All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் 'கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!' - மூன்றாம் பாகம்

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 41



இந்தியாவில் நடத்தப்படும் பிரமாண்ட பேசன் ஷோ அந்தப் பெரிய அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரங்கத்தில் வண்ண விளக்குகள் வர்ணஜாலத்தை இறைத்து மாயாஜாலம் செய்து கொண்டிருக்க... டொம் டொம்மென்று பின்னணி இசையில் அரங்கம் அதிர்ந்தது. வட இந்திய மணப்பெண்களுக்கான ஆடைகளின் அணிவகுப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மேடையில் மணப்பெண் போன்று உடை அணிந்த மாடல் அழகிகள் ஒவ்வொருவராக வரிசையாகப் பூனை நடை நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தியாகச் சகுந்தலாவும் வந்து கொண்டிருந்தாள்.



இளஞ்சிவப்பு நிறத்தில் காக்ரா சோளி எனப்படும் வட இந்திய ஆடையைச் சகுந்தலா அணிந்து இருந்தாள். அதற்கு எதிர்ப்பதமாய்ப் பச்சை மற்றும் வெள்ளை நிற குந்தன் கற்கள் பதித்த அணிகலன்களை அவள் அணிந்து இருந்தாள். அந்த உடையும், நகையும் அவளுக்குப் பாந்தமாய் அழகுற பொருந்தி இருந்தது. நல்ல உயரமும், சரியான உடல் எடையும், சிக்கென்ற இடையும் கொண்ட அவள் மற்ற பெண்களை விடத் தனித்து நிற்க காரணம் அவளது டஸ்க்கி நிறம். அதுவே அவளுக்குத் தனித்துவ அழகினை கொடுத்திருந்தது.



இரு கரங்களையும் முன்னே அடிவயிற்றோடு இணைத்து வைத்து, அவள் இடையை நளினத்துடன், ஒருவித ரிதத்துடன் ஆட்டியபடி நடந்து வந்தது கண்டு அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். ஆண்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி அவளைக் கண்டு மனதிற்குள் ஜொள்ளு வடித்தனர். அவ்வளவு பெரிய அரங்கில் வெளிப்படையாய் தங்களது வழிசலை காட்டி கொள்ள முடியாதே.



அவளது முகத்தில் இருந்த அலட்சியம், விழிகளில் தெரிந்த திமிர் எல்லாமே சொல்லாது சொல்லியது இவள் பழைய சகுந்தலா இல்லை என்று...



"இன்றிரவு இவள் எனக்கு வேண்டும்." அங்கிருந்த செல்வந்தன் ஒருவன் தனது செயலாளரிடம் சொல்லி கொண்டிருந்தான்.



"பாய் சாப், அந்தப் பொண்ணு யாருக்கும் மடங்காது. அவள் கிட்ட பேசி நோஸ்கட் வாங்கினவங்க தான் அதிகம்." சகுந்தலாவை பற்றி நன்கு அறிந்திருந்த அந்தச் செயலாளர் தயக்கத்துடன் சொல்ல...



"எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு மேன்." என்று கண்சிமிட்டிய செல்வந்தன், "இத்தனை நாட்களில் ஒருத்தன் கூடவா அவளை ருசி பார்த்து இருக்க மாட்டான்?" என்று விசம குரலில் கேட்க... செயலாளர் ஒன்றும் பேசாது அமைதியாகி விட்டான்.



அடுத்து நாகரீக உடைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதிலும் அதிகக் கவனம் ஈர்த்தது சகுந்தலா தான். பாலாடை நிறத்தில் கையில்லாத நீண்ட கவுனை அவள் அணிந்து இருந்தாள். அதன் வலப்புறம் கீழிருந்து மேலாக முட்டிக்கு மேலே வரை வெட்டி விடப்பட்டு இருந்தது. அவள் நடக்கும் போது அவளது வாழைத்தண்டு போன்ற வழுவழுப்பான வலதுகால் அழகுற அனைவரின் விழிகளுக்கும் தரிசனம் தந்தது. வெண்ணிற கால்களைப் பார்த்துச் சலித்துப் போன மேல்தட்டு மக்களுக்கு அவளது தேன்நிற கால் அதிகப் போதையைக் கொடுத்தது.



"சாக்கி பேபி..." என்று அனைவரையும் மயக்கத்தில் முணுமுணுக்க வைத்தது.



எல்லோரையும் கிறங்கடித்த சகுந்தலாவோ யாரையும் சட்டை செய்யாது ஒய்யாரமாக நடந்து வந்து மேடையின் நடுவே வந்து நின்றாள். எல்லா அழகிகளும் அங்கு வந்து நிற்க... அடுத்த நொடி அரங்கம் கரவொலியால் நிரம்பியது.



சகுந்தலா பேசன் ஷோ முடிந்ததும் ஒப்பனை அறைக்குள் நுழைந்தாள். அங்கு அவளைப் போன்றே எல்லாப் பெண்களும் இருந்தனர். ஆதித்யாவும், ஆதிரையும் அவளை நோக்கி ஓடி வந்தனர். அவர்களைக் கண்டதும் சகுந்தலா முகத்தில் கனிவு வந்தது.



"ரொம்ப நல்லா பண்ணின சக்கு. நீ போட்டு இருந்ததால், நாங்க டிசைன் பண்ணிய டிரெஸ்களுக்கு நல்ல டிமாண்ட். உன்னால் எங்களோட டிசைன் எல்லாம் வோர்ல்ட் பேமசாகுது." என்று சொல்லியபடி ஆதிரை அவளை அன்போடு அணைத்து கொண்டாள்.



"இப்போ டிரெண்டிங் இருப்பது எங்க டிசைன் தான்." ஆதித்யா மறுபக்கம் அணைத்துக் கொண்டான்.



'இப்போ மட்டும் இவங்க அண்ணா பார்க்கணும், அவ்வளவு தான்...' சகுந்தலா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.



அன்று ஆதித்யா தன்னைத் தொட்டதற்கே சக்தீஸ்வரன் அவனைக் கன்னத்தில் அடித்தது அவளது நினைவில் வந்து போனது. அன்று புரியாத காரணங்கள் எல்லாம் இப்போது புரிந்தது. புரிந்து என்ன பயன்? அவள் தனக்குள் பெருமூச்சு விட்டு கொண்டாள்.



"சக்கு, இன்னைக்கு ட்ரீட் நீ தான் கொடுக்கணும்." ஆதித்யா ஆர்ப்பரிக்க... ஆதிரையும் அதற்கு ஒத்து ஊதினாள்.



"ஓகே டன்." என்று சகுந்தலா இரு கரங்களின் கட்டை விரலை உயர்த்திச் சிரித்தாள்.



அப்போது அங்கு ஒரு ஆண் ஒப்பனை கலைஞன் வந்தான். சகுந்தலா என்னமோ அவனைச் சாதாரணமாகத் தான் பார்த்தாள். அவன் தான் அவளைக் கண்டு பேயை கண்டது போல் விழிகளில் பீதியை தேக்கி அங்கிருந்து ஓடி விட்டான். அதைக் கண்டு சகுந்தலாவின் இதழ்களில் அலட்சிய புன்னகை தோன்றியது.



சகுந்தலா மாடலிங் துறைக்கு வந்த புதிதில் இந்த ஒப்பனை கலைஞன் தான் அவளுக்கு ஒப்பனை செய்தது. எல்லாப் பெண்களுக்கும் செய்வது போல் அவன் சகுந்தலாவுக்கும் ஒப்பனை செய்தவன் அவளின் உடல் பாகத்திற்கும் ஒப்பனை செய்தான். அவன் அவளது நெஞ்சு பகுதி மற்றும் அந்தரங்க பகுதிகளை வேண்டுமென்றே தீண்டியது போன்று இருந்தது. அடுத்த நொடி சகுந்தலா அவனை ஓங்கி அறைந்திருந்தாள். அதற்கு அவன் கோபத்துடன் எகிறிக் கொண்டு வந்தான். பதிலுக்குச் அவளும் கோபம் கொண்டு எகிறினாள். அன்று பெரிய கலவரமே நடந்து முடிந்தது. ஆதித்யா, ஆதிரை இருவரும் தலையிட்டு பிரச்சினையை முடித்து வைத்தனர்.



அன்றே அந்த ஒப்பனை கலைஞன் கரத்தில் மின்சாரம் பாய்ந்தது. எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு மாத காலமாக அவனது கரம் செயல்படாது இருந்து அதற்குப் பிறகே சாதாரணமாகிற்று. இதற்குக் காரணம் சகுந்தலா என்று சொல்லவும் வேண்டுமோ! அந்தப் பயம் இன்றும் அவனுக்கு இருக்கின்றது.



மூவரும் தங்களது காரிலேறி வீட்டிற்குப் பயணமானர். சகுந்தலாவின் மனம் பின்னோக்கி சென்றது.



அன்று மருத்துவமனையில் இருந்து கிளம்பிய சகுந்தலா ஆதித்யா, ஆதிரையுடன் மும்பைக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்குப் படிப்பும் கிடையாது, கைத்தொழில் திறனும் கிடையாது. அதனால் அவள் அவர்களது வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்தாள். ஆதித்யா, ஆதிரை இருவரும் சகுந்தலாவை தனியே விட்டு விட்டு செல்ல மனம் இல்லாது அவளைத் தங்களுடன் பேசன் ஷோவிற்கு அழைத்துச் சென்றனர். அப்படித்தான் அவளுக்கு இந்தப் பேசன் உலகம் பழக்கமானது. ஆனாலும் சாதாரணத் தோற்றத்தில், மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறத்தில் இருந்த சகுந்தலாவை பேசன் உலகம் சீண்டவில்லை.



ஒருமுறை சகுந்தலா கோவிலுக்குச் சென்ற போது அங்கு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தாள். அவளது மனக்கவலைகளை இறக்கி வைக்கும் ஒரே இடம் கோவில் தான். அப்படி அவள் விழிகளை மூடி அமர்ந்திருந்த போது... ஒரு வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர் அவளது சாத்வீக அழகினை கண்டு அதிசயத்து தனது புகைப்படக் கருவில் அழகாக அவளைப் பதிந்து கொண்டார். அன்றே அவர் தனது சமூக வலைதளக் கணக்குகளில் அவளது புகைப்படத்தினைப் பகிர்ந்து கொள்ள... ஒரே இரவில் சகுந்தலா உலகப் புகழ் அடைந்தாள். பாகிஸ்தானில் சாய்வாலா ஒருவர் ஒரே புகைப்படத்தில் உலகப் புகழ் பெற்றது போன்று...

சமூக வலைத்தளங்கள் நல்லதுக்கும் பயன்படுகிறது. கெட்டதிற்கும் பயன்படுகிறது. ஆனால் சகுந்தலா விசயத்தில் சமூக வலைத்தளங்கள் நல்லதே செய்தது. மறுநாளே பேசன் உலகம் அவளைத் தேடி கண்டறிந்து அரவணைத்துக் கொண்டது. ஆதித்யா, ஆதிரை கூடச் சற்று யோசித்தனர். ஆனால் சகுந்தலா நொடி நேரம் கூட யோசிக்காது சரியென்று சம்மதித்து விட்டாள். தனக்குக் கிடைத்த வாய்ப்பினை அவள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு சகுந்தலாவுக்கு நிற்கவும், மூச்சு விடவும் கூட நேரமில்லை. அந்தளவிற்கு அவள் பிசியாக விட்டாள்.



சகுந்தலா மும்பை வந்ததில் இருந்து அவளது வெகுளித்தனம், அறியாமை, கிறுக்குத்தனம் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். இதனால் அவள் இழந்தது போதும். அவள் புதிதாய் மனிதர்களைப் படிக்க ஆரம்பித்தாள். நாக்கில் தேன் தடவி, மனதிற்குள் விசத்தைக் கொண்டிருக்கும் மனிதர்களை அடையாளம் காண முடிந்தால் தானே இந்த உலகில் வாழ முடியும். அவள் மனிதர்களின் விழிகளைக் கண்டு குணத்தைக் கணித்துப் பழக ஆரம்பித்தாள். அதனால் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்று அவளால் பகுத்தறிய முடிந்தது. யாரிடம் எப்படிப் பழக வேண்டும்? என்று அவள் புரிந்து நடந்து கொண்டாள்.



ஆதித்யா, ஆதிரையிடம் மட்டும் பழைய சக்குவாக இருப்பவள்... மற்றவர்களைத் திமிர், அலட்சியம் காட்டி விலக்கி வைத்தாள். அதுவே அவளுக்குப் பாதுகாப்பை கொடுத்தது. எல்லோரையும் அவளிடம் இருந்து எட்ட நிற்க வைத்து அவளைக் கவசமாகப் பாதுகாத்தது.



இந்தத் துறைக்குத் தேவை என்றெண்ணி சகுந்தலா ஆங்கிலம் கற்று கொண்டாள். அதுவும் வெறித்தனமாக... தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்று போனவள் அவள்... பொது வாழ்க்கையிலும் தோற்றுவிடக் கூடாதே என்கிற நினைப்பு தான் அவளை வெறிக் கொண்டு இயக்க வைத்தது. அனைத்தையும் அவளைக் கற்க வைத்தது. மக்கு சகுந்தலா இப்போது எல்லாவற்றிலும் திறமை, புத்திசாலி சகுந்தலாவாகி போனாள். ஆனாலும் அவளுள் பற்றியெரியும் வெறி இன்னமும் அணையவில்லை.



