All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ஸ்ஸ் யார் அது .... இருளும் உன்மையும் !!

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
!! 5 !!

கோவிலுக்கு வர சொல்லிடு போறாங்க அண்ணா, நாம வெள்ளிகிழமை போல போகணும்.இப்போ தம்பி கூட யாரவது இருக்க சொல்லி இருக்காங்க என தேவி சொல்லிக்கிட்டு இருக்கும் போதே இனியன் அம்மா...ஆ ஆ.... என அலறினான்,

அவனின் அலறல் சத்தம் கேட்டு கீழே நின்னு பேசி கொண்டு இருந்த அனைவரும் மேலே இருந்த அறைக்கு சென்று பார்க்க அங்க இனியன் அமைதியாக உறங்கி கொண்டு இருந்தான்

இனியா பயத்தில் தந்தையின் கைய்யே பற்றி கொண்டாள் , ராஜிக்கு மனதுக்குள் பயம் இருந்தாலும் அதை வெளிகாட்டிகொள்ளமல், இப்போ என்ன ஆச்சுண்ணு இப்பிடி பயந்து சாகனும் அதான் வெள்ளிகிழமை வர சொல்லி இருக்காங்கள்ள பார்ப்போம் என்ன சொல்லுராங்கன்னு, அவங்க அவங்க வேலையே போய் பாருங்க இப்போ .. என சொல்லிவிட்டு சென்று விட

சந்திரன் அதே இடத்தில சரிந்து அமர்ந்துவிட்டார்.. வருடங்கள் கழித்து தான் செய்த தவறு அவர் கண் முன்னே பேய் ஆட்டம் ஆடியது, இதோ இனியன் வடிவில் , இளமை காலத்தில் தவறாக தெரியாத ஒன்று இப்போது விஸ்வரூபம் எடுத்து இருப்பது அவரை போட்டு உலுக்கியது,

அமர்ந்து இருந்த சந்திரன் நிலையே பார்த்து , அவர் அருகில் சென்று, " அப்பா, எல்லாம் சரி ஆகிவிடும் அப்பா ,, நீங்க யோசிக்காதிஙகப்பா எல்லாம் சரி ஆகிடும் , என இனியா சொல்ல

சந்திரன் மனமோ இனி ஏதும் சரி அக போவதில்லை இல்லை என்று அடித்து சொன்னது .

*************

போகாத போகாத சந்துரு , என்ன விட்டு போகாத நீ இல்லாம என் நால உயிரோடு இருக்க முடியாது...நம்ம குழந்தை அநாதை ஆகிடும் சந்துரு.. போகாத என அவள் அலறியே படி எழுந்திரிக்க , அவளின் அலறல் சத்தத்தில் அவனும் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான் வசு என்ன ஆச்சு டி இங்க பாரு கண்ணை முழிச்சு பாரு ம்மா வசு என அவளை போட்டு உலுக்க , ஆனால் பதில் சொல்ல வேண்டியவளுக்கோ விழிகள் எல்லாம் மேல் ஏறி மூச்சு திணறல் விட்டது , அவளின் நிலையே பார்த்த ராகவன் அவளுக்கு அவசரமாக மயக்கம் மறந்து ஊசியே போட்டான் , சற்று நேரத்தில் மருந்தின் வேகத்தால் வசு அவன் கையில் அப்பிடியே மயங்கி சரியே அவளை அப்படியே அள்ளி தன் மடியில் போட்டுவிட்டு அவள் தலை மெல்ல வருடி விட்டான் ,வருடி கொண்டு இருந்தவனின் எண்ணங்களோ இரண்டு மாதம் இருந்த வசுவிர்க்கும் இப்போ இருக்கும் வசுவின் நிலையே ஒப்பிட்டு பார்த்தது, தன்னோடு ஒன்றாக மருத்துவம் பயின்றவன் உயிர் தோழனின் திருமணத்திற்காக மொரிசியசில் இருந்து வசுவுடன் கரூர் வந்தது தான் அவன் செய்த முதல் தவறு என்று இந்த இரண்டு மாதங்களில் அவன் என்னாத நாளே இல்லை.. அங்கே இருந்து திரும்பி வந்த உடன் தான் வசுவின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள் , எதையோ பரி கொடுத்தவள் போல் அமர்ந்து இருப்பாள் , அவனை அந்நியரை போல் பார்த்து வைப்பது ,இப்படி ஜாமம் கடந்து அலறி எழுவது,வாடிக்கையாய் வைக்க ஆரம்பித்தாள் , முதலில் எதோ கனவு கண்டு தான் இப்பிடி இருக்கிறாள் என்று ராகவ் எண்ணினான் ஆனால் நாள் செல்ல செல்ல அவளில் ஆர்ப்பாட்டம் சற்று அதிகம் ஆகிவிடவே அவனும் குழம்பி பயந்து போய்விட்டான் , என்னவானது இவளுக்கு என்று மனோதத்துவ நிபுணரிடம் காண்பிக்க ,அவளின் எல்லாம் ரிபோர்ட்ஸ் நோர்மல் என்றே வந்தது , அதை பார்த்த ராகவ் மற்றும் மற்றோரு டாக்டரும் , மேலும் குழம்பி விட்டனர் , பிறகு அவர் ராகவ் இடம் , "எனக்கு என்னமோ சரியா படல ராகவா நீ அவள ஏன் சர்ச் ,இல்லை உங்க கோவிலுக்கு அழைச்சுட்டு போக கூடாது என சொல்ல

