All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னைக் கொண்டாட பிறந்தவனே👩‍❤️‍💋‍👨❤️

SudhaMurali

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம்-1
கதிரவன் தன் பணியை நிறைவு செய்ய, மதுரை மாநகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம், பறவைகள் தன் கூட்டிற்கு செல்லும் வேளை, இந்த அழகான கூட்டை விட்டு எப்படி பறந்து செல்லப்போகிறேன் என்று வெற்றி தன் பாட்டி ஜெயாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு எண்ணிக் கொண்டிருந்தான்.(அப்போது அவனுக்கு தெரியாது தன் கூட்டினை அழகாக்கும் ராணி தேனியை சந்திக்கப் போகிறோம் என்று)
தமிழரசி பரபரப்பாக வெற்றிக்கு தேவையானவற்றை இரண்டு பெட்டிகளில் அடுக்கிக்கொண்டிருந்தாள்.வெற்றி வேகமாகச் சென்று, பாட்டியின் காட்டன் புடவை ஒன்றையும் அம்மாவின் புடவை ஒன்றையும் எடுத்து வந்து தமிழிடம் நீட்ட, தமிழின் கண்கள் குளமாயின. பிறந்ததிலிருந்தே தன் மகனை பிரிந்திராத தாய்க்கு இன்று அவன் தன்னை விட்டு ஐயாயிரம் மைல்களுக்கு அப்பால் பறந்து செல்லப்போகிறான் என்பதை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மேக்ஸ் ஃபேஷனில் ஜீன்ஸ்,டீ-சர்ட்ஸ்,டாப்ஸ்,நைட் ட்ரஸஸ் என ஒரு ட்ராலி முழுவதும் நிரப்பிக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

"ஏய் அச்சு என்ன துபாய்கே ட்ரஸஸ் வாங்கிட்டு இருக்க லக்கேஜ் செக் பண்ணிக்கோ" என்றாள் அதிதி.

அண்ணி இதுல உங்களுக்கும் சேர்த்து தான் எடுத்துருக்கேன். உங்க எங்கேஜ்மென்ட்க்கு என்னோட சின்ன கிப்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டே கௌண்டரில் கார்டை கொடுத்தாள்.

"என்ன அச்சு ஒன்லி ட்ரஸஸ் மட்டும் கொடுத்து ஏமாத்த பாக்கிற" என்றாள் அதிதி.
"ஹலோ மேடம் பர்சேஸ் ஓவரா இல்ல டின்னர் முடிச்சிட்டு வரவா" என ஆதவன் கேட்க, அதிதி யூ சீட் பில் பே பன்ற வர வெளில வெயிட் பண்ணுனியா? என்றாள் செல்ல கோபத்துடன்.
கூல் பேபி நான் முன்பே வந்திருந்தாலும் அச்சு என்ன பே பண்ண விட மாட்டா, அவ என்ன அதிதியா ஒரு கர்சிப்க்கு கூட என்ன பே பண்ண வைக்கிறதுக்கு.
அவ தி க்ரேட் ஏ2பில்டர்ஸோட வாரிசு.
ப்ரோ அயம் அக்ஷரா, அக்ஷரா ரகுராம் ஒன்லி."ப்ளீஸ் கீப் இட் இன் யுவர் மைன்ட்" என்றாள் சற்று அழுத்தத்துடன்.
ஓகே ஓகே நெக்ஸ்ட் எங்க என்று ஆதவன் கேட்க,இருவரும் ஒருமித்த குரலில் சொன்னது புட் கோர்ட் தான்.
ஓகே பட் பேபி நீ தான் பில் கொடுக்கணும் என்றான் கள்ளச்சிரிப்புடன்.
அதிதி, டீல் ஓகே பட் அண்ணனும் தங்கையும் கொஞ்சம் பார்த்து சாப்பிடுங்க"என்றாள்.
