Ramyasridhar
Bronze Winner
சிவா கலக்கிட்டீங்க, செம பதிவு இயற்கை காட்சிகளை வர்ணித்த அழகில் அந்த அழகை பார்க்காமலே பார்த்தபடி செய்துவிட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் உங்கள் எழுத்தின் மூலம் எங்கள் அனைவரையும் அலராக மாற்றி அந்த இயற்கை அழகை இரசிக்க அந்த இடத்திற்கு எங்களை இழுத்து சென்றுவிட்டீர்கள். இது போதாதென்று ஏகனின் ஆழ்மன இரசனையை மிக மிக அற்புதமாக படைத்திருந்தீர்கள். கண் பார்க்காமல் பார்த்தது போலும், நாசி நுகராமல் நுகர்ந்தது போலும், மெய் தீண்டாமல் தீண்டியது போலும் அல்லவா இருந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை, உங்களுக்கு நிகர் நீங்களே!! இப்படி அழகாக இரசித்து எழுதி அதை நம்மை அப்படியே உணர செய்வதில் அலரின் அலறலில் அவன் நிதர்சனம் உணரும் போது ஒரு அற்புத உணர்வு, இரசனையான கவிதை, அழகான கனவு கலைந்தது போல் அல்லவா இருந்தது. அவளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரியும் முன் ஆயிரம் பத்திரம் சொல்லி, சொல்லவொண்ணா தவிப்புடனே கிளம்புகிறான். கிளம்பும் முன் ஏகன் என்று அழைத்தால் சந்தோஷப்படுவேன் என்கிறான்.. பார்ப்போம் அலர் அவ்வாறு அழைக்கும் நாளும் எந்நாளோ என்று......