All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சக்தியின் "வரங்களே ஸ்வரங்களாய்...!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்.. நான் உங்களுடைய அனு... இன்று முதல் சக்தி என்ற பெயரில் உங்களை எழுத்தாளராக தொல்லை செய்யப் போகிறேன். நீயுமான்னு நீங்க முணுமுணுக்கறது எனக்குக் கேட்குது பட் வேற வழியில்லை... என்னோட தொல்லையையும் நீங்க தாங்கித்தான் ஆகனும். நான் கேட்டதும் மறுக்காமல் உடனே கதைத்திரியை அமைத்துக்கொடுத்த ஸ்ரீமாக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
என்னோட கதையின் தலைப்பு இது தான்..

"வரங்களே ஸ்வரங்களாய்..!"

குடும்ப கதை தான். திரியை ஆரம்பித்த நாளை கொண்டாடும் வகையில்இன்று ஒரு டீசரையும்... அடுத்து புத்தாண்டு அன்றைக்கு இரண்டாவது டீசரையும்... பொங்கலன்று முதல் அத்தியாயத்தையும் தருகிறேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை லைக்ஸ் மூலமாகவும் கமெண்ட் மூலமாகவும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ்.🙏🙏🙏🙏😍😘😘😘😘😘❣❣❣❣
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருக வருக மருமகளே... இன்று துவங்கும் உங்கள் எழுத்துப்பணி என்றென்றும் இனிமையாய் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மருமகளே 💐:smiley35::welcome::smiley35:💐💐💐💐🌹🌹🌹🌹❣❣❣❣❣
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் -1
அவனின் கண்ணில் தெரிந்த வலியை கண்டு அவனை அணைத்து ஆறுதல் படுத்தியவள்..
“ புரிஞ்சுக்கோங்க. நான் ரொம்ப யோசிச்சி நிதானமா தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன் இதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லதென்று கூறியவளிடமிருந்து வெடுக்கென்று எழுந்தவன்...

“அவளின் முகம் காண பிடிக்காமல் என்னை விட்டுப் போவதில் அப்படி என்னடி உனக்கு பிடிவாதம்..?” என்று மன வலியுடன் கேட்டவனை பின்னிருந்து இறுக அணைத்து..

“ நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணுங்க! அதுவும் உங்க மூலமா தான் இருக்கணும் உங்க குழந்தையை நான் எப்படி எல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கேன் தெரியுமா?! அதுக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளரக்கவும் என்னால ஒத்துக்க முடியாதுங்க.. அதுபோல யார் யாருக்கோ இதுக்கு முன்னாடி காசுக்காக குழந்தை பெத்து குடுக்கரவங்ககிட்ட எல்லாம் நம்ம வாரிசு வரக்கூடாது!” என்றவளை என்ன சொல்லி புரியவைப்பது என்பதுபோல் பார்த்திருந்தவன்

தன் முதுகின் பின்புறம் கட்டி அணைத்து இருந்தவளை முன்புறமாக இழுத்து அவளின் முகத்தில் தன் இரு கைகளாலும் தாங்கி

“ என்னை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்க உன்னால முடியுமா?! நீ சொன்ன மாதிரி நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த குழந்தை உன் குழந்தையா இருக்காது வேறு ஒருத்தி குழந்தையா தான் இருக்கும் உன்னால சொந்தம் கொண்டாட முடியாது அந்த குழந்தையை கொஞ்சவும் முடியாது இது எல்லாத்துக்கும் மேல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது பரவாயில்லையா?!” என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டவனுக்கு சற்றும் யோசிக்காமல்.

“எனக்கு எப்போ உங்க வாழ்க்கையில இன்னொரு பொண்ண கூட்டிட்டு வரணும் நினைச்சேனோ அப்பவே இதபத்தி எல்லாம் நான் தெளிவா யோசிச்சிட்டேன்.. இனிமே யோசிக்கிறது ஒண்ணுமே இல்ல நீங்க தான் உங்க முடிவு சொல்லணும் இந்த வாழ்க்கையிலிருந்து நான் நிரந்தரமாக பிரிஞ்சிடுறேன்” என்று கூறியவளை அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை அறைந்து இருந்தான் ராணா பிரதாப்.

“சே..! இது என்ன மாதிரிப் பிடிவாதம்டி கடைசியில நீ பண்ணது தப்புன்னு புரியும்போது உன் வாழ்க்கை உன் கையில் இருக்காது இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ எப்ப நீ குழந்தை தான் முக்கியம் நான் வேணான்னு சொன்னியோ அப்பவே மனசு வெறுத்துப் போச்சு.. ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கோ சொல்ற ரைட்ஸ் உனக்கு கிடையாது” என்று ஆக்ரோஷமாக கத்திய ராணாவை பார்த்த நந்தினி .
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருக வருக மருமகளே... இன்று துவங்கும் உங்கள் எழுத்துப்பணி என்றென்றும் இனிமையாய் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மருமகளே 💐:smiley35::welcome::smiley35:💐💐💐💐🌹🌹🌹🌹❣❣❣❣❣
Mamiyaare tq 😍😍😍😍
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்,
"அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐"
சொன்னது போலவே அடுத்த டீசருடன் வந்துவிட்டேன்😍.படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கருத்து திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்😘.

டீசர் 2

அறைகள் எங்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊதுபத்தி மணம் கமழ அந்த அறையின் நடுநாயகமாக இடம்பெற்றிருந்த கட்டிலே தெரியாத வண்ணம் மல்லிகையாலும் ரோஜா மலர்களாலும் அலங்கரித்து இருந்தனர். அந்த அறைக்குள் செல்பவருக்கு கண்டிப்பாக அது அறையா இல்லை மலர்கள் பூந்தோட்டமா என்று எண்ணும் வகையில் அமைத்திருந்தார்கள் .

ஆனால் அந்த அழகோ அந்த அறையின் சுகந்தமோ எதுவும் தன் கருத்தை கவராமல் என்றும் போல் இன்றும் தான் அவசரப்பட்டு விட்டோமோ என்ற தன் எண்ணத்தில் சுழன்று கொண்டு அறையில் இங்குமங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் ராணா.

அவனின் சிந்தனையை தடை செய்யும் விதமாக அவ்வறையின் கதவைத்திறந்து கொண்டு புது மணப்பெண்ணிற்குறிய அனைத்து அம்சங்களுடன் அன்று காலையில் தன்னில் சரிபாதியான ஏற்றுக்கொண்ட நயனிகா தங்கள் அறைக்குள் எந்தவித தயக்கமும் அனாவசியமான வெட்கமும் ஏதுமின்றி, ஒருவித மென்மையும் நட்பை பாராட்டும் விதமாக புன்னகையுடன் தன்னை நெருங்கிய தன்னவளை எதிர்கொள்ளும் துணிவின்றி, இதற்குமுன் பேசியிருந்தாலும் இச்சந்தர்ப்பத்தில் தான் நினைத்ததை எப்படி கூறி புரியவைப்பது என்று அவள் முகம் காண தயங்கி வேறுபுறம் திரும்பியவனிடம்,
“ஏன் காலையிலிருந்து
ரெஸ்ட்லெஸ்சாவும் என் முகம் பார்க்கவும் தயங்குறீங்க, எதுவா இருந்தாலும் நாம் அதை பேஸ் பண்ணித்தான் ஆகணும். ஏன்னா இந்த முடிவ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் எடுத்தோம், அப்படியிருக்கும்போது நீங்க மட்டும் ஏதோ தப்பு பண்ணமாதிரி குற்ற உணர்வில் தவிக்கிரீங்க. முதலில் நிமிர்ந்து என் கண்ணை பாருங்க ” என்றவளை ஏறிட்டு அவள் கண்களை பார்த்தவன், மனதிற்கு சற்று அமைதியாக உணர்ந்தவன் தான் கூற வந்ததை கூறி பேச எண்ணிய சமயம், அவள் கூறிய வார்த்தைகள் கேட்டு மீண்டும் மன சஞ்சலத்திற்கு உள்ளானவன் மீண்டும் தன் மனதில் ஏறிய குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தவள், “ எதுக்கு இப்போ நான் என்னமோ சொல்லக்கூடாது சொன்ன மாதிரி இப்படி பார்த்துட்டு இருக்கீங்க? என் கைய புடிக்க சொன்னது அவ்வளவு பெரிய கஷ்டமான வேலையா இது” என்று இலகுவாக பேசிய நயனிகாவிடம்.

“அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்...., என் மனநிலை எப்படி இருக்குன்னு சொல்லித்தான் அதற்கு நீயும் புரிஞ்சுகிட்டு ஒத்துக்கிட்டனாலதான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் என்று உனக்கு தெரியும். அப்படியிருக்கும்போது என்னால இப்போ இந்த விஷயத்தை உடனடியாக ஏத்துக்க முடியாது நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியுது தானே” தன்னைப் பார்த்து கேள்வி கேட்ட தன் கணவனிடம்

“நீங்க என்ன சொல்ல வரீங்கனு நல்லா புரிஞ்சது, சரி என் கைய பிடிங்க அப்படி உட்கார்ந்து பேசலாம் ” என்றவளை தான் அவ்வளவு கூறியும் மறுபடியும் தன் கையை பிடிக்க கூறுகிறாளே என்று

“இங்க பாரு நயனிகா நம் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது என் மனசுல எந்த சஞ்சலமும் குற்ற உணர்வும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன் இல்ல கடமையே என்று நம் வாழ்க்கை கடமைக்காக ஆரம்பிக்கணும் என்று ஆசைப்படுறியா?”என்று கணவனை ......
“ நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே அப்படியிருக்கும்போது ஒரு சராசரி தொடுகையை ஏன் தப்பாகக் நினைக்கிறீர்கள்” என்றவளை புரிந்தும் புரியாமல் நோக்கினாலும் அவள் கூறியது போல் அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவளுடன் படுக்கையில் அமர்ந்தவன் அப்புறம் என்ன என்பது போல் தன் மனைவியை கேள்வியாக நோக்கியவனிடம்

“ இப்போ என்னை தொட்டுகிட்டு என் பக்கத்துல உட்கார்ந்து இருக்கீங்களே, உங்களுக்கு ஏதாவது என்கிட்ட வேற மாதிரி நடந்துகொள்ளனும்னு தோணுதா ”
அவளின் இந்த கேள்விக்கு “இல்லை ”என்று பதிலுரைதவனிடம் ..