அண்ணி உங்க எங்கேஞ்மென்ட்க்கு உங்களோட ட்ரீட் இது சோ நாங்க நிறைய தான் ஆர்டர் பண்ணுவோம் என்றாள் கிண்டலாக.

என்ன பேக்கிங் எல்லாம் முடிச்சாச்சா,ஹரிஷ்க்கு பிடிச்ச பால்கோவாவும் வெற்றிக்கு பிடிச்ச பால்அல்வாவும் வாங்கிட்டு வந்தேன்,இந்தா இத அவன் சூட்கேஸ்ல வை,என்ற திருமூர்த்தியை ஏறஇறங்கப் பார்த்தான் வெற்றி. திருமூர்த்தி பள்ளியில் மட்டுமல்ல வீட்டிலும் ஹெட்மாஸ்டர் தான்.
வெற்றியின் தாத்தா பாட்டி,அப்பா,அம்மா,அத்தை என அனைவருமே ஆசிரியர் தான்.வெற்றிக்கு இஞ்ஜியரிங்கில் விருப்பம் இருந்த போதும்,மெரிட் ல சீட் கிடைக்காததால் பி.காம்;எம்.பி.ஏ.; முடித்துவிட்டு மதுரையிலே யே ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்தான்.அதில் வரும் சம்பளம் குறைவே என்றாலும், அவன் தன் வீட்டாருடன் இருப்பதையே விரும்பினான்.
விதி அவன் அத்தை மகன் ஹரிஷ் மூலம் துபாயில் ஒரு கம்பெனியில் அஸிஸ்டன்ட் மேனஜர் பதவிக்கு ஸ்கைப் மூலம் இன்டர்வியூ செய்து வெற்றி செலக்ட் ஆகியிருந்தான்.
அப்பா நம்ம கார் தேனியிலருந்து எத்தன மணிக்கு வரும்? நாளைக்கு எல்லாரும் பீச் போய்ட்டு அப்பறமா ஏர்போர்ட் போகலாம் பா ப்ளீஸ் பா என்றாள் வெண்ணிலா. மகளின் வார்த்தைக்கு மறுப்பேது, சரி என்பது போல தலையசைத்தார் திருமூர்த்தி.
"ஏய் நிலா அவனே துபாய்க்கு நம்மள எல்லாம் விட்டுட்டு போற கவலைல இருக்கான் இதுல நீ ஊர சுத்தி பாக்கனுமா" என்றாள் ஜெயா.
"பாட்டி இதுவர லீவுக்கு தேனிய தவிர எங்கயாச்சும் கூட்டிட்டு போய்ருக்கிங்களா?மதுரையும் தேனியும் விட்டா வேற ஊரே இல்லாத மாதிரி" என்று அலுத்துக்கொண்டாள் நிலா.
விடு டி உனக்கு சென்னைல வேலை செய்ற மாப்பிள்ளையா பாத்திருவோம் என்றான் வெற்றி.
டேய் வெட்டி, அரகுற நீயே துபாய்க்கு போற, எனக்கெல்லாம் அப்பா ஆஸ்திரெலியா /கனடா ல வேலை செய்ற பையனா பாப்பாங்கடா, வெண்ணிலா பி.டெக்; உன்ன மாதிரி மக்கு இல்ல, என்று நக்கலடித்து ஓடிய நிலாவைத் துரத்தினான் வெற்றி. இதைப் பார்த்த தமிழரசியும் ,ஜெயாவும் கண்கள் கலங்கி நாளை இந்த வீடே வெறிச்சோடிப்போகுமே" என்று புலம்பினர்.
