All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

அனைவருக்கும் இனிய தைத் திருநாள் / நம் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்..:love::love:

எல்லாரும் தித்திப்பா பொங்கல் சாப்பிட்டு ஜம்முன்னு நல்ல மூட்ல இருப்பீங்க..

இதோ பொங்கல் அன்னிக்கு உங்களுக்காக ஸ்பெஷல் விருந்து கொடுக்கறேன்..

படிச்சுட்டு ஜொள்ளுங்கோ மக்களே..

விருந்து என்னன்னு எபி படிங்க தெரியும்..;););););):love::love::love::love::love:

அடுத்த ud பொங்கல் முடிஞ்சு சனிக்கிழமை கொடுக்க try பண்றேன் மக்களே..

click the following link to read the epi,

விருந்து சாப்பிட்டுட்டு சும்மா போக கூடாது.. மொய் வைக்கணும் அதாங்க கமெண்ட்ஸ்..

;););););):p:p:p

மொய் வைக்கும் இடம்,

காதலால் தவி(ர்)க்கிறேன்..! கமெண்ட்ஸ் thread


Link open ஆகலன்னு ஒரு சிலர் சொல்றீங்க.. அவங்க லிங்க் ஐ copy பண்ணி browser ல paste பண்ணுங்க.. (chrome, uc browser, firefox, etc..)
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

காணும் பொங்கலை முன்னிட்டு,

❤❤எந்தன் உயிரே..!
எந்தன் உயிரே..! ❤❤


novel ல இருந்து அடுத்த டீசெர் 4...
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய... டீசெரா போட்டு இருக்கேன்..


படிச்சுட்டு ரெண்டு வரி சொல்லுங்க பார்போம்..

#TEASER4

“போட்டி பொறமை நிறைஞ்ச உலகத்துல மத்தவங்களுக்கு கெடைக்க கூடிய வாய்ப்பை கூட சிலர் தட்டிப் பறிச்சுடுறாங்க...

இன்னிக்கு பொண்ணுங்க இல்லாத பீல்டே இல்ல.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இனி உன் இஷ்டம்ம்மா...”
என்றார் யாரும் அறியா பெருமூச்சுடன்...


அவர் மனமோ ‘இப்பவே கண்ணை கட்டுதே...’ என்ற ரீதியில் இருந்தது..

“ஓகே சார்,.. நான் வீட்டுல பேசிட்டு உங்களுக்கு சொல்றேன் சார்..”

‘ஆஹா.. இவ்ளோ நேரம் தொண்டை தண்ணி போக பேசினது எல்லாம் வீணோ..? இந்த விஷயத்தை சொன்னா அங்க ஒருத்தன் வேற நம்ம காதை பஞ்சர் ஆக்கிடுவானே..’

“கண்டிப்பாம்மா பேசிட்டு சொல்லு.. ஐம் வெயிட்ங் ஃபார் யுவர் பாசிடிவ் ஆன்சர்..”

“சூர் சார்... ஐ வில் ட்ரை மை லெவல் பெஸ்ட்...” என்றவள் சக ஊழியர்களின் புறம் நகர்ந்தாள்..

மந்திரா அந்த புறம் நகர்ந்ததுமே இவருக்கு கைபேசி அழைப்பு வர, “அதானே மூக்கு வேர்த்த மாதிரி கால் பண்ணிடுவானே..” என்றவர் சிறு புன்னகையுடனே அழைப்பை காதுக்கு கொடுத்தார்..

“உனக்கு நூறு ஆயிசு மருமகனே...”

“ஆஹான்.. தேங்க் யூ மாமா... இதெல்லாம் இருக்கட்டும் அவ என்ன சொன்னா...?”

“ஆரிய கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கடா படவா.. ஒரு லெக்சரே எடுத்துட்டேன்... பட் என்ன முடிவு பண்ணுவான்னு தான் தெரியல.. படபடன்னு பேசினாலும் பரவால.. அளவா தான் பேசுறா.. சோ கெஸ் பண்ண கொஞ்சம் சிரமமா இருக்கு...”

“ஹா ஹா ஹா அப்படி மட்டும் நெனச்சுறாதீங்க மாமா... அவ கேடி.. நான் இப்படியெல்லாம் கஷ்டப்பட நீங்க தான் மாமா காரணம்...”

“என்னது நானா...?”

