All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண் தாராவின் ‘மாயக் கண்ணனோ! மன்மத வில்லனோ!!!’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

சரண் தாரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே..😍😍

நாங்க தான் சரண் தாரா..❤ எங்களுக்கு இந்த சைட்டில் எழுத திரி அமைத்து கொடுத்த ஶ்ரீகலா மேம்மிற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..😍

தாரா பவி என்ற நானும் சரண் சாரு என்ற என் அக்காவும் சேர்ந்து எழுதும் கதை தான் இது.

எப்போதும் கொடுக்கும் கதையை விட சற்று வித்தியாசமாக கொடுக்க எண்ணி எழுதும் கதை இது.. நிச்சயம் உங்களுக்கு இது பிடிக்கும் என்று நினைக்கிறேன்.😍

கீழே முதல் அத்தியாயம் போடுகிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை மறக்காமல் தெரிவியுங்கள்.❤😍😍

வித் லவ்..❤
சரண் தாரா😍
 
Last edited:

சரண் தாரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மாயக் கண்ணனோ..! மன்மத வில்லனோ..!!"

26452

அத்தியாயம் - 1

"ம்மா காலேஜூக்கு டைம் ஆச்சு ம்மா..!! தலைய சீக்கிரம் கெட்டு ம்மா, அதை விட்டுட்டு பேனு பார்க்காத..!! " என்ற நக்க்ஷத்ராவின் குரலை தொடர்ந்து..

"சும்மா இரு டி, தலை பூரா பேனு. வயசு 18 ஆச்சே கொஞ்சம் ஆச்சும் நம்மளை பேணணும்னு எண்ணம் இருக்கா உனக்கு..?? குளிக்கிறது கிடையாது தலை சீவுறது கிடையாது. நீ எல்லாம் கலேஜூக்கு போய் என்னத்தை தான் படிச்சு கிழிக்கிறீயோ தெரியல..??" என்று கடுகடுப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு பட்டாசாய் பொரிந்து தள்ளினார் நக்க்ஷத்திராவின் அன்னை கமலா.

தினமும் வாங்கும் ஓரே திட்டு என்றாலும் ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது நக்க்ஷத்திராவுக்கு "நான் முத்தாநேத்து தான் குளிச்சேன்..!! சும்மா எப்ப பாரு என்னை குறை சொல்லிட்டே இருக்காத.." என்று மூக்கு விடைக்க கோபமாக பேசியவளின் தலையிலேயே வலிக்கும்படி நங்கென்று கொட்டியை கமலா..

"வாயீ.. வாயீ.. என்னா வாயீ..!! எங்கிட்ட வாயாடுனே அப்புறம் வாயிலையே சூடு வச்சிருவேன் பாத்துக்கோ.." என்று கண்களை உருட்டியபடி மிரட்ட.

அதில் அடுத்து வாய் பேசாமல் வலிக்கும் தலையை தடவியபடி உர்ரென்று நின்றுகொண்டாள் நக்க்ஷத்ரா.

நேர் வகிடு எடுத்து அவளுக்கு தலை வாரி முடித்தவர் "ம்ம்ம்.. சரி வா சாப்பாடு எடுத்து வைக்குறேன்...!!" என்று சொன்னபடி அவர் கிச்சனை நோக்கி செல்ல.

உர்ரென்று முகத்தை வைத்தபடி ஹாலில் இருந்த சேர்ரில் சென்று தொப்பென்று அமர்ந்தாள் நக்க்ஷத்ரா.

சிறது நேரத்தில் அவள் முன் வைக்கபட்ட உணவை அமைதியாய் உண்டவள் அதே உர்ரென்ற முகத்துடன் தனது காலேஜ் பேகில் புக்கை அடுக்கி வைக்க.

அதை பார்த்து மனம் தாங்காத கமலா "இப்போ எதுக்கு புள்ள மூஞ்ச உர்ர்ருன்னு வச்சுகிட்டு இருக்க. உன் நல்லதுக்கு தானே அம்மா சொன்னேன்.." என்று தன்னிலை விளக்கம் கொடுக்க முயல.

அதை கேட்டு "நான் அதுக்கு ஒன்னும் மூஞ்ச தூக்கி வைக்கல. நீ தலையில அடிச்சது இப்பவும் வலிக்கிது அதான் கோபமா இருக்கேன்.." என்று பதில் அளித்த நக்க்ஷத்ரா வலியின் காரணமாய் உதடு குவித்து அழ ஆரம்பிக்க.

"அச்சோ சாரி டா அம்மூ. நீ எதிர்த்து பேசவும் கோபத்துல அடிச்சிட்டேன் அம்மாவை மன்னிச்சிடு..!!" என்று பதிறியபடி அவளை சாமாதானம் படுத்திய கமலாவை கண்டு பொங்கி வந்த சிரிப்பை உதடு கடித்து அடக்கியவள் கண்ணீரே வராத கண்களை கசக்கியபடி "போ.. போ.. நீ ஒன்னும் என்ன சாமாதானம் படுத்த வேண்டாம். இப்போ எல்லாம் நீ சும்மா சும்மா என்னை அடிக்குறே..!!" என்று குறை பட

"அப்படி இல்லடா மா, நீ உன்னை பேணவேண்டாமா..?? பெரிய பொண்ணா ஆன அப்புறம் கூட நீ சுத்தபத்தமா இல்லாம இருக்குறது தப்பு தானே...!!" என்று அவர் நியாயம் பேச.

"அங்..!! அது நீ பாத்து பதமா சொன்னா நான் கேட்டுப்பேன். நீ அடிக்கவும் திட்டவும் தான் எனக்கு கோபம் வருது. அதான் நான் உன் பேச்சை கேட்கமாட்டிங்கிறேன். ஆனா அப்பா பாரு எவ்வளவு பாசமா சொல்லுறாரு அதான் நான் அவர் பேச்சை கேக்குறேன்" என்று சொன்னவள் முகத்தை திரும்பிக்கொள்ள.

இப்போதும் துடுக்காய் பேசும் மகளின் மேல் கோபம் எழுந்தாலும் ஏற்கனவே அழுதுகொண்டிருப்பவளிடம் அதை காட்ட விரும்பாத கமலா "சரி சரி அம்மா மேல தான் தப்பு சும்மா அழாத பாப்பா...!!" என்றவர் அவளது அழுகையை அடக்கும் பொருட்டு கையில் இருந்த இருநூறு ரூபாவை அவள் கையில் கொடுத்து "சரி இதை வச்சுக்கோ புடிச்சதை எதையாச்சும் வாங்கி சாப்பிடு சரியா..!!" என்று பாசமாக சொல்ல.

அதை பார்த்து "இதற்கு தானே ஆசை பட்டாய் பால குமாரி.." என்று உள்ளுக்குள் மைண்ட் வாய்ஸ் ஒலிக்க.. கண்கள் மின்ன அதை வாங்கியவள் மின்னல் வேகத்தில் தன் தாயின் கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்டு தனது காலேஜ் பேகை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்து விட்டாள்.

