All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னோடும் பேசலாம்.... நான் சாஜூ!!

Chitra Balaji

Bronze Winner
எழுதிக்கிட்டே இருக்கேன் பேபி 😍. சீக்கிரம் வரப்பார்க்கிறேன்.

காத்திருப்பிற்கு நன்றி பேபி 😍😍
Eagerly waiting maa.... Come soon
 

Stella mary

Bronze Winner
Sis நான் amazon kindle store download பண்ணிட்டேன் ஆனா என்னால உங்க ஸ்டோரி படிக்க முடியலை sis படிக்கிறதுக்கு அமௌன்ட் pay பண்ணனுமா amazon kindle என்னால login பண்ண முடியலை sis please help me how to create an account
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நான் amazon kindle store download பண்ணிட்டேன் ஆனா என்னால உங்க ஸ்டோரி படிக்க முடியலை sis படிக்கிறதுக்கு அமௌன்ட் pay பண்ணனுமா amazon kindle என்னால login பண்ண முடியலை sis please help me how to create an account
பே பண்ண வேண்டாம் மா.‌ ஃப்ரீயா படிக்கலாம்.

அமேசான் கிண்டல் app download பண்ணுங்க.

IMG_20200622_200852.jpg

அப்புறம் நீங்க use பண்ணும் உங்க email id கொடுத்து sign in பண்ணுங்க.

அதில் store nu ஒரு option வரும். அதில் கதை பெயரை கொடுத்து search செய்ங்க.

Buy now for free nu irukkum. அதை click செய்தால் கதை download ஆகிடும். பக்கத்திலே library nu ஒரு option இருக்கும். அதை click செய்து கதையை படிக்கலாம்.

எனக்கும் தெரியாது பா... நானும் இப்போ தான் பழகினேன். ட்ரை செய்து பாருங்க... என்ஜாய்...😍😍😍
 

Stella mary

Bronze Winner
பே பண்ண வேண்டாம் மா.‌ ஃப்ரீயா படிக்கலாம்.

அமேசான் கிண்டல் app download பண்ணுங்க.

View attachment 14262

அப்புறம் நீங்க use பண்ணும் உங்க email id கொடுத்து sign in பண்ணுங்க.

அதில் store nu ஒரு option வரும். அதில் கதை பெயரை கொடுத்து search செய்ங்க.

Buy now for free nu irukkum. அதை click செய்தால் கதை download ஆகிடும். பக்கத்திலே library nu ஒரு option இருக்கும். அதை click செய்து கதையை படிக்கலாம்.

எனக்கும் தெரியாது பா... நானும் இப்போ தான் பழகினேன். ட்ரை செய்து பாருங்க... என்ஜாய்...😍😍😍
Sis email id கொடுத்ததும் ஓபன் ஆகலை more தன் 10 times try பண்ணேன் எனக்கு ஓபன் ஆக மாட்டேங்குது
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Already உங்களுக்கு அமேசானில் account இருக்காபா... இல்லைனா முதலில் அதில் account create பண்ணுங்கமா. அப்புறம் same email id, password கொடுத்து kindle app create செய்ங்க.
 

Stella mary

Bronze Winner
Amazon kindle appkulla pona udane கீழே நிறைய இங்கிலிஷ் புக்ஸ் வருது நான் வந்து home, library, store, more இப்படி இருக்கு ஸ்டார்க்குள்ள போனா searchla உங்க name போட்டேன் ஸ்டோரி வந்தது நீங்க சொன்ன மாதிரி buy now free option கிளிக் பண்ண account ஓபன் பண்ண சொல்லும் அதே மாதிரி stellamary99665@gmail.com அப்படினு கொடுத்தேன் password கேட்க்கும் நானே ஒரு password கொடுத்தேன் ஓபன் ஆகலை ஒரு வேலை என்னோட ஒரிஜினல் password கொடுக்கணுமா கீழே amazon சில லெட்டர்ஸ் போட்டு அது மாதிரி ஓபன் பண்ண சொல்லுது ஆனா எனக்கு ஒரு வேலை id வைச்சு யாரவது misuse பண்ணிட்டா என்ன பண்றது please help me
 

