All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னைக் கொண்டாட பிறந்தவனே👩‍❤️‍💋‍👨❤️

SudhaMurali

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26854
அத்தியாயம்_4
அச்சுவின் போன் ஒலிக்க,
ஹலோ அக்ஷரா ஹியர்.

ஹலோ மேடம் ஐம் அஜய் ஐம் வெய்டிங் இன் த லாபி.

ஓ.கே மிஸ்டர் அஜய் பளீஸ் கம் டூ ரூம் நம்பர் 216.

ஹே அக்ஷரா அங்க ஆதி உன்ன தேடிட்டு இருக்காங்க நீ இங்க யார வர சொல்ற?

வெய்ட் சித்து.ஐ ஹேவ் அ சர்ப்ரைஸ் டூ மை அண்ணா,அண்ணி😉.

அஜய் அங்கு வர,கிப்ட் பாக்ஸை வாங்கிக்கொண்டு ,தேங்க்யூ மிஸ்டர் அஜய்,யூ கேன் கோ நௌ என்றாள்.
ஓ.கே.... டாட் அன்ட் சித்து கம் லெட்ஸ் கோ.

வீட்டிற்கு வந்த வெற்றியிடம் வாங்க அண்ணா ஃபங்ஷன் எப்டி இருந்துச்சு என்றாள், மது.

ஹே!! மது,பாட்டி,அம்மா...ஏய் நிலா இங்க வா.....நாங்க போனது நிச்சயதார்த்தவிழா தான். ஆனா ஏதோ வேற நாட்ல நடக்கற ஃபங்ஷன் மாதிரி, அவ்ளோ க்ராண்டா நடந்துச்சு.இந்த மாதிரி நான் எங்கேயும் பாத்ததே இல்ல.(ஆச்சர்யமாய் விவரித்தான்). பாட்டி நான் அங்க போனதுக்கு பதிலா நம்ம ஹெட்மாஸ்டர அங்க அனுப்பிருக்கனும்.
ஏய் வெட்டி அப்பாட்ட சொல்லவா.....நிலா மிரட்ட..இரு டி அவன பேச விடு என்றாள் ஜெயா

அப்டி என்ன நடந்துச்சு அத சொல்லு-தமிழ்

மாப்பிள்ளை ப்ரண்ட்ஸ் பெரிய கிப்ட் பாக்ஸ கொண்டு வந்தாங்க மா அத ஓபன் பண்ணா பொண்ணு உள்ள இருந்து பொக்கேவோட வந்து ஐ லவ் யூ-னு சொல்றாங்க,
பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாத்துறப்போ எல்லார் முன்னாடியும் முத்தம் குடுத்து ஹக் பண்ணிகிட்டாங்க,அத பாத்து அவங்க பேரன்ட்ஸ் மத்தவங்கலாம் கைதட்டி சந்தோஷபடறாங்க...

அப்றம் பெரிய கேக் வெட்டி செமயா கொண்டாடுனாங்க...பாக்கவே க்ளாஸா இருந்துச்சு பாட்டி...(ஆ...என்று பார்த்திருந்தாள் நிலா)

நமக்கு பர்த்டே கேக் வெட்றதுக்கே, என்ன சாதிச்சிடீங்க கேக் வெட்டி கொண்டாட்ற அளவுக்கு -னு ஆரம்பிக்கறதுலேயே ஏன்டா பொறந்தோம்-னு ஆயிடும்...இதயெல்லாம் அந்த ஹெட்மாஸ்டர பாக்க சொல்லனும்... வெற்றி தன் மனக்குமுறலைக் கொட்ட... அதைக் கேட்டுக்கொண்டிருந்த மதுவிற்கு சிரிப்பு தான் வந்தது.

சித்து,ரகுராம் இருவரும் பார்டிஹாலில் மேடையில் நின்று அச்சுவைத் தேட அவளோ தான் முன் இடறி விழுந்த இடத்தில் நின்று,தன்னை தாங்கிப்பிடித்து,தான் செய்த தவறுக்கு, வலியவந்து சாரி கேட்ட ஆஜானுபாகுவான அந்த ஆடவனை அவனின் அக்கறையை எண்ணியவள் கண்களை சுழற்றி அவனைத் தேடினாள்.

