All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அதிதி கண்ணனின் "வெண்பனி மலரே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


கௌரியை கவனித்துக் கொள்வதற்காக அவரின் தாயார் கற்பகம் ஆனந்தியை அழைத்து வந்தார்…

ஆனந்தி கௌரியின் சித்தி மகள் தான்...சிறுவயதிலிருந்து ஒன்றாகத்தான் இருவரும் வளர்ந்தனர்..
ஆகையால் தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நம்பினார்..


ஆனந்தியும் கௌரியை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டாள்.... கௌதமின் மேல் பாசமாகவும் நடந்துகொண்டாள்...


இதைக் கண்டு கௌரி தன் கணவருக்கு ஆனந்தியை இரண்டாம் தரமாக கட்டி வைத்தார் முருகானந்தம் ஆரம்பத்தில் மறுமணத்திற்கு மறுப்பு தெரிவித்தவா் பிறகு என்ன நினைத்தாரோ ஒத்துக்கொண்டார்...


மறு வருடத்தில் ஆனந்திக்கு சித்தார்த் பிறந்தான் அதன்பிறகு ஆனந்தியின் போக்கும் முற்றிலும் மாறியது.…

தான் பெற்ற பிள்ளை மட்டுமே அப்பா என்று உரிமை கொண்டாட வேண்டும் என்று நினைத்தவர் கௌதமை கொஞ்சம் கொஞ்சமாக முருகானந்தத்திடம் இருந்து விலகினாள்.. முருகானந்தத்திற்கும் கௌரியின் நினைப்பே வராதபடி பார்த்துக் கொண்டார்....

முருகானந்தம் சித்தார்த் மற்றும் கௌதமிற்கும் இடையில் வேறுபாடு பார்க்க மாட்டார்… இருவரும் தன் பெயர் சொல்லும் பிள்ளைகள் என்று நினைப்பார்...

ஆனால் வயதில் சின்னவன் ஆனா சித்தார்த்திற்கு கௌதம் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்று சொல்லுவார்...

ஆனந்தியின் வேறுபாட்டை முருகானந்தம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்…

தான் கௌரியிடம் நெருக்கமாக இருந்தால் தான் வீட்டில் இல்லாத நேரம் ஆனந்தி என்ன செய்வாள் என்று தெரியாது ஆகையால் கௌரியிடம் இருந்து சற்று விலகியே இருந்தார்...

ஆனால் கௌதமிடம் எப்பொழுதும் போலவே நடந்து கொண்டார்..
இது ஆனந்திக்கு பிடிக்கவில்லை எனவே எப்பொழுதும் கௌதமை பற்றி முருகானந்தத்திடம் குறை கூறிக் கொண்டே இருப்பார்.…


”அத்தான் கௌதம் சரி இல்லை அவனை பற்றி பள்ளியிலும் புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் எல்லார் மேலயும் கை நீட்டி விடுகிறான்...டிசி வாங்கிக்கொள்ளுங்கள் என்று தலைமை ஆசிரியர் கூறினார்”

“வீட்டிலும் சித்தார்த்துடன் விளையாடும் போது அவனை பிடித்து கீழே தள்ளி விடுகிறான் தம்பி என்ற பாசம் அவனிடம் கொஞ்சம் கூட இல்லை அவனை இப்படியே விட்டால் சரிவராது.…”

“நீங்கள் நல்ல ஹாஸ்டல் ஆக பார்த்து விசாரிங்க அங்கு சேர்த்துவிடலாம்...இவனை இப்படியே விட்டா கெட்டு குட்டிச்சுவரா போய்விடுவான்..”

முருகானந்தத்திற்கு ஆனந்தி எதற்காக இப்படி சொல்கிறார் என்று புரிந்து விட்டது. இனி கௌதம் இந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டார். ஆகையால் ஆனந்தியிடம் சரி விசாரிக்கிறேன் என்று சொன்னார்.

