All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "வெள்ளைப் புறா ஒன்று…" - கருத்துத் திரி

Sarala k

Bronze Winner
Different story.. first Malar Maru Manathku samathichi mamiyar Veta ethirtu Kalyan am paniirkanum...I'lla single mother Paiyan valarka strong ah irunthirukanum...malar mathiri inum enn mudivu edukanum nu suthirukra samuthayam vidrathila...kandipa ethanai malarkal samuthaythil matitu irupainga.. very nice story...and
Story title nice....
 
priyanila

Well-known member

Yes sis neenga sonna 2 ways choose panniruntha yaarukkum kastam irunthurukathu malar ipdi 3rd way choose panni thannoda life alichukitta ippo malaroda son nelama ennagum itha yosikkalaye and shanmugam malar ku puriya vachu vera mrg panni vachurukanum
 
இந்த கதையை வாசிக்கும் போது மலர் மீது கோபம் தான் வந்தது. கணவனை இழந்த பெண்கள் இன்றும் பல துன்பங்களையும் சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைத்துள்ளார்கள் . மலரின் கல்வியை நிறுத்தி திருமணத்தை செய்து வைத்து என்னத்தை கண்டார்கள். மலர் தனது தாய் மன உறுதியுடன் எப்படி தங்களை வளர்த்தாள் என்பதையும் மறந்து விட்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கேடுகெட்ட சமுதாயம்.. அவர்களுக்கு எல்லாம் தங்கள் குடும்பங்களிலும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மலருக்கு நடந்தது நாளை உங்கள் குடும்பங்களில் நடந்தால் இப்படி தான் அவதூறு பேசுவீர்களா??? ஆனால் சண்முகம் செய்தது மிக பெரிய துரோகம். அவளை வேறு ஒருவரை திருமணம் செய்து கொடுத்து பிள்ளையையும் தாயையும் நின்மதியா வாழ விட்டிருந்தாள் இந்த நிலை வந்திருக்காது. குடும்ப கௌரவம் கலாச்சாரம் என்று சொல்லி வேலியே பயிரை மேய்ந்த நிலை தான். அதற்காக மலர் செய்தது நியாயம் என்று சொல்ல வரவில்லை. பிள்ளையை நினைக்காமல் உயிரை இழந்து விட்டு மகன் தனிமையில் அழுகின்றான் துன்புறுகிறான் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.......
 
Daffodil

Well-known member
முதலில் இது மாதிரி தலைப்பை எப்படி தேர்ந்தெடுத்தீங்க.... அதே மாதிரி கஷ்டப்படுற பொண்ணுங்களுக்கெல்லாம் ஏன் மலருனே பேர் வைக்கறீங்க.... என்னால நேற்றிலிருந்து இதை விட்டு வெளியில் வரவே முடியல.... அதுவும் சண்முகம் மலரை போனில் திட்டியதில் ஆரம்பித்து அவள் இறக்கும் வரையில் உள்ள நிகழ்வுகள் ரொம்ப அழுத்தமான பதிவுகள்
இது 80's ல நடந்த கதை அப்படின்றதால அப்போது இருந்த மனிதர்களின் மனநிலையை சரியா சொல்லியிருக்கீங்க....
இது மாதிரி கதைகள் அப்போது இருந்த எழுத்தாளர்கள் நிறைய பேசியிருப்பார்கள்... அதிலெல்லாம் அந்த பெண்கள் எதிர்த்து பேச தெரியாதவர்களாகவும், சமூகக் கட்டுப்பாட்டை மதித்து இது தான் வாழ்க்கை என்று இருப்பார்கள்.... சுற்றி இருப்பவர்கள் அப்பெண்னை கஷ்டப்படுத்துவார்கள்... ஆனால் யாராவது ஒருவர் அவருக்கு ஆதரவாக இருந்து அவருக்கு மறுவாழ்வு அளிப்பார்கள்.....
ஆனால் இதில் ஒரு படித்த டவுனில் சுதந்திரமாக வளர்ந்தப் பெண் கிராமத்திற்கு திருமணமாகி சென்று கணவனை இழந்து அவள் வாழ்வு தடுமாறிய விதத்தை இதை விட யாரும் சொல்ல முடியாது...
 