அவரை கோபமாய் முறைதான் ராகவன், ஆர் யூ கோன் மேட் , எந்த காலத்துல வந்து என்ன பேசுற , என் வைப்க்கு பேய் பிடிச்சு இருக்குன்னு சொல்ல வரியா , இது என்ன சினிமாவா , ஒரு டாக்டர் மாதிரி பேசு என அவர திட்ட

அவரோ அசராமல் , எந்த காலமா இருந்தா என்ன பேய் பேய் தான் ராகவா , நீ வேணும்னா செக் பண்ணி பாரேன் நான் சொன்னதுல என்ன தப்புண்ணு இருக்குனு அவர் சவால் விட

ராகவ் , அவரை மீண்டும் நன்றாக முறைத்து விட்டு வேகமாக தன் மனைவியே அழைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி , விட்டான் நாள் ஆக ஆக தான் வசுவின் நிலைமையும் இன்னும் மோசமாய் ஆனாது இரவில் அலறியே படி வீட்டைவிட்டு ஓடுவது , தன்னை தானே எதையாவுது எடுத்து அடித்து கொள்ளுவது , இரண்டு முறை தற்கொல்லைக்கு முயன்று விட்டாள் ,இதை எல்லாம் பார்த்த பிறகு ராகவ் மேலும் அரண்டு போய்விட்டான் , அவனுக்குமே அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை , மீண்டும் அவளை அழைத்து கொண்டு அதே டாக்டரிடம் காண்பிக்க அவரோ அவனை கவலையுடன் தான் பார்த்தார் , நான் சொன்னது உனக்கு புரியவில்லையா என்ன பண்ணி வச்சு இருக்க நீ இவளோட நிலைமையே பார்த்துமா உனக்கு நன்பிக்கை வரல , இஸ் டூ ஹோர்ரிப்ல் ராகவ் ,ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் மீ, என அவர் அவனுக்கு புரியே வைக்க முயல

ஒரு முடிவுடன் , ராகவன் அவரை பார்த்து , நம்புறேன் ஆர்வி , ப்ளீஸ் ஹெல்ப் மீ எப்பிடி இத சரி பண்ணுவேன்.

