All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அதிதி கண்ணனின் "வெண்பனி மலரே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே....
எனக்கு இத்தலத்தில் வாய்ப்பு அளித்ததுக்கு நன்றி ஸ்ரீமா.. என்னுடைய பெயர் தங்கம் அமர்நாத்.. அதிதி என் மகளின் பெயர்... என்னுடைய நிறையை சொல்லாமல் இருந்தாலும் (சும்மா ஒரு பேச்சுக்கு 😉😉)குறையை சொல்ல மறக்காதீர்கள்.... பொங்கல் முடிந்தவுடன் கதை பதிவிடுகிறேன். நீங்கள் உற்சாகப்படுத்தினால் தான் என்னால் கதை எழுத முடியும் மக்களே....கொஞ்சம் பார்த்து பண்ணுங்க....
நன்றி
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெண்பனி மலரே

கிழக்கே சூரியன் அனைவருக்கும் தன் கம்பீரமான முகத்தை தரிசனம் கொடுக்க, பறவைகள் தன் நண்பன் கதிரவனை கண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். " மலையரசியும் தன்னவனை தனக்குள் சிறையிட்டது போதுமென்று கண்ணீருடன் (கதிரவனின் கதிர் பட்டவுடன் பனி உருகுதல்) விடுவித்தாள்..."

நீலகிரியின் விடிந்தும் விடியா காலைப்பொழுதில் மலர் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பூக்களை பறித்து கொண்டிருந்தாள். அப்பபொழுது காற்று வேகமாக வீசுவதை கண்டு தானாக அவள் மனது கவிதை எழுதியது.

"எங்கு எதை
தொலைத்ததோ தெரியவில்லை;
யார் கண்ணுக்கும் தெரியாமல்,
எதையோ தேடி திரிகிறது"

காற்று…
"ஏய் மலர்... " என்ற தன் தாயின் குரலை கேட்டதும் தன் கவிதை உலகில் இருந்து மீண்டு இந்த உலகிற்கு வந்து சேர்ந்தாள். "இதோ வந்துட்டேன் மா..." என்று ஓடினாள்.

"இன்னும் என்னடி பண்ணுற.. நேரமாயிடுச்சி சீக்கிரமா பூவை பறிச்சிட்டு வேலைக்கு போவ வேணாமா ?.. எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு வெரசா கிளம்புடி". என்று மலரை பார்த்து அவள் தாய் கத்தினாள்.
"முடிஞ்சிருச்சுமா பூக்களை வண்டியில ஏத்துறது மட்டும் தான் பாக்கி, மாரி அண்ணா இன்னும் வரல."

"இவனுக்கு இதே வேலையா போச்சு வரட்டும் இன்னைக்கு வசிக்கிறேன் கச்சேரிய" என்று கோவமாக கத்த ஆரம்பித்தாள் பார்வதி. உடனே மலர் "போச்சு இன்னைக்கு தொலைஞ்சாங்க மாரி அண்ணா" என்று மனதில் நினைத்துக்கொண்டாள்...''

ராமன்,பார்வதி தம்பதியினரின் தவப்புதல்வி தான் பனிமலர்.[ நம் கதையின் நாயகி பனிமலரின் தந்தை சற்று வெகுளி, தன் குடும்பத்தின் மேல் மிகுந்த பாசம் வைத்து இருப்பவர்.... பனிமலர் பார்க்கறதுக்கு நம்ப பக்கத்துக்கு வீட்டு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்தா எப்படி இருப்பாங்க அந்த மாறி இருப்பா...

ராமன் தன் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் Asters, coral spray roses, Arabianjasmine,Salvia, dahlia, marigold, போன்ற அலங்காரங்களுக்கு உபயோகப்படுத்தும் மலர்களை வளர்த்து வருகிறார்.வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பூக்கள் பறித்து விற்பனைக்கு அனுப்பமுடியும். ஏனெனில் சிறிய இடத்தில தான் பூக்களை வளர்த்து வருகிறார்... ஆகையால் இதில் சிறு வருமானம் மட்டும் தான் அவருக்கு கிடைத்தது.

