மலர்-6
பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்... மாயா அவள் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவளைச் சாப்பிட அழைப்பதற்கு வந்திருந்தாள் வானதி.
அந்த சமயத்தில் மெத்தையில் கிடந்த அவள் அலைபேசி ஒலி எழுப்பியது.
அதைக் கண்ட வானதி.. "அண்ணி.. அண்ணி "என்று அழைத்தாள்.
"சொல்லு வானதி குளிச்சுகிட்டு இருக்கேன், என்ன விஷயம்?"என்று கேட்டாள் மாயா.
"உங்க போன் ரொம்ப நேரமா அடிச்சுகிட்டு இருக்குது அண்ணி."
"யாருன்னு பார்த்து சொல்லு.." என்று உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள்.
மாயாவின் போனை எடுத்துப் பார்த்தவள்.. "வருன்னு யாரோ பண்றாங்க அண்ணி.."
சில நொடிகள் யோசித்த மாயா.. "நீயே அட்டென்ட் பண்ணி நான் குளிச்சுட்டு இருக்கேன், அப்புறம் கூப்பிடுவாங்கன்னு சொல்லு."என்றாள்
"சரி அண்ணி" என்றவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்.
"ஹலோ.."என்றாள்.
அந்த பக்கம் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தது.
மறுபடியும் "ஹலோ" என்றாள்.
இப்போதும் அதே அமைதி நிலை அந்தப் பக்கம் நீடித்தது.
"ஹலோ.. யாருங்க போன் பண்ணிட்டு பேசாம இருக்கிய, மாயா அண்ணி குளிச்சுகிட்டு இருக்காவ பொறவு, கூப்பிடுறேன்னு சொல்லிருக்காகா"தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு அழைப்பை அணைக்கப் போக..
அந்த பக்கம் "இச்சு" என்று சத்தம் அழுத்தமாக அவள் செவிப்பறையைத் தாக்கியது.
வானுவிற்கோ அந்த பக்கம் கேட்ட முத்தச் சத்தத்தில் தூக்கி வாரிப் போடா, தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள்.
நேரில் குழாய் அடி சண்டைக்கு போவது போல் பாவாடையைத் தூக்கி சொருகியவள், நாதாரி பயலே, எவன் டா அவன் எனக்கு முத்தம் கொடுக்கிறவன், நேருல மட்டும் மாட்டுடா, உன் குறுக்க உடைச்சு சூப் வச்சி நான் குடிக்கல, நான் என் அண்ணனுக்கு தங்கச்சி வானதி இல்லடா.."என்று கூறியவள் மேலும் சில வார்த்தைகளை அர்ச்சனை செய்துவிட்டு போனை வைத்தவளுக்கு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
குளித்துவிட்டு வெளியே வந்த.. மாயா அவள் அவ்வாறு நிற்பதைப் பார்த்து 'தன் தமையன் ஏதோ சித்து வேலை செய்திருக்கிறான் 'என்பதை உணர்ந்தவள் இதழ்களில் ஒரு இளம் முறுவல்.
ஆம்..! சிறிது நேரத்திற்கு முன்பு அழைத்திருந்தது ஹர்ஷவர்தன் தான், வானு வரு என்று சொன்னதுமே, அவளைப் பேச வைத்தாள் ஏதாவது அவள் மனதில் உள்ளதைத் தெரிந்துக் கொள்ளலாம் என்று மாயா நினைத்திருந்தாள்.
ஆனால், அவள் கோபமாக இருப்பதைப் பார்த்து, ஏதோ நடந்திருக்குக்கிறது என்று யூகித்தவள்..
"வானதி என்னாச்சு.. ஏன் கோபமா இருக்கே.."
"அண்ணி அது யாரு போன்ல..? "
"ஏன் என்னாச்சு..? "
"அண்ணி இப்போ போன் பண்ணுனவன் எனக்கு முத்தம் கொடுத்துட்டான்" என்க..
'டேய்.. ஹர்ஷா இப்படியா டா பண்ணி வைப்ப' என நொந்துக் கொண்டவள் 'இதை எப்படிச் சமாளிக்கலாம்' என்று யோசித்தவள், "வேற ஏதாவது சொன்னானா?"என்றாள்.