Daffodil

Well-known member
இப்ப இருக்கும் பெண்களுக்கு மலர் சரியான முடிவை எடுக்காமல் தவறான பாதையை தேர்ந்தெடுத்ததாகவே தோன்றும்.... ஏனெனில் இப்போது இருக்கும் பெண்களுக்கு திருமணம் என்பது படித்த முடித்து 21 வயதிற்க்கப்பிறகே நடக்கிறது.. ஓரளவு வெளியுலகம் அறிந்தபின் திருமணம் நடப்பதால், பெற்றவர்களின் துணையுடன் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பிருக்கும்.... இப்போது கிராமங்களில் கூட இளம் விதவைகளுக்கு மறுமணம் என்பது எளிதாக நடக்கிறது....
ஆனால் இக்கதை நடந்த கால சூழ்நிலையில் மறுமணம் என்பது பெண்களையே ஏற்றுக் கொள்ளப்படாத விஷயம்... அப்போது தான் அதற்கான குரல்கள் எழுந்த சமயம்.... மலரின் உறவினர்கள் நகரத்தில் இருந்ததால் அவர்கள் அதை எடுத்து சொல்லியிருப்பார்கள்.... ஆனால் நிலையிலே ஊறியிருக்கும் கிராமத்து மக்களுக்கு ஆது அவ்வளவு எளிதல்ல....
அது போல் மலரின் அம்மா இரு பிள்ளைகளையும் ஆண் துணை இல்லாமல் வளர்த்ததற்கான காரணம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மறுமணம் என்ற வார்த்தை கூட இருந்திருக்காது.... அவர்கள் கணவன் இறந்ததும் ஒரு வேலை இருந்தது.. அவர் கணவர் இரு குழந்தைகளுக்குப் பிறகே இறந்திருக்கிறார் அதனால் அவர்கள் புரிதலுடன் வாழ்ந்திருக்களாம்... அதனால் கணவனிற்குப் பிறகு குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு வாழ்ந்திருப்பார்கள்....
 
Daffodil

Well-known member
இங்கு மலரின் நிலை முற்றிலும் மாறுபட்டது... 18 வயதில் என்னவென்று அறியும் முன்பே திருமணம், அரைகுறை படிப்புத் தந்த துடுக்குத்தனம், கணவன் இருந்த ஒரு வருடமும் புரிதல் இல்லாத வாழ்க்கை, வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்பே கணவன் இழப்பு என அனைத்தும் அவள் புரிந்துக்கொள்வதற்குள் முடிந்து விடுகிறது...

அம்மா வீட்டில் இருக்கும் வரை அவள் தனக்கு நடந்த இழப்பை விட்டு வெளிவராதது, தனக்கு ஏன் இந்த நிலைமை என்ற கழிவிரக்கத்திலேயே இருந்ததால் மறுமணம் பற்றிய எண்ணம் ஏற்படவில்லை... பின் உடன்பிறந்த சகோதரனின் நலனுக்காக புகுந்த வீட்டில் மறுபடியும் நுழைகிறாள்....
அவள் வாழ்ந்த சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட இடம் மற்றும் மனிதர்கள்... குளித்து சாதாரணமான உடையணிந்தால் கூட தவறாக பேசும் மனிதர்கள், தான் தவறாக நடக்காத போதும் கூட தன்னைப் பற்றி தவறாக பேசும் மனிதர்கள்.... தனக்கென சுயமாக எந்த வேலையும் இல்லாமல் அடுத்தவரை சார்ந்து வாழும் போது தன்னம்பிக்கை என்பதும் இல்லாத நிலை.....
சும்மா இருக்கும் மனம் சாத்தானின் வீடு என்பார்கள்.... அப்படித்தான் தான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் சண்முகம் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது... ஆனாலும் அது தவறு என்று மறைமுகமாகவே ஆசை வளர்த்துக் கொள்கிறாள்... ஆனால் கணவனை இழந்தவள் என்பதற்காகவே கறித்துக் கொட்டும் மாமியார், நன்றாக பழகிக்கொண்டிருந்த சுமதியின் மாற்றம், ஊரார்களின் தவறான பார்வை, ஆறுதலாக யாரும் இல்லாத தனிமை இவை எல்லாம் சேர்ந்து இதை செய்தால் என்ன தவறு என்ற முடிவுக்கு செல்கிறாள்....