பார்வதி சற்று தைரியசாலி,புத்திகூர்மை அதிகம் உள்ளவர்.மேலும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து தன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பவர். [அறுவை தாங்க முடில கதையை ஆரம்பினு நீங்க என்ன திட்டுறது கேட்குது மக்களே; மன்னிச்சிபையிங்]

''பார்வதி வேலைக்கு நேரமாவதை உணர்ந்து தேவையான பொருட்களை எடுத்து வைக்க தொடங்கினார்..உணவுகளை டப்பாக்களில் வைத்துவிட்டு மழைக்காகிதம்,உப்பு,சுருட்டு,சிறிய கத்தி,சாக்குப்பைகள் போன்றவற்றை எடுத்து வைத்தார்..
மகளுக்கு காலை உணவையும் சேர்த்து வைத்தார்.ஏனென்றால் மலர்க்கு சாப்பிட நேரம் இருக்காது. தன்னுடைய கணவனுக்கு காலை உணவை மாரியிடம் கொடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்தார்..

ராமன் காலையில் ஐந்து மணிக்கே அதுவரை பறித்த பூக்களை எடுத்து கொண்டு பூ சந்தைக்கு சென்றுவிடுவார்.அதன்பிறகு பறிக்கும் பூக்களை மாரி எடுத்து செல்வான்.. ராமன்,பார்வதி சீக்கிரமே எழுந்து பூ பறிக்க ஆரம்பித்து விடுவார்கள்.மலர் 5.30 மணிக்கு தான் எழுவாள்.மலர் வந்ததும் பார்வதி சமைக்க போய் விடுவாள்.மீதம் இருக்கும் பூக்களை மலரும் மார்ரியும் பறிப்பார்கள்..

பனிமலர் தன்னுடைய உணவுப்பையை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினாள்.. "அம்மா எனக்கு நேரம் ஆகிருச்சு நான் கிளம்புறேன் மாரி அண்ணா வந்தா நீங்களே பாத்துகோங்க " என்று சொல்லிவிட்டு தன் உணவு பையுடன் கிளம்பிவிட்டாள்

"பாத்து சூதானமா போய்ட்டு பனி இறங்குறதுக்குள்ள வந்துடு டி, பனி காலத்துல ஓவர் டைம் எல்லாம் பாக்க வேண்டாம், என்ன புரிஞ்சுதா?" ‘’சரிம்மா’’ என்று விடை பெற்றாள் மலர்.

"ஏய்….பன்னி மலரு நில்லுடி" என்று குரல் கேக்கவே திரும்பி பார்த்து முறைத்தாள்." என்னடி முறைப்பு என்னை விட்டுட்டே போறியா போகத்தான் விட்டுருவேனா?" என்று கண்ணடித்து கொண்டே கேட்டாள் வெண்ணிலா. இவள் தான் நம்ம பனி மலரின் உயிர் தோழி.

"வெள்ள எருமை ஏண்டி என் பேரை இப்படி அசிங்க படுத்துற !"

"அத விடுடி இன்னைக்கு உங்க வீட்ல என்ன குழம்பு டி, இன்னைக்கு குழம்பு வைக்க டைம்மே இல்லடி சோறு மட்டும் தான் கொண்டாந்துருக்கேன் "
அவளை நினைத்து பனிமலருக்கு பாவமாக இருந்தது வெண்ணிலாவுக்கு பெற்றோர் கிடையாது. தம்பியும் தாய் வழி பாட்டியும் மட்டும் தான். அவளது பெற்றோர்கள் தொழிற்சாலை விபத்தில் இறந்துவிட்டனர்.

அதற்க்காக தொழிற்சாலையில் இருந்து ஒரு கணிசமான தொகை கிடைத்தது. அதை வைத்து தான் தன் தம்பி யை CIT (coimbatore institute of technology )college யில் படிக்க வைக்கிறாள்.பாட்டியின் மருந்து செலவிற்கும் தங்களின் சாப்பாட்டிற்கும் தான் வேலைக்கு செல்கிறாள்.

மலரை விட வெண்ணிலா இரண்டு வயது மூத்தவள். வீட்டில் அமைதியாக இருக்கும் நம்ம மலர் வெண்ணிலாவுடன் சேர்ந்தால் போதும் வாய் ஏழு மீட்டருக்கு நீளும்..

இருவரும் பேசிக்கொண்டே அந்த மேட்டை ஏறி முடித்தனர். வெண்ணிலா "இவனுங்க இந்த மேட்டை ஏறுறதுக்கே நமக்கு தனி சம்பளம் தர சொல்லணும்டி நீதான் உன் சூப்பர்வைசர் மச்சான் கிட்ட கொஞ்சம் ரெகமண்ட் பண்ணேன் டி".

பனிமலர் அவளை முறைத்துக்கொண்டே "கொஞ்சம் மூடிட்டு வரியா ஏற்கனவே லேட் அவன் என்ன கத்து கத்தப்போறானோ" என்று புலம்பினாள்.