“பின்னே நீங்க ஒரு பொண்ணை பெத்துருந்தா அப்படியே அவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி லைப்ல செட்டில் ஆகி இந்நேரம் புள்ளை குட்டியே பெத்து இருப்பேன்.. இப்போ பாருங்க உங்களால நான் இவ பின்னாடி சுத்திட்டு என் இளமையாவே வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.. ச்சு... சச்சு... ச்சு...” என அவனுக்கு அவனே உச்சு கொட்டினான்..

“மருமகனே அப்படியே லைன்ல இரு... என் தங்கச்சிக்கு கான்ப்ரன்ஸ் போடுறேன்..”

“மாமா... ஏன் இந்த கொலைவெறி...?”

“அதென்னடா என் கிட்ட இவ்ளோ வாயடிக்குற.. உன் அம்மா கிட்ட மட்டும் பம்முற...”

“காதுல ரத்தம் வந்தா கூட உங்க தங்கச்சி விட மாட்டாங்க.. உங்களை விட மோசமா லெக்சர் கொடுத்து விலாசி தள்ளிருவாங்க... எப்படித் தான் ஒண்ணா வளர்ந்தீங்களோ...?”

“மருமகனே நான் உன் அம்மாக்கு முதல்ல அண்ணன்... அப்புறம் தான் உனக்கு மாமா...”

“தங்கச்சி மேல உயிரை வச்சுருக்க உங்களுக்கு அந்த தங்கச்சி பையன் மேல பாசம் இல்லாமலா போய்டும்..”

“எப்படி பால் போட்டாலும் அடிக்குறானே...”

“மாமா நீங்க மைண்டு வாய்ஸ்ன்னு நெனச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க...”

“ஹையையோ... இதுக்குத் தான் சின்ன பசங்க கூட சகவாசம் வச்சுக்க கூடாதுன்னு சொல்றது...”

“இதெல்லாம் ஒரு மேட்டரா... மாமா... பேச்சு எங்கெங்கயோ போயிட்டு இருக்கு நான் போன் போட்டது எதுக்குன்னு உங்களுக்கு தெரியும்...”

“படவா நீ தான் முதல்ல ஆரமிச்ச...”

“சரிவிடுங்க... மாமா.. அவ என்ன பதில் சொன்னா...”

“வீட்டுல கலந்துகிட்டு சொல்றேன்னு சொன்னா...”

“அவ இதைத் தான் சொல்லுவான்னு எனக்குத் தெரியும்... ஒகே மாமா... நான் அப்புறம் கூப்பிடுறேன்...” என்றவன் அழைப்பை வைத்து விட்டான்...

“என்னை விட்டு விலகிப் போன இல்ல.. இப்போ உன்னையே என்னை தேடி வர வழைக்குறேன்டி..” என்றவன் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருந்தான்...

********* *************
காலைக் கடன்களை முடித்து விட்டு சமையலறைக்கு வந்த மகளோ, “ஐயோ அம்மா பாம்பு... பாம்பு...” என அலற, சிவகாமிக்கு பகீரென்றிருந்தது...


“பாம்பா...? எங்க எங்க..?” என்று பதறி அலறியவர் கீழே இருந்த சிறு பாம்பை கண்டவர், அங்கிருந்த துடப்பத்தை எடுத்து அடி அடியென அடித்துக் கொண்டிருக்க, அந்த பாம்புக்கோ எந்த சேதாரமும் ஆகவில்லை..

அடித்த அடிக்கு பாம்பு இறந்து விட்டிருக்கும் என்றெண்ணிய சிவகாமி பாம்பை உற்று நோக்க, அது துளியும் அசையாமல் அப்படியே இருந்தது..

திடீரெனக கெக்கே பிக்கேவென்ற நகையொலி காதைக் கிழிக்க, சிவகாமி மகளை முடிந்த
மட்டும் முறைத்துக் கொண்டிருந்தார்...


“ம்மா... ஒரு ரப்பர் பாம்பை போட்டு இந்த அடி அடிக்குறீங்க...? பாவம்.. அது.. நேத்து தான் வாங்கினேன்... அதுக்குள்ள இதை இந்த பாடு படுத்துறீங்களே...”

“கழுதை.. காலங்கார்த்தால என்ன விளையாட்டு.. ஒரு நிமிஷம் என் உயிரே போய்டுச்சு...” என்றவர் அதே துடைப்பத்துடன் அவளை துரத்தினார்...

