ஹாய்.. அம்மு... இப்ப தான் எல்லா. பதிவையும் படிச்சேன்... ரொம்ப நல்லா இருக்குடா... கதை.. சூப்பர்..... !!????????
இந்த சர்வேஷுக்கு அப்படி என்ன தான்..... பவழா மேல இவ்வளவு கோபம்...... அவளை பிடிக்காதவன்..... எதற்காக.... கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டான்....பவழாவுக்காவது கல்யாணம் வரை இவனை பார்க்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா....!! ஆனா... இவனுக்கு... முதல்லயே இவதான் பொண்ணுன்னு தெரியும் தானே..... ஆனால். இவங்க ரெண்டு பேருக்கும்.... முதல்லயே... தெரியும்... போல.... ஏதோ பிரச்சினை இவங்களுகிடையில் இருக்குது.....!! கல்யாணத்திற்கு பிறகு... அவன் போடும் கண்டிசன்ஸ்.... கேட்டு தல சுற்றிப்போச்சு.... ஆனால் அது அத்தனையும் கேட்டு... பவழா.... அமைதி காப்பது ஏன்....?!! ஆனாலும்... பொண்டாட்டி கிட்ட மிலிட்டரி.... ரூல்ஸ் விட... கடுமையான... இவன் போட்டது.... இதுக்கு இவன் கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாமே....!! மனைவியிடம் சொல்லாமல்... ஊருக்கு செல்வதும்.... அங்கு சென்றும்.... அவனது அன்னையிடம் மட்டும் பேசுவதும்.... தூங்குபவளது முகத்தில்... தண்ணீர்... ஊற்றுவதும்....
கடுமையான வார்த்தைகளை அவளை... பேசுவதும்.... ஒருபுறம் என்றால்... இந்த ஷாலினி தொல்லை வேற.... ஸ்கூல் படிக்கிற... பொண்ணுக்கு.... காதலாம்... அதுவும்.... கல்யாணம்... ஆனபின்பும்....அவனைத்தான்... கல்யாணம் பண்ணிப்பாளாம்... சரியான இம்சை....! ராமின் வரவும்.... நண்பர்கள்... உரையாடல்.. செம கலகலப்பு.... அதே போன்று... தென்றல்.... தன் தோழியின் கல்யாணத்தில்...செய்யும் அளப்பறைகள்... செம கலகலப்பு...!!
அவள் ராமை சைட் அடிப்பதும்.... அவன் அவளை கண்டுகொள்ளாமல்.. செல்வதும்... அவனது மருத்துவ மனைக்கே சென்று அவனை பதறவிடுவதும்... செம...ஆனாலும்.. தென்றல் செம வாலே தான்.... ராம் உன்னால இவளை சமாளிக்க முடியுமா.... இவ பயங்கர டெரர்... நீயோ... அமைதியான சமத்து பையன்.... உனக்கு இவ செட்டாவாளா.... பார்த்து செய்....அம்மு கதை செம... சுவாரசியமா... இருக்கு... உன்னோட எழுத்து நடை.. அபாரம்... சான்ஸேயில்லை... கலக்குற... சூப்பர்மா... அடுத்த எபியோட.. சீக்கிரம் வந்துடு பேபி....!!??