சகுந்தலாவிடம் நிறைய மாற்றங்கள்... பேச்சு, நடை அனைத்திலும் நிதானம் வந்திருந்தது. எதற்கு எடுத்தாலும் முந்திரி கொட்டை போன்று பேசும் சகுந்தலா மறைந்து... எதிராளியை பேச விட்டு அவர்களது மனதினை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போன்று பதிலடி கொடுக்கும் சகுந்தலா புதிதாய் பிறந்து இருந்தாள்.



மொத்ததில் சகுந்தலா மற்ற பெண்கள் போன்று மாறி இருந்தாள். மாற வேண்டிய கட்டாயம் அவளுக்கு... மக்காய் இருந்து அவள் இழந்தது எல்லாம் போதும். இனியொரு இழப்பினை, வலியை தாங்க அவளால் முடியாது.



பழசை நினைத்த சகுந்தலாவின் விழியோரம் கண்ணீர் தேங்கியது. அவள் ஆதித்யா, ஆதிரைக்குத் தெரியாது கண்ணீரை துடைத்து கொண்டாள்.



அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நின்றதும்... மூவரும் இறங்கினர். இன்னமும் சகுந்தலா அவர்களுடன் தான் வசிக்கின்றாள். அவள் தனியே செல்ல விருப்பம் கொண்டாலும், ஆதித்யா, ஆதிரை இருவரும் ஒத்து கொள்ளவில்லை. அதனால் சகுந்தலா தனக்கான வாடகையைத் தனியே அவர்களிடம் கொடுத்து விடுவாள்.



மூவரும் தத்தம் அறைக்குள் நுழைந்து கொண்டனர். சரியாய் அரை மணி நேரத்தில் மூவரும் வெளிவந்தனர். ஜீன்ஸ், டீசர்ட்டில் சகுந்தலா அழகாக இருந்தாள். அவளது மாற்றத்தை ஆதித்யா, ஆதிரை இருவரும் எப்போதும் போல் வியப்பாய்ப் பார்த்தாலும், அவளது மாற்றம் குறித்து அவர்களுக்கு மகிழ்ச்சியே.



மூவரும் நட்சத்திர விடுதியை அடைந்தனர். மூவரும் அரட்டை அடித்தபடி இரவு உணவினை உண்டனர். அப்போது பேசன் ஷோவில் கண்ட செல்வந்தனின் செயலாளர் சகுந்தலாவிடம் சென்று அவனது முதலாளி அவளிடம் தனியே பேச வேண்டும் என்று அழைப்பதாகக் கூற...



"எதுக்கு?" ஆதித்யா எகிறிக் கொண்டு வர...



"ஆதி, எதுக்குக் கோபப்படுற? பேசாம இரு." சகுந்தலா அவனை அடக்கியவள், செயலாளர் புறம் திரும்பி, "இதோ வருகிறேன்." என்றவள் அவனுடன் சென்றாள்.



அந்தச் செல்வந்தன் சகுந்தலாவை கண்டதும் ஈயென்று இளித்தான். அவன் தனது செயலாளரிடம் பணக்கற்றைக் கொடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தியவன் சகுந்தலாவை கண்டு,



"உட்காருங்க சகுந்தலாஜி. என்னுடைய பெயர் சந்தர். டைமண்ட் பிசினஸ் பண்றேன். நீங்க மட்டும் உம்முன்னு சொல்லுங்க. உங்களை டையமண்ட்டாலேயே அபிசேகம் பண்றேன்." என்று பல்லை காட்டினான்.



"ஓ, நீங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?" சகுந்தலா போலியாய் வியந்து போய் அவனைப் பார்த்தாள்.



"என்னைப் பத்தி நானே சொல்ல கூடாது. தனித் தீவு, தனி ஜெட் எல்லாம் இருக்கு. நம்ம டேட்டிங்கை நாம எந்தவித இடைஞ்சலும் இல்லாம கொண்டாடலாம். அதுக்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?" அவன் பரபரத்தபடி கேட்டான். அவனது அவசரம் அவனுக்கு...



"உங்களுக்குக் கல்யாணமாகிருச்சா?" சகுந்தலா சம்ந்தம் இல்லாது கேட்டாள்.



"ஆகிருச்சு..." அவன் புரியாது பதிலளித்தான்.



"அப்போ ஒண்ணு பண்ணுங்க. நீங்க உங்க மனைவி கிட்ட இருந்து ஒரு ரெகமெண்ட்டேசன் லெட்டர் ஒண்ணு வாங்கிட்டு வாங்க. அதுக்கு அப்புறம் நம்ம டேட்டிங்கை கொண்டாடலாம்." அவள் சற்றும் அசராது கூற...



"என்னோட மனைவி எதுக்கு ரெக்கமெண்ட் பண்ணணும்?" அவனுக்கு வியர்த்தது.



பல ஆண்களின் அந்தரங்கம் இருட்டில் என்பதால் தானே ஆட்டம் அதிகமாக இருக்கின்றது. அதுவே வெளிச்சத்துக்கு வந்தால் அடுத்த நொடி அவனை மாதிரி ஒரு கோழை உலகில் இருக்க முடியாது.
 

Sasimukesh

Administrator
"என்னைத் தொடுறதுங்கிறது சாதாரண விசயம் இல்லை மிஸ்டர் சந்துர். அதுக்குப் பெரிய இடத்தில் இருந்து ரெக்கமெண்ட்டேசன் வேணும். முதல்ல அதை வாங்கிட்டு வாங்க... அடுத்த நொடி இந்தச் சகுந்தலா உங்க மடியில் இருப்பாள்." அவள் அப்போதும் அசராது உறுதியாகக் கூறியபடி அமர்ந்திருக்க...



சந்தர் பயத்தில் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடி விட்டான். அவனைக் கண்டு சகுந்தலா வாய் விட்டு சிரித்தாள். அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வந்த போதும் அவள் சிரிப்பதை நிறுத்தவில்லை. ஆதித்யா, ஆதிரை இருவரும் அவளது இரு தோள்களிலும் கை வைக்க... அடுத்த நொடி அவளது சிரிப்பு சுவிட்ச் போட்டார் போன்று நின்றது.



"வாங்க போகலாம்." என்ற சகுந்தலா நாற்காலியில் இருந்து எழுந்து செல்ல... அவளின் பின்னேயே ஆதித்யா, ஆதிரை கவலையுடன் சென்றனர்.



வீட்டிற்குச் சென்றதும் சகுந்தலாவுக்குத் தூக்கம் வருவேனா என்றது. அவள் கணவனைப் பிரிந்து வந்து கிட்டத்தட்ட ஆறரை மாதங்களாகி விட்டது. அதாவது திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் முழுதாய் முடிந்திருந்தது. விவாகரத்திற்காக வக்கீலை நாடிய போது திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறிவிட... அப்போது அவர்களுக்குத் திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆகியிருந்தது. அதனால் ஒரு வருடம் வரை இருவரும் இணைந்து ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்று வக்கீல் வலியுறுத்த...



"ஒரே நாளில் மேரேஜ் சர்ட்டிபிகேட் வாங்கினவங்க அவங்க. அவங்க நினைச்சா நாங்க ஒரே வீட்டில் இருந்தோம்ன்னு ஆதாரம் கொடுக்க முடியும். அதைச் செய்யச் சொல்லுங்க." என்றவள் தனியே தான் வசித்து வருகின்றாள்.



இந்த ஆறரை மாதங்களாகக் கணவனைப் பிரிந்து மட்டுமல்ல... பிறந்த வீட்டினரையும் பிரிந்து தான் அவள் வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. நாராயணன் ஒரு முறை அவளைக் காண வந்தான். அவள் அவனைப் பார்க்கவே இல்லை. அவன் தோல்வியுடன் திரும்பி சென்று விட்டான். சர்வேஸ்வரன், உதயரேகாவிடம் ஆதித்யா, ஆதிரை மூலம் சொல்லி விட்டாள், தன்னால் யாரையும் பார்க்க இயலாது என்று... அவர்களும் அவளது மனம் அறிந்து தள்ளி இருக்கின்றனர்.



உறவும், அன்பும் அவளைப் பலகீனப்படுத்தும் என்பதை அவள் அறிந்தே இருந்தாள் போலும்...



********************************



பத்மினி வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் எப்போதுமே உறவுக்கு மதிப்பு கொடுப்பவள். அண்ணன், அண்ணி பிரிவு தனது பெற்றோரை வாட்டி வதைப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். அந்த நேரத்தில் தான் அவளும் வீட்டிற்குத் திரும்ப வந்தது. இரு வீட்டு பெரியவர்களும் அவளிடம் எப்படி எல்லாமோ கேட்டு பார்த்து விட்டனர். அவள் தங்களது பிரிவுக்கான காரணத்தைச் சொல்ல மறுத்து விட்டாள். அதில் இருவீட்டு பெரியவர்களுக்கும் வருத்தமே...



சக்தீஸ்வரன், சகுந்தலா வாழ்க்கை தான் பிரிவினையில் முடிந்தது என்றால்... அடுத்து நாராயணன், பத்மினி வாழ்க்கையும் அவ்வாறே... இரண்டு ஜோடிகளின் விசயத்தில் பெண்கள் தான் பிடிவாதம் பிடித்து விலகி சென்றனர். ஆண்கள் தங்களது செயலை நினைத்து மருகினர். என்ன ஒன்று சக்தீஸ்வரன் மீது தவறில்லை. ஆனால் நாராயணன் மீது அதிகத் தவறு இருந்தது. அவனது வாய் தான் அவனுக்குச் சத்ரு. அவன் கோபத்தில் அதிகம் பேசி விட்டான். அதன் பிறகு பத்மினியிடம் அவன் மன்னிப்பு கேட்க முனைந்த போது அவள் பிடி கொடுக்கவில்லை. அவனிடம் பேச மறுத்து விட்டாள்.



சக்தீஸ்வரன் கூடத் தங்கையிடம் பேசி பார்த்து விட்டான். பத்மினி காரணத்தைக் கூறவில்லை. அவள் அமைதியாக இருந்தாள். அவள் கோபமாய்க் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இருந்தால் கூட... சக்தீஸ்வரன் நாராயணனை ஒருவழி செய்து இருப்பான். ஆனால் பத்மினியின் அமைதி அவனை யோசிக்க வைத்தது. இந்த யோசனை கூட அவனின் மனைவி அவனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம் தான். பெண்களின் நுண்ணுணர்வுகளைப் படிப்பது கடினம். அவன் இப்போது தானே இதை எல்லாம் உணர்கின்றான். அதனால் அவன் தங்கை விசயத்தில் அமைதி காத்தான். அவளது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தான். அதற்காக அவனால் நாராயணனை வெறுக்கவும் முடியவில்லை. மச்சானும், மச்சானும் ஒரே படகில் பயணம் செய்தனர்.



பத்மினி தனது மேல் படிப்பை வெளிநாட்டில் படிக்கத் தான் எண்ணி இருந்தாள். ஏற்கெனவே கவலையில் இருக்கும் பெற்றோரை மேலும் கவலைக்குள்ளாக்க அவள் விரும்பவில்லை. அதனால் தான் அவள் இங்கே இருக்கும் கல்லூரியில் படிக்க முடிவு செய்தாள். அதற்கான தேர்வுக்கு அவள் ஆயத்தமாகி கொண்டிருந்தாள். அதுவரை முன்பு பயிற்சி எடுத்த மருத்துவமனையில் அவள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றாள்.



"ம்மா, வர்றேன்..." என்று விடைபெற்ற பத்மினி வாயிலுக்கு வந்தாள்.



பத்மினியின் வரவினை எதிர்பார்த்தார் போன்று நாராயணன் அங்கு அவளுக்காகக் காத்திருந்தான். இது தினசரி நடக்கும் வாடிக்கை தான். நாராயணன் விழிகள் சிவந்து காணப்பட்டது. இப்போது எல்லாம் நாராயணன் இரவில் குடித்துவிட்டு வருகின்றான். அதை அவள் அறிந்தே இருந்தாள். அப்போதும் அவள் அவன் பக்கம் திரும்பவில்லை. 'என்னவோ செய்து கொள், எதுவும் என்னைப் பாதிக்காது' என்பது போலிருந்தது அவளது நடவடிக்கை.



"மினி..." காரில் ஏற போனவளை நாராயணன் தடுத்து நிறுத்தினான். இவ்வளவு நாள் அமைதியாக அவளைப் பார்ப்பவனுக்கு இன்று தைரியம் வந்து விட்டதா? அவள் அமைதியாக நின்றாள்.



"என்னை மன்னிக்க மாட்டியா? நான் பேசியது தப்பு தான். அது ஏதோ கோபத்தில்... அதுக்காக எனக்கு உன் மேல் அன்பு இல்லைன்னு அர்த்தம் இல்லை." அவன் விளக்கம் கொடுக்க முற்பட...



பத்மினி சிறு பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள். இன்னமும் அவனது நிலை அன்பு என்றளவில் தான் இருந்தது. அது காதலாக மாறினால் தானே இது போன்ற வார்த்தைகள் அவனது வாயில் இருந்து வராது. இல்லை என்றால் அனுபமா நிலை தான் அவளுக்கும்...



"உங்களை மன்னிக்க நான் யார்?" அவள் வார்த்தைகளில் அவனைத் தள்ளி வைத்தாள். அவளது வார்த்தைகளில் அவன் விக்கித்து நின்றான். அவள் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டாள்.



