… இந்த கல்யாணத்திற்கு நான் என் முழுமனசோட சம்மதிக்கலை, என் அப்பா அம்மா சந்தோசத்திற்காக தான் நான் சம்மதிச்சேன். என் மனசு என்னமோ தப்பு நடக்க போற மாதிரி படபடப்பா இருக்கு. எனக்கு நீதான் துணை இருக்கணும். எனக்கு எப்பவும் நீ நல்லதே செய்வேன்னு நான் நம்புறேன்’ என வேண்டிக்கொண்டாள் ( அப்ப கூட கல்யாணம் நடக்கணும்னு வேண்டல விவரமா தான் வேண்டுற).



இதோ, “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என ஐயர் குரல் கொடுக்க, தாருகேஷோ… தான் நினைத்தது நடந்துவிட்டது என்ற பூரிப்பில், கையில் தாலியுடன் சூர்யாவின் கழுத்திற்கு அருகில் தன் கைகளை கொண்டு செல்ல...



அந்நேரம், “ஹாய் எவெரிபாடி சாரி போர் தி இன்டெர்ரப்ஷன் ஒரு டூ மினிட்ஸ் ஒரு கிப்ட் கொடுத்திட்டு நான் போயிட்றேன்” என கூறியவனை அனைவரும் யாரென பார்க்க… அவன் வேறுயாரும் இல்லை

சாட்சாத் விவேக்கே தான்…



விவேக்கினை கண்டவுடன் சூர்யாவின் முகத்தில் குழப்பமும், என்னவென்று தெரியாமல் அவள் உடலில் ஒரு நடுக்கம் பரவ… இதை பார்த்த ஜீவா, அவளின் அருகில் போய் நின்றுக் கொண்டான். அவனிற்கு அந்த இரவிற்கும் இவனிற்கும் சம்பந்தம் இருக்கும் என தோன்றியது.



அய்யரோ, “ அம்பி, கிப்ட் எல்லாம் கல்யாணம் முடிச்ச பின்னாடி தான் கொடுப்பா. இப்படி தாலி கட்டும் பொழுது அபசகுணமா நிறுத்திட்டு யாரும் கொடுக்க மாட்டா சத்த நாழி வெயிட் பண்ணுங்கோ… நல்ல நேரம் போயிடும் அதுக்குள்ள தாலி கட்டிடட்டும் “ என கூறி மறுபடியும் மந்திரம் கூற ஆரம்பிக்க…

கடுப்பான விவேக், “ஏய் ஓல்ட் மேன், கொஞ்சம் உன் ரேடியோவ ஸ்டாப் பண்ணு…” என சீற.



அய்யர் இவனின் பேச்சில் வாயடைத்து போய் இருக்க…



சாந்தியம்மாளும், சூர்யாவின் பெற்றோரும் இது என்ன குழப்பம்…? யார் இவன்…? என விசாரிக்க…



விவேக்கோ, நிதானமாக சூர்யாவை பார்த்து, “என்ன பேபி எப்படி இருக்க…? நான் ஊருக்கு போக போறேன் அதான் நாம சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோஸ் எல்லாம் உனக்கும் ஒரு காப்பி கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன். இந்தா பேபி” என ஒரு கவரினை கொடுக்க…



தாருகேஷோ, குழப்பத்துடன் யாரிவன் என அந்த கவரினை வாங்க முயல அதற்குள் சாந்தியம்மாள் அந்த கவரினை கைப்பற்றி இருந்தார்.

விவேக்கிடம், “யாருப்பா நீ…? தாலி கட்டுற நேரத்தில் வந்து இப்படி இடைஞ்சல் பண்ற அப்படி என்ன இருக்கு இந்த கவரில்…?” என கேட்டுக்கொண்டே பிரித்துப் பார்த்தவர், வாயடைத்து போய் நின்று விட்டார். அவரின் பார்வையில் அப்படி ஒரு அருவெறுப்பு...



சூர்யாவையும், தன் கையில் உள்ள படங்களையும் மாறி மாறி பார்த்தார். பாந்தமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் தெய்வீக அழகோடு அமர்ந்து இருப்பவளா இப்படி என அவரின் மனம் பெண்டுலம் போல் ஆட...



