மகன் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த தாயும் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே உள்ள பிரச்சனை சரிசெய்யனும் அல்லது சரியாக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் அதை விட்டு . பிரச்சனை இருக்கும் போது எல்லாம் அமைதியாக இருப்பது, மகன் அடிக்கும்போதும், தகாத வார்த்தை பேசும்போது எல்லாம் அமைதியாக இருப்பது ,சாருவை கூட்டிக் கொண்டுவந்தபோது அவர்களிடைய இருக்கும் உறவு பற்றி தெளிவாக அனைவரிடமும் சொல்லி குறிப்பாக மஹாவிடம் கூறி அவளை சமாதனம் படுத்தாமல் அவளை மேலும் மேலும் தனிமைப்படுத்தி. மகன் கஷ்டம் பட்டவுடன் மருமகள் செய்யாதா தப்பை எல்லாம் கண்டு அவளை மேலும் வருந்த செய்வைப் பார்த்தால் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது உண்மைதான் போல?..இது எங்கும் நடப்பதது தான் பையன் தப்பே செய்தாலும் ஏற்றுக் கொள்ளுவதும் மருமகள் மகனுக்கு பிடிக்காத மாதிரி நடந்துகொண்டால், தவறே செய்யாமல் இருந்தாலும் அவள் தவறே!.. கணவன் துணை இருந்தால் மலையையும் சாய்க்காலம் ஆனா இங்கு அதுவுமில்லை,பெற்றோரின் ஆதரவுமில்லை, சகோதரன் அனுசரனையுமில்லை, புகுந்த விட்டில் மரியாதையுமில்லை, நல்ல படிப்புமில்லை, பண பலமுமில்லை,மன மாற்றத்திற்கு சூழ்நிலையுமில்லை ,இப்படியொரு சூழ்நிலை மனம் பேய்கள் இருக்கும் இடம் ஆதலால் மன அழுத்தமும் ,மனநல பாதிப்பு ஏற்பட மல் இருந்தால்தான் அதிசியம்.