கொல்லைப்புறத்துக்கும் வாசலுக்கும் அவள் சுற்றி சுற்றி ஓட, “வர வர உன் சேட்டைக்கு அளவே இல்லாம்ம போச்சு நட்ஷூ... இன்னிக்கு நீ தொடப்பத்துல அடி வாங்குறது உறுதி...” என்றவாறு சிவகாமியும் விடாமல் துரத்தினார்..

“கேட்ச் மீ இஃப் யூ கேன்...” என்றவள் கொல்லைப்புறத்தில் இருந்து வீட்டுக்குள் புகுந்து வாசல் கதவை நோக்கி ஓட, அப்போது எதிரே வந்த மேகநாதனை இடிக்கப் போக சட்டென பிரேக் போட்டு நின்றாள்...

நல்லவேளை மேகநாதன் பெரிய இடியிலிருந்து தப்பித்தார்... அவருக்குமே எங்கே மகள் தன்னை இடித்து தள்ளி விடுவாளோ என ஒரு நொடி பயந்தே விட்டார்..

பின்னால் சிவகாமி ஓடி வரும் சத்தம் கேட்க அருந்த வாலு குறும்புக்காரி நக்ஷத்ரா சற்று விலகி நிற்க, இப்போது சிவகாமி வந்த வேகத்தில் தன் கணவர் மீது மோதி நின்றார்..

கையில் இருந்த துடைப்பத்தை பட்டென கீழே போட்ட சிவகாமி விலகி நின்று மூச்சு வாங்க, மேகநாதன் உக்கிரமாய் மனைவியை முறைத்துக் கொண்டிருந்தார்...

சிவகாமி கையை பிசைந்த படி நிற்க, நக்ஷத்ரா குறும்பு வழியும் புன்னகையை மறைத்த படி நின்றிருந்தாள்..

“இப்போ தான் உனக்கு இளமை ஊஞ்சல் ஆடுதோ...? காலங்காத்தால சின்ன புள்ளைக்கு இணையா ஓடி பிடிச்சு விளையாண்டுட்டு இருக்க..” என சத்தம் போட்டார்..

‘அப்போ ஈவினிங் விளையாண்டா தப்பில்லையாப்பா...’ என வாய் வரை வந்த கேள்வியை கடினப்பட்டு அடக்கினாள் நக்ஷத்ரா...

“வீட்டுல ஆளு இல்லன்னா.. கிளப்பை விட மோசமா சத்தம் கேக்குது... உன் பொண்ணு கூட சேர்ந்து வர வர நீயும் கெட்டு போயிட்டு இருக்க.. எதுவும் சரியில்ல பார்த்துக்கோ...” என்றவர் தன அறைக்குச் சென்று விட்டார்...

“எல்லாம் உன்னால தான்டி...” என சிவகாமி மகளை கடிய,

“ம்மா... உண்மையை சொல்லு.. அப்பாவை நீ இடிச்சதும் படத்துல ஹீரோ ஹீரோயின் மோதிக்குற சீன் உனக்கு ஞாபகம் வந்து இருக்குமே.. நம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும்ன்னு பாட்டு மண்டைக்குள்ள ஓடி இருக்குமே..!”

“சீ... போடி.. எப்பப் பாரு வயசுக்கு மீறின பேச்சை பேசிகிட்டு... கிட்சனுக்கு வா வாயில ரெண்டு போடுறேன்...” என வெட்கம் பாதியும், மிரட்டில் மீதியுமாய் கூறினார்..

************ ****************
“நட்ஷூ கேட்கணும்ன்னு நெனச்சேன்.. ஸ்டேஷன்ல ஒருத்தனை அடிச்சியே எதுக்குடி வம்பை விலை குடுத்து வாங்குற அதுவும் படிக்க வந்த இடத்துல.. இனி தேவை இல்லாம கை நீட்டாத...”


“அவன் அடிவாங்கினதுக்கு காரணமே நீ தான்..”
“என்னது... நானா? “


“பின்ன நீ பேசாம ஓவரா முறுக்கிகிட்ட... சோ சும்மா போறவனை கூப்பிட்டு அடிச்சது நானாக்கும்..”

“அடிப்பாவி... இன்னமும் உன் கொழுப்பு அடங்கலை... நம்ம போதைக்கு அவனை ஊறுகாய் ஆக்கிட்டியா..?”

“ஆமா.. நல்ல வேளை ஒரு அடியிலே நீ பேசிட்ட... இல்லன்னா சேதாரம் அந்த பையனுக்குத் தான் அதிகமா இருந்துருக்கும்...”