நாராயணன் அவளைக் காதலியாக எண்ண வேண்டாம். மனைவியாக எண்ணி இருக்கலாம். அப்படி எண்ணி இருந்தால் இந்த மாதிரி பேசி இருக்க மாட்டான். அவன் அவளை இன்னமும் மனதார உணரவில்லை. அதனால் தான் அவன் தனது பேச்சால் அவளைத் தள்ளி நிறுத்தி வைத்து இருக்கின்றான். இப்போது அவளும் அதையே செய்யும் போது அவனுக்கு வலித்தது. அதே வலி தானே அவளுக்கும் இருக்கும் என்பதை அவன் உணர வேண்டும். உணரும் போது தான் அவர்களது உறவு இணையும்.



உதயரேகா மகளையும், மருமகனையும் பார்த்தவள் முகத்தில் கவலை சூழ்ந்தது. சர்வேஸ்வரன் மனைவியின் முகத்தைப் பார்த்துவிட்டு, "என்னாச்சு பேபி?" என்று கேட்க...



"ரெண்டு பிள்ளைங்களைப் பெத்தோம். ஆனா ஒண்ணு கூட நம்மளை மாதிரி சந்தோசமா வாழலையே." அவள் வருத்தமாகக் கூற...



மனைவி கூற வருவது சர்வேஸ்வரனுக்கும் புரியத்தான் செய்தது. அவனால் என்ன செய்ய முடியும்? ஒரு எல்லைக்கு மேல் பிள்ளைகளாக இருந்தாலும் அவனால் உள்ளே செல்ல முடியாது. அறிவுரை கூற முடியும். அவர்களது கையைப் பிடித்துத் தள்ளி வாழ வைக்க முடியாது இல்லையா?



"சக்கு என்னடான்னா சக்தியை பிரிஞ்ச மாதிரி இல்லை. அவள் சந்தோசமா தான் இருக்கின்றாள். நேத்து கூடப் பேசன் ஷோ பார்த்தேன். முன்னே மாதிரி அவள் இல்லை. நிறைய மாறி விட்டாள். ப்ச், அவள் எப்படியோ போகட்டும். என் மகன் வாழ்க்கைக்கு நல்ல பதிலை சொல்லுங்க." உதயரேகா கோபமாய்ப் படபடத்தாள்.



"நான் என்ன பண்ண?" சர்வேஸ்வரன் திகைத்தான்.



"உங்க அருமை மருமகளுக்குப் புத்தி சொல்லி என் மகன் கூடச் சேர்ந்து வாழ சொல்லுங்க."



"அது எப்படி? சக்கு மனசில் என்ன இருக்கோ?" சர்வேஸ்வரன் அப்போதும் மருமகளை நினைத்து தான் யோசித்தான்.



"உங்களுக்கு உங்க மருமகள் தான் முக்கியமா போய்விட்டாள். அவளுக்காகப் பெத்த மகனோட வாழ்க்கையைப் பாழாக்க போறீங்களா? எனக்கு என் மகன் வாழ்க்கை முக்கியம்." உதயரேகாவுக்குக் குமுறிக் கொண்டு வந்தது.



"அதுக்கு என்ன பண்ண போற?"



"சக்திக்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்." அவள் உறுதியாகச் சொல்ல...



"ஏய், என்னடி இது?"



"அதான் உங்க மருமகள் டிவோர்ஸ் வேணும்ன்னு சொல்லிட்டாள்ல. அப்புறம் என்ன? அதை மீறி அவள் சண்டைக்கு வந்தால்... வரட்டும், நான் பார்த்துக்கிறேன்." உதயரேகா ஆக்ரோசமாய்ச் சொல்ல... சர்வேஸ்வரன் வாயை மூடி கொண்டான்.



மனைவி சொல்வதும் சரி தான். விவாகரத்து கோரும் மருமகளிடம் மீண்டும் மகனோடு வாழு என்று சொல்ல முடியாது. அதேசமயம் மகனது வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. சர்வேஸ்வரன் இரண்டு மனதாக அமர்ந்து இருந்தான்.



அப்போது சக்தீஸ்வரன் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டி கிளம்பி வந்தான். அதே கம்பீரம், அதே ஆளுமை... மனைவியைப் பிரிந்த சோகம் அவனுள் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போது எல்லாம் அவன் பழைய சக்தீஸ்வரனாக இயந்திர மனிதனாக மாறிவிட்டானோ என்று உதயரேகாவுக்குச் சந்தேகம் இருக்கின்றது.



"சாப்பிட்டு போ சக்தி." உதயரேகா மகனை கண்டதும் எழுந்தாள்.



சக்தீஸ்வரன் அன்னை சொல் கேட்டு உணவு மேசையை நோக்கி நடந்தான். அவன் அமர்ந்ததும் உதயரேகா பரிமாறினாள். அவன் எதுவும் பேசாது உணவை உண்டான். அவனுமே பெற்றோருக்காக இங்கேயே தங்கி விட்டான். தீவு வேலைகளை வருண், கமல் இருவரும் பார்த்து கொண்டனர். சக்தீஸ்வரன் எப்போதாவது ஒரு முறை அங்குச் சென்று பார்த்து வந்தான்.



"வர்றேன்ம்மா, வர்றேன்ப்பா..." என்று விடைபெற்று சென்ற மகனை இருவரும் கவலையுடன் பார்த்திருந்தனர். பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கவலை இருவரையும் அழுத்தியது.



சக்தீஸ்வரன் நேரே அலுவலகம் வந்து அங்கிருந்த வேலைகளை முடித்து விட்டு... பின்பு பிரபல தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டி கொடுப்பதற்காகத் தயாரானான். அவர்களும் வந்துவிட... பேட்டி ஆரம்பமானது. முதலில் எப்போதும் போல் ஒரு தொழிலதிபரிடம் என்ன கேட்க வேண்டுமோ... அதை எல்லாம் பேட்டியாளர் கேட்டார். எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இறுதியாகப் பேட்டியாளர் விசமம் கொண்டு சக்தீஸ்வரனின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.



"உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா?" என்று கேட்டவரை கண்டு அவனது விழிகள் இடுங்கியது.



"ஆம்..." அவன் பதில் சொல்ல தயங்கவில்லை.



"உங்க மனைவி எங்கே?"



"அது எதற்கு உங்களுக்கு?" அவன் மிடுக்கு குறையாது பதிலுக்குக் கேட்க...



"உங்க மனைவி ஓடி போய்விட்டதா கேள்விப்பட்டேனே." என்று பேட்டியாளர் இழுக்க...



சக்தீஸ்வரன் அமைதியாக அவரைப் பார்த்தான்.



"நீங்க ஆண்மை இல்லாதவர்ன்னு கேள்விப்பட்டுத் தான்... உங்க மனைவி உங்களை விட்டு ஓடி போய்விட்டதா சொல்றாங்களே உண்மையா?" விசமத்துடன் விசத்தைத் தடவி கேள்வி வந்தது.



அப்போது தான் சக்தீஸ்வரன் அந்த வார்த்தைகளை உதிர்த்தான். அதைக் கேட்டு பேட்டியாளரின் முகம் அதிர்ந்து போனது.



"வாட்? என்ன சொன்னீங்க? எவ்வளவு தைரியம் இருக்கணும்?" அவர் கோபத்துடன் கேட்க...



"நான் சொன்னது புரியலையா மிஸ்டர்? நான் ஆண்மை உள்ளவனா? இல்லையா?ன்னு தெரிஞ்சிக்க... உன் மனைவி அல்லது உன் மகளை என்னிடம் அனுப்பி விடு. ஒன் நைட் ஸ்டே மட்டுமே. அடுத்த நாள் அவங்க வந்து சொல்லுவாங்க." அவன் அமர்த்தலான, அலட்டி கொள்ளாத குரலில் சொன்னான்.



"இப்படிப் பேச உங்களுக்கு அசிங்கமா இல்லையா? நான் உங்க மேல கேஸ் ஃபைல் பண்ணுவேன்." அவர் எகிற...



"நானும் உங்க மேல் கேஸ் ஃபைல் பண்ணுவேன். நீங்க கேட்ட கேள்வியோட தரம் அப்படி. நீங்க என்ன செய்றீங்களோ? அதே தான் உங்களுக்குத் திருப்பிக் கிடைக்கும். பேசும் முன் யோசிச்சு பேசுங்க. நீங்க பேசியது எல்லாம் நாங்க ரெக்கார்ட் பண்ணிட்டோம். ஆனா நான் பேசியது எதுவும் ரெக்கார்ட் ஆகவில்லை." என்று சொன்னவன் கேமிராவை கை காட்டினான்.



அங்குச் சக்தீஸ்வரனின் செயலாளர் துப்பாக்கியை காட்டி கேமிராமேனை மிரட்டி வீடியோ எடுக்க விடாது தடுத்து இருந்தார். அதேசமயம் சக்தீஸ்வரனின் ஆள் ஒருவன் இந்தப் பேட்டியை தனியே வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான்.



"சோ, நீங்க கேஸ் போட்டாலும் ஜெயிக்க முடியாது." என்றவனைக் கண்டு பேட்டியாளர் அரண்டு போய்ப் பார்த்தார்.



"போங்க மிஸ்டர்... கோடி கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்கத் தயாரா இருங்க." என்றவன் இரு கரங்களையும் கூப்பியபடி எழுந்தான்.



பேட்டியாளர் முகத்தில் ஈயாடவில்லை.



"நானே பக்கா கிரிமினல். என் கிட்டேயேவா? கொன்னு புதைச்சிருவேன்." அவரைக் கண்டு மிரட்டலாய் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான்.



பழைய சக்தீஸ்வரன் திரும்பி இருந்தானோ! இடையில் இருந்த மென்மையான சக்தீஸ்வரன் காணாது போயிருந்தானோ!



தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
இப்போது ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!’ - இரண்டாம் பாகம் அமேசான் கேடிபியில்… படித்து மகிழுங்கள் தோழமைகளே ❤️❤️❤️

India :

US :

Australia :

Canada :

‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!’ - முதல் பாகம் ❤️❤️❤️

India :

US :

UK :

Canada :

Australia :

France :

 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 42



சகுந்தலா மழலையர்களோடு தானும் ஒரு மழலையாய் மாறி அவர்களுக்குக் கதை சொல்லி கொண்டிருந்தாள். என்ன ஒரு வித்தியாசம் என்றால்... முன்பு தமிழில் கதை சொன்னவள், இப்போது ஆங்கிலத்தில் கதை சொல்லி சிறியவர்களைச் சிரிக்க வைக்கின்றாள். சிந்திக்கவும் வைக்கின்றாள். குழந்தைகளுக்குக் கதை சொல்லுவது, ஸ்டேண்டப் காமெடி இரண்டையும் அவள் விட்டு விடவில்லை. அவளது மனதினை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் இவ்விரண்டுமே... அதனால் தான் அவள் இரண்டையும் விடாது செய்து வருகிறாள். அவளது ஸ்டேண்டப் காமெடிக்கு எப்போதுமே கூட்டம் அதிகம் உண்டு. முன்பே அப்படித்தான். இப்போது மாடலிங் துறைக்கு வந்த பிறகு அவள் இன்னமும் புகழ் பெற்று விட்டாள். அதனால் அவளது நகைச்சுவையைக் கேட்க ஆள்கள் வருகிறதோ இல்லையோ, அவளது அழகினை கண்டு ரசிக்க ஆள்கள் வருவதுண்டு.



சகுந்தலா தனது மடியில், அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளை வாஞ்சையுடன் வருடி கொடுத்தாள். அவளது மனதில் அவளது குழந்தையைப் பற்றிய நினைவுகள் கடலலை போன்று ஆர்ப்பரித்தது. அவளது குழந்தை கலையாது இருந்திருந்தால்... அவள் குழந்தையை நல்லபடியாகப் பிரசவித்து இருப்பாள். இந்நேரம் அவளது குழந்தை அவளது கரங்களில் தவழ்ந்து இருக்கும். குழந்தையைப் பற்றி நினைத்ததுமே அவளுள் ஏதோ ஒருவித மன அழுத்தம் அவளை அழுத்தியது. இன்னமும் அவளால் பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.



"ஆன்ட்டி..." ஒரு குழந்தை அவளை அழைத்து அவளது கவனத்தைத் திருப்ப... அவள் மீண்டும் அந்த மழலைகளுடன் ஐக்கியமாகி விட்டாள்.



சகுந்தலா தனது வேலை முடிந்ததும் அந்தப் பள்ளியை விட்டு வெளியில் வந்தாள். அப்போது அவளது அலைப்பேசி அழைத்தது. யார் அழைப்பது? என்று அலைப்பேசியைப் பார்த்தவளுக்கு அவளையும் அறியாது அவளது இதழ்களில் புன்னகை தோன்றியது. மாடலிங் துறையில் அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு உற்ற நண்பன் என்றால் அது தாஸ் மட்டும் தான். இப்போது அவன் தான் அவளை அழைத்திருந்தது.



அவள் அலைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தவள், "ஹேய் தாஸ், சர்ப்ரைஸ் மேன்? எப்போ இந்தியா வந்த?" என்று அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டாள்.



"இன்னைக்குக் காலையில் தான். வந்ததும் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு எழுந்த பிறகு, முதல்ல உனக்குத் தான் ஃகால் பண்ணினேன்." தாஸ் ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்தான்.



"நேத்து ஷோவில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் தாஸ். நீ இருந்து இருந்தால் எனக்குக் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கும்."