அனைத்தையும் கௌதம் கேட்டுக் கொண்டு தான் இருந்தான் ஏற்கனவே தந்தை மறுமணம் செய்து கொண்டதை கண்டு அவரிடமிருந்து விலகி இருந்தவன் இப்போது பேசுவதைக் கேட்டு முற்றிலுமாக தன் தந்தை வெறுத்தான்...

முருகானந்தமும் கௌதமை ஊட்டி லாரன்ஸ் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்… இப்பொழுதுதான் ஆனந்திக்கு சற்று நிம்மதியாக இருந்தது...
இதனால் அவரை கெட்டவர் என்று சொல்லிவிட முடியாது...


தன் கணவருக்கு தான் மட்டும் தான் மனைவி தன் மகன் மட்டும்தான் வாரிசு என்று நினைப்பவர்..

கௌரியுடன் பங்கு போட்டுக்கொள்ள அவர் தயாராக இல்லை...சொத்துக்கள் அனைத்தையும் கௌதம்கு தூக்கி கொடுத்தாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்…

ஆனால் தன் கணவன் தனக்கும் தன் மகனுக்கும் மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்....


பனி உருகும் ...!!!!
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi நட்புக்களே;

வெண்பனி மலரே அடுத்த ud பதிவு செய்து விட்டேன்..தாமதத்திற்கு மன்னிக்கவும். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

அடுத்த பதிவு திங்கள் அன்று பதிவு செய்து விடுகிறேன்.....

நன்றி...!!!!
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்: 5

கௌதமன் தனக்கும் தன்னுடைய தாய்க்கும் தங்களின் எதிர்காலத்திற்கு என்ன தேவை என்பதை அந்த சிறு வயதிலேயே தெளிவாக சிந்தித்தான்.... அதற்கு ஏற்றவாறு தன்னை தானே செதுக்கிக் கொண்டான்..

தன்னுடைய பள்ளிப் பருவத்தை ஊட்டியில் கழித்தவன்..PSG College of Technology ல் M.E முடித்தான்..B.E முடித்தவுடன் முருகானந்தம் தொழிலை பார்த்துக் கொள்வதற்காக கௌதமை அழைத்தார்.

அவனோ அவர் கூப்பிட்டார் என்பதற்காக வேண்டுமென்றே M. E படித்தான்.. மீண்டும் முருகானந்தம் தொழிலை பார்த்துக் கொள்வதற்காக கூப்பிட்டார்...

‘’நான் இப்போதுதான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சனா இவ்வளவு வருஷமா தெரியலையா.நான் எப்படியோ போகட்டும் என்று சொல்லி தானே அவ்வளவு சின்ன வயசுல என்ன ஹாஸ்டல்ல சேர்த்து விட்டீர்கள்.”

“இப்ப உங்களால தொழிலை பார்த்துக்க முடியலன்னு ஒரு வேலைக்காரன் தேவைப்படுது அதுக்குத்தானே என்ன கூப்பிடுறீங்க...”“So sorry அதுக்கு நான் பலியாக முடியாது. கண்ணா புரிஞ்சுக்க என்னால இப்பலாம் முடியல வயசாயிடுச்சு நீ தான் இனிமேல் பார்த்துக்கணும்.”

“முடியாது நான் ஏன் உங்களுக்காக யோசிக்கணும் நீங்க ஒரு நிமிஷமாசச்சும் எங்க ரெண்டு பேர பத்தி யோசிச்சு இருக்கீங்களா யோசிச்சு இருந்தா நீங்க இந்த மாதிரி முடிவெடுத்துருப்பீங்களா..”

“அம்மாக்கு உடம்பு முடியலன்னா உடனே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கணுமா.... கௌதம் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ வேண்டாம்ன்னு தான் சொன்னேன் உங்க அம்மா தான் வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சா ..”

“அம்மா சொன்னா உங்களுக்கு எங்க போச்சு அறிவு சின்ன புள்ளைங்க மாதிரி காரணம் சொல்லிக்கிட்டு இப்படி சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்ல.

”இதே உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா அம்மா உங்கள விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி இருப்பாங்களா”....

