Sasimukesh
Administrator
அத்தியாயம் : 44
மறுநாளே உதயரேகா மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி கண்டுபிடித்து விட்டாள். அன்றே பெண் பார்க்க செல்ல வேண்டும் என்று அடம்பிடித்த உதயரேகா அதை மகனிடம் கூற... சக்தீஸ்வரனோ 'உங்க விருப்பம்' என்று விட்டேற்றியாகக் கூறிவிட்டு சென்று விட்டான். இதோ குடும்பமே சக்தீஸ்வரனின் பெண் பார்க்கும் படலத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது.
இதில் இளையவர்களுக்குச் சிறிதும் உடன்பாடில்லை. அவர்கள் சகுந்தலாவிற்கு அழைத்து விவரங்களைச் சொல்ல... அவளோ இந்தச் செய்தியை கேட்டு வருத்தபடாது மகிழ்ந்தாள். அவளே ஒன்றும் கூறாத போது... மற்றவர்களால் என்ன கூறிவிட முடியும்?
இதற்கு இடையில் உதயரேகா சகுந்தலாவிற்கு அழைத்துப் பெண் பார்க்க உடன் வருமாறு கூறினாள்.
"அவங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க அத்தைம்மா. நான் நேரே அங்கே வந்து விடுகிறேன்." என்றவளை கண்டு,
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இங்கே தாம்பாள தட்டு தூக்க ஆள் குறையுது. நீ நேரா இங்கே வந்துரு." என்று கண்டிப்புடன் கூறிவிட்டு உதயரேகா அழைப்பை துண்டித்து விட்டாள்.
'என் புருசனுக்குப் பெண் பார்க்க போறதுக்குத் தாம்பாள தட்டு தூக்க நான் போகணுமா?' சகுந்தலாவுக்குச் சற்றுக் கோபம் எட்டிப்பார்த்தது.
'புருசனா? எந்த உரிமையில் நீ கேப்டனை புருசன்னு சொல்லுற?' அவளது மனசாட்சி அவளைக் கேலி செய்தது. அவளையும் அறியாது அவளது கரம் அவளது வெறும் கழுத்தினை வருடியது.
அதற்கு மேல் அவள் எதையும் யோசிக்காது கிளம்பி விட்டாள்.
மகனுக்குப் பெண் பார்க்கும் படலத்திற்காகத் தடபுடலாக எல்லோரும் கிளம்பி கொண்டிருக்க... உதயரேகாவோ அறையில் அமர்ந்து சாவகாசமாக ஆப்பிளை வெட்டி கொண்டிருந்தாள்.
"எதுக்கு இந்த நாடகம்?" சர்வேஸ்வரன் மனைவியிடம் கேட்டுக் கொண்டே அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
"என்ன நாடகம் பிரின்ஸ்?" உதயரேகா ஒன்றும் தெரியாத அப்பாவியாக விழித்தாள்.
"நெஞ்சுவலி, அப்புறம் இந்தப் பெண் பார்க்கும் படலம்? இதுக்கு எல்லாம் என்ன காரணம்?" அவன் மனைவியை உறுத்து விழித்தான்.
"ஐயோ, நெஞ்சுவலி உண்மை தான்ங்க." உதயரேகா வேகமாக இடைமறித்துக் கூற...
"அப்போ இந்தப் பெண் பார்க்கும் படலம்? வெறுமனே பெண் பார்க்க போறதுக்கு எதுக்கு இத்தனை தடபுடல்?" சர்வேஸ்வரன் மனைவியை விடுவதாக இல்லை.
"ஒருவேளை சக்திக்குப் பொண்ணைப் பிடிச்சு போச்சுன்னா? காலத் தாமதம் பண்ணாம அங்கேயே நிச்சயம் பண்ணிட்டு வந்திரலாம்ன்னு தான்." உதயரேகா பல்லை காட்டினாள்.
"இது உண்மை மாதிரி தெரியலையே." சர்வேஸ்வரன் ஒருமாதிரியாக மனைவியைப் பார்த்தான்.
"ஹி ஹி கண்டுபிடிச்சிட்டீங்களா? சும்மா கண் துடைப்புக்குங்க. அப்படியாவது மனசு மாறி சக்தி, சக்கு ஒண்ணா சேர்றாங்களான்னு ஒரு நப்பாசை தான்." என்ற உதயரேகாவின் முகத்தில் அதிக ஆர்வம் இருந்தது.
"நீ ஹாஸ்பிட்டலில் வச்சு சக்குவை பார்த்து ஓவர் ரியாக்ட் பண்ணும் போதே எனக்கு லேசா டவுட் வந்துச்சு." சர்வேஸ்வரனுக்கு மனைவியை நினைத்துச் சிரிப்பு வந்தது.
"ஓ, சொதப்பிட்டேனா?" உதயரேகா அப்பாவியாய் விழித்தாள்.
"லைட்டா... சக்தி கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சு இருப்பான். ஆனா சக்கு தான் பாவம். நீ திட்டியதும் அவளோட முகம் ஒரு மாதிரியா மாறி போச்சு." சர்வேஸ்வரன் மருமகளுக்காக வருத்தப்பட்டான்.
