All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சந்தோஷியின் "என்னவள்(ன்) இனியவள்(ன்) - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே🙏 புதியவளாகவும் உங்களில் ஒருவராகவும் என்னையும் என் கதையும் உங்களுடன் சேர்ப்பதில் ஆவல் கொண்டு வருகிறேன்

"நல்லவையாக இருந்தால் பாராட்ட மறவாதீர்கள் தப்பு என தோன்றினால் தலையில் கூட்டவும் மறவாதீர்கள்"

என் கதையும் உங்கள் அன்பினால் ஆசீர்வதியுங்கள்
இதோ கதைக்கான தலைப்பு
" என்னவள்(ன்) இனியவள்(ன்)":smiley12:smiley12

தலைப்பிலேயே கதை எதை சார்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள் ஆம் காதல் சொல்லும் போதே சிலரது மனம் இனிமையான நினைவுகளையும், சிலரது மனம் நினைக்கக்கூடாது நினைவுகளையும் , தோற்றுவிக்கும். ஆம் இதுவே இந்த காதல் செய்யும் மாயம்
நம் கதையின்
நாயகி : ஹாசினி
நாயகன் : அர்ஜூன்

நாயகி நாயகன் பற்றி நினைத்துக்கொண்டே இருங்கள் காதலுடன் வருகிறேன் . உங்கள் கருத்துக்களை கவர :smiley15:

ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சுருங்க இது என்னோட முதல் கதை உங்களோட சப்போர்ட் எனக்கு ரொம்ப ரொம்ப தேவை:smiley16:
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஒவரா பண்ணாம கதையை படிக்கலா வாங்க :smiley14:

என்னவள் 1
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ...,
என திருச் சிற்றம்பலம் பாடி முடித்து தன் மகளை எழுப்பிக் கொண்டிருந்தால் மகி(அம்மா) ஹாசினி ஆபிசுக்கு ஒரு நாள் ஆச்சு நேரத்துக்கு போடி எழுந்துரு என அன்பொழுக மகளை அழைக்க அவளோ போ மகி எப்ப பாரு என்ன எழுப்பறதே உன் வேலை எனக்கூறி மறுபடியும் போர்வைக்குள் புகுந்து
கொண்டாள்.
நரேன் (அண்ணன்)
வாக்கிங் முடித்து வீட்டிற்கு வந்து அலுவலகத்துக்குப் புறப்படும் போது அண்ணா என்னையும் டிரப் பண்ணுவியா என கேட்டுக்கொண்டே டைனிங் டேபிள் மீது வந்தமர்ந்தாள் ஹாசினி (கோதுமை நிற மேனி கண்களிரண்டும் துருதுருவென அலை போன்ற கூந்தலை அள்ளி முடித்து அழகாய் மல்லிகை சூடி மயில் வண்ண புடவையில் அண்ணன் அருகில் வண்ணமயிலாய் அமர ஹாசினியின் அழகை அண்ணனாகவும், தந்தையாகவும் இருந்து பார்த்துக் கொண்டே சரி ட்ராப் பண்ணிடர டா அப்படின்னு சொன்னா நரேன் .

இரண்டு பிள்ளைகளின் பாசத்தையும் தந்தை(மாதவன்) இல்லாத குறையையும் நரேன் தீர்ப்பதை எண்ணி மகிழ்ந்தாள் மகி.

இவர்கள் மூவர் மட்டுமே இவர்களுக்கு உலகம் (இந்த உலகத்திலும் ஒருவன் ஊடுருவ போகிறான்)

அரக்கோணம் இவர்களது சொந்த ஊர் இருப்பினும் சென்னை குடிபெயர்ந்து 30 வருடங்கள் ஆயிற்று
ஹாசினி ஓசி வங்கியில் லோன் செக்ஷனில் டெலி கலராக பணிபுரிந்து வருகிறாள்.
நரேன் A.R நிறுவனத்தின் மேனேஜராக பணிபுரிகிறான்

தந்தை சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறக்க குடும்பமே ஒரு கடலில் மூழ்கி மீண்டும் எழுந்தது போல் உணர்ந்தனர்

வழக்கமான நாளாக செல்லும் என எதிர் பார்த்தவள் அவளின் வேலையில் கவனத்தை பதிக்க அவளது முதல் அழைப்பை தொடர்ந்தால் வணக்கும் சார் ஓசி வங்கியில் இருந்து ஹாசினி பேசுகிறேன் மிஸ்டர் அமுதன் இருக்காங்களா ...?
என கேள்வி எழுப்ப
மறுமுனையோ அறிவு இருக்கா உனக்கு, செய்ற வேலைய ஒழுங்கா செய்ய தெரியலைனா வேலை விட்டுட்டு போடி, அதை விட்டுட்டு உன்னோட இஷ்டத்துக்கு காலையில போன் பண்ணி அவ இருக்கானா, இவ இருக்கானா ,கேட்டுட்டு இருக்க வைடி போனை என்று சிங்கமாய் கர்ஜித்தான் அர்ஜுன்.

இரு குரலின் இதயமும் வேக துடிப்பில்
ஒன்று பயத்தில் :oops:
ஒன்று சினத்தில்😡
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த பகுதி திங்கள்கிழமை பதிவிடுற.:smiley5: கொஞ்சம் கருத்துக்களையும் தெரிவிச்சா சந்தோஷா படுவ 😬😬
படித்து like போட்ட எல்லாருக்கும் மிக்க நன்றி:smile1::smiley16:
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் 🙏🙏 சகோஸ்

இந்த முறை கொஞ்சம் பெரிய ud தான் போடற இது ஒகேவான்னு படிச்சிட்டு சொல்லுங்க😬😬

என்னவள் 2

அர்ஜுன் வீட்டின் கடைக்குட்டி, 😍😍வீட்டிற்கும் மட்டுமே கடைக்குட்டி. வெளியலோ சிங்கக்குட்டி. 😚😚

அர்ஜுன் ராமகிருஷ்ணன் மூன்றாவது மகன் மிகப்பெரிய தொழிலதிபர் நாடு முழுவதும் பரந்து விரிந்த கடல் போல அவர்களது தொழிலும் இருந்தது.

அர்ஜுனின் அண்ணன்கள் ஆகாஷ் மற்றும் அரவிந் திருமணம் முடிந்து வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
வருடத்திற்கு ஒருமுறை லட்சுமியையும்(அம்மா ), தந்தையையும் அர்ஜுனின் பிறந்தநாளுக்கு வந்து பார்த்து விட்டு செல்வார்கள் .

அர்ஜுனனுக்கு தந்தை தான் உலகம் .
எல்லாம் சிவமயம் போல அவனுக்கு எல்லாம் தந்தை தான் .

அன்று அவனின் கல்லூரி நண்பர்களை காண்பதற்காக சென்னையிலுள்ள ஒரு பிரபல மாலுக்குச் சென்றிருந்தான் அர்ஜுன் கூடவே அவனது P.A மற்றும் உண்மை தோழனான ஆராஅமுதனும் சொன்றிருந்தான்.

ஆரன் மற்ற நண்பர்களுடன் பேசி கொண்டே அவனது போனை அர்ஜுன் போன் பக்கத்தில் வைத்திருந்தான் போனை பார்த்த மற்ற நண்பர்கள் என்ன டா போன் மட்டும் தான் ஓரே மாடலா இல்ல ...., அப்படினு கிண்டல் செய்ய அனைவரும் சிரிப்பில் முழ்கினர்😂😂😂😂

ஆரன் பாத்ரூம் சென்றிருக்க அந்த நேரம் பார்த்து நமது ஆரனின் போன் ஓலிக்க அர்ஜூன் அவனோட போன் என நினைத்து அட்டன் செய்ய ஹாசினி ,அர்ஜுனிடம் அர்ச்சனை வாங்க வேண்டியதாயிற்று.