முருகானந்தத்திற்கு கௌதம் பேசப்பேச சாட்டையால் அடிவாங்கியது போலிருந்தது. முருகானந்தத்திற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை...

உங்கள பாக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு தயவு செஞ்சு என் கண்ணு முன்னாடி வராதீங்க போங்க.

இதைக் கேள்விப்பட்ட கௌரி கௌதமை பிடி பிடின்னு பிடித்து விட்டார்..
“உனக்கு என்னாச்சு கௌதம் இந்த மாதிரிலாம் பேசிட்டு இருக்க அப்பாக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நீ கொடுத்துதான் ஆகணும் நான் உன்னை அப்படி வளர்க்கவில்லை, நாளையிலிருந்து நம்ப தொழிலை நீதான் பாத்துக்கணும் அப்பாக்கு வயசாயிடுச்சு கண்ணா புரிஞ்சுக்கோடா....


மா,” தயவு செஞ்சு நீங்க அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசறது நிப்பாட்டுங்க ”
“எவ்வளவு பட்டாலும் உங்களுக்கு புத்தியே வராத இன்னும் ஏன்மா அவரை நம்பி இருக்கீங்க உங்களுக்கு நான் இருக்கேன் மா. கடைசி வரைக்கும் உங்கள ராணி மாதிரி நான் பார்த்துக்குறேன் மா.”


“நமக்கு இந்த வீடும் வேணும் அவரும் வேணாம்மா நாம வேற ஊருக்கு கூட போயிடலாம்...”

“இந்த மாதிரி பேசாதனு உனக்க கோடி முறை சொல்லிட்டேன் ஆனா நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கறே மறுபடியும் மறுபடியும் சொன்னதே தான் சொல்லிக்கிட்டு இருக்க.”

“நான் உங்க அப்பா விட்டு எங்கேயும் வரமாட்டேன்.அவர் ரொம்ப நல்லவர் அவர் நமக்காக தான் இதெல்லாம் பண்றாரு உனக்கு அது புரிய மாட்டேங்குது”

“உன்ன ஹாஸ்டல்ல சேர்க்குறத பத்தி என்கிட்ட சொல்லிட்டு தான் கண்ணா செஞ்சாரு . எனக்கும் நீ இங்க இருந்து கஷ்டப்பட வேண்டாம் என்று தான் உன்னை ஹாஸ்டல்ல சேர்க்க ஒத்துக்கிட்டேன்...”
“நீங்களே தான் உங்க வாழ்க்கையை கெடுத்துக்கிட்டிங்க.. உங்க வாழ்க்கைய இன்னொருத்தங்களுக்கு விட்டு கொடுத்து அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் இருக்கீங்க...”


“நீங்க என்னை பத்தியும் யோசிக்கல மா... என்னோட சின்ன வயசு சந்தோஷம் எல்லாமே போச்சு மா...”அதுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் காரணம்... "

கௌதமின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. என்ன சொல்ல முடியும்அவர் ஒன்று நினைத்து செயல்பட நடந்தது என்னவோ வேறு ஒன்று கண் முன்னாடி தன் கணவனுடன் இன்னொருவள் மனைவியாக வலம் வரும்போது எந்த மனைவிதான் ஏற்றுக் கொள்வாள் அதிலும் ஆனந்தி முருகானந்தத்தை கௌரியின் பக்கம் கூட திரும்ப கூட விட மாட்டார்...

முருகானந்தம் தான் ஆனந்திக்கு தெரியாமல் வந்து பார்த்து செல்வார்.அவருக்கும் ஆரம்பத்தில் சற்று கடினமாக தான் இருந்தது ஆனால் போகப்போக அனைத்தும் கடவுளின் சித்தம் என்று ஏற்றுக்கொள்ள பழகிவிட்டார்.என்ன ஒன்று கௌதம் ஆல் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

“முடிவா என்னதான் சொல்ற கண்ணா" என்று கேட்டார். "என்னால முடியாது தயவு செஞ்சு என்ன வற்புறுத்தாதீங்க ப்ளீஸ், நான் தனியாக தொழில் தொடங்கலாம்னு இருக்கேன்..”