“இப்படியே பண்ணிக்கிட்டு இரு ஒரு நாள் நீ வசம்மா மாட்டப் போற பார்த்துக்கிட்டே இரு...”

“அதை அப்போ பார்த்துக்கலாம்... ப்ச்.. யாரு பெத்த புள்ளையோ... நீ எப்படி ரியாக்ட் பண்றன்னு பார்த்துட்டு இருந்ததுல அவன் முகத்தை கூட சரியா பார்க்கல..”

“உன் திமிரெல்லாம் அடக்க ஒருத்தன் வர போறான் அப்போ பார்த்துக்கறேன் உன்னை...”

“இங்க மட்டும் என்னவாம்...? ஏற்கனவே நீ...“ என கூற வந்த நட்ஷூ நல்ல சூழ்நிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் வார்த்தைகளை தொண்டைக்குள்ளே
விழுங்கினாள்...


**** **********
“ஹையையோ.. இவனா..? காலையில பார்த்த தாடிக்காரனா..? இவன் எப்படி இங்க..? எதேச்சையா வந்தானா..? இல்லை பாலோவ் பண்ணி வந்தானா..? இப்பவும் மொறச்சு கிட்டே இருக்கானே..?” என இதயம் டம்டம்மென அடித்துக் கொண்டிருந்தது..


மாலில் கூட்டம் நிறைந்து வழிய லிப்ட்டில் நிற்கவே இடமில்லை... அக்கா தங்கை இருவரும் நுழைந்த பின் மேலும் சில பலர் லிப்ட்டில் நுழைந்தனர்...

நட்ஷூ வேறு புறம் நகர நினைக்க, அங்கே நகர துளி கூட இடமில்லை.. அவள் யாரையும் மோதாமல் ஜாக்கிரதையாக நிற்க ஒரு கட்டத்தில் அவள் பின்னழகைத் தொடும் கற்றை கூந்தல் அவன் மீது நெருக்கமாய் தாரளமாய் ஒட்டி உறவாடியது...

லிப்ட் தரை தளம் இறங்குவதற்குள் லைட் மின்னி மின்னி எரிந்து லிப்ட் அப்படியே நின்று விட, உள்ளிருந்த அனைவருக்குமே பீதியானது.. எந்த எமர்ஜன்சி பட்டனும் வேலை செய்யவில்லை..
இந்த பீதியில் நட்ஷூவை மேலும் பீதியாக்கும் வண்ணம் ஒரு வலிய இடக் கரம் அவள் இடையை சுற்றி பிடித்தது... நட்ஷூ அக்கைகளை தட்டி விட முயற்சிக்க அது துளியும் நகரவில்லை...


அவன் அவள் கழுத்து வளைவில் தன் நாடியை வைத்து, “காலையில நான் எந்த தப்பும் பண்ணாமலே அத்தனை பேர் முன்னாடி என்னை அடிச்ச இல்ல... இப்போ தெரிஞ்சே தப்பு செய்யுறேன் முடிஞ்சா அடிச்சுக்கோ...” என அவன் அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்
சவால் விட,


‘ஹையையோ ஸ்டேஷன்ல இவனைத் தான் அடிச்சேனா... அதுக்குத் தான் காலையில முறைச்சானா...’ அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது..

பட பட பட்டாசாய் பொரிபவளுக்கு பேச்சு மறந்தது போல பேச்சே வரவில்லை... பேச முடியவில்லை... மூச்சடைத்தது... ஆனால் அவன் அவள் கூந்தலில் இருந்து வந்த மணத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து சுவாசித்தான்...

அவன் மனம் இனம் புரியா ஒரு சுகந்தத்தில் மிதக்க ஆரமிக்க அதை கெடுக்கும் விதமாய் அவனின் கைகளை யாரோ வருடி சில்மிஷம் செய்வது போல இருந்தது.. ஆனால் நிச்சயம் அது நட்ஷூ இல்லை என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.. அவள் தான் இரண்டு கைநிறைய பைகளை வைத்திருந்தாளே..

நொடிக்கும் குறைவான நேரத்தில் நட்ஷுவை அவன் இடத்தில் நிற்க வைத்தவன் அவள் இடத்திற்கு அவன் மாறி நின்றான்...

நட்ஷூ லிப்ட்டின் ஓரத்தில் இருக்க, யாரும் அவளை தொடமுடியாதது போல அவளை அணைத்து பாதுகாப்பது போல மற்றவருக்கு முதுகு காட்டி நின்றிருந்தான்...

