All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "அ(சகாய)சுரன் "-கதை திரி

Status
Not open for further replies.

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அ(சகாய)சுரன்

வணக்கம் நண்பர்களே

ப்ரீத்தி ப்ரேம் இருவரின் தவபுதல்வர்கள் சத்திரியன் சாணக்கியன் பற்றிய கதை இது பெற்றவர்களிருந்து மற்றவர்கள் வரைக்கும் தொழில் சாமுராஜ்யங்களை கட்டி ஆளும் அசகாயசுரர்கள் ஆனால் தன்னவர்களுக்கு மட்டும் அசுரர்கள் என்றால் மிகையில்லை..

என் ஆதி அந்தம் நீயடி முடிந்தவுடன் இதை எழுதுவேன் கூடிய விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன் நண்பர்களே...வாரம் ஒரு ud அல்லது 15 நாட்கள் ஒரு ud தருகிறேன் friends.......
 

Sarala k

Bronze Winner
அ(சகாய)சுரன்

வணக்கம் நண்பர்களே

ப்ரீத்தி ப்ரேம் இருவரின் தவபுதல்வர்கள் சத்திரியன் சாணக்கியன் பற்றிய கதை இது பெற்றவர்களிருந்து மற்றவர்கள் வரைக்கும் தொழில் சாமுராஜ்யங்களை கட்டி ஆளும் அசகாயசுரர்கள் ஆனால் தன்னவர்களுக்கு மட்டும் அசுரர்கள் என்றால் மிகையில்லை..

என் ஆதி அந்தம் நீயடி முடிந்தவுடன் இதை எழுதுவேன் கூடிய விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன் நண்பர்களே...வாரம் ஒரு ud அல்லது 15 நாட்கள் ஒரு ud தருகிறேன் friends.......
Super mam... Eagerly Waiting...
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9984

சத்ரியன்

______________________________

9985

ஹாஷினி

______________________

9986

சாணக்கியன்

_________________________

9987

சனா

_______________________

இந்த கதையின் நாயகன் நாயகிகள்....

9988
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரங்களால் சபிக்கப்பட்டவளின் தொடர்ச்சி அதில் அன்புக்கு ஏங்கும் பாலைவனமாய் இருப்பவளின் மேல் அன்பை பொழிந்து சோலைவனமாகுவான் அவளவன். தான் இழந்த சிறு வயது அன்பை கடலாய் தங்களின் புதல்வர்களுக்கு வாரி வழங்குவாள். பாலைவனத்தில் பெய்த மழைத்துளி அதனை சோலைவனமாக்கும் ஆனால் கடலில் விழும் மழைத்துளி உப்புநீரோடு காணாமல் போகும். அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாகையில் அன்பு மட்டும் எம்மாத்திரம். தாயின் அன்பை உணரும் தவபுதல்வர்கள் தன்னவர்கள் அன்பை உணராது போனது விதியோ இல்லை அதை உதாசீனபடுத்துவது விதி செய்த சதியோ இதுவே இக்கதையின் சாராம்சம்.

_________________________


அழகிய ஒளியின் வெளிச்சம் அதிகம் எனில் நிலவின் வெளிச்சம் ரசிப்பதற்கில்லை

கடலின் நீலம் அதிகம் எனில் வானின் எல்லை அணைப்பு அறிவதில்லை

மண்ணின் வளம் அதிகம் எனில் வான்மழையின் முத்தங்கள் மண் ஏற்பதில்லை

அது போல் உயிர் தந்தவர்கள் அன்பு அக்சைய பாத்திரம் எனில்

உயிரென வருபவர்களின் அன்பு அவசிமற்வையாய் காணுகிறது

அதித அன்பில் மூழ்கிய உள்ளங்கள்

***†**********÷*****************************

ஆழிபேரலையாய் அன்பு சூழ சிறு அலையின் அன்பை ஏற்குமா கடற்கரை

###################################

மீண்டும் மீண்டும் படையேடுக்க கடற்கரையை மட்டும் சேர முடியவில்லை அன்புக் கொண்ட அலைகளால்

ஏனென்றால் அது கடற்கரையின் அளாதிய அலட்சியம் என்பதால்

#########$$$%%%%%%^^^^^^^^^^^^^


இந்த கவிதை @saranya R பேபி எழுதி கொடுத்தது கேட்டவுடன் எழுதி கொடுத்துக்கு லவ் யூ பேபி....
 