“கௌதம் நீ சொல்றது உனக்கே நியாயமா படுதா இந்த சொத்துக்கு வாரிசு நீ தான்டா..”

“மா உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிட்டே இருக்கு உங்க கணவர் ஆல்ரெடி இந்த சொத்துக்கு வாரிசா இன்னொருத்தன பெத்து வச்சிருக்காரு..”



“கௌதம் என்ன பேச்சு இது எங்கிருந்து இப்படி எல்லாம் பேச கத்துக்கிட்ட..”
“உனக்கு இந்த அம்மா வேணும்னா அப்பா சொல்றதைக் கேட்டு ஒழுங்கா தொழிலை கையில் எடுத்து நடத்துற வழியை பாரு.”


“ இல்ல அம்மா வேணாம்னா நீ தாராளமா தனியாக தொழில் தொடங்கிக்கோ என்று கோபமாக சொன்னார்..”

“ அம்மா” என்று கௌதம் ஏதோ சொல்ல வரவும் எதுவும் சொல்லாத இதுதான் என் முடிவு என்று கண்ணை மூடிக்கொண்டார்..

அவனால் வேறு எதுவும் பேச முடியவில்லை அமைதியாக சென்றுவிட்டான்...
முருகானந்தத்திடம் வந்தவன் “என்ன பண்ண வேண்டும்” என கோபமாக கேட்டான்...


அவருக்கு புரிந்து விட்டது இது கௌரியின் வேலை என்று. அமைதியாக அவனிடம் அனைத்து தொழில்கள் , மற்றும் அவருடைய எல்லா கொடுக்கல் வாங்கல்களையும், அவனிடம் சொல்லிவிட்டு ஒப்படைத்தார்....

முருகானந்தத்திற்கு ஏக்கர் கணக்கில் நிலங்களும், தேயிலை தோட்டங்களும் உள்ளன.

தேயிலைத் தோட்டத்தை தவிர மீதம் இருக்கும் இடங்களில் மேரக்காய், பீன்ஸ், சிகப்பு, முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூக்கல் என்று பலவகையான காய்கறிகளை பயிரிட்டுள்ளார்...
மேலும் ஊட்டியில் இரண்டு காட்டேஜ்களும் வைத்துள்ளார்...


கௌதம் கையில் தொழிலை எடுத்தவுடன் ஒரு வருடத்திற்குள் மூணாறில் கௌரியின் பெயரில் ஹோட்டல்கள் வாங்க முடிவெடுத்தான்.

அதைப்பற்றி முருகானந்தத்திடம் பேசிக் கொண்டிருந்தான்...அவரும் அம்மா பெயரிலேயே வாங்கு ரொம்ப ராசியும் கூட என்னுடைய அனைத்து தொழில்களும் கௌரி பெயரில்தான் உள்ளது என்று கூறினார்.

அவர் சொல்வதும் உண்மைதான் ஊட்டி காட்டேஜ்கள் நிலங்கள் அனைத்தும் அவரின் பெயரில் தான் உள்ளது. இந்த வீடு மட்டும் தான் முருகானந்தத்தின் பெயரில் இருக்கிறது..

அப்பொழுது அங்கு வந்த ஆனந்திஹோட்டலை சித்தார்த்தின் பெயரில் வாங்குங்க இல்லைனா உங்கள் பெயரில் வாங்க வேண்டும் என்று முருகானந்தத்திடம் சொன்னார்..

ஏனெனில் ஆனந்திக்கு கௌரியின் பெயரில் ஹோட்டல்கள் வாங்குவதில் விருப்பம் இல்லை...மேலும் கௌதமிற்கு கோபத்தை உண்டாக்க வேண்டும் என அவன் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்.

கௌதம் வந்ததே அவருக்கு பிடிக்கவில்லை. முன்னாடி எல்லாம் தந்தையைக் கண்டால் வெறுப்பை உமிழ் பவன் இப்பொழுதெல்லாம் தொழில் முறையாக முருகானந்தத்திடம் சகஜமாக பேச ஆரம்பித்து இருந்தான்.