அவனின் தவிப்பில் ,இவரும் கலங்கிதான் போனார் , ஓகே ராகவ் நாளைக்கு இவள நாம சர்ச் பாதர் கிட்ட அழைச்சுட்டு போவோம் ஆனா அவளுக்கு சொல்ல வேண்டாம் நீ அங்கே அழைச்சுட்டு மட்டும் வந்துரு அங்கே பார்த்துக்கலாம்.என அவர் சொல்ல சரி என்று

நாளையே விடியல் ராகவன் வசுமதிக்கு எப்பிடி இருக்க போவது எண்ணி ராகவனுக்கு சற்று கலக்கமாக தான் இருந்தது இருந்தாலும் தைரியத்தை திரட்டி காலையில் எழுந்து குளித்து முடித்து கிளம்பிவிட்டான் , மெல்ல வசுவை அவன் எழுப்ப ,

அவளோ என்னப்பா இன்னைக்கு இவ்வளோ காலைல என்ன எழ சொல்லுரிங்க எனக்கு தூக்கம் வருது சண்டே தானே ப்ளீஸ் கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேனே என அவள் கெஞ்ச , அவனோ அவள் தலைமாட்டில் அமர்ந்து , இல்லடா இன்னைக்கு ஒரு முக்கியமான கேட் டுகேதர் இருக்கு நாம போகணும் சோ நீ சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா கிளம்பலாம் என அவளை கிளப்பி விட அவளும் மறுப்பு ஏதும் சொல்லாமல் கிளம்பினாள் . அங்கே நடக்கபோவது தெரியாமல் ராகவனும் ஒரு நம்பிக்கையுடன் கிளம்பினான் .

அவள் கிளம்பி வந்த உடன் தனது காரை சர்ச் நோக்கி செலுத்தினான் , வசுமதியோ, அவனிடம் , ரகும்மா எனக்கு தூக்கம் வருது நான் தூங்கவா என கேட்க

ராகவவும் ,சரி ம்மா நீ தூங்கு ரீச் ஆனதும் உன்ன எழுப்பி விடுறேன் என சொல்லிவிட்டு சாலையில் கவனம் செலுத்தினான் ,

இருபது நிமிடத்தில் ஆர்.வி சொன்ன சர்ச் வந்துவிட காரை பார்கிங்கில் விட்டுவிட்டு ராகவ் இறங்கி மறுபக்கம் வந்து காரை கதவை திறந்து வசுவை எழுப்பினான் , அவளோ, " பாஸ் டர்யர்டா இருக்கு தூங்குறேன் என சொல்ல

அவனோ வசு நாம வர வேண்டியே இடம் வந்துருச்சு எழுந்துரி டா என மீண்டும் எழுப்பினான் , அவளோ சோம்பல்முறித்த படி எழுந்து பார்க்க அதுவோ ஒரு சர்ச் அதை பார்த்து, என்ன ப்பா கேட் டுகேதர் சொன்னிங்க சர்ச்க்கு வந்து இருக்கோம் , இங்க தானே இன்னைக்கு ப்ரோக்ராமே அதானே வா போகலாம் என அவளை அழைத்து கொண்டு செல்ல அவ்வளோ நேரம் நன்றாக இருந்த வசுவின் உடலில் எதோ சில மாற்றங்கள் .ஆனால் அதை எல்லாம் கண்டுகாமல் விட்டுவிட்டாள் , ஆனால் ராகவ் கவனித்து விட்டான் , அவனுக்குள் ஒரு வித பயம் உணர்வு தோன்ற , இருந்தும் என்ன நடக்குதென்று பார்போம் என அவளை கண்காணித்த படி அவளுடன் சர்ச்குள் சென்றான் , அங்கே காலியாக கிடந்த இருக்கையில் சென்று இருவரும் அமர்தார்கள் சிறிது நேரத்தில் சிறப்பு ஆரதனை ஆரம்பித்து விட , அவ்வளோ நேரம் ஆர்வமாய் பார்த்து கொண்டு இருந்தா வசுவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற துடங்கியது , முடிந்த மட்டும் தன்னை சமாளித்த படி ராகவிடம் , ம்மா நம்ம கிளம்பலாம் எனக்கு என்னமோ ஒரு மாதிரி இருக்கு , என சொல்ல