அவரின் அதிர்ச்சி கண்டு விவேக் உள்ளுக்குள் உவகை கொண்டான் என்றால், சூர்யாவோ அவரின் பார்வையில் மனம் துணுக்குற்றாள்.



தாருகேஷின் அன்னையின் அமைதியில் பயம் கொண்ட சிவா மற்றும் காயூ, அவரை நெருங்கி என்னவென பார்க்க, அவர்களில் விழிகளில் அப்படி ஒரு அதிர்ச்சி. அந்த போட்டோக்களை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது இது உண்மையாக இருக்காது… இருக்கவும் கூடாது… ஏனெனில் தங்கள் மகளை பற்றி இருவருமே நன்கு அறிவர்…



அந்த கவர்ல அப்படி என்னதான் இருக்கு எல்லாரும் அதை பார்த்திட்டு வாயடைச்சி போறாங்க என எண்ணிய தாருகேஷோ, அந்த புகைப்படங்களை வாங்கி பார்த்தும் அவனிற்கு, ‘இது நமக்கு தோணாம போச்சே ஏனெனில் அவன் அறிந்தவரை சூர்யாவை நெருங்குவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. இவன் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்துள்ளான். சும்மா சொல்லக் கூடாது எப்படி இருந்தாலும் அழகாவே இருக்கா' என அந்த நிலையிலும் தன் மன வக்ரத்திற்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தான் அந்த கயவன், பெண்களை வெறும் சதை பிண்டமாக மட்டும் நினைக்கும் இவனையும் ஒரு பெண் தான் பெற்றடுத்தாள் என்பதுதான் இங்கே கொடுமையானது. ( டேய், உனக்கு பொண்டாட்டியா வர போறவளை ஒருத்தன் தப்பா போட்டோ எடுத்து கொண்டுவந்து கொடுத்தா ஒண்ணு கோபப்பட்டு அவனை அறையணும், இல்ல எனக்கு ஏண்டி துரோகம் பண்ணன்னு அவளை அறையணும் அதை விட்டுட்டு என்ன வேலைடா பாக்குற பக்கி)...



சூர்யா, அந்த புகைப்படங்களை பார்த்த அனைவரின் முகபாவனைகளையும் பார்த்த பிறகு அவளிற்கு அதனை பார்க்கவோ, கைகளால் தீண்டவோ, அவ்வளவு அச்சமாக இருந்தது.



நடுங்கும் விரல்களால் அந்த போட்டோஸை வாங்க, அந்த நிலையிலும் தாருகேஷின் பார்வை அவளை துகில் உரிக்க மனத்திற்குள் நொந்து போனாள் சூர்யா.



முதல் இரண்டு படங்களை பார்த்த சூர்யாவால், மேற்கொண்டு அதனை காண முடியவில்லை. கண்களில் கண்ணீர் ஆறாக பெருக பூமி பிளந்து தன்னை உள்வாங்கி கொள்ளாதா..? என இருந்தது. அவளிற்கு விவேக்கினை அடித்தது நினைவிருந்தது. அந்த புகைப்படங்கள் எப்படி என ஒன்றும் புரியாமல் கண்களின் பார்வை மறைய, அவளை சுற்றி இருள் படர தள்ளாடினாள் சூர்யா.



தன் சகோதரியின் நிலை அறிந்து அவளை ஜீவா ஒரு பக்கம் பிடிக்க… தன் மகளின் நிலையுணர்ந்து காயத்ரியும் சிவாவும் விரைந்து வந்து மறுபக்கம் தாங்க… அவளின் கரங்களில் உள்ள படங்களை பார்த்ததும் ஜீவாவிற்கு, தன் எதிரில் உள்ளவனை துண்டு துண்டாக வெட்டி போடும் அளவிற்கு ஆத்திரம் வர கோபத்தில் உடல் இறுக… காது கொடுத்து கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் கொண்டு விவேக்கினை அர்ச்சித்தவன், அப்படியும் ஆவேசம் அடங்கா குரலில், “ பொய் சொல்லாதடா, கண்டிப்பா இதுல இருக்குறது எங்க சூர்யாவே இல்ல நீ ஏதோ சதி செஞ்சிருக்குற” என கூறி… அந்த படங்களை விட்டெரிய அவை எல்லாம் அங்கிருந்த ஓமகுண்டத்தில் விழுந்து தீக்கிறையாகின.