Last edited by a moderator:

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ் இதுக்கு முன்னாடி போட்ட டீசர் ஓட சேர்த்து இன்னும் குட்டி டீ


அ(சகாய)சுரன் டீசர்

அங்கு கட்டிலில் அமர்ந்து இருந்த தாயை ஓடி சென்று கட்டி கொண்டான் சாணக்கியன். தன் மகனின் ஸ்பரிசத்தில் இத்தனை நாள் அவனை காணாத ஏக்கம் அவளுக்கு கோபமாக மாற " எங்க போன " என்றால் கண்ணீருடன். அதை பார்த்து " அச்சோ பேபிமா இப்போ எதுக்கு அழுகுற நீ அழுகிறத பார்த்த உன்னோட புருஷனும் உன்னோ மூத்த புள்ளையும் நான் தான் காரணம்னு என்ன கண்ணாலே பஸ்பம் ஆகிருவங்க அவுங்களோட பாச பார்வைய என்னால தாங்க முடியாது மிஸ்ஸஸ் ப்ரேம் என் மீது கருணை காட்டுங்கள் மாகராணி " என்றான் குறும்பாக மகனின் குறும்பு பேச்சை ரசித்தவள் " பிழைத்து போ " என்று ராணி தோரணையில் சொல்ல அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அதை பார்த்து அங்கே இருவர் காதில் புகை வந்தது அது வேறு யாரும் இல்லை சத்ரியனும் ப்ரேமும் தான். சத்து உடனே சென்று மறுபக்கம் அமர்ந்து தன் அன்னையை கட்டி கொண்டு மறு கன்னத்தில் முத்தம் பதித்தான். அதை பார்த்த ப்ரேம் " பேபிமா இவனுகளுக்கு முதல கல்யாணம் பண்ணிவைக்கனும் அப்போதான் என் பொண்டாட்டிய கொஞ்சுரத விட்டுட்டு அவனுங்க பொண்டாட்டிய கொஞ்சுவானுங்க " என்றான் பொறாமையுணர்வுடன்.

***************
அவள் கன்ன சிவப்பை ரசித்தவன் " உன்னால் என்ன பார்க்க முடியாதுடி நா உன் முன்னாடி வந்தா பேச கூட முடியாது அவ்வுளவு ஏன் நா உன்ன பார்த்த உன்னால அங்க தலை நிமிர கூட முடியாதுடி ஏன்னா நீ அந்த அளவுக்கு என்ன லவ் பன்ற " என்றான் சத்ரியன் திமிராக அந்த திமிர் அவள் காதலினால் வந்தது என்றால் மிகையில்லை. அவள் காதலை இந்தளவு புரிந்து வைத்தவன் தன் காதலை புரிந்து கொள்ளாமல் போனதுதான் அந்தோ பரிதாபம்! இதனால் பின்னாளில் அவன் இழக்க போகும் இழப்பின் வீரியம் அறியாமல்.


_______________\\*******_____\


ஹாஷி சத்துவை பார்த்து " ஐ லவ் யூ மேட்லி " என்று சொல்ல அவள் நெற்றியில் முதமிட்டவன் " ஐ லவ் யூர் லவ் போர் மீ அண்ட் ஐ வான்ட் யூ மேட்லி இன் லவ் வித் மீ " என்றான் சத்ரியன். அவன் தன் காதலை சொல்லாமல் அவள் காதலை குறிப்பிட்டது அவனின் பிழையா இல்லை காலத்தின் பிழையா இல்லை விதியின் பிழையா . இந்த வார்த்தைகள் கொண்டே அவன் காதலை அவள் வெட்டி வீழ்த்துவால் வருங்காகலத்தில்.

