All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நிலா ஶ்ரீதரின் "எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" - கதை திரி
- Status
-
Not open for further replies.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 19
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
"எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
www.srikalatamilnovel.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 20
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் பர்ண்ட்ஸ்..
"எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
www.srikalatamilnovel.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 21
ஹலோ ப்ரண்ட்ஸ்,
சிபி பேன்ஸ் எல்லாம் திட்டுறது சத்தமா கேக்குது. வேற வழியில்ல.. தொடர்ந்து கதையை படியுங்கள், அனைத்திற்கும் விடை கிடைக்கும்.. உங்கள் கருத்துக்களை மறக்காம கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
"எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
www.srikalatamilnovel.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 22
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்
"எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
www.srikalatamilnovel.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 23
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
"எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
www.srikalatamilnovel.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 24
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்
"எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
www.srikalatamilnovel.com
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 25
வாழ்க்கையின் ஏற்ற, தாழ்வுகளை தலைக்கும் ஏற்றாது, மனதையும் வருத்தி கொள்ளாது இன்முகத்துடன் கடந்துவிட்டால் போதும், நமக்கு உண்டான பலன் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும்..
சுபம்...
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே,
இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கவிருக்கும் 48வது சென்னை புத்தக கண்காட்சியில் இணையத்தில் வெளிவராத என்னுடைய புது கதை 'உன்னில் சரணடைந்தேன்' புத்தகமாக வெளிவர உள்ளது.
புத்தகம் அருண் பதிப்பகத்தின் வாயிலாக வெளி வருகிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படித்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
ARUN PATHIPPAGAM
48TH CHENNAI BOOKFAIR
STALL NO 411,412
5th ROW
இந்நேரத்தில் எப்போதும் போல் இக்கதைக்கும் உடனிருந்த என் அம்மாவிற்கு அன்பு முத்தங்களோடு நன்றி தெரிவிப்பதோடு கதையின் டீசரை கீழே பகிர்கிறேன்.
உன்னில் சரண்டைந்தேன் - டீசர்
அங்கிருந்த கிளாஸ் ரயிலில்(Glass Rail) கைபிடித்து நின்று அந்த வணிக வளாகம் முழுவதையும் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான் சரண். ஆங்காங்கே தத்தம் துணையோடு வந்து காதல் செய்துக் கொண்டிருக்கும் காதலர்களாலும், பை பையாக வாங்கி குவிக்கும் ஆடவர்களாலும் பெண்களாலும், வீட்டில் அடைந்திருக்க பிடிக்காமல் இங்கே குடும்பத்தையே அழைத்து வந்து விண்டோ ஷாப்பிங் என்ற பெயரில் பொழுதை கழித்து கொண்டிருப்பவர்களாலும் அந்த வணிக வளாகம் நிரம்பி வழிந்தது.
அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே பார்வையிட்டு கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது அவனுக்கு நேர் எதிரில் இருந்த லெஹங்கா, சோளி போன்ற ஆடைகளை விற்பனை செய்யும் பெண்கள் ஆடையகம். அதிலும் அவன் கண்கள் நிலைகுத்தி நின்றது அவளிடத்தில்.
ஐந்தரை அடிக்கும் மேல் உயரம் இருப்பாள். நீல நிற ஜூன்ஸும், மின்ட் க்ரீன் நிற க்ராப் டாப்ஸும் அணிந்திருந்தாள். காலில் வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸ் அணிந்திருந்தாள். அது தவிர கழுத்து, கை, காது என எங்கும் பொட்டு நகையும் இல்லை. நெற்றியிலும் பொட்டு இல்லையா, இல்லை தூரத்தில் இருந்து இவனுக்கு தெரியவில்லையா என்று தெரியவில்லை. நவ நாகரீக யுவதியாகவே இருந்தாள் அவள்.
லெஹங்காவை அவள் இடுப்பை சுற்றி பின்(Pin) செய்த பணிப்பெண், நெட் துப்பட்டாவை எடுத்து அவள் இடையில் சொருகி மார்பின் மீது போட்டு கண்ணாடியில் காண்பிக்க, இவளோ தேவதை போல் மிளிர்ந்தாள்.
அவளை இவன் இமைக்க மறந்து ரசித்திருக்க, அவள் தன்னை ஒரு சுற்று சுற்றிய போது அவளோடு சேர்ந்து இவன் மனமும் அவள் பின்னால் சுற்றியது.
அதிலும் நடிகைகள் பெரும்பாலும் விரும்பும் சைஸ் ஜீரோ என்னும் சைஸிலேயே அவளிருக்க, அவளிடையில் இருந்த லெஹங்கா எங்கே கீழே நழுவி விடுமோ என்னும் அளவிற்கு அவள் இடை மிகவும் மெல்லியதாக இருந்தது. அவள் தன்னை தானே சுற்றிய போது அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது இயற்கையாக அவளுக்கு இருக்கும் சுருட்டை முடி. அது சுருள் சுருளாக அவள் தோள்களில் விளையாடி கொண்டிருந்தது.