"எதுவுமே பேசலை..
முத்தம் மட்டும் கொடுத்தான்"என்றாள் வானதி.
"அது ஒண்ணும் இல்லை வானதி.. என் ஃபிரண்டோட பொண்ணு வாய் பேச முடியாது, என் மேல ரொம்பப் பாசமா இருப்பாள், அவள் தான் போன் பண்ணி முத்தம் கொடுத்துருப்பா" என்றாள் சமாளிப்பாக.
"ஓ... அதான் பேசலையா... நான் ஒருத்தி அந்த பாப்பாவை திட்டிட்டேன் என தலையில் அடித்துக் கொண்டவள், சாரி சொல்லிடுங்க அண்ணி, இப்போ சாப்பிட வாங்க"என்று நகர்ந்துவிட்டாள்.
செல்லும் அவளையே பார்த்தவள்.. "எதைச் சொன்னாலும் நம்புறா, வெகுளிப் பொண்ணு "என முணுமுணுத்தாள்.
மும்பையில் இருந்து ஹர்ஷா தனது தங்கைக்கு போன் செய்ய, அந்த பக்கம் 'ஹலோ 'என்றதும் யார் என்பதை உணர்ந்துக் கொண்டவன் அமைதியாக இருந்தான்.
திரும்பவும் அவள் கத்த விளையாடி பார்க்கலாம் என்று நினைத்தவன் ஒரு முத்தம் வைக்க, பதிலுக்கு அவள் பல அர்ச்சனை மாலைகளை அவனுக்கு சூடா, காதில் ரத்தம் வராதா குறையாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், 'என் அண்ணனுக்கு தங்கச்சி வானதி இல்லடா.. 'என்ற வாக்கியத்தில் இத்தனை நேரம் இருந்த இளகுத் தன்மை மறைந்துப் போனை அணைத்துத் தூக்கி எறிந்தவன்..
"எப்போ பாரு அண்ணே.. அண்ணேன்னு சொல்லிக்கிட்டு, எனக்கும் தான் தங்கச்சி இருக்கா, அவள் உன்னை மாதிரியா என்னைச் சுத்தி சுத்தி வர்ற.. நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்க, உன்னை அப்படியே கொல்லனும் போல வருதுடி, ஆனால், முடியல லவ் பண்ணித் தொலைச்சுட்டேன் டி.. இதுக்கு மேலே முடியாது டி பட்டிகாட்டு எள்ளுருண்டை, வர்றேன் டி உன் ஊருக்கே, அங்கிருந்து உன்னை நான் உன் அண்ணனோட தங்கச்சியா இல்லாமல், இந்த ஹர்ஷவர்தனோட பொண்டாட்டியா கூட்டிட்டு வருவேன் டி, உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாட்டியும் என நினைத்துக் கொண்டான்.
நாட்கள் கடக்க.. மாயாவின் நிலத்தை உழுது நம்மாழவார் சொன்ன முறைப்படி இருபது வகையான விதைகளைக் கலந்து, நிலத்தில் விதைத்து, அதை அறுபது நாட்களுக்குப் பிறகு மடக்கி உழுது பயிர் செய்தால் ஐம்பது வருடமாக கெட்டுப் போயிருந்த நிலம் கூட.. அறுபது நாட்களுக்கு பிறகு பயிர் செய்யக் கூடிய அளவிற்கு பண்பட்ட நிலமாக மாறி விடும், மாயாவின் நிலத்திலும் அவ்வாறு செய்து பயிர் வளர ஆரம்பித்திருந்தது.
அவள் நிலத்தைச் சுற்றி இயற்க்கை வேலியை அமைக்க, கிளுவை மரங்களை வெட்டி இடை வெளி வெட்டி ஊன்றி, நொச்சி, முல்லை, பொன் அறளி, மயில் கொன்றை போன்ற கொடிகளை படர விட்டிருந்தனர்.உயிர் வேலி மரங்கள் பாதுகாப்பு வேலியாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், உணவு தொழிற்சாலையாகவும், புயல் காலங்களில் பாதுகாப்பு அரணாகவும், மண் அரிப்பை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றன..
