Hi sis, வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை படித்த நிறைவு.
விஷ்வா இடையில் வந்தாலும் இறுதிவரை மனத்திற்கு இனியவனாக பயணித்து இருக்கிறான்.
ஆரவன், தன் மக்களுக்காக தயாராக இருப்பதும், விஷ்வா தன் மக்களை ஏமாற்றி விடுவானா என அவனை கண்காணிக்கும் போதும், தங்கள் தவறு உணர்ந்து விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்டதும் சூப்பர்.
அழகி, துணிச்சலும், புத்தி கூர்மையும், உறுதியும் கொண்ட பெண்ணாக அசத்துகிறாள்.
ஆறுச்சாமி முதலில் selfish ஆக இருந்தாலும் இறுதியில் நல்லது செய்து தப்பிவிட்டார்.
அஜய் போன்றவர்கள் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.
விஷ்வாவின் கொள்கைகளான
1.செழுமையாக இருந்தாலும் எளிமையாக வாழ்வது
2.உழைத்து முன்னேற வேண்டும் என உறுதி ஏற்படுத்தியது
3.வாக்கு சேகரிக்கும் போது பட்டங்கள், கோசங்கள் தவிர்த்தது.
4.எம்எல்ஏ வாக வெற்றி பெற்றும் பெரிய பதவிக்கு போகாமல் சாதுர்யமாக மற்றவர்களின் பொறுப்பை கண்காணிக்க அனுமதி பெற்றது
5.மக்களின் வாயிலாக போராடி அவர்களின் உரிமையை மீட்டெடுத்து, அடிப்படை வசதிகளை பெற செய்தது.
6.தொழில் துறையில் சிறந்த மாற்றம் கொண்டு வந்தது
7.இன்னும் கற்று சிறந்த நிர்வாகியாக திகழ நினைப்பது
போன்ற கொள்கைகளை தமிழ் நாட்டில் மட்டும் அல்லாது இந்தியாவிலும் உலக அளவிலும் பின்பற்றினால் உலகே உயிர்ப்புடன் வாழும்.
மொத்ததில் சமூக அக்கறையுடன் கூடிய சிறந்த கதைக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் sis