புன்னகையுடன் “அப்புறம் எதற்கு இந்த தயக்கம்? இங்க பாருங்க இதுக்கு மேல மாத்தணும் நினைச்சாலும் நம்மளால எதையும் மாற்ற முடியாது. நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி அப்படிங்கிறப்போ ஒருவருக்கொருவர் சகஜமான தொடுகையோ, இல்ல நம்ம ரெண்டு பேரும் சாதாரணமா பேசுறதுக்குகே இப்படி தயங்கினாள் மத்தவங்க பார்க்கும் போது அது அவங்க பார்வையை கண்டிப்பா உருத்தும், எதுக்கு நாம எல்லாருக்கும் விளக்கம் சொல்லிகிட்டு நம் வாழ்க்கையை காட்சிப்பொருளாக காட்டணும்? அதற்கு பதிலா நம்ம ரெண்டு பேரும் முதல்ல நல்ல நண்பர்களாக பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுக்கு இப்போது முதலடியை எடுத்து வைக்கலாமே என்ன சொல்றீங்க ” என்றாள் தன்னையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ராணாவிடம்
“என் அண்ணனுக்கும் மட்டும்தான் ஃபிரண்டா இருப்பீங்களா என் கூட பிரண்டா இருக்க மாட்டீங்களா, ஃபிரண்ட்ஸ்” என்றவளை
மனதில் ஏற்பட்ட தெளிவுடன் பார்த்தவன் “பிரண்ட்ஸ்” என்றிருந்தான் .
“சரி நான் வந்த உடனே நீங்க பேசினீங்க அதேபோல் நான் என் மனசுல இருக்குறத தெளிவா சொல்லிடறேன் ”

“ நீங்க உங்களை பத்தியும், இப்ப இந்த கல்யாணம் நடந்தாலும் என்னை முழு மனசா உங்க மனைவியா ஏத்துக்க முடியாது என்று சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..., அப்படியிருக்கும்போது இப்போ நம்ம வாழ்க்கையை தொடங்குவது பற்றி நான் யோசிக்கவே இல்லை ”என்று கூறிக்கொண்டு இருந்தவளின் பேச்சில் குறிக்கிட்டு.

“ நம்ம வாழ்க்கை தொடங்குவது பற்றி யோசிக்கவே இல்லன்னா! அதுக்கு என்ன அர்த்தம்? புரியலையே ”என்றவனிடம்.

“ அதுதான் சொல்லிட்டு இருந்தேன் நீங்கதான் நடுவுல நிறுத்திட்டீங்க ” என்றவளை.

“ சரி இதுக்கு மேல உன் பேச்சில் நான் குறுக்கிட மாட்டேன் நீ சொல்ல வந்ததை சொல்லிமுடி ”
அதற்கு சரியெனும் விதமாக தலையசைத்தவள் “ என்னதான் எல்லாத்துக்கும் ஒத்துகிட்டு கல்யாணம் நடந்திருந்தாலும் ” என்று தான் கூறிக் கொண்டு வந்ததை நிறுத்தியவள்....

அவன் மேலே கூறு என்று ஊக்கப்படுத்தவும்.

சிறிய தயக்கத்திற்குப் பின் “ தாம்பத்தியம் என்பது உடலால் மட்டும் இல்லாமல் மனமும் மனமும் சேர்வது உண்மையான தாம்பத்தியமாகும். அப்படியிருக்கும்போது இப்போ இருக்கு உங்க மனநிலையில் நம்ம இருவராலும் மனதளவில் ஒன்னு சேர முடியாது, உடலால் மட்டுமே ஒன்று சேர முடியும். அதுவே நம் வாழ்க்கைக்கு நாம் எடுத்து வைக்கும் முதல் தோல்விக்கான அடியாக மாறிவிடும், சோ எப்போ நாம இரண்டுபேரும் மனதால் இணையரோமோ அப்ப நம்ம வாழ்க்கை தொடங்கலாம். அதுதான் ஒரு பொண்ணா, ஒரு மனைவியா எனக்கு கவுரவமாக இருக்கும்” என்று கூறி நிறுத்தி இருந்தாள்....



இத்துடன் உங்களிடமிருந்து விடைபெற்று 🙏 மீண்டும் பொங்கல் அன்று கதையின் முதல் எபியுடன் சந்திக்கிறேன் .
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரம் 1

"முடியாது.., முடியவே முடியாது....., என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா எல்லாரும். அவதான் புரிஞ்சுக்காம உளறிட்டு இருக்கானா அவளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்காமல் எல்லாரும் என்ன கன்வின்ஸ் பண்ண நினைக்கிறீங்க" என்று ஆத்திரமாய் தன் குடும்பத்தினரிடம் கத்திக்கொண்டு இருந்தான் ராணா பிரதாப்.


மதுரையில் ஜமீன் வம்சாவழியில் பிறந்தவர் ராஜேந்திர பிரதாப். அதிகாரம் பணபலம் என அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று சுத்துப்பட்டு அனைத்து கிராமத்தையும் தங்கள் அதிகாரத்தால் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.


ராஜேந்திர பிரதாப் அந்தக் காலத்து பழக்கவழக்கத்தில் இருந்து சற்றும் தன்னை மாற்றிக் கொள்ளாத பழமைவாதி, வெளியிடங்களில் இவர் வைத்ததுதான் சட்டம் என்றாலும் வீட்டில் இவரது தாய் ராணியம்மா வைத்ததுதான் சட்டம், ஆனால் இதில் சிலபல சலுகைகள் பெற்றவர் ராணி அம்மாளின் ஒரே மகள் பவானி.

புகுந்த வீட்டில் பாசத்தை காட்டாது அதிகாரத்தை மட்டும் காட்டியதால் அவர் கணவர் இறந்தவுடன் அவர்களின் பங்கை பிரித்துக்கொண்டு, தன் ஒரே மகள் நந்தினியுடன் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

இந்திரா செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் ராணி அம்மாள், ராஜேந்திரபிரதாப் பேச்சிற்கு இன்றுவரை மறுபேச்சு பேசியிராத அக்மார்க் மருமகள்.

ராஜேந்திர பிரதாப் இந்திரா தம்பதியினருக்கு இரு மகன்கள். மூத்தவன் ராணா பிரதாப் இளையவன் விமல் பிரதாப் கல்லூரியில் கடைசி வருடத்தில் இருப்பவன், பண செருக்கில் குறும்பும் அடாவடியும் செய்து கொண்டிருப்பவன்.

ராணா பிரதாப் பெயருக்கு ஏற்றவாறு கம்பீரமும், ஆண்களே அண்ணாந்து பேசும் உயரம், அதற்குத் தகுந்தாற்போல் சிக்ஸ்பேக் உடற்கட்டும் தீட்சன்மையானை பார்வை, கோபத்தில் விடைக்கும் கூர் நாசி அளவுக்கு அதிகமாக ஓர் வார்த்தையும் உதிர்க்க மாட்டேன் என்று அழுந்த மூடியிருக்கும் அதரங்கள் என்று அனைவரையும் வசீகரிக்கும் தோற்றம் உடையவன்.
சிறுவயதிலிருந்தே தான் நினைத்ததை செய்தே தீரும் வல்லமையுடன், அதன் பொருட்டே சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் முடித்த MBA பட்டதாரி .


படித்த வந்த கையுடன் தன் தந்தையின் தொழிலில் இறங்கினாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவன் .

கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் பிசினஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் என்று நிறுவி அதில் வெற்றிக் கொண்டு வளர்ந்து வந்த நேரத்தில் தன் தந்தையின் வற்புறுத்தலால் 27ஆவது வயதில் அத்தை மகள் நந்தினியை மணமுடித்து நிறைவான வாழ்க்கையில் பிள்ளை செல்வம் மட்டும் கிட்டவில்லை.

தன் மனைவியிடம் தான் குறை என்று தெரிந்த பிறகும் அதை ஒரு குறையாக கருதாமல் தன் மனைவியின் மேல் கொண்ட பாசம் குறையாமல் நிறைவாய் வாழ்பவன் .

நந்தினி ராணாவை விட நான்கு வயது இளையவள்,சிறுவயதிலிருந்து ராணாவின் மேல் காதல் கொண்டு கரம் பிடித்தவள், அவளுக்கு ஒன்று நடக்க வேண்டும் என்றால் அதற்காக எப்பேர்பட்டதையும் செய்யத் துணிபவல். பேச்சில் நிதானம் அவளைக் கடந்து செல்பவர்கள் ஒருமுறையேனும் திரும்பி பார்க்க வைக்கும் அழகுடையவள்.

நந்தினி தன் கணவன் ராணாவை போலல்லாது தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கவலையில் இருந்தவளுக்கு குறை தன்னிடம் தான் என்று தெரிந்ததில் இருந்து கணவனை மறுமணம் செய்ய சொல்லி வற்புறுத்திக்கொண்டு தன் கணவன் கூறும் எதையும் காதுகொடுத்துக் கேளாமல் அவனை மறுமணம் செய்ய சம்மதிக்க வைத்தே தீருவேன் என்று அவனை மறுமணத்திற்கு சம்மதிக்க வற்புறுத்தி கொண்டிருந்தவள், என்றும் போல் அன்றும் காலையில் அவசரமாக கிளம்பி கொண்டிருந்தவனிடம் அதே புராணத்தை பாடிய மனைவியை கடுப்புடன் பார்த்தவன்

"இங்க பாரு நந்தினி உனக்கு நான் அன்னைக்கே சொல்லிட்டேன் ,நீ சொல்றதை நான் என்னிக்கும் செய்யமாட்டேன். இருக்கிறது ரெண்டே வழி தான் அதை நீ தான் தேர்ந்தேடுக்கணும்" என்று பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அலைபேசியில் அழைப்பு வரவும் "இதுக்கு மேல நீ தான் யோசிக்கணும்" என்று கூறிவிட்டு அலைபேசியை ஆன் செய்து பேசிக்கொண்டே சென்று விட்டான்.