அவள் நக்க்ஷத்ரா ரமேஷ் - கமலா தம்பதியருக்கு ஒற்றை பெண்ணாய் இருபது வருடம் கழித்து பிறந்த செல்ல மகள்.

காக்க வைத்து பிறந்ததாலோ என்னமோ அத்தனை செல்லம் அவளுக்கு அந்த வீட்டில் .

அதிலும் ரமேஷூக்கு மகள் என்றால் உயிர். கண்மண் தெரியாத செல்லம் கொடுப்பார். அவள் தவறே செய்தாலும் "குழந்தை தானே..!!" என்று சிரித்தபடி விட்டுவிடுவார் .

ஆனால் கமலா அப்படி அல்ல, வீட்டில் ஒருவராவது கண்டிக்க வேண்டும் என்பவர் அவள் தவறு செய்தால் தக்க தண்டனையை அவளுக்கு வழங்குவார். அதற்கென்று மகள் மீது பாசம் இல்லை என்று சொல்ல முடியாது. அளவுக்கு அதிகமான பாசம் அவள் மீது இருந்தாலும் அதை அடக்கியே காமிப்பார் அவளிடம்.

இவர்களது குடும்பம் நடுதரவர்கத்தை சார்ந்தது.

ரமேஷ் ஒரு கம்பெனியில் மாதம் இருபதாயிரம் சம்பாதிக்கும் சாதாரண ஒரு எம்பிளாயி.

இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு அழகான சின்ன வீடு சொந்தமாய் இருக்க பெரிதாக எந்த கஷ்டமும் இல்லை அந்த குடும்பத்திற்கு.

நக்க்ஷத்ராவே அவர்கள் இருவரின் உலகம்.

அவளோ குறும்பு செய்வதில் பி.ஹெச்டி முடித்தவள்.

தனமும் எதேனும் ஒரு பஞ்சாயத்தை இழுத்து விடுவதில் குறியாய் இருப்பாள்.

தெரு பிள்ளைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடு எதிர்வீட்டு ஜன்னலை உடைப்பது முதல் அடுத்த வீட்டில் நிற்கும் மாங்காய் மரத்தில் இருந்து மாங்காய் திருடுவது வரை இவள் செய்யாத தவறே இல்லை.

ரமேஷோ தன் பெண்ணை குறிப்பிட்டு காட்டி சண்டை போடுபவர்களிடம் அமைதியாய் பேசி சாமதானம் படுத்துபவர் மறந்தும் "ஏன் இப்படி செய்தாய்..??" என்று நக்க்ஷத்ராவிடம் கேட்க மாட்டார்.

ஆனால் கமலா அப்படி அல்ல "அது என்ன வளர்ந்த பிறகும் இத்தனை கொழுப்பு..!!" என்று கூறி அடி பெண்டை நிமிர்த்தி விடுவார்.

அதில் அவரை கடிந்து கொள்ளும் ரமேஷ் தான் கடைசியில் அழும் மகளை சாமாதானம் படுத்துவது. ஆனால் அதற்கடுத்த நாள் கமலா, நக்க்ஷத்ராவுக்கு பிடித்த உணவுகளாய் சமைத்து அவள் மனதை குளிர்விப்பது வேறு கதை..

இதோ நக்க்ஷத்ரா கல்லுரியில் முதல் வருடம் படிக்கும் நிலையில் இதுவே தொடர்கதை ஆகிறது.

என்ன ஒரு வித்தியாசம் முன்னே சமைத்து அவள் மனதை குளிர்விக்கும் கமலா இப்போது அவளுக்கு பாக்கெட் மணி கொடுத்து குளிர்விக்கிறார்.

"டொட்டோடைங்...!!!" என கண்களை விரித்து கூறியபடி கையில் வைத்திருங்க ஐநூறு ரூபாவை தன் தோழி அபினையா கண்முன்னே ஆட்டிக்காட்டினாள் நக்க்ஷத்ரா..

"ஏய் மச்சீ.. ஏது டி இவ்வளவு காசு..??" என வியப்பாய் கேட்கும் அபினையாவை பார்த்து.. தன் ஒற்றை கண்ணை சிமிட்டியவள் "வேற எங்க இருந்து..? வீட்டுல தான் கொடுத்தாங்க. மார்னிங் அப்பா வேலைக்கு போகுறதுக்கு முன்னமே வாங்கி வச்சிட்டேன். எதுக்குன்னே கேக்காம முந்நூறு ரூபா கொடுத்தாரு. ஆனா எங்க வீட்டால தான் ஒரு ஸ்டிரிக் ஆபிசர் இருக்காங்களே அவங்க கிட்ட வாங்க தான் கொஞ்சம் கஷ்ட படவேண்டியதா போச்சு.." என்றவளின் கை தானாய் தலையை தடவ.

அதை பார்த்த அபினையாவோ "ஹா..ஹா.. என்ன டி இன்னுக்கும் வீட்டுல பூஜையா..?? கமலா ஆன்டி ஸ்பெஷலா கவினிச்சாங்க போல" என்று கிண்டலாக வினவ.

அதில் அவளை முறைத்த நக்க்ஷத்ரா "ஏன் டி கேக்கமாட்ட..!! நீ இதுவும் கேட்ப இதுக்கு மேலையும் கேட்ப. உன்னை அப்புறம் கவனிச்சுக்குறேன். இப்ப டைம் போகுது பார், சீக்கிரம் வா.. வா பக்கத்துல இருக்குற மல்லிகா தேட்டருக்கு போலாம். இன்னைக்கு பாகுபலி படம் ரிலீஸ் வேற..!!" என்று அவசர படுத்தியவள் தோளில் அரைகுரையாய் தொங்கி கொண்டு கிடந்த காலேஜ் பேகை இழுத்து மீண்டும் தோளில் போட்டு விட்டு தன் தோழி அபினையாவின் கைகளை பற்றிய படி காலேஜூக்கு அருகில் இருந்த பஸ்டேண்டை நோக்கி இழுத்து சென்றாள்.

பி.காம் முதல் வருட ஸ்டூடென்ஸ் ஆன இவர்களுக்கு காலேஜ் மதியத்திலேயே முடிந்து இருக்க. நேற்று பிளான் பண்ணியது போல் இதோ படம் பார்க்க கிளம்பி விட்டனர் இருவரும்.

தேட்டரில்..

"ப்பா செமையா இருக்கான் இல்ல..!!" என்று அந்த பெரிய ஸ்கிரீனில் ஓடும் காட்சிகளை 'ஆ'வென்று பார்த்தபடி அருகில் இருந்த நக்க்ஷத்ராவின் காதை கடித்தாள் அபினையா..

அதற்கு நக்க்ஷத்ராவோ அவளை விட மோசமாய் வாயில் ஈ போவது கூட தெரியாமல் "ஆமா... டி..!! சான்ஸ்சே இல்ல.. அவன் பாடியை பாத்தியா.. அதுலையே நான் ஃபிலாட் ஆகிட்டேன். " என்று ஜொள்ள விட்ட படி சொல்ல.

