Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பானுரேகா...ஹாய் கவி சந்திரா... நான் இப்போ தான் உங்கள் கதையை.... 15 எபி முழுவதும் படிச்சேன்...... !! ரொம்ப நல்லாயிருக்கு கதை.....!! அதுவும் நீங்கள்.... கதையை சுவாரசியமாக நகர்த்தும் விதம் அருமைமா....!! இது உங்கள் முதல் கதையா..... ஆனால் இது தான் ... நான் படிச்ச உங்களோட முதல் கதை.....!!...வழக்கமான காதல் கலந்த குடும்ப கதை தான் என்றாலும்... அதை அழகாக கொண்டு சென்று... சுவாரசியம் குறையாமல் கொடுப்பதில் தான்... எழுத்தாளரின் வெற்றியே அடங்கி யிருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.... !அந்த வகையில்... உங்களின் எழுத்து... தனித்துவமான முறையில் என்னை கவர்ந்தது....! அடுத்தடுத்த காட்சிகள் நாயகன் .... நாயகியை சுற்றியே கொண்டு சென்ற போதும்.... சிறிதும்.... தொய்வின்றி.... கதையை நீங்கள் நகர்த்தும் விதம் மிகவும் சிறப்பு.... அதற்கு நிச்சயம்... உங்களின் எழுத்து நடையே காரணம் அதற்காக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!! கதைக்கு வருவோம்.... கதையின் நாயகனும்... நாயகியும் அறிமுகமே...அவர்களின் கல்யாணம் தான்.... அதுவும் கொஞ்சமும் சம்பந்தமில்லாத..... பக்கத்து கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்தவன்..... தனக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத நாயகி நிவேதிதாவிற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை.... போலீஸ் கைது செய்ய..... கண்களில் கண்ணீரோடு..... தன் திருமணம் நின்றுவிட்டது அறிந்து அதிர்வில்..... மீளவும் முடியாது அடுத்தது என்ன என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து நின்று பயமுறுத்த செயலற்று கலக்கத்துடன் நின்ற பெற்றோரை.... நிமிர்ந்து.... நோக்கிய. நிதியின் கண்களைப் பார்த்து...... பார்த்தவுடன் தன் மனதில் ராணியாக அமர்ந்து விட்டவளை... தானே உணராது.... தன் கொள்கைகளுக்கு மாறாய்.... அவளை திருமணம் செய்து கொண்டு தன்னில் பாதியாய் ஏற்றுக்கொள்வதும்.....! ஆச்சரூயத்தையும்.... அதிர்வையும் ஒருங்கே வரவழைத்தது....! இவ்வாறாக.... வித்தியாசமான தருணத்தில்... விதிவசத்தால் இணைந்த ருத்ர பிரதாப்..... நிவேதிதா.. இருவரும் மணம் இணைந்து காதலாய் தன் வாழ்வில் இணைவார்களா என்பதை அழகான.... கதையின் கரு....!! இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம்.... மணமக்கள் இருவருக்கும் ஒருவரைப்பற்றி...ஒருவருக்கு..... பெயர்..... படிப்பு.... அந்தஸ்து.... தொழில்..... இப்படி எந்த விவரமும்.... தெரியாது.... இதைவிட.... கல்யாணம் என்பதையும்.... ஒரு பெண்ணை தன் வாழ்க்கை துணையாக... ஏற்றுக்கொள்வோம் என்று..... இவர்களின் திருமணம்... நடந்து முடியும் வரை...ருத்ரனுக்கே தெரியாது....!!.. திருமணம் முடிந்து தன் மனதை தானே ஆராய்ந்து..... தான்.... தனக்குள் நிவேதிதாவின் காதலையே.... உணர்ந்து கொள்கிறான்..... ஆனாலும்.... ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் க்கு இவ்வளவு சீக்கிரம் பல்பு எரிஞ்சுதே பெரிய விஷயம் தான்..... !... ஆனால் தன்னவளின் மனதை அறியாது..... தன்மனதை அவளுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை அந்த ஸ்டரிக்ட் ஆபீஸர்.....!! காதலாய் இவன் தன் மனைவிக்கு.... செய்யும்.... ஒவ்வொரு விஷயத்தையும்..... அவன் மனைவி உணர்வாளா.... உணர வைப்பானா..... !! என்பதை நானும் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்... கவி சந்திரா.... அடுத்த பதிவோடு சீக்கிரம் வாங்க..... !! சூப்பர்....!!????????????????~????????????????????
முதலில் உங்களின் விரிவான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி??????
இது என் முதல் கதை .அவர்களின் வாழ்க்கையில் நடப்பவற்றை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்....??? நாளையே அடுத்த எபியுடன் உங்களை சந்திக்க வருகிறேன்....???