All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஶ்ரீநிதா டியர்ஸ்..
இப்ப தான் படிச்சேன். அழகான தலைப்பு பொருத்தமானதும் கூட "என்னுள்ளே ஒரு மின்னல்.."

கணவன் மனைவி குழந்தைகள்..அத்துடன் அன்பான உறவுகள் இவர்களுக்கிடையே நிகழும் பாச போரட்டமே கதை.
கதையின் நாயகன் மித்ரன் நாயகி வெண்மதி
அவர்களின் செல்லமகள்கள் மித்ரஹாஸினி நிலாஷினி.
இந்த கதையில் நாயகன் நாயகியை விட என்னை அதிகம் கவர்ந்தது... இந்த இரண்டு செல்லக்குட்டீஸ் தான். வயதுக்கு மீறிய இவர்களின் அறிவும் பொறுமையும் நிதானமும்னு ஒவ்வொரு தருணத்திலும் அழகா மனதைக் கவர்ந்துடுறாங்க.
சாவின் விளிம்பில் நிற்கும் தன் மகளை காக்கப்போராடும் புகழ்பெற்ற மருத்துவனாய். தந்தையிருக்க... தந்தை நிபுணத்துவம் பெற்று பெயர் பெற்ற துறையில் மகளே நோயாளியாய் அனுமதிக்கப்பட அதுவரை அவள் தன் மகள் என்பதை அறியாத மித்ரனோ...சாதாரணமாக அவளை அணுக அதன் பின்னரே அவள் தன் உயிர் நீரில் பூத்தவள் என்பதை அறிந்து துடித்துப் போகிறான். பெற்ற மகளை அடையாளம் தெரியாத அளவிற்கு அவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன பிரச்சனை.. அவள் அவனை எப்படி பிரிந்து சென்றாள்? அத்தனை பெரிய பணக்காரியான மனைவி ...சாதாரண ஏழ்மை நிலையில் சிகிச்சைக்காக இலவச மருத்துவத்திற்காக அவனால் நடத்தப்படும் மருத்துவ மனைக்கே மகளை அழைத்து வந்ததன் பின்னனி என்ன வாக இருக்கும்?. சாவின் விளிம்பில் சந்தித்த தன் மகவை மித்ரன் காப்பாற்றினானா... ? தன் மனைவி குழந்தைகளுடன் இணைந்தானா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

அழுத்தமான உணர்வு பூர்வமான கதை...ஆரம்பத்திலிருந்து அந்த உணர்வுகளின் தாக்கம் நம்மையும் ஆகர்ஷித்துவிடுகிறது கதையின் போக்கு. அழுத்தமான கதையை இளகுவாக்குவதே மித்ரஹாஸினி... நிலாஷினி என்ற குட்டி தேவதைகளின் குழந்தைத்தனமும். அவர்களின் புரிந்துணர்வும் தான்.
மித்ரன் ..வெண்மதி இவர்களுக்கிடையிலான காதல் மோதல் பிரிவு.. அத்தனையும் தாண்டிய அவர்கிளிடையேயான உயிர் நேசத்தை அழகாக வார்த்தைகளில் வடித்த விதம் வெகு அழகு.
அதோடு இவர்கள் இருவரைத்தவிர இந்த கதையின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் பூர்ணிமா என்கிற பூரி. இவளுக்கும் மித்ரனுக்கும் என்ன உறவு என்பதை கடைசிவரை சஸ்பென்ஸாக கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. அவள் தான் வில்லியோ என்றளவுக்கு அவளை காட்டியிருந்ததை நான் இங்கே வன்மையாக கண்டிக்கிறேன். (வில்லத்தனம் பூராவும் இவங்க செஞ்சிட்டு பழியை தூக்கி அவ மேல போட்டுட்டு அடிக்கடி மீ கீரீன் சாண்ட் அப்படின்னு வாக்கு மூலம் வேற😂😂😂🤣🤣😉😁)
இந்த கதையின் நாயகன் மித்ரன் தான் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். தலைசிறந்த மருத்துவன்...காதலன் ..கணவன்... தகப்பன்... மகன்...தம்பி... நண்பன் என்ற அத்தனை நிலையிலும் அவனது ஆளுமையினாலும் கம்பீரத்தினாலும்...அன்பினாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறான். மிக அழகான குடும்ப கதையை படித்த நிறைவு. வாழ்த்துக்கள் ஶ்ரீநிதா டியர்ஸ். இது போல நிறைய கதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் டியர்ஸ்
 

Kirukalepandi

Active member
Hi Sree, அருமையான கதை. Twins, அவ்ளவு understanding ஆ இருக்கறது....🥰 அருமை..🥰. கொஞ்சம் அழுத்தமான கதைதான் 😔... but ரொம்ப medical விளக்கம் இல்லாம வல வலன்னு எதுவும் இழுக்கம சொல்லியிருக்கிங்க... கொஞ்சம் இல்ல ரொம்ப வெ கஷ்டமா இருந்தது treatment... but happy with happyending.. 😊 பூரணி க்கு குழந்தை pirathmaari /காட்டி இருக்கலாமே..? 😁
 
Top