அப்போது அங்கு வந்த திருமூர்த்தியிடம், ஜெயா, "ஏன்டா திரு தேனில நம்ம கிட்ட இருக்க திராட்சை தோட்டத்தையும், தென்னந்தோப்பையும்,கடைகளையும் வெற்றி கவனித்தாலே போதும், அவசியம் அவன வெளிநாட்டுக்கு அனுப்பனுமா பா"
அம்மா, அதையெல்லாம் சும்மா பாத்துகிட்டா மட்டும் போதுமா? அதுல இருந்து என்னவெல்லாம் பிஸினஸ் பண்ணலாம் னு அவன் கத்துகனும்.இது வர அவனுக்குத் தேவையான எல்லாத்தையும் நீங்க, நா, தமிழ் செஞ்சுட்டோம்.இனியாவது அவன் தன் சொந்த கால் ல நிக்க பழகிக்கட்டும் மா. பணத்தினுடைய அருமையும், சுய சிந்தனையும், பொறுப்பும் அவனுக்கு வரனும்னா அவன் இப்போ இந்த வேலைக்கு போறது அவசியம்.
மகனின் இந்த முடிவு தன் பேரனின் எதிர்காலத்திற்காக என்பதை எண்ணி ஜெயாவும் அமைதியானார்.

சிக்கன் பீட்சா,கார்லிக் ப்ரட், ஸ்பானிஷ் பாஸ்தா என ஆதியும்,அச்சுவும் செய்யும் ஆர்டரில் தலைசுற்றியது அதிதிக்கு.
அதிதியின் கையைப்பிடித்து "டோன்ட் வொர்ரி பேபி அயம் ஆல்வேஸ் வித் யூ டியர்" என்று காதோரம் சொல்லிவிட்டு ஆதி தன் டெபிட் கார்டை அவளின் கையில் திணித்தான்.
ஆதி அயம் வெரி லக்கி டா.இல்லனா ஆசிரமத்தில் வளர்ந்த எனக்கு உங்க வீட்டு மருமகளா வர்ற அதிர்ஷ்டம் கிடைக்குமா? ரொம்ப தேங்ஸ்டா ஆதி என்று அவனின் கையை இறுகப் பற்றினாள்.
கூல் பேபி கூல் என்று ஆதி கொஞ்சலாக சொல்லுவதைக் கேட்டு,
அச்சு "ஐயோ வரவர உங்க ரொமேன்ஸ் தொல்ல தாங்கல"என்றாள் கிண்டலாக.
அச்சு, நீ சீக்கிரமே இவர் தான் என் உலகம்னு ஒரு பையன கூட்டிட்டு வந்து நிக்கபோற, அப்போ இருக்கு உனக்கு, என்றாள் அதிதி.
அண்ணி நா அக்ஷரா.என்ன அப்படி காதல் ல விழ வைக்க ஒருத்தன் இனி பிறந்து தான் வரனும்."மென் ஆர் ஆல்வேஸ் மென்" அண்ணி.
அப்போ ஆதி,அங்கிள் மாதிரி பையன் கிடைச்சா, ஓ.கே சொல்லுவ தானே அச்சு.
ஆண்கள் ல இவங்க மட்டும் என்ன விதிவிலக்கா? அண்ணி. நான் தான் சொல்றேனே "மென் ஆர் ஆல்வேஸ் மென்".
அப்போ எப்படி பட்ட பையன தான் நீ எதிர்பாக்ற அச்சு! என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் அதிதி.
அப்படி ஒருத்தன அந்த ஆண்டவன் படச்சிருக்காரானு தெரியலயே அண்ணி,இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன்.
" ஒரு பிஞ்சு குழந்தை மாதிரி கள்ளம் கபடம் இல்லாத வெகுளியான அன்ப மட்டுமே அள்ளி அள்ளி கொடுக்கற, கோபமே வராத எப்பவும் சிரிச்சிட்டே இருக்கற" இப்படி அச்சு சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
போதும் போதும் பிரம்மாவே குழம்பிட போறாரு இப்படி ஒருத்தன நம்ம படச்சிருக்கமா னு", கிண்டலாக சொன்னான் ஆதி.