ராகவிற்க்கு புரிந்து விட்டது எதனால் அவள் கிளம்பவேண்டும் சொல்லுகிறாள் என்று, இருந்தும், அதை பொருட்படுத்தாமல் , இன்னும் கொஞ்சம் நேரம் தான் ம்மா இப்பிடி உட்காரு நான் கிளம்பலாம் உனக்கு இந்த ரொம்ப பிடிக்குமே அவளை சமாதனம் செய்த படி உட்கார வைக்க , ஆனால் அங்கே பாதரியார் , தேவ வசனங்கள் ஓத ஓத அவளுக்கு இங்கே இருப்பு கொள்ளவில்லை , தன் இரு காதுகளையும் பொத்தியே படி அமர்ந்து இருந்தாள் . நேரம் கூட கூட அங்கே இருந்த அனைவரும் அதிக சத்தத்தில் பிரத்தனை பண்ண ஆரம்பிக்க , வசுமதியோ ,ஐயோ , வேண்டாம் நிறுத்துங்க என கத்தியே படி அங்கயே சுருண்டு தரையில் சரிந்தாள் , ராகவ் அவளை பிடிக்க போக , ஆர்.வி அவனை தடுத்து நிறுத்தினார் , பொறு ராகவா இன்னும் கொஞ்சம் நேரம் தான் அவள் கிட்ட போகாத என சொல்லி விட

ராகவோ தவித்து போய்விட்டான் , ஆர்.வி அவ பாவம் எப்பிடி துடிக்கிறா பாருங்க , என்னால அவள இந்த நிலமையில பார்க்கவே முடியல , நான் அவள் கிட்ட போறேன் , என சொல்ல

ஆர்.வி அவனை பிடித்த படி, பொறு ராகவா அவசர படாத , இப்போ நீ அவசர பட்டா அவள காப்பாற்ற முடியாது

இங்கே கிழே வசுமதி, நிறுத்துங்க , நிறுத்துங்க , ஆஆஆஆஆ , முடியல ஐயோ நிறுத்துங்க , அம்மா என்னால முடியல என அவள் தரையில் கிடந்தது கதற அங்கே அவளை யாரும் கண்டு கொள்ளவில்லை எல்லோரும் பிராத்தனையில் மூழ்கி இருக்க இவள் தான் கத்தி கதறி கொண்டு இருந்தாள் ,அவளின் நிலையே பார்த்து பதரியார் அவள் அருகே வந்து அவள் தலையில் கையே வைத்து மேலும் சில வரிகள் சொல்ல , அவள் முகம் மேலும் கோரமாக மாறிவிட்டது அவளை கட்டுபடுத்த பதியர் முயல அவள் அடங்க மறுத்துவிட்டாள் , பிறகு மெல்ல மயங்கி சரிந்துவிட்டாள்

அவள் மயங்கியே உடனே ராகவ் பாதிரியார் அருகில் செல்ல , அவர், அவனை பார்த்து ,எப்போ இருந்து இப்பிடி இருக்காங்க இவங்க என கேட்க

ராகவன் நடந்ததை சுருக்கமாக சொல்லிமுடித்தான் , அவன் சொல்லும் வர பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த பாதரியார் , நீங்க சொல்லுறது எல்லாம் சரி ஆனா இது எங்கே ஆரம்பிச்சதோ அங்கே போய் தான் ராகவ் முடிக்க முடியும் என அவர் ஒரு புதிர் போட்டார்

அவர் சொல்லுவது ராகவனுக்கு புரியாமல் போக அவன் அவரை புரியும் படி சொல்ல சொன்னான் , என்ன சொல்லுரிங்க பாதர் , எனக்கு புரியல