இங்கோ ஹாசினி என்ன நினைச்சுட்டு இருக்கான் என்ன சொல்ல போறனு கூட கேட்காமல் இஷ்டத்துக்கு திட்டிட்டு போன வச்சுட்டு போறேன் இடியட் . என நினைத்து காலையிலே கடுப்பானாள்.
பின்பு ஹாசினியும், அவளது தோழி ஜானுவும் கேண்டீன் சென்றனர். அவன்பாட்டுக்கு திட்டறா, ஃபுல் நேம் சொல்றதுக்குள்ள லூசு மாதிரி என புலம்பி கொண்டே இருக்க , யாருமா அந்த லூசு அப்படின்னு ஜானு கேட்க,...?
அதான் தெரியலையே டி...! 😒😒😒 என ஹாசினி கூற

ஜானு கலகலவென சிரிக்க 😂😂😂😂

என்ன இவள் இப்ப என்ன சொல்லிட்டனு இப்படி சிரிக்கான்னு பார்த்தா ஹாசினி ....?😳😳
ஐயோ....!
நான் தான் அவனைப் பற்றி லூசு மாதிரி உளறிட்டோம் போல. ....!

ஜானு போதும் நிறுத்துடி என சினுங்கினாள் ஹாசினி 😬😬

ஆமா கண் முன்னாடி அவன் தெரிஞ்சா என்ன பண்ணுவ ...?
என கேள்வி எழுப்பினாள் ஜானு

😁😁😁😁😁 என பல்லைக் காட்டிக்கொண்டு டைம் ஆச்சு ஜானு வா போகலாம் என ஹாசினி எழுந்துகொள்ள...,

சிரித்துக்கொண்டே இந்த ஹாசினக்கு என்ன ஆச்சு எவ்வளவு பேர்கிட்ட பேசியிருப்ப பதிலுக்கு இவளும் வெளுத்து வாங்குவா
இன்னிக்கு எஎன்னடான்னா அவ நேருல தெரியலன்னு வருத்தப்படறா என்ன ஆச்சு இவளுக்கு:smiley4::smiley4:அப்படின்னு நினைச்சிட்டே போனாள் ஜானு.

அவள் பேர் என்னமோ சொன்னாலே மைண்ட் வாய்ஸ்னு நினைச்சிட்டு சத்தமா கேட்டான் அர்ஜுன், ஆரன் அவனையே பார்க்க அர்ஜுன் போன் மாற்றி அட்டன் செய்து அந்த பெண்னை திட்டியது என நடந்த அனைத்தையும் கூறினார் .

சரி டா நீ எதுக்கு அவ பேரு கேட்கிற, இல்லடா வாய்ஸ் பார்த்தா சின்ன பொண்ணுன்னு தோணுது நான் வேற கன்னாபின்னான்னு திட்டிட்ட அதா ஒரு சாரி கேட்க நினைக்கிறேன் என்று சொல்லி முடித்தான்.

அர்ஜுனை வித்தியாசமான பார்வை பார்த்தான் ஆரன்.:smiley4::smiley4:

நேர்த்தியாக வெட்டப்பட்ட தலைமுடி திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய அளவுக்கு இருப்பான் இவனை மாதிரி ஹாண்ட்சம் நம்ம பாய் ஃப்ரெண்டா வர கூடாதான்னு நினைக்கிற அழகும் இருக்கும். இவன் படிச்ச ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஒன்லி பாய்ஸ் இருக்க மாதிரி அதனால தானோ பொண்ணுங்க மேல பெரிசா இன்ட்ரஸ்ட் இல்ல, அதுக்காக பொண்ணுங்கள வெறுக்கக்கூடியவனும் இல்லை.

இப்படி பொண்ணுங்க கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றவ சடன்லி டூ மினிட்ஸ் பேசின பொண்ணுக்காக இப்படி வருத்தப்படரானே ,எப்படி பார்த்தாலும் நம்ம அர்ஜுன் கேரக்டருக்கு இது செட்டாகாது அப்படின்னு அர்ஜுனை பற்றி பல ஆங்கிள்ள யோசித்தான், சரி என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் அப்படின்னு அமைதியாகிவிட்டான் ஆரன்🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

நெஞ்சங்கள் இரண்டு தனிதனியே :smiley12:smiley12
நித்தமும் ஓரே சிந்தனையில்
:smiley14::smiley14:
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோஸ்😍😍
மன்னிக்கவும் கொஞ்சம் இல்லை நிறைய வேலை அதான் லேட்டா வந்து இருக்க 😆😆😆


என்னவள் 3


இந்த விஷயம் நடந்து இரண்டு நாளுக்கு மேல ஆயிடுச்சு ஆனாலும் எதையோ மிஸ் பண்ண மாதிரி இருந்தாள் 😔😔😔 ஹாசினி.

நரேன் மற்றும் மகி கூட கேட்டுட்டாங்க என்னடா டல்லா இருக்க உடம்பு எதாச்சும் முடியலையா , ஆபிஸ் வேணும்னா 2 நாள் லீவ் போடுறியானு ஆனால் அதெல்லாம் ஒன்னும் இல்ல மகிம்மா ஐம் ஓகே.😊😊😊
என கூறி மகியின் கண்ணத்தில் ஒரு முத்தம்😘😘😘 கொடுத்துட்டு ரூம்க்கு போயிட்டா ஹாசினி.

மகியோ தன் மகனிடம் ஆரம்பித்தால் அப்பவே சொன்ன இந்த வேலை வேண்டா ஹாசினி போன் பண்ற நேரம் அவங்க அவங்க என்ன மனநிலையில இருப்பாங்களோன்னு , அப்படி யாராச்சும் எதனா சொல்லி இருப்பாங்க, அதான் ஹாசினி இப்படி இருக்கா .


அவ ஆசைப்பட்டன்னு நீயும் இந்த வேலைக்கு ஓகே சொல்லிட்டு இப்ப பாரு புள்ள எப்படி இருக்கா எதையோ பறிகொடுத்த மாதிரி அப்படின்னு புலம்பிதள்ள சரி விடும்மா நம்ம ஜானு கிட்ட என்னனு கேட்டுக்கலாம் அப்படின்னு சொல்லி அந்த பேச்சை முடித்தான் நரேன்

(நம்ம ஜானுவா என நரேனின் எண்ணத்தை அவன் வார்த்தையில் அறிந்தால் மகி.🥰🥰 )

ஜானு வீட்டின் ஒரே மகள்👸🏻👸🏻 ,கந்தன், வசந்தியின் பலவருட வேண்டுதலுக்கு பிறகு கிடைத்த பொக்கிஷம்.

ஜானுவும் ஹாசினியும் இரண்டு வருடமாக தோழிகள்.

ஹாசினி முதல்முறையாக வங்கியில் சேரும்போது ஜானு தான் ஹாசினிக்கு டிரெய்னர்.


வயது வித்தியாசம் அதிகம் இல்லாததால் இருவரும் நல்ல தோழிகளாக மாறினர்.

ஞாயிறு அன்று ஜானுவின் பிறந்தநாள் ஹாசினியின் வற்புறுத்தலினால் முதன் முறையாக ஹாசினியின் வீட்டிற்கு சென்றாள் ஜானு.

தோல் வரை வெட்டப்பட்ட முடியினை free hair விட்டு வானத்தின் நீல நிறத்தில் நட்சத்திரம் இருப்பது போன்ற வெள்ளைக் கல் பதித்த புடவை கட்டிக்கொண்டு போனால் ஜானு.

ஜானுவை கண்ட ஹாசினியும் வா ஜானு இன்னிக்கு செம அழகா இருக்க வா வா அண்ணா இவள் ஜானு சொல்லி இருக்கல என சொல்லி கொண்டே வீட்டினுள்ளே அழைத்து வந்தால் ஹாசினி .

ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த நரேன் , அருகில் ஹாசினி அருகில் இருப்பதையும் மறந்து ஜானுவை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் என்ன அழகு என மனதில் எண்ணி கொண்டே இருந்தான் நரேன் . (நரேனின் எண்ணத்தை கலைக்கும் விதமாக ),அண்ணா இன்னிக்கு இவள் பர்த்டே டின்னருக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன் .வர மாட்டன்னு சொன்ன ரொம்ப கஷ்ட பட்டு பேசி கூட்டின்னு வந்து இருக்க .


நீங்க பேசிட்டு இருங்க அம்மாவை கூட்டிட்டு வரேன்னு கிச்சன் சென்றாள் ஹாசினி.