இப்போது அபினையாவோ " என்ன இருந்துலும் மகன்னை விட அவன் அப்பா கேரெக்டர் பிரபாஸ் தான் டி செம அழகு. அடிச்சுக்கவே முடியாது..!!" என்று ரசித்து சொல்ல.

அதை கேட்டு பேவென ஸ்கிரீனை பார்த்துக்கொண்டிருந்த நக்க்ஷத்ரா "போடி..!! இவங்க எல்லாரையும் மொத்தமா அடிச்சு தூக்கிட்டான் டி என் டார்லிங் ராணா குட்டி...!! பாரு அவன் பாடிய பாரு, அச்சோ அவன் பேஸ்ச பாரு..! ஐயோ கொல்லுறானே..!!" அந்த பெரிய ஸ்கிரீனில் ஒரு அரக்கனை போல காட்சி அளித்த ராணாவை அநியாயத்துக்கு ரசித்து சிணுங்கும் தன் தோழியை வேற்றுகிரகவாசியை போல பார்த்த அபினையா..

"அடிபாவி.. அப்போ நீ இவ்வளவு நேரம் அந்த வில்லனுக்கு தான் விளம்பரம் ஓட்டிட்டு இருந்தீயா.." என்று நெஞ்சில் கைவைத்தபடி கேட்க.

" ப்ச் ஆமா டி என் ராணா டார்லிங்க பத்தி தான் சொன்னே. இப்போ நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு டி, என்னை என் டார்லிங்க ரசிக்க விடு..!!" என்று பதில் சொல்லிவிட்டு மீண்டும் ராணாவை ரசிப்பதில் ஈடு பட.

அதை பொறுக்க முடியாத அபினையாவோ "ஏய் அவன் வில்லன் டி..!!" என்று சலித்தபடி சொல்ல

"அதுக்கு என்ன மச்சி, சொல்ல போனா அவன் வில்லனா இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. அவன் கோப படும்போது அவன் பேஸ்ச பார்த்தியா..?? செம கியூட்டா இருக்குல..!!" என்று மனசாட்சியே இல்லாமல் சொல்லும் தோழியை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட அபினையாவின் மனமோ "அரக்க தனமா பண்ணுறான்.. பிளஸ் அவன் மூஞ்ச பார்க்கவே அவ்வளவு பயங்கரமா இருக்கு அதை போய் கியூட்னு சொல்லிகிட்டு இருக்கா. இவளுக்கு மண்டைல எங்கையாச்சும் அடிபட்டிருக்குமோ..??" என்று தீவிரமாய் எண்ண.

அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாத நக்க்ஷத்ரா ஸ்கிரீனில் ராணா பிரபாஸ்சை அடிப்பதை பார்த்து ஆர்வம் தாங்காமல் விசிலடித்து கை தட்டினாள். இவளது இந்த விசித்திரமான செய்கையில் மொத்த தேட்டரும் இவளை ஒருமாதிரி பார்க்க ...

அதை கண்ட அபினையாவோ "ஆத்தி..!! மொத்த தேட்டரும் நம்மளை மொறைச்சு பார்க்குதே..!!" என்று எண்ணியபடி திரும்பி நக்க்ஷத்ராவை பார்க்க அவளோ இப்போது ராணா பிரபாஸ்சை தீயில் தள்ளிவிடும் சீனுக்கு இன்னும் உற்சாகமாய் கைதட்டினாள்.

அதில் எங்கே பிரபாஸ்சின் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து தங்களை குமிறி விடுவார்களோ என்று பயந்த அபினையா எல்லோரையும் பார்த்து ஒரு அசட்டு புன்னகையை சிந்தியவாறு நக்க்ஷத்ராவை காட்டி "கொஞ்சம் லூசு..!!" என்பது போல சைகை செய்ய.

அதுவரை அவர்களை கொலைவெறியுடன் பார்த்த பிரபாஸ்சின் பேன்ஸ் இதில் சற்று சாந்தம் அடைந்தனர்.

அதை கண்ட அபினையாவோ "அப்பாடி..!!" என்று ஆசுவாச மூச்சை வெளியிட்டு சீட்டில் சாய. அவளது மனமோ "இவளை நம்பி தேட்டருக்கு வந்தது தப்பா போச்சோ, கொஞ்ச விட்டிருந்தா தேட்டருலையே சமாதி கட்டி இருப்பாங்க. இனி இவ கூட நம்பி எங்கையும் போக கூடாது பா..!!" என்று உள்ளுக்குள் உறுதியான முடிவெடுத்துக்கொண்டாள்.


அதே சமையம் இன்னொரு இடத்தில் ...


"நோ..நோ.. நோ..!! நான் போக மாட்டேன், என்னை கம்பல் பண்ணாதிங்க. எனக்கு இந்த புராஜெக்ட் செய்யுறதுல கொஞ்சம் கூட இஸ்டம் இல்லை. பிளீஸ் என்னை என் போக்குல விடுங்க எல்லாரும்.!!"என்று ஒருவன் கத்திக்கொண்டிருக்க.

அவனை தீர்க்கமாக பார்த்த மற்றொருவன் "நீ போய் தான் ஆகணும், இந்த புராஜெக்ட்டை நீ முடிச்சா தான் ஆகணும். அப்போ தான் உன் லைப் நல்லா இருக்கும். ஆல்ரெடி உன் பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்ட புராஜெக்ட்டை கம்பிலீட் பண்ண கிளம்பிட்டாங்க. நீ தான் இன்னும் சின்ன குழந்தை போல அடம்பிடிச்சுகிட்டு இருக்க.." என்று சூடாய் சொல்ல.


அதை கேட்டு ஆத்திரமடைந்த அவன் "நீ என்ன சொன்னாலும் சிரி, நான் போறதா இல்லை..!!" என்று திமிறாய் சொல்ல .

அதில் அவனை அழுத்தமாய் பார்த்த மற்றொருவன் "அப்படியா..??" என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி நக்கலாக கேக்க..

அதில் உள்ளுக்குள் பயம் எழுந்தாலும் தன் முடிவிலிருந்த மாறவே கூடாது என்று அழுத்தத்துடன் அவன் முன் நின்றான் அவன்.

அதை கண்டு ஒரு புற உதடை மட்டும் மெல்ல விரித்த மற்றொருவன் மடங்கி இருந்த தன் கை விரல்களில் இருந்து தன் ஆள் காட்டி விரலை மட்டும் நிமிர்த்தி தறையை நோக்கி காட்ட...

சட்டென்று அவனது ஆள்காட்டி விரலை சுற்றி பெரிதாய் தங்க நிறத்தில் ஏதோ ஜொலித்தது.

இவன் செய்வதை எல்லாம் ஒரு விதபயத்துடன் எச்சிலை கூட்டி விழுங்கியபடி பார்த்துக்கொண்டிருந்த அவனை பார்த்து அதே சிறு புன்னகையை கொடுத்த இவன் "சாரி மை பிரதர்..!!" என்று உரைத்த அடுத்த நொடி தன் ஆள்காட்டி விரலை அவனை நொக்கி நீட்டியிருந்தான்.