தெளிவாவே சொல்லுறேன், நீ உன் மனைவியே கரூர்கே அழைச்சுட்டு போ அப்போ தான் இவள்ளுக்கு சரி ஆகும் இங்க வச்சு நீ எவ்வளோ ட்ரீட்மென்ட் பார்த்தாலும் இல்லை இப்போ மாதிரி எவ்வளோ சர்ச் கோவில் போனாலும் பயன் இல்லை , ஆரம்பிச்ச இடத்துல தான் இவள் பிரச்சனைக்கு முடிவு இருக்கும் அதுனால நீங்க இந்தியா போறது தான் இவளுக்கு நல்லது, இப்போதைக்கு அவளுக்கு மயக்கம் தான் இங்க இருக்கிற வரைக்கும் அவள் நோர்மலா தான் இருப்பா ஆனா இங்க இருந்து கிளம்பின உடனே அவள் எப்பிடி இருப்பா சொல்ல முடியாது , சீக்கிரம் ஒரு நல்லா முடிவா எடு என அவர் சொல்லிவிட

ராகவ் இப்போது ஆர்.வியே பார்த்து, என்ன ஆர்,வி இப்பிடி சொல்லிடு போறாரு இவரு இதுக்காக நான் இந்தியா போகனுமா , வீட்டுல பெரியவங்க கிட்ட என்னன்னு சொல்லிடு போவேன் , வசு வீட்டுல எல்லாருக்கும் எவ்வளோ செல்லம் தெரியுமா இவளுக்கு இப்பிடி ஆனதுல இருந்து வீட்டுல உள்ளவங்க கிட்ட கூட சொல்லாம இவள இவ்வளோ தூரம் தனிய அழைச்சுட்டு வந்து இருக்கேன் இப்போ இது தான் பிரச்சனை தெரிஞ்சா அவங்க நிலைமை என்ன ஆகும்

ஆர்.வி, நீ சொல்லுறது எல்லாம் சரி தான் ராகவ் ஆனா இவள சரி பண்ணியே ஆகணுமே அதுக்கு நீங்க இந்தியா போய் தானே ஆகணும் , சோ நீ வீட்டுல இத பற்றி பேசுறது நல்லது எனக்கு தோன்றது ,இப்போ வா வசுவ அழைச்சுட்டு வீட்டுக்கு போகலாம் .

வசு இந்தியா செல்வாளா , இனியனின் நிலை என்ன ஆகும் , சந்திரன் செய்த பாவம் தான் என்ன ..

வசுகும் சந்திரனுக்கும் ஏதும் தொடர்ப்பு இருக்குமோ .

.... ஸ்ஸ் யார் அது
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
!!EPI-6!!

ராகவனுக்கு அடுத்து என்ன பண்ணுவதே என்றே தெரியவில்லை, வசுவை கையில் தூக்கி கொண்டு காரை நோக்கி நடந்தான், அவனுடன் ஆர்.வி சேர்ந்து அவன் வீட்டுக்கே சென்றார் ,அங்கே ராகவ் – வசுவின் மொத்த குடும்பமும் காத்து கொண்டு இருந்தது, வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அங்கே இருந்த அனைவரையும் பார்த்து அப்பிடியே அதிர்ந்து நின்று விட்டான்.

"அப்பா - அம்மா நீங்க எப்போ வந்திங்க ஒரு போன் கூட பண்ணலையே,என ராகவ் காரி இருந்து இறங்கியே படி அவன் பெற்றோரிடம் நலம் விசாரிக்க"

ஏன்ப்பா , நாங்க எல்லாம் இங்க வர கூடாதா , நீ ஹோச்பிடல் பக்கம்ன்னு வசுவை உன் கூடவே அழச்சுட்டு வந்துட்ட , அவ இல்லாம வீடு வீடாவே இல்லை அதான் உங்க ரெண்டு போரையும் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம், என அவனது தாயார் சொல்ல

அதை கேட்ட ராகவன் , என்னது எல்லாரும்னா , யா.யார் எல்லாரும் ம்மா ,என்ன சொல்லுரிங்க நீங்க என புரியாமல் அவன் கேட்க

அங்கே பாரு என அவர் வீட்டு பக்கம் கை காட்ட,ராகவன் அவர் காட்டியே பக்கம் திரும்பி பார்க்க ,அங்கே அவனது மொத்த குடும்பமும் நின்று இருந்து.

