மிக மிக நன்றி சகோதரி...
யாராவது இந்தக் கேள்வியை கேட்பார்களா என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி. ஆத்மன் வெங்கடேஷின் மகன் என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. ஒரு சிலரைத் தவிர. சர்வமக்கிற்கு கூட தெரியவந்தது சூழ்நிலை காரணமாகதான்.. இல்லை என்றால் அவளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கோர்ட்டில் கூடா அநேகாத்மன் தந்தை என்று தொடங்கியவன் பின் மிஸ்டர் வெங்கடேஷ் என்றுதான் கூறினான். ஆக ஏற்கனவே குழப்பத்திலும் வேதனையிலும் இருந்த வாசுதேவனுக்கு இதை உன்னிப்பாக அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. வாசுதேவனைப் பொறுத்த வரை, அனேகதமன் தனக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞஞரே. அவருடைய அந்த இறுதித் தருணத்தில் வேண்டியது சர்வமகிக்கும், அவருடைய மற்றைய பிள்ளைகளுக்குமான பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பு யார் கொடுப்பதாகக் கூறி இருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்டுதான் இருப்பார். (நான் இந்த இடத்தில் வாசுதேவனினி நிலையில் எண்ணிப் பார்க்கிறேன்.) அநேகாத்மன் வழக்கறிஞன், பொருளாதார சிக்கல் இல்லாதவனாக இருப்பான், தன் இந்து குழந்தைகளையும் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கைதான் அவருடைய நிம்மதியான மரணத்துக்கு காரணம். அந்த இறுதித் தருணத்தில், சர்வமாகி அவனை எங்கே சந்தித்தாள், எங்கே காதலித்தாள் இவன் எதிராக வாதாடியவன் என்கிற யோசனை வந்திருக்காது. இப்போ தெருவில் ஒருத்தரும் இல்லாமல் இருக்கும் பொது, 2 ஆண்களுக்கு மத்தியில் நாம் சிக்கிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அந்த இடத்தில் யாரு உதவிக்கு வந்தாலும், ஏன் என்று கேட்காமல் அவர்களுடன் போய்விடுவோம்.. அது போலத்தான்.
சர்வமாகி கூட அந்த நிலைதான். அவளே அநேகாத்மன் அப்படிக் கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் கூறியதும் அவள் அதிர்ந்துதான் போனால். அவள் தடுத்து சொல்ல வர, அவள் பேச்சை அவன் தடுக்கிறான். ஆக தந்தையின் நிலை கருதி அவளும் அமைதியாகவே இருந்துவிட்டால்.
அநேகாத்மனின் நிலை, எப்படியோ ஒரு உயிர் போகப் போகிறது. அவர் எதிரி என்றும் தெரியும் அந்த எதிரி உயிரோடு இருந்திருந்தால், அவன் தன பகையை நிச்சயமாக தொடர்ந்திருப்பான். ஆனால் இறக்கும் ஒருவரிடம், பகைக்காட்ட அவனால் முடியவில்லை. தவிர, அவனை அறியாமல், சர்வமகிமீது அவன் வைத்திருக்கும் இனம் புரியா உணர்வும், அந்த உயிர், நிம்மதியாக போகவேண்டும் என்று என்ன வைத்தது. அவனுக்கும் தெரியும், இது நடக்கப்போவதில்லை என்று. ஆனால், தவிக்கும் உயிருக்கு அமைதி கொடுக்கவே அவன் முயன்றான்.
இது உங்கள் கேள்விக்கான விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன் சகோதரி.