ஏன் ஜானு இந்த மிடில் கிளாஸ் வீட்டில எல்லாம் வந்து வாழ முடியாதா என ஓரே சொல்லில் தன் காதலை கூறிவிட்டான்.🌹🌹

இதை சற்றும் எதிர்பாராத ஜானுவிற்கு முகம் முழுக்க வியர்க்க😱😱😱 , ஜானு பதில் சொல்லுவதற்கு முன் , ஹாசினியும், மகியும் ஹாலிற்கு வருவதை பார்த்த நரேன் ஜானுவை பார்த்து கண் அடித்துவிட்டு, அப்புறம் எவ்வளவு நாளை இந்த பேங்க் வேலை செய்யறிங்க, என பொதுவா பேச ஜானு பதில் எதும் சொல்லது திருத்திரு என முழித்து கொண்டுருந்தால், 😳😳😳😳

மகி வந்து வாமா ஜானு எப்படி இருக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா எப்பவும் இப்படி சந்தோசமா இருக்கனும் என ஆசிர்வாதம் செய்தால்🥰🥰


ஓஓ,,,, இன்னிக்கி நம்மா டார்ஜிலிங்க்கு பர்த்டேல எதாச்சும் ப்ரெசென்ட் பண்ணணுமே என நினைத்து கொண்டு இருக்க

உன் பிரன்ட் பர்த்டேக்கு கிப்ட் வாங்கிட்டயா என நரேன் கேட்க அச்சோ இல்லை அண்ணா மறந்துட்ட சரி வா உன் பிரண்ட் அம்மா கூட பேசிட்டு இருக்கட்டும் நாம போய் வாங்கிட்டு வரலாம் என கூறி ஹாசினியும் நரேனும் கடை வீதி சென்றனர். 🚶‍♀️🚶‍♀️🚶🚶🚶 அண்ணா என்ன கிப்ட் வாங்களம் நல்லா ஒரு புடவை வாங்களாம்னு சொல்லிக்கொண்டே நரேன் ஒரு ஜவுளி கடைக்கு சென்றனர்.

நரேனுக்கு பச்சை கலர்💚💚 பிடிக்கும், பச்சை நிறத்தில் சிகப்பு பார்டர் வைத்த ஒரு பட்டு புடவையை தேர்ந்தெடுத்தான் நரேன்..


அண்ணா உன் செலக்ஷன் எப்பவுமே சூப்பர் தான் என அண்ணனை மெச்சி கொண்டால் ஹாஷினி. ☺☺

இருவரும் வீட்டுக்கு செல்ல மதிய உணவு நேரத்திற்கும் சரியாக இருந்தது, எவ்வளவு நேரம் பா, சரி சீக்கிரம் வாங்க சாப்பிடலாம் என மகி கூற அன்னைவரும் பொதுவாக பேசி கொண்டே சாப்பிட்டாலும் ஜானுவின் கண்கள் அவளை அறியாமலே நரேனை பார்க்க சொல்லியது. 😉😉😉

மாலை நேரம் நெருங்கவும் சரி ஆண்ட்டி நான் களம்புற டைம் ஆச்சு என சொல்லி கொண்டு இருந்தால் ஜானு, சரிம்மா பத்திரமா போய்ட்டு வா என மகி கூற, இந்தா ஜானு புடவை என் அண்ணா செலக்ஷன் சூப்பரா இருக்கும் வீட்ல போய் பாரு.


ஒன்ஸ் அகைன் விஷ் யூ மெனி மோர் ஹாப்பி பர்த்டே என கூறி கன்னத்தில் முத்தமிட்டால் ஹாசினி. 😘😘😘


நரேனோ அந்த முத்தமிட்ட கன்னத்தை பார்த்து ஒரு கண் அடித்தான், 😉😉அதை கண்ட ஜானுவின் முகமோ வெட்கத்தால் சிவந்தது😍😍😍

,நரேனும் அருகில் வந்து ஹாப்பி பார்த் டே என கை குலுக்கினான்


சிறிய தலை அசைப்புடன் முகம் சிவக்க விடைபெற்றாள் ஜானு.


தோழியை காரணம் கொண்டு அடிக்கடி வீட்டிற்கு வந்தால் ஜானு
அப்படியே நரேன் ஜானுவின் காதலும் ஒரு வருடமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது யாருமறியாமல்💕💕💕


காதலின் உள்ளே ஓரு சிறு காதல் 😘😘😘😘
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் 😍😍😍 வாரத்துல ஓரு ud தான் போடா முடிது சகோஸ்
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ் 😬😬😬😬

இந்த முறை கண்டிப்பா பெரிய ud தான் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிடுங்க சகோஸ்

என்னவள் 4

ஏன் ஆரா அப்புறம் அந்த பொண்ணு , அதான் டா பேங்க்ல இருந்து போன் பண்ணலா அப்படினு இந்த 2 நாளில் பல முறை கேட்டுட்டா அர்ஜுன். 😍😍

போன் பண்ண கண்டிப்பா சொல்ற அர்ஜுன் ஆமா எந்த பேங்க்குனு கேக்கலையா,

இல்லை ஆரா நான் தான் அவளை பேச விடாம போன் கட் பண்ணிட்டனே என்று தன் புலம்பலை தொடர்ந்தான் அர்ஜுன் 😏😏😏

ஜானுவோ எத்தனை முறை சொல்ற எதுக்குடி இப்படி இருக்க, ஒருத்தன் திட்டிட்டா அவ கிடக்குறானு வேலைய பாருடி, அதை விட்டுட்டு இப்படி பீலிங்க கொற்ற, என்னால முடில உன் மூஞ்ச இப்படி பாக்க என பொறிந்து தள்ளினாள் ஜானு. 😡😡😡


(ஜானு பேசினதை கேட்ட ஹாசினி முகம் ரொம்பவே டல் ஆயிடுச்சி 😔😔😔😔)
ஹாசிம்மா நீ இப்படி இருந்த எனக்கு கஷ்டமா இருக்குடி அதான் இப்படி பேசிட்டே சாரிடி 🙅🙅🙅🙅 செல்லம் என மனதார தன் தோழிக்காக வருந்தினால் ஜானு

சரி ஓகே உன் கம்பியூட்டர்ல இருந்து அந்த போன் நம்பர் டீடெயில்ஸ் குடு நான் பேசுற, என ஹாசினியிடம் கேட்டால்,

விடு ஜானு பரவாயில்லை என்று ஹாசினி உதடு கூறினாலும், அவளது கை தானாகவே அந்த நம்பர் பத்தின டீடெயில்ஸ் கொடுத்தது, ஓரு சிறிய புன்னகையுடன் நம்பரை வாங்கி கொண்டால் ஜானு 😊😊😊

ஜானுவும் நம்பரை வாங்கி கொண்டு ஆரனின் எண்ணிற்கு டயல் செய்தால் முழு ரிங் போனது ஆனால் அட்டன் செய்யவில்லை☎☎,

மறுபடியும் முயற்சி செய்ய ஆரன் போனை அட்டன் செய்தான். 😴😴😴

வணக்கம் சொல்லுக யார் வேணும் என ஆரன் பேச மறுமுனையில் வணக்கம் சார் என் பெயர் ஜானு, நான் ஓசி பேங்க்ல இருந்து பேசுறன்.

