All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"விழிகள் தீண்டாயோ" புத்தக திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

"விழிகள் தீண்டாயோ" புத்தகம் நாளை முதல் கீழே இருக்கும் தளங்களில் கிடைக்கும் மக்களே..உங்கள் செந்தூர் பாண்டியனும் அன்பரசியும்...

புத்தகம் கிடைக்கும் இனைய தளங்கள்:

Wecanshopping.com
Marinabooks.com
Udumalai.com

இந்த சந்தோஷத்திற்க்கு முதல் காரணம் ஸ்ரீகால அக்கா தான்.. அவங்க மட்டும் இல்லைனா இதை எல்லாம் நினைச்சு கூட பார்த்திருக்க முடியாது.. உங்களை போல் ஒருத்தங்க வழிகாட்ட நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கா...பெரிய பெரிய நன்றிகள் கா..

என் புத்தகத்தை என்னை நம்பி வெளியிடும் பிரியா நிலையத்திற்கு மிக பெரிய நன்றிகள்..

என் எழுத்தாள தோழிகள் அனைவருக்குமே நன்றி பேபிஸ்..
அடுத்து மிகவும் முக்கியமான என் வாசக தோழிகள், அக்காக்கள் தங்கைகள் , செல்லங்கள் எல்லாருக்க்கும் கோடி கோடி நன்றிகள் செல்லங்களா..

புத்தகம் வாங்குபவர்கள் புத்தகம் வாங்கி படித்து உங்கள் ஆதரவு கொடுங்கள் செல்லங்களா..

நீங்கள் தரும் ஆதரவு தான் எங்களுக்கு மிக பெரிய ஊக்கம் மக்களே.. கதையை படித்து நீங்கள் கூற போகும் கருத்துக்காக நான் காத்திருப்பேன் பேபிஸ்..

லவ் யு ஆல் மை டியர் செல்லம்ஸ்..

************************

செந்தூர் பாண்டியனின் அறிமுகம்.. எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கு மக்களே...


மதுரையில் உள்ள ஆரப்பாளையம் என்ற சிற்றூர் ....

காலை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது...


அங்கிருந்த பேருந்து நிலையத்தில் ஒரு இளம் பெண் கல்லூரி செல்லும் பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்க அவளுக்கு பின்னால் இரு விடலை பசங்கள் ரொம்ப நேரமாக நின்று தப்பு தப்பாக பேசி அந்த பெண்ணை தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்...

ஒரு கட்டத்தில் அந்த பெண் இவர்கள் தொல்லை தாங்க முடியாமல் அங்கியிருந்து நகர முற்பட பின்னால் நின்றிருந்தவனில் ஒருவன் "ஏய் எங்க போற .." என்று எகத்தாளமாக கூறிக்கொண்டே அவள் கையை பிடிக்க போனான்...

அவன் கையை நீட்டியது மட்டும் தான் அவனுக்கு நினைவிருந்தது.. அடுத்த நொடி அந்த கை முறுக்க பட்டு கீழே விழுந்து கிடந்தான்....

அவனது கையை முறுக்கியவனை பார்த்து கூட இருந்த இன்னொருவனும் அடிக்க வர அவன் முகத்திலும் ஓங்கி ஒரு குத்து விழுந்தது .
கீழே விழுந்தவர்கள் இருவரும் தட்டு தடுமாறி எழுந்துகொண்டு "நீ யாருயா எங்களை அடிக்க.." என்று பயத்துடனும் தடுமாற்றத்துடனும் கேட்டனர்...

"யாரா... பாண்டியன் டா... செந்தூர் பாண்டியன்... இந்த பாண்டியன் இருக்கற ஊரில் ஒரு பெண்ணை தவறாக தொட நினைத்தால் வெட்டிவிடுவேன் வெட்டி ... " என்று கத்திய அவனது குரல் அவர்களுக்கு கர்ஜனையாக தான் கேட்டது...

"மரியாதையா ஓடி போயிருங்க ...இல்ல கொலை விழும் .. " என்று கண்களில் அனல் பறக்க கூறியவனை பார்க்கும் போது இவன் உண்மையிலேயே கொன்றாலும் கொன்று விடுவான் என்று பயந்து அந்த இருவரும் ஓடி விட்டனர்..

"பார்த்து பத்திரமா போ மா.." என்று கூறிவிட்டு சென்ற பாண்டியனை பார்த்தபோது அந்த பெண்ணிற்கு பெருமையாக இருந்தது...

**************

"அன்பு.." என்று பாண்டியன் அழைக்க, அவளோ அவனை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை..

காலையில் இருந்து வயல் வெளியில் உழைத்ததில் உடல் முழுவதும் வியர்த்திருக்க வெய்யில் தாங்காமல் கருகி, ஒழுங்காக உண்ணாமல் உடல் மெலிந்து, சோர்ந்து இருந்தவளை பார்க்க பார்க்க அவன் மனதிற்குள் வாள் கொண்டு அறுத்தது போல் வேதனையாக இருந்தது...

"இந்த வேலையை விட்டுவிடு என்றால் கேட்க மாட்டாயா அன்பு..." என்று மெதுவாக கேட்க அவள்
அவனை வெட்டும் பார்வை ஒன்றை பார்த்தாள்...

அதில் அவன் மீதான குற்றச்சாட்டு தான் இருந்தது..

"ப்ச் சும்மா முறைக்காத டி.. நான் தான் செய்த தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டேன்.. இன்னும் ஏன் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற அன்பு.... நான் சொல்வதை கொஞ்சம் கேளேன்.."

பாண்டியனின் அணைத்து வார்த்தைக்கும் அவளிடம் இருந்த நிமிர்வான
பார்வை ஒன்றே பரிசாக கிடைத்தது..

"இதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.." என்று கூறியவள் அவனை தாண்டி நடந்து சென்றுவிட்டாள்...

பாண்டியனோ செல்லும் அவளையே இயலாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்..

'ஊரே என்னை பார்த்து பயப்படுது.. புள்ளப்பூச்சி மாதிரி இருந்துகிட்டு இவ எப்ப பாரு என்னை முறைச்சுட்டு சுத்தறா... எல்லாம் நேரம் ... 'என்று முனகிக்கொண்டே கிளம்பினான்..

7202
 
Top