அதில் அதுவரை இவனது விரலை சுற்றி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு விதமான தங்கநிற ஒளி இவன் அவனை நோக்கி காட்டியதும் அவன் மேல் சர்ரென்று பாய்ந்தது.

தன் உடம்பில் அந்த தங்க நிற ஒளி பாய்ந்த வேகத்தில் அதிகமின்சாரம் தன் உடம்பில் பாய்ந்தது போல வலியை கொடுக்க அதை தாங்க முடியாமல் தறையில் விழுந்து துடித்தான் அவன்.

அவன் துடிப்பதை அதே புன்னகையுடன் பார்த்தபடி மெல்ல அவன் அருகில் நெருங்கிய இவன் மீண்டும் தன் ஆள்காட்டி விரலை நீட்டி தறையை நோக்கி காட்டியவண்ணம் அந்த ஒளியை தன் விரலை சுற்றி மீண்டும் உள்வாங்கியவன், தன் காலுக்கு கீழே துடித்துக்கொண்டிருந்தவனை பார்த்து "இப்ப சொல்லு புராஜெக்ட் பண்ண போறீயா இல்லையா..??"என்று நக்கலாக கேட்க.

அதில் அவனை பார்த்து பல்லை கடித்த அவன் "போறேன்..!!! பொய்தொலையுறேன்...!! ஆனா இப்ப நீ செஞ்சதுக்கு உன்னை பழிவாங்காம விடமாட்டேன்..!!" என்று கடுப்புடன் சொல்லியபடி தறையில் இருந்த எழும்ப..

அதை கேட்டு போலி ஆச்சரியத்துடன் "அப்படியா..??" என்று இருபுருவத்தை உயர்ந்தி கேட்ட இவன் அவனை பார்த்து "சரி அப்போ இதுக்கும் சேர்ந்து என்னை பழிவாங்கிடு..!!" என்று சொன்ன அடுத்தநொடி தன் விரலை சுற்றி பாய்ந்து கொண்டிருந்த அந்த தங்க நிற ஒளியை ஒரு சுழற்று சுழற்றி மீண்டும் அவனை நோக்கி அனுப்பினான்.

அதில் அப்போது தான் எழும்பி நின்ற அவன் இந்த ஒளி மீண்டும் அவன் மீது பாய வருவதை கண்டு இம்முறை சுதாரித்து கொண்டு ஒரு இகழ்ச்சி புன்னகையை உதட்டில் படரவிட்டவாறு தன் மீது அது பாய வரும் முன் சட்டென்று அந்த இடத்தில் இருந்து மாயமாக மறைந்து இருந்தான்.

அவன் மாயமானதை உணர்ந்த இவனும் அதே சின்ன புன்னகையுடன் அவன் மாயமான இடத்தை பார்த்துக்கொண்டு நின்றான்.


மாய கண்ணன் வருவான்..
 

சரண் தாரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2
26501
பழைய ஸ்கூல் யூனிபார்மில் உள்ள ஸ்போர்ட்ஸ் டி- ஷர்ட் மற்றும் முட்டிக்கு சற்று கீழ் வரை உள்ள பாவடையை அணிந்து தூக்கி கட்டிய கொண்டையுடன் அந்த தெருவில் உள்ள வாண்டுகளின் தலைவனிடம் "டேய் சீனு.. சீனு.. ஒரே ஒரு பேட்டிங் டா, அக்கா பாவம்ல. ஒரே ஒரு வாட்டி மட்டும் கொடு டா இந்த வாட்டி புராமிஸ் நான் சீட்டிங்கே பண்ண மாட்டேன்..!! என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க டா" என்று நக்க்ஷத்ரா கெஞ்சிக்கொண்டிருக்க.

அந்த சீனு என்னும் ஆறாம் வகுப்பு மாணவனோ "அதெல்லாம் சரிபட்டு வராது நக்ஷத்ரா.. உன்னை இந்த ஆட்டத்துல நாங்க சேத்துக்கிறதா இல்லை..." என்று உறுதியுடன் சொன்னவன் தன் முன்னே பந்தை வைத்துக்கொண்டு நிறபவனிடம் "டேய் விக்கி நீ பாலை போடு டா..." என்று சொன்னபடி கையில் இருந்த பேட்டை தறையில் தட்ட.

கோபம் கொண்ட நக்க்ஷத்ராவோ பட்டென்று அவன் கையில் இருந்த பேட்டை பறித்திருந்தாள்.

அதில் முதலில் அதிர்ந்த சீனுவோ இப்போது நக்க்ஷத்ராவை முறைத்தபடி தன் கைகளை அவள் முன் நீட்டி "ம்ம்ம்... கொடு நக்ஷத்ரா, தேவை இல்லாம என்னை கோபப்படுத்தாத. ஏற்கனவே உன் மேல நான் செம காண்டுல இருக்கேன். சும்மா திரும்ப திரும்ப வந்து வெறி ஏத்திகிட்டு இருக்காம என் பேட்டை ஒழுங்கா கொடுத்திடு..!!" என்று சொன்னபடி அந்த பேட்டை வாங்க முற்பட.

அது அவன் கைகளுக்கு அகபடமுடியாத படி தன் தலையின் மீது உயர்த்தி பிடித்தவள் குனிந்து அவனை பார்த்து "ஏன் டா, நான் தான் சீட்டிங் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன டா..??" என்று பாவமாக கேட்க.

அவளை உக்ரமாக முறைந்த அந்த சிறுவனோ "ஏது..!! நீ சீட்டிங் பண்ண மாட்டியா..?? போன வாட்டியும் இதே டையலாக்கை சொல்லி தானே ஆட்டத்துல சேர்ந்த. ஆனா அப்படியா நீ நடந்து கிட்ட..??" என்று அவளை பார்த்து கடுப்புடன் கேட்டவன்

"நான் பேட்டிங் தான் பண்ணுவேன்னு... ஒத்த கால்ல நின்னு பேட்டிங் பண்ணி அந்த பால்லை வச்சு எதிர்வீட்டு ஜென்னலை உடைச்சது மட்டும் இல்லாம சட்டுன்னு அந்த இடத்துல இருந்து நைஸ்சா எஸ்கேப் வேற ஆகிட்ட நீ...!! அந்த வீட்டம்மா அங்க தப்பே செய்யாம பாவமா நின்ன எங்களை திட்டுனது மட்டுமில்லாம எங்க எல்லாரோட அம்மா கிட்ட போட்டு வேற கொடுத்திடிச்சு. உன்னால வீட்டுல தர்ம அடி வாங்குனோம் தெரியுமா நாங்க. வலி தாங்க முடியாம நான் என் வீட்டுல நடந்ததை எல்லாம் சொல்லிட்டேன். ஆனா நான் அதை சொன்ன அப்புறம் தான் "அந்த பொண்ணு கூட இனி சேருவியா..? சேருவியானு..?? கேட்டு கேட்டு அடிச்சாங்க.." என்று முகத்தை சுருக்கியவன்

"நான் முடிவு பண்ணிட்டேன், இனி உன் கூட சேர்றதா இல்லை..!!" என்று நீளாமாக பேசி அவளை குற்றம சாட்டிய சீனு கடைசியில் உறுதியுடன் முடிக்க.