சகுந்தலா கூறுவது உண்மை தான். மற்ற ஆண்களைத் தொட்டு, அணைத்து என்று தொழில்ரீதியாய் நடந்து கொண்டாலும்... அது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. இதே இது தாஸ் என்றால்... அவளுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.



"நானும் தான்... என்ன செய்ய? பாரீஸ் போக வேண்டிய சிட்சுவேசன். சரி, அதை விடு... நீ இப்போ எங்கே இருக்க?"



"ஸ்கூலுக்கு வந்தேன்."



"தென் ஓகே... அதுக்குப் பக்கத்துல இருக்கிற நம்ம பேவரைட் கஃபேல வெயிட் பண்ணு. நான் பத்து நிமிசத்தில் அங்கே வந்திர்றேன்."



"மும்பை டிராபிக்கில் நீ பத்து நிமிசத்தில் வர போறியா? சூப்பர்மேனா இருந்தால் கூட அது முடியாது." என்று கூறி அவள் கலகலவெனச் சிரிக்க...



"அதெல்லாம் தாஸ் நினைச்சா வருவானாக்கும்." என்று கெத்தாகக் கூறிய தாஸ் அழைப்பை துண்டித்தான்.



சகுந்தலா வாடகை கார் எடுத்துக் கொண்டு தாஸ் சொன்ன கஃபேக்கு சென்றாள். எப்படியும் தாஸ் வர தாமதமாகும். அதனால் அவள் ஒரு கோல்ட் காபி வாங்கிக் கொண்டு அமர்ந்தாள். அவளது நினைவில் தாஸை பற்றிய எண்ணங்கள். தாஸ்க்கு தந்தை யார் என்பது இப்போது வரை தெரியாது. அன்னை தான் அவனை வளர்த்தது. அவரும் இறந்துவிட... அவன் தனியாளாகி போனான். ஆனால் அதை எல்லாம் அவன் வெளிக்காட்டி கொண்டது இல்லை.



"எவனோ பெரிய பணக்காரனோட எச்சம் நான்..." அவன் தன்னைக் குறித்து இப்படித்தான் கூறி கொள்வான். அதற்காக அவன் வருத்தப்பட்டது கிடையாது.



தாஸ் அப்படிக் கூறுவதற்குக் காரணம் அவனது அழகு. நீல நிற விழிகளுடன் ஹாலிவுட் ஹீரோ போன்று அவன் அத்தனை அழகாக இருப்பான். அவனது அழகு, கம்பீரத்துக்காகவே அவனுக்கு மாடலிங் துறையில் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் அவன் கஷ்டப்பட்டுத் தான் இந்த நிலையை அடைந்தது.



அதனால் தான் அவன் சகுந்தலாவை கண்டு, "ஒரே நாளில் ஒபாமாவானது நீ மட்டும் தான்." என்று அவளைக் கலாய்ப்பான்.



"டாலு..." தாஸின் அழைப்பில் சகுந்தலா தன்னுணர்வு பெற்று ஏறிட்டு பார்த்தாள்.



தாஸ் அழகான புன்னகையுடன் அவளின் முன்னே நின்றிருந்தான். அவனைக் கண்டதும் அவள் தனது அலைப்பேசியைப் பார்த்தவள்,



"இது தான் நீ சொன்ன பத்து நிமிசமா?" என்று போலி கோபத்துடன் கேட்க...



"அது வந்து டாலு..." என்றபடி நாற்காலியில் அமர்ந்தவனைக் கண்டு,



"நான் கோல்ட் காபி குடிச்சு ஒரு மணி நேரமாச்சு. முதலில் சாப்பிட ஏதாச்சும் ஆர்டர் பண்ணலாம். அதுக்குப் பிறகு நாம பேசலாம்." சகுந்தலா சொன்னதும்...



"ஓகே ஓகே..." என்று சரணடைந்தான் அவன்.



இருவரும் ஆர்டர் கொடுத்து விட்டு, "அப்புறம் சொல்லு?" என்று ஒருசேர ஆரம்பித்தனர். பின்பு இருவருமே சிரித்துக் கொண்டனர்.



"நீ சொல்லு தாஸ். உன்னோட பாரீஸ் ட்ரிப் எப்படிப் போச்சு?" சகுந்தலா ஆரம்பிக்க...



"அதை ஏன் கேட்கிற? அமோகமா போச்சு. தினமும் ஒரு பொண்ணு கூட டேட்டிங் தான். ஜாலி தான். மஜா தான்." என்று சொல்லி கொண்டே போனவன் சகுந்தலாவின் கசங்கிய முகத்தைக் கண்டு அப்படியே நிறுத்தி கொண்டான்.



"ஹேய் டாலு, ஏன் உன் முகம் இப்படிப் போகுது? நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?" அவன் சகுந்தலா முகத்தின் முன்னே தனது கரத்தினை ஆட்டினான்.



"ஒருவனுக்கு ஒருத்தி என்கிற எண்ணம் எல்லாம் உனக்குக் கிடையாதா?" என்று கோபத்துடன் கேட்டவளை கண்டு அவன் திகைத்து விழித்தான்.



"டாலு..."



"உனக்குன்னு ஒரு மனைவி வரும் போது... உன்னுடைய இந்தப் பழக்கம் எல்லாம் தெரிந்தால் அவளுடைய மனசு கஷ்டப்படாதா?" இதைக் கேட்கும் போதே அவளது முகத்தில் அத்தனை வேதனை.



தாஸ் சகுந்தலாவின் முகத்தினை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை அவன் திருமணம், மனைவி பற்றி எல்லாம் யோசித்துப் பார்த்தது கிடையாது. ஆனால் இப்போது அவன் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.



"நான் எப்பவுமே இப்படித்தானே டாலு. இப்போ என்ன திடீர்ன்னு?" அவனது குரல் மென்மையாக ஒலித்தது.



"அது எல்லாம் கேள்விப்பட்டது தான். வதந்திகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா நீயே இதைச் சொல்லும் போது கஷ்டமா இருக்கு."



"உனக்குப் பிடிக்கலைன்னா... நான் இந்தப் பழக்கத்தை எல்லாம் விட்டுர்றேன். போதுமா? அதுக்காக முகத்தை இப்படித் தூக்கி வச்சுக்காதே." அவன் ஆறுதலாய் அவளது கரத்தினைப் பற்றினான்.



"உண்மையாவா?" அவள் ஆச்சிரியத்துடன் கேட்டாள்.



"உன் கிட்ட நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே." அவன் கூறியபடி அவளது கரத்தின் மீது சிறு அழுத்தம் கொடுத்தான்.



தாஸ்க்கு சகுந்தலாவின் முந்தைய வாழ்க்கை பற்றித் தெரியாது. அவளுக்குத் திருமணமானதோ, குழந்தை கலைந்ததோ, கணவனைப் பிரிந்ததோ... இது எதுவுமே அவனுக்குத் தெரியாது.



சகுந்தலா நினைவுகள் சக்தீஸ்வரனிடம் சென்று சிக்கி கொண்டு தவித்தது. அவனது பெண்கள் சகவாசம் பற்றி அறிந்து அவள் கொண்ட வேதனை அவளுக்குத் தானே தெரியும். இதோ இப்போதும் அவளுக்கு அது வேதனையைத் தருகிறதே. அவள் துக்கத்தை விழுங்கி கொண்டு அமர்ந்து இருந்தாள்.



"டாலு..." தாஸ் அழைத்ததும் அவனைப் பார்த்தவள்,



"அது எப்படி நான் சொன்ன வார்த்தைக்காக நீ உடனே மாறிடுவேன்னு சொல்றியே? இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?" அவள் கேலியாய் கேட்க...



"நீ கேட்டதுக்குப் பிறகு நோ அப்பீல்." அவன் இரு கரங்களையும் தூக்கி சரணடைவது போன்று சொல்ல...



அப்போதும் அவள் மனதில் சக்தீஸ்வரனின் நினைவுகளே. தன்னைக் காதலித்த பிறகு பெண்கள் சகவாசத்தை விட்டொழித்து விட்டதாய் அவனும் கூறினானே. இன்று ஏனோ அவளது மனம் கணவனிடமே சென்று சரணடைந்தது. அவள் வலுக்கட்டாயமாய் மனதினை நடப்பிற்குத் திருப்பினாள்.



உணவு வந்தும் இருவரும் பேசி சிரித்தபடி உண்டு கொண்டிருந்தனர்.



*************************



உதயரேகா கோபத்துடன் அமர்ந்து இருந்தாள். அவளது விழிகள் அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவளது தோழி ஒருத்தி சகுந்தலா, தாஸ் இருவரும் சிரித்துப் பேசி கொண்டிருந்த காணொளியை அனுப்பி இருந்தார். அந்தக் கஃபேயில் அந்தப் பெண்மணியும் இருந்திருப்பார் போலும். அவருக்குச் சகுந்தலாவை நன்கு அடையாளம் தெரிந்தது. ஊர் வம்பை ரசிக்கும் அவர் முதல் வேலையாகக் காணொளி எடுத்து தோழிக்கு அனுப்பித் துக்கம் விசாரித்து விட்டு தான் அழைப்பை வைத்தார். அதாவது சக்தீஸ்வரனுக்குத் தாம்பத்திய உறவில் ஏதோ பிரச்சினை இருப்பதாகவும், அதனால் தான் சகுந்தலா அவனை விட்டு பிரிந்து விட்டாள் என்று அவர் தனது சந்தேகத்தை உதயரேகாவிடம் கொளுத்தி போட்டார். ஏதோ சக்தீஸ்வரன் ஆணே இல்லாதது போன்று அவர் பேசியது கண்டு உதயரேகா கொதிநிலைக்குச் சென்று விட்டாள். இதற்கு உடனே தீர்வு காண வேண்டி அவள் ஆத்திரத்துடன் குடும்பத்தினர் வருகைக்காகக் காத்திருக்கலானாள்.



மாலையானதும் ஒவ்வொருவராக வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் வந்ததும் பஞ்சாயத்து ஆரம்பமானது.



"சாந்தி, நீ போய்க் கணபதி, விஜயா, நாராயணனை கூட்டிட்டு வா." உதயரேகா கட்டளையிட... சாந்தி அங்கிருந்து வேகமாய்ச் சென்றார்.



"எதுக்கு அவங்களை எல்லாம் கூட்டிட்டு வர சொல்லுற உதி?" சர்வேஸ்வரன் ஒன்றும் புரியாது மனைவியிடம் கேட்க...



பத்மினிக்கும் அதே கேள்வி தான்... ஆனால் அவள் ஒன்றும் பேசாது அமைதி காத்தாள். சக்தீஸ்வரன் கரங்களைக் கட்டியபடி அமைதியாக நின்றிருந்தான். அவனது இறுக்கமான முகத்தில் இருந்து எதுவும் உணர முடியவில்லை. ஆகாஷ், வித்யா எதுவும் பேசாது இருந்தனர்.




ஐந்து நிமிடங்களில் கணபதி, விஜயா, நாராயணன் மூவரும் அங்கு வந்து சேர்ந்தனர். மூவரின் முகத்திலும் யோசனைகளும், குழப்பங்களும்...
 

Sasimukesh

Administrator
"வாங்க..." சர்வேஸ்வரன் மூவரையும் வரவேற்றான்.



"வாங்க..." பத்மினி மாமனார், மாமியாரை மட்டும் வரவேற்றாள். அவள் கணவன் புறம் திரும்பவில்லை. ஆனால் நாராயணனின் விழிகள் மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.



ஆகாஷ், வித்யா மூவரையும் வரவேற்க... சக்தீஸ்வரன், உதயரேகா இருவரும் மூவரையும் வரவேற்கவில்லை.



"என்ன விசயமா வர சொன்னீங்க?" நாராயணன் தான் முதலில் ஆரம்பித்தான்.



"முதல்ல உட்காருங்க." சர்வேஸ்வரன் மூவரையும் அமர சொல்ல...



கணபதி, விஜயா இருவரும் தயக்கத்துடன் அமர்ந்தனர். நாராயணன் அவர்கள் அருகில் நின்று கொண்டான்.



"இப்போவாவது சொல்லுங்க... என்ன விசயம்?" நாராயணன் கேட்கவும்...



"எனக்கும் தெரியலை. உங்க அத்தை தான் உங்க எல்லோரையும் வர சொன்னது." சர்வேஸ்வரன் பார்வை மனைவி மீது பதிந்தது.



உதயரேகா எதுவும் பேசாது கையில் இருந்த அலைப்பேசியை எடுத்து காணொளியை ஒளிபரப்பினாள். அதைப் பார்த்ததும் கணபதி, விஜயா இருவரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். சக்தீஸ்வரன் எதுவும் பேசாது இறுக்கமாய் நின்றிருந்தான். ஆகாஷ், வித்யா புரியாது அமர்ந்து இருந்தனர்.



"இப்போ இதை எதுக்குப் போட்டு காட்டுற உதி?" சர்வேஸ்வரன் குரல் சற்று கோபத்தோடு உயர்ந்தது.



"அத்தை, இதில் எதுவும் தப்பு இருக்கா?" நாராயணன் தனது மாமியாரை கூர்மையாய் பார்த்தான். அவனுக்கு உதயரேகாவின் செயல் உவப்பாக இல்லை.



