All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் "நான் கடவுள்" - கதை திரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் இந்த புது வருடத்துல புது கதையின் டீசரோடு வந்துட்டேன் . எத்தனை பேர் மாயாவி படிச்சிருக்கீங்க , ஸ்ரீ திவி இவர்களின் மகன் கதிர் பற்றிய கதை "நான் கடவுள்". இப்போ போட்டுருக்க டீசர்ல தெரிஞ்சுருக்கும் கதை எப்படி பயணிக்கும்னு . பிடிச்சிருக்கா இல்லையானு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா ஆர்வத்தோடு எழுத உதவியா இருக்கும் .
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34568

நான் கடவுள்



அதிகாலை நான்கு மணி புரசைவாக்கத்தில் உள்ள அந்த சாலை, துப்புரவு தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது . கேலியும் கிண்டலுமாக குப்பைகளை நீக்கி சுத்தம் படுத்திக் கொண்டிருந்தவர்களின் பார்வையில் சற்று தொலைவில் தாறுமாறாக வந்துக் கொண்டிருந்த ஆடி கார் பட,



"ஏய் ரோட்ல இருந்து ஓடுங்கடா ... கார்ல பிரேக் பிடிக்கல போல ... சீக்கிரம் ..." என்று கத்திக் கொண்டு அங்கிருந்து தெறித்து ஓட, வேகமாக வந்த ஆடியோ தன் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி தீப்பற்றி எறியவும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.



அதுவும் காரில் இருந்து கேட்ட மரணஓலம் , அவர்களின் ஈரக்குலையை நடுங்க செய்வதாய் இருந்தது. தங்களால் முடிந்தளவுக்கு முயற்சி செய்தும் பெரும் ஜுவாலைக்குள் இருந்து காரில் உள்ளவர்களை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.



அடுத்த பத்து நிமிடங்களில் அந்த இடமே போலீஸ் மற்றும் ரிப்போர்ட்டர்சின் வருகையால் பரபரப்பானது.



முதல் கட்ட விசாரணையில் காருக்குள் இருந்தவர்களில் கல்வி தந்தை என்று அழைக்கப்படும் கேபி கல்லூரியின் உரிமையாளர் கே பாலசந்தரின் இளைய மகனும் ஒருவர் என்ற செய்தியே மொத்த தமிழ்நாட்டையும் அந்த அதிகாலை வேளையில் உலுக்கிப்போட்டது.



*****************************************************



" என்ன மயித்த புடுங்கிட்டு இருக்கீங்க ... மொத்த தமிழ்நாடே பத்திகிட்டு எரியுது ... இன்னும் உங்களால இது எப்படி நடந்துச்சுனு சொல்ல முடில ... இவ்வளவு அட்வான்ஸ்ட் டெக்னாலஜி இருந்தும் , வண்டிய ஓட்டிட்டு வந்தது யாருனு இன்னும் கண்டு புடிக்க முடில ... போலீஸுனு வெளில சொல்லிக்காதீங்க ... வெட்க கேடா இருக்கு ..." என்று சீரிக் கொண்டிருந்தான் ஆதித்ய பாண்டியன் தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர்.



தலைமை செயலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தான்.



"கேபி பையனுக்கே உங்களால பாதுகாப்பு கொடுக்க முடில ... பொது மக்களுக்கு நல்லா புடுங்குவீங்கயா ... உங்க டிபார்ட்மெண்ட்க்கு சேல தர சொல்றேன் யூனிபார்ம கழட்டி வச்சுட்டு அத கட்டிட்டு வாங்க , அதுதான் பொருத்தமா இருக்கும் ..." என்று அங்கிருந்தவர்களை அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தான்.



ஆதித்யன் அசிங்கப்படுத்தி பேச பேச மீசை முடி துடிக்க கழுத்து நரம்பு புடைக்க கேட்டுக் கொண்டிருந்த விக்னேஸ்வரனுக்கு கோபத்தை அடக்குவது பெரும் பாடாக இருந்தது. அதுவும் இதெயெல்லாம் கேட்டுக் கொண்டு காது கேளாதவர் போல அமைதியாக உட்கார்ந்திருந்த டிஜிபி மேல் கோபமும், ஆத்திரமும் வர , சீட்டில் இருந்து எழ போனவனை தடுத்து நிறுத்தியது ஹரியின் குரல் .



"சாரி டு சே திஸ் சார் ... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கவங்க எல்லாரும் அப்படிதானு பொது மக்களுக்கு எப்பவே தெரியும் சார் ...புதுசா புடவை கட்டிதான் நிரூபிக்கணும் அவசியமில்ல ..." என்ற ஹரியை அதிர்ந்து போய் மற்ற அதிகாரிகள் பார்த்திருக்க ,



" இத சொல்ல வெட்கமா இல்ல ... அப்போ நாளைல இருந்து மீசையை மழிச்சு விட்டுட்டு கைல வளையல் மாட்டி புடவை கட்டிக்குங்க ...” என்று கோபத்தின் உச்சத்தில் கத்திக் கொண்டிருந்தவனை கூலாக பார்த்தாவர்,