அச்சு உன்னோட லைஃப் ஸ்டைலுக்கும், நீ எக்ஸ்பெக்ட் பண்றதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. ஆமா ஆதி கூட அப்படித்தானே என்னை லவ் பண்ணியிருக்கான். இதுல நான் ஆச்சர்ய பட என்ன இருக்கு.இந்த விஷயத்துல அண்ணனும் தங்கையும் ஒன்னுதான் போல என்றாள் வாஞ்சையுடன்.
பேபி அதுக்கு மிஸ்டர் ரகுராம்-கு தான் நாம தேங்க் பண்ணனும். பிகாஸ் ஸ்கூல்,காலேஜ்,ஜாப் இப்படி எதிலுமே அவருடைய விருப்பத்த எங்க மேல டாட் திணிச்சதே இல்ல. இப்போ நம்ம லவ் க்கு கூட க்ரீன் சிக்னல் கொடுத்த ஃபர்ஸ்ட் பெர்சன் டாட் தான்.
அச்சுவின் போன் ரிங் ஆக, "மாம் வீ ஹேட் டின்னர், ஆன் தி வே மாம். ப்ளீஸ் டோன்ட் ஸ்கோல்டு. என்று படபடத்துவிட்டு போனை கட் செய்தாள் அச்சு.
இரவு நேரம் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.வாசலில் கார் வரும் சத்தத்தைக் கேட்டு நிலா ஓடி வந்தாள்.வெற்றியின் மனம் மட்டும் அந்த வீட்டையே சுற்றி வந்தது.
வெற்றி பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க என்று அம்மா சொன்னதும், பாட்டி ,அப்பா,அம்மா என அனைவரின் ஆசியுடன் வீட்டிற்கு பிரியாவிடை கொடுத்தான் வெற்றி.
காரில் அனைவரும் ஏறியவுடன், மெட்ராஸ சுத்தி பாக்க போறேன் என்று குஷியாக பாடிய நிலாவை தலையில் குட்டினான் வெற்றி.
"அப்பா இங்க பாருங்க இவன" என்று செல்லச் சிணுங்களுடன் சொல்லிய நிலாவைப் பார்த்து,
அண்ணா பாவம் இல்லையாடா, நம்ம எல்லாரையும் பிரிஞ்சு போற வருத்தத்தில இருக்கவன நீ வம்பிழுக்கலாமா? என்றார் திருமூர்த்தி.
அப்பாவின் பதிலைக் கேட்டு வெற்றிக்கு மட்டுமல்ல ஏன் நிலாவிற்கே ஆச்சர்யத்தில் பதில் வரவில்லை.
ஹரிஷின் போன் வரும் சத்தம் கூட வெற்றிக்கு கேட்கவில்லை. வெற்றி உன் போன் ரிங் ஆகுது யாருனு பாரு, என்றாள் தமிழ்.
"மச்சி சாரி டா முக்கியமான வேலையா நான் திடீர்னு கத்தார் போக வேண்டியிருக்கு ஒன் வீக் ஆகும் நா வர, சோ என்னோட அட்ரஸ உனக்கு வாட்ஸ்அப் ல அனுப்புறேன். நீ ஏர்போர்ட் விட்டு வெளில வந்ததும் டாக்சி பிடிச்சு வீட்டுக்கு போய்டு. என்னோட பிரண்ட் கார்த்திக் நம்பர் அனுப்பறேன் உனக்கு வேண்டியத அவன் செஞ்சு தருவான்" என்று ஹரிஷ் சொன்னதைக் கேட்டதும் வெற்றிக்கு படபடத்துப்போனது.
ஆம், மதுரையையும்,தேனியையும் தவிர(ஒரே ஒரு முறை கல்லூரி சுற்றுலாவிற்கு கேரளா சென்றது) தன் 26 வயது வரை எங்குமே செல்லாதவன்,இன்று ஐயாயிரம் மைல்களைக் கடந்து புதிய மனிதர்கள்,புதிய இடம்,உணவு,மொழி என அனைத்தையும் நினைத்துத்தான் அந்த படபடப்பு. டேய் மச்சான் இப்படி கால வாரிட்டியே டா என்றான்.