"ஆம், தப்பு தான். எல்லாமே தப்பு தான். உன் தங்கை..." 'எங்க சக்கு' என்று வாய் நிறையப் பாசமாக அழைக்கும் உதயரேகா இன்று சகுந்தலாவை 'உன் தங்கை' என்று கூறியது மூவருக்கும் சற்று நெருடலாக இருந்தது.



"உன் தங்கைக்கு என்ன... அவள் பாட்டுக்கு அங்கே போய் உட்கார்ந்துக்கிட்டாள். ஆனால் இங்கே அவமானப்படுறது என் மகன் தானே." உதயரேகா கோபத்துடன் ஆரம்பித்தவள் முடிக்கும் போது அழுகையுடன் முடித்தாள்.



"இப்போ என்னவானது உதி?" சர்வேஸ்வரன் ஆறுதலுடன் கேட்க..



"இன்னும் என்ன நடக்கணும்? என் பிரெண்ட் தான் இந்த வீடியோவை எடுத்து அனுப்பியது. உன் மகனுக்கு உடம்புல எதுவும் கோளாறா? அதனால் தான் உன் மருமகள் அவனை விட்டுட்டு ஓடி போயிட்டாளான்னு நாக்கு கூசாம கேட்கிறாள். நான் நாகரீகமா உங்க கிட்ட சொல்லுறேன். ஆனா அவள் என் கிட்ட அப்படிச் சொல்லலை. நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேட்டாள்." சொல்லும் போதே உதயரேகா விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.



அப்போதும் சக்தீஸ்வரன் எதுவும் பேசவில்லை. அதே இறுக்கம் தான்.



"நீங்க என் தங்கையைச் சந்தேகப்படுறீங்களா?" நாராயணன் உதயரேகாவை பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டாலும்... அவனது பார்வை முழுவதும் சக்தீஸ்வரன் மீதே இருந்தது.



"உன் தங்கையை நான் சந்தேகப்படலைப்பா. ஆனா எல்லோரும் என் மகனை சந்தேகப்படுறாங்களே. அதுக்கு என்ன சொல்ல போற?" உதயரேகா ஆக்ரோசத்துடன் கேட்டாள்.



நாராயணன் இதற்கு என்ன பதில் சொல்ல கூடும்? அவன் அமைதி காத்தான்.



"இதுக்கு மேல என்னால் பொறுமையா இருக்க முடியாது. ஒண்ணு உன் தங்கையை என் மகனோடு வாழ சொல்லு. இல்லைன்னா...?" என்று நிறுத்தியவள்,



"டிவோர்ஸ் வரைக்கும் என்னால் பொறுமையா இருக்க முடியாது. என் மகனுக்கு மறு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன். அதுக்குச் சக்கு இடையூறா இருக்கக் கூடாது. அவள் கைப்பட இதை எழுதி கொடுக்கணும். முதல்ல அவளை அதைச் செய்யச் சொல்லுங்க. உங்க வீட்டு பொண்ணு பண்ணுற தப்புக்கு என் மகன் சிலுவை சுமக்க முடியாது. என் மகனுக்கு என்ன குறைச்சல்? அவன் ஆளுமை, கம்பீரம் யாருக்கு வரும்? இப்போ எல்லாமே கேலிக்கூத்தாகி இருக்கு. அவனோட ஆண்மை அசிங்கப்பட்டுப் போயிருக்கு. இதுக்கு ஒரே வழி, அவனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணுறது தான்." உதயரேகா மூச்சடைக்க ஆவேசமாய்ப் பேசினாள்.



எந்தத் தாய்க்கு தான் தனது மகனை பற்றி இப்படிக் கூறும் போது கோபம் வராது இருக்கும்.



"அப்படியா சம்பந்தி? அப்போ என்னுடைய மகனுக்கும் ஒரு நல்ல வழியைச் சொல்லுங்க." விஜயா நக்கல் குரலில் கேட்டார்.



விஜயா சொன்னதைக் கேட்டு எல்லோரும் திகைத்து போயினர். சக்தீஸ்வரன் கூடத் திடுக்கிட்டு போய் விஜயாவை பார்த்தான். பத்மினி உறைந்து போய் நின்றிருந்தாள்.



"ம்மா..." நாராயணன் அன்னையை அதட்ட...



"விஜயா..." கணபதியும் மனைவியை அதட்டினார்.



"நீ சும்மா இரு நாராயணா. அவங்க மகனுக்கு ஒரு நியாயம். உனக்கு ஒரு நியாயமா? அவங்க மகன் மாதிரி தானே நீயும் உன் வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிற்கிற. அதுக்கு அவங்களை ஒரு நல்ல பதிலை சொல்ல சொல்லு." விஜயா தானும் ஒரு சிறந்த மாமியார் தான் என்று நிரூபித்தார்.



"என் மகன் உங்க பொண்ணு கூட வாழத்தான் நினைக்கிறான். ஆனால் அவள் தான் அவனை வேண்டாம் என்கிறாள்." உதயரேகா மகனை தாங்கி பேச...



"அதே தான் இங்கேயும்... என் மகன் உங்க பொண்ணு கூட வாழத்தான் நினைக்கிறான். ஆனால் மினி தான் இறங்கி வர மாட்டேங்கிறாள். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத என் மகன்... இப்போது எல்லாம் குடிச்சிட்டு வர்றான். என் மகளுக்குப் புத்தி சொல்றதுக்கு முன்... நீங்க உங்க மகளுக்குப் புத்தி சொல்லுங்க." விஜயாவும் ஆவேசத்துடன் பேசினார்.



"ம்மா, இப்போ எதுக்கு இந்தக் கதை எல்லாம்...?" நாராயணன் மீண்டும் அன்னையை அதட்டினான்.



"இப்போ பேசாம வேற எப்போ பேச சொல்லுற? அவங்க மகனுக்கு அவங்க தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கட்டும். அதே மாதிரி நாங்களும் உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறோம். அதுக்கு மினியோட சம்மதம் தேவை." விஜயா வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசினார்.



"ம்மா, இந்த நொடி வரை மினி என் மனைவி தான்ம்மா. ஏன் இப்படிப் பேசுறீங்க?" நாராயணனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.



"அப்படியா? அப்படின்னா வந்து உன் கூட வாழ சொல்லு. இல்லையா... ஒதுங்கி கொள்ளச் சொல்லு." விஜயா மருமகளைக் கண்டிப்புடன் பார்த்தார்.



அதுவரை பத்மினிக்கு இருந்த தைரியம் எங்கே போனது? என்று தெரியவில்லை. நாராயணன் மீது கோபம் இருக்கிறது தான். அதற்காக அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை. இவ்வளவு ஏன்? அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் இதுவரை தோன்றியது கூட இல்லை. கணவன், மனைவி ஊடலாகத் தான் அவர்களது சண்டை இதுவரை இருந்தது. அவளுக்குப் பயமாக இருந்தது. தனது காதல் கை நழுவி போய்விடுமோ என்று...



"மினி என் கூட வாழ்ந்தாலும் வாழலைன்னாலும் அவள் தான் என்னுடைய மனைவி. இதில் எந்த மாற்றமும் இல்லை." நாராயணன் உறுதியாகக் கூற...



"அப்போ நம்ம சக்கு வாழ்க்கை மட்டும் என்ன தக்காளி தொக்கா?" விஜயா எகிற...



"அது அவள் பாடு... சக்தி பாடு. இதுக்கு இடையில் ஏன் எங்க இரண்டு பேரையும் இழுக்கிறீங்க?" என்று நாராயணன் அன்னையைக் கடிந்தவன் பின்பு நேரே மனைவி முன் வந்து நின்றான்.



"இதுக்கு மேலேயும் நமக்கு இடையில் மத்தவங்களை அனுமதிக்கப் போறியா?" நாராயணன் பத்மினியை கண்டு நேருக்கு நேராய் கேட்டான். அதாவது அம்மாவே என்றாலும் கணவன், மனைவிக்கு இடையில் மூன்றாம் மனிதர் தான் என்று அவன் சொல்லாது சொல்ல...



பத்மினி விழிகளில் கண்ணீர் நிறையக் கணவனைப் பார்த்தாள். அன்று அவன் பேசிய வார்த்தைகள் கொண்டு அவளது மனதில் சுணக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த நொடி கணவன் அதே போன்று வார்த்தைகளால் அவளது மனதினை குளிர்விக்கச் செய்திருந்தான்.



குடும்பத்தின் முன் கணவனுக்குத் தான் யாரோ தானே என்று நினைத்து தான் பத்மினி இதுநாள் வரை குமுறி கொண்டிருந்தாள். அவளது மனக்குமுறல் இன்று தான் தீர்ந்திருந்தது. அவளது கணவன் தனக்காக அவனது அன்னையைக் கூடத் தூக்கி எறிய துணிந்து விட்டானே. அவளுக்கு இது போதும் என்றே தோணியது.



"உனக்கு விருப்பம் இருந்தால் என் கூட வா. நமக்குள்ள பிரச்சினைகளை நாமளே பேசி தீர்த்துப்போம். இல்லைன்னா இப்படித்தான் மத்தவங்க பஞ்சாயத்து பண்ணுவாங்க." என்று அன்னையைச் சுட்டிக்காட்டிய நாராயணன் தனது வலக்கையை மனைவி புறம் நீட்டி,



"வா..." என்று நம்பிக்கையுடன் அழைத்தான். அவன் 'வருகிறாயா?' என்று அவளின் அனுமதியை கேட்கவில்லை. மாறாக அவன் அவளைத் தன்னுடன் வருமாறு அழைத்தான்.



பத்மினி மனம் நிறைய விழிகளில் விழிநீரோடு கணவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அதீத மகிழ்ச்சியில் அவள் சிலையாய் உறைந்து போயிருந்தாள்.



"ம்ஹூம், இதுக்கு மேல உன்னை விட்டால் அவ்வளவு தான்... இவங்க எல்லோரும் சேர்ந்து நம்மளை பிரிச்சிருவாங்க." நாராயணன் தானே மனைவியின் கரத்தினை இழுத்து இறுக பற்றிக் கொண்டான்.



அதைக் கண்ட சக்தீஸ்வரனின் உதடுகளில் சிறு புன்னகை ஒன்று உதயமானது. தங்கை வாழ்க்கை சீரானதில் வந்த நிம்மதி புன்னகையோ! அப்போதும் அவன் தனது வாழ்க்கையைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.



"இப்போ உங்களுக்குச் சந்தோசமா? உங்க மகளோட வாழ்க்கை சரியாகிருச்சு. ஆனா என்னோட மகள் வாழ்க்கை?" விஜயா முந்தானை கொண்டு விழிகளைத் துடைத்துக் கொண்டார்.



"உங்க மகளை வர சொல்லி... என் மகன் கூட வாழ சொல்லுங்க. யார் வேண்டாம்ன்னு சொன்னது? சக்தியை வேண்டாம்ன்னு அவள் தான் அங்கே போய் உட்கார்ந்து இருக்கிறாள்." உதயரேகா பட்டாசாய் வெடித்தாள்.



"என் மகன் உரிமையோடு உங்க மக கையைப் பிடிச்ச மாதிரி... உங்க மகனை போய் உங்க மருமக கையைப் பிடிச்சு கூட்டிட்டு வந்து வாழ சொல்லுங்க." விஜயா சலிக்காது பதிலடி கொடுத்தார்.



"சக்தி, பாருடா... எப்படி எல்லாம் பேசுறாங்கன்னு..." உதயரேகா மகனிடம் புகார் வாசித்தாள்.



"பஞ்சாயத்து முடிஞ்சதா? நான் போகவா?" சக்தீஸ்வரன் சலிப்புடன் கேட்டான்.



"என்னடா இப்படிச் சொல்லுற?" உதயரேகா திகைப்புடன் மகனை பார்த்தாள்.




"வேண்டாம்ன்னு போனவங்களைப் பத்தி நான் பேசுறது என்ன, நினைக்கிறதா கூட இல்லை." என்ற சக்தீஸ்வரன் அந்த இடத்தைக் காலி செய்தான்.
 

Sasimukesh

Administrator
"இன்னும் என்ன நின்னுக்கிட்டு இருக்க மினி? வா..." நாராயணன் மனைவியை அழைக்க... பத்மினி அசையாது நின்றிருந்தாள்.



"இது சரிப்பட்டு வராது." என்ற நாராயணன் மனைவியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து செல்ல... எல்லோரும் அவனை அதிசயித்துப் பார்த்தனர்.



"நானா விடுங்க..." பத்மினி முரண்டு பிடிக்க...



"விட்டால்... திரும்பப் பிடிக்க முடியாதுடி. என்னால் நீ இல்லாம இருக்க முடியாது." நாராயணன் மனைவிக்குப் பதில் அளித்தபடி நடந்தான்.



"நான் இன்னும் உங்க மேல கோபமா தான் இருக்கேன்." பத்மினி துள்ள...



"ஆனா நான் உன் மேல்..." என்றவன் மனைவி இடை மீது முகம் புதைத்தான்.



கணவனது செயலில் பத்மினி உறைந்து போனாள். அவனது ஸ்பரிசம் அவளைப் பனிக்கட்டியாய் உறைய செய்தது. அவனது மீசையின் குறுகுறுப்பு அவளது உடையைத் தாண்டி அவளைக் குறுகுறுக்கச் செய்தது.



மனைவி பேச்சற்று போனதை கண்டு நாராயணன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.



"உன்னை அப்படியே கடிச்சு திங்கணும் போலிருக்கு." என்றவன் அவளது இடையில் வலிக்காது கடித்தான்.