*****************
ஹாஷினியும் அவன் முத்தத்தில் மூழ்க சிறிது நேரம் கழித்து தனக்காக அனைவரும் காத்து கொண்டு இருப்பது நினைவு வர அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள அதில் கோபம் கொண்டவன் அவள் தள்ளிய கையை பின்னுக்கு முறுக்கி அவள் இதழை வன்மையாக சிறை செய்தான். அதில் அவள் இதழில் இருந்து ரத்தம் கசிய அதையும் சுவைத்தான் அந்த அசுரன். அவள் கண்களில் கண்ணீர் வர அதை பார்த்து திருப்தியுற்றவன் அவளை விடுத்தான். அவள் பின்னிருந்த கையை மேலும் முறுக்கி " how dare you to ஸ்டாப் மீ " என்றவன் அவள் ரத்தம் கசிந்து இருந்த இதழை வருடி கொண்டு " இன்னொரு தடவ என்னை விலக்கவோ இல்லை என் விருப்பத்தை மறுக்கவோ பார்க்காத அப்புறம் இப்படி தான் கஷ்ட படுவ " என்று உதிர்த்தவன் அவள் அணிந்து இருந்த தாவணியை உருவி கீழே தள்ளினான். அதில் தடுமாறி விழுந்தவள் தன் இருக்கும் நிலை கண்டு தன்னை கைக்கொண்டு மறைக்க நினைக்க அவளை உறுத்து விழித்தான் சத்ரியன். அவன் பார்வையில் முதுகு தண்டு சில்லிட அவள் கை தானாக கீழே இறங்கியது அதை பார்த்து ஏளனமாக சிரித்தவன் அவள் மேல் தாவணியை போர்த்தி விட்டு " தட்ஸ் குட் " என்றவன் " எந்த function அட்டென்ட் பண்ண என்ன விலக்குனியோ அது நீ அட்டென்ட் பண்ண கூடாது புரிஞ்சுதா "என்று சொல்ல பயத்தில் ஆம் என்று தலையாட்டினாள்.

*****************

அவளை மாடிக்கு அழைத்து சென்று மருந்து தடவி விட்டான். அவன் அன்பில் ஹாஷினி கண்கள் கலங்கியது அவள் கெத்தாக சத்துவை பார்க்க அவனோ அவளை நோக்கி ஏளன பார்வை வீசி கொண்டு இருந்தான்.

சாணு அவள் காயங்களில் மருந்து போட்டுவிட்டு அதை தடவியவாறு " வலிக்குதா " என்று கேக்க ஆம் என்பது போல் கண்ணீர் மல்க தலையை ஆட்டினாள் ஹாஷினி.

சாணு " இது எப்படி ஆச்சு " என்று கேக்க "இது " என்று திக்கி கொண்டே சத்துவை பார்க்க அவனோ இவளை ஏளனமாக பார்த்து கொண்டு இருந்தான்.

சாணுக்கு அவள் பார்வை சென்ற இடமே அவனுக்கு புரிந்து விட்டது. இதற்கு காரணம் அவன் தமையன் என்று.

சாணு "அவனுக்கு கோபம் வர மாறி நடந்துகாத ஹாஷி " என்று சொல்ல இப்போது சத்து அவளை பார்த்து ஏளனமாக சிரிக்க அவளோ மனதுக்குள் "அடப்பாவி அக்கரைல மருந்து போடுறேன் பார்த்தா , அவன சொல்லி குத்தம் இல்ல ராவணன் கிட்ட போய் கம்சன் ராட்சஷன் சொல்றேன் பாரு என்ன சொல்லணும் ரெண்டு பேரும் அசுரன் தான் " என சகோதரர்களை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள்.
__________________________

என்னடா இந்த புள்ள சத்து டீசர் மட்டும் கொடுக்குதுன்னு நினைக்காதீங்க சாணு டீசர் பார்த்த உங்களுக்கு தான் bp ஏறும் ஏன அவன் ரொம்ப பேட் பாய் இவன் மட்டும் நல்லவனானு கேக்குரிங்க அவன விட இவன் நல்லவன்,,...
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
 
Last edited by a moderator:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே நம்ப இஷானா அடுத்த கதை
அ(சகாய)சுரன்

நம்ப பிரேம் பிர்த்தி மகன்ஸ் சத்ரியன் $ சாணக்கியன்து

Direct ah amazon la வரங்க படிச்சிடு எப்படி இருக்குனு சொல்லுங்க செல்லம்ஸ்


லிங்க் கீழே......


டாடா byeeeeee🙋🙋🙋🙋🙋🙋
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த ஸ்டோரி site ல போட்ட எத்தன பேர் படிப்பிங்க பிரெண்ட்ஸ்

உங்க கமெண்ட்ஸ் பொறுத்தே என் முடிவு
 
Status
Not open for further replies.
Top