அவனின் உயிரானவள்...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 40



விவேக்கோ தன் தோள்களை குலுக்கி, “எதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்றீங்க நீங்க எல்லாரும்…? நான் ஜஸ்ட் போட்டோஸ் கொடுத்திட்டு போக வந்தேன் அண்ட் அதில் இருக்குறது சூர்யாதான்... பார்ட்டி நைட் எடுத்த போட்டோஸும் இதுல இருக்கு. நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்… ஓகே கைஸ் சீ யூ… ஹாப்பி மேரிட் லைப் ப்ரோ” என கூறி தாருகேஷ் கையை குலுக்கிவிட்டு கிளம்பி செல்ல இருந்தவனை பாய்ந்து வந்த ஜீவா, விவேக்கின் சட்டையை பிடித்து அடிக்க கை ஒங்க…



சாந்தியம்மாளோ, “நிறுத்துங்க…. ஆளாளுக்கு பேசிக்கிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவே இருக்காது” என கூறி விவேக்கினை பார்த்து, “என்னப்பா, நீயா வந்த போட்டோஸ் குடுத்திட்டு போற, எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு..?” என கேட்க…



ஜீவாவின் பிடியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டவன், அவனை முறைத்துக் கொண்டே, தாருகேஷின் அன்னையிடம், “இங்க பாருங்க நீங்க கேட்குற கொஸ்டின்க்கு எல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை. எனக்கு சூர்யாவை பார்த்ததும் பிடிச்சி இருந்தது. எனக்கு கம்பெனி கொடுக்க முடியுமான்னு கேட்டேன். அவளும் ஓகே சொன்னா தட்ஸ் ஆல்… இதுல நான் பொய் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. நான் சூர்யா ஒர்க் பண்ற ஹோட்டல் M.D” என கூற…



சாந்தியம்மாளுக்கோ முதலில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது ஒருவேளை இது சூர்யாவாக இல்லாமல்… இவன் அவளை மிரட்ட பார்க்கின்றானோ என எண்ணியே அவர் விவேக்கிடம் கேள்வி கேட்க…



விவேக்கின் “சூர்யா வேலை செய்யும் ஹோட்டலின் உரிமையாளர் நான்…” என்று அவன் சொன்ன பதிலில் அவரின் நம்பிக்கை மொத்தமும் தகர்ந்தது அவ்விடத்தில் கோபமும், ஆத்திரமும் பெருக அவரின் கண்முன்னே முன்னிரவு சூர்யா தாருகேஷ் கையை உதறியது படமாய் விரிய அது மேலும் அவரின் கோபத்திற்கு நெய் ஊற்றியது போல் ஆக… என்ன பேசுகிறோம் என அறியாது வார்த்தைகளை சிதற விட்டார்.



“ஏன் டா, என்னையும் என் பையனையும் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. நீ சாப்பிட்டு தூக்கி போட்ட எச்சை இலையில் சாப்பிடுறவன் மாதிரி தெரியுதா..? (சாந்தியம்மா, எச்சை இலை சூர்யா இல்லை. உம்ம பையன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெத்து வச்சிக்கிட்டு இவ்வளவு பேசுவீங்களா…? )



அவர் கூறிய வார்த்தைகளை பொறுக்க முடியாமல் சிவா, “பார்த்து பேசுங்கம்மா என்னோட பொண்ணு அப்படி இல்ல, வார்த்தைகளை கொட்டாதீங்க. அப்புறம் அள்ள முடியாது இருங்க என்னன்னு விசாரிப்போம்” என கூற…



தாருகேஷின் அன்னையோ, “ என்ன விசாரிக்க போறீங்க அதான் வெட்ட வெளிச்சமா உங்க பெண்ணோட நடத்தையை படம் பிடிச்சி காட்டிட்டானே இன்னும் என்ன விசாரிக்க போறீங்க… எதுக்கும் டாக்டரை கூட்டிவந்து காட்டுங்க இது சாதாரண மயக்கமா இல்ல பிள்ளை மயக்கமானு..?” என்று இன்னும் என்ன சொல்லி இருப்பாரோ..? காயூவின் சத்தத்தில் சொல்லவந்த வார்த்தைகளை நிறுத்தினார். தானும் ஒரு பெண் தான் என்பதை மறந்து மற்றோரு பெண்ணின் மீது பழி சுமத்தினார்.



