Jadejavid
Writer'ZAKI'
தோழமைகளே! உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதையுடைய இரண்டாம் பாகமே இந்த கதை. அமேசன் கிண்டலில் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
என்னை தீண்டாதே என் ஜீவனே
USA Link
Amazon.com: என்னை தீண்டாதே என் ஜீவனே : உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி 02 (Tamil Edition) eBook : ஸகி, ஷேஹா: Kindle Store
Amazon.com: என்னை தீண்டாதே என் ஜீவனே : உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி 02 (Tamil Edition) eBook : ஸகி, ஷேஹா: Kindle Store
www.amazon.com
INDIA Link
இரண்டு கதைகளும் வேறு வேறு கோணத்தில் தான் பயணிக்கும். இருந்தாலும், சில கதாபாத்திரங்கள் தொடர்பான தெளிவை பெற முதல் பாகத்தை படித்துவிட்டு இதை படிப்பது சிறந்தது.
'VILLAIN KID VS HERO KID' போன்றே கதையின் கரு அமைந்திருக்கிறது.
அவனின் முரட்டுத்தனமான காதல், இவளின் ஆழமான காதல் என காதலுக்கும் காதலுக்கும் இடையிலான போர் நம்மை வியக்க வைக்கும்.
இரு துருவங்களுக்கிடையேயான காதல், மோதல், நட்பு, உறவு, நகைச்சுவை, த்ரில்லர், காமம், ரொமேன்ஸ், பிரிவு, வலி என எல்லாமே கலந்த பல திருப்பங்களுடன் கூடிய காரசாரமான த்ரில்லர் காதல் நாவலே இது.
கதை தொடர்பாக உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை மறவாது வழங்குங்கள் நட்பூஸ்
முன்னோட்டம்
"சென்னையின் CBI ஹெட் ஓஃபீஸர் மிஸ்டர் ஆர்யன் சக்கரவர்த்தியும் அவர் மனைவியும் XXXX என்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடத்தில் பரபரப்பாக இருக்க இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரென்று தெரியாது சென்னை நகரமே பரபரப்பாக உள்ளது.."
என்று பத்திரிகையில் முக்கிய செய்தியாக குறிப்பிடப்பட்டிருக்க அந்த பதினைந்து வருடங்களுக்கு முன் வந்த பத்திரிகையை தன் கையில் உள்ள பேனாவால் ஆக்ரோஷமாக குத்திக் கிழித்துக் கொண்டிருந்தாள் அவள்..
பார்ப்பதற்கே ருத்ரதேவியாக இருந்தவளின் செய்கையை நிறுத்தும் வண்ணம் தொலைபேசி அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்தவள் மறுமுனையில் கேட்ட கேள்விக்கு,
"நாளைக்கே இந்தியாலே இருப்பேன்.." என்று மட்டும் இறுகிய குரலில் சொல்லி அழைப்பை துண்டித்தவள்,
தன் எதிரே இருந்த சுவற்றிலுள்ள புகைப்படத்தை பார்த்து கோபம் ஏகத்துக்கும் எகிற கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாது தன் தலைமுடியை தானே "ஆஆ" என அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தி பிய்த்துக் கொண்டாள் நம் நாயகி..
----------------------------------------------------------------------
"ஏன் டி என்னை விட்டு போன.. இப்போ எங்க இருக்க டி.. என்னால முடியல டி நீ இல்லாம.." என தன் தொலைபேசியிலிருந்த புகைப்படத்தை கண்கள் கலங்க பார்த்தவாறு மது அருந்திய வண்ணம் போதையில் புலம்பிக் கொண்டிருந்தான் நம் நாயகன்..
அவனுக்கு அவன் கையில் வைத்திருந்த மது தந்த போதையை விட அவனவளே அவனுக்கு தேவையாக இருந்தாள். ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தவன் பின் முகத்தை தீவிரமாக்கி,
"என்னை விட்டு போயிட்டல்ல டி.. நீ எந்த மூலைல இருந்தாலும் உன்னை தேடி வருவேன் டி.. நீ எனக்கு சொந்தமானவ.. உன்ன அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துற மட்டேன்..எனக்கு நீ வேணும்.. " என ஆக்ரோஷமாக கத்தியவன் எண்ணிற்கு அவன் நண்பனிடமிருந்து குறுந்தகவல் வர அதை பார்த்தவன் இதழ்கள் விரிய கண்கள் மின்னியது..
"உனக்காக வரேன் டி பேபி.." என மனதில் நினைத்துக் கொண்டான் அந்த காதல் கள்வன்.
------------------------------------------------------------------------
தன் எதிரே உள்ளவன் வைத்த புகைப்படத்தில் உள்ளவளை யாரென்று தெரியாது குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தார் ராஜ் தீப்..
தனக்கு வந்த வெளிநாட்டு எண் அழைப்பை ஏற்றவர் மறுமுனையில் யாரென்று தெரிய,
"வூ இஷ் ஷீ (Who is she..) " என கேட்க,
மறுமுனையில் இருந்தவனோ,
"அவ பேரு *****.. அவ பத்தின டீடெய்ல்ஸ் என் ஆளு உன் கிட்ட கொடுப்பான்.. " என அவன் சொன்ன மறுநொடி எதிரில் இருந்தவன் ஒரு ஃபைலை அவர் முன்னாடி வைத்தான்.
"எனக்கு அவ வேணும்.. நாங்க ட்ரை பன்னோம் பட் அவன் குறுக்க வந்ததால எதுவுமே பன்ன முடியல.. இரண்டு மாசம் தான் டைம்.. அதுக்குள்ள வேலைய முடிச்சிட்டு எனக்கு கோல் பன்னு.." என மறுமுனையில் கூறியவன் அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தான்.
Last edited: