Hi bro,ஒரு சின்ன திருத்தம் சகோ..
"... " இந்த அடைப்புக்குள் வரும் உரையாடல்கள் உரைநடை தமிழில் இல்லாமல் பேச்சு வழக்கில் வர்ற மாதிரி எழுதினா படிக்கிறவங்களுக்கு கதையோடு பயணிக்கற உணர்வை கொடுக்கும்...
உதாரணம்..
"டேய்!!! மச்சா எப்படி இருக்கிறாய்??"(உரைநடை)
"டேய்!!! மச்சா எப்படிடா இருக்க" (பேச்சு வழக்கு)
சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள், வார்த்தை கோர்வைகள் படிக்கக் கூடிய வாசகர்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை உருவாக்கி உங்க வரிகளோட ஒன்ற வச்சு கதையோடு பயணிக்க உதவும்..
இது தவறல்ல, சிறு திருத்தம் மட்டுமே.. என்றும் அன்புடன் வடிவேல்
இது தான் என் எழுத்துநடை..
இதே நடையில் தான் மூன்று கதைகள் முடித்துள்ளேன்..இந்த எழுத்து நடை தான் பல வாசகர்களை எனக்கு தந்துள்ளது..என் வாசகர்கள் என் ஐபியில் எப்போதும் சொல்வது உங்கள் எழுத்துநடையை மாற்றிவிட வேண்டாம் என்பதே..
பேச்சு வழக்கில் எல்லாரும் எழுதுகிறார்கள்..நான் எனக்கு என்று ஒரு எழுத்து நடை இருக்க வேண்டும் என்றே இப்படி எழுதுகிறேன்.. மிக்க நன்றி
உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி..
தொடர்ந்து படித்து உங்கள் ஆதர்வை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
நன்றி சகோதரரே