All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அழகிய காதல் தீயே

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1 .♥ அழகிய காதல் தீயே♥





காலை எழுந்தவுடன் ஜாக்கிங் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் விக்கி என்ற விக்னேஸ்வரன். உள்ளே வந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவனது தங்கை மேகாவை வம்பிழுக்க ஆரம்பிக்க அவளும் பதிலுக்கு தன் அண்ணனுடன் வம்பிழுத்துக் கொண்டு இருந்தாள்.இவர்களது சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து கையில் காப்பியுடன் வெளியே வந்தார் இவர்களது தாய் மாலா.

தன் அன்னை வருவதைக் கண்ட விக்கி எதுவும் தெரியாத நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு தன் தாயை காண அவரோ வழக்கம் போல் தன் மகனை எதுவும் சொல்லாமல் அவனிடம் காப்பியை கொடுத்து விட்டு தன் மகளை நோக்கி அவளிடம், எதுக்குடி எப்ப பாரு அவன்கூட வம்பிழுத்துகிட்டு இருக்க? என்று கேட்க அவளோ அவரிடம் ,ஐயோ அம்மா நான் ஒன்னும் வம்பிழுக்கல உன்னோட அருமை மகன் தான் என்கிட்ட பஸ்ட் சண்டை போட்டான் எனக்கூறி சினுங்க அண்ணன், தங்கை இருவரையும் பார்த்து முறைத்த மாலா இருவரிடமும் முதல்ல போய் இரண்டு பேரும் குளிச்சிட்டு ரெடியாகி வாங்க என கூறி இருவரையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு சமையல் வேலையை கவனிக்க சென்றார்.

குமார் - மாலா தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு மகன், ஒரு மகள்.மகன் விக்கி என்ற விக்னேஸ்வரன் M.A, M.philமுடித்து விட்டு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியராக பணியாற்றுகிறான்.மகள் மேகா பள்ளி கல்வியை முடித்து விட்டு தன் அண்ணன் பணியாற்றும் கல்லூரியிலே இவளும் B.A English முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ளாள் நாளை முதல் இவளுக்கு கல்லூரி ஆரம்பமாகிறது.குமார் சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.மாலா குடும்பத் தலைவி.

மாலா காலை உணவை தயார் செய்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு மகனுக்கு தேவையான மதிய உணவை லன்ஸ்பாக்ஸில் எடுத்து வைத்து விட்டு வர அப்பாவும் மகளும் ஏதோ பேசிய படி டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தனர்.அவர்கள் இருவருக்கும் உணவை எடுத்து வைத்து கொண்டு இருக்கும் போதே விக்கியும் மேலே தனது அறையில் இருந்து இறங்கி கீழே வந்தான்.வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற பேன்ட் அணிந்து அதை இன் செய்த படி வந்த மகனை பார்த்த மாலா புன்னகையுடன் அவனுக்கும் காலை உணவை பரிமாறினார்.

சாப்பிட்டு முடித்ததும் விக்கி சிறிது நேரம் அம்மா, அப்பா, தங்கையுடன் பேசி விட்டு தன் கார் சாவியையும் , காலேஜ் கொண்டு செல்லும் பையையும் எடுத்துக் கொண்டு அம்மா ,அப்பாவிடம் சொல்லி விட்டு தன் தங்கை மேகாவிடம் நாளைக்கு இதே நேரம் நீயும் காலேஜ் கிளம்ப ரெடியா இரு குரங்கு என கூறி அவளிடம் இரண்டு அடியை வாங்கி விட்டு காலேஜ் கிளம்பி செல்ல குமாரும் ஆபிஸ் கிளம்பினார்.அவர்கள் இருவரும் சென்ற பின் அம்மா ,மகள் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