ஒரு வழியா ''ஸ்ரீராம் டீ ப்ளண்டஷன்ஸ் & பேக்டரி '' கேட்டிற்குள் நுழைந்து தங்களுடைய ID கார்டை காட்டி விட்டு வேகமாக உள்ளே ஓடினர்.
பனிஉருகும்…..!!!
 
Last edited:

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi frds.....
இன்னைக்கு 1st ud போட்டுட்டேன்.... கொஞ்சம் சின்னது தான் அட்ஜஸ்ட்கரோ.....
மறக்காம படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க மக்களே..
நன்றி
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்; 2
Picture1.png
Sri Ram tea Factory

அடடே! ''வாங்க மகாராணிகளே இப்ப தான் உங்களுக்கு விடிஞ்சுதா இதுதான் வேளைக்கு வர நேரமா ...''

''உங்க இஷ்டத்துக்கு வரதுக்கு இது சத்திரம் சாவடி இல்ல சரியான நேரத்துக்கு வரதுனா வாங்க இல்லனா வராதீங்க'' இருவரிடமும் கோவமாக கேட்டான்...

நிலா ''இவனுக்கு இருக்க லொள்ள பாரேன் டி''என்று மலரிடம் கூறினாள்..அது சுரேந்தர்க்கும் கேட்டது... இருவரையும் பார்த்து பல்லைக்கடித்தான்... மலரோ ‘ஏண்டி’ என்பது போல் பாவமாக பார்த்தாள்...

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் இருவரையும் Dustroom க்கு அனுப்பினான்…

'என்னாது' என்று நெஞ்சை பிடித்துகொண்டாள் நிலா.. ஏனென்றால் Dustroom க்குள் டீ தூள்களின் கழிவுகளை அரைப்பார்கள் புழுதி கபாலம் வரை பாயும்.. அங்கிருந்த மற்றவர்கள் தங்களை பரிதாபமாக பார்த்து செல்வதை கண்டு நிலா பல்லை கடித்தாள்..

“போச்சு இன்னைக்கு பெண்டு நிமிரப்போகுது தொலைஞ்சோம் டி”…. என்றால் மலர்.

“ஏய் முதல புலம்புறத நிறுத்து டி, மேனேஜர் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணலாம். அப்ப தான் இவன் அடங்குவான்''..

“ஹே வேணாம், அவன் பாவம் விட்று டி'' என்று மலர் கூறவும். ''ஓ…ஒ..!!! அப்டியா உன் மச்சான் மேல இருக்க loves ல நீ வேணா பொறுத்து போ என்னால முடியாது'' கோவமா கூறினாள்..

“இங்க என்ன சத்தம் எல்லாரும் போய் வேலைய பாருங்க” லேடீஸ் சூப்பர்வைசர் ராதிகா அதட்டினாள்..

ராதிகாவை பார்த்தவுடன் நிலாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை அவள் சிரிப்பதை பார்த்து ராதிகா இருவரையும் முறைத்தாள்...

மலர் ''ஏண்டி நீ அவளை பார்த்து சிரிகுறதுக்கு என்ன முறைக்குறா கடன்காரி” ராதிகாவை திட்டினாள்.. இப்பொழுது நிலாவும் மலரை முறைத்தாள்.

''என்னடா இது நமக்கு வந்த சோதனை ரெண்டு பேரும் சேர்ந்து நம்பள முறைக்குறாளுங்க என்ன டிசைனோ'' மனதிற்குள் புலம்பினாள்..

பேக்டரி பெல் அடிக்கவும் அனைவரும் கலைந்து சென்றனர்.நிலாவோ 'மனதினுள் கருங்காலி பயலே தனியா சிக்காமலா போய்டுவா அன்னைக்கு வச்சுக்குறேன் கச்சேரிய' என்று கருவிக்கொண்டாள்.

வேலையை ஆரம்பித்த சற்று நேரத்திற்கெல்லாம் காலை உணவுக்கு மணி அடித்தார்கள். முதலில் பாதிபேர் சாப்பிட செல்வார்கள் அவர்கள் வந்ததும் மீதம் இருப்பவர்கள் போவார்கள்.. (வேலை நிற்காமல் நடப்பதற்காக அப்படி செய்வார்கள்..) ராதிகா நிலாவை முதலில் அனுப்பினாள்..

நிலா நிதானமாக “ஏண்டி மலர் உனக்கு பொறுப்பே இல்ல டி'' என்று மலரை திட்டினாள்..

மலரோ ''இவ ஏன் இப்ப பருப்பு இல்லையானு நம்பள கேட்குறா'' ஏதாச்சும் புரியுற மாறி சொல்றாளா பாரு என்று மனதினுள் திட்டினாள்.