நந்தினிக்கு எப்போதும் போல் அவன் திருமணத்திற்கு சம்மதிக்காமல் சென்றதை நினைத்து ஒரு பக்கம் ஆனந்தமாகவே இருந்தாலும் இன்று திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தே தீருவேன் என்று தீர்மானம் எடுத்து அதை செயல்படுத்த சென்றாள்.

அப்போதுதான் அலுவலகத்தினுள் நுழைந்தவன் , அவனின் தந்தையிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்றவனுக்கு அதில் அவர் கூறிய செய்தியைக்கேட்டு, அடித்துப் பிடித்து வீட்டிற்கு வந்தவன் அவள் செய்த காரியத்தின் வீரியம் தாங்காமல் தன் தலையை இரு கைகளாலும் தாங்கி அமர்ந்திருந்தவனிடம், மற்றவர்களும் நந்தினியின் முடிவுக்கு ஆதரவாக பேச அவர்களை ஆத்திரத்துடன் ஏறிட்டவன் "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்..., கல்யாணம் என்பது உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சா ,சரி எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுட்டு அவளை என்ன பண்ணலாம்னு இருக்கீங்க" என்று ஆத்திரத்துடன் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தவன்


பவானி இடம் சென்று "என்ன அத்த அவ உங்க பொண்ணு தானே, அவ வாழ்க்கை நாசமா போகணும்னு நீங்களும் நினைக்கிறீங்களா..., இவங்க எல்லாம் சுயநலமா யோசிக்கலாம், ஆனால் நீங்க எப்படி இப்படி யோசிக்கிறீங்க. நாளைக்கு நந்தினியுடைய நிலைமை என்ன ஆகும்? கொஞ்சமாவது யோசித்து தான் பேசுறீங்களா, அவ எனக்கு பொண்டாட்டி அதற்கு முன்னாடி இந்த வீட்டு பொண்ணு என்று கூடவா உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சு.., உங்ககிட்ட சத்தியமா இதை எதிர்பார்க்கல" என்று வருத்தப்பட்டவனிடம்

ராஜேந்திர பிரதாப் "வேற என்னப்பா செய்ய சொல்ற? அவ பிடிவாதம் தான் நம்ம எல்லாருக்கும் தெரியுமே , எடுத்துச் சொல்லி புரிய வைத்துவிடலாம்னு இருக்கும்போது இப்படி ஒரு முடிவு எடுத்துட்டா..., எங்களுக்கும் வேற வழி இல்லபா
மேல பெட்ரோல ஊத்திக்கிட்டு அவருக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா? இல்லனா கொளுத்திக்கவானு கேட்கிறபோது எங்களை வேற என்ன பண்ண சொல்ற....? அதனாலதான் மனசு கல்லாக்கிட்டு எல்லாரும் ஒத்துக் கொண்டோம். இந்த வீட்டு மகாலட்சுமியை நாங்க எப்படிப்பா விட்டுக் கொடுப்போம்னு நினைச்ச" என்று வேதனைப்பட்டு பேசிக்கொண்டிருந்தவரிடம்

"அண்ணா வேதனைப்படாதீங்க.., ராணா என்ன பண்ணுவான் தம்பி நிலைமையை நினைச்சுப் பாருங்க" என்று கூறியவர் ராணாவிடம் "காலைல நீ போனதுக்கப்புறம் அவ பின்னாடி போறத பார்த்து, அவகிட்ட பேசி புரிய வைப்பதற்காக நானும் அண்ணாவும் போனோம். அங்க அவ பண்ண காரியத்தை பார்த்து எங்களுக்கு உயிர் போய் உயிர் வந்தது, கரெக்டா அந்த நேரம் நானும் அண்ணாவும் போகலைன்னா இந்நேரம் அவ இருந்திருக்கமாட்டா.

அவளை விவாகரத்து பண்ணிட்டா அவ வாழ்க்கை என்னாகும் என்று பயந்தோம், ஆனா இப்போ அவ பண்ணத பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு என் பொண்ணு உயிரோட இருந்தா போதும் என்ற முடிவுக்கு வந்துட்டேன். இந்த முடிவை எடுக்கும் போது உன் மனசு எப்படி கஷ்டப்படுதோ அதேமாதிரிதான் எங்க மனசும் வேதனையா இருக்கு.., ஆனா அவ தான் நமக்கு வேற வழியே கொடுக்கலையே " என்று அழுதவரை அனைவரும் கண்ணில் நீர் வழிய பார்த்து இருந்தனர்.

தன் அத்தையின் கண்ணீரை பொறுக்காதவன் "மன்னிச்சிடுங்க அத்தை அவ பண்றது தப்புன்னு தெரிஞ்சும் எல்லாரும் அதற்கு ஆதரவா பேசுறீங்களே என்று கோபப்பட்டுட்டேன் " என்று வேதனையுடன் கூறியவனிடம்

ஆறுதலாக அணைத்த பவானி "ராணா நான் பேசுவது உன் மனசுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும், ஆனா எனக்கு வேற வழி தெரியல தயவு செஞ்சு நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோ, என் பொண்ணு உயிரை காப்பாற்றி கொடுத்திடு..., எனக்கு அவள விட்டா இந்த உலகத்துல வேற யாரும் இல்ல " என்று கைகூப்பி அழுதவரை

"அய்யோ அத்தை என்ன காரியம் செய்றீங்க அவளை விவாகரத்து பண்ணிட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு எப்படி அத்தை என்னால நிம்மதியா வாழ முடியும்" என்று புலம்பிவன், தலையை அழுந்த கோதி தன்னை சமன்படுத்தி கொண்டு நிமிர்ந்து
கடைசியில் தன் மனைவியிடமே பேசுவது என்ற முடிவுடன் அவர்களின் அறைக்கு சென்றான் ராணா.

தங்களின் அறைக்குள் நுழைந்த ராணாவிற்கு தூசி படிந்த ஓவியமாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து மனதிற்கு முதலில் வலித்தாலும் இறுதியில் கோபமே வந்தது. எவ்வளவு எடுத்துக்கூறியும் ஏற்க மறுக்கும் நந்தினியின் முட்டாள் தனத்தால் இருவரின் வாழ்க்கையும் அல்லவா பாழ் ஆகப்போகிறது என்று கோபம் கொண்டாலும், இது பொறுமையாக கையாளும் சமயமென்று அவளின் அருகில் அமர்ந்து நந்து என்றழைத்து அவளின் தலைக் கோதிவிட்டவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள்.

அவனின் கண்ணில் தெரிந்த வலியை கண்டு அவனை அணைத்து ஆறுதல்படுத்தியவள் "புரிஞ்சுக்கோங்க, நான் ரொம்ப யோசிச்சி நிதானமா தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன். இதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது" என்று கூறியவளிடமிருந்து வெடுக்கென்று எழுந்தவன்

அவளின் முகம் காணப்பிடிக்காமல் "என்னை விட்டுப் போவதில் அப்படி என்னடி உனக்கு பிடிவாதம்" என்று மன வலியுடன் கேட்டவனை பின்னிருந்து இறுக அணைத்து
"நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணுங்க, அதுவும் உங்க மூலமா தான் இருக்கணும். உங்க குழந்தையை நான் எப்படி எல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கேன்..., அது ஒரு குழந்தையை தத்தெடுத்து என்னால ஒத்துக்க முடியாதுங்க. அதுபோல யார் யாருக்கோ இதுக்கு முன்னாடி காசுக்காக குழந்தை பெத்து குடுக்கரவங்ககிட்ட எல்லாம் நம்ம வாரிசு வரக்கூடாது" என்றவளை என்ன சொல்லி புரியவைப்பது என்பதுபோல் பார்த்திருந்தவன்

தன் முதுகின் பின்புறம் கட்டி அணைத்து இருந்தவளை முன்புறமாக இழுத்து அவளின் முகத்தில் தன் இரு கைகளாலும் தாங்கி "என்னை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்க உன்னால முடியுமா? நீ சொன்ன மாதிரி நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், அந்த குழந்தை உன் குழந்தையா இருக்காது வேறு ஒருத்தி குழந்தையாய் தான் இருக்கும். உன்னால சொந்தம் கொண்டாட முடியாது அந்த குழந்தையை, கொஞ்ச முடியாது இது எல்லாத்துக்கும் மேல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது பரவாயில்லையா" என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டவனுக்கு சற்றும் யோசிக்காமல்.

"எனக்கு சம்மதம்ங்க. எப்போ உங்க வாழ்க்கையில இன்னொரு பொண்ண கூட்டிட்டு வரணும் நினைச்சேனோ, அப்பவே இதபத்தி எல்லாம் நான் தெளிவா யோசிச்சிட்டேன், இனிமே யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல. நீங்க தான் உங்க முடிவு சொல்லணும், இந்த வாழ்க்கையிலிருந்து நான் நிரந்தரமாக பிரிஞ்சிடறேன்" என்று கூறியவளை அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை அறைந்து இருந்தான் ராணா பிரதாப்.

