Deepagovind
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ அழகு வரிகள் தூரிகா மா இது கொஞ்சம் வழக்கத்துக்கு மாறான முடிவு இப்படி யும் இருக்கலாம் எனும் ஒரு கோணம் மத்தபடி இதுவும் ஹாப்பி என்ப் ஹீரோ னா ஹீரோயின் கூட தான் சேரனுமா இப்படி யும் சில யதார்த்தங்கள் இருக்கட்டும் மே அன்பு உங்களுக்குவணக்கம் தீபா சிஸ்,
அழகான தமிழில் அழகான தலைப்பு
நேர்த்தியான எழுத்து நடை
அதிலும் சில இடங்களில் உங்கள் ஒப்புமைகள் அழகோ அழகு
உண்மையில் உங்கள் மேல் எனக்குக் கோபம்...நான் சோக முடிவு தரும் கதைகளைப் படிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. சில இடங்களில் வாசகர்களிடம் நண்பர்களிடமும் குறிப்பிட்டுக் கூட இருப்பேன்...ஒன்லி ஹேப்பி எண்டிங்க் ஸ்டோரீஸ்தான் நான் படிப்பது.
ஹீரோவைத் தனியா சுத்த விட்டிருப்பீங்கன்னு தெரிஞ்சுருந்தா ஒன்னு படிக்சுருக்க மாட்டேன்...அல்லது அதற்கான மனதிடத்தை ஏற்படுத்திக் கொண்டு படித்திருப்பேன்...போங்க சிஸ் உங்க பேச்சிக் கா
கதையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எல்லோரும் தவறு செய்கிறார்கள்...யாரை என்னவென்று சொல்ல...தவறு செய்யாத குற்றம் சுமத்த முடியாத ஒருவன் உண்டென்றால் அது மேத்யூ ஹைடன்...ஆனால் அவன் மேலும் எனக்கொரு கோபம்...உண்மையாக அவன் மகராவின் நலம் விரும்பியாக இருந்திருந்தால் அமுதனும் அவளும் சேர்வதற்கு அவன் ஏதாவது முயற்சிகள் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.
உங்கள் களவறியாக் காதலன் படித்திருக்கிறேன்...வித்யாசமான கதைக்களம் என்றாலும் சுபமாக முடித்திருந்தீர்கள்...நமக்கு எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் அதைப் பத்திக் கவலையில்லை...கதைல ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தாங்களா...தே ஹேப்பிலி லிவ்ட் எவெர் ஆஃப்டர் நு கதை முடிஞ்சுதான்னு இருக்கணும் என்ன நான் சொல்லுறது...
உங்கள் எழுத்து நடையை தமிழ் தவழ்ந்து வரும் அழகை மிகவும் ரசித்தேன். அடுத்த கதையில் நாயகன் நாயகியை சேர்த்து வைக்கும் கதையாக எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்களோடு
தூரிகா