மிகவும் அருமையான பதிவு நயனி
.என் மகன் ஒன்றை விரும்பியிருக்கிறான் என்றால் சும்மாவா,இந்திரலோகத்து பெண்கள் தான்
அழகென்று யார் சொன்னது,என்று சாருத்தமையின் அழகை கண்டு வியந்து நிற்பதும், அவள் அழகுக்கு அழகு சேர்க்க பொன்னகைகளால்
தேவகி ,சாருத்தமையை அலங்கரிப்பதும் அழகு
.
ஆர்யன் அணிவித்த தாலி,மோதிரத்தை சாருத்தமை பாதுகாத்து வைத்திருப்பதையும்,அவன் மன்னிப்புக்காக காத்திருப்பதையும் கேட்ட தேவகி
ஆர்யன்,சாருத்தமையை, வருணுடன் பார்க்கும் போது அவன் கண்களில் தோன்றும் பொறாமை,கோபம்,எரிச்சல் அவள் மேல் கொண்ட காதலினால்
ஏற்பட்டது ,அவனுடைய வறட்டு பிடிவாதமும்,அகங்காரமும் குறைந்தாலே அவளை தேடி வருவான் என சொல்வது அருமை
.
சாருத்தமையை கண்டு தன்னை அறியாமல் அவளிடம் செல்வதும்,வருணின் வருகையும் அவன் உமை என கூறும் போது கோபம் கொள்வது,
இடையில் ஆரம் இருந்தால் நன்றாக இருக்கும் என வருண் கூறும் போது,எப்படி உமையின் இடையை பார்க்கலாம் என பொறாமை கொள்வதும், உமைக்கு உதவ மாடிக்கு செல்லும் வருணை தடுத்து தானே செல்வது என காதலால் தவிப்பதும்,அதை மறைக்க முடியாத நிலையில் ஆர்யன்.
வருண் ,ஆர்யனை வச்சு செய்யறான்.உமை என அழைப்பது,அவள் அழகை புகழ்வது,இடையில் ஆரம் போட சொல்வது ,
டார்லிங் ஜாலியாக தனிமையில் இனிமை காணலாம் என கூறி ஆர்யனை வெறுப்பேத்துவதும் வருணுக்கு தர்மஅடி கட்டாயம் உண்டு
.
கட்டிக் கொள்ளப்போறவன் உமை என்பான்,உம்மா என்பானா கலக்குறீங்க தேவகி
.