“அட லூசு இன்னுமா உனக்கு புரியலை நாளைக்கு லோடு இருக்குடி…” என்று மலரிடம் சொல்லிவிட்டு ராதிகாவை மிதப்பாக ஒரு பார்வை பார்த்தாள்.. மலருக்கு இப்போதான் புரிஞ்சுது.

ராதிகாவிற்கு உள்ளுக்குள் திக் என்று இருந்தாலும் மறுபடியும் நிலாவை மட்டும் சாப்பிட போக சொன்னாள்.. ரொம்ப ஆடாத லோடு ஏத்துற அன்னைக்கு நானும் மலரும் லீவு போட்டோம் உன் கதி என்ன னு நெனச்சு பாத்தியா..

நிலா நீ ரொம்ப ஓவரா போற நான் மேனேஜர் கிட்ட உன்னை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணி விடுவேன்என்று ராதிகா நிலாவைப் பார்த்து எச்சரித்தாள்..

மலரோ இந்த காட்டு பூச்சிக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்துச்சு இவ்வளவு தைரியமா நிலாவை மிரட்டி கிட்டு இருக்காஎன்று மனதினுள் நினைத்தாள்..

ராதிகாவிற்கு ஆத்திரம் தாங்க வில்லை. ஏனெனில் அவள் பட்டது அப்படி.

போனமுறை லோடு ஏற்றுவதற்கு லேட் ஆகும் என்ற காரணத்தினால் சுரேந்தர் மலரையும் நிலவையும் ஓவர்டைம் பார்க்கச் சொன்னான். ஆனால் இவர்கள் ஓவர்டைம் பார்த்தால் வீட்டுக்கு லேட்டாக செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் டாட்டா காட்டி விட்டு சென்று விட்டார்கள்…

சுரேந்தரிடம் சொல்லாமல் ராதிகாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்… ராதிகாவும் இது எதுவும் தெரியாமல் அவர்களை கிளம்ப சொல்லி விட்டாள்… சுரேந்தர் வந்து சொன்ன பிறகுதான் அவளுக்குத் தெரியும்.…

கோபத்தில் ராதிகாவை திட்டிவிட்டான் “அவர்களை அனுப்பினாய் அல்லவா அவர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பு என்று சொல்லிவிட்டான்…” ஏனெனில் சுரேந்தர்க்கும் வேறு வழி இல்லை.


Picture2.png
அங்கு டென்சிலிங் தெரிந்தவர்கள் இவர்கள் மூவர் மட்டும்தான்...மேலும் மற்ற அனைவரும் படிக்காதவர்கள் இவர்கள் மூவர் மட்டும்தான் படித்தவர்கள்... (டென்சிலிங் என்பது டீத்தூளை தரம் வாரியாக BOP, PD, DUST, FOB, WHITE, GREEN, PREMIUM LEAF, MASALA & CHOCOLATE என பிரித்து அதன் தரத்தை கருப்பு மையினால் அச்சிடுவது.)

மேலும் எக்ஸ்போர்ட் குவாலிட்டி என்றால் ஒரு சிறு தவறு நடந்தால் கூட திருப்பி அனுப்பி விடுவர். ஆகையால் இதற்கு மட்டும் நிலாவையும் மலரையும் ஸ்பெஷலாக ட்ரெயினிங் கொடுத்துள்ளனா்..

அன்று ராதிகாவிற்கு வேலை முடியவே 11 மணி ஆகிவிட்டது இதற்குமேல் தனியாக செல்வது பாதுகாப்பு இல்லை என்று தன் கணவரை வர சொல்லி அவனுடன் சென்றாள்...

வீட்டிற்கு சென்று மாமியாரிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்… இதையெல்லாம் நினைத்துப் பார்த்த ராதிகாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை…

“இரு உன்னை இப்பவே மேனேஜர் கிட்ட சொல்றேன். ரொம்ப ஓவரா போற” என்று நிலாவிடம் சொன்னாள்… நிலாவோ அலட்சியமாக அவளைப்பார்த்து “நீ இன்னும் இந்த மேனேஜருக்கு கூஜா தூக்கும் வேலையை விடலையா… உன்னால முடிஞ்சதா பாத்துக்க.”

“மேனேஜர் என்ன எம்டி கிட்ட வேணாலும் பொய் சொல்லு நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் போ…! போ…! சீக்கிரம் போய் அவர் கிட்ட சொல்லு வீட்டுக்கு போகிற போறாரு… கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.…”

அப்பொழுது “இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா” என்ற கம்பீரமான குரல் கேட்டது எவன்டா அது என்று நிலாவும் மலரும் திரும்பி பார்த்தார்கள்..