விவேக்கிற்கோ, தன் திட்டம் நிறைவேறியதில் அவ்வளவு சந்தோஷம் என்றால்… இதில் மகிழ்ந்த இன்னொரு ஜீவன் தாருகேஷ்…



தாருகேஷ் ஒரு வார்த்தை சூர்யா அப்படிப்பட்டவள் இல்லை. தனக்கு அவள் மீது நம்பிக்கை உள்ளது என கூறி இருந்தால் விவேக் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி இருப்பான். ஆனால் அவனோ, சூர்யா தன்னை அவமதித்ததிற்கு அவளிற்கு இது தேவை என நினைத்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். எப்படி இருந்தாலும் அவனிற்கு இந்த திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை...



அவனின் நம்பிக்கையினை தவிடுபொடியாக்கியது காயத்ரியின் பேச்சு…



சூர்யாவின் அன்னை தன் மகளின் மயக்கத்தினை தெளிவிக்கும் பொருட்டு தண்ணீர் கொண்டு முகம் துடைத்து சூர்யாவின் கன்னம் தட்ட, மயக்கத்தில் இருந்து சற்று மீண்டவள் கேட்டது சாந்தியம்மாள் கூறிய வார்த்தைகளை தான். அதில் அவளின் மனம் கதறி துடித்தது. மகளிடம் சிறு அசைவு தெரியவும் நிம்மதி கொண்டவரை சாந்தியம்மாளின் வார்த்தைகள் கொந்தளிக்க செய்ய, “ நிறுத்துங்க…” என கத்திவிட்டார்.



“ என்னமா, உங்களுக்கு தான் வாய் இருக்குன்னு சும்மா பேசிக்கிட்டே போறீங்க எங்க பொண்ணை பத்தி எங்களுக்கு தெரியும். உங்களுக்கு அவ மேல நம்பிக்கை இல்லைனா இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என கூற, ( அப்படி சொல்லுங்க காயூ)...





அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாருகேஷ், ‘என்னடா இது இவங்க பொண்ணு வாழ்க்கைக்காக நம்ம காலில் விழுந்து கெஞ்சி கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்கன்னு பார்த்தா ( எத்தனை நாளுக்கு தான்டா, பெண்ணை பெத்தவங்க காலில் விழுவாங்க )... இப்படி நம்ம மொத்த பிளானையும் மண்ணள்ளி போட பார்க்குறாங்களே’ என காயூவை மனத்திற்குள் கரித்துக் கொட்டியவன்.



தன் அன்னையிடம், “ஏம்மா இப்படி எல்லாம் பேசுற என்ன நடந்து இருந்தாலும் சரி சூர்யா தான் என் மனைவி” என மிகவும் உருக்கமான குரலில் கூற…



அதுவரை தங்களுக்குள் குசுகுசுவென இந்த திருமணம் நடக்குமா..? நடக்காதா..? என பேசிக்கொண்டிருந்தவர்கள் அமைதியாகிவிட விவேக்கின் முகமோ அதிருப்தியை காட்ட சாந்தியம்மாளோ ஏதோ சொல்ல வர, சூர்யாவின் குரல் அவரை தடை செய்தது.



நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, விவேக் கொடுத்த அதிர்ச்சியை விட தாருகேஷின் பேச்சே அதிக பாதிப்பை கொடுத்தது.



என்ன சொல்லிவிட்டான் இவன், என்ன நடந்து இருந்தாலும் அப்படின்னா இவன் அவன் சொல்லுறதை எல்லாம் நம்புகிறானா..? என மனம் வெதும்பியவள்…



“ ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர்.தாருகேஷ் உங்களோட பெரிய மனசை நினைச்சு எனக்கு புல்லரிச்சி போச்சி. சோ… அவ்வளவு உயர்ந்த நீங்க எனக்காக இறங்கி வரவேணாம். இந்த கல்யாணம் நின்னது நின்னதாகவே இருக்கட்டும்” என கூற…



கூட்டத்தில் இருந்த ஒருவர், “ ஏம்மா அந்த தம்பி தான், என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லி... கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுதே, கம்முன்னு அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து தாலி கட்டிப்பியா அத விட்டுட்டு தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்க” என கருத்து சொல்ல...



