செம சூப்பர் யுடி. ஷிவ் புகழ் பார்த்து கண்ணடிக்குறதும்,அவ பாட்டு கேட்டு கட்டைவிரல் உயர்த்தி சிரிக்குறதும், வெளியே கூப்பிட்டுப்போறதும்ன்னு ரோமன்ஸ் பண்றது கலக்கல். ஷிவ் தெய்வான்னு கூப்பிடும்போது அப்படியே காதுல தேன் வந்து பாயுது.
அப்படி அந்த ஐபோன்ல என்னதாயா இருக்கு ! பொசுக்கு பொசுக்குன்னு அதை பார்த்தவுடனே எல்லாரும் அதிர்ச்சி ஆகுறாங்களே. முதல்ல சம்யுக்தா அதிர்ச்சி ஆனா, இப்போ புகழ். ஒருவேளை புகழ் ஷிவ் கல்யாண புகைப்படம் இல்லை அவங்க கல்யாணத்தை அபிஷல்லா வெளியிட்ட மாதிரி செய்தி ஏதாவது இருக்குமோ? ஷிவ் புகழ் கிட்ட இப்படி திடீரென அன்பா நடந்துக்க காரணம் என்னவா இருக்கும்? (புகழ்லோட சமையல் திறனை வச்சோ, இல்லை அவள மனைவின்னு வெளிப்படையா அறிமுகப்படுத்தியோ அந்த வெளிநாட்டு ஒப்பந்தத்தை கை பற்றிருப்பானோ ! ஷிவ் அவ்வளவு சீப் கிடையாதுன்னு தெரியும் சும்மா காமெடி கெஸ்ஸிங் பா) . ஷிவ் புகழ்ல கல்யாணம் பண்ண காரணம் என்னவேன இருக்கலாம், ஆனால் இப்போ புகழ்கிட்ட பாசமா நடந்துக்கிறது உண்மைன்னு நம்புறேன். அதோட அவங்க தாத்தா பாட்டி அத்தை குடும்பத்தை பழிவாங்க கூட இவ்வளவு நாள் பொய்யா அவங்க அம்மா அப்பா புகழ்கிட்ட அவன் கடுமையா நடந்திருக்கலாம்.
ஷிவ், புகழ்கிட்ட நீ எப்போபாரு இதுவரை டெர்ரரா தான் நடந்திருக்க, இப்போ புதுசா அவ மேல அக்கறை காட்டினாலும், முன்னாடி ஏற்பட்ட அனுபவத்தில உன்னை பார்த்தாலே புள்ளை மிரளுது. அந்த அளவுக்கு புள்ளய பயமுறுத்தி வச்சுட்டு அவள பார்த்து தேற மாட்டான்னு சொல்ற. பாரு புள்ள மனசுல நீ பூச்சாண்டியா தான் பதிஞ்சு போயிருக்கிற. வரான் வரான் பூச்சாண்டி ஸாங்தான் ஹைலைட்டே இந்த எபில. ஹா ஹா ஹா! பூச்சாண்டி! பட் இஞ்சி இடுப்பழகா ஸாங்தான் உனக்கு கண்டிப்பா கரெக்டா பொருந்தும் ஷிவ்.
குடும்பத்தோட வந்திருக்கிற சம்யுக்தா ஒருபக்கம், விமன்யா, வசுந்தரான்னு அவங்க ஒருபக்கம், வசந்த், சம்யுக்தா மேல காதலோட, ஷிவ் மேல வெறியோட அவன் ஒருபக்கம்ன்னு பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு குறையாமா கதை எப்பவும் போல சுவாரசியமா போகுது. அதிலயும் ஷிவ் புகழ் பார்ட் படிக்கும் போதுலாம் என் ஹார்ட் பீட் பாஸ்டா அடிக்குது. ஸ்டோரி படிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு யுடியும் அதே எக்ஸ்சைட்மேன்ட்டோட படிச்சுட்டு இருக்கேன். அடுத்த யுடிக்கு எப்பொழுதுமே ஆவலோட வைட்டிங்.