அச்சு வாட் ஆர் யூ டூயிங் தேர்?வீ ஆர் வெய்டிங் ஃபார் யுவர் சர்ப்ரைஸ். கம் ஆன் வீ கான்ட் வெய்ட் மை டியர்.
ஹா...ஹான்... டாட் ஐம் ஹியர்...
அண்ணா,அண்ணி இதோ என்னோட சர்ப்ரைஸ் கிப்ட்....
என்ன பாக்ஸ் குட்டியா இருக்கே அச்சு, உன்கிட்ட பெரிய கிப்டா எக்ஸ்பெக்ட் பன்னேன் _ஆதி

ஃபர்ஸ்ட் யூ ஓபன் திஸ் தென் யூ டெல் மை டியர் ப்ரோ...

கிப்ட்பாக்ஸை ஓபன் செய்த ஆதியின் கண்கள் அகல விரிய அதிதியும் மற்றவர்களும் குழப்பத்தில் ஆதியைப் பார்க்க,ஆதி அச்சுவை கட்டிப்பிடித்து சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான்.டுமாரோ மார்னிங் கார் ரெடி ஆயிடும், ஷோ ரூம் போய் எடுத்துக்கங்க அண்ணா, என்றாள் அச்சு.


வெற்றி, நீ பொறந்தப்ப கிடா வெட்டி ஊருக்கே விருந்து வச்சுவன்டா உன் அப்பா. அவனுக்கு பாசத்த வெளிய காட்ட தெரியாது,என்ற தன் பாட்டியிடம் அதானே உங்க பையனாச்சே விட்டுகுடுப்பிங்களா அப்போ, நிலாகிட்ட மட்டும் பாசத்த கொட்றாரு என்றான் வெற்றி. (நிலா சிரிக்க)

உனக்கு கல்யாணம் ஆகி குழந்தைங்க வரப்போ,எல்லாம் தானா புரியும். -ஜெயா

ஆமா அண்ணா, பாட்டி செல்றது கரெக்ட் தான்; மது சொல்ல இப்படியே அவர்களது பேச்சு நீண்டுகொண்டிருந்தது.

ஆதி அப்டி என்ன கிப்ட்-னு சொன்னா நாங்களும் சந்தோஷபடுவோம்ல என்ற மஞ்சரியிடம், ஆதி கார் சாவியை எடுத்துக்காட்ட,
பிஎம்டபிள்யூ வா-வாயைப்பிளந்தான் சித்து.

கண்ணிமைக்காது நின்ற அதிதியிடம் அண்ணி டிட் யூ லைக் மை சர்ப்ரைஸ் கிப்ட்?-அக்ஷரா.

அச்சு ஏன் இப்டி என்ன அழ வைக்கிற.
ஏன் அண்ணி கிப்ட் பிடிக்கலயா சிரித்துக்கொண்டே அச்சு கேட்க,அச்சுவை கட்டித்தழுவிய அதிதியிடம், யூ ஆர் டூ எமோஷனல் அண்ணி ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ப்.
அந்த எமோஷனை அழகாக தன் மொபைலில் கேப்சர் செய்தான் சித்து.

நேரம் மாலை நான்கை நெருங்க வெற்றிக்கு உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத பதற்றம் தொற்றிக் கொள்ள, அதைக் கண்ட மது அண்ணா நான் ஃபர்ஸ்ட் டைம் போறப்போ எனக்கும் ஒரு மாதிரி தான் இருந்துச்சு,அப்றம் மதுரை,திருச்சிக்கு போற மாதிரி ஆயிடுச்சு.ஹரிஷ் நெக்ஸ்ட் வீக் வந்துருவாங்க அண்ணா ஒன் வீக் மட்டும் சமாளிச்சுகங்க என்றாள்.

தமிழ், நேரத்துக்கு சாப்பிடு வெற்றி, புது இடம் எல்லார்டயும் நல்லா பேசு,இங்க இருக்க மாதிரி இல்லாம என்றாள்.
ஜெயாவும் தன் பங்கிற்கு சில அறிவுரைகளைக் கூற,அரைகுறையாய் கேட்டுக்கொண்டிருந்தான் வெற்றி.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நிலா இன்னுமா இந்த உலகம் இவன நம்புது🤦‍♀️ மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். ஆம், அண்ணனின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவள் அவள் மட்டும் தானே😜.

