All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஸ்ரீ சொல்லவும் தான் கனியும், ஸ்ரீ யும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைப்பதை உணர்ந்தான். மனதில் ஏதோ வலி பரவ அவன் ஸ்ரீ யின் அறையிலிருந்து வெளியேற முயலுகையில் ஸ்ரீ யின் அலைபேசி மீண்டும் ஒலித்தது.
அதைப் பார்த்த ஸ்ரீ 'புது நம்பரா இருக்கே. யாரா இருப்பாங்க' என்று யோசித்தபடியே "ஹலோ ...." என்றான்.
"ஏய்.... ஹரி நா கனி பேசுறேன். சாரிப்பா நா ஆபிஸ் வரமாட்டேன்"
"என்னாச்சு கனி உடம்புக்கு"
"லைட்டா பீவர் மாதிரி இருக்குபா"
"சரிமா டாக்டர் கிட்ட போ.... பத்திரமா இரு"
"ம்ம்ம்"
"கனி எனக்கு ஒரு சந்தேகம் "
"சொல்லு"
"இல்ல ஆல்ரெடி (already) நீ லீவ்னு அண்ணா கிட்ட சொல்லிட்ட தான . திரும்பவும் அதுவும் புது நம்பர்லேந்து கால் பண்ற"
"என் கிட்ட பேலன்ஸ் இல்ல ஹரி. பிரண்ட் மொபைலேர்ந்து கால் பண்ணேன். உங்க அண்ணா பேசுனாங்களா. அவங்க கிட்ட யார் பேசுறதுனு சொல்லாமலே லீவ்னு சொல்லிட்டு வச்சிட்டேன். அதான் திரும்பவும் கால் பண்ணேன். நீயே பேசிட்ட. சரிப்பா. பை"
"ஹம்ம்ம்.... ஓ.கே மா" என்ற படி போனை வைத்தவன் தன்னுடைய தமையனை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவனுடைய பார்வையை உணர்ந்த ராம் , " என்னடா பாக்குற"
"அண்ணா கனி உங்க கிட்ட பேசும் போது அவளோட பேர சொன்னாளா"
அப்பொழுது தான் ராமிற்கும் அது உரைத்தது. 'அவ பேரு எப்படி எனக்கு கரெக்டா ஞாபகம் வந்துச்சு. என் கிட்ட பேசலனு ஏன் யோசிச்சேன்"
"என்ன அண்ணா. யோசிக்குறீங்க"
"ஒண்ணுமில்லடா".
"அண்ணா"
"டேய் கற்பனை பண்ணாத." என்றவன் கனியை சந்தித்த நிகழ்வை கூறினான்.
"அவ்ளோ தானா"
" ஆமாம்டா"
ஒரு சந்தேகப் பார்வையுடன் தமையனிடம் " நம்பறேன் நம்பறேன்.... வாங்க" என்ற படி டைனிங் டேபிளை நோக்கி நடந்தான்.
அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் எங்கும் ரம்மியமான இசை எதிரொலித்தது. மயக்கும் இசையிலும் , மங்கிய ஒலியிலும் மயங்கி பலர் அங்கே உணவருந்தி கொண்டிருந்தனர்.
அங்கே அலங்கரிக்கப்பட்ட மேஜையில் அழகான கேக் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் விதவிதமான உணவுவகைகள் இருந்தன.
அந்த மேஜையைச் சுற்றிலும் ஐந்து பெண்கள் அமர்ந்திருக்க , அதில் நடுவே அமர்ந்திருந்தாள் மதி அவளுக்கருகில் நிவி அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் "ஹேப்பி பர்த் டே நிவி" என்ற சத்தத்துடன் நிவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அவளது நேரமோ என்னவோ அவளுக்கு மட்டும் கேக் தராமல் அனைவரும் உண்டுக் கொண்டிருந்தனர்.
இதுக்கு மேல டிசண்ட் (decent ) பாத்து காத்துகிட்டு இருந்தா நமக்கு நாமம் தான் என நினைத்தவள்
"ஏய்.... எனக்கும் கொஞ்சம் தாங்கடி.... நீங்களே திங்குறீங்க. மதி நீயுமா இப்படி"
"அவளுக்கும் தாங்கப்பா . பாவம்"
"இன்னைக்கு அவளுக்கு தான பர்த்டே. அவ தான டிரீட் தரணும் . ஆனா நீ தர. அவ என்னடானா சாப்டறதுலயே குறியா இருக்கா"
"அதான் அவளுக்கு பதில் மதி தராளே வேணி. அப்புறம் என்ன. மதியால தான் நாம எல்லாரும் இந்த மாதிரி பெரிய ஹோட்டல்ல சாப்டுறோம். தேங்க்ஸ்டி"
"ஏன்டி இப்படிலாம் போசுறீங்க. நீங்க எல்லாரும் என்னோட பிரண்ட்ஸ். சோ நோ சாரி, நோ தேங்க்ஸ்"
இவர்களது பேச்சில் கலந்து கொள்ளாமல் தன்னுடைய உணவில் மட்டுமே கவனம் செலுத்திய நிவி சட்டென்று நிமிர்ந்து
"மதி நா உன் பிரண்ட் தான."
"ஆமாம். ஏன் திடீர்னு இப்படிக் கேக்குற"
"அப்படினா உன்னோட பிளேட்ல இருக்குற கோபி மஞ்சூரியன எனக்கு தரியா."
மற்றவர்கள் அனைவரும் அவளை ஏளனமாக பார்த்தனர். மதியோ புன்னகைத்தபடி அவளுடையதை தர, மற்றவர்களின் பார்வையை புறம் தள்ளிவிட்டு ஆசையாக கோபி மஞ்சூரியனை வாயில் வைக்கப்போனாள். ஆனால் அந்தரத்தில் கை அப்படியே நிற்க திறந்த வாயை மூடாமல் நிவி திருதிருவென முழித்தாள்.
"லூசு ஏன் அனகோண்டா மாதிரி வாய பொளந்துகிட்டே இருக்க. நாங்க கேக்க மாட்டோம். திண்ணுத் தொல. எவ்ளோ பெரிய வாயி" என நிவியைக் கிண்டல் செய்தாள் அங்கிருந்த ஒருத்தி.
அப்பொழுதும் நிவி திறந்த வாயை மூடாமல் மனதில் ' ஏய்.... என்னக் கலாய்குறதா முக்கியம். பின்னாடி பாருங்களேன்டி' என கண்களால் பின்னால் பார்க்கும்படி ஜாடைக் காட்ட , ஒட்டு மொத்தமாக அனைவரும் திரும்பி பார்த்தனர்.
நிவியை கேலி செய்தவர்களும் நிவியைப் போலவே வாய் பிளந்து அதிர்ந்திருக்க, மதியின் உடலோ நடுங்க தொடங்கியது.
ஏனெனில் அவர்களுக்கு பின்னால் ஆதி தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அவனின் பார்வையானது இவர்களது டேபிளை நோக்கி இருந்தது.
மதி ஆர்டர் செய்திருந்த ஜூஸ் அவளுடைய டேபிளில் வைக்கப்பட்ட சத்தத்தில் அனைவரும் சுதாரித்தனர்.