எல்லாம் கேட்ட அவளோ "என்னாது...!! உங்களை எல்லாம் அடிச்சிட்டாங்களா...??" என்று 'என்ன சிவாஜி செத்துட்டாரா..??' என்ற டோனில் அதிர்ச்சியாய் கேட்க.

அவர்கள் அனைவருமோ ஆம் என்ற ரீதியில் பாவமான முகத்துடன் தலையாட்டினர்..

"இதை சும்மா விடகூடாது..!! சும்மாவே விட கூடாது..!! எவ்வளவு தைரியம் இருந்தா அந்த வீட்டம்மா உங்களை எல்லாம் வஞ்சம் வச்சு உங்க வீட்டு ஆளுங்க கிட்ட மாட்டி விட்டிருக்கும். அதனால தானே உங்களுக்கு எல்லாம் இவ்வளவு அடி கிடைச்சிருக்கு..!!" என்று நேக்காய் தான் தப்பித்து கொண்டு அந்த அம்மாவை மாட்டிவிட்டவள்.

"இதை இப்படியே விட்டா அப்புறம் நம்ம மேல உள்ள பயம் போயிடும்..!! இதுக்கு கண்டிப்பா எதாச்சும் பண்ணனும்.." என்று தீவரமான முகத்துடன் அவள் சொல்ல..

அவளை தொடர்ந்து மற்ற சிறுவர்களோ நேற்று அவர்கள் வீட்டில் வாங்கிய அடியின் பயனாய் இவள் சொல்வதை ஆமோதித்து "ஆமா எதாச்சும் பண்ணனும்..!!" என்று கோரசாக சொல்ல சீனுவும் வேறு வழியில்லாமல் இவர்களுடன் இணைந்து கொண்டான்.

அனைவரும் ஒருவர் தோள் மீது ஒருவர் கைபோட்டபடி வட்டமாக நின்றுகொள்ள அவர்களுக்கு நடுவில் அதே போல அவர்கள் தோளில் கைபோட்டுக்கொண்டு நின்ற நக்ஷத்ராவோ குனிந்து தீவிரமாய் ஏதோ சொல்ல..

அனைவரும் அவளது பேச்சை கேட்டு ஆவலுடன் தலையாட்டினர். ஆனால் சீனு மட்டும் சற்று யோசனையாய் "எனக்கு என்னமோ இது சரியா வரும்னு தோணலை..!! அந்த அம்மா ஆள்ரெடி நம்மளை ஒரு டைம் மாட்டி விட்டாங்க. மறுபிடியும் நம்ம இதே தப்பை செய்யுறது எனக்கு என்னமோ சரியா படல..!!" என்று குழப்பத்துடன் கூற..

அந்த கேங்கில் குணா என்பவனோ "டேய் சீனு.. நீ சும்மா இரு டா..!! அந்த அம்மா நம்மளை எல்லாம் மாட்டி விட்டதுக்கு நம்ம அவங்களை பழிவாங்க வேண்டாம். நக்க்ஷத்ரா சொல்லுற ஐடியா கண்டிப்பா சரியா வரும்..!!" என்று உறுதியுடன் கூற மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான் சீனு.

போட்ட திட்டத்தின் படி அனைவரும் அந்த அம்மாவின் வீட்டை நோக்கி செல்ல நக்ஷத்ராவோ திரும்பி விக்கியை பார்த்து "டேய் அந்த அம்மா வீட்டுல இல்லைல..!!" என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டி கேட்ட "ம்ச்...!! என்ன நக்க்ஷத்ரா, அதான் நான் சொல்லுறேன்ல. என் மேலை நம்பிக்கை இல்லையா..?? அந்த வீட்டுல அந்த அம்மா இல்லவே இல்லை...!!" என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாய் அவன் சொல்ல நிம்மதியுற்ற நக்க்ஷத்ராவோ மெல்ல அந்த வீட்டில் முன் நிறுத்தபட்டிருந்த வெள்ளை நிற காரை நேக்கி அந்த வானரப்படையுடன் சென்றாள்.

காரை நெருங்கியவள் அந்த வெள்ளை நிற காரை கண்கள் மின்ன பார்த்தபடி "டேய் வெப்பென்ஸ் எல்லாம் ரெடியா இருக்கா..??" என்று வினவ..

அதை கேட்ட அனைவரும் ஒரே நேரத்தில் "எல்லாம் ரெடியா இருக்கு..!!" என்றனர் கோரசாய்..

அதை கேட்டு திருப்தியுற்றவள் " பாய்ஸ்..அட்டாக்...!!" என்று இருகைகளையும் அந்த காரை நோக்கி நீட்டி சொல்ல.

அவ்வளவு தான் கையில் இருந்த வெப்பென்சுடன் அந்த காரை நோக்கி பாய்ந்திருந்தனர் அந்த வாண்டுகள்.

அவர்கள் செய்யவதை எல்லாம் சிறுபுன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவள் இடையிடையே "கமான் பாய்ஸ்... அப்படி தான், மிஷன் கரெட்டா போகிட்டு இருக்கு. விடாதிங்க..!!" என்று அவர்களிடம் கூறியபடி அவர்களை போலவே தன்னிடம் இருந்த வெப்பனை கொண்டு அந்த காரை தாக்கினாள்.

எல்லாம் சரியாய் தான் சென்று கொண்டிருந்தது ஆனால் திடீர் என்று "வாட் தி ஹெல் இஸ் திஸ்...!!" கணீர் என்ற ஒரு பெண் குரல் சீற்றமாய் கேட்க.

அதில் அனைவருக்கும் சட்டென்று தூக்கி வாரி போட கையில் வைத்திருந்த வெப்பென்சான 'கிரையாண்ஸ்.. பென்சில்.. ஸ்கெச்..' போன்றவற்றை பதட்டத்தில் கீழே போட நக்க்ஷத்ராவோ அருகில் பேய் அறைந்தது போல நின்று கொண்டிருந்த வாண்டுகளை பார்த்து பல்லை கடித்தபடி மெல்ல "டேய் எவன் டா அது..!! அந்த அம்மா வீட்டுல இல்லைனு சொன்னது..!!" என்று ரகசிய குரலில் கேட்க.

விக்கி என்பவனோ தொடை நடுங்க "யாக்கா.. அவங்க வீடு பூட்டி தான் கா இருந்திச்சு. அதை வச்சு தான் க்கா அவங்க வீட்டுல அந்த அம்மா இல்லைனு நான் சொன்னேன். ஆனா அவங்க இப்படி திடீர்னு வருவாங்கனு நான் எதிர்பாக்கலை...!!" என்று சொல்ல

"அடப்போடா..!!" என்று பல்லை கடித்த நக்க்ஷத்ரா ஒரு அசட்டு புன்னகையுடன் அந்த அம்மாவின் புறம் திருப்பி "ஹி..ஹி.. ஹாய் ஆண்டி..!!" என்று சொல்ல அவரோ இவளை உக்ரமாக முறைத்தபடி "என் காரை என்ன பண்ணி வச்சிருக்கீங்க நீங்க..!!" என்று வெள்ளை நிறத்தில் இருந்த தன் கார் இப்போது இவர்களின் கிறுக்கலால் அலங்கோலமாய் இருந்ததை சுட்டிக்காட்டி கேட்க..