Mr. ஆராஅமுதன் இருக்காங்களா சார...?
ஆமாம் நான் தான் பேசுற சொல்லுக,


சார் நீங்க ஹோம் லோன் அப்ளை பண்ணி இருக்கீங்க, அதை பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்றதுக்காக 2 நாள் முன்னாடி என் பிரண்ட் கால் பண்ணியிருந்தா ஆனால்,


நீங்க பிஸியா இருந்தா அப்புறம் பேசுகனு சொல்லி போனை வைச்சி இருக்கனும், அதை விட்டுட்டு உங்க இஷ்டத்துக்கு திட்டி இருக்கீங்க,

ஒருத்தர் போன் பண்ணா எதுக்கு பண்ணாங்கனு சொல்றத்துக்கு முன்னாடி இப்படி திட்டினா பேசறவங்க பீல் பண்ண மாட்டாங்களா அதுவும் என் பிரண்ட் ரொம்பவே சாப்ட் கேரக்டர்,😊😊 அவளை போய் இப்படி திட்டி இருக்கீங்க ரெண்டு நாளா ஒரே அழுக😂😂😂


(நான் எப்படி அழுத ஏன்டி இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க என ஹாஷினி ஜானு தலையில் குட்ட 🙆🙆🙆 தலையை தடவி கொண்டே )

ஏன் சார் இப்படி பண்ணிங்கண்ணு மூச்சி வாங்க பேசி முடித்தால் ஜானு,😴😴😴😴

அவள் பேசி முடிக்கும் வரை பொறுமை காத்தான் ஆரன் 🤫🤫🤫🤫



மேடம் பேசி முடிச்சிட்டீங்களா என ஒரு சின்ன சிரிப்புடன் கேட்க, 😊😊

எஸ் சார் என பதிலளித்தாள் ஜானு.

சாரி மேம் உங்க பிரண்ட் கால் பண்ணும் போது என்னோட போனை தவறுதலா என் பிரண்ட் அட்டென்ட் பண்ணிட்டா,

அவன் அப்டி திட்ட காரணம் இருக்குங்க (மனசுக்குள்ள ஜானு புடலங்கா காரணம் சொல்ல போற இதுக்கு இவ்ளோ பில்டப் வேற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️)

நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் லாங் டைம்க்கு அப்புறம் ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணி ஜாலியா ஹாப்பி மைண்ட்ல இருந்தோம், அந்த டைம்ல

உங்க பிரண்ட் கால் பண்ணி இருக்காங்க அவன் கஸ்டமர் கேர் கால்னு நெனைச்சி திட்டிட்டா,

ஆனால் அவனும் ஒரு பொண்ண இப்படி திட்டிட்டனு ரொம்ப பீல் பண்ண,




உங்க பிரண்ட்கிட்ட கூட சாரி சொல்லணும்னு சொல்லிட்டே இருந்தா,

இந்த நம்பர்க்கு கூட மறுபடியும் கால் பண்ண ட்ரை பண்ணோம் பட் ரீச் ஆகல


ஓஓஓஓ என ரகமிழுத்தால் ஜானு 😜😜


உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா நாளைக்கு பத்து மணிக்கு கால் பன்றிங்களா மேம்,

ஏன்னா இப்போ என் பிரண்ட் பக்கத்துல இல்லை, இருந்து இருந்தா கண்டிப்பா உங்க பிரண்ட்கிட்ட சாரி சொல்லி இருப்பா ,



மேம் கால் பண்ணுவீங்களா என சந்தேகமாக கேட்க 🤔🤔🤔🤔

பண்ணுவோம் சார் என ஜானு பதிலளித்தால்


ஆரனோ மேம் ஒரு நிமிஷம் உங்க பிரண்ட் நேம் தெரிஞ்சிக்கலாமா


அவ பேரு ஹாசினி சார் நாளைக்கு கால் பண்ணுவா அப்டியே உங்க வீட்டு லோன் பத்தின டீடெயில்ஸ் கேப்பா அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க சார்.



ஓகே கண்டிப்பா சொல்ற மேம்

ஓகே தேங்க் யூ சார் என போனை வைக்க

ஓகே மேம் தேங்க் யூ சோ மச்🙏🙏 என ஆரனும் போனை வைத்தான்

ஜானு கால் பண்ணும் போது 5 மணி,

அப்போ அர்ஜின் ஒரு மீட்டிங்கிற்காக நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தான்.

ஆஃபிஸில் உள்ள வேலையை ஆரனை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றிருந்தான், மீட்டிங் முடியும் நேரம் ஆரனுக்கு தெரியும் என்பதால் இந்த பேங்க் கால் விஷயத்தை சொல்ல காத்திருந்தான் ஆரன்.



8.5க்கு அர்ஜூனுக்கு போன் செய்தான்

ஹலோ பாஸ் மீட்டிங் சக்ஸஸ் தானே என கேட்க சக்ஸஸ் தான் ஆரா, இந்த அர்ஜூன் நேம் ஓட முதல் எழுத்து எப்படி பஸ்ட்ல இருக்கோ அதே மாதிரி தான் ஆரா இந்த தொழிலிலும் நான் இருப்ப எப்பவும் அப்டினு அர்ஜூன் சொல்லும் போது அவனின் குரலிலும் விழுந்த வார்த்தைகளிலும் அப்படி ஓரு கம்பீரம் 🦁🦁

சரிங்க ஆரன் சார் உங்களுக்கு எத்தனை முறை சொல்றது பாஸ்னு கூப்பிடாத அர்ஜுனு கூப்பிடுனு கேக்கவே மாட்டியாடா

இந்த ஓரு விஷயம் மட்டும் நான் இப்டியே இருக்க அர்ஜூன் ப்ளீஸ்.


சரி சரி உடனே ஆரம்பித்துடாதே
கால் பண்ண விஷயம் பத்தி சொல்லு ஆரா என்று அர்ஜூன் கேட்டதுக்கு பிறகு தான் ஆரானுக்கு எதுக்கு கால் பண்ணினோம்னு நியாபகம் வந்தது


ஆமா அர்ஜூன் சொல்ல வந்ததையே மறந்துட்டா (பர்சனல் பேசும் போது பாஸ் என கூப்பிட மாட்டான் ஆரன் )
அதான் நீ ரெண்டு நாளா கேட்டுட்டு இருந்த கால் வந்துடுச்சி பட் அந்த பெண்னோட பிரண்ட் தான் பேசின நானு பேசின அந்த பொண்ணு ரெண்டு நாளா ரொம்பவே பீல் பண்ணிட்டே இருக்கலாம் நானும் நடந்ததை எல்லாம் சொல்லி ,
நாளைக்கு 10 மணிக்கு போன் பண்ணுங்க என் பிரண்ட் கண்டிப்பா சாரி கேப்பானு சொல்லி இருக்க ஓகே தானே அர்ஜூன்

ஓகே தான் ஆரா அந்த பொண்ணு பேரு என்னனு கேட்டியா


ஹ்ம்ம் கேட்ட ஹாசினினு சொன்னாங்க அர்ஜூன்

ஓகே மார்னிங் ஆபீஸ்ல பார்க்கலாம் ஆரா சீ யூ என கூறி இருவரும் போனை வைத்தனர்


ஹாசினி ஸ்மைலி கேர்ள் போல அதான் அவங்க வீட்ல இந்த நேம் வச்சி இருப்பாக என மனதுக்குள் நினைத்து கொண்டே தனது காரை கிளப்பினான், 🚘🚘🚘🚘

மெலடி சாங்ஸ் கேட்டு கொண்டே பயணிக்க

இந்த ஓரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது,
இந்த பாடலின் வரிகள் ஹனிக்காக நான் இப்படி இருப்பனா, இல்லை ஹனி நமக்காக இப்படி இருப்பாளா என எண்ணி கொண்டே நாளைக்கு ஹனி கிட்ட ஒழுங்கா பேசணும் எதையும் சொதப்ப கூடாது என்று பல முறை பேசி கொண்டே வீட்டை அடைந்தான். ( ஹாசினி ஹனி ஆகிட்டா நம்ம ஹீரோக்கு 🥰🥰🥰🥰 )

லட்சுமி வா அர்ஜூன் வந்து சாப்பிடுப்பா என கூற இல்லாம வெளில ஓரு மீட்டிங் அங்கையே சாப்ட்டாச்சி, நீங்க சாப்டிங்களாமா, நானும் அப்பவும் சாப்பிட்டோம் பா உனக்காக தான் வெயிட் பன்னிட்டு இருந்த

ஓகே மா நீங்களும் போய் படுங்க நானும் ரூமக்கு போறான்னு சொல்லிட்டு போய்ட்டா,

அழகும், அறிவுமா இருக்க பிள்ளைக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு அன்னைக்கே உரிய கவலையோடு அவளது அறைக்கு சென்றால் லட்சுமி


அறைக்கு வந்தவன் அப்படியே கட்டிலில் விழுந்தான் மறுபடியும் அவனவளிடம் எப்படி பேச வேண்டும் என ரிகர்சல் பார்த்து கொண்டே உறங்கியும் போனானான் 😵😵

ஜானுவும் ஹாசினிடம் நடந்ததை எல்லாம் கூறி முடித்தால்,


ஹாசினியோ அவன் பேரு என்னனு கேட்டியா ஜானு, அச்சோ சாரி ஹாசிம்மா அதை மறந்துட்ட🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அதான் நாளைக்கு கால் பண்ண போறல அப்போ கேட்டுக்கோடி செல்லம் என ஹாசினியிடம் ஜானு கொஞ்சிட்டு இருந்தா

ஆனால் ஹாசினியோ அதை எல்லாம் கவனிக்க நேரம் இல்லாமல்

ஓகே நான் களம்புற ஜானும்மா என சொல்லிட்டு வீட்டுக்கு சென்றால்.

