All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லையே 🤔🤔
13766

Adavadu......

Innga evening... Aieduchu.... Annga afternoon..... Annga evening agum paodu.... Innga night..... Innga early morning agum paodu annga midnight..... Annga morning agum paodu innga afternoon..... Ippa annga afternoon innga evening......

Avalavu thaan ma
 

Shalini M

Bronze Winner
View attachment 13766

Adavadu......

Innga evening... Aieduchu.... Annga afternoon..... Annga evening agum paodu.... Innga night..... Innga early morning agum paodu annga midnight..... Annga morning agum paodu innga afternoon..... Ippa annga afternoon innga evening......

Avalavu thaan ma
நீங்க சிங்கப்பூர் அஹ்ஹ்ஹ்.....
இந்தியா அண்ட் சிங்கப்பூர் கும் 2 ஹவர்ஸ் தான sis different....🤔🤔🤔 correct ahh...
 

Samvaithi007

Bronze Winner
Neethama💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

🌷🌷🌷🌷
பொத்தி வைத்த பொதிந்து வைத்த காதலும்
வித்தாக என்னுள் விழுந்த வேளையில்
சத்தியமாக நான் இதை நான் நினைக்கவில்லை..
மொட்டாக அவிழும் வேளையிலே நாம் முற்றும் வேறாக இருப்போமென்று...
பிறவிக்குணம் கைக்கொடுக்க இரும்பாக இருக செய்து காத்திருந்தேன்....என் வலி தாங்கி ...
உன் தோள் சாய்ந்திடவே....உன் விழி கலந்திடவே...
கைக்குழந்தையோடு நீ இருக்கும் செய்தி
அத்தனையும் கலைந்தது...என் ஆணிவேரே அசைந்தாடியது...
இத்தனையும் தாங்கியது .... உன் வித்தே என்னுள் சத்தாய் நின்றது...
ஆணிவேராய் ஆட்டம் கண்ட வேளையிலே ஆலமர வேராய் தாங்கி கொண்டவளை ...
காலனவன் தத்தெடுக்க காத்திருக்க...
மதி பிழன்று ...உருகுலைந்தே போனேன்....
சிந்திக்கவும் மறந்து செயலிழந்து போனேன்....

அத்தனை ஒரு நொடியில மீட்டெடுத்தாய்....அந்த ஆகாசத்தையும் வளைத்திடும் தைரியம் தந்தாய்...
உன் ஒற்றை பார்வையில்....அதில் மறைத்து வைத்த பாசத்தாலே...
பாசமிகுந்த உன் பார்வைக்கும்நேசம் மிகுந்த உன் வார்த்தைக்கும் ஏங்கி நிற்கையிலே ...

வார்த்தையையே ஈட்டி ஆக்கினாய்....பொசுக்கும் பார்வையே பதிலாக்கினாய்...

காலன் ஆடிய ஆட்டத்தை தனி ஆளாய் தகர்த்து விட்டு ...என்பரிதவிப்பை போக்கி செயல் வீரனாய் இருக்கிறாய்....என் சிந்தையெல்லாம்....என் உயிரே உன் உயிரில் ...உன்னுள் உறையவே துடித்திருக்கும்...

நான் முதல் முதலில்கண்ட காட்சியென்ன....இன்று உன்னை காலம் செய்த கோலம் ...பாசத்திற்கு ஏங்கும் குழந்தை நீ.......பரிதவிக்கிகிறாய்....குழந்தையாய். குழந்தையுடன்...
என்னிடமே என் குழந்தை என்னை அறிமுகப் படுத்திய விதம்....
உயிர் இருந்தும் மறித்தேன்...எனினும் நிகழ்காலம் நிகழ வேண்டிய கடமைகள் காத்திருக்க என்னையே நான் மீட்டெடுத்தேன்....
நான் உறுதியாய் உருக்குலையாய் இருக்க உன்னை ஒதுக்கி வைத்து உன் பார்வைக்கான அர்த்தம் புரிந்தும் என் பாசத்தை பதுக்கி வைத்தேன்....
பெற்றவனாய் தவித்திருந்தாலும் ,மருத்துவனாய் உறுதி கொண்டேன் என் உயிரில் உதித்த உயிரை மீட்டெடுப்பேன் என்று...இதோ மீட்டெடுத்தும் விட்டேன்....தேவதையை தேவதையை கொண்டே...அலைகடலில் தவித்த படகை கரையில் சேர்த்து நிலைகொள்ள செய்துவிட்டேன்....
என் நேசமீது இப்பொழுதாதவது புரிகிறதா.....
என்னுள் இருக்கும் அன்பு இப்பொழுதாவது உன்றனுள் இறங்குகிறதா....


பெண்ணே நீ கொண்ட அன்பு .....
கடலும் கையேந்தும்....
நீ கொண்ட நேசம்....
அது மலர்களின் தூய வாசம்....
எல்லையில்லா வானத்தின் எல்லையை கூட வரையறுத்திருத்துவிடலாம்...
உன் தாயன்பு கண்டு...மலைத்து நிற்கிறேன்...
மயங்கி போகிறேன்...பெற்றாள் தான் பிள்ளை ...
மயிலிறாகி மனதை வருடுகிறாய் உன் அத்தனை பரிணாமங்களிலும்...மூழ்குகிறேன்...
மயங்குகிறேன்...மயங்குகிறேன் உன் பேரன்பிலே....!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
எண்ணங்கள் எழுத்தக்கள் ....
ஏற்றமிகு எழுத்துக்கள் வாழ்க்கையாகலாம்....
உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்தையும் அன்பையுமே பரிசாக்கலாம்....
வாழ்த்துக்கள்பா🌹🌹🌹🌺🌹🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
 
Top