"நோ டென்ஷன் சார் ... இப்போ சின்ன வயசுல இருக்கவங்களுக்கு கூட நெஞ்சு வலி வருது ... எங்கள பாருங்க இந்த வருஷம் மட்டும் பதினேழு பொண்ணுங்க பாலியல் தொல்லையால் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க ... ஆனா பாருங்க கேபி பையன் போல பெரிய வீட்டு பசங்களால கொலை செய்யப்பட்டவங்க தான் அந்த பொண்ணுங்கனு நமக்கு மட்டுமில்ல தமிழ்நாட்டுல இருக்க எல்லாருக்கும் தெரியும் ... தெரிஞ்சும் நாங்க நடவடிக்கை எடுத்தோமா இல்லையே ... எப்படி நாங்க உண்மை தெரிஞ்சும் தெரியாதது போல எல்லாத்தையும் பொத்திகிட்டு ... ஓஹ் சாரி சாரி ... எல்லாத்தையும் மூடிக்கிட்டு கண்டுக்காம போக பழகிட்டோமே ... அப்படி இருங்க சார் ... எங்களை பார்த்து கத்துக்குங்க ..." என்று புன்னகையுடன் கூறியவனை கண்டு கோபத்துடன் இருக்கையிலிருந்து எழுந்தவன் ,



" என்ன ஹரிஹரன் ... நக்கல் பண்றியா ... இதுவர நாலு பேர் செத்துருக்காங்க ... உங்க கண்ணுல எல்லாம் எவனோ ஒருவன் விரல் விட்டு ஆட்டிகிட்டு இருக்கான் அவன பிடிக்க துப்பில்லமா என்ன நக்கல் அடிச்சுகிட்டு இருக்க ... நீயெல்லாம் என்ன போலீஸ்காரன் ... வெட்கமா இல்ல ..." ஆங்காரமாய் கத்திக் கொண்டிருக்க, பொறுமையாக தன் இருக்கையிலிருந்து எழுந்த ஹரி



"வெட்கம் சூடு சொரணை மானம் இது எல்லாத்தையும் ... எப்போ நீங்கலாம் ஆட்சிக்கு வந்தீங்களோ அப்பவே மூட்டை கட்டி வச்சாச்சு ... அப்புறம் நியாயமா பார்த்தா அந்த நாலு பேரையும் நாங்க தான் போட்டு தள்ளியிருக்கணும் எங்க கைய தான் நீங்க எல்லாம் கட்டி போட்டுடீங்களே ... ஒருவேள இங்க நடக்கிற அக்கிரமத்த பார்த்து கடவுளுக்கே கோபம் வந்து மனித உருவத்துல வந்து போட்டு தள்ளிட்டாரோ என்னவோ ... கண்டிப்பா அந்த மனித கடவுள் யாருனு கண்டு பிடிப்பேன் ... தண்டிக்கிறதுக்காக இல்ல ...அவன் மூத்திரத்த வாங்கி எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கு கொடுக்கத்தான் ..." என்று நிதானமாய் பேசியவர் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்து வெளியேறிருந்தார்.



********************



அதிகாலை மூன்று மணி, தெலுங்கானா மாநிலம் அலம்பூர் சிவன் ஆலயத்தின் குளத்து நீரில் வெள்ளை வேஷ்டியும் தோளை சுற்றிய துண்டுடன் ஐந்து முறை நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான் அவன். பின் ஆலயத்தை நோக்கி கை கூப்பி கண் மூடி சில நொடிகள் வணங்கி நின்றவன், தன் வேண்டுதலை முடித்தபின் நீரிலிருந்து மெல்ல மேலே ஏறியவனின் மேனி சிலிர்த்து ரோமம் குத்திட்டு நின்றது.



பூட்டியிருந்த குளத்து கேட்டின் கம்பிகளை பற்றி மேலே ஏறி வெளியே குதித்தவன், துண்டை உதறி உடலை சுற்றி போர்த்திக் கொண்டவன் சற்று தொலைவில் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி நடந்தான். அந்நியனை அந்த நேரத்தில் கண்ட தெரு நாய்கள் குறைத்து பயமுறுத்த , சிறிதும் பயமில்லாதவனாக காரை நோக்கி நடந்தவனை,



"யாரு நீங்க ... இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க ..." என்ற கேள்வியில் ஒரு நொடி உடல் இறுகி தளர்ந்தவன், மெதுவாக திரும்பி பார்த்தான். அறுபது வயது தக்க முதியவரும் அவருடன் பின் இருபதுகளில் இருக்கும் இளைஞன் ஒருவனை கண்டவன் வாய் திறக்காமல் சிறு புன்னகையுடன் குளத்தை நோக்கி கையை காட்ட,



" இந்த நேரத்துல குளத்துலயா ..." என்று சந்தேகத்துடன் கேட்டவரை கண்டு குறுநகை புரிந்தவனிடம்,



"உங்க பேர் என்ன ... எங்கிருந்து வரீங்க ..." என்று அடுத்த கேள்வியை கேட்கவும் தலையை மெல்ல ஆட்டி சிரித்தவன் , கோவிலை நோக்கி தன் கையை மீண்டும் நீட்டியவனை கேலியாக பார்த்தவர்,



"அங்க கடவுள் தான் இருப்பார் ... தம்பி என்ன சொல்ல வரீங்க கடவுள்னா ...” என்று கேலியாக சிரித்தவரை பார்த்து இதழ் பிரியாமல் சிரித்தவன் ,



" ம்ம்ம் ... அப்படித்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க..." என்றவன் அவரின் பதிலுக்கு காத்திராமல் காரை நோக்கி நடந்தான்.



அருகில் நின்றிருந்த இளைஞன் ஏதோ யோசனையோடு அவனை பார்த்திருக்க , அந்த முதியவரோ ,



" நரசிம்மா யாருடா இந்த பைத்தியக்காரன் ... நம்மள லூசுன்னு நினைச்சுட்டானா இல்ல அவன் லூசா ..." என்று புலம்பியவரை கண்டுக் கொள்ளாமல் காரில் ஏறி மறைந்தவனையே அழுத்தமாக பார்த்தவனுக்கு எதுவோ சரியில்லை என்று அவனின் போலீஸ் புத்தி அடித்து சொல்லியது.
 
Status
Not open for further replies.
Top