Hi everybody......
நாங்க chitchat la ஜெனரல் பேசிட்டு இருக்கும் போது(உடனே சீரியஸ் modeகு போயிராதீங்க.. வெட்டி அரட்டை தாங்க அடிச்சிட்ருந்தோம்) ஒரு டாபிக் வந்தது..... அது என்னான்னா....
அத சொல்ல முன்னாடி ஒரு ரம்பம் போடலாம்
நாளைய சமுதாயம் அப்டீன்னு சொன்னாலே நமக்கு ஞாபகம் வாரது
வளர்ந்து வர்ர சின்ன சிட்டுகள் தான்
View attachment 8985
ஆமா.. அவங்களும் நாளை உலகை ஆளப்போறவங்கள்ள...? அதுக்கு நம்மளோட சரியான வழிநடத்தல் ரொம்ப அவசியம் அதுக்காக எங்களால முடிஞ்ச அளவு ஒரு social service....
நாளை என்பது நிச்சயமில்லைதான் ஆனா அதுக்காக யாரும் எதுவும் பண்ணாமலா இருக்கோம்? Future future nu ஓடி ஏதாவது பண்ணிட்டு தானே இருக்கோம்...
அதுனால அதாகப்பட்டது மகாஜனங்களே,
சட்டுனு நாங்களும் ஏதாவது பண்ணலாம்னு இல்லாத மூளைய இருக்குறதா காட்டி..... ஒரு idea பண்ணிருக்கோம்
ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்துல ஏதாவது ஒரு theme select பண்ணுவோம்
அந்த கருப்பொருளின் அடிப்படையில் அடிப்படையில் அடுத்த மாதத்துல ஒரு விவாதம் நடக்கும்... அந்த விவாததுக்கு நாங்க ஆறு பேர tag பண்ணுவோம் (உங்களோட விருப்புக்களை கேட்டு தான் பண்ணுவோம்)
இதுல கலந்துக்க விருப்பமானவங்களையும் சேர்த்துப்போம்
முதல்ல நாங்க எடுத்திருக்குர theme பத்தி நாங்களே சின்ன போஸ்ட் போடுவோம் அப்றோம் நாங்க tag பண்ண 6பேரும்.... Negative ஆவும் positive நீங்க விவாதிக்கலாம் அப்றோம் அவங்க கருத்து விவாதம் முடிந்ததும் tag பண்ணாதவங்களும் (audience) அவங்க கருத்த சொல்லலாம் (தயவு செஞ்சு இடைல சொல்லப்படாது)
சரி வாங்க மேட்டருக்கு வரலாம்
"இன்றைய இளம் தலைமுறை நாளைய சமுதாயம்..."
இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு யார் காரணம்??? பெற்றோரா ??? சமூகமா??? நட்பு வட்டமா????
இந்த முதிர்ச்சி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதா??? ஏற்புடையதா???? ஏற்புடையது அன்றா????
இன்றைய கல்வி சூழல் மாணவர்களுக்கு போதிப்பது என்ன???
இப்படி எல்லாம் எங்களுள் நெறைய கேள்விகள் ....... அதனால் இதனை இந்த மாதத்திற்கான கருத்து விவாதமாக முன் வைத்து உங்களோட கோணத்துல இருந்து அறியலாம்னு யோசிச்சிருக்கோம்......
விவாதம் பற்றி.......
#Topic
>இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய மன முதிர்ச்சிக்கு யார் காரணம்??? பெற்றோரா ??? சமூகமா???
இத்தகைய அவர்களது மன முதிர்ச்சி இந்த காலகட்டத்துக்கு அவசியமானதா..??
View attachment 8986
#Instructions
>Rule 1 : விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் யார் மனதையும் புண்படும் படி பேசிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது இது சாதாரண கருத்து விவாதம் தான்
உங்களது கருத்துக்கள் அல்லது வாதங்கள் யாரையும் நேரடியாகவோ அல்லது உள்ளர்ந்தோ தாக்குவதாக இருக்காது பார்த்து கொள்ளுங்கள்
யாருடைய தனிப்பட்ட விஷயங்ளையும் கருத்து விவாதத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்
>Rule 2 : இங்கு அரசியல் கருத்து கொண்டு பேச வேண்டாம்
>Rule 3 : ஆங்கிலம் தவிர்த்து முடிந்த வரை முழுதும் தமிழில் பேச பாருங்கள் நீங்கள் சொல்லும் கருத்து அல்லது விவாத பொருள் அனைத்து மக்களையும் சேர போகிறது அதனால் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருப்பது அவசியம்
இவ்ளோத்தயும் படிச்சிட்டு உங்களுக்கு மிகப்பெரிய கேள்வி வந்துருக்கனும்(அய்யயோ வரல்லயா)
சரி நாங்களே அதயும் சொல்லிருரோம்..
இதெல்லாம் யாருடா பண்றதுன்னு..
அதாங்க எல்லா ஊர்லயும் நாளு பேரு இருப்பாங்கல்ல... அந்த நாளுபேரு தான்...
இப்படிக்கு,
#கிருதிஷா...