அங்கே அவர்களை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ஸ்ரீராம்...


பனி உருகும்...!!!
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே....

வெண்பனி மலரே 2 ஆம் பதிவை பதிவிட்டு விட்டேன்.. அனைவரும் படித்து விட்டு தங்களது கருத்துக்களை பகிரவும்......
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர் ; 3

தன் முன் நிற்கும் இருவரையும் முறைத்துப் பார்த்தான்.. “ factory ல வேலை செய்ய வரீங்களா இல்லை சண்டை போட வரிங்களா அறிவு இல்லை..உங்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் சூப்பர்வைசர் எதிர்த்து பேசிட்டு இருக்கீங்க…”

நிலாவோ அமைதியாக நின்று கொண்டே இருந்தாள்..ஸ்ரீ்ராம் என்றால் எப்போதுமே நிலாவுக்கு சற்று பயமாகவே தான் இருக்கும். ஏனெனில் வேலையில் தப்பு செய்பவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டான்... உடனடியாக வேலையில் இருந்து நிறுத்தி விடுவான். அவனுடைய தண்டனைகள் எப்பொழுதும் சற்று கடுமையாக தான் இருக்கும்.

மலர் “யாருக்கு வந்த விருந்தோ” என்று நின்று கொண்டிருந்தாள்.

ஸ்ரீராமும் மலரின் முகபாவனைகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்..



அவளுடைய பயமில்லாத முகத்தை பார்த்து அவனுக்கு கோபம் வந்தது..மலரை இப்பொழுது நேரடியாக முறைத்தான்..



“ஆஹா என்னடா இது” இப்ப ஏன் என்ன முறைக்கிறான்..



“இது என்ன உங்க அப்பா வீட்டு கம்பெனின்னு நினைச்சிங்களா..”



“இல்லையே உங்க அப்பன் வீட்டு கம்பெனின்னு-ல நாங்க நினச்சுக்கிட்டு இருக்கோம்” என்று மலர் மனதினுள் கவுண்டர் கொடுக்க ஆரம்பித்தாள்..



“நீங்க வேலைக்கு வரிங்களா இல்ல விளையாடுவதற்கு வரீங்களா…. சண்டை போட்டு விளையாட என் கம்பெனி தான் கிடைச்சதா”



“பயபுள்ள எப்படி கரெக்டா கண்டு பிடிச்சான் ஒருவேளை நம்மை follow பண்ணுவானோ.. [follow பண்றியா டா chow-chow மண்டையா..]



“இன்னொரு வாட்டி இப்படி நடந்துச்சுன்னா வேலையை விட்டு தூக்கி விடுவேன் ..

“என்ன தூக்கிடுவியா..எங்க தூக்குடா பார்க்கலாம்” சும்மாவா நான் 62 கிலோ தூக்குடா..."மன்னாரு"



“Punishment ஆ இன்னும் ஒரு மாசத்துக்கு அடுப்புல நின்னு வேலை செய்யுங்க அப்ப தான் புத்தி வரும் வாயும் குறையும்.”



“உத்தரவு ஆபீசர்” என்று மனதினுள் நக்கல் அடித்தாள்...

அவனிடம் நல்ல பிள்ளைபோல் “சரிங்க சார்” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தனர்..



தன்னால்தான் மலரும் திட்டு வாங்கினால் என்று மன்னிப்பு கேட்டால் சொல்லும்போதே நிலாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது..

நிலாவின் கண்கள் கலங்குவதை பார்த்து “ஏய் இதுக்கெல்லாம் ஏண்டி அழுகுற அவன் கெடக்குறான் டி” “Small boy.

மலர் அவனை “Small boy” என்று சொன்னதைக் கேட்டுநிலா டக்கென்று சிரித்து விட்டாள்..

நிலா “உனக்கு மனசாட்சியே இல்லையா டி அவரை போயி “Small boy” னு சொல்ற அவர் அழகு என்ன கம்பீரம் என்ன” என்று மலரிடம் கூறினாள்..

“சரிடி சொல்லல வேணும்னா இப்படி சொல்லவா…” “அவன் நடந்தால் நடை அழகு, அவன் சிரித்தால் சிரிப்பழககு அவன் பேசும் தமிழ் அழகு அவன் ஒருவன் தான் அழகு !! அழகு !! அழகு என்று பாடினாள்..

நிலாவோ “ஏய்!!! நிறுத்து போதும் தெரியாம சொல்லிட்டேன்” என்று கையெடுத்து கும்பிட்டாள்...