சட்டென்று சமாளிக்கும் வழி அறியாத அவளோ "பி.. ப்பிரீ பெய்ன்டிங் ஆன்டி...! ப்பிரீ பெய்ன்டிங்..!!" என்று மனசாட்சியே இல்லாமல் சொல்ல.

அவ்வளவு தான் அந்த பெண் மணி கண்டமேனிக்கு கத்த தொடங்கி விட்டார்.

அவரை சாமதானம் படுத்தும் வழி தெரியாமல் முளித்த நக்க்ஷத்ராவோ மனதில் "இப்படியே போனா சரிவராதே..!!" என்று யோசித்தபடி திரும்ப அங்கோ அந்த பெண்மணியை பார்த்து நடுங்கிக்கொண்டிருந்த வாண்டுகள் இவள் கண்ணுக்கு பட்டார்கள். அதை பார்த்து கண்கள் மின்ன "எப்பவும் போல இவனுங்களை மாட்டி விட்டுட்டு நம்ம எஸ்கேப் ஆகிட வேண்டியது தான்..!!" என்று சந்தோஷமாய் எண்ணியபடி அந்த பெண்மணி புறம் திரும்ப..

இவளது முகத்தில் நொடிநேரம் வந்து போன சந்தோஷத்தை பார்த்து துணுக்குற்ற சீணு அவளை முந்திக்கொண்டு அந்த பெண் மணியிடம் "சாரி ஆண்டி..!! நாங்க சொல்ல சொல்ல கேக்காம நக்க்ஷத்ரா அக்கா தான் இப்படி பண்ண சொன்னாங்க..!! நாங்க எவ்வளவோ சொன்னோம் வேண்டாம்னு ஆனா அதை கேக்காத நக்க்ஷத்ரா அக்கா நீங்க இதை பண்ணி தான் ஆகணும்னு அப்படினு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டாங்க...!!" என்றவன் திரும்பி தன் நண்பர்களை பார்த்து "இல்லை டா...!!!" என்று இழுக்க "ஆமா ஆன்டி நக்க்ஷத்ரா அக்கா தான் எங்களை இப்படி பண்ண சொல்லி கம்பெல் பண்ணாங்க..!!" என்று கோரசாக பதில் சொன்னது அந்த வாண்டுகள் கூட்டம்.

அதை பார்த்து அதிர்ந்த நக்ஷத்ரா நெஞ்சில் கைவைத்தபடி "அடப்பாவி துரோகிகளா..!!" என்பது போல அவர்களை ஒரு லுக்கு விட. அதை சிறிதும் கண்டுகொள்ளாத அந்த வாண்டுகள் அந்த பெண்மணியை பாவமாக பார்த்துக்கொண்டு "சாரி ஆண்டி.." என்றனர் அதே போல கோரசாய்..

அவ்வளவு தான் அந்த பெண்மணியின் மொத்த கோபமும் இப்போது நக்ஷத்ராவின் புறம் திரும்பியது "ஹௌ டேர் யூ..!!" என்று ஆரம்பித்தவர் நான் ஸ்டாப்பாக அவளை திட்ட அவரது ஒவ்வொரு திட்டுகளுக்கும் அருகில் நின்ற வாண்டுகளை முறைத்தவள் மனதிலோ "இதுக்கு உங்களை பழி வாங்காம விட மாட்டேன் டா..!!" என்று உறுதியாக எண்ணினாள்.

அவளை திட்டியதோடு நிற்காத அந்த பெண்மணி அவளது வீட்டிற்கு சென்று அவள் அன்னையிடம் வேறு வத்தி வைக்க..

அதை கேட்டு நக்க்ஷத்ராவை சும்மா விடுவாரா கமலா அவ்வளவு தான் அடி பெண்டை நிமிர்த்தி விட்டார்..

அவரது ஒவ்வரு அடிக்கும் "ஐயோ அம்மா வலிக்குது..!! அடிக்காத..!!" என்று கதறியபடி அந்த வீட்டை சுற்றி ஓடியவளை துரத்தி துரத்தி அடித்து அவளது அன்னை என்று நிறுபித்தார் கமலா.

அந்த நாள் நக்ஷத்ராவுக்கு மிக மோசமாய் அமைந்தது..

இரவு வீடு திரும்பி தந்தையிடம் சென்று அவள் புகார் வாசிக்க மனைவியை மெல்லமாய் கடிந்து கொண்ட ரமேஷ் மனைவி அடித்ததின் பயனாய் தடித்து கிடந்த மகளது கைகளுக்கு எண்ணை இட்டார்.

கமலாவோ இது எப்போதும் நடப்பது தான் என்ற ரீதியால் அமைதியாய் தன் வேலையை செய்ய..

அன்று முழுவதும் அங்கு வலிக்கிது இங்கு வலிக்கிது என்று ரமேஷை தான் ஒரு வழி படுத்திவிட்டாள் நக்க்ஷத்ரா..

நாட்கள் இப்படியே சண்டையும் மகிழ்ச்சியுமாய் செல்ல..

அன்று காலேஜூக்கு சீக்கிரம் சென்ற நக்ஷத்ராவை வழியில் சந்தித்த பிரவீண் என்னும் அந்த காலேஜ் சீனியர் "உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் ஈவ்னிங் காலேஜ் கிரௌண்டுக்கு நீ மட்டும் தனியா வா..!!" என்று சொல்லி விட்டு சென்று விட.

உள்ளுக்குள் பட்டாம் பூச்சி பூத்தது நக்க்ஷத்ராவுக்கு. இதுவரை அவள் கடந்து வந்த நாட்களில் யாருமே அவளுக்கு புரோப்போஸ் செய்தது இல்லை. உடன் பயிலும் நண்பிகள் எல்லாம் கமிட்டாகி சுத்த நமக்கு எப்போது ஒருவன் புரோப்போஸ் செய்வான் என்று ஒரு வித எதிர்பார்ப்போடு காத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். டீனேஜ் வயதில் இந்த எதிர்பார்ப்புகள் இல்லாதவர் யவரும் உண்டோ..?? அதில் நக்ஷத்ரா மட்டும் விதிவிலக்கா என்ன..??

அன்று கிலாஸ்சில் முழுவதும் வண்ண வண்ண கனவுகளில் மிதந்தவள் மதியம் காலேஜ் விடும் சமயம் ஏதேதோ காரணங்களை சொல்லி அபினையாவை கழட்டி விட்டுவிட்டு ஒரு வித படபடப்புடன் அந்த காலேஸ் பின்னே இருந்த கிரௌண்டை நோக்கி செல்ல அங்கு இவளுக்காக காத்துக்கொண்டு நின்றான் பிரவீண்..

அவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்தவள் அவன் அருகே செல்ல.