அவனின் கைகளை வருடிய அந்த கைகள் இப்போது அவனின் பின் புற இடுப்பை ஒரு மாதிரி கிள்ள கோபத்தில் அவன் பல்லைக் கடித்தான்..

அவனின் பல் அரைபடும் சத்தத்தில் நட்ஷூவுக்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது...
அவன் மனசாட்சி எட்டிப்பார்த்து, ‘இப்போ எதுக்கு நீ பல்லை கடிக்குற..?’


‘ஏன் உனக்குத் தெரியாதா..?’

‘நீயும் தான் அந்த பொண்ணு இடுப்பை பிடிச்ச.. அந்த சில்மிஷக்காரணும் உன் இடுப்பை தடவுனான்... அப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்..?’

‘ஜஸ்ட் ஷட்அப்... நான் தப்பான எண்ணத்துல அவளை தொடல.. மோர்ஓவர் அந்த கேடுகெட்டவன் மாதிரி கேவலமா நான் எங்கயும் தடவுல... ‘

‘அவன் என் கையை தடவும் போதே, நான் இவ எப்படியோ போகட்டும்ன்னு விட்டிருந்தா தான் தப்பு... நவ் ஐசேவ்டு ஹெர்.. புரியுதா..’ என அவன் தன்னிலை விளக்கம் கொடுத்தான்..

சில நொடிகளில் அந்த சில்மிஷக் கைகள் இப்போது அத்து மீறி அவனின் இடுப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறியது...

“ப்ளடி பாஸ்ட**...” என யாருக்கும் கேட்கா வண்ணம் அவன் முணுமுணுத்து தன் கைகளை மடக்கி லிப்ட்டின் மீது யாரும் அறியாமல் குத்த, அவன் திட்டியது அட்சர சுத்தமாய் அவள் காதில் கேட்க, அவளையும் மீறி அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்...

அவன் ஒரு மாதிரி நெளிந்து கொண்டு முகத்தை கடு கடுவென வைத்திருந்தது அரைகுறை கைபேசி வெளிச்சத்தில் தெரிய, அவனுக்கு பின்னே சற்று குனித்து பார்த்தாள்...

இப்போதாவது அந்த சில்மிஷக் கைகள் கம்மென இருக்காமல் மேலும் மேலே ஏற முற்ப்பட, இதற்கு மேல் பொறுக்க முடியாத அவன் நட்ஷூவின் கைகளில் இருந்த பையை தட்டி விட்டு விட்டு

அவள் கைகளை எடுத்து அருகில் இருந்த அந்த குண்டு லேடியின் இடுப்பில் குத்துமதிப்பாய் கிள்ள வைத்தான்... இடுப்பு எங்கே என்ற கண்டு பிடிக்க சற்று சிரமமாக இருந்தது என்பது வேறு கதை...

உடனே அந்த குண்டு லேடி, “எந்த எடுபட்ட நாய்டா அது என் அழகான இடுப்பை கிள்ளியது...” என்று கூச்சலிட்டு அவருக்கு அருகில் இருந்த, அதாவது கைகளை உபயோகித்து சில்மிஷம் செய்தவனின் பின் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது..

இவ்வளவு நேரம் பயத்தில் இருந்த நட்ஷூவுக்கு சட்டென சிரிப்பு வந்து விட்டது.. பின்னே அடுப்பை இடுப்பென்றதும் சிரிப்பு வரத் தானே செய்யும்..

பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாத நட்ஷூ, ப்ரீயாக இருந்த கையால் தன் வாயை பொத்திக் கொண்டு சிரித்தாள்..

அதற்குள் லிப்டில் லைட் ஏரிய, அந்த தாடிக்காரன் அவளுக்கு முதுகு காட்டிய படி நின்று கொண்டான்...

அந்த குண்டு லேடி சில்மிஷம் செய்தவனை பிடித்து குமுறு குமுறென குமுற, அங்கிருந்த மற்றவர்களும் அவனை துணி துவைத்தனர்...

“ஹவ் சீப் யூ ஆர்... எதுக்கு என் கையை வச்சு அந்த லேடி இடுப்பை கிள்ள வச்சீங்க..?” என்றாள் சுழித்த முகத்துடன்...

“நான் உத்தமனா இல்லாம இருந்துருந்தா நானே அந்த லேடி இடுப்பை கிள்ளி இருக்கணும் எதுக்கு உன் கையை யூஸ் பண்ணனும்..”