இருவரும் சிரித்தபடியே டிரையர் மிஷின் இருக்கும்இடத்திற்கு சென்றனர்..




ராதிகா இவர்களின் சிரிப்பை பார்த்து ஏதோ அபூர்வ பிறவியை பார்ப்பது போல் பார்த்தாள்.. ஏனென்றால் அடுப்பு வேலை மிகவும் சிரமம். டீ இலைகள் வறுக்கப்பட்டு டிராப்பா் பாக்ஸில் வந்து விழுகும்.. அதை அள்ளி காய வைக்க வேண்டும். அந்த பாக்ஸில் நிற்கவே முடியாது அனலடிக்கும்.. Food products ல் ஷூ போட்டுட்டு வேலை செய்யக்கூடாது…



மேலும் ஐந்து நிமிடத்திற்குள் அள்ளி விட வேண்டும் இல்லை என்றால் dropper box ன் Heat ல் கலர் மாறி விடும்.

அடுப்பில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் ஷிப்ட் அலவன்ஸ் கொடுப்பார்கள்..





இருவரும் ஆளுக்கு ஒரு டிரையர் பாக்ஸில் நின்றுகொண்டனர்..ஏனென்றால் கீழே தூள்களை ஐந்து நிமிடத்திற்குள் அள்ளிவிடலாம்.அடுப்புக்கு மேலே ரோலிங் இல் அரைத்த இலைகளை கொண்டு வந்து போடுவதுதான் சிரமம் என்று கீழே நின்று கொண்டனர்...

அங்கே வேலை செய்து கொண்டு இருந்த வடமாநிலத்து பசங்களை மாற்ற சொல்லி அங்கு இருந்த ரோலிங் மெஷினின் சூப்பர்வைசர் ஐ கூப்பிட்டு முதலாளி சொன்னதை சொல்லவும் அவர் அந்த பசங்களை வேறு இடத்திற்கு மாற்றினார்..

மாலையில் வேலையை முடித்து விட்டு ஃபேக்டரியில் இருந்து வெளியே வந்தனர்..இருவரும் பேசியபடியே வீட்டிற்கு செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தனர்....

அப்பொழுது புல்லட் சவுண்ட் கேட்கவும் மலர் நிலாவின் கைகளை பிடித்துக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள்...

புல்லட்டில் வந்தவனும் வேகமாக அவர்களுக்குமுன்னால் பாதையை மறைத்தபடி புல்லட்டை நிறுத்தினான்....

புல்லட்டில் இருந்து இறங்கியவன் மலரின் கழுத்தில் கைவைத்து நெருக்கினான்…”எங்கடி ஓடுற தினமும் என்ன பாக்காம போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கனா இல்லையா” என்று உறுமினான்...

திரும்பி நிலாவைப் பார்த்து முறைக்கவும் நிலா பயந்துபோய் ஓடிவிட்டாள்… மேலும்அங்கே நின்றால் அவளுக்கும் இரண்டடி கொடுப்பான் என்பது நிச்சயம்..

மலர் மூச்சு விட சிரமப் படுவதை கண்டு கையை தளர்த்தினான்… ”ஏண்டி என்ன இப்படி சித்திரவதை பண்ற புரிஞ்சிக்கோ டி”

மலர் கலங்கிய கண்களுடன் அவனை பார்க்கவும் இழுத்து அணைத்துக் கொண்டான் கௌதமன்…

பனி உருகும்!!!
 
Last edited:

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi frds....
அடுத்த ud போட்டாச்சு தோழிகளே ..படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்....
நன்றி !!!!
 
Last edited:

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Guys...
Factory பத்தி சொல்றது உங்களுக்கு bore அடிக்குதா.... புடிக்கலைனா ப்ளீஸ் சொல்லுங்க நான் மாத்திக்கிறேன்.... கமெண்ட்ஸ் ல சொல்லுங்க ...
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர் ; 4


“ஏண்டி என்னை இப்படி சித்தரவதை பண்ற புரிஞ்சுக்கோ டி…” மலர் கலங்கிய கண்களுடன் பார்க்கவும் இழுத்து அணைத்துக் கொண்டான் கௌதமன்.


மலர் அவன் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள்...அவள் விலக முயற்சிப்பதைக் கண்டு கௌதமனின் பிடி இறுகியது…

”என்ன பண்றீங்க விடுங்க என்னை யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க…”

கௌதமோ “யார் என்ன நெனச்சா எனக்கு என்ன வந்தது மேலும் என்னை பற்றி தவறாக நினைப்பதற்கு இந்த ஊர்ல எவனுக்கு தைரியம் இருக்கு.”