"எல்லோரும் சீக்கிரம் சாப்டுங்க . இல்ல வேணாம் வாங்கப் போகலாம். இன்னொரு நாள் வந்துக்கலாம்" என்ற படி மதி எழ முயற்சிக்க கண நேரப் பொழுதில் அவளுக்கும் நிவிக்கும் இடையில் சேரைப் போட்டு அமர்ந்தான் ஆதி.
அதில் மதி அரண்டு போனாள் என்றால் நிவிக்கு புரை ஏறியது. அவள் இருமிக் கொண்டிருக்க , அவள்புறம் திரும்பி ஆதி பார்த்த பார்வையில் இருமல் அப்படியே நின்று போனது.
மதியின் மனம் அங்கிருந்து வெளியேற சொல்ல எழ முயன்றவள் முடியாமல் தோற்று அவளது இருக்கையில் அமர்ந்தாள்.
ஏனெனில் அவளது இடக்கரம் ஆதியின் கரத்தினுள் சிறைபட்டிருந்தது.
மதிக்கு பயத்தில் கண்ணீர் முட்டிக் கொண்டு வர ஆதியைப் பார்த்து "ப்ளீஸ் கைய விடுங்க. எல்லாரும் பாக்குறாங்க" என கெஞ்சினாள்.
அடுத்த நொடி ஆதி மதியின் தோழிகளை ஒரு பார்வை பார்த்தான். அவனது பார்வை அவர்களை வெளியேற சொல்லியதை புரிந்து கொண்டவர்கள் பயந்து எழுந்து சென்றனர். நிவியும் அவர்களுடன் எழவும் அவளிடம்
"என்ன உன் பிரண்ட என் கிட்ட தனியா விட்டுட்டு போற. உனக்காக கோபி மஞ்சூரியனலாம் தந்தாள்ள . அவள் விட்டுட்டு போகலாமா உக்காரு" எனவும்
அவன் அவளைக் கேலி செய்வதை மறந்யவள் மனதில் 'அத தான் சாப்ட விடாம பண்ணிட்டியே அப்றம் என்ன' புலம்பினாள். அவள் இன்னும் அமராமல் இருப்பதை கண்ட ஆதி "உக்காருனு சொன்னேன்" என உறும மதிக்கு அந்த உறுமலில் உடல் நடுங்க ஆரம்பித்தது. நிவியோ அமைதியாக அமர்ந்து விட்டாள். ஆதியின் நண்பர்களும் இவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்தனர்.
ஆதி பேசத் தொடங்கும் முன்னே மதி பயத்தோடு பேசத் துவங்கி னாள்.
"ஏன் இப்படிலாம் பண்றீங்க. ஏற்கனவே நீங்க பண்ண வேலையால கலேஜ்ல எல்லாரும் என்ன ஒரு மாதிரியா பாக்குறாங்க. இப்ப என்னடானா எல்லோர் முன்னடியும் கைய பிடிக்குறீங்க. நாளைக்கு காலேஜ்ல என்ன பேசப் போறாங்களோ. "
"இப்ப என்ன ஆச்சுனு இப்படி புலம்புறடி. " என்றவனுக்கு நன்றாகவே தெரியும் கல்லூரியில் அவனுக்கும் மதிக்கும் இடையே காதல் இருப்பதாக பரவி இருக்கும் வதந்தி பற்றி.
"என்ன ஆச்சா. முதல்ல என்ன 'டி' போட்டு பேசாதீங்க. அதனால தான் எல்லாப் பிரச்சினையும். காலேஜ்ல எல்லாரும் உங்க பேர சொல்லி என்னக் கூப்டுறாங்க. எனக்கு பிடிக்கல. இரிடேட்டா இருக்கு"
அதுவரை விளையாட்டுத் தனமாக சிரித்துக் கொண்டிருந்த ஆதியின் முகம் கடினமுற்றது.
கோபத்தை குரலில் காட்டியபடியே "என்ன பிடிக்கல. எது இரிடேட்டா இருக்கு. சொல்லுடி" என்றான்.
அதுவரை இருந்த தைரியம் அனைத்தும் சொல்லாமல் கொள்ளாமல் விடைபெற்றது மதியிடமிருந்து.
"சொல்லுடினு சொன்னேன்ல"
"அது.... வந்து... உங்க பேர் சொல்லி என்னக் கூப்டுறதும் , நீங்க 'டி' சொல்றதும்" என திணறியவாறுக் கூற
"ஓ..ஓ.... என்னோட பேரு உனக்கு இரிடேட்டா இருக்கு. உனக்கு எவ்ளோ தைரியம் என்கிட்டயே இத சொல்ற" மதியின் சொற்களை ஆதி தன் நண்பர்களுக்கு முன்னால் தனக்கு கிடைத்த அவமானமாக எண்ணினான்.
"இல்ல.... " எனத் தொடங்கிய மதியைக் கையமர்த்தியவன்
"இனிமேல் காலம்பூரா உன்ன என் பேர் சொல்லி தான் கூப்டனும்"
என்றவன் "புரியல ஐ லவ் யூ. இன்னொலேர்ந்து நீ என்னோட லவ்வர். ஓ.கே வா. " என்ற படி அவளை நெருங்கி அமர்ந்து அவளது தோளைச் சுற்றி தனது கரத்தினை போட்டான் ஆதி.
அந்நிய ஆடவனின் தொடுகையில் மதியின் உடலில் அதிர்வு உண்டானது. அவனோ மதி ஆர்டர் செய்து குடிக்காமல் வைத்திருந்த ஜூஸை குடித்துக் கொண்டிருந்தான்.
மதி, நிவி , ஆதியின் நண்பர்கள் என அனைவரும் அதிர்ந்து போயினர். நடப்பதெல்லாம் கனவில்லை என்பதை தோளில் கிடந்த ஆதியின் கரம் மதிக்கு உணர்த்தியது.
"ஆது....... ப்ளீஸ்" எனத் தொடங்கியவளின் வாயில் தான் பாதிக் குடித்த ஜூஸ் டம்ளரை வைத்து அவளுக்கு மீதியை புகட்டினான்.
மதியின் திமிறலெல்லாம் ஆதியின் கரம் தந்த அழுத்தத்தில் தோற்றுப் போனது.
முழுமையாக அவளைக் குடிக்க செய்த பின் அவளைப் பார்த்தவன்
"நாம லவ்வர்ஸ். நா உன்ன லவ் பண்றேன் . நீயும் என்ன லவ் பண்ற. ஓ.கே" என்றான்.
மதி கண்ணீரோடு அவனைப் பார்க்கவும் "சரி ஓ.கேடி செல்லம். நீ கிளம்பு. மாம்ஸ்க்கு இங்க கொஞ்சம் வேல இருக்கு. " என்றவன் நிவியின் புறம் திரும்பி
"அவ கூட அவ வீடு வரைக்கும் போய் அவள விட்டுட்டு அப்புறமா உங்க வீட்டுக்கு போ. என்ன புரியுதா"
அவள் தலையை உருட்டவும் அவர்கள் இருவரையும் கிளப்ப சொன்னான். அவர்கள் சென்றபின் நண்பர்களின் புறம் திரும்பினான்.
அவனது நண்பர்களோ அவனை ஏலியனை போல வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா பாக்குறீங்க"
"இப்ப என்ன நடந்துச்சு ஆதி . ஏன் இப்படி பண்ண"
அவர்களுக்கு புன்னகையை பதிலாய் தந்தவன் மெல்லிய குரலில் "நீங்க நா சொன்னத நம்பறீங்களா" எனவும் அவனது நண்பர்கள் அவனை புரியாமல் பார்த்தனர்.