அவனோ அவளை பார்த்து சிறு படபடப்புடன் "இதை நான் உன் கிட்ட எப்படி சொல்லுறதுனு தெரியல..?? ஆனா சொல்லாமலும் இருக்க முடியல..!" என்றவன் "அது.. நான் வந்து உன்.. அது..!!" என்று வார்த்தை வராமல் தயங்க.

அவன் தயக்கத்தை புரிந்த கொண்டவள் அவன் கையில் இருந்த காகிதத்தை சட்டென்று பிடுங்க.. "ஹேய்..!!" என்றபடி அவளை பார்த்தான் பிரவீண்.

அவளோ அவனை பார்த்து குறும்பாய் கண்சிமிட்டி விட்டு அந்த காகிதத்தை திரும்பி பார்க்க அதிலோ எதுவுமே எழுதபாடாமல் இருந்தது. அதை பார்த்து அதிர்ந்தவள் அதை மேலும் திருப்பி திருப்பி பார்க்க அதில் எதுவுமே எழுதபட்டிருக்கவில்லை .

அதில் அதிர்ந்தவள் அதே அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டு பார்த்து " என்ன இது, வெள்ளை பேப்பரா இருக்கு..!! ஒன்னுமே எழுதலை...!! அப்போ லவ் லெட்டர் எங்க..!!" என்று கேட்க.

அவனோ இவளது கேள்வியில் "ஙே..!!" என்று விழித்தான்.

"நீ என்ன சொல்லுற..!!" என்று புரியாமல் கேட்க.

"நீங்க என்னை லவ் பண்ணுறீங்க தானே.அப்புறம் லவ் லெட்டர் கொண்டு வராம வந்திருக்கீங்க..!!" என்று கேட்க

அவளது சொல்லை கேட்டு அதிர்ந்தவன் அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்தான்

தலை நிறைய எண்ணையுடன் நேர் கோடு எடுத்து அந்த குட்டி முடியில் இறுக்காமாக பின்னல் போட்டு விட்டிருக்க. இவள் அடிக்கடி தலை சொறிவதன் பயனால் சில முடிகள் கலைந்து அவள் முகத்தில் விழுந்து கிடக்க. அந்த மாநிறத்தில் இருந்த அவளது முகத்தை முகத்தை சுருக்கி பார்த்தவன்.

அவளை பார்த்து சட்டென்று "ஹேய்.. ஹேய்.. இந்தா பொண்ணு நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணலை. உன் பிரெண்ட் அபினையாவ தான் லவ் பண்ணுறேன். அவளை கரெக்ட் பண்ண உன் கிட்ட ஐடியா கேக்க உன்னை கூப்பிட்டா நீவேற புதுசா குண்டைத்தூக்கி போடுற..!!" என்று பயந்தபடி சொன்னவன்

அவளை பார்த்து "ம்கூம் இது சரிபட்டு வராதுடா சாமி..!! நானே உன் பிரெண்டு கிட்ட புரோப்போஸ் பண்ணி அவளை கரெக்ட் பண்ணிக்கிறேன்..!! ஆளை விடு மா..!!" என்று அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டவன் அந்த இடத்தில் இருந்து வேகமாக நகர்ந்திருத்தான்.

போகும் அவன் முதுகை நன்றாக முறைத்த நக்க்ஷத்ரா "போடா எருமை மாடு..!!" என்று வாய்விட்டு திட்ட. அச்சமயம் கொல்லென்ற சிரிப்பு சத்தம் அவள் காதை எட்டியது..

அதில் யார் அது என்பது போல் அவள் திரும்ப அங்கோ பால் வண்ணத்தில் தூய வெள்ளை நிற தோலுடன் வெளிநாட்டவன் போல ஒருவன் இவள் அருகில் சற்று தள்ளி இருந்த பெஞ்சில் அமர்ந்தபடி அவளை நோக்கி கைகாட்டி கைகாட்டி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தான்.

நக்க்ஷத்ராவுக்கு புரிந்து போனது இங்க நடந்ததை குறித்து தான் அவன் சிரிக்கிறான் என்று.

அதில் இப்போது மூக்கு விடைக்க கோபமாக அவன் அருகில் சென்றவள்.

"ஹேய் என்ன லந்தா..?? பார்க்க மைதா மாவை பிசைஞ்சு வச்சது போல இருந்திட்டு என்னை பார்த்து சிரிக்கிறியா நீ..!!" என்று கோபமாக வினவ.

அவனோ சிரிப்பை அடக்கமுடியாமல் நன்றாக சிரித்தபடி "சாரி..!! என்னால சிரிப்ப அடக்க முடியல..!!" என்று சொல்லிக்கொண்டே சிரிக்க..

தான் இவ்வளவு சொல்லியும் அவன் சிரிப்பதை பார்த்து மேலும் கோபமானவள் "இப்ப சிரிப்ப நிறுத்துவ பாரு..!!" என்று சொன்னபடி சட்டென்று குனிந்து அவன் கைகளை கிள்ள..


அங்கோ நோ ரியாக்ஷன்..!! அவன் பாட்டிற்கு சிரித்துக்கொண்டு தான் இருந்தான்.

அதை கண்டு "சுரணை கெட்ட ஜென்மம்..!!" என்று திட்டிய நக்க்ஷத்ரா..

அவனை பார்த்து உக்கிரமாக முறைத்தபடி நிற்க.

சிறிது நேரத்தில் தன் சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்த அவனோ அவளை பார்த்து மென் புன்னகையுடன் "சாரி...!! நான் சீக்கிரம் சிரிக்க மாட்டேன்..!! ஆனா சிரிச்சா சிரிப்பை நிறுத்த மாட்டேன்..! நீயும் அந்த பையனும் பேசுனதை பார்த்ததும் ரொம்ப சிரிப்பு வந்திடுச்சு அதான் சிரிப்ப நிறுத்த முடியல..!!" என்று சொல்லியபிடி அவளை பார்க்க.

அவளோ அவனை எரிச்சலுடன் பார்த்து "ஆமா நீ யாரு..?? இதுக்கு முன்ன உன்னை இந்த காலேஜூல நான் பார்த்தது இல்லையே..?? பார்க்க வெள்ளை காரனை போல வேற இருக்க ஆனா எங்களை போல நல்லா கிளியரா தமிழ் பேசுற" என்று சந்தேகமாக கேட்க..

அவனோ அவளை பார்த்து மென் புன்னகையுடன் " நான் ஷாக்கி திர்மேண்டர் ரயனா.!! (Shaaki thirmaender rayana) நான் ஒரு ஏலியன்..!! ரயனா கிரகத்துல இருந்து ஒரு புராஜெக்ட் விஷயமா உன் பூமிக்கு வந்திருக்கேன்...!!" என்று செல்ல.

இப்போது விழுந்து விழுந்த சிரிப்பது நக்க்ஷத்ராவின் முறையானது..

