All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னைக் கொண்டாட பிறந்தவனே👩‍❤️‍💋‍👨❤️

SudhaMurali

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-2

காலை ஐந்து மணிக்கெல்லாம் மஞ்சரி பூஜைக்குத் தேவையானதை தயார் செய்ய,அதிதியும் அவருடன் இணைந்து கொண்டாள்.

அதிதி, நீ போய் ஆதியையும், அச்சுவையும் ரெடி ஆக சொல்லு" என்றாள் மஞ்சரி.
அதிதி, ஆதியின் ரூமினுள் தயங்கியபடி செல்ல, ஆதி தன் ஒரு கையை கன்னத்திலும், மற்றொரு கையால் தலையணையைக் கட்டிக் கொண்டும் உறங்குவதை ரசித்துக்கொண்டிருந்தாள்.
தலையணையை சற்றே உருவி நான் இருக்க வேண்டிய இடத்தில் நீயா ?" என்று அவள் ஏக்கத்தோடு சொல்வதைக் கேட்டு,
"தென் ஒய் ஆர் யூ வெயிடிங் பேபி, கம் ஆன் ஹக் மீ" என்றான் காதலுடன்.
ஆதி சமத்து பையனா ரெடி ஆகி கீழ வா என்று தலையணையை அவன் மேலே போட்டு விட்டு, பறக்கும் முத்தம் ஒன்றை தந்துவிட்டு , அச்சுவின் ரூமினுள் நுழைந்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
அச்சுவும் ஆதியைப் போல ஒரு கையை கன்னத்திலும்,மற்றொரு கையால் தலையணையைக் கட்டிக் கொண்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். அண்ணனும் தங்கையும் குணத்தில் மட்டுமில்ல, செய்கையிலயும் ஒன்னு என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அச்சுவை எழுப்பினாள்.
மஞ்சு எவ்ரிதிங் இஸ் ஓகே என்று சொல்லிக் கொண்டே வந்த ரகுராமிடம்,
ரகு,அச்சுவ இனியாவது துபாய் போக வேணாம்,நம்ம கம்பெனில ஜாயின் பண்ண சொல்லுங்க, இனி அச்சுவுக்கும் நல்ல வரனா பாக்க வேண்டியது தான்.அவ போட்ற கண்டிஷன்ஸ்க்கு ஏத்த பையனா பாக்க எப்படியும் ஒன் இயர் ஆகும்.
மஞ்சு டியர், அச்சுவோட லைஃப் க்கு நம்ம சப்போர்ட் பண்ணா மட்டும் போதும்.அவங்க வாழ்க்கைய அவங்க வாழட்டும் நம்ம முடிவுகள அவங்க மேல திணிக்க வேணாமே,
பட், ரகு அவ ஆர்க்கிடெக்ட் படிக்றப்ப ஏ2 பில்டர்ஸ கவனிச்சுபா னு நினைச்சேன்.
அச்சு சின்ன குழந்தைல இருந்தே இன்டிபெண்டண்டா வளர்ந்த பொண்ணு, சோ, நம்ம அவ லைஃப நினைச்சு கவல பட வேணாம் மஞ்சு.
"மாம், ஐம் ரெடி, என்று ஆதி கீழே இறங்கி வர, கண் இமைக்காமல் அவனையே ரசித்துக் கொண்டிருந்தனர் மஞ்சுவும்,ரகுவும்.
அதிதி, வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்த ஆதியை ஓரக் கண்ணால் பார்த்து கண்ணடித்து, திருஷ்டி எடுப்பது போல் சைகை செய்தாள். "ஆதிக்கோ தன்னவளின் செய்கையில் சந்தோஷம் பீறிட்டது".
