கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
கல்யாணம் என்னும் பந்தத்தில் இணையும் இருவர் என்ன காதல், பாசம்,அன்பு எதுவும் இல்லை என்று சொல்லி வாழ்ந்தாலும் காலம் அதனை மாற்றும் வல்லமை படைத்தது என்று மது மற்றும் சைந்தவி முலம் நமக்கு அழகான ஒரு காதல் கதையை தந்து இருக்கீங்க ஸ்ரீ மா....
என்ன கோபம்,ஈகோ என்று சொல்லிட்டு அவளை கல்யாணம் செய்தாலும் ஒரு பொறுப்பில்லாமல் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இல்லா ஒரு ஆண் மகனை திருமணம் மற்றும் மனைவி என்னும் பந்தம் எப்படி முழுமையான ஆணாக மாற்றும் என்று மதுசூதனன் கேரக்டர் முலம் இன்றைய பல வெற்றிப் பெற்று வாழும் ஆண் சமூகம் பற்றிய கதை இது அருமை....
ஆதித்யா என்ற ஆன்டி ஹீரோவ ஒரு சாதாரண ஹீரோவாக மாற்றிய பெருமை உங்களையே சாரும் ஸ்ரீ மா....
அவன் கேரக்டர் படிக்கும் போது அப்படி தான் மனதில் எண்ணம் வந்தது....
பொதுவாக மனதில் பிடிக்காது ஒரு நிகழ்வு ஆழமான காயத்தை ஏற்படுத்தும் போது அது சார்ந்த எல்லாம் அருவெறுப்பாக இருக்கும் என்பது தான் உண்மை...
ஹீரோயின் மனதில் இருக்கும் அவள் வியாதி அதற்கான காரணம் எல்லாம் படிக்கும் போது அது பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இந்த கதை....
சுபா,அகி காதல் அழகு என்றால் சைந்தவி முதல் தங்கை மாடல் அழகியை அழகான மனைவியாக மாற்றி ஆன்டி ஹீரோ ஆதியை இரண்டாம் ஹீரோவாக ப்ரோமோட் பண்ணியது செமம... அவன் வில்லன் என்ற எண்ணம் பிறந்து அவனை படிக்க படிக்க அடபாவப்பட்ட ஜீவனே என்று தான் யோசிக்க தோன்றியது.... அன்பு மட்டுமே எல்லா தவறுகளையும் யோசிக்காமல் செய்ய தூண்டும் என்பதற்கு இவன் சிறந்த உதாரணம்...
மன்னார் தான் வேற லெவல் கேரக்டர் எனக்கு இவனை ரொம்ப பிடிச்சுருக்கு அதனால் இவன் தான் எனக்குsecond hero
இந்த கதையில் ஒரு ஆண் தன் மரியாதை மற்றும் சுயமரியாதை எங்கு பார்க்க வேண்டும் யாரிடம் பார்க்க வேண்டும் என்பதை படிக்கும் நமக்கு தெளிவாக புரியும் ஸ்ரீ மா
உங்க எழுத்து எப்பவும் போல கட்டி இழுக்குது இளமையும் காதலும் அழகு சேர்க்குது....
பேபிம்மா படிக்கும் போது செம ஃபீல்
மது இந்த கதையில் ஒரு இடத்தில் சொல்லுவான் சைந்தவியிடம் இந்த கதையில் ஹீரோ நீ ஹீரோயின் நான் என்று அதனால்
ஒரு ஹீரோயின் ஆர்மி சார்பாக இந்த ஹீரோயின் (மதுசூதனன்) நடந்த அநியாயம் நான் தட்டி கேட்கறேன்
அவனோட பீலிங் விளையாடும் சைந்தவி "நீ பண்ணறது தப்பு மா
என கண்டித்து இந்த ரீவ்யூ முடிக்கிறேன் ஸ்ரீ மா....
நம்ம அடுத்த கதையில் ராதாக்கு அநியாயம் நடக்க விடாமல் நான் போராடுவேன்