"சே இது என்ன மாதிரிப் பிடிவாதம் டி. கடைசியில நீ பண்ணது தப்புன்னு புரியும்போது உன் வாழ்க்கை உன் கையில் இருக்காது. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, எப்ப நீ குழந்தை தான் முக்கியம் நான் வேணான்னு சொன்னியோ அப்பவே மனசு வெறுத்துப் போச்சு, ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கோ சொல்ற ரைட்ஸ் உனக்கு கிடையாது" என்று ஆக்ரோஷமாக கத்திய ராணாவை பார்த்த நந்தினி


" நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலனா கண்டிப்பா நான் உயிரோட இருக்க மாட்டேன், இது உங்க மேல சத்தியம்" என்று கூறிய அவளை கொலைவெறியுடன் பார்த்த ராணா

"அப்போ முதல்ல உனக்கும் எனக்கும் விவாகரத்து ஆகணும், விவாகரத்துக்கு ரெடியா" என்று கேட்டவனை அதிர்ந்து நோக்கினாள் நந்தினி.
அவளின் அதிர்ந்த தோற்றத்தைக் கண்டு கொண்டாலும் சற்று இலக்கம் காட்டினாலும் இவளிடம் வேலைக்காகாது என்று

"இங்க பாரு நந்தினி, நான் சொல்றத குறுக்கிடாமல் கேட்டுட்டு அப்புறம் உன் முடிவ சொல்லு சரியா" என்று கேள்வியாக பார்த்தவனை

சம்மதம் என்றதற்கு அறிகுறியாய் தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டியவலை அழைத்து சென்று கட்டிலில் அமரவைத்து அவனும் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

"நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட நிலைமை என்னவா இருக்கும்னு புரியுதா" என்று நிறுத்தி அவளை பார்க்க

“என் நிலைமைக்கு என்ன நான் பாட்டுக்கு ஒரு ஓரமாய் இருந்துட்டு போறேன்" என்று பேசியவளை
பார்த்து வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு

"நீ இருக்கும்போது ரெண்டாம் தாரமா வருவதற்கு வேற ஒருத்தி கல்யாணத்துக்கு ஒத்துபாளா? இல்ல உன்னை ஒரு மூலையில் துரத்திட்டு வந்தவ கூட நான் உன் முன்னாடி சந்தோசமா இருப்பேன்னு நீ நினைக்கிறியா" என்று கேட்டவனிடம்

சற்றும் தாமதிக்காமல் "நான் உங்களை விட்டு அம்மா கூட போய் தோப்பு வீட்டில் இருக்கிறேன்.அப்போ பிரச்சனை வராது இல்ல" என்று தன் பிடியிலே நின்றவளை வெட்டவா குத்தவா என்பதுபோல் பார்த்தவன்இதற்கு மேல் வலிக்காமல் வைத்தியம் பார்க்க முடியாது என்று ஒரு பெருமூச்சு எடுத்து விட்டவன்

நிதானமாக அவளை நெருங்கி "உன் முடிவை சொல்லிட்ட இப்போ என் முடிவை கேட்டுக்கோ " என்றவனின் பார்வையில் இருந்த கூர்மையில் நந்தினிக்கு மனதில் பயத்தால் சில்லிடாலும் அவன் என்ன கூறினாலும் மாறக்கூடாது என்று பிடிவாதத்துடன் பார்த்து இந்தவளிடம்

"ஒன்று நான் சொன்னமாதிரி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டு அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல தாய் தந்தையா இருப்போம்"

சில வினாடி மௌனமாக இருந்துவிட்டு "இல்லை என்றால் நமக்குள் விவாகரத்து ஆவது உறுதி" என்று கூறி நிறுத்தியவன் "நீ பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு " என்று எழுந்து வெளியே செல்ல போனவனிடம்

" எனக்கு விவாகரத்தில் சம்மதம்" என்று கூறியிருந்தால் நந்தினி.

தொடரும்...........
 
Last edited by a moderator:

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ் நான் தான் உங்கள்😍"வரங்களே ஸ்வரங்களாய்"😍கதையின் எழுத்தாளர் சக்தி. சொன்னது போலவே கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்துட்டேன்.படித்துவிட்டு கதையின் நிறை குறைகளை கருத்து திரியில் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பி.கு)-இனி வாரம் ஒருமுறை (புதன் அன்று)எபியுடன் உங்களை சந்திக்கிறேன்.
"அனைவருக்கும் சக்தியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🙏🙏"


 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ் இதே 😍"வரங்களே ஸ்வரங்களாய்"😍கதையின் இரண்டாம் அத்தியாயத்துடன் வந்துட்டேன்.படித்துவிட்டு கதையின் நிறை குறைகளை கருத்து திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இனி அடுத்த புதன் அன்று மூன்றாம் அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன்,அன்புடன் சக்தி😘😘

வரம் - 2

இரவு வேளையிலும் பகலைப் போல் தேனீக்களின் சுறுசுறுப்புடன் பணி ஆட்கள் அவரவர் வேலையில் இயங்கிக் கொண்டு இரு க்க மக்கள் அவரவர் மனநிலைக்கேற்ப அங்குமிங்கும் சென்ற வண்ணம் இருந்தனர்.

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் பகலை மிஞ்சும் அளவில் மின் விளக்குகள் கொண்டு ஒளிர்ந்து கொண்டிருந்தாலும்...
ஓர் அறை மட்டும் இருளில் மூழ்கி இருந்தது. அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு தன் அறையின் பால்கனியில் அமர்ந்து இருந்தவனின் மனதின் குமுறலை அடக்கும் வகையறியாது தவித்திருந்தவனின் தவிப்பை அந்த இரவின் சிறு பூச்சிகளின் ரீங்காரமும், மயிலிறகாய் வருடும் தென்றல் காற்றும், பரந்து விரிந்த நீல வானமும் அதில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களாலும் குறைக்க முடியவில்லை.

தன் சிந்தனையில் மூழ்கி அமர்ந்து இருந்தவனை சுற்றி திடீரென்று மின் விளக்குகளின் பிரகாசம் பரவவும் தான் யாரையும் பார்க்க விருப்பப்படாமல் தன் அனுமதியின்றி யாரையும் தன் அறைக்கு அனுப்பக்கூடாது என்ற கட்டளையை மீறி தன் அறைக்குள் அத்துமீறி நுழைந்தவரை துவம்சம் செய்யும் சீற்றத்துடன் திரும்பியவனின் பார்வை வட்டத்தில் விழுந்தான் அவனின் உயிர் நண்பன் திவாகரன்.

ராணா, திவாகரன் நட்பு பள்ளியில் ஆரம்பித்து தற்பொழுது தொழிலிலும் தொடர வேண்டுமென்று அவர்களின் விருப்பத்திற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த துறைதான் ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

இந்த இருவர் கூட்டணியின் பலத்தால் பல ஊர்களில் கிளைகள் அமைத்து வெற்றிகரமாக சமபங்குதாரர்களாக இருவரும் இயக்கி வருகிறார்கள்.

அனைவருக்கும் சிம்மசொப்பனமாக தங்களிடம் எளிதில் எவரையும் நெருங்க அனுமதிகாதாவர்கள் அவர்களின் நட்பு வட்டத்தில் சிலர் இருந்தாலும் எட்டியே நிறுத்திவிடுவார்கள் இருவரும்.

இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சிரித்துப் பேசி விளையாடுவதும், பெரியவர்களான பின்பும் தங்களின் தனிமையில் இவர்களா அவர்கள் என்பதைப்போல் ஒருவரை ஒருவர் பேச்சில் வாரி விடுவது செல்ல சண்டைகள் இடுவது என்று இவர்களின் நட்பை பார்த்து பலபேர் பொறாமை கொள்வதும் உண்டு.

திவாகரன் பெரும் செல்வந்தரின் ஒரே மகன் தந்தையின் உடல் நிலையின் காரணமாக தொழிற்சாலை மற்ற தொழில்களையும் தனி ஒருவனாக சமாளிப்பதனால் அவன் தொழில் தொடர்பாக அதிகம் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டி தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் நிலையால் தன் நண்பனின் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலை அறிந்திடாமல் ஒரு பிசினஸ் டீலிங்கில் மாதக்கணக்கில் அங்கு தங்கி இருந்தவன் ,இந்தியா திரும்பியவனுக்கு முதலில் கிடைத்த செய்தியே தன் நண்பனுக்கு விவாகரத்தாகி 8 மாதங்களான செய்தியைத்தான்.

முதலில் இந்த செய்தியை நம்ப முடியாமல் தன் நண்பனை அலைப்பேசியில் அழைத்தான்,தான் கேள்விப்பட்ட செய்தி உண்மை என்று அறிந்தவுடன் தன் நண்பனின் வாழ்வில் என்ன நடந்தது எதனால் இந்த பிரிவு என்றும் வெறும் குழந்தைக்காக இந்த விவாகரத்து தன் நண்பன் செய்திருக்க மாட்டான் என்று அவனை அறிந்த காரணத்தால் தான் முடிக்க வேண்டிய அவசர வேலைகளை முடித்து தன் பெற்றோரிடம் முடிந்த அளவு சீக்கிரமாக வர பார்க்கிறேன் அதுவரை தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தந்தையிடம் அனுமதி வேண்டிவனை .......
கண்களில் கனிவுடன் இவர்களின் நட்பை பற்றி அறிந்திருந்த திவாகரனின் பெற்றோர் தற்பொழுது நண்பனுக்கு இந்த நிலையில் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று தன் மகன் நினைத்தாலும் தம்முடைய நிலையின் பொருட்டு தயங்கும் மகனை கனிவுடன் பார்த்திருந்த குருபரன்.

"நீ தான் எல்லா வேலையும் பக்காவா முடித்து வச்சுட்டியே பா நான் போய் சும்மாதான் உட்கார போறேன் நீ பயப்படாம போயிட்டு பொறுமையா வா அது வரைக்கும் உங்க அம்மா தொல்லை இல்லாமல் ஜாலியா இருப்பேன்" என்றவரை பார்த்த அவரின் மனைவி இந்திரா.

"ஓஹோ நான் இல்லாம ஜாலியா இருக்கணுமா ஐயாவுக்கு…?! நீங்க இங்க ஜாலியா இருங்க நான் அப்படியே என் பையன் கூட போய் என் அம்மா வீட்டுல ஜாலியா இருந்துட்டு வரேன்" என்றவரை அரண்டு போய் பார்த்த குருபரன்.
(என்ன வயசு ஆனாலும் இந்தப் பெண்கள் அம்மா வீட்டுக்கு பெட்டியை கட்டுவதை விட மாட்டாங்க போல என்று மனதில் நினைத்தவர் )வெளியில் மனைவியை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு..

"என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அதுக்கு போயா அம்மா வீட்டுக்கு போவாங்க என்றவரை அது..! என்பதுபோல் கெத்தாக பார்த்தார் இந்திரா .

என்றும் போல் இன்றும் தாய் தந்தையின் செல்ல சண்டையை ரசித்துக் கொண்டிருந்தவன் தன் தந்தையை சீண்டி வேடிக்கை பார்க்கும் பொருட்டு,

"என்னப்பா இப்படி சரண்டர் ஆயிட்டீங்க?!" என்ற திவாகரனை..