அது ஆனந்திக்கு பிடிக்கவில்லை எங்கே மறுபடியும் மகன் என்று இவர் அவன் மேல் பாச மழை பொழிய ஆரம்பித்து விடுவாரோ என்று பயந்தார்..

முருகானந்தத்திற்கு” ஐயோ” என்று இருந்தது இப்பொழுதுதான் இவன் கொஞ்சம் நம்மகிட்ட சகஜமாக பேசுறான்னு நிம்மதியா இருந்தேன் அது இவளுக்கு பொறுக்காதே கடங்காரி..!! கடங்காரி..!!

“இதை இப்ப கௌதம் முன்னாடி தான் சொல்லனுமா தனியா சொன்னா ஆகாதா குந்தாணி வேணும்னே சொல்றா..”

“போச்சு இப்ப இவன் மறுபடியும் முருங்கை மரம் ஏரிக்குவானே” என்று மனதினுள் புலம்பியபடியே கௌதமை நிமிர்ந்து பார்த்தார்..அவர் நினைத்தது போலவே கண்கள் சிவக்க அவரை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்..

“ஐயையோ இப்ப என்ன பூதம் வரப்போகுதுன்னு தெரியலையே முதல்ல இந்த பெரிய பூதத்தை சமாளிப்போம்” என்று ஆனந்தியிடம் “இதைப்பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் மேலும் அனைத்து தொழில்களும் கௌரியின் பெயரில்தான் உள்ளது புதுசாக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்” என்று சொன்னார்..

அதற்கு ஆனந்தி “அதேதான் நானும் சொல்றேன் எல்லா தொழிலும கௌரி அக்கா பெயரில் தானே இருக்கு இப்ப வாங்கற ஹோட்டலை சித்தார்த் பேரில் வாங்குங்க...”

மேலும் கௌதமை பார்த்துக் கொண்டே “அவன் தானே உங்க புள்ள அப்ப அவன் பேரில்தான் வாங்க வேண்டும்.”

“உங்க மேல அவனுக்கு மட்டும்தான் எல்லா உரிமையும் இருக்குஅதுவுமில்லாம உங்க வாரிசு அவன் தானே..”கௌதம் உரிமை என்ற வார்த்தையில் அடி வாங்கினான். இதெற்கெல்லாம் காரணமான தந்தை யை வெறுத்தான். முருகானந்தத்திற்கு கௌதம் என்ன சொல்வானோ என்று பயமாக இருந்தது..
கௌதமும் முருகானந்தத்திடம் “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம் அந்த கதையா இருக்கு இவங்க பண்றது எல்லாம்...” என்று ஆனந்தியை நக்கலாக பார்த்துக்கொண்டே கூறினான்.


“டேய் யாரப்பாத்து ஒண்டவந்த பிடாரி ன்னு சொல்ற” என்று அவனை அடிக்க கையை ஓங்கி விட்டார்..

கௌதம் நகர்ந்து கொண்டான்...ஆனந்தி முருகானந்தத்தை முறைத்துப் பார்த்தார்.“என்ன அவனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க என்ன ஒண்டவந்த பிடாரி ன்னு சொல்றான்.நீங்களும் அமைதியா இருக்கீங்க நான் உங்களுக்கு ஒண்டவந்த பிடாரியா சொல்லுங்க” என்று கத்தினார்..

“கொஞ்சம் அமைதியா இரு ஆனந்தி கௌதம் பேசினது தப்புதான் அதே போல் அவனை அடிக்க கை ஓங்கியதும் தப்பு.”
“கௌதமிடம் திரும்பி இப்படித்தான் உன் சித்தி கிட்ட பேசுவியா மன்னிப்பு கேளு” என்று இருவரையும் கடிந்து கொண்டார்... அவனோ கண்களாலே தந்தையை எரித்தான்.