இப்போது ராகவனின் நிலை ரொம்ப மோசமாய் போய் விட்டது யாருக்கும் தெரியாமல் காதும்-காதும் வச்ச மாதிரி வசுவை இந்தியா அழைத்து செல்லலாம் என்று அவன் முடிவு செய்து இருந்த நேரத்தில் இவர்கள் எல்லாரும் இப்பிடி வந்து நிற்பார்கள் என்று அவன் கொஞ்சம் கூட நினைத்து கூட பார்க்கவில்லை, இப்போது என்ன செய்வது என அவன் யோசித்து கொண்டு ஆர்.வியே பார்க்க , அவரோ ஜாடையில் எப்பிடியாவுது இவங்கள கிளம்ப சொல்லு இல்லை உண்மை நிலவரத்தை எடுத்து சொல்லிடு என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, காரில் மயக்கத்தில் இருந்த வசு ,தெளிந்து காரை புயல் வேகத்தில் கிளப்பி சென்றாள், அதை கவனித்த ராகவ், வசு....ஊஊஊ என்று அலறியே படி சார் பின்னால் ஓட துவங்கினான்

சற்று நேரத்தில் நடந்த கலவரத்தில் மொத்த குடும்பம் அதிர்ந்து நிற்க

ஆர்.வி தான் சுதாரித்து , வசுவின் தந்தையே பார்த்து சார் சீக்கிரம் காரை எடுங்க அவள காப்பாத்தணும், ராகவ் நால ரொம்ப தூரம் ஓட முடியாது சீக்கிரம் என கத்த

என்ன நடக்குது டாக்டர் இங்கே அவளுக்கு என்ன ஆச்சு, ஏன் இவ்வளோ வேகமா போறா என் பொண்ணு என அவளின் பெற்றோர் கேட்க

இப்போ ஏதும் பேச நேரம் இல்லை சீக்கிரம் காரை எடுங்க , என அவர் அவசர படுத்த , ஆண்கள் இருவரும் காரை கிளப்பி கொண்டு ராகவை தொடர்ந்தார்கள் ,ராகவை நெருங்கியே உடன் அவனையும் காரில் ஏற்றி கொண்டு வசுவை தேடினார்கள்.

அதற்குள் அவள் ரொம்ப தூரம் போய் விட்டு இருந்தாள்.

********

சந்திரன் வீட்டில் இனியனுக்கு இப்பிடி ஆனதில் இருந்து யாரும் சரியாக உணவு கூட உண்ணாமல் அவனை பாதுகாப்பாய் பார்த்து படி இருந்தார்கள், சின்னவள் தான் ரொம்பவும் பயந்து போய் சந்திரனுடன் மட்டும் சுற்றி கொண்டு இருந்தாள்,

என்ன செய்வதது எது செய்வது என்று புரியவில்லை இதற்க்கு தீர்வு தான் என்ன என ஒன்றும் புரியாமல் மொத்த குடுப்பம் ஸ்தம்பித்து போய் இருந்தது. வெள்ளிகிழமை வீடு எல்லாம் சுத்தம் செய்து கோவில் செல்ல அவனைவரும் கிளம்பி கொண்டு இருக்க இனியன் இது ஏதும் அறியாமல் தன்னுடையே மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்தான் ,சந்திரன் தான் அவன் அறைக்கு வந்து, உண்மையே ஏதும் சொல்லாமல் இனியன் கிளம்பு கண்ணா வெளியே கொஞ்சம் போயிட்டு வருவோம் , வந்ததுல இருந்து எங்கயும் போனது இல்ல நாம, இங்க சுத்தி பார்க்க நம்ம தோட்டம் எல்லாம் நெறைய இருக்கு வா வீட்டுல எல்லாரும் ஒரு பிக்னிக் மாதிரி போக பிளான் பண்ணிர்க்கோம் கிளம்பு சொல்ல

இனியன் அவரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு கிளம்ப சென்றான்

அவனையே பார்த்து கொண்டு இருந்த சந்திரன் , அவனது பார்வையில் என்ன கண்டாரோ அப்பிடியே அவர் உடம்பு ஜில்லிட்டு போய் விட்டது.