"அந்த பொண்ண நா லவ் பண்ணலடா. சும்மா தான் சொன்னேன்"
"ஏன்டா இப்படி"
"சட்டுனு திரும்பாதீங்க நம்ம டேபிளுக்கு ரைட் சைடுல தினேஷ் இருக்கான். மதி கிட்ட நெருங்க அவன் டிரை பண்ற மாதிரி தெரியுதுடா. அதான் என்னோட லவ்வர்னு சொன்னா பயப்படுவான்ல. அதுக்காக தான் அப்படி சொன்னேன். வேற எதுவும் இல்ல"
"டேய் அதுக்கு"
"போதும்டா போகலாம் வாங்க" என எழுந்து சென்றுவிட குழப்பத்தோடு அவனை பின் தொடர்ந்தனர் அவனது நண்பர்கள்.
"அப்பா ...... அம்மா... எங்க இருக்கீங்க. எங்கோ நேரமா கூப்டுகிட்டே இருக்கேன். வாங்க இங்க " ஹரிணி ஹாலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள்.
"என்னடாம்மு... என்னாச்சு. "
" அப்பா.... எனக்கு டிரஸ் வாங்கியாச்சா. இல்ல வாங்கணுமா. வாங்கலைனா வெளியே ஷாப்பிங் போகலாம் வாங்க"
"டிரஸ் எதுக்குடா"
"என்னப்பா மறந்துட்டிங்களா. நாளைக்கு எனக்கு பர்த்டே"
"அத எப்படி அம்மு நாங்க மறப்போம். ஆனா நீ தான போன வருஷம் எங்க கிட்ட இனிமே பர்த்டே கொண்டாட கூடாதுனு சொன்ன"
"அது......" என திணறியவள் அத்துவின் நினைவில் மூழ்கினாள்.
"அம்மு" பெற்றோரின் அழைப்பில் நினைவுக்கு வந்தவள்.
"இப்ப கொண்டாடலாம்பா. இனிமேல் நம்ம லைப்ல சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும். நீங்க போய் ரெடியாகுங்க. அப்பா நாளைக்கு ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடுங்க. நானும் லீவ் போட்டுட்டேன். நா போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்" என படபடவென பொரிந்தவள் சின்னப் புன்னகையோடு தன்னறைக்கு சென்றாள்.
அவளது புன்னகை போலி என்பதை அறிந்த அவளது பெற்றோர்கள் மௌனமாய் கண்ணீர் வடித்தனர்.
"சந்தோஷமா இருக்குற மாதிரி நடிக்குறா சாந்தி"
"ஆமாங்க. ஏன் தான் அவ வாழ்க்கைல இப்படி நடக்குதோ. இவ கொஞ்சம் பிடிவாதத்த விட்டா போதும். "
"அது தான் முடியாதுனு சொல்றாளே"
"அத்து தான் பாவம். விதினு ஒண்ணு இருக்கு. அது படி நடக்கறது நடந்து தான ஆகணும்"
பெற்றோரிடம் விடைபெற்றவள் தன்னுடைய அறைக்கு வந்து கதவை தாளிட்டாள்.
அறையெங்கும் நிறைந்திருக்கும் அவளது மன்னவனின் புகைப்படத்தை பார்த்தாள். திரும்பிய திசையெங்கும் அத்துவின் புகைப்படங்களே திறந்திருந்தன. இருவரும் இணைந்தாற்போல் அங்கே எந்த புகைப்படமும் இல்லை.
"அத்து நாளைக்கு என்னோட பர்த்டே. போன வருஷம் நா கொண்டாடல . ஆனா இந்த வருஷம் எனக்காக வாழுற அப்பா , அம்மாக்காக கொண்டாட போறேன். இந்நேரம் நீயும் என்ன தான் நினச்சிட்டு இருப்ப. எனக்கு தெரியும். ஒரு வருஷத்துக்கு முன்னாடி எவ்ளோ ஹேப்பியா இருந்தேன் தெரியுமா?. ஆனா இப்ப.
நா உனக்கு வேணாம் அத்து. காதல் சந்தோஷத்த மட்டும் தான் தரணும். வலிய இல்ல. என்னோட காதலால உனக்கு வலி மட்டும் தான் கிடைச்சிருக்கு. இனியும் கிடைக்க போகுது. ஆனா நா உங்கூட இருந்தா இன்னும் வலிய தான் தருவேன். அதுக்கு இது பரவால்ல.
என்னோட அத்து எப்பவும் தூக்க கூடாது. சந்தோஷமா மட்டும் தான் இருக்கணும். அந்த சந்தோஷத்துக்கு நா தடைனா என்ன நானே அழிச்சுக்கவும் தயங்க மாட்டேன். என்ன மன்னிச்சிடு அத்து " என அங்கே ஆளுயர போட்டோவில் இருந்த அத்துவின் கால்களை பற்றிக் கொண்டு கதறினாள்.
அன்று இரவு சரியாக பன்னிரெண்டு மணிக்கு உறங்கி கொண்டிருந்த ஹரினியின் செவிகளில் "ஹேப்பி பர்த் டே ஹனி. ஐ லவ் யூ" என ஒலித்தது போல தோன்றியது.
சட்டென உறக்கத்திலிருந்து விழித்தவள் " அத்து.... அத்து" என பைத்தியம் பிடித்தவள் போல கத்த ஆரம்பித்தாள்.
அவளின் கதறலை கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் அவளை சமாதானப்படுத்தி உறங்க வைத்துவிட்டு சென்றனர்.
சற்று நேரத்தில் அவளது இதழ்கள் தானாய் முணுமுணுத்தன "தேங்க் யூ அத்து" .
அவளது உணர்வுகள் உண்மையென்பதை போல அவளது இதயத்தில் வாழும் மன்னவன் அவள் வாழ்ந்த வீட்டில் அவளது அறையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.
"ஹனி.... ஐ லவ் யூ... எங்க இருக்க ஹனி. ஏன் என்ன இப்படி வதைக்குற. ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறேன். என்னோட வலி உனக்கு புரியலயா. இது தீராத வலி. வாழவும் முடியாம சாகவும் முடியாம நரகத்த கண்ணுமுன்னாடி காட்டுற வலி.
இதுலேர்ந்து நா வெளிய வர முடியாம போய்டுமோனு எனக்கு பயமா இருக்கு ஹனி. எனக்கு ஏன் இப்படி நடக்குது ஹனி. சின்ன வயசுலேர்ந்து நா எது மேலயும் ஆசப்பட்டது இல்ல. உன்ன மட்டும் தான் ஹனி ஆசப்பட்டேன். எனக்கே எனக்குனு நீ எப்பவும் இருக்கணும்னு நினச்சேன்.
இப்ப எல்லாம் என்ன விட்டு போன மாதிரி இருக்கு. பேரு, பணம், புகழ் எல்லாம் இருந்தும் நீ இல்லாம பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு. உன்கூட வாழனும்னு நா கற்பன பண்ணி வச்சிருந்த வாழ்க்கை , என் கண்ணுக்குள்ளயே இருக்கு ஹனி. ஆனா நீ தான் இல்ல.