காலேஜ் வந்தடைந்த விக்கி காரை பார்க் செய்து விட்டு ஆபிஸ் ரூம் சென்று கையெழுத்து போட்டு விட்டு மூன்றாவது மாடியில் உள்ள தனது பகுதியான English Department வந்து அங்கிருந்த மற்ற ஆசிரியர்களிடம் பேசி விட்டு தனது டேபிளில் வந்து அமர்ந்தவன் அன்றைய வகுப்பிற்கு தேவையான புக்ஸை எடுத்து வைத்து விட்டு தனது நண்பனும் தன்னுடன் பணியாற்றும் சக ஆசிரியரான ராகவிடம் பேசிக்கொண்டு இருக்க காலை வகுப்புகள் தொடங்குவதற்கான மணி அடிக்க தனது கிளாஸ் ரூம் நோக்கி சென்றான்.இன்று தான் விடுமுறை முடிந்து இரண்டாம் ,மூன்றாம்வருட மாணவர்களுக்கு காலேஜ் தொடங்கி உள்ளது நாளை முதல் வருட மாணவர்களுக்கு ஆரம்பம் என்பதால் விக்கி B.A செகன்ட் இயர் கிளாஸ் சென்றான்.

விக்கி கிளாஸிற்குள் நுழையவும் மாணவர்கள் எழுந்து நின்று விஷ் செய்யவும் இவனும் சிரித்துக் கொண்டே விஷ் செய்து விட்டு அனைவரையும் உட்கார சொல்லி விட்டு தான் கொண்டு வந்த புக்கை டேபிளில் வைத்து விட்டு மாணவர்களிடம் பேசத் தொடங்கினான்.லீவ் எப்படி போனது எனகேட்டு விட்டு மாணவர்களிடம் சில அறிவுரைகள் கூறி விட்டு அவர்களிடம் கிளாஸ் ஆரம்பிக்கலாமா எனக் கேட்க அவர்களும் ஆர்வத்துடன் சரி என்றனர்.ஏனெனில் அவனது சொல்லித்தரும் முறை மாணவர்களை மிகவும் ஆர்வமாக பாடத்தை கவனிக்கும் படி எளிதாகவும் அனைவருக்கும் புரியும்படியும் இருப்பதால் மாணவர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக பாடத்தை கவனிப்பார்கள்‌.எனவே இந்த டிபார்ட்மெண்ட் மற்றும் இன்றி இவன் செல்லும் வேறு டிபார்ட்மெண்ட் மாணவர்களும் கூட இவனது வகுப்பை எதிர் பார்த்து காத்திருப்பார்கள் அவ்வளவு ஆர்வத்துடன். மொத்தத்தில் அந்த காலேஜில் விக்கிக்கு என ஒரு தனி இடமும் மாணவர்களிடம் அவனுக்கென ஒரு தனி மரியாதையும் உண்டு.

இப்படியே அன்று காலேஜ் முடிய மாலை வீட்டிற்கு வந்தவன் தனது அறைக்கு சென்று பிரஷ் ஆகி உடை மாற்றிக் கொண்டு கீழே வர மாலா அவனுக்கு டீயை கொண்டு வந்து தர அதை குடித்து விட்டு மொபைலை பார்த்து கொண்டு இருக்க அவனருகே வந்த மேகா அவனது செல்லை பிடிங்கி கொள்ள உடனே அண்ணன்,தங்கை இருவரும் தங்களது சண்டையை ஆரம்பித்தனர்.காலேஜில் இருக்கும் விக்கிக்கும் வீட்டில் தங்கையுடன் சிறு பிள்ளை போல சண்டையிடும் விக்கிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி காலேஜில் பொறுப்பான ஆசிரியனாகவும், மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பவன் வீட்டிலோ சிறு பிள்ளை போல் தன் தங்கையுடன் டாம்&ஜெர்ரி போல அவளுடன் சண்டை போட்டு கொண்டு உள்ளான்.இவர்கள் சண்டையிடுவதை பார்த்த மாலா அவர்கள் அருகில் சென்று இருவரது காதையும் திருகியவாறு இருவரிடமும் என்ன ஏதேன்று கேட்டு இவர்களது பஞ்சாயத்தை தீர்த்து வைத்தார்.