*************************************

வசுவை துரத்தி ஓடி கொண்டு இருந்தவனை பின்னாடி காரில் வந்தவர்கள் ஏறி கொள்ள சொல்ல அவனும் அவசரமாக ஏறி அவளை பின் தொடர்ந்தான்,

வெகுநேர தேடல் பிறகு அங்கே ஒரு மரத்தில் அவள் எடுத்து சென்ற சார் மோதி நின்று இருபது தென்பட ராகவ் அவசரமாக அதன் அருகே சென்று பார்த்தான் அதில் வசு மயக்க நிலையில் கிடந்தாள். வசு...ஊஊ என அலறியே படி ராகவ் வேகமாக கார் கண்ணாடியே உடைத்து டோரை திறந்து அவளை வெளியே எடுக்க , அந்த நிலையுலும் , சந்துரு போகாத என்ன விட்டு போகாத என முனுமுனுத்து கொண்டே இருந்தாள் , அவளை அப்பிடியே அள்ளி கொண்டு அவன் வந்த காரில் வீட்டிற்க்கு அழைத்து சென்றான்.

எங்கயும் நிறுத்த வேண்டாம் ஆர்வி சீக்கிரம் வண்டியே எடுங்க ,அவருக்குமே அவன் எதற்காக அப்பிடி சொல்லுகிறான் என தெரியும் என்பதால் காரை திருப்பி நேராக அவனது வீட்டுக்கு சென்றார்

வீட்டுக்கு வந்துடன் ராகவ் வசுவை தனது அறையில் படுக்க வைத்து அவளுக்கு முதல் உதவி செய்துவிட்டு வேறு எங்கும் காயம் இருக்கிறதா என்று பார்த்தான் அதற்குள் மொத்த குடுப்பம் அவனது அறையில் அவனது பதில் காக காத்துகொண்டு இருந்தது

அவள் நன்றாக தான் இருக்கிறாள் என அப்போது தான் ராகவிற்க்கு மூச்சு வந்தது , அவள் தூங்க ஊசியே ஒன்று போட்டுவிட்டு நிமிர்ந்தவன் நேராக தனது மாமானரை பார்த்து சொல்லுங்க மாமா யார் அந்த சந்துரு என கேட்க மொத்த குடுப்பம் ராகவின் கேள்வியில் அதிர்ந்து நின்றது

மாப்பிள்ளை ,சந்தருவ உங்களுக்கு எப்பிடி தெரியும் என வசுவின் தந்தை கேட்க

எனக்கு தெரியாது ஆனா உங்க பொண்ணுக்கு அவன நல்லா தெரியும் போல ,அவன தான் அவ உயிரா விரும்பினானா அப்போ எனக்கு ஏன் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிங்க இவள . அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சு இருக்கலாம்ல என ராகாவ் கோபத்தில் கத்த

இப்போது ராகவின் தந்தை பேசினார்,"ரகு என்ன பேசுற நீ முதல மாமாகிட்ட இப்பிடி தான் பேசுவியா மரியாதையை தெரிய வேண்டாம்"

ராகவ் தந்தையே முறைத்த படி,"என்ன அப்பா சொல்லுரிங்க மரியாதையா,பாருங்க அங்கே பாருங்க என கட்டிலில் தன் சுயநிலையே இழந்து உறங்கி கொண்டு இருந்தவளை காட்டி கொந்தளிக்க

வசுவின் தந்தையின் முகம் ராகவ் பேசியே பேச்சில் மாற தொடங்கியது என் மகளோட நடத்தையே அல்லவா கேள்விகுறி ஆக்குகிறான் அவள் அப்படி பட்டவள் கிடையாது என பதில் சொல்லும் முன்

