@sivanayani Ma'm
உங்களுடைய hero heroine பெயர் தெரிவுகள் அருமை. தனித்துவம் வாய்ந்தவை. அதற்கு நீங்கள் அளிக்கும் விளக்கம்
.
ஏகவாமன்+ அலரந்திரி
அநேகாத்மன்+சர்வமகி
AND NOW
அந்தமில்லார்யன் + சாருத்தமை
ஆர்யன் ஆண்மைக்கு இலக்கணமானவன். நேர்கொண்ட பார்வை உள்ளவன் அழுத்தமானவன்.
ஆர்யனுக்கு மறுபெயர் ஸ்ரீ ராமன்.
இவனை போல ஆண்மகன் கிடைத்தால் அது வரம்.
காதலில் இன்ப ரசம் சொட்டுகிறான்.
அதேவேளை கோபத்தில் தேளாய் கொட்டுகிறான்.
சாரு சதியின் வலையில் அகப்பட்ட ஒரு அப்பாவி.
உண்மையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவள் படும் பாடு கண்ணீரை வர வைக்கிறது.
ஷியாம் மனித உருவில் உள்ள மிருகம்.
தேவகி அன்பான அன்னை அதே நேரம் super மாமியார்
மகனது வாழ்வுக்காக அவர் போடும் நாடகம் செம்ம.
ஆர்யனுக்கே அம்மா என்று நிரூபிக்கிறார்.
அவனை வெறுபேற்றுவது எல்லாம் ஜே போட வைக்கிறது
அப்புறம் நம்ம
விச்சு
இவன் பெயரை சொன்னாலே சிரிப்பு மழை தான். வாசகர்களுடைய stress buster
அதிலும் climax இல் அவன் அடிக்கும் looty செம்ம.
இப்படி நவரசத்தையும் தன் கதையில் புகுத்தி எம்மை ரசிக்க வைத்த நயனி மா விற்கு ரொம்ப நன்றி