சிறு வயதிலிருந்தே சரண் மிகவும் பொறுப்பானவன். பெண்பிள்ளையோடு பிறந்தவன் என்பதால் பெண்கள் விசயத்தில் கண்ணியம் காப்பவன். இன்றோ யாரென்று தெரியாத ஒரு பெண்ணை வைத்த கண் வாங்காமல் தான் பார்த்திருந்தான். அதோடு அவளுடன் சேர்ந்து டூயட் எல்லாம் பாடும் அளவிற்கு தான் காதலில் முன்னேறி இருந்தான்.
ஆம், காதலென்றே தெரியாத காதல் வயப்பட்டுவிட்டான் அந்த ஆறேகால் அடி உயிரம் கொண்ட இருப்பத்தைந்து வயது நடந்து கொண்டிருக்கும் ஆண்மகன்.
“காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை.. உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்..” என்று பாடி எதிரிலிருப்பவளை எண்ணி மனதில் மழை காலம் கொண்டாடி கொண்டிருக்க, கனவு கலைந்து கண்களை திறந்து பார்த்தால் எதிர் கடையில் இருந்தவளை காணவில்லை.
இவன் முழு பாடலையும் கனவு கண்டு முடிப்பதற்குள் அவர்களோ எடுத்த துணிமணிகளுக்கு பில்லை போட்டு பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
அவளை காணவில்லை என்பதில் பதறிவிட்டவன் அத்தளம் முழுவதும் ஒரு இடம் விடாமல் தேடினான். அவள் கிடைத்தாற்பாடில்லை. பின் மற்ற தளங்களிலும் தேடினான். அங்கும் அவளில்லை.
அதற்குள் எங்கு போய்விட்டாள் என்று விடாமல் அவனும் தேட அவனது அலைபேசி தொல்லைபேசியாக அலறியது. எடுத்து பார்த்தால் அவனது நண்பன் வினோத் தான் அழைத்திருந்தான். அழைப்பை துண்டித்து விட்டு தன் தேடுதலை தொடர, அவன் நண்பனும் விடாமல் அழைத்து தொல்லை செய்தான்.
அழைப்பை ஏற்று “வரேன்டா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.
நேராக நண்பர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்கு சென்றவன், அவளை எதிர்கடையில் பார்த்ததை பற்றி ஆர்வமாக நண்பர்களிடம் பகிர்ந்தான்.
அதை கேட்ட வினோத் “மச்சான்.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. நீ ஒரு பாட்டுக்கு டூயட் பாடி முடிக்கிறதுக்குள்ள டிரஸ் செலக்ட் பண்ணிட்டு கிளம்பிட்டாங்கனு சொல்ற.. இப்படி ஒரு விஷயம் பொண்ணுங்க லைஃப்ல நடக்க வாய்ப்பே இல்ல” என்று சிரித்து வைத்து கமலியின் முறைப்பை வாங்கிய வினோத், சரணும் முறைப்பதை பொருட்படுத்தாது,
“செகண்ட்... அவ ஒருவேளை உனக்கு அக்காவா இருந்தா?” என்றும் கேட்டு வைத்தான்.
அதில் கடுப்பான சரண் “டேய் கடுப்பு காண்டமிருகம்.. நல்ல வார்த்தையே பேச மாட்டீயாடா” என்றவனுக்கு எரிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் கண்களாலேயே நண்பனை பொசுக்கி இருப்பான்.
“சரி.. சுபச் செய்தியே சொல்றேன்.. அவ லெஹங்கா எடுத்தானு சொல்ற.. அவ ஏன் லெஹங்கா எடுக்க போறா.. ஏன்னா அவளுக்கு கல்யாணம்.. பொண்ணுங்க அதுக்கு தானே அந்த டிரஸ் எடுப்பாங்க.. அதனால மனசை போட்டு குழப்பாம கிளம்புடா” என்று துளிர்விட்ட சரணது காதலை வேரிலேயே பிய்த்தெறிந்து போட்டான் அவனது நண்பன் வினோத்.
வினோத் சொன்னதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் வாழ்க்கையில் நிதர்சனங்களோடே பயணப்பட்டவனுக்கு, ஆம் அவள் யாருக்கோ நிச்சயிக்கப்பட்டவளாகவும் இருக்க கூடும் என்ற உண்மை உறைக்க தான் செய்தது.
இருப்பினும் அவன் மனம் அவளை விட மனமில்லாமல் தவிக்க, தன் நெஞ்சை நீவி விட்டவன், தன்னை சமாதானம் செய்ய தன் கைப்பிடித்த தோழி கமலியின் தலையை வருடி கொடுத்து “அவ எனக்கானவளா இருந்தா கண்டிப்பா நான் அவளை திரும்ப பார்ப்பேன்” என்று சிறுமுறுவலோடு அழுத்தமான குரலில் இருவரையும் பார்த்துச் சொன்னான் சரண்.
உண்மையில் அவள் யாரென்று அறியும் நாளில் அவன் மனதில் அவளுக்கான அதே காதல் இருக்குமா? சரண் சரணடைவானா? இல்லை அவள் தான் சரணை அடைவாளா?
நன்றி,
நிலா ஶ்ரீதர்✍
- Status
-
Not open for further replies.