ஜீவாவோ, “யோவ் நாங்க தான் எங்க அக்கா தப்பே பண்ணலை சொல்றோம் இல்ல அப்புறம் என்ன பரவாயில்ல குறைவாயில்லைன்னு சொல்லிக்கிட்டு போங்கய்யா” என…



தாருகேஷோ, சிவாவின் அருகில் சென்று, “நீங்க சொல்லுங்க சார், நான் உங்க பொண்ணை எவ்வளவு விரும்புறேன்னு உங்களுக்கு தெரியும் இல்ல... கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என அந்த நிலையிலும் தனக்கு சூழ்நிலையை சாதகமாக்கி கொள்ள முயல…



தன் தந்தை என்ன சொல்ல போகிறார் என துடிக்கும் இதயத்தினை அழுத்திக் கொண்டு அவரை பார்த்தாள் சூர்யா…



தன் மகளை நோக்கிவிட்டு, தாருகேஷ் பக்கம் திரும்பியவர், “ தம்பி நீங்க இவன்(விவேக்கினை சுட்டிக்காட்டி) என் பொண்ண பத்தி அபாண்டமா சொல்லும் பொழுது அவனை கோபத்தில் திட்டி, ரெண்டு அடி அடிக்கலைனோ, இல்லை உங்க அம்மா பேசும் பொழுது மறுக்கலைனோ, கூட எனக்கு உங்க மேல பெருசா வருத்தம் இல்லை

ஆனா இப்ப நீங்க சொன்னீங்க பாருங்க… எந்த தப்பு நடந்து இருந்தாலும்னு… அதைத்தான் என்னால தாங்க முடியலை என் பொண்ணு கண்டிப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்களுக்கு அந்த நம்பிக்கை அவமேல இல்லாத பட்சத்தில் உங்க விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து இந்த கல்யாணத்தை நடத்தி வைச்சா, என் பொண்ண நானே தப்பானவன்னு சொன்னதா ஆயிடும் என்னை மன்னிச்சிருங்க…” என்றவர்.



“இந்த கல்யாணம் இனி நடக்காது… என்னை எல்லோரும் மன்னிச்சிடுங்க…” என அங்கிருந்த சபையோர் அனைவரின் முன்பும் கரம் குவித்து மன்னிப்பு வேண்ட…



எல்லோரும் கலைந்து செல்ல… விவேக், தாருகேஷ் அவனின் அன்னை மற்றும் சூர்யா குடும்பம் உறுப்பினர்கள் மட்டும் மிஞ்சி இருந்தனர்…



சூர்யாவின் அருகில் வந்த விவேக், “செம்ம சீன் பேபி… எவ்வளவு எமோஷனல் ம்ம்… ஆனா எனக்கு தான் கொஞ்சம் டிஸாப்பாயிண்ட் ஆயிடுச்சி உன்னோட பேமிலி மெம்பெர்ஸும் நான் சொன்னதை நம்பி இருந்தா ஐ ஆம் ப்யூர்லி சாடிஸ்பைட் இட்ஸ் ஓகே… இது வெறும் ஸ்டார்ட்டிங் தான். எப்படி நான் சொன்ன மாதிரி உன்னை தொடாமலயே எல்லோரையும் உன்னை பார்த்து ச்சீ சொல்ல வச்சேன் பார்த்தியா..? நான் ஜென்டில் மேன் தானே” என அவளை கேள்வி கேட்டான்…



அப்பொழுது தான் சூர்யாவின் மூளைக்குள் மின்னலென அன்றைய இரவில் நடந்தது நினைவு வர அவனை எந்த வித உணர்வும் இன்றி பார்த்தாள்…



விவேக்கோ, “இனிமே உன்னோட லைப்ல ஒவ்வொரு செகண்ட்டும் நரகம் தான் சீ யூ பேபி…” என கூறியவன், தன்னுடைய திட்டம் நிறைவேறிய மிதப்பில் அவனின் உதடுகள் சிரிக்க தன் கூலர்ஸ் அணிந்து, எந்தவித குற்ற உணர்வும் இன்றி வெளியேற… அவனை நெருங்க முயன்ற ஜீவாவை சூர்யா, தன் கண் பார்வையில் தடையிட, அவனை ஒரு ஏளன சிரிப்போடு கடந்து சென்றான் விவேக்.



