சுவாரசியமான பதிவுகள். முதல் பதிவிலியே தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரவும் ஏதோ தவறாக நடக்க போகிறதோ என்று யோசிக்கும் போது, இல்லை அவருடைய சித்தப்பா தான் அழைக்கிறார் என்று நிதானமடைய வைத்து, பின்னர் ஊருக்கு கிளம்பும் அவர்கள் திரும்ப இங்கு வர போவதில்லை என்று அருமையாக துவங்கியிருக்கீங்க. ஊருக்கு சென்றால் சித்தப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது என்கிறார்கள். இரவில் ஜன்னல் படார் படார் என திறந்து பின் யாரோ அனத்தும் சத்தம் கேட்டு முதலில் இனியா பயப்படுகிறாள், பின் இனியன் எதிர்கொண்டது அச்சத்தை ஏற்படுத்துகிறது. பயத்தில் காய்ச்சலே வந்து விடுகிறது அவனுக்கு. பாட்டி வந்து திருநீறு இட்டு வெள்ளியன்று கோயிலுக்கு அழைத்து வர சொல்கிறார். அவன் தந்தை ஏதோ பாவம் செய்ததாக கூறுகிறார். இன்னொரு புறம் வசுவுக்கு பேய் பிடித்திருப்பதாக தெரிகிறது. இவர்களை பழி வாங்க நினைக்கும் ஆவி தான் அவள் உடம்பில் இருக்கிறது என்று தோன்றுகிறது. வசு இங்கு வந்தவுடன் இன்னும் திகில் கூடும் என்று நினைக்கிறன்.