மகியுடனும், நரேனுடனும் சிறிது நேரம் பேசிட்டே, டின்னெர் முடிச்சிட்டு அவளோட ரூம்க்கு வந்து கண்ணாடி முன்னாடி நின்றாள், கண்ணாடி முன் அவளது மறு பிம்பமான மனசும் வந்துச்சி 🤩🤩🤩

உடனே ஸ்டார்ட் தி மியூசிக் மாறி, அவளது மூளைக்கும், மனதிற்குள்ளும் எழும் கேள்விகளுடன் சண்டை போட தொடங்கினாள்👊👊👊

ஹலோ ஹசி மேடம் ஒருத்தர் உங்கள திட்டினா உங்களுக்கு என்ன வந்துச்சி பதிலுக்கு திட்டிட்டு போக வேண்டியது தானே அதை விட்டுட்டு எதுக்கு இப்படி இருக்கீங்க என மூளை கேள்வி கேட்க....????


மனமோ அப்படி இருக்க தான் நினைக்குறேன் ஆனால் முடியலை எதோ உயிரோட பழகினவா திட்டினா மனசு வலிக்கும்ல அப்படி தான் எனக்கு வலிக்குது அதான் கஷ்டமா இருக்க உன் வேலைய பாரு என மனசு மூளைக்கு கட்டளையிட்டது.

எப்படின்னா போ நான் போறன்னு மனசாட்சி ஓடி அவளுக்குள் ஒளிஞ்சிடுச்சி,


ஒரு வழியாக நாளைக்கு அவன்கிட்ட பேச போறோம் அவன் பேரு என்னவா இருக்கு இப்படி நெனைச்சி நெனச்சி விடியலை எண்ணி பயணமானாள் ஹாசினி

காலையில் லேட்டா எழுந்துக்குற ஹாசினி 9 மணிக்கு கிளம்ப வேண்டியவ 8 மணிக்கே ரெடி ஆகி உக்காந்துட்டு அண்ணா ஏன் இவ்ளோ லேட் பண்ற , சீக்கிரம் வர மாட்டிய என கத்த , வந்துட்ட ஹாசினி அதிசயமா ஓரு நாள் சீக்கிரம் ரெடி ஆயிட்டு நீ பண்ற அலப்பறை முடிலம்மா😀😀😀

என நரேன் கிண்டல் செய்ய மகியும் சிரிக்க அப்போது தான் நேரத்தை பார்த்த ஹாசினி ஈஈஈஈஈ😬😬😬😬 8 தா ஆகுதா சாரிஈஈஈ 😬😬😬😬 என ரகமிழுக்க

சரி விடு டா பரவால்ல நீ இப்படி இருந்தாலே போதும் எங்களுக்கு

சரி என ஹாசினியும் நரேனும் கிளம்பினாங்க

இங்க இப்படி அங்க என்ன நடக்குது பாக்கலாம் வாங்க

ஹாசினிக்கு ஆப்போச்சிட்ட நம்ம அர்ஜூன் இன்னு எந்திரிக்கவே இல்லை 😂😂😂


மணி 9.30 ஆயிடுச்சி ஆரானும் அர்ஜுனை தான் எதிர் பார்த்துட்டு இருந்தான் (ஆரா அர்ஜுனுக்கு ஓரு போனை போடுப்பா நம்ம மைண்ட் வாய்ஸ் ஆச்சி கேக்குதா பார்க்கலாம் 🤫🤫🤫)


எப்படியோ கேட்டுச்சி போல 😴😴😴

அர்ஜூன்க்கு போன் செய்தான் அர்ஜூனும் போனை அட்டென்ட் செய்து என்ன ஆரா இவ்ளோ சீக்கிரம் போன் பண்ற எனிதிங் ப்ரோப்லம் என கேட்க

பாஸ் உங்களுக்கு என்ன ஆச்சி டைம் 9.30 என சொன்னது தான் தாமதம்

வாட் 😱😱😱 இதோ 20 மினிட்ஸ்ல வந்துடுவ ஆரா தேங்க்ஸ் டா கால் பண்ணதுக்கு பை என்று போனை வைச்சிட்டு


குளிச்சானானு அவனுக்கே தெரில அவ லைப்ல முதல் முறையா இப்படி ஓரு குளியலை போட்டுட்டு

ஹாலில் இருந்தா லட்சுமியிடம் ம்மா களம்புற டிபன் நான் ஆஃபிஸ்ல பத்துக்குற என்று அன்னையின் பதிலை எதிர் பாராது ஆபீஸ்க்கு புறப்பட்டான்.

நம்ம ஹாசினி அர்ஜுனோட நிலமை தெரியாம ஷார்ப்பா 10 மணிக்கு ஆரானுக்கு போன் பண்ணிட்டா 😳😳

ஆரானோ போனை அட்டனெட் பண்ணவா வேணாமா அர்ஜூன் வேற இன்னிக்குன்னு பாத்து இப்படி சொதப்புரானே அப்படினு நினைச்சிட்டு போனை அட்டென்ட் பண்ணிட்டா


ஹாசினியும் ஹாப்பியா பேச ஸ்டார்ட் பண்ணா

ஹாப்பி மார்னிங் சார் மிஸ்டர் ஆராஅமுதன் இருக்காங்களா

எஸ் மேம் நான் தான் சொல்லுங்க என்று பேசி கொண்டிருக்க,

சென்னை ட்ராபிக் பத்தி கேக்கவா வேணும் அர்ஜூன் 10.5 க்கு தான் ஆபீஸ் உள்ளவே ரீச் ஆனான்,





அர்ஜுனின் நடை சும்மாவே மின்னல் வேகத்துல இருக்கும் இப்ப கேக்கவா வேணும் 😂😂😂

ஆஃபிஸில் உள்ள ஒவ்வருவரும் குட் மார்னிங் சார் , குட் மார்னிங் சார் என்க அனைவருக்கும் ஓரு சிறிய
புன்னகையுடன், தலையசைப்பையும் செலுத்திவிட்டு அவனது கேபினுள் நுழைய ஆரனும் பேசி கொண்டிருக்க, ஆரா ஸ்பீக்கர்ல போடு என சொல்ல ஆரனும் அர்ஜுன் சொல்லியதை செய்தான்

ஆரன் வீட்டு லோன் பத்தி பேசி முடித்ததும் அமைதி ஆனால்

ஆரனே முதலில் மேம் என் பிரண்ட் உங்க கிட்ட சாரி சொல்லுணுமா இதோ இருக்கா அவன்கிட்ட குடுக்குற கொஞ்சம் பேசுறீங்களா

ம்ம்ம் குடுங்க என ஹாசினி சொல்லியதும் போனை அர்ஜுனிடம் குடுத்துட்டு நாகரிகமா வெளிய சென்றான் ஆரன்.