மாயா தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அவள் முன் வந்து நின்றாள் மலர்.
"எதுக்காக நீ இங்க வந்துருக்கே? " என்று மலர் கேட்டாள்.
'உனக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா..!'என்று ரீதியில் பார்த்துவிட்டு நகர போனவளை கை நீட்டி தடுத்தவள், "நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ.."
"பார்த்தா தெரியல விவசாயம் பண்ண வந்துருக்கேன்" நக்கலாக சொல்ல..
"மத்தவங்க வேண்டுமானால் நீ சொல்வதை நம்பலாம், நான் நம்ப மாட்டேன், பதில் சொல்லு.."
"உன்னை மாதிரி ஒருத்தன் காதலுக்கு சம்மதம் சொல்லிட்டு, அவன் உன் அப்பாவைக் கொன்ன குடும்பத்தோட வாரிசுன்னு தெரிஞ்சதும் வேண்டாம்னு சொல்லிட்டு, இன்னொருத்தனை எதுவுமே நடக்காத மாதிரி கல்யாணம் பண்ணிக்க தயாராகிட்டியே.. அந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்க மட்டும் வரல" என்று அவளை இடம் பார்த்து அடித்தாள் மாயா..!
"உன... உனக்கு இது எப்படித் தெரியும்" திக்கி திணறிப் பேச..
"கேலியாக சிரித்த மாயா.. உங்க வீட்ல உள்ளவங்க எல்லாருடைய ஜாதகமும் எனக்குத் தெரியும். வருணனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்க உன் அம்மாவுக்கு விருப்பம் இல்லேன்ற விஷயமும் தெரியும், உன் அண்ணன் சொன்னதுக்காகாத்தான் உன் அம்மா சம்மதிச்சாங்கன்னு தெரியும்."
அவள் பேச பேச அதிர்ந்து சிலையாக நின்றாள் மலர்.
"நான் சொல்றதை கேளு, நந்தன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், அவன் உன்னைய விரும்பல, நீ உனக்கொருப் பாதுகாப்பான வாழ்க்கை வேண்டும் அப்டிங்கிறதுக்காகா வருணன விரும்புறதா சொல்லிக்கிட்டு இருக்கே..
அதை விடப் பாதுகாப்பான வாழ்க்கையை உனக்கு சரவணன் கொடுப்பான், வளர்ந்து வர்ற தொழில் அதிபன், உன்கிட்ட அவன் பொய் சொல்லிக் காதலிச்சிருந்தாலும், அவன் காதல் உண்மையானது, அவன் தான் உனக்கு சரியானவன்."
"இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்கோ"என்று மாயா கூற..
"ஓ.. இப்போதான் புரியுது! இந்தக் கல்யாணத்தை நிறுத்த அவன் அனுப்புன ஆளா நீ என்ற மலர். நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கோ யாரு என்னப் பண்ணி இந்த கல்யாணத்தை தடுக்க முயற்சி பண்ணாலும் இந்த கல்யாணம் நடக்கும் என்றாள்."
"வீணா என் கிட்ட சவால் விடாதே.. இந்தக் கல்யாணம் நடக்காது. அதை, உங்க அம்மாவே நிறுத்துவாங்க, நிறுத்த வைப்பேன்" என்ற மாயா நகர்ந்து சென்றாள்.
அடுத்த நாள் தாமரையிடம் மாயா கை நீட்டி ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருக்க.. இதை தூரத்தில் இருந்து பார்த்த வருணன் அவர்கள் அருகில் வந்தான்.
"என்ன மா இவங்க ஏன் கோபமா பேசுறாங்க, நீங்களும் அமைதியா இருக்கீங்க" என்றான்.
"அதான் உங்க புள்ளை கேட்குறார்ல.. சொல்லுங்க அத்தை" என்றாள் அழுத்தி.
தடுமாறிய தாமரை "அது ஒண்ணுமில்லைக் கண்ணா, இந்தப் பொண்ணு இங்கே தங்கிருக்கிறதுக்கு, சாப்பாட்டுக்கு எல்லாம் காசு கொடுத்துச்சு, அதே நான் வாங்களை. அதை வாங்கிக்கச் சொல்லி கோபமா பேசுது" என்றார்.
