All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#hanzwriteup

பாலாவிற்கு உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். அவனுடைய வனியான ராகவர்ஷினியை அவன் கையாளும் விதம் அவ்வளவு அழகாக இருக்கின்றது. சம்பந்தமே இல்லாமல் வர்ஷா இவனை திட்டும் சமயங்களில் எல்லாம் இவனைப் பார்த்து ஐயோ பாவமே என்று எண்ண வைக்கின்றான். 😥😥😥 மனைவியின் வயிற்றில் இருக்கும்போது தனது மகனை உணர முடியாத சந்தர்ப்பங்களில் அவனது உணர்வுகளை ஆசிரியர் கண்முன் கொண்டு வருகின்றார். ஒவ்வொரு முறையும் வர்ஷா பாலாவை அவமதிக்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு மனது கனக்கிறது. 😥😥😥😥
எல்லாவற்றிற்கும் சேர்த்து அவனது மகனான விஷுவை அவன் தாங்கு தாங்கு என்று தாங்குகின்றான். இவனும் விஷுவும் வரும் சந்தர்ப்பங்கள் எல்லாம் அவ்வளவு நெகிழ்வானதும் அழகானதுமாகும். இவர்கள் இருவரினதும் உரையாடல்கள் மனதை கட்டிப்போடுகின்றன 👌🏻👌🏻👌🏻 வர்ஷா செய்தவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் முகமாக இவன் அவளை வாட்டுவது எனக்கு சந்தோஷத்தை அளிக்கின்றது. அவள் மேல் ஒரு துளி கூட பரிதாபம் வரவில்லை. 🔥🔥🔥🔥

வர்ஷா உண்மையிலேயே ஒரு முட்டாள் வாத்து. எடுப்பார் கைப்பிள்ளை. தனக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்குத்தெரியவில்லை. அடுத்தவர்கள் கூறுவதை அப்படியே நம்புபவள். நம்ப வேண்டியவர்களை நம்பாமல் யாரை நம்பக்கூடாதோ அவர்களை கண்மூடித்தனமாக நம்புவதில் அவள் கெட்டிக்காரி. 🤧🤧🤧 முன்னால் செய்துவிட்டு பின்னால் அதற்கு வருந்துவது இவளது செயல். இவளை எனக்கு கன்னம் கன்னமாக அறைய தோன்றுகின்றது. எதை மன்னித்தாலும் இவள் பிறந்து ஒரு சில நொடிகளேயான பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்றதை என்னால் மன்னிக்கவே முடியாது. யார் என்ன சொல்லியிருந்தாலும் இவள் குழந்தையுடன் இருந்திருக்கவேண்டும். அடுத்தவர்களின் பேச்சை கேட்டு இவள் விட்டுச்சென்றது கணவனையும் குழந்தையையும் மட்டுமல்ல இவளது அழகான வாழ்க்கையையும் சேர்த்தே..
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல இவள் அனைத்தையும் செய்துவிட்டு பின்னர் திருந்தினாலும் எனக்கு அவளை பிடிக்கவில்லை.. அவளது பிடிவாதத்தால் ஒரு பிஞ்சின் சிறுபராயத்தில் ஒரு தாய்க்குரிய அன்பையும் அரவணைப்பையும் பாசத்தையும் இவள் இழக்கச் செய்து விட்டாள். 😢😢😢😢

என்னைப் பொறுத்தவரை இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணகர்த்தா மல்லிகா மட்டுமே. அப்போதும் இப்போதும் இவரது பிடிவாதம் தான் அனைவரது வாழ்வையும் புரட்டியிருக்கின்றது. 🤧🤧🤧

எனக்கு சங்கீயின் மனநிலை புரிகின்றது. அவளது செயல்கள் தப்பாக இருந்தாலும் அவளது ஒரே நோக்கம் பாலாவை கரம்பிடிப்பதாகும். அவளது காதலை வாழவைக்க அவளது காதலனை நடைபிணமாக்கிவிட்டாள். பாலாவிற்கு வர்ஷாவை விட சங்கீதாவே பொருத்தமானவள். பாலா சங்கீதாவை மணமுடித்திருந்திருந்தால் அவனது வாழ்வு இப்படி அல்லல்பட்டு இருக்காது. 🙄🙄🙄

ஷ்ரவன் குளத்தில் இருக்கும் கொக்கு போல... அக்குளத்தில் எப்பொழுது நீர் வற்றுகிறதோ அப்பொழுது அதனை விட்டு நீங்கி விடும் சந்தர்ப்பவாதி.. 😏😏😏

ஆரம்பத்தில் இருந்தே தன்ஷி ஒரு புரியாத புதிர். அந்தப் புதிரை கடைசி அத்தியாயத்தில் விடுவித்த விதம் அருமை…

இறுதியாக எனக்கு ஒரு சிறிய மனக்கவலை இருக்கின்றது. கதை முழுக்க பாலாவினதும் வர்ஷாவினதும் பிரிவையும் துயர நிகழ்வுகளை மட்டுமே அதிகம் பார்த்தோம். அதனால் அவர்களின் சந்தோஷமான பக்கத்தை கூடுதலாக ஒரு அத்தியாயத்தை எழுதி காட்டியிருக்கலாம்.. 😫😫😫
மிக்க நன்றி மா 💞💞
என்னது சங்கீ ஹீரோயினா :oops::rolleyes::rolleyes:
அவ வாழணும்னு இநோருத்தி வாழ்க்கையை தெரிஞ்சே அழிச்சு இருக்கா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபிலாக் செம.பாலா வர்ஷ் புரிந்து அதை உணர்த்திய விதம் அழகு.விஷு பாலா வர்ஷ் வரவிருக்கும் குட்டி கியூட் குடும்பம் கவி sis.❤❤❤❤❤❤
மிக்க நன்றி மா 💞💞
 
Top