பூஜைக்கு எல்லாரும் வந்தாச்சு, எங்க அச்சு என்று ரகு வினவிட, ஹாய் டாட் ஐம் ஆல் சோ ரெடி என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கி வந்தாள்.(ஜம்ப்ஷீட் எனும் வெஸ்டர்ன் உடையில் வந்த அச்சுவைப் பார்த்து) அச்சு என்ன ட்ரஸ் இது, இன்னைக்காவது பொண்ணா லெட்சனமா சேலை கட்ட கூடாதா?என்று கோபமாகக் கத்தினாள் மஞ்சரி.
மாம் எங்கேஜ்மென்ட் அண்ணாவுக்கும் அண்ணிக்கும் தானே? "என்னால ஃபுல் டே சாரி கட்டிட்டு இருக்க முடியாது. ப்ளீஸ் டோன்ட் ஃபோர்ஸ் மீ", என்றாள் பதிலுக்கு.
அச்சு இது நம்ம வீட்டு ஃபங்ஷன், என்ற மஞ்சரியை, "லீவ் இட் மாம், அவ விருப்பத்துக்கு அவள இருக்க விடுங்க என்றான் ஆதி".
ஆமா, அவ பன்ற எல்லாத்துக்கும் இப்படியே எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க என்று அலுத்துக் கொண்டாள் மஞ்சு."கூல் மாம் கூல் இப்போ என்ன நா சாரி கட்டுனா நீங்க ஹாப்பி அப்படி தானே, "சரி கட்டிக்கிறேன். போதுமா?
ரகுவும், ஆதியும் ஆச்சர்யத்தில் விழி அசையாது நின்றனர். ஏன் மஞ்சரியும் வாயடைத்துப் போய் தான் நின்றார்.
(ஆம் அச்சு இதுவரை யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.இது தான் முதல்முறை)
மதுவின் வீட்டிற்கு வந்த வெற்றியின் முகம் பொலிவிழந்து இருப்பதைக் கண்ட மது,அண்ணா, நீங்க என் வெற்றி அண்ணாவே இல்ல. "எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கறது தான் என்னோட வெற்றி அண்ணாவுக்கே அழகு.
"ஐயோ அக்கா, அண்ணாவுக்கு பதிலா நான் துபாய் போறதா இருந்தா இந்நேரம் நான் எவ்ளோ ஹாப்பியா இருந்திருப்பேன் தெரியுமா?
ஏய் நிலா அமைதியா இரு, அண்ணா ரொம்பவே வருத்தத்துல இருக்காங்க, நீ வேற நேரம் காலம் தெரியாம என்றாள் மது.
அண்ணா உங்க மூட் சேஞ்ச் ஆகனும்னா நீங்க அப்பாகூட என் ப்ரண்ட் வீட்டு ஃபங்ஷனுக்கு போய்ட்டு வாங்க, என்ற மதுவிடம் தெரியாத இடத்துக்கா அச்சோ வேணாம் மது, என்று மறுத்தான் வெற்றி.அண்ணா என்னால இப்போ போக முடியாது. அவ என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் தான் அண்ணா நீங்க அங்க போனா உங்களுக்கு கொஞ்சம் மூட் சேஞ்சிங்கா இருக்கும், என்ற மதுவின் உரிமையான வார்த்தைக்கு மறுப்பேதும் கூறாமல் தலையசைத்தான்
ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெரிய பார்டி ஹாலில், வண்ண வண்ண பூ தோரணங்களும், பலூன்களும் பார்ப்பவர் கண்களை ஏதோ சொர்க்கத்திற்கே வந்தது போல உணர வைத்தது.. எத்தனையோ ஃபபங்ஷன் அந்த பார்டி ஹாலில் நடந்திருந்தாலும் அதி, அதிதியின் நிச்சயதார்த்த விழா சற்றே வித்தியாசமாகவும் ஆடம்பரமாகவும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