Shalini M

Bronze Winner
Amazon kindle appkulla pona udane கீழே நிறைய இங்கிலிஷ் புக்ஸ் வருது நான் வந்து home, library, store, more இப்படி இருக்கு ஸ்டார்க்குள்ள போனா searchla உங்க name போட்டேன் ஸ்டோரி வந்தது நீங்க சொன்ன மாதிரி buy now free option கிளிக் பண்ண account ஓபன் பண்ண சொல்லும் அதே மாதிரி stellamary99665@gmail.com அப்படினு கொடுத்தேன் password கேட்க்கும் நானே ஒரு password கொடுத்தேன் ஓபன் ஆகலை ஒரு வேலை என்னோட ஒரிஜினல் password கொடுக்கணுமா கீழே amazon சில லெட்டர்ஸ் போட்டு அது மாதிரி ஓபன் பண்ண சொல்லுது ஆனா எனக்கு ஒரு வேலை id வைச்சு யாரவது misuse பண்ணிட்டா என்ன பண்றது please help me
Sis ஃபர்ஸ்ட அமேசன் கிண்டல் app dowload பண்ணி உங்களுக்கு நு ஒரு அக்கவுண்ட் create பண்ணுங்க.........

Mail id வச்சு........பாஸ்வேர்டு இதுக்கு nu தனியா id create பண்ணும் போது என்ன குடுகிரிங்க லோ அது தான்.....
அதுக்கு அப்புறம் தான் டவுன்லோட் பண்ண முடியும்....
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். என்னன்னு கேக்கிறிங்களா...?

கிட்டத்தட்ட போன வருஷம் ஆரம்பிச்ச என்னோட முதல் கதையை ஒருவழியா இப்போத்தான் முடிச்சிருக்கேன். ரொம்ப நீண்ட கேப் னால சில சமயங்களில் தடுமாறி விழுந்து எழுந்து இதுக்கு மேல இதை வச்சிக்கிட்டு முடியாது மா அப்படின்னு முழு மூச்சில் கதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டேன்.

என் எழுதும் ஆர்வத்திற்கு கேட்டவுடன் தளம் அமைத்துத் தந்த ஶ்ரீ மாக்கு என் மனங்கனிந்த நன்றிகள் பல...

அதேமாதிரி என் கதைக்கான கருத்துக்களை பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்தி, பாதியில் விட்ட போதும் பொறுமையாக காத்திருந்த வாசக நெஞ்சங்களுக்கம் என் உளமார்ந்த நன்றிகள். அதுக்கு மேல என்ன சொல்லன்னு தெரியலை. Keep supporting me. அதைத் தான் சொல்ல தோனுது.

இப்போ, இடியட் 🖤 லாவ்போ

ஒரு வழியாக முடிச்சிட்டாலும் நீண்ட இடைவெளி என்பதாலோ என்னவோ என்னால் முழுமையாக ஒன்ற முடியவில்லை. இருந்தாலும் மனசு போன போக்கில் எழுதி முடிச்சிட்டேன். நீங்க தான் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லனும்.

ஏதாவது குறைகள் இருப்பின் பதமாக உள்பெட்டியை தட்டி இதமாக தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஹி...ஹி...


cover.jpg

###

மழை நின்று போயிருந்தது. நனைத்த உடலில் குளிர்ந்த காற்று தீண்டி குளிர்விக்க நடுக்கம் மட்டும் நிற்கவில்லை. குளிர்போக சூடு பறக்கத் தேய்த்துக்கொண்டு சென்றவளைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ... விரைவாக நெருங்கி பின்னிருந்து அணைத்துக் கொள்ள, உடல் மொத்தமாய் அதிர அவள் அசைவற்றுப்போனாள்.

அவளின் உடலின் நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது. அவனைச் சூழ அவளது வாசமும காற்றில் அலைபாய்ந்த ஈர முடியும் அவனை வேரோடு சாய்க்க, பெண்ணின் கூந்தலின் வாசத்தை முகர்ந்து கண்மூடிக் கிறங்கியவன் அவள் உடலில் தன் சுண்டுவிரல்கூடத் தீண்டாமல் அணிந்திருந்த ஜாக்கெட்டை கழற்றி இரு தோள்வழியாகவும் அணிவித்தவன் அவளது காத்து மறைத்த முடிக்கற்றையை மெல்ல விலக்கி காதோரம் சரிந்து, “நான் மட்டுமேப் பார்க்க வேண்டியதை கண்டவனும் பார்ப்பதை ஒருக்காலும் என்னால் அனுமதிக்க முடியாது மேஜிக் டால்!” இதழுரச மிழற்றியன் ஏக்கப்பெருமூச்சுடன் வந்த வழியே திரும்பிச்சென்றான்.