இருவரும் ஒரே நேரத்தில் ஹலோ என்க இருவரும் ஓரு சின்ன சிரிப்புடன் பேச ஆரம்பிக்க

அர்ஜுனோ ஐ அம் ரியலி சாரி அன்னிக்கு உங்கள பேச விடாம திட்டிட்ட எஸ்ட்ரீம்லி சாரி என கூறினான்,

ஹாசினியும் ஐ அம் ஆல்சோ சாரி நானும் புள் நேம் சொல்லாம பேசிட்டே

இட்ஸ் ஓகே ஹனி😍😍😍 சாரி ஹாசினி 😬😬😬

ஓகே பை என அர்ஜூன் சொல்லியதும் என்ன ஆச்சினு ஒன்னும் புரியல ஹாசினிக்கு ஏன் சார் என்ன ஆச்சி என்று கேட்கவும்

ஹாஹா ஹா 😁😁😁😁 என்று அர்ஜூன் சிரிக்கவும் மறுபடியும் முழித்தால் ஹாசினி 😳😳😳😳( பின்ன இவன் என்ன அவளோட லவ்ரா எதுக்கு போனை வைக்கறன்னு சொன்ன ஓகே சொல்லாம கேள்வி கேக்குற😂😂😂)

மிஸ் ஹாசினி சாரி சொல்ல நினைச்ச சொல்லிட்ட வேற என்ன பேசணும்னு உள்ள சிரிச்சிட்டே கேள்வி கேட்டான் அர்ஜூன்

இதுக்கு என்ன பதில் சொல்றது தெரியாம


ஆமால வேற என்ன பேசணும் சார் சார் ஒரு நிமிஷம் உங்க பேரு தெரிஞ்சிக்கலாமா என்று ஆர்வம் கொண்டு கேட்டக (என் ஸ்வீட்டிக்கு இன்னு பேரே theruyatha😍😍)

அர்ஜூன் இட்ஸ் மை நேம்

அர்ஜூன் நைஸ் நேம் சார் 🥰

தேங்க் யூ ஹாசினி 😘

ஓகே அஜூ தேங்க் யூ என கூறி போனை வைக்க போனால் ஹாசினி,

ஹலோ ஹாசினி என்ன நேம் சொன்ன சொல்லு

ஸ்ஸ்ஸ்ஸ் என நாக்கை கடித்து கொண்டு சாரி என்றால்

பரவாயில்ல நீ சொன்னதை சொல்லு ஹாசினி

அது வந்து சார் அஜூனு சொன்ன ஈஈஈஈ 😬😬😬😬


அர்ஜுனுக்கோ ரெக்கை கட்டி பறக்காத குறை தான் 😍😍😍

வேகமா அர்ஜூன் ஹாசினி நான் சொல்றத நோட் பண்ணு என்று அர்ஜூன் சொன்னதும்

பேப்பர் பென்னை எடுத்து கொண்டு சொல்லுக என்றால் (சார் என கூறுவதை தவிர்த்து )


80152_____ என்று அவனது போன் நம்பரை குடுத்துட்டு டேக் கேர் ஹனி என்று கூறி போனை வைத்துவிட்டான் அர்ஜூன். 😍😍


நித்தமும் இனி உன் நினைவே என்னை மொத்தமாய் ஆட்கொள்ளுமோ என இரு உள்ளங்களிலும் ஒரே எண்ணம்
 
Last edited:

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley5::smiley5::smiley5:
🙏🙏மன்னிச்சிடுங்க நேரம் இல்லை
அதான் லேட் சகோஸ் படிச்சிட்டு உங்க கருத்துக்களை ப்ளீஸ் தவறாமல் போடுங்க அப்ப தான் என் தப்பை சரி பண்ணிக்க முடியும் 😍😍😍😍😍

என்னவள் 5

திருதிருவென முழித்து கொண்டே இருந்தால், ஆச்சர்யம் எப்படி ரியாக்ஷன் பண்றதுனு அவளுக்கே ஒன்னும் புரியல :smiley60::smiley60::smiley60:
நம்பர் குடுத்தான்னு சந்தோச பட்றதா😍😍 இல்லை நம்மல தப்பான கேரக்டர்னு முடிவு பண்ணி நம்பர் குடுத்து இருப்பானோ ......???🤔🤔🤔

இப்படி பல கேள்வி குழப்பம், ஹனினு கூப்பிட்டான் பாசமா இருக்குமோ அதுக்குள்ள எப்படி பாசம் 🤔🤔🤔

(நீயும் தாண்டி அஜுன்னு கூப்பிட்டனு மனசாட்சி மைண்ட் வாய்ஸ் குடுக்க நீ உள்ள போனு அதை அடக்கினால் ஹாசினி 😜😜😜😜)


போதும் ஹாசினி யோசிக்காத வேலைய பாருன்னு அவளே அவளுக்கு புத்தி சொல்லிட,

அவன் நம்பர் குடுத்த விஷயத்தை ஜானுவிடம் சொன்னதும் கலாய்க்க ஆரம்பிச்சுட்டா, நீ என்னடான்னா அவன் திட்டினானு பீல் பண்ற,

அவன் என்னடான்னா ஹனினு கூப்பிட்டு நம்பர் குடுத்துட்டான்னு சொல்ற என்னடி நடக்குது.....?

ஹே அவன் இவன்னு சொல்லாத ஜானு, அர்ஜூன் அவங்க பேரு என்று ஹாசினி கூறியதும்,

அடிப்பாவி அதுக்குள்ள இவ்ளோ சப்போர்ட்டா 🤭

இல்லை ஜானும்மா ஒரு மரியாதைக்கு

ஹே ஹாசினி.,,, நான் ஏன் அர்ஜூன்க்கு மரியாதை தரணும், உன் அம்மா ,, அண்ணாக்கு இந்த மாதிரி விஷயம் எல்லாம் பிடிக்குமானு யோசிச்சு பண்ணு அப்டினு தோழியின் நலனனை மனதில் நிறுத்தி பேசினால் ஜானு 🤨🤨🤨
அதுலயும் உன் அண்ணா ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் என்று சொல்லி உள்ளூர சிரித்து கொண்டால் ஜானு 😍😍😍

எற்கனவே நிறைய குழப்பம் இதுல அண்ணனை பத்தி வேற நியாபகம் படுத்திட்டு போய்ட்டா இந்த ஜானு

மறுபடியும் யோசிச்சிட்டே வேலைய செய்யவா வேணாமான்னு வேலைய செய்துட்டு இருந்தா , இதுவரை வேலை செய்யும் போது ஹாசினியை இவ்வாறு பார்க்காத அவளது லோன் செக்ஷன் மேனேஜர் சந்துரு,

ஹாய் ஹஸ் வாட் ஹப்பெண்ட் டு யூ...?
ஆர் யூ ஓகே..? ☺☺☺

Yeah ஐ அம் ஓகே சார், லைட்டா தலைவலி அதான்


Ohhhh லீவ் எதாச்சும் வேணுமா ஹஸ்

நோ சார் ஐ அம் ஓகே,,, ஐ வில் மேனேஜ்

ஓகே ஹஸ் டேக் கேர் ஆப் யுவர் ஹெல்த் சீ யூ 👋👋👋👋

ஓகே சார் 😴😴😴😴
இவனுக்கு வேற வேலை இல்லை வந்துடுற லூசு என திட்டி தீர்த்தால் ஹாசினி

இந்த சந்துரு கொஞ்சம் வழிஞ்சல் அதுவும் நம்ம ஹாசினி கிட்ட கொஞ்சம் அதிகமா வழிஞ்சி, வாங்கியும் கட்டிப்பான் 😂😂😂😂

ஒரு வழியா ஹாசினி வேலைய முடிச்சிட்டு ஜானும்மா கிளம்புறடி நீ கிளம்பலையா

இல்லை ஹாசினி இன்னு ஹாப் அன் ஹௌர் ஆகும் நீ கிளம்பு, அப்புறம் தேவை இல்லாம யோசிக்காத டேக் கேர் நாளைக்கு பாக்கலாம் என்று ஜானு கூறியதை கேட்டு கொண்டு ஓகே ஜானு சீ யூ 👋👋👋 என கூறி வீட்டுக்கு கிளம்பினாள் ஹாசினி.