"ஏங்க நாங்க என்ன காசுக்காகவ இதெல்லாம் செய்றோம், இது கிராமம்ங்க, இங்க யாரும் பணத்துக்காகா எதுவும் செய்ய மாட்டோம் உங்க பணத்தை நீங்களே வச்சுக்கோங்க "என்றவன்.
"அம்மா நான் ரத்த தானா முகாம்ல ரத்தம் கொடுக்க போறேன், லேட்டா தான் வருவேன்" என்று சொல்லிக் கிளம்ப..
"இதுதான் சமயம் என்று யோசித்தவள்.. நந்தன் நானும் வர்றேன் என்னையும் கூட்டிட்டு போங்க" என்றாள்.
"நீங்க ஏன் அங்கே...? "
"நானும் பிளட் டொனேட் பண்ணனும்.."
"சரி வாங்க" என்றுக் கூறி அழைத்துச் சென்றான்.
அவன் வண்டியில் பின்னால் நெருங்கி அமர்ந்தவள், அவன் தோள் மீது கைகளை போட்டு கொண்டவள், கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்துக் கொண்டே வந்தாள் மாயா.. அவள் கை போட்டுருப்பது, அவஸ்தையாக உணர்ந்தவன்..
"கையை எடுங்க பின்னாடி உள்ள கம்பியை பிடிச்சுக்கோங்க.."என்றான்
"எனக்கு பைக்ல போய் பழக்கம் இல்லை மிஸ்டர். நந்தன், இப்படி உங்களைப் பிடிச்சுக்கிட்டாத்தான், விழா மாட்டேன்" என மேலும் நெருங்கி அமர்ந்தாள்.
ரத்தம் கொடுத்து முடித்ததும், "நந்தன் நான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்" என்று சொல்லி கிளம்பியவள் அங்குள்ள மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தாள்.
"என்னங்க அப்படி சீரியசா டாக்டர்கிட்ட பேசுனீங்க..? "
"அது ஒண்ணும் இல்லை நந்தன், பொண்ணுங்க சம்மந்தப்பட்ட விஷயம்" என்றதும் அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான் வருணன்.
திருமணத்திற்கு ஏழு நாட்கள் இருக்க.. நாளை அனைவரும் துணி எடுக்க செல்வதாக முடிவு செய்திருந்தனர்.
மாலை வேளையில் மாயா மாடியில் நடை பயின்று கொண்டிருக்க.. அவன் போன் ஒலி எழுப்பியது.. அதை ஏற்று காதில் வைத்தவள்.
...............
நம்ம இடத்துல வைங்க நான் உடனே வர்றேன் என்றாவள், அங்குள்ளவர்களிடம் அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு சென்னைக்குச் சென்றாள்.
நான்கு மணி நேரத்திற்க்கு பிறகு...
அந்த அறை முழுவதும் சிறு வெளிச்சம் கூட உள்ளே வர முடியாதா அளவிற்கு இருள் படர்ந்திருக்க, தனக்குப் பிடித்த ஜோக்கர் படப் பாடலை கண்கள் மூடி கேட்டுக்கொண்டிருந்தாள், அதுவே படர்ந்திருந்த இருளுக்கும், அந்த இசைக்கும் ஒரு வித பயப்பந்தை தொண்டைக்கும் வயிற்றுக்கும் உருளச் செய்தது, அந்த அறையில் ஒரு இருக்கையில் கை, கால்கள் கட்டி போட்டு அமர வைத்திருந்தவனுக்கு..!
அந்த இசை முழுதையும் கேட்டு முடித்த பிறகு கண்களைத் திறந்தாள் மாயாவதி. அந்த இடத்தை விட்டு எழுந்தவள், மின்சார விளக்கை உயிர்பித்து, மெதுவாக அவன் அருகில் சென்றாள்.
அவளைக் கண்டதும் அவனுக்கு பெண் ரூபத்தில் கருப்பு உடை அணிந்த காலன் தன் முன் நிற்பது போல் தோன்ற, எச்சிலை கூட்டி விழுங்கினான்.