வெற்றியும், மதுவின் தந்தை சேதுராமனும் கால் டாக்சியில் ஹோட்டலை வந்தடைந்தனர். வெற்றியின் கண்கள் சில நிமிடங்கள் இமைக்க மறந்து, பிரமிப்பின் உச்சத்தில் உள்ளே நுழைந்தான். ரகுராம் சார் இருக்க லெவலுக்கு போட்டிபோட்டு பொண்ணு கொடுப்பாங்க, ஆனா தன்னோட பையன் ஒரு ஆதரவற்ற பொண்ண விரும்பினாலும் எங்கேஜ்மென்டையே இவ்ளோ சிறப்பா பண்றார். உண்மையாவே அவர் ஒரு ஜென்டில்மேன் வெற்றி.
சேதுராமன் சொல்வதை ஆச்சர்யத்துடன் விழிவிரித்து கேட்டுக்கொண்டிருந்தவன், சிறிது நேரத்தில் தான் காண்பது ஒன்றும் கனவல்ல என்பதை உணர்ந்தவனாய், சித்தப்பா இது நிச்சயதார்த்த விழாவா இல்ல நம்ம ஊர் சித்திரை திருவிழாவா? பிரமிப்பிலிருந்து மீளாதவனின் பார்வையில், ஐந்து வயது குழந்தை ஆசையில் அம்மாவின் புடவையை உடுத்தி நடப்பது போல், தன்னை நோக்கி ஒரு பட்டாம்பூச்சி படபடத்து வருவதைக் கண்டு வெற்றி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
அப்போது வெற்றியின் போன் ஒலிக்க அவன் சற்று தள்ளிச் சென்று போனை எடுக்க,மறுமுனையில் ஹரிஷ், ‘மச்சான் இப்போ தான் மதுகிட்ட பேசுனேன்.நீயும்,மாமாவும் அச்சு வீட்டு ஃபங்ஷனுக்கு வந்தீங்க-னு,அச்சு கூட துபாய்ல தான் வொர்க் பண்றா.ஹ்ம்ம்...என்று மட்டும் பதில் கூறியவனை,ஓ.கே மச்சான் ஈவ்னிங் ஏர்போர்ட் போறப்போ கால் பன்னுனு சொல்லி போனை கட் செய்தான் ஹரிஷ்.(வெற்றியின் மனம் என்னவோ எதிலும் ஒட்டவே இல்லை.காரணம், வீட்டை விட்டு போக மனமே இல்லை)
ஹாய் அங்கிள், மது எப்படி இருக்கா?அவ வீட்டுக்குதான் வரல அட்லீஸ்ட் ஃபங்ஷனுக்கு வந்திருக்கலாம்ல? என்று செல்ல கோபம் கொண்ட அச்சுவிடம், மதுவிற்கும் வர ஆசைதான் பெட்ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்லிடாங்க மா, என்றார் சேதுராமன். ஆன்டிய அழைச்சுட்டு வந்துருக்க கூடாதா அங்கிள் நீங்க தனியா வந்திருகிங்க, என்று அச்சு மறுபடியும் சிணுங்க, அக்ஷரா அதிதி உன்ன கூப்பிட்றா என்ற குரல் கேட்டு, அங்கிள் ப்ளீஸ் சிட் ஹியர் என்று அவரை முன் இருக்கையில் அமரச்செய்து நகர்ந்தாள்.
வெற்றி எதிர்வருவதை கவனிக்காது வேகமாக வந்தவள்,அவன்மீது மோதி கீழே விழப்பார்த்தவளை,இடையோடு வளைத்து தன் கைகளில் தாங்கினான்.அச்சு அவனைத் திட்ட வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்த நொடி,ஐயோ,சாரிங்க... பா...பாத்து...மெதுவா, என்ற மென்மையான ஆணின் குரலைக்கேட்டு நிமிர, ஓ..அமை காட் என கத்தினாள்.
அச்சோ! கொஞ்சம் பொறுமையா அப்படியே இருங்க,என்றவனின் பேச்சைக்கேட்காது அச்சு வேகமாக இழுக்க,பாத்து...பாத்து வெய்ட் என்று சொல்லி, தன் சட்டை பொத்தானில் சிக்கியிருந்த அச்சுவின் தலைமுடியை அவ்வளவு நேர்த்தியாக விடுவித்திருந்தான் வெற்றி.அவன் கைகளின் நடுக்கத்தையும், இதயத்துடிப்பின் வேகத்தையும் உணர்ந்தவள்,யாரிவன் என்று காண அவள் மனம் உந்தித்தள்ள, நிமிர்ந்தவளை விழிவிரித்துப்பார்த்தவன் சிறு புன்னகை மட்டும் செய்துவிட்டு நகர்ந்தான்.
அச்சுவின் மனதிலோ அவனது மென்மையான குரலும்,அவளை ஒரு குழந்தை போல அவன் தாங்கிய விதமும்,கண்களை நேராக பார்த்திருந்ததும் இதுவரை எந்த ஆணிடமும் ஒருங்கே அவள் கண்டதில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே,மீண்டும் அக்ஷரா என்ற குரல் கேட்க, தன்நினைவு வந்தவளாய் அதிதி இருக்கும் அறைக்கு விரைந்தாள்.
அச்சு ஆதி ரெடியா? அதிதி கேட்க, ‘வாட் அ மேக்னடிக் ஐஸ்’ என்றாள் அச்சு.
என்ன அச்சு என்ன சொல்ற? ம்ம்ம்...ஹா ஒன்னுல அண்ணி, உங்க ஐஸ் ரொம்ப நல்லாருக்கு, என்று சொல்லி நாக்கை கடித்தாள். ரியலி! ஆதிக்கு பிடிக்குமா அச்சு?
ஒன் செகண்ட், என்று சொல்லி ஆதிக்கு வீடியோ கால் செய்து அதிதியிடம் தந்தவள்,சற்று தூரம் சென்று கண்ணாடியில் தன்னைப் பார்த்து மனதிற்குள் புன்னகைத்தாள்.(ஆம், ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்ற அச்சுவின் எண்ணத்தில் சிறு தடுமாற்றம்). வெற்றியின் கண்கள் தன்னை நேராகப் பார்த்ததும்,அவனின் கைகளின் நடுக்கமும்,இதயத்தின் படபடப்பும் அச்சுவின் கண் முன்னே நிழலாடியது. வெற்றியின் கண்களில் ஏதோ ஒரு ஈர்ப்பு தன்னை ஏதோ செய்வதாய் உணர்ந்தாள். அவனின் கண்களை மீண்டும் மீண்டும் காண வேண்டும் என தன் மனது உந்தித் தள்ள, மேடையின் ஓரம் நின்று வெற்றியின் மீது கண்களைப் படரவிட்டாள்.
ஹே... பேபி...என்னடி இப்டி கொல்ற?என்று ஆதி சொல்ல,வெட்கத்தில் அதிதியின் முகம் சிவந்தது.இப்படியே அவர்களின் கொஞ்சலும் கெஞ்சலும் நீண்டுகொண்டிருந்தது.