வீட்டுக்கு வந்து சோபாவில் அமர்ந்த உடனே இந்தா ஹாசினி என கையில் காபி மற்றும் பஜ்ஜியை
திணித்தாள் மகி தேங்க்ஸ்ம்மா, என்று அதை டேபிள் மீது வைத்துவிட்டு முகம் கழுவி கொண்டு ஏதோ யோசனையில் காபியையும், பஜ்ஜியையும் உண்டு முடிக்க,

நரேன் வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது, எப்படா வந்த ஹாசினி


இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சிண்ணா

ஓகே டா

ம்மா ஒரு காபி என சொன்னது தான் தாமதம் உடனே கையில் காபி டம்ளரை நீட்டினாள் மகி,,,, அம்மான அம்மா தான் தேங்க்ஸ்மா என்று அம்மாவை மெச்சிகொண்டு இருக்க,,

இவை எதிலும் கலக்காமல் அமைதியாகவே இருந்தால் ஹாசினி,,
அவளை கண்ட நரேன் என்னடா மார்னிங் நல்லா ஹாப்பியா கிளம்பி போன

இப்போ எந்த கோட்டைய பிடிக்க இப்படி யோசிக்குற ஹாசினி,

நத்திங்ண்ணா ஆபீஸ்ல வேலை லைட்டா தலைவலி வேற,

வேற ஒன்னும் இல்லை இப்போ தான் காபி குடிச்ச கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்


சரி ஹாசினி ரூம்க்கு போய்ட்டு கொஞ்சம் தூங்கு சரியா போய்டும் என்று கூறினான் நரேன்,

சரின்னு ரூம்ல போய் படுத்து கொண்டால், ஹாசினி

மறுபடியும் அர்ஜுனை பற்றி எண்ணி கொண்டே உறங்கியும் போனால் ஹாசினி 😴😴😴😴😴😴😴

இவை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தால் மகி🤨🤨🤨


என்னம்மா சைலன்ட்டா இருக்கீங்க ஒன்னும் இல்லைப்பா நீயும் ரெஸ்ட் எடு நான் போய் டின்னெர் ரெடி பன்னிட்டு கூப்பிட்ற ஓகேம்மா

நரேன் ரூம்க்கு வந்து பிரெஷ் ஆன உடன் போனை கையில் எடுத்து டார்ஜிலிங் என்ற எண்ணிற்கு அழைப்பை விடுக்க 🙂🙂🙂

இவன் அழைப்பை எதிர் பார்த்து காத்திருப்பது போல உடனே அழைப்பை ஏர்த்தால் ஜானு 😍😍😍

சொல்லுங்க என பேச

என்ன டார்ஜிலிங் பண்ற 😍😍

இப்போ தான் வந்தப்பா , சொல்லு என்ன விஷயம் இப்போ கால் பண்ணி இருக்க

சரியா கண்டுபிடிச்சிட்ட அதான் என் டார்ஜிலிங் 😁😁😁😁

சரிப்பா சொல்லு

என்ன ஆபீஸ்ல
எதாச்சும் ப்ரோப்லமா டி ஹாசினி நாலு நாளா ஒரு மாதிரி இருக்க அதான் உங்கிட்ட கேக்கலாம்னு கால் பண்ண 😉😉😉😉
ஓஓஓஓ அதான் சார் கால் பண்ணி இருக்கீங்க நான் கூட எதோ இந்த ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் போன் பன்றாரே அதிசயமானு நினைச்ச

என்னடி இப்படி சொல்லிட்ட

பின்ன வேற எப்படி டா சொல்ல சொல்ற என்கிட்ட நீ பேசி 2 வீக் ஆகுது தெரியுமா 😔😔😔

ஆபீஸ்ல வேலை கொஞ்சம் அதிகம்டி அதா நீ இந்த சண்டே வீட்டுக்கு வா பார்க்கணும் போல இருக்கு டார்ஜிலிங் 😍😍😍😍😍😍

சரி சரி வர இப்படி சொல்லியே என் வாயை மூடிடு 🤩🤩🤩

இது வரைக்கும் உன் வாயை நான் மூடினது இல்லையே என இரட்டை அர்த்தம் பேச 🤩🤩🤩🤩🤩🤩

போதும் போதும் நான் அப்புறம் பேசறப்பா 🥰🥰🥰


ஹே நான் கேட்டதுக்கு அன்ஸர்
பண்ணவே இல்லையே ஹாசினிக்கு என்ன ஆச்சி

அது ஒன்னும் இல்லப்பா ஆபீஸ்ல ஒர்க் அதிகம் அதான் அப்டி இருக்க நான் பாத்துக்க மாட்டானா அவள🤨🤨🤨

ஓகே ஓகே உடனே சண்டைக்கு வராத சண்டே வீட்டுக்கு வந்துடு போனை வைக்கவா

ம்ம்ம் சரி சீ யூ 😘😘😘😘 என்று கூறி போனை வைத்தால் ஜானு

இங்கோ அர்ஜுனுக்கு தலை கால் புரியல என்ன பன்றது அவள் அஜுன்னு கூப்பிட்டதே இவனுக்கி i love you னு சொல்லிட்ட மாதிரி ஐயாக்கு குஷி 😍😍😍😍😍😍

அர்ஜுனோட மனசோ நீ தானே அர்ஜூன் இது ஒரு பொண்ணு கிட்ட நீயா வழியுற என்ன டா ஆச்சி உனக்கு காதல் வந்துடுச்சா , நீ வெறும் வாய்ஸ்க்கே இப்படி மயங்குற ஆளா நீ , எத்தனை பொண்ணு உன் கிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு வாங்கி கட்டினு போய் இருக்காங்க நீ என்னடானா அசிங்கம் இல்லையா அர்ஜூன் 😂😂😂😂 என்று மனசாட்சி சிரிக்க

போதும் போதும் நிறுத்து விட்ட பேசிட்டு இருப்ப இவள் எனக்கானவனு தோணுது உனக்கு தெரியும்ல என்ன பத்தி , நான் நெனைச்சத செய்றவன், இவளே எனக்கான என்னவள் புரிஞ்சிக்கோ இல்லனா அமைதியா வேடிக்கை மட்டும் பாரு, இப்படி இடையில வந்து தொல்லை பண்ணாம இரு அது போதும் எனக்கு 😡😡😡😡😡

என்று மனசாட்சியை அடக்கிவிட்டு மறுபடியும் காதல் கொண்ட மனம் 💞💞
அவனின் அவளை பற்றி எண்ணலானான்

நம்மல பற்றி அவளும் ஏதோ நினைச்சிட்டு இருந்துட்டு இருக்கா, எப்படி நான் அர்ஜூன்னு பேரு சொன்னதும் அழகா அஜுன்னு கூப்பிட்டாளே,, மை ஹனி 💕💕💕


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்


பாடலை முணுமுணுத்தான் அர்ஜூன் அப்போது ஆரன் அர்ஜூன் கேபினுள் நுழைய இந்த அர்ஜுனை பார்க்கவே ஆரனுக்கு அதிசயமா இருந்துச்சி

முகத்தில் ஒரு வித தேஜஸ் லவ் வந்தா பசங்க முகம் கூட அழகு கூடும் போல அர்ஜூன் என்று அர்ஜுனை கிண்டல் செய்து கொண்டே உள்ளே நுழைந்தான்

எப்போதும் முகத்தில் ஒரு விதமான இறுக்கம் , ஒரு வெற்றியை நோக்கி இருக்கும் ஒரு வித வெறி, தொழிலில் எதிரிகளை தூர ஓட விடும் திறமை, எதிலும் முதலான அர்ஜுன் இதுவரை ஆரன் பார்த்திடாத அர்ஜூன் ,

நண்பனை இப்படி பார்க்க ஆரனுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது 🥰🥰



அர்ஜுனும் ஆரனிடம் எதையும் மறக்காமல் கூற ஓகே பட் அந்த பொண்ணு அழகா இல்லனா எப்படி டா அர்ஜூன் என்ற கேள்வியை கேட்டான் ஆரன்

என்ன ஆரா இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட என்ன பத்தி தெரிஞ்ச நீயே எப்படி இப்படி கேக்கலாம்,, நான் ஒரு முடிவு எடுத்தா அதுல இருந்து பின் வாங்க மாட்டேன்னு உனக்கு தெரியும்ல பிசினெஸ்லயே நான் அப்படினா அப்போ லைப்ல எடுக்குற முடிவு மாறுமா ஆரா
எப்படி இருந்தாலும் அவள் என்னவள் தான் டா எனக்கே எனக்கானவள்
அர்ஜூன் சொல்லும் போதே அந்த வார்த்தையில் அவ்வளவு உறுதி தெரிந்தது ஆரனுக்கு 🤭🤭🤭🤭