வசுவிடம் மாற்றம் தெரியே ஆரம்பித்தது முதலில் மெல்ல முனங்க ஆரம்பித்தவள் பிறகு பெருங்குரல் எடுத்து எங்கையோ பார்த்து சந்துரு என்ன விட்டு போகாத , நம்ம குழந்தை அநாதையா ஆகிடும் என கத்தினால் பிறகு பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தாள் சிறிது நேரத்தில் கோபமாக எல்லாரையும் ஒருமுறை பார்க்க அங்கே அவளின் வசுவின் தந்தையின் பார்த்து கோபமாக மாறியது , அவ்வளோ தான் வெறிகொண்டு அவரை நெருங்கி ,நீ தான் உன்னால தான் செத்து போ என அவரின் கழுத்தை பிடித்து நெரிக்க ஆரம்பித்தாள் இவ்வளோ நாட்கள் இல்லாமல் அவளின் செயல் இன்றைக்கு வித்தியாசமாகவும் பயங்கரமாகவும் இருந்து அவளின் இரும்பு பிடியில் அவருக்கு வலிக்க ஆரம்பிக்க ராகவ் தான் கஷ்ட பட்டு அவளை விலக்கினான் அவரிடம் இருந்து பிறகு ஆர்.வி உதவியுடன் மயக்க ஊசியே போட்டுவிட்டான். அதன் வேகத்தில் அப்பிடியே மயங்கி ராகவ் கையில் சரிந்தாள் ,அவளை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு ராகவ் கோபமாக வசுவின் தந்தையின் பக்கம் திரும்பி இப்போ சொல்லுங்க மாமா இதுக்கு பதில் கேட்க

வசுவின் பெற்றோர் அப்படியே அதிர்ந்து போய் நின்றார்கள் , கணேஷ்(வசுவின் தந்தை) மனதில் மட்டும் புயல் அடித்தது தன் மகள் வாயில் இருந்து சந்துரு என்கிற பெயர் மட்டும் அவளை அந்த பெண்ணை போல் கதறியே விதம் நினைவுக்கு வந்து போனது அதை நினைத்த அடுத்த நிமிடத்தில் அவர் முகம் வெளுக்க ஆரம்பித்தது, செய்த தவறு எல்லாம் அவர் முன்னே படமாக விரியே ஆரம்பித்தது , இத்தனை வருடம் கழித்து அது மகள் தலையில் விடியும் என்று யோசிக்கவே அவர்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்கிற பழமொழியும் சேர்த்து அவர் முகத்தை அறைந்தது.

ராகவ் இன்னும் கோபம் குறையாமல் ,நான் வசுவ இந்தியா அழைச்சுட்டு போறேன் அதுவும் கரூர்க்கு

கணேஷ் அதை கேட்டு கோபத்தில் போதும் மாப்பிள்ளை என் பொண்ணு எங்கயும் வர மாட்டா நான் அவளை அந்த ஊருக்கு அனுப்பவும் மாட்டேன் என சொல்ல

இப்போது ஆர்.வி பேசினார் தப்பு பண்ணுரிங்க சார் இன்னும் ரெண்டுநாள் உங்க பொண்ணு இங்க இருந்தா அவளையே அழிச்சுட்டு செத்து போயிடுவா, கண்ட்ரோல் ஸ்டேஜ் தாண்டிட்டா, பிறகு ராகவிடம் , எல்லாம் பேக் பண்ணிக்கோ டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு அவர் சொல்ல

கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாசன்(ராகவின் தந்தை) வேற வழி இன்றி ராகவ் – வசுவுடன் தாயாகம் கிளம்பினார்கள்.

*************

இனியன் யார் பேசுவதையும் கேட்காமல் வீட்டு வாசலையே பார்த்த படி அமர்ந்து இருந்தான் யாரையோ எதிர்பார்த்து, அவனின் இந்த மௌனம் வீட்டில் உள்ளவர் அனைவரின் மனதில் பிரளயத்தை கிளப்பியது.
 
Status
Not open for further replies.
Top