கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -21)
உதியோட எண்ணக் குமுறலும் நியாயம் தானே...! இதையெல்லாம் சர்வா அவ கிட்ட சொல்லிட்டு அவளை கல்யாணம் பண்ணியிருந்தா சரி தான். ஆனா, அவ கிட்ட எதையும் சொல்லாமலே அவன் பாட்டுக்கு, அவன் இஷ்டத்துக்கு
தானே முடிவெடுத்திருக்கிறான்.
உதி அவனை பிரின்ஸ் மாதிரி தான் பார்த்தா.தவிர, அவ மனசுல, அவன் மேல மரியாதையும், மதிப்பும், அக்கறையும், எஜமான் விஸ்வாசம் மட்டும் தான் இருந்ததேயொழிய காதல் நிச்சயமா கிடையாது . அவளை அவன், அவனுக்கு கீழே வேலை பார்க்கிறவளா நினைக்கலைன்னா...
அவனோட ஜாதகத்தையும், தோஷத்தை பத்தியும் அவகிட்ட வெளிப்படையா பேசியிருக்க வேண்டியது தானே. அவ கிட்ட எதுக்கு நாம அதையெல்லாம் சொல்லணும் என்கிற அலட்சிய மனப்பான்மைத்தானே அவனை ஒருதலையா முடிவெடுக்க வைச்சது. அவளைப்பத்தி அவனே முடிவெடுக்கிறது எந்தவிதத்துல நியாயம்..? ஏற்கனவே உதி,
கில்ட்டி கான்ஷியஸ்ல தான்
இருக்கிறா. அழகில்லை, படிப்பில்லை, அந்தஸ்து இல்லைன்னு தானே சொல்லிட்டிருந்தா. இப்ப இதையும் கேள்விப்பட்டவுடனே
மனசளவுல ரொம்பவே ஒடுங்கிட்டா. கல்யாணம் ஆன பிறகாவது ஒரு வார்த்தை விஷயம் இதுதான்னு சொல்லியிருக்கலாம். ஏன்னா, தெய்வ நம்பிக்கை, ஜாதகம், தோசம் இதெல்லாம் மனுசங்களோட அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் தானே. அதை யாராலும், தடுக்கவோ, இல்லை அதிலிருந்து காக்கவோ முடியாது தானே. மத்த ஆபத்துகளிடமிருந்து உதியை சர்வா காப்பாத்திடுவான். பட்,
இது நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட
ஒரு விஷயம் தானே. அதனாலத்தான் தனது அநாதரவான நிலையை இவன் பயன்படுத்திக்கிட்டானோ.. மத்தவங்களைப் போலவேன்னு
அவளுக்குள்ள மருகிட்டிருக்கா. ஏன்னா, அவ மனசுல இதுரைக்கும் அவன் மேல காதலும் வரலை, இவன் தன் கணவன்ங்கிற நேசமும் வரலை. இந்த ரெண்டு உணர்வும் இருந்தா தானே
அவன் மேல நம்பிக்கையே வரும். இந்த விஷயத்துல நான் உதி பக்கம் தான் ஹண்ரட் பர்சன்டேஜ்.
சர்வாவுக்கே ... உதியை காதலிக்கிறோம்ங்கறது லேட்டாத்தானே புரிஞ்சது.
புரிஞ்ச பிறகு தானே, தன்னையே உணர ஆரம்பிச்சான். இதுல அவன் அன்பை புரிஞ்சுக்கலை, தன் காதலை புரிஞ்சுக்கலைன்னு, மருகி என்ன பிரயோஜனம்.
ரெண்டு கை தட்டுனாத்தானே
ஓசையே வரும். பட், இங்க எல்லாமே ஒரு கை ஓசை, ஒரு தலை ராகம் தானே...????
இதுல புதுசா அவனுக்குள்ள உறங்கிட்டு இருக்கிற வில்லனை வேற அவளுக்கு காட்டப்போறேன்னு திரும்பவும் உதார் விட்டுட்டு இருக்கிறான்.
அட... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானனாம்...
அந்த கதையா இல்ல இருக்குது இவன் பண்ற கூத்து...!
அடேய்... அவசரத்துக்கு பிறந்தவனே...! அன்பா, நிதானமா சொல்லியே அவ மரமண்டையில ஏறலை...
இதுல நீ வேற இப்ப புதுசா அவதாரம் எடுக்குறேன், பிரசாதம் கொடுக்குறேன்னு ஏதாவது ஏடாகூடமா பண்ணி வைச்சு உள்ளதும் போச்சே நொள்ளை கண்ணான்னு
உட்காரப்போற டா கிறுக்கா !
எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன்னு பண்ணாம....
இந்த ரெண்டு வார்த்தைக்கும் இடையில இழுவையா
'இழுத்தேன்'ங்கற
வார்த்தையும் இருக்கு தானே..? சில நேரத்துல அதையும் ட்ரை பண்ணி பார்க்கலாம்... ஒண்ணும் தப்பில்லை.
தாலிக்கயிறுங்கற மேஜீக்குக்கு இல்லாத சக்தியையா நீ யூஸ் பண்ணிடப்போறே ... ???
போ டா, போ டா புண்ணாக்கு...
போடாத தப்பு கணக்கு...!
CRVS (or) CRVS 2797