க்ரூப் போட்டோஸ்,பேமிலி
போட்டோஸ்,கப்பிள் போட்டோஸ் என போட்டோ ஷூட் நடந்து கொண்டிருக்க,மஞ்சரி மட்டும் அச்சு ஊருக்கு செல்வதை எண்ணி உள்ளுக்குள் கவலை கொண்டிருந்தாள்.

உறவினர்,நட்புவட்டம்,பிஸினஸ் ப்ரண்ட்ஸ் அன்ட் கொலிக்ஸ் என கூட்டம் வந்திருக்க, மதிய உணவிற்கே மாலை நான்கு ஆகிவிட்டது.

அப்போது அங்கே வந்த மஞ்சரியின் தோழி புவனா,என்ன மஞ்சு கல்யாண வயசுல பொண்ண வச்சுட்டு பையனுக்கு கல்யாண ஏற்பாடு பண்ற?

(ஏற்கனவே கவலையில் இருந்த மஞ்சரியின் முகத்தில் இன்னும் கவலை தொற்றிக்கொள்ள)
அருகே இதனை கவனித்துக்கொண்டிருந்த அக்ஷரா, ஆன்டி இஃப் யூ டோன்ட் மைன்ட் நான் கொஞ்சம் பேசலாமா? ஹ்ம்ம் என்க,
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் திஸ் இஸ் அவர் ஃபேமிலி மேட்டர்.அன்ட் தென் ஐம் நாட் மென்டலி ரெடி ஃபார் மை மேரேஜ். ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மெஷன்,
திஸ் இஸ் மை லைஃப் சோ யூ டோன்ட் இன்டர்பியர் ஓ.கே. என்றாள் சற்று கோபத்துடன்.

மஞ்சரிக்கோ எதுவும் சொல்ல முடியாத நிலை.புவனா அமைதியாக அங்கிருந்து செல்ல, அச்சுவோ கோபத்தின் உச்சியில் மாம் ஐம் லீவிங் என்று சொல்ல, மஞ்சரி ரகுராமை அழைத்தாள்.

அச்சு யூ ஹேவ் சம் டைம்.யூ டிட் வெப் செக்-இன் ரைட்.தென் ஒய் ஆர் யூ லீவிங் நௌ?
-ரகு கேட்க,

டாட் ஐம் சாரி.ஐ வான்ட் டூ கோ நௌ.ப்ளீஸ் டோன்ட் ஃபோர்ஸ் மீ டூ ஸ்டே ஹியர். (அதற்கு மேல் அவளை தடுக்க முடியாத ரகு அமைதியாய் நின்றார்.)
வெற்றி மீண்டும் எல்லோரடமும் ஆசி பெற்று அரை மனதுடன் தயாரானான்.

மதுவிற்கு ஹாஸ்பிடல் அப்பாயின்மென்ட் இருப்பதால் மூர்த்தி சேதுராமிடம், நம்ம கார்ல தானே ஏர்போர்ட் போறோம் நீ வரமுடியலனு கவலபடாத நாங்க பாத்துகறோம் என்றார்.

மது வெற்றிக்கு போர்டிங், இமிக்ரேஷன், செக்யூரிட்டி செக்-இன் என அனைத்தையும் மறுமுறை நினைவு கூற,அதை அப்படியே கிரகித்துக்கொண்டான் வெற்றி.

சித்தி,சித்தப்பா,மது அனைவரிடமும் விடைபெற்று பாட்டி,அம்மா,அப்பா,நிலா உடன் ஏர்போர்டிற்கு கிளம்பினான் வெற்றி.

அண்ணா,அண்ணி எஞ்சாய் யுவர் டே. ஐம் ரெடி டூ மூவ் டேக் கேர்,லவ் யூ போத்❤என்று விரல்களில் இதய வடிவத்தைக்காட்டி, இருவரையும் அணைத்து பாய் என்ற அச்சுவிடம்,மிஸ் யூ மை டியர் அன்ட் டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த் என்று சொல்லி வழி அனுப்பி வைத்தனர் ஆதியும்,அதிதியும்.

மஞ்சரியும் மனமில்லாது விடை கொடுக்க, மாம் ப்ளீஸ் ஸ்மைலி ஃபேஸோட பாய் சொல்லுங்க. டூ மன்த்ஸ்ல ரம்ஜான் ஹாலிடேஸ் சோ ஐ வில் கம் சூன் ஓ.கே- அக்ஷரா

வேர் இஸ் மை டிரைவர் மிஸ்டர் சித்தார்த்?