"யாரு நீ ஏலியனா..!! மைதாமாவுக்கு கைகால் முளைச்சது போல இருந்தா உன்னை ஏலியனுன்னு நம்பிடுவோமா..!! நான் எல்லாம் உன்னை விட பயங்கரமான கேடி..!! சின்ன வயசுலையே இதை விட பெரிய பெரிய பொய்யெல்லாம் சொல்லி நிறையபேரை ஏமாத்தியாச்சு..!! வேற யாராச்சும் இளிச்சவாயன் இருந்தா அவன் கிட்ட போய் உன் ரீலை எல்லாம் அவுத்து விடு.. எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்..!!" என்று சிரித்துக்கொண்டு நக்கலாக சொல்லி படி அவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க. அவளது உதடுகளோ "நக்ஷத்ராவா கொக்கா..!! ஏப்பிரல் மாசம் கூட ஏப்பிரல் ஃப்பூல் ஆக மாட்டா டா இந்த நக்ஷத்ரா..!!" என்று பெருமையுடன் முணுமுணுக்க அவளது காலோ அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது.

போகும் அவளை பார்த்து மெல்ல சிரித்த ஷாக்கி ஒரு முறை கண்களை மூடி திறக்க அவனது கண்களோ இப்போது நீல நிறத்தில் ஒளிர்ந்தது.

தூரத்தில் பேகும் அவளை குறிபார்த்து தன் ஒற்றை காலை எடுத்து முன்னே வைத்து நடக்க தொடங்க கண் இமைக்கும் நேரத்தில் அவள் முன்னே சென்று நின்றிருந்தான் அவன்.

அவன் இப்படி திடீர் என்று தன் முன்னே நிற்கவும் பயந்த நக்ஷத்ரா நெஞ்சில் கைவைத்த படி தன்னை ஆசுவாச படுத்த அவனோ அதை பார்த்து மென் சிரிப்புடன் "பயந்திட்டீயா என்ன..?" என்று கேட்க.

"வாயில நல்லா வந்திடும்..!! ஏண்டா வெள்ளைபயலே..!! இப்படி தான் சட்டுன்னு முன்னே வந்து நின்னு பயம்புறுத்துவியா..??" என்று கேட்டவள் தொடர்ந்து "நான் நடக்க ஆரம்பிச்சதும் என் பின்னாடியே நடந்தீயா..?? இப்படி சட்டுன்னு என் முன்ன வந்து நின்னா உன்னை ஏலியன்னு நம்பிடுவேனோனு நினைச்சியா..??" என்று அலட்சியமாக கேட்டவள் அவனை அழுத்தமாக பார்த்து "நெவெர்..!! இந்த நக்ஷத்ராவை யாராலையும் ஏமாத்த முடியாது..!! நீ போய் அந்த சைட் விளையாடு தம்பி..!!" என்று சொன்னபடி அவள் முன்னேற போக சட்டென்று அவளை நோக்கி தன் சுண்டு விரலை மேலே தூக்கி இருந்தான் ஷாக்கி...

அவ்வளவு தான் அடுத்த எட்டு எடுத்து வைக்க போன கால் அப்படியே நிற்க அந்திரத்தில் மிதக்கத்தொடங்கினாள் நக்க்ஷத்ரா...

முதலில் நடப்பது புரியாமல் முளித்தவளுக்கு அடுத்து தான் நான் அந்திரத்தில் மிதப்பது தெரிய.. பயந்து போனாள் பெண் அவள்..!!

அந்திரத்தில் இருந்த படி கைகாலை வேகமாக அசைத்தவள் "காப்பாத்துங்க..!! காப்பாத்துங்க..!!" என்று கதற.

அங்கோ ஒரு ஈ காக்கா கூட இல்லை அவளது குரலை கேட்க.

கத்தி கத்தி சோர்ந்து போனவள் மெல்ல கீழே குனிந்த பார்க்க அங்கோ இவளை பார்த்து அதே மென் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் ஷாக்கி..

அவனை பார்த்தவளோ "டேய் பக்கி காப்பாத்து டா..!! மடையா கீழே விழுந்திட போறேன். எனக்கு ஹைட்டின்னா வேற பயம்..!! எப்படி மேலை வந்தேன்னே தெரியல. காப்பாத்து டா பிளீஸ்..!!" என்று சொல்ல.

அவளை கூலாக ஏறிட்ட ஷாக்கி அதே புன்னகையுடன் "என்னை ஏலியன்னு ஒத்துக்கோ உன்னை இறக்கி விடுறேன்..!" என்று சொல்ல

இப்போது தான் மண்டையில் மணி அடித்தது நக்க்ஷத்ராவுக்கு..

"அடபாவி இதுக்கு நீயா காரணம்..!!" என்பது போல அவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள்.

பயத்துடன் அவனை ஏறிட்டு "ஏலியன் சார்..!! ஏலியன் சார்..!! நீங்க ஏலியன் தான்னு நான் ஒத்துக்கிறேன்..!! ஏதோ தெரியாம தப்பு செஞ்சிட்டேன்..! இந்த பச்சபுள்ளை மன்னிச்சு இறக்கி விட்டிடுங்க. அம்மா சத்தியம் உங்களை பத்தி யாருகிட்டையும் சொல்ல மாட்டேன்..!!" என்று சொல்ல.

அதில் தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்த ஷாக்கி.. தன் சுண்டு விரலை ஒரு சுழற்று சுழற்ற.. வானத்திலேயே சங்கு சக்கரம் போல சுத்திய நக்க்ஷத்ரா அவன் தறையை நோக்கி தன் சுண்டு விரலை காட்டவும் மெல்ல தறையில் வந்து இறங்கினாள்.

வேகமாக சுத்தியதன் பயனால் உலகமே தலைகீழாய் சற்றுவது போல அளுக்கு இருக்க ஒற்றை கைகொண்டு தன் தலையை அழுத்தி பிடித்தவள் ஒருமுறை கண்களை இறுக்க மூடி திறக்க.. சற்று தெளிந்தாள் அவள்..

அச்சமையம் அவள் அருகில் முட்டிக்கால் போட்டு உட்கார்ந்த ஷாக்கி அவளை பார்த்து "ஆர் யூ ஓகே..!!" என்று கேட்க.

"பண்ணுறதையும் பண்ணீட்டு பச்சபுள்ள போல கேக்குறது பாரு பன்னாடை..!!" என்று அவனை உள்ளுக்குள் சரமாறியாக திட்டியவள் ஏதோ பேயை கண்டது போல எழுந்து ஓட தொடங்க.

சிறிது தூரம் அவளை ஓடவிட்டவன் முன்னே செய்தது போல கண் இமைக்கும் நேரத்தில் அவள் முன்னே சென்று நிற்க அதில் தன்னை அதிர்ச்சியுடன் கண்கள் விரிய நேக்கி பார்த்தவளை நோக்கி குனிந்து "பான்னாடைனா என்ன அர்த்தம்..??"என்று புரியாமல் கண்களை சுருக்கி கேட்க.

உண்மையில் அரண்டு போன நக்க்ஷத்ரா அடுத்த நொடி அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தாள்..!!


மாய கண்ணன் வாருவான்..!!
 
Last edited:
Status
Not open for further replies.
Top