ஓகே அர்ஜூன் சாரி டா 😔😔

இட்ஸ் ஓகே ஆரா நான் வீட்டுக்கு கிளம்புற 😴😴😴

ஓகே அர்ஜூன் 👋👋👋

அர்ஜுனும் வீட்டுக்கு ரொம்பவே ஜாலி மூட்ல கிளம்பி போனா, பிரெஷ் ஆயிட்டு லட்சுமியை அழைக்க மாம் சாப்பிடலாமா வாடா கண்ணா, காலையில சொல்றது கூட கேக்காம ஒடின இப்போ என்ன ஐஸ் வைக்க வந்து இருக்க,

மாம் அப்படி எல்லாம் எதும் இல்லை, மார்னிங் லேட் ஆயிடுச்சி மாம் சாரி மாம்

சாரி எல்லாம் வேணாடா எப்படி டா லேட்டா எழுந்த ஸ்கூல்க்கு கூட லேட் பண்ணாத என் பிள்ளை லேட்டா ஆயிடுச்சுனு சொல்றது அதிசயமா இருக்கு டா 🙂🙂🙂

அது மட்டுமா இவ்ளோ நேரம் நான் சொல்றது எல்லாம் பொறுமையா கேட்டுனு இருக்க

சரி என்ன சொல்லணும் சொல்லுக மாம் என்று சிறிய புன்னகையுடன் கூறினான் அர்ஜூன்

என்னடா ஆச்சி உனக்கு இப்படி எல்லாம் பேச மாட்டியே என்று மறுபடியும் லட்சுமி கிண்டல் செய்ய


மாம் இப்போ பேசணும்னு ஆசைபடுறீங்களா இல்லை நான் ரூம்க்கு போகவா

சரி சரி பேசற டா கண்ணா நீயே பெர்மிஸ்ஸன் குடுத்துட்ட சோ மிஸ் பண்ணாம பேசிடரா

அதுக்குள்ள அர்ஜூன் சாப்பிட்டு முடிக்க இருவரும் சோபாவில் அமர்ந்தனர்

மாம் மடில படுத்துக்கவா படுத்துக்கோ டா கண்ணா என்று கூறி மெதுவாக அர்ஜுனின் தலையை வருடி கொண்டே பேச ஆரம்பித்தாள் லட்சுமி

உனக்கு 29 முடிஞ்சி 30 வயசு ஆரம்பிக்க போது உன் கல்யாண பேச்சை எடுத்தாலே வேணா வேணானு சொல்ற , நீ எங்க செல்ல பிள்ளை, எங்க கூடவே இருக்க பிள்ளை , உன் கல்யாணத்த பாக்க ஆசை இருக்காதா

சரிங்க மாம் கொஞ்ச நாள் இருங்க கண்டிப்பா நானே உங்களுக்கு சொல்ற,,

இவ்வாறு மடியில் இருக்கும் அர்ஜுனை பார்க்க 5 வயது பிள்ளையாய் உறங்கிய நினைவுகள் லட்சுமியின் நெஞ்சில் நிழலாடியது


ராதாகிருஷ்ணன் வந்து என்ன சொல்ற உன் பையன்

மெதுவா பேசுங்க பாவம் பிள்ளை பிசினெஸ் பிசினெஸ்னு கடிவளம் இட்ட குதிரையா ஓடுற , இன்னைக்கு தான் என்னமோ அவன் முகத்துல ஒரு சந்தோசம் தெரியுது நீங்க போங்க நான் வந்து படுக்குற அப்புறம்

சரி லட்சுமி நீயும் உடம்ப கெடுத்துக்காத சீக்கிரம் வந்து படுனு சொல்லிட்டு நகர்ந்தார் ராமகிருஷ்ணன்

விடிய சில மணி நேரங்களே இருக்கும் அப்போது தான் அம்மாவின் மடியில் இவ்வளவு நேரம் உறங்கி விட்டதை உணர்ந்தான் மாம் என்ன எழுப்ப கூடாத சாரி மாம் உங்கள கஷ்ட படுத்திட்ட என்று கோபமாக தொடங்கி அக்கறையில் முடித்தான் அர்ஜூன்,

இருக்கட்டும் டா கண்ணா தூங்குற பிள்ளைய எந்த அம்மாவது எழுப்ப நெனைப்பாங்களா

Ok மாம் நானும் போய் படுக்குற நீங்களும் போய் தூங்குங்க என்று அன்னையை அனுப்பி விட்டு அவனும் அவனது அறைக்கு சென்றான்.


யாருக்காகவும் நான் காத்திருக்க மாட்டேன் என சூரியன் தன்னை வெளிகொணர

அர்ஜுனும் நேற்றைய நாளை எண்ணி சிறிது புன்னகையுடன் ஆபீஸிற்க்கு அவனது அம்மாவிடம் கூறிவிட்டு கிளம்பினான், இன்று முக்கியமானா மீட்டிங் சோ சீக்கிரம் கிளம்பினா தான் போக முடியும்னு கிளம்பினான் அர்ஜூன்


அவனது வேகத்திற்க்கு ஈடு கொடுப்பேனா என்று கார் சீறி பாய்ந்து சென்றது

அதே வேகம் சற்றும் குறையாமல் சடன் பிரேக் போட்டு நின்றது அர்ஜுனின் கார் 😍😍😍

அவன் கண்ணில் வைலட் நிறத்தில் வெள்ளை பூக்களை வாரி இறைத்தது போன்ற சல்வாரில் 💜💜💜 பின்னி பூ சூடிய கூந்தலை பின்னாடி தூக்கி போட்டுட்டு,,

என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ ராஸ்கல் என்று ஒரு ஆணின் கன்னத்தில் பளார் என்று அறைந்து இருந்தால் நம்ம ஹாசினி🤭🤭🤭🤭

"பூவுக்குள்ளும் பூகம்பம் உண்டு "

என்று அர்ஜுனின் வாய் தானாக முணுமுணுத்தது 😊😊

இந்த காலத்து பொண்னுங்க ரொம்பவே தைரியமா இருந்தாலும் சில ஆண்கள் இப்படி தான் அவங்கள விடாம துரத்துறாங்க என்று பெண்களுக்காக அவனது மனம் பரிந்துரை செய்தது 😉😉😉

ஆனால் நாம திட்டினத்துக்கே என் ஹனி அழுததா சொன்னாங்க அவளுக்கு கோவம் எல்லாம் வருமா 😆😆😆😆😆
(அடிச்சது யார்னு தெரிஞ்சி இருந்தா இந்த சந்தேகம் வந்து இருக்குமா நம்ம ஹீரோக்கு 🤣🤣🤣🤣🤣🤣)
நம்பர் குடுத்து இன்னும் ஒரு மெசேஜ் கூட பண்ணல நம்மள பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கானே தெரியலையே 😴😴😴 இருந்தாலும் நான் கொஞ்சம் ஓவரா தான் பண்றனோ (அது இன்னும் உனக்கு புரியலயாப்பா ராசா 😆😆😆😆🤣🤣🤣)

தலையை அழுந்த கோதி கொண்டு மீட்டிங்கிற்கு நேரமாவதால் மறுபடியும் சீறி பாய்ந்தது அவனது வாகனம் 💕💕💕💕


கேட்டேன் உன் குரலை கேள்விகள் ஆயிரம் தோன்றுதடி என்னுள் என்னுள் எழும் கேள்விகள் உன்னுள்ளும் தோன்றுமோ என் இனியவளே:smiley14::smiley14::smiley14:
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோஸ் மன்னிக்கவும் 😔😔 திடீர் திடீர்னு வெளிய போக வேண்டிய வேலை வந்துடுது கண்டிப்பா இன்னைக்கு நைட்க்குள்ள ud போடற:smiley6:
 
Status
Not open for further replies.
Top