"மாறிட்டும், மாறட்டும்... அவள் பேசாம மும்பையில் போய் உட்கார்ந்துக்கிட்டா. இந்தச் சக்தி என்னடான்னா அவள் என்னமோ உலகத்தோடு மறு மூலையில் இருக்கிற மாதிரி... அவள் இருக்கும் திசை பக்கம் எட்டி கூடப் பார்க்க மாட்டேங்கிறான். பின்னே எப்படி ரெண்டு பேரும் ஒண்ணு சேர முடியும்? இப்படி ஏதாவது நாடகம் போட்டால் தான் நல்லது நடக்கும்."
"நீ சொல்றதும் சரி தான். ஆனா இப்பவும் சக்தி சக்குவை பார்த்து பெருசா ரியாக்ட் பண்ணலை. நீ செய்ற காரியம் ஒருவேளை தோல்வியில் கூட முடியலாம். எதுக்கும் தயாரா இரு."
"என் மகனை பார்த்து எல்லோரும் ஆம்பிளை இல்லைன்னு சொல்றதை கேட்ட பிறகும்... இந்த உயிர் உடம்புல ஒட்டிட்டு தான் இருக்கு. எனக்கு ஒண்ணும் ஆகாது." என்று விழிகளைத் துடைத்துக் கொண்ட உதயரேகா, "சக்தி ஆம்பிளை இல்லைன்னு தான் சக்கு ஓடி போனாள்ன்னு எல்லோரும் நாக்குல நரம்பு இல்லாம பேசுறாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா அப்படியா தெரியுது? அவங்க ரெண்டு பேரும் உடம்பு சுகத்துக்கு அலையறவங்க கிடையாது. அவங்க ரெண்டு பேரும் மனசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலகி இருக்காங்க. இது தெரியாம எல்லோரும் வாய்க்கு வந்ததைப் பேசுறாங்க. ஒரு அம்மாவா எனக்கு இது ரொம்பக் கஷ்டமா இருக்கு." என்று வேதனை கொள்ள...
"ம், உன்னோட மனசு புரியுது உதி. நமக்கு நம்ம பிள்ளைங்களைப் பத்தி நல்லா தெரியும். கவலையை விடு. ஆனா எனக்கு விஜயா பேசியது தான் மனசு ஆறலை." சர்வேஸ்வரன் ஆற்றாமையுடன் கூற...
"ஐய்யே, பிரின்சுக்கு இதில் வருத்தமோ? விஜயா என் கூடக் கூட்டு... ரெண்டு பேரும் சேர்ந்து தான் நடிச்சோம். விஜயா அவளோட மகனுக்காக நடிச்சா. நான் என் மகனுக்காக நடிச்சேன்." உதயரேகா கண்சிமிட்டி சிரித்தாள்.
"சம்பந்தி ரெண்டு பேரும் நல்லா கூட்டு சேர்ந்து இருக்கீங்க." சர்வேஸ்வரன் நிம்மதியுடன் வாய்விட்டுச் சிரித்தான். கணவனது புன்னகை மனைவிக்கும் தொற்றிக் கொண்டது.
"ஆனாலும் பேபி... நீ உன்னை ரொம்ப வருத்திக்காதே. சக்தி சின்னப் பையன் இல்லை. அவன் வாழ்க்கையை அவன் நல்லா அமைச்சுக்குவான். எனக்கு நம்பிக்கை இருக்கு."
"எனக்கு என்ன... நான் நல்லா தான் இருக்கேன்." உதயரேகா கணவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
"அப்போ எதுக்கு நெஞ்சுவலி வந்தது?" சர்வேஸ்வரனின் குரல் கமறியது.
"அது என்னோட பிரெண்ட் பேசியது ரொம்ப வேதனையா இருந்தது. அவள் பேசிய வார்த்தைகள் அப்படி." உதயரேகாவுக்கு இன்னமும் அந்த வேதனை இருக்கத்தான் செய்தது.
"இனி அப்படிப்பட்ட பிரெண்ட்ஸ் உனக்குத் தேவையில்லை. முதல்ல அவங்களை எல்லாம் கட் பண்ணு." சர்வேஸ்வரன் கோபத்துடன் சொல்ல...
"பிரின்ஸ் சொன்னால் இந்த உதி கேட்பாள்." உதயரேகா பளிச்சென்ற புன்னகையுடன் கூற... அதைக் கண்டு சர்வேஸ்வரன் நிம்மதி கொண்டான்.
சகுந்தலா வாடகை காரிலிருந்து இறங்கினாள். பல நாட்களுக்குப் பிறகு அவள் இங்கு வருகிறாள். அவளுள் அத்தனை பரவசம். தாயின் மடி சேர்ந்த நிம்மதி. அவள் எங்கே பிறந்தாளோ? அது அவளுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்தவரையில் இந்த வீடு தான் அவளது பிறந்தவீடு. அவள் எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லி கொள்வாள், இது தான் அவளது வீடு என்று...