“ஐயோ என்ன விடுங்க முதல்ல” என்று கோபமாகக் கூறினாள்... “ஏய் என்னடி சவுண்டா பேசினா பயந்துடுவோமா…”

“எனக்கு தான் உங்கள புடிக்கலைன்னு சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு மறுபடியும் மறுபடியும் என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்கீங்க..”

“நானும் முன்னாடியே சொல்லிட்டேன் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு என்ன பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை…”

“இப்படி சொன்ன அவனை நிமிர்ந்து பார்த்தாள்....அழகும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் கௌதமன்...ஒட்டுமொத்த கோபத்தையும் குத்தகைக்கு எடுத்தவன் எந்நேரமும் ரௌத்திரம் நிறைந்தவனாக இருப்பவன்...

மலர் தன்னை பார்ப்பதை கண்டு “சைட் அடித்தது போதும்டி பதில் சொல்லு..”

“இவன் கிட்ட இப்படி பேசினா வேலைக்காகாது” என்று மனதுக்குள் நினைத்தாள்..



“நான் எங்க மாமா சுரேந்தர் அதான் விரும்புறேன் அவரதான் கட்டிப்பேன் அதுவுமில்லாம “அம்மா” என்று கெளதம் அடித்த அடியில் கீழே விழுந்தாள்…”
கீழே கிடந்தவளின் முடியை பிடித்து தூக்கி நிறுத்தினான்..


“எவ்வளவு தைரியம் இருந்தா கொஞ்சம் கூட பயமே இல்லாம அது என்கிட்டயே அவனை விரும்புறேன்னு சொல்லற.…”


“உனக்கு கொழுப்பு ஏறி போச்சு டி” என்று மறுபடியும் ஒரு அறை விட்டான்...மலர் அடி தாங்காமல்மயங்கி விட்டாள்..

நிலா மலர் மயங்கவும் வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தாள்....
மரத்தின் பின்னால் நின்று கொண்டு இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்..

மலர் அடி வாங்குவதை பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாமல் பார்த்தாள்…

ஏனெனில் மலரின் சார்பாக நிலா பேசினால் மலருக்கு தான் இன்னும் அடி விழும்.. முரடன்” மலருக்கும் அவனுக்கும் நடுவில் யார் வருவதையும் விரும்ப மாட்டான்...

கௌதமோ மலர் மயங்கியது கூட தெரியாமல் அவளை திட்டி கொண்டு இருந்தான்...


“ஏய் மலர் எழுந்திரு” என்று கேட்ட நிலாவின் குரலில்தான் திரும்பி பார்த்தான்...வேகமாக அவர்களை நெருங்கியவன் மலரின் பையிலிருந்த தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்தான்..



மலர் கண் விழிக்கவும் வேகமாக நிலாவிடம் இருந்து மலரை பிரித்தெடுத்தவன் அவள் முகத்தை நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டான்....



அவள் மயங்கியதை கண்டு உள்ளுக்குள் துடித்தாலும் அவனால் அவளை மன்னிக்க முடியவில்லை…அவள் இன்னொருவனை விரும்புகிறேன் என்று சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை....


மலருக்குகோபம் தாங்கவில்லை எப்படி இவன் என்னை அடிக்கலாம் இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.அவனிடமும் கேட்க வேறு செய்தாள்…

“என்னை எதுக்கு இப்ப அடிச்சிங்க உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது..…”மலர் தன்னை கேள்வி கேட்கவும் “ருத்ர மூர்த்தியாக அவளை நிமிர்ந்து பார்த்தான்…”

“ஏய் வாங்குனது பத்தாதடி உனக்கு இன்னும் ரெண்டு போட்டாதான் அடங்கு வியா…”

“இன்னொரு வாட்டி இந்த மாதிரி தத்துபித்துன்னு ஏதாவது உளறுனா வாய் மேலே இரண்டு போட்டுருவேன் ஜாக்கிரதை.…”அதற்கு மலர் ஏதோ சொல்ல வரவும் வாய் மேலே ஒன்று வைத்தான்…”

“இனி என்னோட கை உரிமையா தாண்டி உன் மேல படும் என்ன உரிமைனா கேட்ட கூடிய சீக்கிரம் காட்டுறேண்டி எனக்கு என்ன உரிமைனு” என்று சொன்னவன் அவளை திரும்பியும் பாராமல் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்..

