All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தந்தனத்தோம் என்று சொல்லியே.... கதைத் திரி

Status
Not open for further replies.

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



அத்தியாயம் 8


கோமதி நாச்சியாரின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டியவன் தன்னருகில் அமர்ந்திருந்தவளைச் சுற்றி கவிழ்த்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி குங்குமத்தை வைக்கப் போக அதற்கு முன்பே சுற்றிய அவன் கரமும் நெருக்கமான அவன் வெம்மையுமே அவளை சிவக்க வைத்திருந்தது. மதி முகம் அதில் தாழம்பூ குங்குமம் வைத்தவன் கண்களும் கரங்களும் தொடர்ந்து பார்க்கவும் தொட்டு பார்க்கவும் ஆவல் கொண்டன . அதில் சற்று நேரம் ஆகிவிட


"உங்க வீட்டம்மா தான் உங்களுக்கே தான் பக்கத்துல வைச்சி காலம் பூரா பாருங்க இப்ப கொஞ்சம் இங்க பாருங்க" என்ற அருணாவின் கேலியிலும் தொடர்ந்த

சிரிப்பிலும்

"ஆமா அதுக்கு தான கல்யாணம் பண்ணியிருக்கேன்.என் பொண்ட்டி தான் எனக்கு மட்டும் தான்"

என்றான் சிரித்தவாறு

"அது சரி உங்ககிட்ட பேசி ஜெயிக்க வா."

என்று அடுத்தடுத்த சடங்குகளில் அவர்களை உள்ளிழுத்துக் கொள்ள சிரிப்பும் ஆரவாரமுமாய் சென்றது.


மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவர்களை விசாலாட்சி தான் ஆலம் சுற்றி அழைத்து கொண்டார். திருக்குமரனும் அவன் மனைவி அருணாவைத் தவிர அனைவரும் மண்டபத்திலேயே நின்றிருந்தனர். ஊருக்கு திரும்புவதற்காக.


திருக்குமரன் வாயிலில் அலைபேசியுடன் நிற்க அருணா உள்ளே விசாலாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தாள். கோமதி நாச்சியார் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் வான நாயகனை அதில் அவன் புறம் என்ன என்று புருவம் உயர்த்தி கேட்க மீண்டும் குனிந்து கொண்டாள். மீண்டும் பாராத போது பார்ப்பதும் பார்த்தவிட்டால் திரும்பிக் கொள்வதும் என இருக்க. அவனுக்கு சிரிப்பு வந்தது.

அவள் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து

"இந்த .. "

ஆரம்பிக்கும் முன்னம் வான நாயகன் மேலே சென்று விட்டான். "இவங்களுக்கு இதே சோலியா போச்சு ? என்ன சொல்ல வரோம்னு கேட்கறதே கிடையாது."

என புலம்பியபடி இருந்தாள்.


மேலே சென்றவன் திரும்பி அவளைப் பார்க்க அவளும் அவனைப் பார்க்க வாயை மூடிக்கொண்டாள். அவள் முகத்தின் பாவனையில் இதழசைவில் என்ன பேசியிருப்பாள் என்று புரிந்து கொண்டவன்

"பாவம் கொஞ்சம் இலகுவாய் இருக்கட்டும்ன்னு வந்தா."

என்று அவன் திரும்பியவன் புன்னகையுடன் சென்றான்.கீழே கோமதி நாச்சியார் மட்டும் இருந்தாள்

கவனமாக மனதிற்குள் வைதபடி "இவன் பாட்டு போனா ஆத்திர அவசரத்துக்கு எங்க போகன்னு காட்டனும் கூட தெரியல இதுல …. ஆண்டவா "

என்று தன்னுள் புலம்பியபடி.



அன்றைய நிகழ்வுகளில் பயணிக்க அவனும் அவளுடன் அனைவரும் நிச்சயத்திற்காக உடை எடுக்கச் சென்றிருக்க ராசாத்தி முன்னறையில் இருந்த மனோன்மணி மற்றும் நாச்சியாரிடம் வந்தவர்


" எம்புட்டு நேரம் தான் இந்த டிவிய பார்ப்பீய போய் சாப்பிட்டு சித்த படுங்க. ஏற்கனவே மேலுக்கு

முடியலல்ல ."