ஒரு சிலர் அவளை இந்த வீட்டுப் பணிப்பெண் என்று கேலி செய்து அவளது மனதினை புண்படுத்தி இருக்கின்றனர். அப்போது எல்லாம் அவளது முகம் வாடி போகும். அந்த நேரம் சர்வேஸ்வரன் 'இது உன் வீடு தான் சக்கு' என்று கூறி அவளை உற்சாகப்படுத்துவான். அந்த மாமனின் அன்பை அவளால் மறக்க முடியுமா? சொந்த மகன் பக்கம் நிற்காது எப்போதும் அவள் பக்கம் துணை நிற்கும் மாமனின் அன்புக்கு ஈடு இணை உண்டோ! மாமனின் அன்பில் அவளது விழிகள் கசிந்தது.
'சக்கு, நீ எதுக்கு வந்திருக்க? வந்த வேலையை மட்டும் பார். தேவையில்லாத சென்ட்டிமென்ட்டில் சிக்கி கொள்ளாதே.' மனசாட்சி அவளைக் கடிந்து கொண்டது.
சகுந்தலா தன்னைத் தேற்றிக் கொண்டு மகிழ்ச்சியை முகத்தில் தேக்கி, புன்னகையை இதழ்களில் தாங்கி கம்பீரமாக அந்த வீட்டின் வாயிலினுள் நுழைந்தாள். அவள் வாயில் பபிள்கம்மை மென்று கொண்டிருக்கும் விதமே அவளுக்குத் தனித் திமிரை கொடுத்தது. கெத்தாக உள்ளே நுழைந்தவள் அங்கு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சக்தீஸ்வரனை கண்டதும் அவளது கால்கள் தடுமாறத் தொடங்கியது. கால்கள் மட்டுமா? அவளது மனமும் சேர்ந்தல்லவா தடுமாறியது.
'சக்கு கன்ட்ரோல், கன்ட்ரோல்...' அவள் தனக்குத் தானே உறுதியாகச் சொல்லி கொண்டு அவனை நோக்கி, இல்லை இல்லை வீட்டின் வாசலை நோக்கி சென்றாள்.
சக்தீஸ்வரன் அலைப்பேசியில் கவனத்தை வைத்து இருந்தாலும்... அவனது விழிகள் சகுந்தலாவை கண்டு கொண்டது. பின்பு யோசனையாய்ச் சுருங்கியது. அவள் அருகே வந்ததும் சக்தீஸ்வரன் அலைப்பேசியை அணைத்து விட்டு அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
"இன்னைக்கு உங்களுக்குப் பெண் பார்க்க போறங்களாம்." என்ன முயன்றும் அவளது வார்த்தைகள் அவனைக் கண்டால் தந்தி அடிக்கத்தான் செய்தது.
அதற்கும் அவன் எந்தவித எதிர்வினையும் ஆற்றாது விழிகளைச் சுருக்கி கொண்டு அவளைப் பார்த்திருந்தான்.
'வாயை திறந்து பேசினால் தான் என்னவாம்?' அவள் மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.
"அத்தைம்மா என்னையும் வர சொன்னாங்க." அவள் தான் வந்த விசயத்தைச் சொல்ல...
'ஓ' என்பது போன்ற பாவனை அவனது முகத்தில்...
"இப்போ நான் போகலாமா?" அவள் கேலியாய் கேட்க...
"போக விடாம நான் என்ன உன் கையைவா பிடிச்சு இழுத்துக்கிட்டு இருக்கேன்?" அவனும் பதிலுக்கு அவளை நக்கலடித்தபடி சென்று விட்டான்.
கணவனது வார்த்தைகளில் அவள் தான் ஆவென்று வாயை பிளந்தாள். அப்போது அங்கு வந்த ஆதித்யா, ஆதிரை இருவரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
"சாரி சக்கு, நேத்துக் கவலையில் உன்னைப் பத்தி யோசிக்காம கிளம்பி வந்துட்டோம்." என்று மன்னிப்பு வேண்ட...
"இதுல என்னயிருக்கு? ஹோட்டல் கார் வந்துச்சு. நான் அதில் போயிட்டேன்." அவள் சொன்னதும் தான் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.
"நீ இங்கேயே வந்திருக்கலாம்." இருவரும் குறைப்பட்டுக் கொள்ள...
"அதான் இப்போ வந்துட்டேனே." அவள் சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.
"உண்மையில் நீ அண்ணாவை விட்டு பிரிய போறியா?" ஆதிரைக்குச் சற்று வருத்தம் தான்.
"கோர்ட்டில் கேஸ் போயிக்கிட்டு இருக்கு. நாலு மாசத்தில் விவாகரத்து கிடைச்சிரும். இப்போ போய் இது என்ன பேச்சு ஆரி?" சகுந்தலா கண்டிப்புடன் கேட்டாள்.
"ஆரி சும்மா இரு." ஆதித்யா உடன்பிறந்தவளை அதட்டினான்.