பெண்...
இந்த சமூகத்தில் கால காலமாக நடந்தேறும் துயரம் பெண்ணின் உடலை வைத்து அவளை அவமான படுத்த நினைக்கும் வக்ர எண்ணம்...
பெண்ணின் உடல் அறிவியல் ரீதியாக தான் இறைவன் படைத்தானே அன்றி அதை இப்படி அவளை அசிங்க படுத்த இல்லை என்பதை அழகாக அவள் எப்படி எல்லாம் கடந்து வர வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் அருந்ததி...
ஆதி மனிதன் வாழ்ந்த நிலை இருந்தால் இந்த அவலம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காதோ என நிமிடத்திற்கு நிமிடம் சிந்திக்க தூண்டும் செயல் அருந்ததி நடந்தேறியது....
கடும் குளிர்க்கு பயந்துநாகரீகம் மாறி மனிதன் ஆடையை தன் வாழ்க்கையில் கொண்டு வந்தால் இந்த குளிரை காட்டிலும் கொடுரமாக மனித மனம் மாறி இருக்கிறது...
மனோரஞ்சன் என்ற பெயருக்கு பொருத்தமே இல்லாத இந்த வில்லனுக்கு இன்னும் தண்டனை தந்திருக்கனுமோ...
செம எபி ஸ்ரீ மா...
இப்ப தான் ஹீரோ வேலையை கரைட்டா அதுவும் அவன் தங்கைக்கு செய்திருக்கான்...
இருந்தாலும் ஒரு அண்ணனாக ஆரம்பத்திலேயே அவளை பாதுகாக்க தவறிட்டான்
(ஹீரோவை குறை சொல்லுதல் என் கடமை)
அவளுக்கான காதலும் அன்பு அவன் மேல் வர காரணமான சூழலை படிக்கும் போது இன்னும் அவளின் துயரத்தை படிக்கும் போது இந்த ஹீரோ நிலை என்ன என தான் சிந்திக்க தூண்டுது...
கிருஷ்ணராஜூன்... கிருஷ் என்ற கிருஷ்ணனாக மாறிய தருணம் பெண்ணின் மானம் காக்க போராடியது தான் போல...
இந்த சூழலில் அவளுக்கு காதல் வருது என்றால் அவனிடம் எதையோ எதிர்பார்த்து தான் வராமல் இருந்து இருக்கா போல....
இனி வரும் எபி அவளுக்கானதாக இருக்க வாய்ப்பு இருக்கா என்ற கேள்வியோடு....
சூப்பர் எபி ஸ்ரீ மா.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்