"கொஞ்சம் பொறுத்து சாப்பிடுதோம் ஆச்சி நீங்க சாப்பிடுதீயளா எடுத்து வைக்க வா."


"இல்ல பொங்கலு காபி வடையெல்லாம் தின்னதுல பசியில்ல நான் செத்த (சித்த_சிறிது நேரம்) குறுக்க சாய்க்கேன்."


என்று விட்டு உள்ளறைக்கு செல்ல அந்த நேரத்தில் மனோன்மணிக்கு அவளது தோழி அழைக்க அவளிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டு அவள் போனை வைத்துவிட்டு வரவும் இவர்கள் நுழையவும் சரியாக இருந்தது.

உள்ளே வந்த அனைவரும் அவளைப் பார்த்த பார்வையில்

"ஆஹா இன்னிக்கு என்ன பஞ்சாயத்தோ என்ன செய்யக் காத்திருக்காங்களோ தெரியலையே. ஒரு மூஞ்சியும் சரியில்லையே"

என்ற மனதின் கேள்விக்கு பதில் தேடி நிற்க


சொல் விளங்கு தவமணியை பார்த்துவிட்டு வாசல் தின்னையில், அமர்ந்து கொண்டார்.

" காப்பி ஏதாவது போட்டு தரவா? " என்ற மதியிடம்

" ம் " என்ற தவமணி."

ராசாத்தியின் அறைக்குள் நுழைந்தார். அதிலேயே ஏதோ சரியில்லை எனப் புரிந்து கொண்டு தொடர்ந்து மதியும் மனோவும் வர

இவர்ளைக் கண்டதும் எழுந்த ராசாத்தி

"என்ன வெள்ளென வந்துட்டீக "

என்றதில் தவமணி

"அத்தை மாப்பிளை நிச்சயத்தை நிறுத்துங்கன்னு சொல்லிட்டு போயிட்டாக."

"எது நிப்பாட்ட வா ?ஏன் என்னாச்சி?"

" தெரியல"

என்றவரிடம் வந்த மனோ

" அவரு இரண்டு மூனு மட்டம் போன்ல பேச கூப்பிட்டுறுப்பாரு போல இவ பேசல அதான் இன்னிக்கு நேர்ல பார்த்து கேட்கனும்னு வந்திருப்பாக, இவள பட்டெடுக்க கூப்பிடா வரமாட்டேன்னுட்டா."

என்றவளிடட்

"அதனால இத இப்படியே நிப்பாட்டிக்குவோம்ன்னு உள்ள கூட வராம போறாகளோ , என்ன ஏதுன்னு புரியலையேட்டி..எங்களுக்கு ஒன்னும் ஓடல"


என்றார் தவமணி அதைக் கேட்ட கோமதி நாச்சியாருக்கும் ஒன்றும் ஓடவில்லை. கண்கள் கலங்கி நின்றுவிட்டாள் மரமாக. அவளோ அவள் ஆசையை சொல்லாமல் மறைக்கிறோமே என்று தவித்திருந்தாளே அவனை வேண்டாம் என்று எண்ணவில்லையே

ராசாத்தி தான்

" ஏ அது இந்த காலத்திய பையன் நம்ம வீட்டு புள்ள ஊர் உலகத்த போல பேசி பழகலங்கவும் பிடிக்கலங்க முடிவுக்கு வந்துருக்கும்.,"

என்றவர் பேத்தியின் முகத்தையும் கலக்கத்தையும் கண்டவர்

"ஒன்னுமில்லத்தா தனியாப் போய் போன போட்டு பேசு சரியாகிரும்."

என்றதில் போனை எடுத்துக் கொண்டு அறைக்குள் வர அவளுக்கு பின்னே வந்த ராசாத்தி கட்டிலில் அமர தவமணி இன்னும் தள்ளி நிற்க வாசலில் மனோன்மணி இருக்க அவள் மனமோ "அடேய் இதான் தனியா பேசறதா ?கஷ்டம் டா உங்களோட… இந்த கொடுமைக்கு தானடா பேசாம இருந்தேன்.