வாங்க..வாங்க.. மது எப்படி இருக்கா? என்ற ரகுவிடம்,
நல்லாருக்கா சார், எங்கேஜ்மென்டையே தடபுடலா அசத்திடீங்க, அடுத்து அச்சுவின் திருமணம் தான். வரன் பார்க்க ஆரம்பிச்சுடீங்களா? என்று சேதுராமன் கேட்க, அத அச்சுதான் சொல்லனும் என்று இயல்பாய் கூறினார் ரகு. பசங்க விருப்பத்துக்கு மாறா நான் எதுவும் செய்ய மாட்டேன் சார். அவங்க லைஃப் அவங்க டிஸைட் பண்ணட்டும். இப்படி அவர்களின் பேச்சு நீள்வதை கேட்ட வெற்றிக்கு தான் வேறு கிரகத்தில் இருப்பதாகவே உணர்ந்தான். காதல் என்பதே கெட்ட வார்த்தை காதலித்து திருமணம் என்றால் ஆணவக்கொலை என்ற சூழலில் வளர்ந்தவனுக்கு பெற்றோர் சம்மதத்துடன் அதுவும் தடபுடலான விழாவாக ஒரு காதல் அரங்கேறிக்கொண்டிருப்பது ஏதோ படம் பார்ப்பது போல் இருந்தது.

வெற்றியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிவதும் பின் இயல்பாவதும் சிறு பயமும் என நவரசங்களையும் ஓரமாய் நின்று அதில் லயித்துக்கொண்டிருந்தாள் அச்சு.
 

Attachments

Top