“அவன் தெரியாம பேசிட்டான் நம்ம பிள்ளை தானே விடு” என்று சொன்னார்..
அவரோ “நம்ம புள்ள இல்ல கௌரி அக்காவோட புள்ள..”
அப்பொழுதும் தவறியும் கூட “உங்க புள்ள” என்று சொல்லவில்லை அவர்..


கௌதமோ “நீ என்னவோ சொல்லிக் கொள் என்பது போல் முறைத்து பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டான்..ஆனந்திக்கு கோபம் தாளவில்லை.இருந்தாலும் அமைதி காத்தார்.

முருகானந்தம் அதன் பிறகு கௌதமிடம் வீட்டிற்குள் தொழிலை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார்..அன்றிலிருந்து அவனைப் பழி வாங்குவதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“ஐயா” என்ற குரலில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டான்...”ம்ம்ம் சொல்லுங்க ராஜன் வேலை எல்லாம் முடிஞ்சதா காய்கறிகளை ஏற்றுவதற்கு வண்டி வந்து விட்டதா” என்று கேட்டான்.

மறுநாள் காலையில் மலர் எப்பொழுதும் போலவே வேலைக்கு கிளம்பினாள். என்ன ஒன்று எப்பொழுதும் நிலாவுடன் சேர்ந்தால் கலகலப்பாக இருப்பவள் இன்று அமைதியாக வேலை செய்து கொண்டு இருந்தாள்..

நிலாவும் மலர் அமைதியாக இருப்பதைக் கண்டு அவளை மாற்ற முயற்சித்து கொண்டிருந்தாள்..அவளோ நிலா பேசியதே கவனித்ததாகவே தெரியவில்லை...”ஏய் மலர் என்னடி ஆச்சு உனக்கு ஏன் இப்படி இருக்க விடு எல்லாம் சரியா போயிடும்...”

அதற்கு மேல் பொறுக்க முடியாத நிலா நறுக்கென்று மலரின் தலையில் கொட்டினாள்.. “ஐயோ அம்மா ஏண்டி எருமமாடே என்ன அடிச்ச.”

“பின்ன அடிக்காம உன்ன என்ன பண்ணுவாங்க எவ்ளோ நேரமா நானும் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் எந்த பதிலும் சொல்லாமல் நீ பாட்டுக்கு இருக்க.”
அதுக்குன்னு கொட்டுவியா வலிக்குது டி குரங்கு..!!


“சரி,சொல்லு அப்படி என்னதான் யோசிச்சிட்டு இருக்க” என்று கேட்டாள்..
“இல்ல நிலா எனக்கு பயமா இருக்கு நீ சொன்ன மாதிரி நான் பொறுமையா இருந்து இருக்கணும் அவசரப்பட்டு அவனுக்கு கோபம் வர மாதிரி பேசிட்டேன் டி... “


“பேசி முடிஞ்சதை பத்தி யோசிச்சு என்ன ஆகப்போகுது நீ பேசினது இல்லன்னு ஆகப்போகுதா விடு பாத்துக்கலாம்....”

“ஹேய் இதெல்லாம் விடு பார்த்துக்கலாம்.. அடுத்த வாரம் பொம்ம தேவி அம்மன் கோவில் திருவிழா வருது அதுக்கு என்ன டிரஸ் போடலாம்னு நானே யோசிச்சிட்டு இருக்கேன் நீ என்ன டிரஸ் போட போற சொல்லு...”
மலரும் ஏன் அதையும் இதையும் யோசிச்சு பயந்துக்கிட்டு இருக்குறதுக்கு அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

நிலாவுடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள்...

நன்றி.. !!
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last edited:

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர் : 6


திருவிழா முடிந்து ஐந்தாவது நாள் சுரேந்தர்க்கும் மலருக்கும் பரிசம் போட்டு கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். கஸ்தூரிக்கு சந்தோசத்தில் ஒன்றும் புரியவில்லை.

கஸ்தூரி பிறந்த சில வருடங்களிலேயே தந்தை இறந்துவிட்டார்..அப்பொழுது இருந்து தன் தந்தைக்கு தந்தையாக அண்ணனுக்கு அண்ணனாக இருந்து கஸ்தூரியை வளர்த்தவர் ராமன்தான்,சூதுவாது அறியாதவர்..