"அடேய் வான நாயகா கிராதகா " என முடிந்தவரை தள்ளி வந்தவள் பல கணியில் அவர்கள் கண் பார்வையின் நின்றவாறு அலைபேசியில் அவனை அழைக்கஎடுத்தவனிடம்

"வந்து …"

"ம். சொல்லு"

"நீங்க. நான் அப்படி நினைக்கல "

என்றவளுக்கு வேண்டாம் நிறுத்து என்று சொன்னதாக வந்த சொற்களை சொல்ல கூட முடியவில்லை. இங்கு சுற்றி அனைவரும் இருக்க தன்நிலையை கூறவும் முடியவில்லை.

அவனோ " வீடியோ கால் பண்ணு" என்று விட்டு இணைப்பை துண்டித்தான்.

வீடியோ காலில் அவனை அழைக்க வேற வழியின்றி எடுத்தான். அவளின் அழைப்பு அவனால் மறுக்க இயலுமா?.

கலங்கி சிவந்திருந்த கண்கள் அவளுக்கு அவன் காதலை மறுப்பின் வலியை உணர்த்தியது. தனக்காக தான் கிடைக்காமல் போய்விடக் கூடும் என்பதால் தானே என்று அவளுக்குள் ஒரு மகிழ்ச்சி. தான் காதலிக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி கூடவே அவனை அனைத்து கைகளுக்குள் நின்று இல்லை அப்படி இல்லை நான் உனக்கு உன்னுடையவள் மட்டும் தான் என்று எழுந்த வேகத்தை மறைக்கவும் முடியாது வார்த்தைகளை கோர்த்தவள்

" இல்ல நீங்க என்னவோ சொன்னீங்களாம்."

என்றவள் குரலில் முகத்தில் இருந்த தவிப்பு கலக்கம் சிறு மகிழ்ச்சியை கண்டு கொண்டவன் கண்களில் விழுந்த அவளது கிளிப்பச்சை நிற பட்டு பாவடையும் அந்த காப்பிக் கொட்டை வண்ண தாவணியும் அவனை கவரத்தான் செய்தது. ஏதும் செய்யும் வகையறியாமல் முகத்தை அழுந்த துடைக்கும் பாவனையில் அத்தனையும் மறைத்துக் கொண்டவன்

"ம்"என்றிட

"அது… எனக்கு இரண்டு நாளா பீவர் அதான் வரமுடியல உங்ககிட்ட சொல்லாததுக்கு சாரி."

என்றவள் பள்ளி மாணவியதான் இப்போது உல்லாசம் ததும்ப

" ம் அப்ப நீ ஒன்னு செய்யனுமே"

"என்ன"

"இனி நீ காலைல அப்புறம் நைட்டு இரண்டு தடவை " "பேசனுமா முடியாது"

"முடியாதுன்னா அப்போ…? எப்படி?"

எதையோ கூறவந்து நிறுத்தியதில் வெட்கத்துடன் குனிந்து கொள்ள

"சரி அப்ப உன்னோட செல்பி எடுத்து அனுப்பனும் டெய்லி ட்டூ டைம்ஸ்"

அவள் "ம்"

என்றததை கேட்டவனுக்கு இன்னும் அவள் பேச வேண்டும் என்று ஆவல். அதற்காக எதையோ கூறப்போக . அவள் உள்ளுணர்வுக்கு அது எட்டிவிட அவன் ஏதும் கூறும் முன்


"இந்தா ஆச்சி இங்கன இருக்காக ஏதோ பேசனுமாம்."