"அச்சோ நானா..." பத்மினி அவஸ்தை தாங்காது கணவனது கரங்களில் துள்ளினாள். அவளது முகம் வெட்கத்தில் சிவந்து போனது.



தங்களது அறைக்கு வந்த பிறகே நாராயணன் அவளைக் கீழே இறக்கி விட்டான். பத்மினி இடையைத் தடவி கொண்டு அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.



"இன்னமும் கோபம் போகலையாடி?" அவன் பரிதாபமாக அவளைக் கண்டு கேட்க...



"பேசிய வார்த்தைகள் அத்தனை சாதாரணம் இல்லையே." சொல்லும் போது அவளது விழிகளில் கண்ணீர் நிரம்பியது.



"சாரிடி..." என்று மன்னிப்பு கேட்டவனின் மன்னிப்பை அவளால் உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் அமைதியாக இருந்தாள். அதைக் கண்டு அவன் பெருமுச்சு விட்டான்.



"சரி, உன் கோபம் எப்போ தீருதோ... அப்போ நீ என்னை மன்னிச்சுக்கோ. ஆனா இனி இப்படிப் பிரிய கூடாது. சண்டையோ, சமாதானமோ இந்த அறைக்குள் இருந்தால் போதும்."



"என் கோபம் எப்போ தீரும்ன்னு தெரியலை. ஆனா உங்களை யாருக்கும் விட்டு கொடுக்க என்னால் முடியாது." என்றவளை கண்டு அவனுள் நேசம் அதிகரிக்காது இருந்தால் தான் அதிசயம்.



பெண்ணவளின் காதல் ஆணவனையும் மாற்றும். ஆணவனுக்குக் காதல் என்றால் என்ன? என்று இனிதான் பாடம் புகட்டும்.



எல்லோரும் சென்றுவிட... சர்வேஸ்வரன், உதயரேகா மட்டுமே எஞ்சியிருந்தனர். உதயரேகா கல்லாய் இறுகி போய் அமர்ந்து இருந்தாள்.



"உதி, இன்னும் என்ன யோசனை? மினி வாழ்க்கை சரியானதை நினைச்சு சந்தோசப்படு." சர்வேஸ்வரன் மனைவியைத் தேற்ற...



"நாராயணனை யாரும் தப்பா பேசலையேங்க. ஆனா சக்தியை, சக்தியை..." மேலே பேச முடியாது உதயரேகா தழுதழுக்க...



"ப்ச், ஊரு, உலகம் பேசத்தான் செய்யும். அதை எல்லாம் நாம கண்டுக்கக் கூடாது." சர்வேஸ்வரன் ஆறுதல் கூற...



"சக்தியை நினைச்சா மனசு பிசையுதுங்க." என்ற உதயரேகா அதற்குப் பிறகு பேசவில்லை.



மனைவி சமாதானமாகி விட்டாள் என்று தான் சர்வேஸ்வரன் நினைத்தான். ஆனால் அவள் சமாதானம் ஆகவில்லை. அன்றிரவே உதயரேகா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.



*****************************



சகுந்தலா, ஆதித்யா, ஆதிரை மூவரும் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்புடனும், படபடப்புடனும் வந்து கொண்டு இருந்தனர். உதயரேகாவுக்கு நெஞ்சுவலி என்றதும் ஆதித்யா, ஆதிரை இருவரும் அலறியடித்துக் கொண்டு கிளம்ப... இத்தனை நாள் சென்னை பக்கம் தலை வைத்து படுக்காத சகுந்தலாவை உதயரேகாவின் உடல்நிலை அதிர செய்துவிட்டது. அடுத்த நொடி அவள் தாமதம் செய்யாது அவர்கள் இருவருடனும் கிளம்பி விட்டாள்.



வரும் வழியில் கணபதி நடந்தது அனைத்தையும் மகளிடம் கூறி விட்டார். அத்தோடு 'உன் பிடிவாதத்தால் தான் இத்தனையும் நடக்கிறது.' என்று அவர் மகளைக் கோபமாய்ச் சாடினார். அதைக் கேட்டு சகுந்தலா உள்ளுக்குள் இன்னமும் உடைந்து போனாள். அவள் எதையும் வெளிக்காட்டி கொள்ளாது இறுக்கத்துடன் இருந்தாள்.



உதயரேகாவை வைத்திருந்த அறையைத் தேடி மூவரும் சென்ற போது... அங்கு மருத்துவமனை வராந்தாவில் சக்தீஸ்வரன் நின்று கொண்டு அலைப்பேசியில் பேசி கொண்டிருந்தான். அவன் இவர்களைக் கவனிக்கவில்லை. ஆனால் சகுந்தலா அவனைத் தூரத்தில் இருந்தே கவனித்து விட்டாள். அவளது மூச்சு சீரற்று வந்தது. அவளது இதயம் தாளம் தப்பித் துடித்தது. அவளது இயல்பு நிலை மெல்ல மறைந்து ஒருவித பதட்டம் அவளைச் சூழ்ந்து கொண்டது. அத்தனை பதட்டத்திலும் அவளது விழிகள் அவனை ரசித்துப் பார்க்கத்தான் செய்தது.



இத்தனை நாட்களில் அவனின் கம்பீரம் இன்னமும் கூடி தெரிந்தது. அவனது அழகு அதிகரித்துக் காணப்பட்டது. அவசரத்தில் ஏனோ தானோவென்று கருப்பு டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தவனின் அழகு அவளுள் சொட்டு சொட்டாய் இறங்கியது. வெகுநாட்கள் கழித்துக் காணும் கணவனை அவள் ஆசைதீர பார்த்து கொண்டாள். பார்த்தால் மட்டும் ஆசை தீருமோ! தீராதே... அவனை மோகித்து, மூச்சினுள் உள்ளடக்கி உள்வாங்கிக் கொண்டால் தானே இந்த ஆசை தீரும். இனி அவனைக் காணவே முடியாதோ என்பது போல் சகுந்தலா அவனை இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.



"அண்ணா..." ஆதித்யா, ஆதிரை இருவரும் ஓடி சென்று சக்தீஸ்வரனை அணைத்துக் கொண்டு அழுதனர்.



அலைப்பேசியை அணைத்து விட்டு சக்தீஸ்வரன் பதிலுக்கு அவர்களை அணைத்துக் கொண்டு, "மைல்ட் அட்டாக் தான். பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை." என்று அவர்களைத் தேற்றினான்.



அவர்களின் பின்னேயே வந்த சகுந்தலாவை அவன் ஏறிட்டும் பார்க்கவில்லை. வரவேற்கவும் இல்லை. சகுந்தலா அமைதியாக நின்றிருந்தாள்.



"வாங்க, அம்மாவை போய்ப் பார்க்கலாம்." சக்தீஸ்வரன் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.



அவன் அழைக்க வேண்டும் என்று எல்லாம் சகுந்தலா நினைக்கவில்லை. அவளது அத்தைம்மா உடல்நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டி அவள் உள்ளே நுழைந்தாள்.



வாடிய கொடி போன்று படுத்திருந்த உதயரேகாவை கண்டு ஆதித்யா, ஆதிரை இருவரும் ஓடி சென்று இருபக்கமும் நின்று கொண்டு கலங்கினர்.



"அத்தைம்மா..." சகுந்தலா உதயரேகாவின் காலடியில் அமர்ந்து அவளது கால்களைப் பிடித்துக் கொண்டாள். ஒருவேளை மன்னிப்பு கேட்டாளோ!



"முதல்ல இவளை போகச் சொல்லுங்க. இவள் முகத்தில் முழிக்கவே விருப்பம் இல்லை. இவளால தான் என் மகனோட வாழ்க்கை பாழாய் போயிருச்சு." உதயரேகா கத்த துவங்க...



"உதி..." சர்வேஸ்வரன் மனைவியை அதட்ட முடியாது விழி பிதுங்கினான்.



"ம்மா, எதுக்கு இப்படிக் கோபப்படுறீங்க? ரிலாக்ஸ்." சக்தீஸ்வரன் அன்னையை ஆறுதல் படுத்தினான்.



"இவள் உனக்கு வேண்டாம் சக்தி. அம்மா உனக்கு வேறு பொண்ணு பார்க்கிறேன்." உதயரேகா மகனிடம் தவிப்புடன் சொல்ல...



"சரிம்மா, ரிலாக்ஸ்." என்று சக்தீஸ்வரன் கூற...



"அப்போ நீ எனக்குச் சத்தியம் பண்ணி கொடு." அன்னை கேட்டதும் அவனது விழிகள் கேள்வியாய்ச் சுருங்கியது.



"கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லு." உதயரேகா தனது வலக்கையை நீட்டினாள்.



சக்தீஸ்வரன் சகுந்தலாவை நிமிர்ந்து பார்த்தான். அவனது விழிகள் அவளது கழுத்தில் அழுத்தமாய்ப் பதிந்தது. இறக்கம் வைத்துத் தைத்திருந்த குர்தியின் மூலம் அவள் கழுத்தில் தாலி சங்கிலி இல்லாததை அனைவராலும் கண்டு கொள்ள முடிந்தது. அது சக்தீஸ்வரனின் விழிகளில் இருந்தும் தப்பவில்லை. அவன் சகுந்தலாவை பார்த்தபடி அன்னையின் கரத்தின் மீது தனது கரத்தினை வைத்து,



"சத்தியம்..." என்று சொன்னான். அதைக் கேட்டு உதயரேகா நிம்மதி கொண்டாள். சர்வேஸ்வரன் திகைத்துப் போனான்.



கணவனது பேச்சு கேட்டு சகுந்தலாவின் ஒரு மனம் மகிழ்ந்தது. இன்னொரு மனம் துக்கத்தில் துவண்டது. ஆனாலும் அவள் துக்கத்தை மனதோடு புதைத்துக் கொண்டு, மகிழ்ச்சியை முகத்தில் தேக்கி கம்பீரமாக, கெத்தாக நின்றாள். அது பார்ப்பவர்களுக்குத் திமிராகத் தெரிந்திருக்கும்.



"பாரு, புருசன் இரண்டாம் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுறானேன்னு... கொஞ்சமாவது வருத்தம் இருக்கா? எவ்வளவு திமிரா நிற்கிறாள் பார்?" உதயரேகாவுக்கும் அவளது திமிர் மட்டுமே விழிகளில் தெரிந்தது.



சக்தீஸ்வரன் எழுந்து வெளியில் சென்றுவிட... சகுந்தலாவும் யாருக்கும் தெரியாது வெளியில் வந்தாள். சக்தீஸ்வரன் வராந்தாவில் நின்றபடி வெளிப்புறம் வேடிக்கை பார்த்திருந்தான். சகுந்தலா அவன் அருகில் சென்று நின்றாள்.



"எப்படி இருக்கீங்க?" அவளாகத் தான் பேச்சை ஆரம்பித்து வைத்தாள்.



சக்தீஸ்வரன் திரும்பி அவளைப் பார்த்தான். அவனது பார்வையில் அத்தனை அழுத்தம்... சகுந்தலா அவனது பார்வையைத் தைரியமாய்த் தாங்கி நின்றாள். அவளது இதழ்களில் இருந்த புன்னகை சிறிதும் வாடவில்லை.



"அது எதுக்கு உனக்கு?" என்று பதிலுரைத்தவன் அவளை மேலிருந்து கீழாக ஸ்கேன் செய்தான்.



இப்போது தலைமுடி அவளது தோள்பட்டை வரை வளர்ந்து இருந்தது. தலைமுடியை ஸ்டைலாக விரித்து விட்டு, நாகரீக உடை அணிந்து நாகரீக மங்கையாக நின்று இருந்த இந்தச் சகுந்தலாவுக்கும், அவனது சகிக்கும் மலையளவு வித்தியாசம். இவள் அவனது சகியல்லவே!



"ஆல் த பெஸ்ட்..." என்றவளை கண்டு அவன் விழிகளைச் சுருக்க...



"உங்களது கல்யாணத்துக்கு..." அவள் இதைச் சொல்லும் போது சிறிதும் வருத்தவில்லை. ஆனால் அவளது ஆழ்மனதிற்குத் தெரியுமே. அது அடிப்பட்ட குழந்தையாய் கதறிக் கொண்டிருப்பது.



அப்போது சக்தீஸ்வரன் சட்டென்று அந்தக் காரியத்தைச் செய்தான். அவளது வலக்கரத்தினைப் பற்றியிழுத்தவன் அடுத்த நொடி அவளை இறுக அணைத்து,



"தேங்க்ஸ்..." என்று அவளது காதோரம் முணுமுணுத்தான்.



அவனது அணைப்பில் அவள் தான் மூளை மரத்து போய் நின்றிருந்தாள். அவனது இந்தச் செய்கையை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.



அடுத்த நொடி அவளை விடுவித்த சக்தீஸ்வரன், "உங்க ஊரில் இப்படித்தானே தேங்க்ஸ் சொல்லுவாங்க. மாடலிங் பண்ணும் பெண்ணுக்கு இது தெரியாதா என்ன?" என்று சிறுபுன்னகையுடன் அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு சென்று விட்டான்.



சகுந்தலா கணவன் தீண்டிய கன்னத்தின் மீது தனது கையை வைத்தபடி சிலையாய் சமைந்து நின்றாள்.



மறந்தால் தானே நினைப்பதற்கு... வெறுத்தால் தானே விலகுவதற்கு...!