சாகுறது பெரிசு கிடையாது ஹனி. ஒரே ஒரு நொடி வலி தான். ஆனா இப்படி வாழுறது தான் கொடுமையானது. நா என்னோட சுயத்த இழந்துட்டேன் ஹனி.
உன்னத் தவிர வேற எதுவும் என்னோட கண்ணுக்கு தெரியல. கண்ண மூடவும் முடியல. உன்னோட நினைப்பாவே இருக்கு. வெளிய யார்கிட்டயும் சொல்லவும் முடியல. சந்தோஷமா இயல்பா இருக்குற மாதிரி நடிக்கவும் முடியல. பைத்தியம் பிடிச்சிடும் போல ஹனி.
இதுக்கு சாவே பரவால்லனு தோணுது.. ஆனா நீ என்னத் தேடி வரும் போது நா இல்லைனா உன்னால தாங்க முடியாதுல அதான் சாகவும் முடியல. என் கிட்ட வந்துருவ தான ஹனி. வந்துரு ஹனி . ப்ளீஸ்" என்று புலம்பியவனின் நினைவுகள் ஹரினியை சிந்தித்தன.
அவனுடைய எம்.பி.ஏ வகுப்புகள் ஆரம்பித்து முழுதாக இரண்டு மாதங்களாகியிருந்தன.
எல்லாரிடமும் கலகலப்பாக பழகும் அவனுடைய குணத்திற்கு இந்த இரண்டு மாதத்திற்குள் அந்த வகுப்பின் மாணவ , மாணவிகள் அனைவரும் தோழர்களாயினர்.
அவனுடைய வகுப்பு பெண்களுக்கு அவன் மேல் மரியாதை இருந்தது. சிலர் அவனை விரும்பவும் செய்தனர். ஆனால் அவனோ யாரையும் விரும்பவில்லை.
தங்களுடைய அழகால் அவனை கவர நினைத்தவர்களை கல்லை போல கடந்து போனான்.
கருமைக்கும் சற்று மேலே மாநிறமாக, கட்டுடலுடன், கம்பீரமாய் நேர் கொண்ட பார்வையாய் இருந்தவனை தன்னுடைய காதலன் என்று சொல்லிக் கொள்ள எல்லாப் பெண்களும் விரும்பினர். ஆனால் அவன் விரும்ப வேண்டுமே.
அன்று வகுப்பறையில் ஆசிரியர் வந்தவுடன் அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தினர்.
"குட்மார்னிங் ஸ்டுடண்ஸ், சிட் டவுன். ஸ்டுடண்ஸ் உங்க கிளாஸ்ல ஒரு நியூ மெம்பர் சேரப் போறாங்க. சம் ரீசன்ஸ்னால அவங்களால முன்னாடியே ஜாயின் பண்ண முடியல. அவங்க நாளைலேர்ந்து வருவாங்க. சோ அவங்களுக்கு நோட்ஸ் லாம் குடுத்து ஹெல்ப் பண்ணுங்க." என்று விட்டு வகுப்பைத் தொடங்கினார்.
அவர் வெளியேறக் காத்திருந்ததைப் போல அடுத்த நொடி வகுப்பிற்குள் ஓரே சலசலப்பு. யாரது? ஆணா? பெண்ணா? இரண்டு மாதங்களுக்கு பின் ஏன் சேருகிறார்? என அந்த புதியவரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. அத்துவோ இதில் கலந்து கொள்ளாமல் அவனுடைய வேலையைப் பார்த்தான்.
மறுநாள்.........
அத்து தன் நண்பர்களுடன் மரத்தடியில் அமர்ந்திருந்தான்.
"டேய் மச்சி தெரியுமாடா? நேத்து பாலு சார் சொன்னாருல அது பொண்ணுடா. பேரு ஹரிணி. எச்.ஓ.டி ரூம்ல பேசிட்டிருக்கா. செம பிகர்டா மச்சான். இந்த காலேஜ்லயே இந்த ஏரியாலயே அவள மாதிரி ஒரு பிகர நா பாத்தது இல்லடா. இன்னொன்னு தெரியுமா அவ யூ.ஜூ (u.g) ல கோல்டு மெடலாம். எப்படியாவது அவள கரெக்ட் பண்ணணும்டா. செமயா இருக்கா"
"என்னடா சொல்ற அவ்ளோ அழகா" என அனைவரும் அதிசயத்தனர்.
"ச்சீ... ஏன்டா சுரேன் இப்படி பேசுற. பிகர்னு. பாவம்டா இரண்டு மாசம் கழிச்சு காலேஜ் சேருராங்க. என்ன பிரச்சனயோ" அத்து
"அவங்க எவ்ளோ அழகா இருந்தாலும் அவங்களுக்கு நா ப்ரபோஸ் பண்ண மாட்டேன். எனக்குனு ஒரு கொள்கை இருக்குடா. "
"என்ன பெரிய கொள்க. ஹரிணிய பாத்தா எல்லாம் மறந்துரும்"
"மறக்காது.. நா என்னய கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணத் தவிர வேற யாரையும் திரும்பிக் கூட பாக்க மாட்டேன். என்னோட லைப்ல ஒரே ஒரு பொண்ணு தான்டா இருப்பா. அது என்னோட மனைவி மட்டும் தான்"
"போடா.... உனக்கு வாழ்க்கய வாழத் தெரியல. யாரையும் சைட் கூட அடிக்கமாட்ற. ஆனா எல்லா பொண்ணுங்களும் உன்ன சைட் அடிக்குறாங்க. நீ வேஸ்ட்டுடா"
அவர்களின் கேள்விக்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தான் அத்து.
அவர்களின் உரையாடலை சற்று தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ஹரிணியின் மனமோ " அந்த பெண் நானாக இருக்க வேண்டும் " என எண்ணியது.
அவளுக்கு அத்துவின் முகம் தெரியவில்லை, முதுகு மட்டுமே தெரிந்தது. இது கண்டதும் காதல் அல்ல. ஒரு நல்ல ஆண்மகனை கணவனாக அடைய நினைக்கும் பெண்களின் விருப்பம்.
மனதினுள் நினைத்த ஹரிணி , திகைத்து விழித்தாள். "என்ன நினைப்பிது... ச்சீ... வந்த அன்னைக்கே இப்படி நினைக்கிறேனே. இது சரியில்ல. ஹரிணி ஒழுங்கா வந்த வேலய மட்டும் பாக்கணும் . ஓ.கே வா" என தலையை உலுக்கிக் கொண்டு வகுப்பிற்கு சென்றாள்.
ஹரிணி அழகு தேவதை. மேக்கப் போட்டு தன்னை அழகாக காட்டும் பெண்களிடையே இயல்பான அழகில் தனித்தன்மையாய் தெரிந்தாள்.
பால் போன்ற நிறமும் , அறிவை பறைசாற்றும் இரு கண்களும் , கல கலப்பான குணமும் என இருந்த ஹரிணியை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.
மத்திய அரசு வேலையில் இருக்கும் அவளது தந்தையின் வருமானமே அவளுடைய குடும்பத்தின் ஜீவன். அவளும் படிப்பில் கெட்டிக்காரி. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் மாநிலத்தில் முதல். கல்லூரியில் கோல்டு மெடல். அவளுடைய இந்த சாதனைகளே அவளை பெரும் பணம் வாய்ந்தவர்கள் மட்டுமே படிக்கும் அந்த கல்லூரிக்கு அழைத்து வந்தது.