‘அதானே..’ “எப்படி இருந்தாலும் நீங்க பண்ணினது தப்பு..?”

“தப்பு தான் என் இடுப்பை பிடிச்சு நோண்டினவன் கிட்ட உன்னை தள்ளி விட்டு இருக்கணும் உன்னை காப்பாத்தினேன் இல்ல அது என் தப்புத் தான்..“ என்றதும்
அவன் அந்த சில்மிஷக்காரனை திட்டியதும் ஒரு மாதிரி நெளிந்து கொண்டு இருந்ததையும் எண்ணிப் பார்த்தவள் வாய் விட்டு சிரிக்க ஆரமித்தாள்...


“இப்போ சிரிக்க என்ன இருக்கு...?” என்றான் எரிச்சலுடன்..

“ஒண்ணுமில்லை.. அவன் இடுப்பை பிடிச்சு கிள்ளுனதுக்கா அவளோ மோசமா திட்டுனீங்கன்னு நெனச்சேன் சிரிச்சேன்...” என்றவளின் சிரிப்பே சொன்னது அவள் எதையோ யூகித்து விட்டாள் என்று..

“நீங்க தான் முதல்ல என் இடுப்பை சுத்தி கைப்போட்டீங்க... அதுக்குத் தான் உங்களுக்கு இந்த தண்டனை போல... கடவுள் இருக்கான் குமாரு...” என்றாள் மீண்டும் சிரித்தபடி..

“அப்படி உன் கடவுள் இருக்கான்னா தப்பே பண்ணாத என்னையும் தான் நீ அடிச்ச... அப்போ மேடம்க்கு என்ன தண்டனை..” என்றதும் அவள் சிரிப்பு சட்டென நின்று விட்டது...

“ம்ம் பதில் சொல்லுங்க மேடம்..”

“அது வந்து ரியல்லி சாரி... அப்புறம் ரெண்டு தேங்க்ஸ்...”

“நீ சாரி சொன்னா மட்டும் நான் பட்ட அவமானம் மறைஞ்சுருமா..? அதென்ன ரெண்டு தேங்க்ஸ்...?”

“என் மண்டை உடையாம காப்பாத்தினதுக்கு அப்புறம் இங்க லிப்ட்ல ஹெல்ப் பண்ணினதுக்கும்...”

“வாட்எவர் நீ என்னை அடிச்சதுக்கு என்னிக்கா இருந்தாலும் பதில் சொல்லித் தான் ஆகணும்.. காட் இட்...” என்றவன் லிப்ட்தை திறக்கும் பட்டனை அழுத்த அது திறக்கவில்லை...

*********** ***********
“ஹலோ செடிக்கு பின்னாடி நிக்குற தாடிகாரறே... கொஞ்சம் முன்னாடி வர்றது...” என்றதும் அவனும் அவள் முன்பு வந்து நின்றான்..


“இன்னாப்பா உங்களுக்கு வேணும்.. நான் தான் சாரி சொல்லிட்டேன் இல்ல...”

“அதெல்லாம் செல்லாதுன்னு நானும் சொல்லிட்டேன் இல்ல...”

“நான் உங்களை எங்க எத்தனை பேரு முன்னாடி அடிச்சானோ நீங்களும் அங்கே அத்தனை பேரு முன்னாடி என்னை அறைஞ்சு அதே மாதிரி திட்டிருங்க கணக்கு சரியா போச்சு.. போதுமா கிளம்புங்க.. இனிமே வீட்டுப் பக்கம் வர்ற வேலை வச்சுக்காதீங்க..” என மிரட்டினாள்..

“நக்ஷத்ரா...” என்றழைத்தவன் “பேரு ரொம்ப அழகா இருக்கு... உன்னை மாதிரியே பேரும் மின்னுது...”

'ம்ம்.. எல்லாரும் என் பேரை கேட்டுட்டு தான் பேரு மாதிரி உன் முகம் மின்னுதுன்னு சொல்லுவாங்க.. இவன் ஆபோசிட்டா சொல்றான்..’

“ஹலோ எ.. என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்...?”

“அதுவும் கூடிய சீக்கிரம் உனக்கு தெரியும்.. வரட்டுமா...”
************************ **********
drop யுவர் கமெண்ட்ஸ் ப்ளீச் மக்களே... I'm waiting..😍😍


IMG-20181212-WA0049.jpgbook fair img 2.jpg
 
Status
Not open for further replies.
Top