டேய் மச்சி நீ பயப்படவே வேணாம் டாக்ஸி ட்ரைவர்ட அட்ரஸ மட்டும் காட்டு கரெக்டா கொண்டு போய் விட்ருவாங்க. மனி மட்டும் எக்ஸ்சேஞ்ச் பண்ணி வச்சுக்க. வீட்டோட கீ ய செக்யூரிட்டிட கொடுத்துட்டு போறேன்.கொல்கத்தா பையன் தான், நீ உன் பேர சொன்னா மட்டும் போதும். ஒன்ஸ் அகெய்ன் சாரி மச்சி. மது வீட்டுக்கு தானே இப்போ போறிங்க? (மது ஹரிஷின் மனைவி)
ஹே பரவால மச்சான் நா பாத்துக்கறேன். மது வீட்டுக்கு தான் மச்சான். ஏன்டா என் தங்கச்சிய ஊருக்கு அனுப்பிட்டு நீ நாடு நாடா சுத்றியா?இரு உன்ன வந்து வச்சுக்கிறேன்,என்று சொல்லி போனைக் கட் செய்தான்.

நாளைக்கு காலைல எங்கேஞ்மென்ட் வச்சுட்டு,இப்படி ஊர் சுத்துனா என்ன பண்றது என்று சற்று கோபமாக கத்திய மஞ்சரியை,
"மாம் இப்போ என்ன? நாளைக்கே நான் ரிடர்ன் போகனும் சோ ஷாப்பிங் தானே போனேன் அதுக்கு ஏன் இப்படி டென்ஷன் ஆகுறிங்க"
அச்சு நீ தான் எப்பவுமே நாங்க சொல்றத கேட்க மாட்டியே, நான் ஆதிகிட்டயும்,என் மருமககிட்டயும் பேசறேன்.
சாரி ஆன்டி, ஷாப்பிங் முடிச்சிட்டு டின்னர் சாப்பிட லேட் ஆயிடுச்சு என்றாள் அதிதி.
பரவால மா நீ போய் சீக்கிரம் தூங்கு மார்னிங் வீட்ல பூஜை முடிச்சிட்டு தான் நாம ஹோட்டல் போகனும் என்று சொன்ன மஞ்சரியைப் பார்த்து சரி என தலை அசைத்தாள் அதிதி.
அதிதி மாடிக்குச் செல்ல, ஆதி அவளையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆதி, உனக்கும் தான் சொல்றேன் போய் படு என்றாள் மஞ்சரி.
அம்மாவின் சொல்லை தட்டாத பிள்ளை ஆதி, ஆனால் காதல் யாரை விட்டது.
தூக்கமே வராமல் புரண்டு படுத்த ஆதி, அதிதிக்கு கால் செய்தான்."பேபி தூங்கிட்டியா? எனக்கு தூக்கமே வர மாட்டுது டி.இப்பவே உன்ன பாக்கனும் உன் ரூம்க்கு வரவா?
ஹே நோ ஆதி, நா அச்சு கூட இருக்கேன் டா. வேணும்னா மெசேஜ் மட்டும் பண்ணு.
சாட்டிங்கா "ஏய் பேபி ஐ வான்ட் டு சி யூ நௌ. மாடிக்கு வா ஒரு பைவ் மினிட்ஸ் ப்ளீஸ் பேபி" ஆதி கெஞ்சலாகக் கேட்க, அவன் சிணுங்கலில் மறுப்பேதும் சொல்ல முடியாமல் மாடிக்கு விரைந்தாள் அதிதி.
அவளின் வரவை எதிர்நோக்கி இருந்தவன் கதவின் பின் நின்று அவளைக் கட்டி அணைக்கக் காத்திருந்தான்.