"ஏன்டா மகனே என் பொண்டாட்டிய கூடவே கூட்டிட்டு போய் அவ அம்மா வீட்டில டேரா போட்டு என் பிஞ்சு ஹார்ட்டை வெடிக்க வைக்கலாம்னு பிளான் பண்றியா?" என்று புலம்பிய வரை நக்கலாக பார்த்த அவர் மனைவி.

"எது பிஞ்சு ஹார்ட்டா... வயசான காலத்துல லொள்ளைப்பாரு என்று எப்பொழுதும் போல் தன் கணவன் காலை வாரியவர் மகனிடம் திரும்பிப் பார்த்து..

" சரிப்பா நீ கிளம்பு" என்றவரை இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை மறைந்து மறுபடியும் தங்கள் மகனிடம் தயக்கம் ஆட்கொள்வதை அறிந்த திவாகரின் பெற்றோர்..

"கவலைப்படாம போயிட்டு வாப்பா நான் ஸ்ட்ரெயின் பண்ணிக்காம ஆபீசை பார்த்துக் கொள்கிறேன் என்றவரை, அவரை நான் பத்திரமா பார்த்திருக்கிறேன்" என்று முடித்திருந்தார் இந்திரா.

பெற்றவர்களின் பேச்சில் ஏற்பட்ட திடத்தில் அன்றே மதுரையை நோக்கிப் பயணமான திவாகரன் நேராக ராணாவின் வீட்டிற்குத்தான் சென்றான் .
தான் சென்ற நேரம் இரவு என்பதால் எப்பொழுதும் போல் தன் நண்பன் தன் வீட்டில் தான் இருப்பான் என்று நண்பனின் இல்லத்திற்குச் சென்றவனுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
தன் குடும்பத்தாரின் மீது இருந்த மனத்தாங்கலாலும் என்னேரமும் தன் மறுமணத்தை பற்றி பேசிப்பேசியே தன்னை எரிச்சலுக்கு உள்ளாகுவதால் சமீபகாலமாக தன் ஓட்டலிலேயே தங்கி வருவதும் யாரையும் பார்க்கவும் பேசவும் அனுமதிக்காமல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு முழு நேரமும் தன்னை தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கும் நண்பனின் மனவலிமையை அறிந்தவன் எந்தவித முன் அனுமதியின்றி ராணாவின் அரைக்குள் பிரவேசித்தவனுக்கு அங்கு தன் நண்பன் இருந்த நிலையைப் பார்த்து மிகவும் வேதனையாக உணர்ந்தவன் அந்த அறையின் இருளைப் போக்கி மின் விளக்குகளை ஒளிரவிட்டு தன் நண்பனின் அருகில் சென்று நின்றிருந்தான் திவாகரன்.

கோபத்துடன் திரும்பிய ராணாவிற்கு அதேபோல் சற்றும் குறையாத கோபத்துடன் தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் நண்பனை கண்டவுடன் ஒரு நொடி தடுமாறினாலும் மறுநொடி தன் நண்பனை இறுக அணைத்ததிருந்தான் ராணா பிரதாப்.

நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் திவாகரன் மட்டும் கோபம் தணியாமல் இருப்பதைக் கண்ட ராணா மன்னிப்புக் கோரும் வகையில் நண்பனின் கரங்களைப் பற்றிக்கொண்டு கண்களால் மன்னிப்பை யாசித்தவனை அதற்கு மேலும் தன் கோபத்தை இழுத்துப் பிடித்து தன் நண்பனை சோதிக்காமல் மன்னித்து இருந்ததாலும் சிறு மன வருத்தம் இருக்கவே செய்தது திவாகரனுக்கு.

அதைப் புரிந்து கொண்ட ராணாவும் திவாகரனிடம் “மச்சி சாரிடா நான் இருந்த மனநிலையிலும், நீயும் இங்கு இல்லாமல் நியூஜெர்சியில் வேலையில பிஸியா இருந்த அதனால தான் உன்கிட்ட எதுவும் பேச முடியாமல் சொல்ல முடியாம இருந்துட்டேன் சாரிடா மச்சி” என்று வருத்தப்பட்டவனை அதற்கு மேலும் சங்கடப்படுத்த வேண்டாமென்று..

"சரி வா எனக்கு ரொம்ப பசிக்குது உன்ன பாக்க அப்படியே ஓடி வந்துட்டேன் வெறும் வயிற்றில் பேசினா எனக்கு எதுவும் ஏறாது.. எப்படியும் நீயும் சாப்பிடு இருக்க மாட்ட வா சாப்பிட்டு வந்து பொறுமையா பேசலாம் எப்படியும் ஒரு மூணு நாலு நாள் உன் கூடத்தான் ஆல்ட்" என்று தனக்காக அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கும் நண்பனை அனணைத்த தன் நண்பன் ராணாவின் மனநிலையை மாற்றும் பொருட்டு..

“டேய் நான் என்ன பொண்ணா? சும்மா சும்மா கட்டிப்பிடிக்கிற ,என் பொண்டாட்டிகாக என் கற்ப காப்பாத்தி வச்சிருந்தா சும்மா சும்மா கட்டி புடிச்சு என் கற்புக்கு பங்கம் விளைவிக்கப் பார்க்கிற”என்று பேசிய நண்பன் எதற்காக அவன் இப்படி பேசுகிறான் என்று ராணாவிற்கு புரிந்தமையால்..

"உன்ன நான் கட்டி புடிச்சா உன் கற்பு போயிடுமாடா..?! சிறு சிரிப்புடன் கேட்டவன் அப்போ மறுபடியும் நான் அப்படித்தான் கட்டிப்பிடிப்பேன்" என்று தன் நண்பனை ஆரத்தழுவி இருந்தான்.

தன் நண்பன் திவாவை கண்டதிலிருந்து தன் மனதிற்கு பல மாதங்களுக்குப் பிறகு மன இறுக்கம் சற்று தளர்வதை உணர்ந்தான் ராணா பிரதாப்.

இருவரும் தங்கள் தொழில் நட்பு என்று பேசிக்கொண்டே அந்த அறையிலேயே அமர்ந்து சாப்பிட விருப்பம் இன்றி தாங்கள் எப்பொழுதும் சாப்பிடும் பாரம்பரிய உணவகத்திற்கு சாப்பிட சென்றவர்கள் அங்கு அவர்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு..

" டேய்.. மச்சி நான் இங்கே வந்து ரொம்ப வருஷம் ஆயிடுச்சு இல்ல அதுவும் நீயும் நானும் இங்க தனியா வந்து சாப்பிட்டு.. கூத்தடித்து விட்டு.. ஊரு சுத்தி.. எவ்ளோ என்ஜாய் பண்ணி இருப்போம் இப்ப பாரு சாப்பிட கூட டைம் இல்லாம காலில் சக்கரம் கட்டாத குறையா ஓட வேண்டி இருக்கு அதுலயும் எங்க போனாலும் இந்த ஊர் கை மணத்தில் சாப்பிடற டேஸ்ட் வேற எங்கேயும் கிடைக்கல'" என்று புலம்பிய திவாகரனை பார்த்து சிரித்துக்கொண்டே..
"அப்போ எங்க ஊரிலேயே ஒரு பொண்ண பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடவா?" என்ற நண்பனை சிறு அதிர்வுடன் நோக்கிய திவா தன் நண்பனை நோக்கி வசீகரிக்கும் புன்னகை ஒன்றை சிந்தி அதற்கெல்லாம் அவசியம் ஏற்படாது என்று நினைக்கிறேன் என்றவனை பார்த்த ராணா...
"வாழ்த்துக்கள் மச்சி... பொண்ணு யாருன்னு சொல்லவே இல்ல பொண்ணு பாத்தாச்சா.. பொண்ணு எந்த ஊரு? என்ன படிச்சிருக்கு பேர் என்ன?" என்று தான் பதிலளிப்பதற்கு சிறு இடைவெளியும் விடாமல் கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டிருந்த தன் நண்பனைப் பார்த்து..

" போதும் போதும் நிறுத்து மச்சி இரு நானே ஒன்னொன்னா சொல்றேன்… பொண்ணை அப்பா அம்மா பார்க்கல.. நான் மட்டும்தான் பார்த்திருக்கேன் இப்போதைக்கு ஒன்சைடு, லவ் என் ஆபீஸ்ல தான் வொர்க் பண்றா, பேரு மலர் எம்பிஏ படிச்சி இருக்கா, என்ன புடிச்சு இருந்தாலும் ஒத்துக்காம சுத்திகிட்டு இருக்கா மச்சி" என்று பெருமூச்சு விட்டவனை பார்த்து சிரித்த ராணா..

"எதனால மச்சி சிஸ்டர் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க ஒருவேளை அவங்க வீட்டில் ஜாதி லவ்வு இதற்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்களோ?" என்று சந்தேகம் கெட்டவனை பார்த்த திவாகர் இல்லை என்று தன் தலையை ஆட்ட..

"அப்போ வேற என்னதான் பிரச்சனை எதனால ஒத்துக்க மாட்டேங்கிறாங்க சிஸ்டர்க்கும் உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்ற உனக்கு என்ன குறைச்சல் எதுக்கு வேணான்னு சொல்றாங்க?" என்று கேட்டுக்கொண்டே இருக்கும் போதே ஆர்டர் செய்த உணவுகள் வந்து விடவும்.. சாப்பிட்டுக்கொண்டே மறுபடி தன் நண்பனிடம் சந்தேகத்தைக் கேட்ட ராணாவை பார்த்து..

"குறையெல்லாம் இல்லையாம் எல்லா ரொம்ப நிறைய இருக்காம்" என்றவனை அவன் சொல்ல வருவது புரியாம பார்த்த ராணாவை பார்த்து..

" நான் ரொம்ப பெரிய பணக்காரனாம் நிறைய பிசினஸ் இருக்காம் இதெல்லாம் கூட பரவால்ல மச்சி கடைசியா ஒன்னு சொன்னா அதுதான் மச்சி தாங்க முடியல" என்று புலம்பிய நண்பனை..

"அப்படி என்ன மச்சி சிஸ்டர் சொன்னாங்க?" என்று சிறு சிரிப்புடனும் ஆர்வத்துடனும் கேட்ட நண்பனை பார்த்து முறைத்த திவா..