அவன் முன் சாகவாசமாக இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு, ஒரு கையில் கன்னத்தைத் தாங்கி, சுவாரஸ்யமாக படம் பார்ப்பதுப் போல் அவனைப் பார்த்தாள்.
அவனோ" மாயா... என்னை விட்டுடு, ஏதோ ஆசையில பண்ணிட்டேன். நான் எங்கையாவது கண் காணாத இடத்திற்குப் போயிடுறேன்.இந்த ஒரு தடவை மன்னிச்சுடு.."ப்ளீஸ் என்று கெஞ்சினான்.
அவன் கெஞ்சுவதை எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்..
"அன்னைக்கும் இப்படித்தானே கெஞ்சுனேன், விட்டுயா, இன்னைக்கும் அதே சொத்துக்காக கொலை பண்ற அளவுக்கு போயிருக்கே.. உன்னை என்ன பண்ணலாம்" சொல்லிக் கொண்டே.. ஒரு கட்டரை எடுத்து அவன் முன் ஆராய்ச்சி செய்தாள்.
அந்த கட்டரைப் பார்த்துப் பயந்தவன் "ப்ளீஸ் மாயா.. நான் பண்ணது தப்புதான், அதான் உன் அண்ணன் என் கையை உடைச்சானே.."
"அப்படி இருந்தும் நீ திருந்தலையே.."ராகமாக இழுத்துக்கு கூறினாள்.
"இனிமேல் திருந்திடுவேன் மாயா என்னை விட்டுரு.."
"விட்டுறலாம்.. ஆனால், இது வரைக்கும் நடந்துகிட்ட எல்லாத்துக்கும் தண்டனை கொடுக்கணும்ல, அதைக் கொடுத்துட்டு விட்டுறேன். பயப்பிடாதே உன்னைக் கொல்லமாட்டேன்" என்றவள்.
அவன் கையை பூ போல பற்றி, "பரவாயில்லையே அழுக்கு இல்லாமல் சுத்தமா வச்சுருக்கே" எனக் கூறி, நடுவிரல் நகத்தில், கட்டுரை வைக்க, அவள் செய்யப் போவதை உணர்ந்தவன்..
"மாயா.. ப்ளீஸ் மாயா.. நான் உன் அத்தைப் பையன் என்னை விட்டுரு" என்று கெஞ்ச..
அவன் கெஞ்சல் அனைத்தையும் காதில் வாங்காதவள்..
"இது என் கிட்ட தப்பா நடந்துகிட்டதுக்கு" எனக் கூறி அவன் நகத்தில் கட்டுரை வைத்து அழுத்த அந்தக் கட்டிடமே நடுங்கும் அளவிற்கு கதற கதற அவன் நகத்தைப் பிடிங்கி எறிந்தாள்.
அவன் மரண ஓலம்.. காதைக் கிழிக்க அதை எதையும் சட்டை செய்யாதவள், அடுத்த நகத்தில் கட்டடரை வைத்து "இது பல பெண்களை ஏமாத்துனதுக்கு "எனச் சொல்லி அடுத்த நகத்தைப் பிடிங்கி எறிந்தவள்.
"கடைசியாக இது நீ அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை பண்ண முயற்சி பண்ணதுக்கு" என்று கூறி ஐந்து விரல் நகங்களையும் அவன் கதறியும் சலனேமே இல்லாமல் பிடிங்கி எறிந்தாள்.
அந்த வலியிலும்.. "என்னை விட்டுரு மாயா.. இனி இப்படிப் பண்ண மாட்டேன்" என அரை மயக்கத்திலும் அவன் பிதற்ற..
"ஆம்பளைன்ற திமிறுல தானே இதெல்லாம் செஞ்ச.. அதையே இல்லாமல் செஞ்சுட்டா..?" என்க..
"ப்ளீஸ் மாயா அப்படி எதுவும் செஞ்சுடாதே.. என்னை விட்டுரு"என்று குழறி குழறி அவன் பேச..