அதிதி அச்சுவுடன் அங்கு வர, ஆதியின் ஏமாற்றம் அவன் கண்களிலேயே தெரிந்தது. அதிதி அவனைக் கண்டு, குறும்பாகச் சிரித்தாள்.
ஏய் கரடி நீ ஏன் இங்க வந்த என்ற ஆதியிடம், அண்ணா நான் என் ப்ரண்ட்கு கால் பண்ண போறேன் உங்க ரொமேன்ஸ்கு நான் குறுக்க வரல என்ன விடு.அண்ணி தான் என்ன கூப்பிட்டாங்க,என்று உதட்டை சுளித்தாள் அச்சு.
அச்சு அவர்களை கடந்து மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு தன் தோழி மதுவிற்கு போன் செய்தாள்.
ஹாய் அச்சு ஹௌ ஆர்யூ?
அயம் குட் டியர். ஹௌ இஸ் யுவர் ஹெல்த்? செக் அப் கரெக்டா போறியா? ஜீனியர் ஹரிஷ் என்ன பண்றான் வயித்துகுள்ள?

பைன் அச்சு. டாக்டர் ஃபுல் பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லிருகாங்க சோ அப்பா ஆதி அண்ணா எங்கேஞ்மென்டுக்கு வருவாங்க அச்சு.
இட்ஸ் ஓகே மது டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்.
(வெற்றியின் கால் வர) "அச்சு ஐ வில் கால் யூ லேடர் மை பிரதர் இஸ் காலிங்"
ஹ்ம்ம் பாய் மது, என்று போனை கட் செய்து வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள் அச்சு.
வெற்றி மதுவிடம் வீட்டிற்கு வழி கேட்க,அண்ணா நா லொகேஷன் ஷேர் பண்றேன் சோ நீங்க வர ஈசியா இருக்கும்.
ஓகே மது மார்னிங் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாணு தான் என்றான் வெற்றி.
அங்கே ஆதி ஹே பேபி என்ன பயமா சப்போர்ட்டுக்கு ஆள் கூட்டிட்டு வரியா ?
இல்ல ஆதி என்று வார்த்தையை இழுத்தவளை இடையோடு வளைத்து, அவள் தோளில் முகம் புதைத்து,காதோரத்தில் பேபி ஷெல் ஐ கிஸ் யூ என்றான் ஆதி.
அவனின் இறுக்கமும் குரலும் அதிதியை ஏதோ செய்ய அவளே ஆதியின் இதழோடு இதழ் பற்றி தன்னிலை மறந்து நின்றாள்.
"ஆதியின் போன் ஒலிக்க இருவரும் ஒருவரை ஒருவர் விலக்க, அதிதி குட் நைட் ஆதி என்று கூறி அவ்விடம் விட்டு மறைந்தாள்.
ஆதி "ஓ டாட் வாட் இஸ் திஸ்? ஒய் ஆர் யூ காலிங் நௌ?
ஆதி டாட் தப்பான டைம் ல கால் பண்ணிடேனா சாரி மை டியர், என்றார் ரகுராம்.
மார்னிங் ஷார்பா 10 ஓ க்ளாக் ஹோட்டல் போயிடனும் ஆதி.அரேன்ஞ்மென்ட்ஸ்லாம் ஃபைனல் பண்ணிடேன்.
ஹ்ம்ம் ஓகே டாட் யூ ஸ்பாயில் மை மூட் பாய் என்று போனை கட் செய்தான் ஆதி.
குட் நைட் அட்வான்ஸ் விஷஸ் ஃபார் யுவர் எங்கேஜ்மென்ட் அண்ணா,என்ற அச்சுவின் வாழ்த்திற்கு இதழோரப்புன்னகை செய்து குட்நைட் அச்சு மா என்று அச்சுவின் தலை கோதி அவன் அறைக்கு நகர்ந்தான்.
 
Last edited:
Top