ஹரிணி வகுப்பிற்குள் நுழைந்ததும் ஒட்டு மொத்த வகுப்பின் பார்வையும் அவளை நோக்கியே இருந்தது, அத்துவைத் தவிர.
ஆண்களின் பார்வையோ ஆசையாய் அவளைத் தழுவியது. பெண்களின் பார்வையோ அப்பட்டமாய் பொறாமையைக் காட்டியது.
அறிமுகப் படலம் முடிந்ததும் அவள் அமர அனைவரும் இடம் தர தயாராக இருந்தனர்.
அவள் எங்கே அமரப் போகிறாள் என அனைவரும் அவளைப் பார்க்க,
முதல் மூன்று பெஞ்சுகளில் இடமிருந்தாலும் அதில் அமராது கடைசி பெஞ்சில் பாதி தூங்கிய விழிகளோடு திருதிருவென முழித்துக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு அருகில் போய் அமர்ந்தாள்.
ப்ரியாவோ கண்ணைக் கசக்கி விட்டு ஹரிணியை உற்றுப் பார்த்தாள்.
"நா ஹரிணி.... நீ" என கேட்கவும்
"ப்ரியா...நீ நல்லா படிக்கிற பொண்ணுனு சொன்னாங்க .. லாஸ்ட் பெஞ்சுல உக்காருற"
அவளைப் பார்த்து புன்னகைத்த ஹரிணி
"ஏன்னா லாஸ்ட் பெஞ்சுல உக்காந்தா தான் சேட்ட பண்ண முடியும்"
"அப்ப நீ படிப்ஸ் இல்லயா. நம்ம இனமா"
"படிப்பு வேற சேட்ட வேற ... ப்ரண்டஸ் " என கைக் கொடுத்தாள்.
"ம்ம்ம்... ஓகே" என இருவரும் கை குலுக்கி கொள்ள வகுப்பே அவர்களை வித்தியாசமாய் பார்த்தது.
ஹரிணியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தவன் மெல்ல உறக்கத்தை தழுவினான். கால்களை குறுக்கிக் கொண்டு, முகத்தில் தோற்றுப் போன உணர்வோடும், தரையில் அவன் படுத்திருந்த கோலம் ஹரிணியின் கண்களில் பட்டிருந்தால் அவள் உயிரையே விட்டிருப்பாள்.
சில நொடிகள் மட்டுமே பார்த்தாலும் மனதில் பதிந்து உயிரை உருக்கிடும் சக்தியது காதலுக்கே உண்டு. தன்னுயிரை துறந்திட்டாலும் தன் இதயம் கவர்ந்தவர்களின் உயிரை காத்திட துடித்திடும் அன்பிது.
காதல் வரமா? இல்லை சாபம்? .
இனம் ,மொழி, நிறம் என எல்லா பாகுபாடுகளையும் கடந்து எழும் அன்பானது சிலருக்கு வரமாகவும் , சிலருக்கு சாபமாகவும் அமைவது இறைவனின் செயலா?
பிரியும் சில நிமிடங்களுக்கு முன் தண்ணீருக்காக துடிக்கும் உயிரைப் போல , அத்துவின் இதயம் அம்முவிற்காக துடித்தது.
ராமின் சிந்தை முழுவதையும் இரண்டு விஷயங்கள் ஆக்ரமித்திருந்தன.
ஒன்று பிரபாகரனின் கொலை வழக்கு.
மற்றொன்று கனியின் நினைவுகள்.
இரண்டிலுமே அவனுக்கு தெளிவு கிடைக்க வில்லை.
தலைவலி மண்டையை பிளப்பதை போல் தோன்ற கண்களை மூடிப் படுத்துவிட்டான்.
சற்று நொடிகளில் அவனின் மேல் பஞ்சின் மென்மையினையும், ஈரத்தையும் உணர்ந்தவன் கண் விழித்துப் பார்த்தான்.
பப்லு அவன் மீது ஏறி அவனது நெஞ்சில் அமர்ந்து கொண்டு அவனது முகத்தை நக்கிக் கொடுத்தது. இந்த சில மாதங்களின் கவனிப்பில் பப்லு நன்றாகவே வளர்ந்து எடைப் போட்டிருந்தது.
பப்லுவை பார்த்ததும் புன்னகைத்தவன் எழுந்தமர்ந்து அதனை தனது மடியில் அமர்த்திக் கொண்டு விளையாட தொடங்கினான்.
"நீ ரொம்ப குண்டாயிட்ட குட்டிப்பா. உங்க அக்கா பாத்தா அவ்ளோ தான். ரொம்ப சந்தோஷப்படுவா" என பப்லுவின் தலையை தடவிக் கொடுத்தவன் கனியைப் பற்றிச் சிந்தித்தான்.
'ஏன் நா எப்பவும் அவளப் பத்தி யோசிக்குறேன். இத்தனைக்கும் நா அவள பாத்தது இல்ல பேசுனது இல்ல. எனக்கு என்ன ஆச்சு. ஒருவேளை அவள தப்பா கெஸ்(guess) பண்ணேனே அதுக்காகவா? என்னவா இருந்தாலும் எனக்கு அவள பாக்கணும்னு தோணுது. கண்டிப்பா இன்னைக்கு அவள நா பாத்தே ஆகணும்' என மனதினுள் நினைத்தவன் "பப்லு உங்க அக்கா எப்படிடா இருப்பா. உன்ன மாதிரி அவளுக்கும் என்ன பிடிக்குமாடா? "
"என்னாச்சு அண்ணா. காலைலயே பப்லு கிட்ட பேசிட்டு இருக்க. ஆனாலும் நீ இதுக்கு ரொம்ப செல்லம் தர"
"ஏன்டா. என்ன பண்ணுச்சு"
"பின்ன துவச்சு அயர்ன் பண்ணி வச்ச டிரஸ்ல கரெக்டா என்னோட டிரஸ்ஸ தேடி பிடிச்சு அதுல தூங்குது. என்னோட ரூம்ல இருக்குற பேப்பர்ஸ் எல்லாத்தையும் கிழிக்குது. ஆனா உன் கிட்ட நல்ல புள்ள மாதிரி நடிக்குது. மனுஷனே தோத்துடுவான் இதுக்கிட்ட."
"ஏன் குட்டிப்பா அப்படியா பண்ண. ஸ்ரீ அண்ணா பாவம்ல" என ராம் பப்லுவை கொஞ்சவும் அது திருடன் போல ஓரக்கண்ணால் ஸ்ரீயைப் பார்த்தது.
அதில் இன்னும் வெறியான ஸ்ரீ
" போதும் அதுகிட்ட என்ன கொஞ்சிகிட்டு இருக்க. நீயும் கனியும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி இருக்கீங்க." கனி என்ற பெயரைக் கேட்டவுடன் ராமின் முகம் பிரகாசமானது.
அதை ஸ்ரீ கவனித்து விட்டான். இடைப்பட்ட இந்த சில மாதங்களில் அவனும் தனது தமையனை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். கனியின் பெயரைக் கேட்டாலே மலரும் அவனது முகத்தை காண்கின்றானே.