மாலை ஆறு மணிக்கு மேல் தனது அறையில் இருந்து வந்த விக்கி பைக் சாவியை எடுத்து கொண்டு பிரண்டை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றான்.வீட்டில் இருந்து வந்தவன் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று அவனது நண்பனுக்காக காத்திருந்தான்.சிறிது நேரத்திற்கு பிறகு காலேஜில் அவனுடன் படித்த நண்பன் சிவா விக்கியை தேடி அவன் இருக்கும் இடத்திற்கு வந்தான். சிவா வந்தவுடன் அவனை வரவேற்ற விக்கி அவனை உட்கார சொல்லி பேச ஆரம்பித்தான்.சிவா M.A முடித்து விட்டு அவனது அப்பா மற்றும் அண்ணனுடன் சேர்ந்து தங்களது பிசினஸ் பார்க்க சென்று விட்டான் . இருந்தாலும் இருவரும் தினமும் மேசஜ் , போன் மூலம் பேசிக்கொண்டும் அடிக்கடி சந்தித்தும் தங்களது நட்பை தொடர்கின்றனர்.இருவரும் பேசி முடித்த பின் சிவா டைம் ஆவதாக கூறி கிளம்பினான்.

சிவா கிளம்பியதும் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து எழுந்து வர அப்போது அங்கே சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்த பெண் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த விக்கியின் மீது வந்து மோத அவனும் அவள் கீழே விழாமல் இருக்க அவளை பிடித்து கொண்டான்.தான் யார் மீதோ மோதியதும் கீழே விழ போன தன்னை விழாமல் தன்னை பிடித்ததையும் உணர்ந்தவள் அவனிடமிருந்து விலகி தன் கண்ணை கட்டியுள்ள துணியை கழட்டி விட்டு தன் எதிரே உள்ளவனை பார்த்தாள்.அவனும் தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள் அவனை பார்த்து சாரி சார் என்றாள். அவளையே பார்த்துக் கொண்டு இருந்த விக்கி தன்னிலை அடைந்து அவளிடம் என்ன என்று கேட்கவும் மீண்டும் அவனை பார்த்து விட்டு இடித்ததற்காக சாரி என்றும் கீழே விழாமல் பிடித்ததற்காக தேங்ஸ்ம் கூறினாள்.

அவள் தன்னிடம் சாரி&தேங்ஸ் கூறவும் அவளை பார்த்து புன்னகைத்த விக்கி அவளிடம் இட்ஸ் ஓகே என கூறி பார்த்து கவனமா விளையாடுங்க என கூறி விட்டு அவ்விடத்தை விட்டு சென்றான்.அவன் சென்றதும் அவளும் அவன் சென்ற திசையை பார்த்து தனக்குள் சிரித்துவிட்டு குழந்தைகள் அருகில் சென்று அவர்களுடன் விளையாட ஆரம்பித்தாள். அவளிடம் இருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்த விக்கி பைக்கை நிறுத்தி விட்டு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைய அவன் சிரித்துக் கொண்டே வருவதை பார்த்த மேகா அவனிடம் என்ன அண்ணா நீயா தனியா சிரிச்சுகிட்டே வர என்ன ஆச்சு எனக் கேட்க அவனும் அவளிடம் பார்க்கில் நடந்ததை கூறினான். அவன் கூறியதைக் கேட்ட மேகா அவனிடம் என்ன பார்த்ததும் அந்த பொண்ணு மேல உனக்கு சம்திங் சம்திங்கா என கேட்கவும் அவன் அவளது தலையில் கொட்டி அது எல்லாம் ஒன்னும் இல்ல எனக்கூறி தனது அறைக்கு சென்று விட்டான்.