என்று போனை திருப்ப கட்டிலில் ராசாத்தி அவரைத் தாண்டி தவமணி முன் வாயில் இவர்களை எப்படி வெளியே அழைப்பது என தெரியாமல் முழித்தபடி நிற்கும் மனோ அவள் உள்ளும் வெளியும் பார்ப்பதிலேயே தெரிந்து விட்டது. சற்று தூரத்தில் செந்தூரன் மற்றும் குடும்பத்தினர் எல்லாம் என்று


"அடேய் என்னடா நடக்குது என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.நல்ல வேளை காப்பாத்தி விட்ட தாயி "

என்றவனிடம் எதுவும் தராமல் அவள் போனை ராசாத்தியிடம் தர

"தம்பி எப்படிய்யா இருக்க ?"

"நல்லா இருக்கேன் பாட்டி"

"தம்பி நம்ம வீட்டு வழக்கத்துக்கு பொண்னும் மாப்பிளையும் ஒன்னா போய் துணி எடுக்குதது எந்நேரமும் பேசறது எல்லாம் கிடையாது அதான் அவள விட்டு போவ சொன்னது ."

" உரியவுகளுக்கு ஒப்படைக்கற வரைக்கும் நாம பொறுப்பா பார்த்துகிடனும் ல நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்த பொறவு உங்க விருப்பம் அதுல நாங்க

தலையிட முடியாது."

"தப்பா நினைச்சிகிடாதீய இதுக்கான்டி நீங்க நிப்பாட்டனும்னு நினைக்கிய" என்றவரிடம் அவர் கூறியதன் சரி தவறுகளை பற்றி வாதிடுவது சரிவராது இது அதற்கான நேரமும் இல்லை என்று புரிந்து கொண்டவன்.


"இல்லீங்க பாட்டி நான் சொன்னது வேற விஷயமா நீங்க போன மாமா இல்ல செந்தூரன் கிட்ட கொடுங்க."


"ஏப்பா செந்தூரா இந்தா மாப்பிளை தம்பி உங்கிட்ட பேசனும்ங்காக."


"அதில் உள்ளே வந்து அலைபேசியை வாங்கி காதில் வைத்தவன்.

"சொல்லுங்க மாப்பிளை உங்க சந்தேகம் போயிடுச்சா."

நாச்சியார் பேசியதில் இருந்து அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று புரிந்து கொண்டவன்

" ம் பட் வேற ஒரு விஷயம் தான் இதுக்கு காரண நான் நிச்சயத்தார்த்தம் அன்னிக்கு வர முடியாது. "

" என்ன சொல்றீங்க."

" ரொம்ப முக்கியமான வேலையா பாரீஸ் போக வேண்டியது இருக்கு.ரொம்ப நாளா எதிர்பார்த்த வேலை நிச்சயத்து அன்னிக்கி சாயங்காலம் கிளம்பனும்"

"ஓ ஆனா இப்ப நிப்பாட்டினா.நல்லாயிருக்காதுல்ல."

சற்று முன் வரை முன் அவள் பிடிக்கவில்லையிலும் தவிப்பிலும் இருந்து மீண்டு இருந்தவன் இனி எக்காரணம் கொண்டும் அவளை இழக்க தயாரில்லை.

"சரி முகூர்த்தம் வரை மட்டும் இருந்துட்டு உடனே கிளம்பி ப்ளைட்ல செண்னை வந்து போய்க்கறேன். அப்புறம் கல்யாணத்துக்கு முதல் நாள்தான் வருவேன் ஓகே வா என்னுக்கு கேட்டு சொல்லுங்க"


"இதுக கேட்க என்ன இருக்கு எங்களுக்கு சம்மதம் தானுங்க. நல்ல விஷயம் நிக்கப்படாது அம்புட்டுதேன்."

"ஓ சரி அப்ப இந்த பக்கம் வேலைகள் எல்லாம் அப்பா மேனேஜ் பண்ணிடுவாங்க பார்த்துக்கலாம்.ப்ரஷர் பண்ண வேண்டாமேன்னு பார்த்தேன்."

"அதான் நாங்கெல்லாம் இருக்கோம்ல தூள் பரத்திறலாம்."


என்றவன் இதோ இன்று திருமணத்திற்கு முன்தினம் தான் வந்து சேர்ந்தான்.
 
Status
Not open for further replies.
Top