"ஸ்ரீ... ஸ்ரீ....ஸ்ரீ. கூப்டுறது கூட காதுல வாங்கமா. என்னடா யோசனை"
"ஒண்ணுமில்ல சொல்லுணா"
"இல்லணா .. நா பாத்துகிட்டு தான் இருக்கேன். ஏனோ தெரியல நீ கனி மேல ஆர்வமா இருக்க மாதிரி எனக்கு தோணுது"
"அதெலாம் இல்லடா. சும்மா தான். மீட் பண்ண வைப்பியா இல்லயா அத சொல்லுடா"
"அவ என்ன சொல்லுவானு தெரியல. அவளுக்கா தோன்ற வரைக்கும் அவ எதுலயும் இன்ரெஸ்ட் காட்ட மாட்டா. சரி எப்படியாவது செய்றேன்."
"ரொம்ப தேங்க்ஸ்டா"
"அண்ணா கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க. கனி மேல ஏன் இவ்ளோ இன்ரெஸ்ட் காட்டுறீங்க. அவள பாக்கப் போறோம்னதும் ஏன் இவ்ளோ ஹேப்பினஸ். அவள லவ் பண்றீங்களா"
"லவ்வா...." என அதிர்ந்தவன் " அதெல்லாம் எனக்கு தெரியலடா. அவள பாக்கனும்னு ஆசயா இருக்கு. ஆனா ஏன்னு எனக்கு தெரியல"
ஸ்ரீ அவனது தமையனைப் பற்றி நன்றாக அறிந்தவன் ஆயிற்றே.
அவனது மனம் இது காதலாக இருக்குமோ என்று எண்ணியது. ஏனெனில் கனியின் மீது ராம் அதிகளவு ஈடுபாடு காட்டுவதாக ஸ்ரீக்கு தோன்றியது.
"சரிண்ணா. நா எப்படியாவது அவள என்னோட ஆபிஸ்க்கு பக்கத்துல இருக்குற ரெஸ்ட்ராண்ட் க்கு ஈவ்னிங் கூட்டிட்டு வரேன். நீ ஈவ்னிங் வா . ஓ.கே வா"
"சரிடா எனக்கும் கொஞ்சம் கேஸ் சம்பந்தமா வெளியப் போகணும்"
என்ற படி வெளியே செல்ல தாயாரானவன் மனெல்லாம் கனியை சந்திப்பதை பற்றியே நினைத்து துள்ளிக் கொண்டிருந்தது சிறுவனைப் போல.
மாலை அவன் கனியை சந்திக்கும் போது நிகழ போவதை அவன் அறியவில்லை.
ராம் தன்னுடைய வழக்கு சம்பந்தமாக கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அந்த வீட்டில் ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்தவனின் கண்கள் அந்த வீட்டை அளவெடுத்தன.
மிகவும் எளிமையாக இருந்தது அந்த வீடு.
"இந்தாங்க சார் காபி... " என கொலை செய்யப்பட்டவரின் மகளான செல்வி ராமிற்கு காபி தர அதை வாங்கிக் கொண்டவன் அவளையும் அமர சொன்னான்.
"பரவால்ல சார்"
"இல்லமா... உங்க கிட்ட சில கேள்விகள் கேக்கணும். சோ ப்ளீஸ் உக்காருங்க" என்றான் கம்பீரமாக.
அவனுடைய குரலில் இருந்த ஆளுமையில் தன்னையறியாமல் அமர்ந்தவள் மனதில் அந்த நேரத்திலும் அவனது ஆளுமையை எண்ணி வியந்தாள்.
"சரிங்க சார்"
"பாக்கலாம் சார் வாங்க"
அவனை தனது தந்தையின் அறைக்கு அழைத்து சென்றாள்.
அறையை அடைத்தவன் அதை சுற்றிலும் பார்வையிட்டான். கட்டில் , வலது புறத்தில் சிறிய நாற்காலி , மேஜை , சில புத்தகங்கள். இடதுபுற அலமாரியில் அவரது உடைகள் இவைதாம் இடம் பெற்றிருந்தன அவரது அறையில்.
அதில் அவனுக்கு பயன்படும்படி ஏதும் இல்லாததால் தலையைக் கோதிக் கொண்டு வெளியே வந்தான்.
"செல்வி அன்னைக்கு ஆபிஸ் வந்தப்போ அவரோட நடவடிக்கைல வித்தியாசம் தெரிஞ்சுதுனு சொனானீங்களே"
"இல்ல சார். அப்பா கொஞ்ச நாளா தூக்கத்துல கெட்ட கனவு கண்டு நடுராத்திரியில புலம்புவாறு . வேற ஒண்ணும் இல்ல"
"கெட்ட கனவா" என்ற படி நெற்றியை தடவியவன்
"அப்போ என்ன சொன்னாருனு உங்களுக்கு தெரியுமா"
"ஒரே ஒரு நாள் மட்டும் நா அவரு புலம்புனத கேட்ருக்கேன் சார்"
"என்ன சொன்னாரு"
"அது... அன்னைக்கு நல்லா தூங்கிட்டு இருந்தாரு... அம்மாவும் நானும் என்னோட ரூம்ல இருந்தோம். திடீர்னு ஏதோ சத்தம் கேட்டுச்சுனு நா அவரோட ரூமுக்கு போய் பார்த்தேன்.
அப்போ அவரு 'அவனுங்க உங்கள தேடி வர்துட்டாங்க. உங்கள கண்டுபிடிக்க என்ன வேணா பண்ணுவாங்க. இத்தன வருஷம் பாதுகாத்த மாதிரி இனிமேலும் பாதுகாப்போம். உங்கள காட்டிக் கொடுக்க மாட்டோம். நீங்க உயிரோட எப்பவும் சந்தோஷமா இருக்கணும். சந்தோஷமா இருக்கணும்' அப்படினு புலம்புனாறு, நா ஓடிப் போய் என்னாச்சுனு எழுப்பி கேட்டப்ப ஒண்ணுமில்ல கெட்ட கனவுனு சொல்லிட்டாரு"
அதைக் கேட்டவனோ "சரிமா நா கிளம்புறேன்" என்ற படி விடைப் பெற்றான்.
அவனது மனமோ பிரபாகரனது புலம்பல் கனவல்ல என்று தோன்றியது. 'அவரது எண்ணத்தில் ஏதோ ஒன்று அதிகமாக பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் அவ்வாறு புலம்பி இருக்கிறார். ஒருவேளை இது கனவாக கூட இருக்கலாம்' என இருபுறமும் யோசித்தது.
ராமின் கெட்ட நேரமோ என்னவோ அவனுக்கு அன்று நாள் முழுவதும் அலைச்சலாக இருந்தது. தலைவலி வேறு மீண்டும் வர ஆரம்பித்தது.
எரிச்சலோடு இருந்தவனுக்கு ஸ்ரீ யிடமிருந்து போன் வந்தது. அப்போது தான் கனியின் நினைவு வர வேகமாக அலைபேசியை எடுத்தவன்.
"சொல்லு ஸ்ரீ"
"எங்கண்ணா இருக்கீங்க. "
" ஆபிஸ்ல இருக்கேன்டா ஸ்ரீ. வந்துடுறேன். கனி கிட்ட பேசிட்டியா.
என்ன சொன்னா"
"அவ ஒத்துக்கல அண்ணா. கம்பெல் (compel) பண்ணி கூட்டிட்டு வந்துருவேன் . நீங்க வந்துருங்க." அவன் சொல்லவும் ராமின் மனதில் லேசாக வலி தோன்றியது.