அவனது வாசம்படிந்த ஜாக்கெட் அவள் மேனியோடு உறவாடிக்கலக்க, அவன் விட்ட பெருமூச்சு கன்னம் தீண்டியதில் கன்னத்தினோரம் தீப்பிடிக்க, காதுமடல் சிவந்து மென்முடிகள் சிலிர்த்து எழுந்து நிற்க, உள்ளங்கையால் ஜாக்கெட்டின் காலர் பகுதியை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டவள் மலர்ந்த முகத்துடன் அவன் செல்லும் திக்கைப் பார்த்து “இடியட்!” சத்தமாகக் கூறியவள் தரையில் கால் பாவாமல் துள்ளிக்குதித்துக் கொண்டு நகர...

அவளின் ‘இடியட்!’ அவன் காதில் தெளிவாக விழுந்ததில் அவளைத் திரும்பிப் பார்த்தவன் ‘மேஜிக் டால்! மை மேஜிக்கல் டால்...!’ தலை கோதிக்கொண்டவன் அடக்கமாட்டாத புன்னகையின் வசம் அதரங்கள் நெளிய நடையைத் தொடர்ந்தான்.

*********

“என்னாச்சு?” இதழ்கள் அவனிடம் கோபத்தில் கேள்வியெழுப்பினாலும் கைகள் தம்போக்கில் அன்று காயம்பட்ட கையில் மீண்டுமொருமுறை கண்ணாடிச்சில்லுகள் ஏறி அதிகளவு ரத்தப்போக்குடன் வீங்கிப்போய் பார்க்கவே அகோரமாய் இருந்த கைக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டது.

‘பார்க்கனும் போல இருந்திச்சுன்னா சொல்ல முடியும்!’ சத்தம் வராமல் முனகியவன் சொன்ன பதில் தெளிவாகப் புரியாமல் “பார்டன்!!” சந்தேக ஒலியெழுப்பியவளுக்கு சன்னமான மென்னகையே பதிலாய்க் கிடைத்தது.

‘என்ன கேட்கிறேன், சிரிக்கிறான் பாரு... இடியட்!!’ அவனைப் போல் இல்லாமல் அவனுக்குக் கேட்கவேண்டுமென்றே முனகியவளை அதுவரை சாதாரணமாகப் பார்த்திருந்தவன் விழிகளில் மின்னல் தெறித்தது. உள்ளத்தின் உற்சாகம் உடலில் பிரதிபலிக்க ஒருவித இறுக்கத்தில் திளைத்த கட்டுடல் இலகுநிலை மீள, சட்டெனப் பொங்கிவழிந்து இதழின் ஒரு ஓரம் வந்து அமர்ந்துகொண்ட உல்லாசப் புன்னகையுடனும் உற்சாகத் தோரணையுடனும் அவளைப் பார்த்து வைத்தவன் முகமோ மலர்ந்து விகசித்துப் போயிற்று!

இந்த ஒரு வார்த்தைக்கான அவனது காத்திருப்பைச் சொன்னால் அவளால் புரிந்துகொள்ள முடியுமா...?!

இலட்சம் பறவைகள் ஒருசேர சிறகடித்துப் பறக்கும் ஒருவகை துள்ளாட்டம் அவனுள்ளெங்கும் குதியாட்டம் போட, ததும்பி நெஞ்சம் நிறைந்த ஆனந்தத்தில் கண்களில் நீர் நிறைந்து பார்வை மறைத்து பாவையையும் மறைத்தது.

உள்ளத்தின் உணர்வுகளை மட்டுப்படுத்த தலையைக் கோதக் கைகள் பரபரக்க, ஒரு கை அவளின் பிடியில் இருந்ததென்றால் மறுகை அவள் அருகாமையில் கிடைந்தது. அவை இரண்டையும் இழக்க மனமின்றி கலங்களாகக் காட்சிப்பட்ட காதலுக்குரியவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க, உள்ளுணர்வு உணர்த்தியதோ அன்று எதேர்ச்சையாகப் அவனை நோக்கி நிமிர்ந்தாளோ...!

அவனது கலங்கிய விழிகள் கண்ணில் பட, “வலிக்குதா? சரியாயிடும்!” இதமான குரலில் ஆறுதலாகக் கூறியவள் அவன் காயம்பட்ட கரத்தை இதமாக வருடிக்கொடுக்க, அந்தப் பெண்ணின் அக்கறை உள்ளத்தை உரிமையாக தீண்ட, அந்நொடிகள் நீளாதோ என்னும் பெரும் ஏக்கத்திற்கு ஆட்பட்டான் அந்தக்காதலன்!

###

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லனும் ஃப்ரெண்ட்ஸ்.

US

India


மற்ற கதைக்கான லிங்க்.


US

India

உங்கள்
சாஜூ.
 
Top