தாருகேஷோ, “ மறுபடியும் யோசி… உனக்கு சம்மதம்னா இப்பவே நம்ம கல்யாணம் நடக்கும்” என கூறி அவளின் கைகளை பற்ற வர, அவனை வெளிப்படையாக முறைத்து விலகியவளிடம், இன்னும் நெருங்கி வந்தவன் அவளின் மீது அவனின் பார்வை சென்ற இடங்களை கண்டவள், கொதி நிலைக்கு செல்ல அவளிடம், “கல்யாணம் வேண்டாம்னா பரவாயில்ல அவனுக்கு கொடுத்த மாதிரி எனக்கும் ஒரு நாள் கம்பெனி குடு” என கேட்க… அதுவரை நிமிர்வாக நின்றிருந்தவள் அவனின் வார்த்தையில் பெண்ணவளின் உடலும் உள்ளமும் கூசி நின்றவளிடம், “யோசிச்சி சொல்லு” என கூறி சென்றான் அவன். மனிதன் என்ற பெயரில் வாழும் மாமிசம் புசிக்கும் மிருகம்…

***************



இன்று…

நேத்ரனின் கரங்களில் இருந்தவள், தன் காதுகளை மூடிக் கொண்டு, “நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல… நான் தப்பானவ இல்ல… இல்ல” என சொல்லி கதறுபவளை என்ன சொல்லி தேற்றுவது என புரியாமல் சமைந்து நின்றான் அந்த வித்தகன்…



என்றோ நடந்ததை இன்று நடந்தது போல் எண்ணித் துடிக்கும் தன் உயிரனவளின் வலி கண்டு… தன்னை தானே நொந்து கொண்டவன், இதோடு லட்சம்முறைக்கு மேல், ‘நான் உன்னோட கல்யாணத்திற்கு வந்திருக்கணும் டாலி… உன்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டேனோ..? என்னை மன்னிச்சிடு டாலி’ என தன் உயிரிடம் மனதோடு மன்றாடினான்.



‘ஆனாலும் டாலி எனக்கு ஒரு விஷயத்தில் ரொம்ப சந்தோசம் உன்னோட கல்யாணம் காதல் கல்யாணம்னு நினைச்சி நான் தவிக்காத நாள் இல்லை. என் ஒரு மனசு நீ எப்படி என்னை தவிர மற்றவனை காதலிக்கலாம்னு கோவம் வரும். இன்னொரு மனசு, உன்னோட சந்தோசம் தான் முக்கியம்னு சொல்லும். இப்படி எனக்குள்ளையே நான் போராடுன விஷயம், அவனை(தாருகேஷ்) உனக்கு விருப்பம் இல்லாம தான் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்னு சொன்ன உன்னோட வார்த்தைகளால் ஒண்ணுமே இல்லாம போயிடுச்சி. லவ் யூ டாலி…’ என செல்லம் கொஞ்சியவன், அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவளின் முதுகை நீவி விட அதில் சற்று தெளிந்தவள்.



நேத்ரனின் முகம் பார்த்து, “அவன் அப்படி சொல்லிட்டு போகவும், நாம ஏன் இன்னும் உயிரோடு இருக்குறோம்னு இருந்தது. நான் எந்த தப்பும் பண்ணலை தனு… நீ… நீங்க எ… என்னை நம்புறீங்க தானே” ( சூர்யா, சும்மா இருக்க சிங்கத்தை ஏன்மா சொறிஞ்சி விடுற).



சூர்யாவின் இக்கேள்வியில் அவளின் முதுகை நீவிக் கொண்டிருந்த நேத்ரனின் கை சற்று தேங்கி பின் மறுபடியும் நீவிவிட்டது. ஆனால் அவனின் உடல் இறுக்கம் தளரவில்லை.



அவளின் உயிரானவன்....












 
Status
Not open for further replies.
Top