இப்போது இருக்கும் தொலைபேசி வசதி இருந்திருந்தால் கூட அவள் அம்மாவிடம் அடிக்கடி பேசி தன் மனபாரம் குறைந்திருந்தால்இது மாதிரி தவறான முடிவை நோக்கி சென்றிருக்க மாட்டாள்... அது போல் தன்னையே சுற்றி வரும் தனிமையிலிருக்கும் அழகான பெண்ணை எந்த ஆணும் நிராகரிக்க மாட்டான்.. அதுவே சண்முகம் விஷயத்தில் நடந்தது... விலக்க நினைத்தாலும் முடியாத சூழலில் அவனும் மாட்டிக்கொள்கிறான்....
வெளியில் இருந்து பார்க்கும் நமக்கெல்லாம் இவர்கள் மனக்கட்டுப்பாடில்லாமல் இப்படி செய்து விட்டார்கள் எனத் தோன்றும் ஆனால் அந்த நிலையில் வாழ்பவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்.....
கடைசியில் இறந்த பின் குழந்தைக்காக அழுவது, இது இன்றும் கிராமங்களில் சிறு வயதில் திருமணம் நடந்து கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக, பிரச்சினை எதிர்நோக்க பயந்து குழந்தைகள் பற்றிய எண்ணமில்லாமல் இறப்பை தேர்ந்தெடுக்கும் பெண்கள் நிறைய உள்ளனர்...அதுபோல் தான் மலரும்.... சண்முகம் நிராகரிப்பு தந்த வலி, குற்ற உணர்ச்சி, உடல் உபாதைகள் அனைத்தும் அவளை தப்பான எண்ணத்திற்கு வழி வகுத்திருக்கிறது...
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க மிக்க நன்றிமா ❤️❤️❤️ . மலரை இந்த கதையை புரிஞ்சு கொண்டதுக்கு , இத படிக்கும் போது கண்ணுல தண்ணி வந்திடுச்சு . என்ன சொல்லனு தெரில நன்றியை தவிர ❤️❤️❤️
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதையை வாசிக்கும் போது மலர் மீது கோபம் தான் வந்தது. கணவனை இழந்த பெண்கள் இன்றும் பல துன்பங்களையும் சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைத்துள்ளார்கள் . மலரின் கல்வியை நிறுத்தி திருமணத்தை செய்து வைத்து என்னத்தை கண்டார்கள். மலர் தனது தாய் மன உறுதியுடன் எப்படி தங்களை வளர்த்தாள் என்பதையும் மறந்து விட்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கேடுகெட்ட சமுதாயம்.. அவர்களுக்கு எல்லாம் தங்கள் குடும்பங்களிலும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மலருக்கு நடந்தது நாளை உங்கள் குடும்பங்களில் நடந்தால் இப்படி தான் அவதூறு பேசுவீர்களா??? ஆனால் சண்முகம் செய்தது மிக பெரிய துரோகம். அவளை வேறு ஒருவரை திருமணம் செய்து கொடுத்து பிள்ளையையும் தாயையும் நின்மதியா வாழ விட்டிருந்தாள் இந்த நிலை வந்திருக்காது. குடும்ப கௌரவம் கலாச்சாரம் என்று சொல்லி வேலியே பயிரை மேய்ந்த நிலை தான். அதற்காக மலர் செய்தது நியாயம் என்று சொல்ல வரவில்லை. பிள்ளையை நினைக்காமல் உயிரை இழந்து விட்டு மகன் தனிமையில் அழுகின்றான் துன்புறுகிறான் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.......

மலர் தைரியமான பொண்ணு , கணவன் இறந்ததும் அவ தைரியத்த சுற்றி இருந்தவங்க அழிச்சுட்டாங்க. அவ தற்கொலை முடிவு தப்புதான் தினமும் அவ உணர்வுகளோட போராட முடியாதுனு தான் அந்த முடிவ எடுத்தா
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes sis neenga sonna 2 ways choose panniruntha yaarukkum kastam irunthurukathu malar ipdi 3rd way choose panni thannoda life alichukitta ippo malaroda son nelama ennagum itha yosikkalaye and shanmugam malar ku puriya vachu vera mrg panni vachurukanum

❤️❤️❤️ shanmugam pazhamaiyil oori ponavan
 
Top