" எல்லாம் என் நேரம் என்று புலம்பிக்கொண்டே எனக்கு தலைக்கணம் ரொம்ப ஜாஸ்தினு சொல்றா மச்சி!" என்று கூறி நிறுத்திய நண்பனைப் பார்த்து தன் கட்டுப்பாட்டையும் மீறி நகைக்கும் ராணாவை பார்த்து (மனதிற்குள் சந்தோஷம் பட்டாலும்) வெளிப்பார்வைக்கு முறைத்துக் கொண்டிருந்தான் திவாகரன் .

நண்பனின் முறைப்பை பார்த்த ராணா "ஆனாலும் என் சிஸ்டர் ரொம்ப தெளிவா இருக்காங்க மச்சி" என்று கூறியவுடன் ராணாவை எதால அடிக்கலாம் என்று சுத்திமுத்தி தேடிய திவாவை

"நோ.. வயலேன்ஸ் என் தங்கச்சியை எப்படி ஒத்துக்க வைக்கப் போற?"

" ரொம்ப ஃபார்மலா பேசாமல் மலர்னே சொல்லு மச்சி" என்ற திவாவை பார்த்து சிரித்துவிட்டு

"சரி மலரை எப்படி ஒத்துக்க வைக்க போற, உங்க வீட்டில ப்ராப்ளம் இருக்காது ,அவங்க வீட்ல எப்படி?" இன்று கேள்வியாக நிறுத்தியவனை பார்த்து சிரித்துக்கொண்டே..
"அவ வாயை திறந்து ஒத்துக்கணும் அவசியமே இல்லை என்னைக்கு அவ கண்ணுல என் மேல இருக்கர லவ்வா பார்த்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் அவ வாயை திறந்து ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவதான் என் பொண்டாட்டி " என்று அழுத்தம் திருத்தமாக கூறிய நண்பனைப் பார்த்த ராணாவுக்கு.

தன்னிடம் மட்டுமே வேடிக்கையாக பேசும் தன் நண்பனை மற்றவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவன் தன் காதலை உரைக்கும் போது அதிலிருக்கும் காதலையும் மென்மையையும் உணர்ந்தவனுக்கு அவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை மறைந்து மனதின் ஓரம் வலி எழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

நண்பனின் முகம் மாறுதல்களை பார்த்துக்கொண்டிருந்த திவாகரனுக்கு நன்கு புரிந்தது நண்பனின் வேதனை அவன் அறிந்த ராணா பிரதாப் இரும்பு மனிதன் எதற்கும் யாருக்கும் அசைந்து கொடுக்காத தன் நண்பனை பழையபடி மாற்றியே தீருவேன் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டான் திவாகரன்.

அதற்குப்பிறகு அந்த உணவகத்தை விட்டுச்செல்லும்வரை இருவருக்குள்ளும் ஓர் அமைதி குடிகொண்டது. அந்த உணவகத்தை விட்டு தங்கள் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் திவாகரன் ராணாவிடம்.

“இப்ப ஸ்ட்ரைட்டா வீட்டுக்கு தானே போறோம்?" என்றவனை இல்லை என்பதுபோல் சிறுதலை ஆசைப்போடு நிறுத்திக்கொண்டான் ராணா.

இருவரும் வண்டியில் ஏறி கிளம்பி விட்டாலும் அவர்களுக்குள் தொடர்ந்து அந்த அமைதியை பிடிக்காமல் திவா..

“இன்னும் எத்தனை நாளைக்கு வீட்டுக்கும் போகாமல் இப்படியே இருக்கிறதா இருக்க என்னால சத்தியமா உன்னை இப்படி பார்க்க முடியல எதா இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று இருந்த என் நண்பன் நீ இல்லையோன்னு தோணுது?" என்றவனை ஒரு சில நிமிடம் மவுனமாக பார்த்துவிட்டு..

“எனக்கு உன்கிட்ட ஃபர்ஸ்ட் மனசு விட்டு பேசவேண்டும் அதுக்கு வீட்டில சரிப்பட்டு வராது அங்க போனதுமே அவங்க எல்லாரும் என்ன பத்தி உன்கிட்ட எடுத்துச்சொல்லி புரிய வைப்பதா நினைத்துக்கொண்டு அவங்க பண்ணதெல்லாம் நியாயம் என்ற வகையில் பேச ஆரம்பிச்சுடுவாங்க அதனால இப்போ போக வேண்டாம் இருக்கிற மனநிலையை அங்க போய் நான் கெடுக்க விரும்பவில்லை “ என்ற ராணாவை பார்த்த திவா…

“சரி வா எப்படியும் நான் இங்க தானே ரெண்டு மூணு நாள் தங்க போறேன் எதுவா இருந்தாலும் நாளைக்கு மார்னிங் பேசிக்கலாம் நீ பர்ஸ்ட் நிம்மதியா தூங்கு எழுந்திரு அப்ப தான் உன்னால தெளிவா யோசிக்க முடியும், அதேமாதிரி மனச விட்டு பேசும் போது ஆட்டோமேட்டிக்கா அதற்கான தீர்வு உனக்கு ஈஸியா கிடைச்சுடும் அதனால மனசபோட்டு குழப்பிக்காத" என்ற நண்பனை பார்த்து ஆமோதிக்கும் வகையில் சிறு புன்னகையுடன் தலையசைத்து ஒப்புதல் கொடுத்தான் ராணா பிரதாப்.

பல மாதங்களுக்குப் பிறகு தன் நண்பனின் வருகையையாலும் தன் மனநிலையை புரிந்துகொண்டு வந்தவுடனேயே தன் மன வருத்தத்தை மேலும்கிளறாமல், வெகு நாட்களுக்கு பிறகு வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் உரையாடியதிலும் ராணாவின் மனநிலை சற்று அமைதி அடைந்திருந்தது. அதே இலகுவான மனநிலையுடன் நண்பர்கள் இருவரும் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றார்கள்.

ஸ்வரமாகும்.......
 

Priyam

Well-known member
11950

அத்தியாயம் 3

சூரிய ஒளிக்கதிர்கள் பூமியை ஊடுருவ இயலாத வகையில் அடர்ந்து வளர்ந்திருந்த ராணாவிற்கு சொந்தமான மாந்தோப்பில் நண்பர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். தன் மௌனத்தை கலைக்காமல் இலக்கில்லாமல் எங்கோ பார்வையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த நண்பனை பார்த்திருந்த திவா,

“இப்படி அமைதியாக இருந்தா என்ன அர்த்தம். எடுத்த உடனே அதைபத்தி பேச வேண்டாம்ணு தான் நேத்து அதை பத்தி உன்கிட்ட ஒன்னும் கேட்கல, இப்ப நீயா சொல்லுவேன்னு பார்த்தா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று தன் பொறுமையை இழுத்துப் பிடித்து கேட்டவனை வேதனைத் தளும்பும் விழிகளுடன் பார்த்த ராணா

தன் மனைவி நந்தினிக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கூறியதிலிருந்து தங்களுக்குள் நடந்த பிரச்சனைகளை கூறிக்கொண்டு வந்தவனின் நினைவுகள் தன் மனைவி தன்னிடம் விவாகரத்து வேண்டும் என்று கூறிய அந்நாளுக்கு பின்நோக்கி பயணித்தன,

“என்ன சொன்ன இன்னொரு வாட்டி சொல்” என்ற கணவனை பார்த்த நந்தினி “எனக்கு விவாகரத்து வேண்டும்” என்று கேட்டு முடிப்பதற்குள் அவளின் கழுத்தை நெரித்தவனை கண்டு அதிர்ந்து கண்களில் நீர் வழிய மூச்சு விடத் திணறிக்கொண்டு தன் கணவனின் கைகளிலிருந்து தன் கழுத்தை மீட்க போராடியவளை கண்களில் ஆத்திரமும் முகத்தில் நக்கலும் வழிய பார்த்திருந்த ராணா,

“யார்கிட்டடி நடிக்கிற...., செத்துப்போகப் போனவதான நீ! இப்போ எதுக்கு உயிர்வாழ துடிக்கிற? உண்மையா சாகப்போறவனுக்கும் நடிக்கிறவளுக்கும்கூட எனக்கு வித்தியாசம் தெரியாத அளவுக்கு என்னை என்ன அந்த அளவுக்கு கையாலாகாதவன்னு நினைச்சியா..? என்ன சொன்ன.. விவாகரத்து தரலைன்னா செத்துப் போவியா..! இப்பவே செத்துப் போ என் பொண்டாட்டியாவே செத்துப் போ!” என்று ஆக்ரோஷமாக கூறியவன் தன் கையில் சிக்கியிருந்த அவள் கழுத்தை உதறித்தள்ளி இருந்தான்.

தான் உதறித் தள்ளியதும் கீழே விழுந்து பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து தன் சுவாசத்தை சீராக்கும் முயன்று கொண்டிருந்தவள் மேல் கொஞ்சமும் கருணை ஏற்படாமல் அதே சீற்றத்துடன் தன்னை நெருங்கியவனை மனதில் அச்சம் ஏற்பட அமர்ந்த நிலையிலேயே பின் நகர்ந்தவளை ஒரு எட்டில் தன்முன் தூக்கி நிறுத்தி..