மலர் அவன் சென்ற பாதையை பார்ப்பதைக் கண்டு “உன் சண்டியரை பார்த்து ரசிச்சது போதும் எழுந்து வாடி நேரமாச்சு..” என்று நிலா கூறவும் அவளை முறைத்து பார்த்தாள்..



“ஏண்டி அவன் என்ன அடிச்சுட்டு போறான் கொஞ்சமாச்சும் பீல் பண்றியா நீ பாட்டுக்கு ஒன்னுமே நடக்காத மாதிரி வா போலாம் ன்னு கூப்பிடுற…”

“என்னமோ இப்பதான் புதுசா அடி வாங்குற மாதிரி பில்டப் கொடுக்கிற எனக்கு தெரிஞ்சு மூணு வருஷமா இது தான் நடக்குது அடச்சீ எழுந்து வாடி…” என்று மலரை கைகொடுத்து தூக்கி விட்டாள்

“எப்போதும் அமைதியாகவே இருப்ப இன்னைக்கு ஏண்டி அவன் கிட்ட பதிலுக்கு பதில் பேசிகிட்டு இருந்த.…”

“எல்லாதுக்கும் ஒரு எல்லை உண்டு நிலா இன்னும் எவ்வளவு நாள்தான் அமைதியாகவே இருக்கிறது திடீர்னு இன்னைக்கு வீட்டுக்கு வந்து பேசுறேன்னு சொல்றாண்டி..”

“இவன் வந்து பேசினால் உடனே எங்க அம்மா சும்மா இருக்கும்னு நினைக்குறியா சாமி ஆடிடும்...இவன் கிட்ட அடி வாங்குறது பத்தாதுன்னு எங்க அம்மாகிட்டயும் அடி வாங்க சொல்றியா டி…”அதான் “எங்க மாமாவை நான் விரும்புறேன் அவர தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவன் கிட்ட சொன்னேன் டி.…”

“என்னது சுரேந்திர விரும்புறேன்னு சொன்னியா உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அறிவு கெட்டவளே அவன் சும்மாவே ஆடுவான் இப்ப நீ சலங்கையை வேற கட்டிவிட்டு இருக்க இன்னும் என்னெல்லாம் பண்ண போறானோ…”

“என்ன வேற என்ன தாண்டி பண்ண சொல்ற” என்று பாவமாக கேட்டாள்..


“எனக்கு உன் நிலைமை புரியுது மலர்..இப்ப நீ சுரேந்திர விரும்புகிறேன் என்று சொன்னதும் அவன் உன்னை சும்மா விட்ருவான்னு நீ நினைக்கிறாயா வாய்ப்பே இல்லை. இந்நேரத்துக்கு என்ன பண்ணி உன்ன கல்யாணம் பண்ணலாம்னு முடிவே பண்ணி இருப்பான்…”

“இப்ப நீ அவன் கிட்ட இப்படி பேசுனது சரி இல்ல மலர்” என்று சொல்லிவிட்டு மௌனமாகி விட்டாள்



அங்கு கௌதமோ மலரின் மேல் உள்ள கோபத்தை வேலையாட்களிடம் காட்டிக் கொண்டிருந்தான். அனைவரும் அவனின் ரௌத்திரத்தை கண்டு அஞ்சினா்…



கௌதம் இயல்பிலேயே சற்று முன் கோபக்காரன் வாய்ப் பேச்சை விட கை தான் அதிகமாகப் பேசும்...தனக்கு இது வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை சாதிக்காமல் விடமாட்டான்…

அவனுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே கோபம்தான்...
அவன் வீட்டிற்குள் நுழைந்த வேகத்தை கண்டு வீட்டில் இருந்த அனைவரும் அவரவர் அறைக்குள் அடைந்து கொண்டனர்…



தன் தந்தை அங்கே உட்கார்ந்து இருப்பதை பார்த்து முறைத்தவன் வந்த வேகத்திலேயே வெளியே வந்து விட்டான்.…முருகானந்தம் மற்றும் கௌரியின் மூத்த பையன் தான் கௌதமன்.…



முருகானந்தம் அந்த ஊரில் மிகுந்த செல்வாக்கும் தான் என்ற கர்வமும் சற்று அதிகம் உடையவர்...கௌதமின் தாய் கணவர் சொல் தட்டாத மனைவி மகனுக்காக உயிரை கையில் பிடித்து வைத்து இருப்பவர்....



கௌதமின் பன்னிரண்டாவது வயதில் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்ததினால் கௌரிக்கு இடுப்பு எலும்பு உடைந்து விட்டது .ஆகையால் படுத்த படுக்கையாகி விட்டார்..
 
Last edited:
Status
Not open for further replies.
Top