தன் தங்கையே உலகம் என்று இருந்தவர் கஸ்தூரிக்கு திருமணம் முடித்து விட்டு 35 வயதில்பார்வதியை கரம் பிடித்தார்.. தன் அண்ணன் உடனான உறவு என்றும் நிலைக்க வேண்டும் என்றுதான் மலரை மருமகளாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார்..


ராமனுக்கும் தன் மகளை வெளி இடத்தில் கட்டி கொடுக்க அவ்வளவாக விருப்பமில்லை தன் தங்கையின் மகனிற்கு கட்டிக் கொடுத்தால் தன் கண்ணெதிரிலேயே தன் மகள் இருப்பாள் என்று நினைத்தார்...

பார்வதிக்கும் இதில் இஷ்டம் தான் ஏனெனில் தன் மகளை வெளியில் கட்டிக் கொடுத்து விட்டு எப்படி வாழ்கிறாலோ என்று அவதிப்படுவதை விட நாத்தனார் மகனிற்கு கட்டிக் கொடுத்தால் நாளைக்கு எதுவும் பிரச்சனையாக இருந்தாலும் உரிமையாக நாத்தனாரை கேள்வி கேட்கலாம்..

மேலும் கஸ்தூரி தன் அண்ணனின் மேல் உள்ள பாசத்தினால் தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று இத்திருமணத்திற்கு சந்தோஷமாக வேலைகளை செய்ய ஆரம்பித்தார்...

மதிய உணவை முடித்துவிட்டு மலரும் வெண்ணிலாவும் பேசிக் கொண்டிருந்தனர்.. அப்பொழுது அங்கு வந்த சுரேந்திர் சாப்பிட்ட பெண்களை மட்டும் தேயிலை பதப்படுத்தும் (Weathering section )இடத்திற்கு போக சொன்னான்.

" சாப்பிட்டுக் கொஞ்ச நேரமாச்சும் நிம்மதியா இருக்க விடரான பாரு இம்சை புடிச்சவன் இந்த கருங்காலி பயல கட்டிக்கிட்டன உன் வாழ்க்கையில ஓய்வுன்னு ஒன்னே இருக்காது டி இவனுக்கும் இவங்க அம்மாவுக்கும் வடிச்சு கொட்டியே உன் தலை முடி எல்லாம் கொட்டிடும் சூதானமா உன் வாழ்க்கையை நீ தான் காப்பாத்திக்கணும்.."


"உன்ன கொல்ல போறேன் பாரு இப்ப ஏன்டி எங்க அத்தையை இழுக்குற. உன் வருங்கால மாமியாரை சொல்லவும் கோவம் வருதா அடியே வெள்ள கொரில்லாவே உனக்கு நான் தாண்டி கடைசி வரைக்கும் வருவேன் ஞாபகம் வச்சுக்கோ."

"ஏய் எல்லாரும் போயிட்டாங்க நம்ம சண்டைய அப்புறமா வச்சிக்கலாம் வா போலாம்."

"வேணும்னே தாண்டி உன் மாமன் காரன் இதெல்லாம் பண்றான் இதுக்கெல்லாம் சேர்த்து அவனை பழிவாங்காமல் விடமாட்டேன் டி இதுக்காகவே உன்ன கௌதம் கூட கோர்த்து விடனும் டி அப்பதான் அந்த கருங்காலி பய அடங்குவான்.."


நிலாவின் பின் மண்டையில் ஓங்கி ஒன்று வைத்தாள் "விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதடி அவன நெனச்சாவே எனக்கு அடி வயிறு கலங்குது என்ன என்னவோலாம் பண்ணுது டி"

நிலாவோ மலர் தன்னை அடித்ததை மறந்துவிட்டு" என்னடி சொல்ற அவன் மேல உனக்கு இல் தக்கா சைய்யா வந்துருச்சா" என்று ஆர்வமாக மலர் தன்னை அடித்ததை மறந்துவிட்டு முகத்தை ஆர்வமாக பார்த்தாள்...