“படிச்சவ தானே நீ.. ஒருவாட்டி சொன்னா புரியாது அவனவன் பொண்டாட்டி மேல தப்பே இல்லன்னாலும் அவ மேல பழிய போட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறானுங்க, அதுமட்டுமா அந்தப் பொண்ணோட புகுந்த வீட்டில் இருக்கிறவங்களும் குழந்தை இல்லாத ஒரே காரணத்துக்காக ஒரு மனுஷியாக கூட அந்த பொண்ணு நினைக்காமல் கொடுமை படுத்துறாங்க.., ஆனா உனக்கு இதுல ஏதாவது ஒன்றாவது நடந்துச்சா.. இல்ல நடக்கத்தான் நானோ இந்த வீட்டுல இருக்கிறவங்களோ விற்றுவோமா..? நானும் போனா போகுதுன்னு பொறுமையா சொல்லிட்டிருந்தா ரொம்பத்தான் ஆட்டம் காட்டுற. இதுக்கு மேல ஏதாவது இது மாதிரி பைத்தியக்காரத்தனம் பண்றதோ இல்ல விவாகரத்து வேணும்னு கேட்கிறதோ வச்சுகிட்ட நீ எல்லாம் கஷ்டப்பட வேணாம் நானே அனுப்பி வச்சிருவேன் “ என்று அவளை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு

அங்கு இருக்க பிடிக்காமல் தன்னிடம் என்னவென்று கேட்க வந்த தன் குடும்பத்தினரையும் புறக்கணித்துவிட்டு தன் பென்சை எடுத்துக்கொண்டு தன் மனதின் சீற்றத்திற்கு ஏற்றவாறு தன் வாகனத்தை அதிவேகமாக இயக்கிக் கொண்டு தன் அலுவலகம் சென்றவன் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் முதலில் திணறியவன் பின் தன் மனதை ஒரு நிலைப்படுத்தி வேலையில் மூழ்கியவன் தான் எப்பொழுதும் புறப்படும் நேரம் கடந்தும் தன் இல்லம் செல்ல விருப்பம் இன்றி நேரத்தைக் கடத்தி கொண்டிருந்தவனுக்கு வீட்டிலிருந்து அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்ததால் வேறுவழியின்றி இரவு 11 மணி போல் வீடு சென்றவனுக்கு தன் வரவை எதிர்பார்ப்பது போல் காத்திருந்த தந்தையையும் பாட்டியையும் கண்டவனுக்கு எதுவோ சரியில்லாதது போல் தோன்றினாலும் தன் மனைவி செய்தது தவறே என்றாலும் பெண்களின் மீது தன் பலத்தை பிரயோகிப்பது ஆண்மைக்கு இழுக்கு என்று நினைப்பவன் ஆதலால் காலையில் தான் தன் மனைவியிடம் நடந்துகொண்ட முறைக்கு முதலில் தன் மனைவி நந்தினியை சந்திக்க இவர்களைக் கடந்து செல்ல முற்படும் வேளையில் ராணாவின் தந்தை..

“தம்பி இங்க வாப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று என்றழைத்தவரை கேள்வியாக பார்த்தவன்.

“ஏதாவது முக்கியமா பேசணுமா அப்பா இல்லன்னா ரீஃபிரஷ் ஆயிட்டு வந்துவிடுகிறேன்” என்று நந்தினியை பார்க்க வேண்டும் என்ற தவிப்பில் கேட்டவனை அவனின் தவிப்பை சரியாக புரிந்து கொண்ட ராஜேந்திரன் “சரிப்பா நீ போயிட்டு வா உன்கிட்ட முக்கியமா பேசணும்” என்ற தந்தையை காக்க வைக்க மனதில்லை என்றாலும் நந்தினியை பார்த்தே தீர வேண்டும் என்ற தவிப்பின் உந்துதலால் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி தன் அறைக்கு சென்றவனுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

பார்வையால் தன் அறையை அலசியவனுக்கு தன் மனைவி அங்கே இருப்பதற்கான எந்தச் சுவடும் இல்லாததினால் வேறுவழியின்றி இலகுவாக உடை அணிந்து கீழே தன் தந்தையிடம் பேச சென்றவனை பார்த்த ராணாவின் தாய்

“இப்பவே ரொம்ப நேரமாச்சு முதலில் சாப்பிட்டுவிட்டு போ" என்ற தாயைப் பார்த்த ராணாவிற்கு மனதில் ஒரு நிம்மதி பரவியது. தனக்கு உணவு பரிமாறுவதற்கு எப்படியும் தன் மனைவி வருவாள் என்ற நம்பிக்கையில் சாப்பிட அமர்ந்தவனுக்கு தன் அன்னையே பரிமாறவும் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைக்காமல்

“எங்கம்மா மேலயும் நந்தினியை காணோம் இங்கேயும் நீங்க பரிமாற வரீங்க ” என்ற மகனை பார்த்தவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தவருக்கு ஆபத்பாந்தவனாக அவரின் மாமியார் ராணியம்மா

“நந்தினி பத்தி பேச தான் நாங்களும் காத்திட்டு இருக்கோம் நீ சீக்கிரம் சாப்பிட்டு வா ” என்ற குரலுக்கு மறுபேச்சு பேசாமல் அவசரகதியில் உண்டு அவர்களிடம் பேச சென்றான்.

தன் பாட்டியிடம் தந்தையிடமும் பேசுவதற்கு அமர்ந்தவன் அருகில் அவனின் தாய் அமரவும் ஏதோ தவறாக நடக்கிறது என்று புரிந்து கொண்டவன் அதற்குமேல் தன் பொறுமையை இழந்து அவர்கள் மூவரையும் பார்த்து “ நந்தினி எங்கே? நான் வந்ததிலிருந்து அவளைப் பார்க்கவே இல்லை, நீங்கள் ஏன் இவ்வளவு நேரமாகியும் தூங்காமல் இந்த இரவு வேளையிலும் அவ்வளவு அவசரமா என்கிட்ட பேசிய ஆகணும்னு உட்கார்ந்து இருக்கீங்க, என்ன விஷயம் சொல்லுங்க ” என்று கேள்வியாக நிறுத்தி இருந்தவனை பார்த்த மூவரும்

ராஜேந்திரனிடம் நீங்களே சொல்லுங்க என்பதுபோல் பார்த்திருந்த தாய் மற்றும் மனைவியின் பார்வையை எதிர்கொண்டவர்..

“ நந்தினி இங்கு இல்லை!”என்று ராணாவின் முகம்பார்த்து கூறி நிறுத்தியவர் எதுவும் கூறாமல் தன்னை மேலே கூறுங்கள் என்பதுபோல் வேறு எந்த பிரதிபலிப்பும் முகத்தில் காட்டாது அமர்ந்திருந்த மகனைப் பார்த்தவர் தான் பேச காத்திருந்த காரணத்தை முழுதாக கூற ஆரம்பித்தார்.

“நீ நந்தினியிடம் பேசிவிட்டு சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கீழே வந்த நந்தினி எங்கள் அனைவரையும் பார்த்து இதுக்கு மேல இந்த வீட்டில நான் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு உன் அத்தை பவானி இடம் சென்று..

“அம்மா எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை அதையும் மீறி நீங்களும் அவரைப்போல் நான் நடிக்கிறேன் சொன்னீங்கன்னா கண்டிப்பா நான் செத்து போயிடுவேன் ” என்று கூறிய நந்தினியை பார்த்த பவானி..

“ அப்படி எல்லாம் சொல்லாதமா எனக்கு உன்ன விட்டா வேற யார் இருக்கா? ” என்று தன் மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்ட பவானி தன் அண்ணனை பார்த்து..

“அண்ணா உங்க எல்லாருக்கும் எப்படியோ ஆனா எனக்கு என் பொண்ணு தான் முக்கியம், நந்தினி என்ன சொல்கிறாளோ அதுதான் என் முடிவு” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர் நந்தினியிடம்...

“உன் முடிவை நீ சொல்லுடா அம்மா எப்பவும் உன் முடிவுக்கு உறுதுணையாகதான் இருப்பேன்" என்றவர்.

நீ என்ன முடிவு பண்ணி இருக்கேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடு ”என்று அன்னை கூறியதை ஏற்றுக்கொண்ட நந்தினி அனைவரையும் பார்த்து..

“எனக்கு அவர் கிட்ட இருந்து விவாகரத்து வேண்டும். அதேபோல அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் இதுக்கு மேல இதை பத்தி பேச எனக்கு விருப்பமில்லை, என்னால எனக்கு சாதகமா சுயநலமா முடிவெடுக்க முடியாது, அவர் நான் சொல்றதை சுத்தமா புரிஞ்சுக்க மாட்டேங்குறாரு.. என்னால அவர்கிட்ட போராட முடியல! இதுதான் கடைசி நீங்க எல்லாம் என்னை புரிஞ்சுகிட்டு அவர் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிதாங்க, இல்லனா இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு கொடுக்க முடியலையேன்ற குற்றவுணர்ச்சியிலேயே நான் செத்துருவேன்” என்று அனைவரையும் பார்த்து கை கூப்பி அழுத நந்தினியை பார்த்த அனைவருக்கும் மனம் கலங்கினாலும்..

ராணியம்மா “அப்படி எல்லாம் உன்ன ஒதுக்கிவைத்துவிட்டு அப்படிதான் இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வரணும்னா அந்த வாரிசே வேண்டாம். எங்க வீட்டு மகாலட்சுமி உன்னை ஒதுக்கி வைத்துவிட்டு உன் வாழ்க்கையை நாங்களே நாசமாக்குவோம்னு எப்படி நீ எதிர்பார்க்கிற? எடுத்தோம்.. கவிழ்த்தோம் என்று யோசிக்காமல் படிச்ச பிள்ளையா லட்சணமா யோசி” என்று தன்னை அதட்டிய பாட்டியைப் பார்த்து..

“நான் சொன்னா சொன்னதுதான்..... இதுதான் என் இறுதியான முடிவு நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன். இதுக்கும் மேலயாரும் ஒத்துக்கலைன்னா...” என்று சுற்றும் முற்றும் பார்த்து அங்கிருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்தவளை பார்த்து பதறிய அனைவரும் அவளின் அருகில் செல்ல முயன்றவர்களை தடுத்து...

“அவரை மாதிரி நான் நடிக்கிறேன்னே நினைச்சீங்கன்னா இந்த நிமிஷமே நான் நடிக்கலைன்னு ப்ரூஃப் பண்ண நான் தயாரா இருக்கேன்” என்ற நந்தினியை..

“நாங்க உன்னை நம்புகிறோம்மா தயவுசெஞ்சு எதா இருந்தாலும் பேசிக்கலாம் உன் கழுத்தில் இருக்க கத்தியை எடு.. மாமா உனக்கு வாக்கு கொடுக்கிறேன் நீ சொல்றத கண்டிப்பா நான் நிறைவேற்றுகிறேன்” என்ற ராஜேந்தர் தன் மருமகளின் அருகில் சென்று..

“இந்த மாமா மேல உனக்கு நம்பிக்கை இருக்குன்னா அந்த கத்தியை என்கிட்ட கொடு !” என்று தன் முன் கை ஏந்தி நின்றிருந்தவரின் கைகளில் தன் கழுத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரிடம் கொடுத்து.....