காதலில் கண்ணியம் முக்கியம் தான்! அதே காதலில் காமமும் முக்கியம் தான்!!



"தொட்டு விட நீ தொட்டு விடத்தான்

இந்தப் பட்டு உடல் மலராகும்

பொட்டு வைத்த இந்த வட்ட முகமோ

உன் நெஞ்சில் நிலவாகும்"



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 43



"சக்கு..." சர்வேஸ்வரனின் குரலில் சகுந்தலா திரும்பி பார்த்தாள்.



"மாமோய்..." அவள் முகம் மலர மாமனாரை அழைத்தாள். அவளின் 'மாமோய்' என்றழைப்பு சொல்லாது சொல்லியது... அவள் அதே சகுந்தலா தான் என்று...



"இந்த மாமனை கூட நீ மறந்துட்டியே சக்கு? என்னைக் கூடப் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டியே?" சர்வேஸ்வரன் விழிகள் கலங்க கேட்க...



மாமனது விழிகள் கலங்கியதில், அவனது பாசத்தில் சகுந்தலாவுக்கும் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. ஆனால் அவள் ஆழ்ந்த மூச்செடுத்து கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள். முன்பே சகுந்தலா எதற்கு எடுத்தாலும் அழும் ரகமல்ல. பிரச்சினைகளை இடது கையால் அசால்ட்டாகச் சமாளிக்கும் திறன் கொண்டவள். இப்போது கேட்கவும் வேண்டுமோ! புதிய சகுந்தலா பொங்கி வந்த உணர்வுகளை மறைத்துக் கொண்டு வெளியில் புன்னகை சிந்தினாள்.



"மறக்க எல்லாம் இல்லை மாமோய். அப்படி மறந்து இருந்தால்... அத்தைம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும் ஓடி வந்திருக்க மாட்டேனே." என்று கூறி அவள் புன்னகைக்க...



"நல்லா பேச கத்துக்கிட்ட..." என்றவனது விழிகளில் மருமகளின் மாற்றங்கள் விழாது இல்லை. மருமகள் மாற்றம் கண்டு அவனுக்குத் திருப்தி தான். மருமகள் தங்களுடன் பேசவில்லை என்றாலும்... அவளது நலனை பற்றி அவன் தினமும் அறிந்து கொள்வான். அவன் ஒரு போதும் அவளை விலக்கி வைக்க நினைத்தது இல்லை.



"எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்." அதற்கும் சகுந்தலா சிரித்தாள்.



"ஹேய் சக்கு..." பத்மினி ஓடி வந்து தோழியை அணைத்து கொண்டாள்.



"மினி..." சகுந்தலாவும் பதிலுக்குத் தோழியை அணைத்து கொண்டாள்.



"சக்கு, எப்படி இருக்க?" பத்மினியுடன் வந்த நாராயணன் தங்கையின் தலையை வாஞ்சையுடன் வருடி கொடுத்தான்.



பத்மினியும், நாராயணனும் இப்போது தான் வீட்டிற்குச் சென்று விட்டு வந்தனர்.



"நல்லா இருக்கேன் அண்ணே." என்ற தங்கையைக் கண்டு அவனுக்கு நிம்மதியாக இருந்தது.



"நீ நல்லா இருக்கிறது சந்தோசம் தான். ஆனா அதுக்காக நீ எங்களை எல்லாம் ஒதுக்கி வச்சிருக்கக் கூடாது சக்கு. அம்மா பாவம்... உன்னை நினைச்சு புலம்பிட்டே இருக்காங்க." நாராயணன் வருத்தத்துடன் சொன்னான்.



சகுந்தலா ஒன்றும் பேசாது அமைதி காத்தாள்.



"நான் உன் மேல் கோபமா இருக்கேன் சக்கு. உனக்கும், அண்ணாவுக்கும் பிரிச்சினைன்னா... அது உங்க ரெண்டு பேருக்கு இடையில்... அதுக்காக நீ எங்களை எல்லாம் புறக்கணிப்பியா?" பத்மினி படபடவெனக் கோபமாய்ப் பேச...



"மினி, அப்படி எல்லாம் இல்லை." சகுந்தலா என்ன பதில் கூறுவது என்று தெரியாது விழித்தாள்.



"எனக்கும், உங்கண்ணாவுக்கும் தான் பிரச்சினை இருந்தது. அதுக்காக நான் உன் கிட்ட கோவிச்சுக்கிட்டேன்னா?" பத்மினி சொல்லவும்...



"உனக்கும், அண்ணாவுக்கும் என்ன பிரச்சினை? என்னைய வச்சா?" சகுந்தலா அதிர்வுடன் கேட்டபடி இருவரையும் பார்த்தாள்.



பத்மினி, நாராயணன் பிரச்சினை சகுந்தலாவுக்குத் தெரியாது இல்லையா? அதனால் அவளுக்குப் பயம், தன்னால் அவர்களுக்கு இடையில் ஏதேனும் பிரச்சினை வந்துவிட்டதோ என்று...



"பிரச்சினைக்குக் காரணம் நீ இல்லை. உங்க அண்ணா தான். அதுவும் முக்கியமா உங்கண்ணாவோட வாய் தான் காரணம்." பத்மினி கணவனைக் கண்டு உதட்டை சுழித்தாள்.



"அண்ணேக்கு மத்தவங்க மனசு கஷ்டப்படும்படி எல்லாம் பேச தெரியாதே." சகுந்தலாவுக்கு ஆச்சிரியமாக இருந்தது.



"ஆனா என்னைப் பேசிட்டாரே." பத்மினி முகத்தைத் தூக்கி வைத்து கொண்டாள்.



"அப்படின்னா, அண்ணேக்கு உன் மேல் லவ் அதிகம்ன்னு நினைக்கிறேன்." சகுந்தலா கண்களைச் சிமிட்டி சிரித்தாள்.



"அப்படிச் சொல்லு சக்கு." நாராயணன் உடன் சேர்ந்து சிரித்தான்.



"ரொம்பத்தான் லவ்வு..." சொல்லும் போதே பத்மினிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.



மூவரும் தங்களை மறந்து சிரிக்க... சர்வேஸ்வரன் மக்களை மனதார பார்த்து ரசித்து இருந்தான். இத்தனை நாள் இந்தச் சிரிப்பு எங்கே போயிருந்தது? சகுந்தலா வந்த சில நிமிடங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பி விட்டதே. சகுந்தலா நிரந்தரமாக இங்கே இருந்தால்? அதைப் பற்றி நினைக்கும் போதே அவனுக்குப் பெருமூச்சு தோன்றியது.



அடுத்து ஒவ்வொருவராக உதயரேகாவை பார்க்க வந்து கொண்டிருந்தனர். சகுந்தலா அந்த அறைக்கு முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். அவள் எங்கேயும் செல்லவில்லை. அவள் உதயரேகாவை தனியே சந்தித்துப் பேச காத்திருந்தாள். ஓரளவு மற்றவர்களின் வருகை குறைந்தும் சகுந்தலா சர்வேஸ்வரனிடம் உதயரேகாவை தனியே சந்தித்துப் பேச வேண்டும் என்று கூற... அவன் சகுந்தலாவை அறைக்குள் அனுப்பி வைத்தான்.



அறைக்குள் நுழைந்த சகுந்தலா உதயரேகாவை பார்த்தபடி வந்தாள். உதயரேகா அவளைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அதைச் சகுந்தலா கண்டு கொள்ளவில்லை. அவளது அத்தைம்மாவிடம் அவளுக்குத் தான் மானம், ரோசம் எல்லாம் கிடையாதே.



"அத்தைம்மா..." அவள் உதயரேகாவின் கரங்களைப் பிடித்துக் கொள்ள... அத்தனை கோபத்திலும் உதயரேகா தனது கரத்தினை உருவாது அப்படியே இருந்தாள்.



"என் மேலே உங்களுக்குக் கோபம் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். உங்க கோபம் நியாயமானது தான் அத்தைம்மா. உங்க கோபத்துக்குப் பின்னாடி இருக்கிற வேதனையை என்னால் புரிஞ்சிக்க முடியுது." சகுந்தலா சொல்லவும்...



"புரிஞ்சு என்ன பண்ண?" உதயரேகா மருமகளை முறைத்தாள்.



"நீங்க சொன்ன மாதிரி உங்க மகனுக்கு வேறு பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்க." என்றவளை உதயரேகா கூர்ந்து பார்த்தாள்.



"அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்." சகுந்தலா அவசரமாக இடைமறித்துக் கூற...



"அதுக்குத் தான் தாலியை கழட்டி போட்டுட்டு சுத்துறியா?" உதயரேகா மருமகளைக் கோபமாகப் பார்த்தாள்.



"உறவு வேண்டாம்ன்னு முடிவு பண்ணிய பிறகு... தாலியை போட்டுக்கிட்டு என்ன பயன்?" சகுந்தலா விரக்தி புன்னகையுடன் சொல்ல...



"அப்போ நீ உண்மையா தான் சொல்லுறியா?" உதயரேகா இன்னமும் நம்பாத குரலில் கேட்க...



"ஆமாம், உங்க பாய்ண்ட் ஆஃப் வியூல நீங்க பேசுறது ரொம்பச் சரி. எத்தனை நாளைக்கு உங்க மகன் அவங்க வாழ்க்கையைக் கெடுத்துக்கிட்டு இருக்க முடியும். அவங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் சரி."



"அப்போ நீ ஒண்ணு பண்ணு..." உதயரேகா சொன்னதும் சகுந்தலா என்னவென்று மாமியாரை பார்த்தாள்.



"சக்தி ரெண்டாம் கல்யாணம் பண்ணுவதில் எனக்கு முழுச் சம்மதம்ன்னு... நீ ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துரு."



"அதெல்லாம் எதுக்கு அத்தைம்மா? நான் எந்தப் பிரச்சினையும் பண்ண மாட்டேன்."



"நீ பண்ண மாட்ட... ஆனா சட்டம் பிரச்சினை பண்ணுமே. என் மகன் ஜெயிலுக்குப் போகணும்ன்னு ஆசைப்படுறியா?" உதயரேகா நாக்கில் விசத்தைத் தடவி கொட்ட...



"ஐயோ, அப்படி எல்லாம் இல்லை." சகுந்தலா இதனை நினைக்கவில்லையே.



"அப்போ நான் சொல்றதை நீ செய்."



"சரி அத்தைம்மா... நீங்க சொல்றதை செய்றேன்." என்று சம்மதித்தவள் பின்பு, "விவாகரத்துக்கு இன்னும் நாலு மாசம் தானே இருக்கு. அதனால இந்த லெட்டருக்கு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்." என்று சொல்ல...



"ம்ஹூம், என்னால் நாலு மாசம் வரைக்கும் பொறுத்திருக்க முடியாது. சக்திக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கணும்." என்று பிடிவாதம் பிடித்த உதயரேகாவை சகுந்தலா புரியாது பார்த்தாள்.



"உங்க விருப்பம் அத்தைம்மா."



"அப்புறம் ஒரு விசயம்... நாங்க பொண்ணு பார்க்க போகும் போது நீயும் கூட வரணும்." உதயரேகா சொன்னதும்,



"நானா? நான் எதுக்கு?" சகுந்தலா புரியாது பார்த்தாள்.



"ஏன்னா உங்களுக்கு இன்னமும் விவாகரத்து ஆகலை. நீ வந்து பிரச்சினை பண்ணுவியோன்னு... பொண்ணு வீட்டுக்காரங்க தயங்க கூடாது இல்லையா? அதுக்குத் தான்... உன்னைப் பார்த்தால் அவங்களுக்கும் திருப்தி வரும் இல்லையா?" என்ற உதயரேகாவை கண்டு,



"சரி, நானும் வர்றேன்." சகுந்தலாவால் சம்மதம் தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை.



சக்தீஸ்வரனுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்கிற வெறி சகுந்தலாவினுள்... அவன் மனைவி, குழந்தை என்று நன்றாக வாழ வேண்டும், முக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அது தான் அவளுடைய ஒரே எண்ணம். அதற்காக அவள் எதையும் செய்வாள். அவனது நல்வாழ்க்கைக்காகத் தனது காதலை கூட விட்டுக் கொடுக்கத் துணிந்தவள் அவள்... அப்படிப்பட்டவள் தேவைப்பட்டால் தனது உயிரையும் அவனுக்காகக் கொடுக்கத் தயங்க மாட்டாள். அந்தளவிற்குக் கணவன் மீது காதல், கண்மூடித்தனமான காதல்...
 

Sasimukesh

Administrator
அன்று மாலையே உதயரேகாவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை வாயிலில் இரு கார்கள் நின்றிருந்தது. சக்தீஸ்வரன் காரில் சர்வேஸ்வரன், உதயரேகா, ஆகாஷ், வித்யா ஏறி கொண்டனர். நாராயணன் காரில் பத்மினி, ஆதிரை, ஆதித்யா ஏறி கொண்டனர். யாருமே அவளைத் தங்களுடன் வருகிறாயா? என்று கேட்கவில்லை. எல்லோருமே தங்களது கவலையில் மூழ்கி இருந்தனர்.



சகுந்தலாவும் யாருடனும் செல்ல விருப்பப்படவில்லை. ஆனாலும் தான் தனித்து விடப்பட்டதில் அவளுக்கு மிகவும் வலித்தது. அவளையும் அறியாது அவளது விழிகள் தனது கணவனைப் பார்த்தது. சக்தீஸ்வரன் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவன் நேராக வெறித்தபடி அமர்ந்து இருந்தான். அன்று அவளும் அப்படித்தானே அவனைக் கண்டு கொள்ளாது நடந்து சென்றாள்.