" உன் வாயில கொள்ளிக்கட்டையை வைக்க ஏண்டி உன் வாயில என்ன நல்ல வார்த்தையே வராதாடி உன் திரு வாய கொஞ்சம் மூடிக்கிட்டு வா போய் வேலையைப் பார்க்கலாம்.."


டீ தயாரித்தலில் முதல் பகுதி தேயிலையை பதப்படுத்துவது பின்பு ரோலிங் மிஷின்னிற்கு அனுப்புவார்கள் இலைகளை நன்றாக அரைத்து டிரையர்க்கு போகும் அதற்குப் பிறகுதான் தேயிலையின் தரத்தை பிரிப்பார்கள் ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ தேயிலை இலைகள் அரைக்கப்படும்...

மொத்தம் நான்கு ரோலா் உள்ளது ரோலிங்க்கு மேலே வட்டவடிவத்தில் ஒரு ஓட்டை இருக்கும் அதன் மூலம் மேலே இருந்து இலைகளை தள்ளவேண்டும் ஒவ்வொரு ரோலர்க்கும் 400 கிலோ தேயிலை தேவைப்படும்.

அனைவரும் வேலையை முடித்து விட்டு கிளம்பினர் அப்பொழுது அங்கு வந்த ஸ்ரீராம் "ஏன் என்னாச்சு பெண்கள் ஏன் இந்த செக்சனில் வேலை செய்கிறார்கள்" என்று சுரேந்தரிடம் கேட்டான்.

" இல்லைங்க சார் சாப்பிடப் போன ஹிந்திகார பசங்க இன்னும் வரல ரோலிங்க்கு தேயிலை தேவைப்பட்டதனால தான் சார் பெண்களை இங்கே வந்து வேலை செய்ய சொன்னேன்.."

"லேட்டா வந்தா பாதி சம்பளம் தான் தருவோம்னு அந்த பசங்க கிட்ட நான் சொன்னேன்னு சொல்லுங்க ஆட்டோமேட்டிக்கா கரெக்டா வருவானுங்க" மீறி லேட்டா வந்தா வேலையை விட்டு தூக்குங்க இனி பெண்களை இந்த செக்சனுக்கு அனுப்பாதீங்க" என்று சொன்னவன் நிமிர்ந்து ஒரு நிமிடம் நிலாவையும் மலரையும் பார்த்தவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.

அன்று வேலை முடியவே 7 மணி ஆகிவிட்டது நிலாவும் மலரும் வேகமாக நடந்து கொண்டிருந்தனர் ஏனெனில் இப்பகுதியில் இனி ஆள் நடமாட்டம் இருக்காது.

நிலா மலரிடம்" நாளைக்கு நான் வர மாட்டேன் டி திருவிழாவுக்கு வீடு சுத்தம் பண்ணனும் பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டே நடந்தாள்..

"என்னடி பதிலே பேச மாட்டேங்குற" என்று திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்...


அங்கு கௌதம் மலருக்கு தாலி கட்டிக் கொண்டிருந்தான்..


பனி உருகும் !!!
 
Last edited:

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi நட்புக்களே:

எல்லாரும் எப்படி இருக்கீங்க ..என் மேல செம காண்டுல இருப்பிங்கனு எனக்கு தெரியும் ப்ளீஸ் மன்னிச்சு மீ பாவம் ...
கொஞ்சம் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் என்னால் தொடர முடியவில்லை.இன்னும் treatment ல தான் இருக்கேன்.


ரொம்ப சின்ன udதான் போட்ருக்கேன் படிச்சுட்டு எப்படி இருக்குனு மறக்காம comment பண்ணுங்க.. meenakshi 27 உங்க அன்புக்கு நன்றி மா!!..


https://srikalatamilnovel.com/community/threads/அதிதி-கண்ணனின்-வெண்பனி-மலரே-கருத்துத்-திரி.514/
 
Last edited:
Status
Not open for further replies.
Top