“ என்ன மன்னிச்சிடுங்க மாமா.. உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்னு தெரியுது ஆனா இத தவிர எனக்கு வேற வழி இல்ல” என்று கூறி தன் மாமனின் காலில் விழுந்து கதறிய நந்தினியை தன் மறு கரத்தால் தூக்கி தன் அருகில் நிறுத்தியவர்..

“இந்த மாமனுக்கு சத்தியம் பண்ணி கூடுமா திரும்பவும் இந்த மாதிரி முட்டாள்தனம் பண்ண மாட்டேன்னு ” தன்னிடம் வாக்குகேட்ட தன் மாமாவை பார்த்து முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறி..

“உங்க பையன் எனக்கு விவாகரத்து தரவில்லை என்றால்.. கண்டிப்பா அவர் சொன்ன மாதிரி அவர் பொண்டாட்டியா நான் நிம்மதியா செத்து போயிடுவேன் இல்லனா, நான் சொன்ன மாதிரி அவர் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுங்க. என் அம்மாவுக்கு பொண்ணா கடைசி வரைக்கும் வாழ்ந்துட்டு போயிருவேன் இதுதான் என் முடிவு இதுல எந்த மாற்றமும் கிடையாது, இதுக்கு மேல நீங்களே முடிவு எடுத்துக்கோங்க” என்று தன் முடிவை கூறிய நந்தினியின் அருகில் சென்ற பவானி அவளின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு ...தன் தாய் அண்ணன் அண்ணியை பார்த்து...

“தயவுசெஞ்சு உங்க வறட்டு பிடிவாதத்தால் என் பொண்ணை பலியாக்கிடாதீங்க.. உங்களுக்கு ஒரு மருமக இல்லன்னா இன்னொரு மருமகள் கிடைப்பா.. ஆனா எனக்கு இருக்கிறதோ என் ஒரே பொண்ணு மட்டும்தான் தயவுசெஞ்சு இதுக்கு மேலயாரும் அவகிட்ட இதைப்பத்தி பேசி என் பொண்ண என்கிட்ட இருந்து பிரித்துவிடாதீர்கள். உங்களையெல்லாம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்... எனக்கு என் பொண்ணு வேணும் வேற எதுவும் உங்ககிட்ட இருந்து வேணாம் இப்பவே நானும் என் பொண்ணும் எங்க பேர்ல இருக்க எங்க வீட்டுக்கு போறோம்..... தயவுசெஞ்சு யாரும் எங்களை தடுக்காதீங்க, அதே மாதிரி அவளை இந்த மாதிரி முடிவெடுக்க நீங்களோ இல்லை ராணாவோ முயற்சி பண்ணிங்கன்னா வாழ வேண்டிய வயசுல என் பொண்ணு தூக்கி கொடுப்பதற்கு பதில் நான் என் உயிரை விட்டுவிடுவேன் ” என்று கூறி நிறுத்தியவர்..

நடுவில் பேசவந்த தன் அண்ணியை பார்த்து.. “உங்களுக்கு உங்க பையனோட வாழ்க்கையும் அவனோட வார்த்தையும் எவ்வளவு முக்கியமோ அதைவிட எனக்கு என் பொண்ணு உயிர்தான் முக்கியம். இதுக்கு மேல இதை பத்தி யாரும் பேசாதீங்க, நாங்க போனதுக்கப்புறம் எங்களைப் பார்க்க ராணாவை வராமல் இருக்க செய்வது உங்கள் பொறுப்பு, அதையும் மீறி ராணா எங்களை பார்க்க வந்தாலோ திரும்பவும் என் பொண்ணு இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்க துணிந்தாலோ எங்க ரெண்டு பேரையும் நீங்க உயிரோட பார்க்க முடியாது. நாங்க அங்க போயிட்டு விவாகரத்து பத்திரம் அனுப்புறோம் தயவுசெஞ்சு என் பொண்ணோட உயிர் விஷயத்தில் விளையாடாமல் உங்க பையன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்துடுங்க” என்று கூறிவிட்டு தன் உடைமைகளையும் தன் மகள் உடைமைகளையும் எடுத்துக்கொண்டு தன் கணவரின் மூலம் தனக்கு வந்த சொத்தில் இருக்கும் வீட்டிற்கு யார் கூறுவதையும் கேட்காமல் தன் மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் பவானி.

பவானியும் நந்தினியும் தங்களின் வீட்டை விட்டு சென்றதை இப்பொழுது கூறினால் தன் மகன் யார் பேச்சையும் கேட்காமல் அங்கு சென்று பிரச்சனையாகிவிடும் என்ற காரணத்தினால் ராஜேந்திரன் தன் மனைவியிடமும் தாயிடமும் இங்க நடந்த எதுவும் ராணாவுக்கு தொலைபேசி வாயிலாக சொல்லக்கூடாது என்றும் நேரில் வந்ததும் சொல்லிப் புரிய வைத்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவன் நேரில் வந்ததும் அனைத்தையும் கூறியவர்.

“இங்க பாருப்பா எங்களுக்கு நல்லா புரியுது நந்தினி பண்றது முட்டாள்தனம்னு, ஆனால் எங்களுக்கு வேற வழி இல்ல நந்தினியோட உயிரையும் உங்க அத்தையோட உயிரையும் பணயம் வைத்து எங்களால எதையும் செய்ய முடியாது. அதுலயும் உங்க அத்தை நந்தினிக்காக எதையும் செய்யத் துணிவான்னு உனக்கே நல்லா தெரியும். இல்ல எனக்கு என்ன தோணுதோ அதை மட்டும்தான் நான் பண்ணுவேன்னு நீ பண்ணி அதனால அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆச்சுன்னா உங்க அப்பனை நீ உயிரோட பார்க்க முடியாது. இதுக்கு மேல உன் விருப்பம் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை” என்று நிறுத்தியவர் தன் மகனின் இறுகிய தோற்றத்தில் அவனின் கோபத்தை அறிந்தாலும் வேறு வழி இன்றி தான் கூற வந்ததை கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார் ராஜேந்திரன்.

தன் பேரனின் வேதனையை கண்ணுற்ற ராணியம்மா பேரனின் மறுபுறம் அமர்ந்து அவனின் கைகளை ஆறுதலாக பற்றிக்கொண்டு..

“நாம என்ன ராசா பண்ண முடியும் அவ வாழ்க்கையில அவளே மண்ணள்ளி போட்டுக்கிட்டா.. அவளுக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான். அவ கூட உன் அத்தையும் சேர்ந்துகிட்டு ஆடுறா எல்லாம் நம்ம கைமீறிப் போயிடுச்சு, உன் பொண்டாட்டி இதுக்கு மேல சும்மா இருந்தாலும் பவானியை யாராலும் அடக்க முடியாது. அதனால நீயே யோசிச்சு தெளிவான ஒரு முடிவு எடு ” என்றவர் தன் மருமகளைப் பார்த்து தன் பேரனை சமாதானப்படுத்தும்படி கண் ஜாடை காட்டி விட்டு அங்கிருந்து அகன்றார்.

தன் மகனின் துயரத்திற்கு சிறிதளவும் குறையாமல் தன் மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று மிகுந்த மன வேதனையில் உழன்றாலும் இப்பொழுது தன் மகனுக்கு தன்னுடைய ஆறுதல் மிகவும் முக்கியம் என்பதால் தன் வேதனையை மறைத்துக்கொண்டு தன்னருகில் இறுகி சிலை போல் அமைந்திருக்கும் மகனின் சிகையில் ஆறுதலாக கொடுத்தவரின் கரங்களைப் பற்றிக் கொண்ட ராணா தன் தாயின் மடியில் தன் சிரம் சாய்த்து..

“ஏம்மா இப்படி பண்ணா இதுக்காமா என்ன காதலிக்கிறேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா? ” என்ற வேதனை ததும்பும் குரலில் தன் தாயிடம் கேட்டவன்.

“அவ பண்றது தப்புன்னு சொல்லி எல்லாரும் அவளுக்கு புரிய வைக்கிறது விட்டுட்டு என்ன எல்லாரும் புரிஞ்சுக்க சொல்றாங்க. இதுல அவ மட்டும் இப்படி பண்ணிட்டு இருந்தா ஈஸியா வழிக்கு கொண்டு வந்து புரிய வெச்சுடுவேன் ஆனா இந்த அத்தை! அவ கூட சேர்ந்துக்கிட்டு அவளுக்கும் மேல பண்றாங்க, இதுல எல்லாரும் அவங்களுக்கு சப்போர்ட் வேற நான் என்னதான் அம்மா பண்ணட்டும் ?” என்று தன் தாயின் மடியில் சிறுவயதில் அடிபட்டு தன்னிடம் அடைக்கலமாகும் பாலகனைப் போல் செய்வதறியாது தற்பொழுது தன்னிடம் அடைக்கலமாகி இருக்கும் தன் மகனை பார்த்தவருக்கு தன் இதயத்தில் தோன்றிய வேதனை தாங்க முடியாமல் அவனின் மேல் மயங்கி சரிந்தார் இந்திரா ...

தன் மேல் மயங்கி விழுந்த தன் அன்னையைக் கண்டு பதறி எழுந்த ராணா.. "அம்மா.. இங்க பாருங்கம்மா.. உங்களுக்கு என்ன ஆச்சு?" என்று பதற்றத்தில் அவரின் இரு கன்னங்களைத் தட்டி சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சித்து கொண்டிருந்தவனின் குரல் கேட்டு அங்கு வந்த அனைவரும் இந்திராவின் நிலையறிந்து அவரின் மயக்கம் தெளிய வைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களுக்கு அவரின் நிலை அறிய அவரவர் மனநிலைக்கேற்ப தங்களின் சிந்தனையிலேயே மருத்துவமனையில் அமர்ந்திருந்தனர் அனைவரும்.

தலையை தன் இருகைகளிலும் தாங்கி அமர்ந்திருந்த ராணாவோ தன் தாயின் இந்த நிலைமைக்கு காரணமான நந்தினியை விவாகரத்து செய்யும் முடிவிற்கு வந்திருந்தான்.


ஸ்வரமாகும்.......
 
Status
Not open for further replies.
Top