அவளுக்குத் தெரியும், அன்று தன் பின்னே வந்த கணவன் தன்னையே தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று... அவள் அவனைத் திரும்பி பார்த்தால்... அவளது உறுதி குலைந்து விடும். அவளது காதல் மனம் அவனிடம் சரணடைந்து விடும். காலை பிடித்துக் கெஞ்சி காதலை யாசிக்கும் கணவனை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் அவள் சக்தீஸ்வரனை காதலித்தவள்... தனது காதலுக்கு எதிரொலியாகக் காதலை பிரதிபலித்த அவனை அவளுக்குப் பிடிக்காது இருக்குமோ! அப்படிப்பட்டவனின் காதலை உதறிவிட்டு தானே அன்று அவள் சென்றாள்.



அன்று சக்தீஸ்வரனுக்கும் இப்படித்தானே வலித்து இருக்கும். பல் வலியும், தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியுமாம். அத்தோடு காதல் வலியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். காதல் தோல்வி உயிர் வலியை கொடுத்தது.



சகுந்தலா பார்த்துக் கொண்டு இருக்கும் போதே இரு கார்களும் புறப்பட்டுச் சென்றது. அவள் செய்வதறியாது விழிக்கும் போதே அவள் முன்னே வேறொரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஓட்டுநர் ஒருவர் இறங்கி அவளை நோக்கி வந்தார்.



"மேம், நீங்க புக் பண்ணிய ஹோட்டலில் இருந்து வருகிறேன். உங்க லக்கேஜ் எல்லாம் காரில் இருக்கு. வாங்க." என்று பணிவுடன் அவன் சொல்ல...



சகுந்தலா ஒன்றும் பேசாது காரிலேறி அமர்ந்து கொண்டாள்.



கார் புறப்பட்டுப் போக்குவரத்து நெரிசலில் கலந்தது. அவள் தான் இங்குப் புறப்பட்டு வரும் போதே தங்கும் விடுதியில் அறையை முன்பதிவு செய்து விட்டு தானே கிளம்பி வந்தாள். அவளால் புகுந்த வீட்டிலும் தங்க முடியாது. பிறந்த வீட்டிலும் தங்க முடியாது. அவள் அவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் பயணப்பட்டு விட்டாள். இனி அவளால் பின்னால் திரும்பி பார்க்க முடியாது. கணவனின் நன்மைக்காக இந்த இடைவெளி மிகவும் அவசியம்.



அறைக்குள் நுழைந்து படுக்கையில் படுத்தவளை கடந்த காலம் வந்து அரவணைக்க நினைக்க... அவளோ வலுக்கட்டாயமாய் அந்த நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள். கடந்த காலத்தை நினைப்பதால் எந்தப் பயனும் இல்லை. காயத்தைக் கீறி மேலும் ரணமாக்கும் நடவடிக்கை தான் அது. வலியும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.



அவளை மாதிரியான மக்கு, மண்ணாந்தை சக்தீஸ்வரனுக்கு வேண்டவே வேண்டாம். அதில் மட்டும் அவள் உறுதியாக இருந்தாள். காதல் வெற்று களிமண்ணையும் சிலையாக வடித்துக் கொண்டாடும் என்பதை அவள் அறியவில்லை போலும்.



சகுந்தலாவின் சிந்தனையைத் தடுக்கும் விதமாக அவளது அலைப்பேசி அழைத்தது. தாஸ் தான் அழைத்திருந்தான். அவள் புன்னகையுடன் அழைப்பை எடுத்தாள்.



"டாலு, உங்க ஆன்ட்டிக்கு இப்போ எப்படி இருக்கு?" அவன் அக்கறையுடன் நலன் விசாரிக்க...



"நல்லா இருக்காங்க. என்ன விசயம் சொல்லு தாஸ்?"



"விசயம் இருக்கு..." என்று இழுத்தவன், "அந்தப் பெரிய கம்பெனி..." என்று நிறுவனத்தின் பெயரை சொன்னவன், "அடுத்த வருசத்துக்கான அவங்களோட காலேண்டருக்கு இப்பவே ஷூட் பண்ண போறாங்களாம்." என்று விசயத்தை மெல்ல சொல்ல ஆரம்பித்தான்.



"ஓ, அப்படியா?" சகுந்தலா சாதாரணமாகச் சொன்னாள்.



"என்ன, ஓ அப்படியான்னு சாதாரணமா சொல்லுற? அவங்களோட காலேண்டர் எவ்வளவு பேமஸ் தெரியுமா?" தாஸ் இன்னமும் வியப்பு மாறாத குரலில் சொல்ல...



"எனக்கு அதெல்லாம் தெரியாதே தாஸ். நான் மாடலிங்க்கு புதுசு."



"சரி விடு... இந்த முறை அவங்க ஷூட்க்கு உன்னையும், என்னையும் தான் செல்க்ட் பண்ணி இருக்காங்க. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் அவங்க உன்னைப் பத்தி என் கிட்ட விசாரிச்சாங்க. நீ சென்னையில் இருக்கிறதா சொன்னேன். 'நோ ப்ராப்ளம், அங்கே இருக்கிற எங்க பிரான்ச் ஆட்கள் அவங்க கிட்ட பேசுவாங்க'ன்னு ஈசியா சொல்லிட்டாங்க. அவங்க வந்து பேசினால் நீ ஓகே சொல்லிரு."



"எதுக்கும் நான் நெட்டில் சேர்ச் பண்ணிட்டு சொல்றேன்." அவள் தயங்க...



"இது ஒரு நல்ல வாய்ப்பு டாலு. மிஸ் பண்ணிராதே. நம்ம துறையில் இந்த வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டு இருக்கிறவங்க ஏராளம் பேர். நல்லா யோசிச்சு, நல்ல முடிவா சொல்லு." என்ற தாஸ் அழைப்பை துண்டித்து விட்டான்.



சகுந்தலா யோசனையுடன் அழைப்பை வைத்தவள்... இணையத்தில் தாஸ் சொன்ன நிறுவனத்தின் நாட்காட்டியை தேட ஆரம்பித்தாள். இணையத்தில் அவர்களது நாட்காட்டிகள் கொட்டி கிடந்தது. அதில் எல்லாமே கவர்ச்சி கொட்டி கிடந்தது. அவளால் இந்தளவிற்குக் கவர்ச்சி காட்ட முடியாது. அவர்கள் பேச வரட்டும், தனது நிலையைத் தெளிவுப்படுத்திக் கூறிவிட வேண்டும். அதற்குப் பிறகும் தான் வேண்டுமென்றால் அவர்கள் எடுத்து கொள்ளட்டும் என்று அவள் முடிவு செய்தாள்.



அப்போது அழைப்பு மணி ஒலித்தது. சகுந்தலா யோசனையுடன் சென்று கதவினை திறந்தாள். அங்கு அவளது பெற்றோர், சகோதரன் மூவரும் நின்று இருந்தனர். தந்தையைத் தான் அவள் ஏற்கெனவே பார்த்து விட்டாளே. அவள் அவரிடம் இருந்து திட்டு வாங்கியது தான் மிச்சம். இப்போது அன்னை வேறு வந்திருக்கிறார். நிச்சயம் அவரும் திட்ட தான் போகிறார் என்றே அவள் நினைத்தாள். திட்டினாலும், அடித்தாலும் தாயை கண்டதும் அவளது மனம் ஆதரவாய் அவரது மடி சாய நினைத்தது. இருந்தாலும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகை முகமாய்,



"வாங்க..." என்று வரவேற்றாள்.



அந்நியமாய்த் தங்களை வரவேற்கும் மகளைக் கண்டு விஜயா உடைந்து தான் போனார். அடுத்த நொடி அவர் மகளை அணைத்துக் கொண்டு ஓவென்று கதறியழுதார். அன்னையின் இந்தச் செய்கையைச் சகுந்தலா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் திகைத்து போய் நின்றாள். பிறகு அவள் சுதாரித்துக் கொண்டு அன்னையை ஆறுதலாய் அணைத்து கொண்டாள்.



"வாசலில் நின்னுக்கிட்டு... உள்ளே போங்க." நாராயணன் சொல்லவும்... எல்லோரும் உள்ளே சென்றனர்.



நாராயணன், கணபதி இருவரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள... விஜயா மகளுடன் படுக்கையில் அமர்ந்து அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டார். அவரது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.



"நான் பேசியது தப்பு தான் சக்கு. அதுக்குன்னு நீ இவ்வளவு பெரிய தண்டனையை எனக்குக் கொடுத்து இருக்க வேண்டாம். ஆறு மாசம் நாங்க எல்லாம் வேண்டாம்ன்னு தனியா போய் உட்கார்ந்துக்கிட்ட... இங்கே நாங்க பட்ட பாடு எங்களுக்குத் தான் தெரியும்." என்ற அன்னையை அவள் ஆச்சிரியமாகப் பார்த்தாள்.



"அம்மா திட்டுறேன், கோபப்படுறேன்னு மட்டும் தான் நீ பார்க்கிற... ஆனா அதுக்குப் பின்னாடி இருக்கும் என்னோட வேதனையை நீ பார்க்கவே இல்லைடி. நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி இருக்கணும்ன்னு தானே நான் கோபப்பட்டேன். மத்தபடி நான் உன்னை வெறுக்கலை சக்கு." என்ற அன்னையைக் கண்டு ஆதூரமாய்ப் புன்னகைத்தவள்,



"இப்போ தான் நீங்க நினைச்ச மாதிரி மாறிட்டேனே." என்று கூற...



"இப்போ தான்டி எனக்குச் சந்தோசமா இருக்கு. இப்போ உன்னைய பார்க்கத்தான் மனசுக்கு நிறைவா இருக்கு." என்றவரது விழிகள் மகளை ரசித்துப் பார்த்தது.



"என்ன சாப்பிடுறீங்க? ஹாட் ஆர் கூல்?" அவள் கேட்க...



"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உன்னைக் கூட்டிட்டுப் போகத் தான் வந்திருக்கோம். நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு." விஜயா மகளிடம் அவசரப்படுத்தினார்.



"இல்லைம்மை... இங்கேயே..." சகுந்தலா தயக்கமாய் இழுத்தாள்.



"நாங்க எல்லாம் வேண்டாம்ன்னு முடிவு எடுத்துட்டியா?" நாராயணன் ஆதங்கத்துடன் கேட்டான்.



"அப்படி இல்லைண்ணே." அவள் சமாளிக்க...



"அப்பா மேல கோபமா சக்கு?" கணபதி மெல்ல வாய்த் திறந்தார்.



"நீங்க புள்ளைய என்ன சொன்னீக?" விஜயா கணவனைக் கண்டு கோபமாய்க் கேட்க...



"ஏர்ப்போர்ட்ல இருந்து வரும் போது நான் சக்குவை கொஞ்சம் கோபமா பேசிட்டேன். மேடத்தோட நிலைக்கு இவள் தான் காரணம்ன்னு..." கணபதி மெய் வருத்தத்துடன் சொன்னார். அந்த நேரம் ஏதோ ஆதங்கத்தில் அவர் பேசி விட்டார் தான். ஆனால் அதை நினைத்து அவர் வருத்தப்பட்டது தான் அதிகம்.



"அதெல்லாம் இல்லைப்போய்..." சகுந்தலா மறுத்தாள்.



"அப்போ கிளம்பு..." மூவரும் வற்புறுத்த...



"நான் அங்கே வந்தால் சங்கடம் தான் மிஞ்சும். வேண்டாம்." அவள் உறுதியான குரலில் மறுத்தாள்.



சகுந்தலா மறுப்பதற்கான காரணம் மூவருக்கும் புரிந்தது. சகுந்தலா சக்தீஸ்வரனை காண சங்கடப்படுகிறாள் என்பது எல்லோருக்கும் புரிந்தது.



"நாம வேணா வேற வீடு பார்த்துப் போயிரலாம் சக்கு. நாளைக்கே நான் வேற வீடு பார்க்கிறேன்." நாராயணன் தங்கையின் மனம் புரிந்தவனாய்க் கூறினான்.



"ஐயோ, அப்படிச் செஞ்சிராதீங்கண்ணே. மாமோய் மனசு கஷ்டப்படும். நமக்காக அவங்க நிறையச் செஞ்சு இருக்காங்க." சகுந்தலா பதட்டத்துடன் கூற...



"இதுக்கு என்ன தான் வழி?" நாராயணனுக்கு வருத்தமாக இருந்தது.



"அவங்களுக்குக் கல்யாணமாகட்டும். அதுக்குப் பொறவு நான் வர்றேன்." சகுந்தலா உறுதியான குரலில் கூறினாள்.



சகுந்தலா சொன்னது கேட்டு மூவரின் முகத்திலும் வேதனையின் சாயல். அதற்கு மேல் அவளை வற்புறுத்தாது அவர்கள் விடைபெற்று சென்றனர்.



வீட்டினர் சென்ற பிறகே சகுந்தலாவிற்கு நிம்மதி தோன்றியது. எங்கே தன்னை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்களோ என்று அவள் பயந்து தான் போனாள். அங்கே சென்றால் காதல் மனம் தடுமாறி கூடு விட்டு கூடு பாய்ந்து விடுமே... அந்தப் பயம் அவளுக்கு...




தொடரும்...!!!
 
Status
Not open for further replies.
Top