சித்து, எஸ் மேடம் என்றான் தலை தாழ்த்தி, அனைவரும் சிரிக்க அங்கிருந்து விடை பெற்றாள் அக்ஷரா.


ஆங்கில பாடலை இசைத்தவாறு அமர்ந்திருந்த அச்சுவைப் பார்த்து, நீ மட்டும் ஏன் இப்டி இருக்க
என்றான் சித்து.

காரில் இருக்கும் கண்ணாடியைப் பார்த்துவிட்டு, ஐம் குட் மிஸ்டர் சித்து. ஐ திங்க் யூ வுட் செக் யுவர் ஐஸ். (புன்னகைத்தாள்)

ஹே ஐம் சீரியஸ்லி டெல்லிங் அக்ஷரா. யூ ஒன்லி திங்க் ஆஃப் யுவர் செல்ப், யூ ஆர் த மோஸ்ட் ஷெல்ஃபிஷ் பர்சன் ஐ நோ. ஆன்டிய ஏன் நீ இவ்ளோ கஷ்டபடுத்துற?

ஐ டோன்ட் கேர் அபௌட் வாட் யூ அன்ட் அதர்ஸ் திங்க் ஆஃப் மீ, அன்ட் ஐ டோன்ட் நீட் டூ எக்ஸ்ப்ளைன் மை செல்ப்.

இந்த ஈகோ தான் உன்கிட்ட பிரச்சனையே..பாய்ஸ் ட கூட இவ்ளோ ஆட்டிடூய்ட் இருக்காது.யூ ஆர் டூ அரோகன்ட்.

ஷட் யுவர் மவுத் மிஸ்டர்.சித்தார்த்.ஐ நோ ஒய் ஆர் யூ டாகிக் லைக் திஸ். பாஸ்ட் இஸ் பாஸ்ட்.
அன்ட் ஒன் மோர் திங்க், திஸ் இஸ் நாட் ஈகோ,அரோகன்ன்ட்,ப்ளா ப்ளா ப்ளா....திஸ் இஸ் கால்ட் செல்ப் ரெஸ்பெக்ட் மைன்ட் யுவர் டங்.

உனக்கு எப்டி அக்ஷரா மேரேஜ் ஆகும் நீ இவ்ளோ ஸ்டபர்னா இருந்தா, ரொம்ப பாவம் அந்த பையன் அலுத்துக்கொண்டான் சித்து.

தேங்க் யூ ஃபார் யுவர் கன்சர்ன். (அச்சுவின் கண் முன்னே வெற்றியின் முகம் ஒரு நொடி வந்து போனது)
சித்து, இந்த கண்டதும் காதல்ல உனக்கு நம்பிக்கை இருக்கா?

என்ன லவ் பத்தி நீ பேசுற.... எனக்கு நம்பிக்கை இருக்கத விடு, யார் அந்த பையன்?

யார்... யார் பையன்.... அப்டிலாம் யாரும் இல்லயே....

நீ காலைல இருந்து தேட்றல அந்த பையன் தான்.

அச்சு நடந்ததைக் கூறி, அவன எங்க எப்டி இனி தேட்றது.லீவ் இட் என்றாள்.

அப்போ அது காதல் தானா அக்ஷரா? அப்டி உனக்கு ஃபீல் ஆனா சொல்லு,நா கண்டுபிடிச்சு தரேன் அந்த பையன, உன்ன மாதிரி பிரண்ட் லவ் எப்டி போனா என்னனு-லா நான் இருக்க மாட்டேன்.

ஹே சித்து வாட் டூ யூ திங்க் அபௌட் மீ? கொஞ்சம் சென்ஸோட பேசு, ஜஸ்ட் டூ மினிட்ஸ் பாத்தாலே லவ் வந்துடுமா? அவனோட கேரிங் அன்ட் ஸ்மைல அட்மைர் பன்னேன் தட்ஸ் இட்.
( அவனைப் பற்றிக் கூற மீண்டும் ஒருமுறை எங்கேனும் அவனை அவனின் அந்த ஈர்க்கும் விழிகளைப் பார்த்திர மாட்டோமா என்று தோன்ற, அச்சு வாட் இஸ் திஸ். திஸ் இஸ் நாட் யூ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.)
 
Top