"பொண்ணுங்கள மனுஷியா நினைக்காமல், வெறும் சதையா நினைக்கிற உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் இதான்டா தண்டனை" என்றவள்..
தன் பி ஏவை அழைத்து .. "டாக்டர் வந்தாச்சா" என்று கேட்டாள்
"வெளில வெயிட் பண்றாரு மேடம்.."
"சரி.. இவன் இனிமேல் எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது.ஏன்டா வாழ்றோம்னு நினைச்சு நினைச்சு இவனே தற்கொலைப் பண்ணிக்கிட்டு சாகனும், அனஸ்தீசியா கொடுத்துப் பண்ணத்திங்க, அவன் கதறல் என் காதுல விழணும்"
"சரிங்க மேடம்.."
"இந்த மாயகிட்ட விளையாண்ட இதான் கதி!" எனச் சொல்லி இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டவள் வெளியில் செல்ல, டாக்டர் உள்ளே வந்து அவள் சொன்ன படி செய்ய, அந்த இடமே அவன் கதறலில் நடுங்க, அது எதுவும் தன் காதில் விழாதது போல், குளிர் கண்ணாடியை ஸ்டைலாக மாட்டிக்கொண்டு காரில் ஏறிச் சென்றாள் மாயாவதி.
நேராக ஹாஸ்பிடலலுக்கு சென்றவள்.. "இனி ஆபத்து இல்லைன்னு நினைக்கிறேன், இருந்தாலும் செக்யூரிட்டி டயிட்டாவே இருக்கட்டும், நான் இங்க வந்தது யாருக்கும் தெரியக் கூடாது, அப்பாவுக்கு கூடா.. யூரோப்ல இருக்கிற மாதிரியே மைண்டைன் பண்ணுங்க, காண்டாக்ட்ல இருக்கேன்னு சொல்லுங்க, அவங்க கேட்டாலும் இதே பதிலே சொல்லுங்க.. சரியா..? "என தன் பி ஏ விடம் கூறினாள்
"சரிங்க மேடம் "என்றான் அவனும்..
அடுத்த நாள் மாலை செந்தாரையூருக்கு வந்தவள் அசதிக் காரணமாக தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.
கிராமத்தில் மணப்பெண்ணைப் புடவை எடுக்க அழைத்து செல்வது வழக்கம் இல்லை என்பதால், வானுவையும், மலரையும் வீட்டில் விட்டு செல்ல, மலர் சிறிது நேரம் அங்கே தங்கிவிட்டு தனது வீட்டிற்கு சென்றவள்.சாயங்காலம் அனைவரும் வந்த பின்னரே.. வருணன் வீட்டிற்கு வந்தாள்.
தாமரை மலருக்கு அவர்கள் எடுத்த முகுர்த்த புடவையை எடுத்துக் காட்டி கொண்டிருக்க.. மலரின் அம்மா.. தனம்..
"என்ன வானதியே கண்ணுல காணல "என்றார்.
"இந்நேரம் வண்டிச் சத்தம் கேட்டதுக்கு குதிச்சுகிட்டு வந்துருப்பாளே.. என்ன பண்றான்னு தெரியல.. என்ற தாமரை இருங்க நான் போய் கூட்டிட்டு வர்றேன்" என்று எழ..
"இருங்க அண்ணி நானும் வர்றேன்.. எல்லாத்தையும் அங்க உள்ள ரூம்லதானே வைக்க போறியே, எல்லாத்தையும் மேலையே எடுத்துட்டு போயி பார்த்துக்குவோம்"என்று சொல்லிவிட்டு அனைவரும் ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொண்டு மேலே சென்று வானதி அறையின் கதவைத் திறக்க அங்கே கண்டக் காட்சியில்.. அனைவரும் அதிர்ச்சியில் கையில் இருந்த பை தானாக கீழே விழ.. வருணன் முகத்தில் எரிமலைப் போல் சீற்றம் வெடித்துச் சிதற தயாராக இருந்தது.
மலர்வாள்..!!
ஹாய் பிரண்ட்ஸ்...
அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.
கருத்துத் திரி
"உயிர் கொய்வாய் நறும் பூவே..."கதைக்கான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.srikalatamilnovel.com