மறுநாள் காலை எழுந்தவுடன் என்றும் இல்லாத ஒரு புது வித உணர்வுடன் ஜாக்கிங் சென்று விட்டு குளித்து ரெடியாகி கீழே வந்து சாப்பிட்டு முடித்ததும் மேகாவை அழைத்து கொண்டு காலேஜ் கிளம்பினான்.காலேஜ் வந்ததும் மேகாவை இறக்கி விட்டு மேலே மூன்றாவது மாடியில் உள்ள டிபார்ட்மெண்ட் போகுமாறு கூறி அவளை அனுப்பி விட்டு காரை பார்க் செய்ய சென்றான். காரை நிறுத்தி விட்டு வந்து கொண்டிருந்த விக்கியின் மீது தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு திரும்பிய பெண் இவன் மீது மோதி நின்றாள்.அவன் மீது மோதிய அப்பெண் அவனை பார்க்க அதிர்ந்து போய் அவனையே பார்த்தாள்.அவனும் அதே போல் அவளை பார்த்து அதிர்ந்தான் , ஏனெனில் அவன் மீது மோதிய அப்பெண் நேற்று பார்க்கில் மோதிய அதே பெண் என்பதால் இருவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதில் இருந்து மீண்டவன் அவளை பார்த்து சிரித்து விட்டு ஆபீஸ் சென்று விட்டு தனது டிபார்ட்மென்ட் நோக்கி சென்றான்.

வகுப்பு ஆரம்பிப்பதற்கு மணி அடிக்கவும் வகுப்பிற்கு சென்றான் .அவனுக்கு இன்று முதல் வகுப்பே B.A பஸ்ட் இயர் .அவன் உள்ளே வர அனைவரும் எழுந்து விஷ் செய்து விட்டு அமர அவனும் தலையசைத்து அவர்களை பார்த்து புன்னகைத்தான்.பின் மாணவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடமும் அவர்களது பெயரை கேட்டு பேசிக் கொண்டு இருக்க மேகாவோ தன் அண்ணனை ஏதோ புதிதாக பார்ப்பதை போல் பார்த்தாள் . அவளின் முறை வரவும் எழுந்து முன்னால் வந்தவள் தன்னை அறிமுகம் செய்து கொள்ள அவனும் மற்றவர்களிடம் கேட்பதை போல் இவளிடமும் கேட்டு மாணவர்களின் அறிமுக வகுப்பு முடிய இரண்டாவது வகுப்பிற்கான மணியும் அடிக்க அவர்களிடம் இருந்து விடைபெற்று அடுத்த வகுப்பிற்கு சென்றான் ‌

அடுத்ததாக M.A பஸ்ட் இயர் வகுப்பிற்கு வர அங்கு நேற்று மாலையும், இன்று காலையும் பார்த்த அதே பெண் அந்த வகுப்பில் இருப்பதை கண்டவன் தன் மனதில் ஓஓ இவ நம்ம டிபார்ட்மெண்ட் தானா என்று நினைத்து கொண்டான்.அவளும் அதே போல் இவனை பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.மாணவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடமும் கேட்டு கொண்டு இருக்க அப்பெண்ணும் எழுந்து முன்னாள் வர அவளிடம் அவளது பெயரை கேட்டான் விக்கி.அவன் கேட்கவும் அவள் தனது பெயர் சாலினி எனக்கூறி தன்னை பற்றி கூறத் தொடங்கினாள்.சாலினி B.A,B.Ed முடித்து விட்டு ஒருவருடம் பள்ளியில் ஆசிரியையாக இருந்ததாக கூற அதைக் கேட்ட விக்கியும் , மாணவர்களும் பிறகு எதற்காக மீண்டும் படிக்க வந்து உள்ளாள் என கேட்க அவளேம் தான் M.phil,P.hd படிக்க வேண்டும் என ஆசை என்பதால் வேலையை விட்டு விட்டு மீண்டும் படிக்க வந்துள்ளதாக கூறினாள்.இதைக் கேட்ட விக்கி அவளை பார்ட்ட மாணவர்களும் அவளிடம் வாழ்த்தை கூறினார்கள்.


காதல் தீ வளரும்.......
 
Top