அன்பின் மொழியாள்
EPILOGUE
அவள் எடுத்து சென்ற கோப்பையில் பிழை உள்ளது என்று விசிறி அடித்தான்.... அவள் இடத்திற்கு அமைதியாக வந்து உட்கார்ந்தாள் பவ்வியா..... வழக்கம்போல வேதாளம் வேதாளம் என்று திட்டி., தமிழில் சிலபல நல்ல வார்த்தைகளை பேசிவிட்டு தலைக்கு மேலுள்ள கேமராவைப் பார்த்து பழிப்பு காட்டினாள்......
மலர்ந்து சிரித்த விக்ரமன்....... என் செல்ல பப்பிகுட்டி...,
வீடு வந்து சேரும் வரை எந்த வார்த்தையும் பேசவில்லை..... வீட்டினுள் நுழைந்தவுடன் அவன் தோப்புக்கரணம் போட ஆரம்பித்துவிட்டான்.....
இதுவே சமாதானம் படுத்தும் முறை
பின் அருகில் உள்ள ஊஞ்சலில் அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான்......
வழக்கம்போல் பவ்வியா ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்....
இவன் கவனம் அவள் பேச்சில் இல்லை ஆனால் அவள் குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது....,..
நிறைய விருதுகள் வாங்கி விட்டான் அவையெல்லாம் ஒரு ஓரமாக தான் இருக்கும்....... இவன் கண்ணில் படும்படி இருப்பது இவர்களின் குடும்பப்படம் தான்...... அதுவே அவனுக்கு மகிழ்ச்சி....,
ரவி...
எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் ஒருமுறை வந்து பார்த்து விடுவான்...... இவன் நட்பு என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.....
இவர்கள் அனைவரையும் நினைத்து கண்கள் தானாக கலங்கியது அவனுக்கு... என்ன மாதிரியான அன்பு இது..... இவர்களுக்காக எதுவும் செய்யலாம்.......... கலங்கிய கண்கள் அதை உடனே கவனித்து விட்டாள்..... நம் நாயகி
ரொம்ப நன்றி பப்பி மா..... நீ கூட இல்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் கூட எனக்கு தெரியல...... நான் கேட்காமலே எனக்கு தந்திருக்க உன்னோட தூய்மையான அன்பை அந்த அக்கறை...,. அது ஒன்றுதான் என்னை இந்த அளவுக்கு வேகமா உழைக்கவைத்தது..,... அந்த விபத்து நடந்த பிறகு எல்லாரும் என்னை பரிதாபமாக பார்த்தாலும்..... உன் கண்ணில் மட்டும் இன்னைக்கு அன்பு மட்டும்தான் பாத்திருக்கேன்......
உன்னை ராணி மாதிரி வச்சுக்கணும்.... அதுக்கு நான் ராஜாவா இருக்கணும்....... உன் கட்டளைகளை நிறைவேற்ற ராஜாவா.....
இது மட்டுமே என்னோட குறிக்கோள்..... அவன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தான்....
என்ன ஆச்சு பப்பி மா நான் எப்பயும் பேசினா ஏதாவது சொல்லுவ.... இன்னிக்கு ஒண்ணும் சொல்ல ..... என்று விக்ரம் கூறினான்
பவி சிரித்துக்கொண்டே என் காது கேட்காது என்றாள்
காதில் வைத்திருக்கும் பஞ்சை தூக்கி எறிந்தாள்..... மலர்ந்து சிரித்த அவள் மீது பொய்யாக கூட கோபம் கொள்ள முடியவில்லை......
இவர்களின் செல்ல சேட்டைகளும்..... தூய்மையான அன்பு மட்டும் நிலைத்திருக்கும் அவர்களின் அன்பகம் இல்லத்தில்......
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்
அன்பின் மொழியாள்