தன்னை சந்திக்க அவளுக்கு விருப்பமில்லை என்பதையெண்ணி.
தமிழ்நாட்டிலுள்ள பெண்களுக்கு எல்லாம் அவன் கனவு நாயகனாக இருப்பது அனைவரும் அறிந்த உண்மையாயிற்றே...
ஆனால் அவனது மனம் கவர்ந்தவளுக்கோ அவனை சந்திப்பது பிடிக்கவில்லை.
எது எப்படி இருந்தாலும் இன்று அவளை பார்க்க போகிறோம் என்ற உணர்வு அவனது தலைவலியை குறைத்து உற்சாகம் தந்தது என்னவோ உண்மை.
உற்சாகத்தோடு தனது பைக்கில் ஸ்ரீ யின் அலுவலகத்தை அடைந்தவன் ஹெல்மட் (helmet) அணிந்திருந்ததோடு ஸ்ரீ யின் அலுவலக வாசலுக்கு அருகில் நின்றிருந்தான்.
ஸ்ரீ அவனை வர சொன்னது ரெஸ்ட்ராண்டிற்க்கு தான். அவனோ ஆவலில் ஸ்ரீ யின் அலுவலகத்திற்கு வந்திருந்தான்.
சற்று நேரத்தில் கூட்டம் கூட்டமாக அனைவரும் வெளிவர தொடங்கினர். கனியை சந்திக்க போகும் ஆவலில் அவன் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீ அலுவலகத்திலிருந்து வெளியே வந்ததைப் பார்த்தவன் அவனோடு யாராவது வந்திருக்கிறார்களா எனப் பார்த்தான்.
ஆனால் யாரும் வரவில்லை என்றதும் ஆர்வம் போய் ஏமாற்றம் சூழ்ந்து கொள்ள எரிச்சலடைந்தான்.
இதையறியாத ஸ்ரீயோ அவனுடைய அலுவலக ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தான். ராமின் பார்வை ஸ்ரீ யை நோக்கியே இருந்தது.
ஸ்ரீ அவனது பேக்கை(bag) தனது முதுகில் மாட்டியிருந்தான். அவன் தனது நண்பர்கள் புறம் திரும்பி பேசிக் கொண்டிருக்க திடிரென ஒரு பெண் அவனது பின்னால் வந்து நின்றாள்.
ஸ்ரீ யின் கவனம் அவனது பேக்கில் இல்லை எனவும் சுற்றும் முற்றும் பார்த்தவள் , யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவனது பேக்கினை திறந்தவள் அதிலிருந்த பணத்தை எடுத்து தன்னுடைய பையில் வைத்துக் கொண்டாள்.
ஏற்கனவே வழக்கு சம்பந்தமாக குழப்பம், எரிச்சல் , கனியை காணாது ஏமாற்றம் என கோபமாக இருந்த ராமிற்கு இதை பார்க்கவும் கோபம் கரைபுரண்டது. வேகமாக அந்த பெண்ணை நோக்கிச் சென்றவன் கோபத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணினை அறைந்து விட்டான்.
அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க , அறை வாங்கிய பெண்ணோ அவனது வலிமையான அறையினை தாங்கிட இயலாமல் கன்னத்தில் கை வைத்து நின்றுவிட்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அந்த சத்தத்தில் திரும்பிய ஸ்ரீ அதிர்ந்து நின்றுவிட்டான். ராம் ஹெல்மட் அணிந்திருந்ததால் யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீ தனது தமையனை கண்டு கொண்டான்.
தமையனை நெருங்கியவன் "அண்ணா என்னாச்சு... ஏன்னா அவள அடிச்ச"
"ஸ்ரீ இவ்ளோ கேர்லஸா (careless) இருப்பியா. இந்த பொண்ணு உன்னோட பேக்லேர்ந்து பணத்த திருடுனத நானே என் கண்ணால பாத்தேன் ." என்று கோபமாக உறுமிக் கொண்டு தனது ஹெல்மட்டை கழட்டனான்.
அதுவரை யாரோ என பார்த்திருந்த கூட்டம் ராம் என அறிந்ததும் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியானது. ஏனெனில் ராம் என்பவன் நேர்மைக்காக போராடுபவன் என அனைவரும் அறிந்தது தானே. அதனால் அவனது கூற்றை யாரும் மறுக்க வில்லை.
"இல்ல... நா திருடல.... அது என்னோட பணம்" கண்ணீரோடு அந்த பெண் மெல்லிய குரலில் கூறியதைக் கேட்ட ராம் அதிர்ந்தான்.
அவனது இதழ்கள் அவனது அனுமதி இல்லாமல் முணுமுணுத்தன "கனி" என்று.
தான் அடித்தது தன்னுடைய கனியை என்று அறிந்ததும் அதை உறுதி படுத்திக் கொள்ள ராமின் பார்வை ஸ்ரீயிடம் திரும்பியது.
அவனும் தமையனைப் பார்த்து ஆமாம் என்பது போல் தலையாட்டவும் அந்த நொடி ராமின் எழுந்த வேதனைகளை விவரித்திட யாராலும் இயலாது.
யாரைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டு பல மாதங்கள் காத்திருந்தானோ , அவளை அனைவர் முன்னிலும் அவமதித்ததை நினைத்து அவனது மனம் துடித்தது. இந்த நிலையிலா தன்னவளைப் பார்க்க வேண்டுமென்று.
ஸ்ரீ அங்கிருந்த அனைவரிடமும் ஏதோ சொல்லி அவர்களை களைந்து போக செய்து விட்டு தமையனிடம் வந்தான்.
"அது அவளோட பணம் தான் அண்ணா. அவள வெளியில போகணும் வானு கூப்டேன். வரமாட்டேனு சொன்னா.
அதான் அவளோட பணத்த எடுத்து வச்சிகிட்டு எங்கூட வந்தா தான் தருவேனு மிரட்டுனேன். அத தான் எனக்கு தெரியாம எடுக்க டிரை பண்ணி இருக்கா." என கவனமாக விளக்கம் கொடுத்தான் தமையனுக்கு.
ஏனெனில் கனி இவர்களுக்கு வெகு அருகில் நின்றிருந்தாள். ஸ்ரீ யின் கூற்றிலிருந்து ராமிற்கு ஒன்று புரிந்தது. அவனை தான் சந்திக்க போகிறோம் என கனிக்கு தெரியவில்லை என்று. அதில் அவனது மனதில் ஏனோ ஒரு இதம் பரவியது.
அவனது பார்வை கனியைத் தழுவியது. அவளது கன்னத்தில் அவனது விரல்கள் பதிந்து வீங்கியிருந்தது. அதைப் பார்க்கும் போது அவனது வலி கூடியது மனதில் அவளுக்கு நிகராக.
ஏதாவது செய்ய வேண்டும், தவறு அவனுடையது என அவனது அறிவில் தோன்ற, மெல்ல கனியின் அருகே சென்றான்.
"சாரிங்க. எனக்கு தெரியாது. இருந்தாலும் நா பண்ணது தப்பு தான். என்ன மன்னிச்சுடுங்க. கண்ணால பாக்குறதுலாம் உண்ம இல்லனு இன்னைக்கு நல்லா தெரிஞ்சுகிட்டேன். நீங்க எனக்கு என்ன தண்டன தந்தாலும் நா ஏத்துக்குறேன்." என அமைதியாக நின்றிருந்தான்.
அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பின்பு ஒன்றும் பேசாமல் அவனை விட்டு விலகியவள் ஸ்ரீ யிடம்
ராமிற்கு வருத்தமானது " ப்ளீங்க சாரி... என்ன நம்புங்க . நா தெரியாமா தான் செஞ்சுட்டேன்"
என அவளை தொடர்ந்து வந்து கெஞ்ச , தனது தமையன் கெஞ்சுவது கண்டு ஸ்ரீக்கு வலித்தது.
"கனி... ப்ளீஸ்... அண்ணா தெரியாம தான் பண்ணிட்டாரு. அவரு பண்ணது சரியில்லை தான் . அவரு மன்னிப்பு கேக்குறான்ல. அவன மன்னிக்கலாம்ல. ப்ளீஸ்மா"
அவன் ஏக்கத்தோடு கனியைப் பார்க்க, தனது கண்களை துடைத்துக் கொண்டவள்.
"என்ன வேணா பண்ணிட்டு மன்னிச்சுடுங்கனு சொன்னா சரி ஆகிடுமா? சரி ஹரி நா தப்பு பண்ணதாவே இருக்கட்டும் என்ன இத்தன பேர் முன்னாடி கை நீட்டி அடிக்க இவரு யாரு? ஒருத்தரோட வெளித்தோற்றத்த வச்சு அவங்கள எட போடுறது எவ்ளோ தப்பு தெரியுமா?
இவருக்கு என்ன பாத்தோன திருடி மாதிரி தெரிஞ்சுருக்கு . அதான் நீங்க . இதுதான் நா. நீ என்னமோ எல்லாரும் ஒண்ணுதானு சொன்ன"
"கனி நா சொல்றத கேளு"
"வேணாம் ஹரி இங்க இருந்தேனா நா என்னப் பேசுறேனு தெரியாம பேசுவேன். அதுக்கு தான் நா போறேனு சொன்னேன். எனக்கு இவரு மேல கோபம் இல்ல"
என்றவள் திரும்பி ராமிடம்
"உங்க மேல கோபம் இல்ல சார்." எனறுவிட்டு விறுவிறுவென அவனைக் கடந்து சென்றுவிட்டாள்.
இங்கே ராமினது மனமோ துன்பத்தில் துவண்டது. அவன் மேலேயே அவனுக்கு கோபம் வர சட்டென்று அவ்விடத்தை விட்டு அகன்றான்.
இருவரும் செல்லும் திசையை பார்த்துக் கொண்டு யாரிடமும் முதலில் பேசுவது என தெரியாமல் நின்றான் ஸ்ரீ என்றழைக்கப்படும் ஸ்ரீஹரி.
ராம் நேரே சென்றது அவனது அவன் உபயோகப்படுத்தும் வீட்டிற்கு. மிகவும் குழப்பமான, துன்பமான சமயங்களில் எல்லாம் அங்கு தான் வருவான்.
அவனை பார்த்த அவ்வீட்டின் வேலையாள் ஓடிவந்து வணக்கம் சொல்ல , எப்போதும் தலையசைப்பை கொடுப்பவன் இன்று தவிர்த்துவிட்டு சென்றது அவருக்கு சிந்தனையை தூண்டியது.
உள்ளே நுழைந்தவனுக்கு கனியை அறைந்த நொடியே நினைவிற்கு வர , தனது வலக்கரத்தினைப் பார்த்தான்.
கோபம் வரவும் அங்கிருந்த கண்ணாடி ஜன்னலை ஓங்கி அடித்தான். அது உடையவில்லை. அவனது கை தான் வலித்தது. மீண்டும் மீண்டும் அந்த ஜன்னல் உடையும் வரை வலியை பொறுத்துக் கொண்டு அடித்தான்.
ஜன்னல் உடைந்து கண்ணாடி துகள்கள்அவனது கரத்தினை கிழித்தது. அதிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
'உனக்கு வலி தர எதையும் உன் கிட்ட நெருங்க விட கூடாதுனு நினக்கிறவன் நான். என்னாலே உனக்கு வலினா. '
அவனையும் அறியாமல் உளறியவன் ஒன்றை நன்றாக உணர்ந்து கொண்டான். அது அவன் கனி மீது உயிரையே வைத்திருக்கிறான் என்பது தான்.
அவன் உயிராக நினைக்கும் கனி அவனது காதலை ஏற்றுக் கொள்வாளா.
"ஆதி பசிக்குதுடா... லன்ச் டைம் ஆகிட்டு. வா சாப்டலாம்" என்ற நண்பன் முரளியை வித்தியாசமாய் பார்த்தான் ஆதி.
"என்னடா பாக்குற" முரளி
"ஒண்ணுமில்ல. எப்பவும் சாப்பாட பத்தி தான்டா நீ அதிகமா பேசுற."
"ஆதி...."
"சரி சரி வாங்கப் போகலாம்" என்றவர்கள் கேன்டீனை( canteen) நோக்கி சென்றனர்.
மதியின் கெட்ட நேரமோ இல்லை நிவியின் கெட்டநேரமோ அவர்களும் என்றுமில்லா திருநாளாய் கேன்டீனிற்கு சாப்பிட வந்திருந்தனர்
"ஏன்டி அதான் லன்ச் கொண்டு வந்துருக்கேன்ல அப்புறம் ஏன் கேன்டீன் கூட்டிட்டு வந்துருக்க."
"இல்ல மதி.... இன்னைக்கு புதன் கிழம"
"அதுக்கு"
"இல்லடி இன்னைக்கு நம்ம கேன்டீன்ல பக்கோடா போடுவாங்க. சூப்பரா இருக்கும்டி. இன்னைக்கு விட்டா அப்புறம் அடுத்த வாரம் தான்டி. அதான்" என இழுத்தாள் நிவி.
"எப்ப பாரு சாப்பாடு சாப்பாடு . இத தவிர வேற எதுவும் தெரியாத"
"திட்டாம வாங்கி குடுடி."
அவளை முறைத்து விட்டு மதி பக்கோடா வாங்க செல்ல
'இந்த லூசு மதி எல்லாருக்கும் பயப்படுறா. ஆனா என் கிட்ட மட்டும் அப்படி வாயடிக்குறா. சரி இப்ப அதுவா நமக்கு முக்கியம். வத்தகுழம்பு, கோஸ் பொரியல் , அப்பளம், பக்கோடா எல்லாம் எனக்கு தான். நல்லா சாப்ட போறேன்' என மனதினுள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவளது நினைவில் மண்ணைப் போடவென்று அவளருகில் வந்து அமர்ந்தனர் ஆதியும், முரளியும்.
அவர்களை பார்த்து அதிர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அனைவரது பார்வையும் அவர்களை நோக்கியே இருந்தது.
அன்று ஹோட்டலில் நடந்தது கல்லூரியில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆதலால் அவர்கள் வியப்புடன் ஆதியை பார்த்தனர்.
நிவியோ ' நான் எப்பலாம் எனக்கு பிடிச்ச ஐட்டம்லாம் வச்சு சாப்டனும்னு நினைக்குறனோ அப்பலாம் கரெக்டா எண்ட்ரீ தரானே. இன்னைக்கும் போச்சு. ஐயோ மதி வந்தா ரொம்ப பயப்படுவாளே' என யோசிக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கும், முரளிக்கும் சிரிப்பு வந்தது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.