All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Yaaru athu namba hero va.... எல்லாரும் avaruku appadi payapuraanga but namba ஆளு இவ்வளவு asalt ah இருக்கான்... Avaluku thaan avan thotrathai பாத்து avanodaya seigaiya பாத்து avvallavu kovam athuyum avan avala பாத்த பார்வை la இன்னும் kovam.... Ava அமைச்சர் ah இந்த பிரச்சனைகள் ellaathukum காரணம் ah இருப்பாரா.... Avalodaya பிரச்சனை ennanu எவ்வளவு அழகா சொன்னா la.... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா அமைச்சுருக்கு பன்னு கொடுத்தவன்தான் ஹிரோனே பாத்திஆஆஆ..... கடைசில குரு
பிபி ஏத்துனவன்தான் ஹிரோவா......😜😜😜😜😜.....
 

Jeen

Well-known member
அச்சோ.. சாதாரண உரைநடையாக தான் இருக்க கொஞ்சம் கூட சரித்திர நாவல் மாதிரி இல்லையா🙄
ஐயோ சரித்திர நாவல் மாதிரி தான் இருக்கிறது நான் சொன்னது தமிழ் உச்சரிப்பை தான். ஏனெனில் நான் ஒரு கதை வாசித்து இருக்கிறேன் பெயர் யவனராணி. கல்கி அவர்களின் என்று நினைக்கிறேன்.ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு வாசித்து பாதியிலே விட்டுட்டேன். ஏனெனில் அதில் இருக்கும் இலக்கியங்களை புரிந்துக்கொள்ற அளவிற்கு தமிழ் அறிவு என்னிடம் இல்லை.😁😁😁
 

Ramyasridhar

Bronze Winner
பாதையில் புதர்கள் மண்டியிருக்க, அதை பொருட்படுத்தாமல், தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் விரையமாகும் என்பதால் பல்லக்கை விட்டு இறங்கி நடக்க தொடங்கி விட்டாள் செம்புல நாட்டின் இளவரசி. அவள் நாட்டில் விளைந்துள்ள குழப்பத்தை வெகு விரைவில் தீர்க்கவேண்டும் என்ற அவள் எண்ணம் புலப்படுகிறது. வழியில் அமைச்சரின் செருக்கை அடக்கிய விதம் அருமை. அவர்களை அழைத்து செல்ல வந்த வாலிபன் தான் நாயகனோ என்று தான் முதலில் தோன்றியது. ஏனெனில் அவனின் தோற்றமும், பேச்சும் நம்மை அப்படி நினைக்க வைத்தது. அவனும் அமைச்சரை விட்டு வைக்கவில்லை ( பாவம் அமைச்சர் பல்ப் மேல் பல்ப் பாக வாங்குகிறார் 🤣) குருதேவரிடம் அவள் கொண்ட பணிவு, பின் அவரிடம் "தங்களிடம் உதவி கோரி நான் வரவில்லை, என்னுள் இருக்கும் திடத்தை தேடி வந்தேன் " என்பதும், அவரிடம் ஆசி பெறுவதற்காக வந்தேன் என்று அனைத்து இடத்திலும் அவள் ஒரு சிறந்த இளவரசி என்றே நிரூபிக்கிறாள். மாறனின் அறிமுகம் அருமையோ அருமை. இப்படியொரு அறிமுகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அனைவரையும் ஆட்டுவிக்கும் குருவுக்கே இவன் ஆட்டம் காண்பிக்கிறானே...... குருதேவரின் மகனோ நம் நாயகன். அவனின் தோற்றத்திலும், குருவுக்கு கீழ்ப்படியாமை மற்றும் சோம்பல் தனத்தில் நாயகிக்கு அவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வரவில்லை. சுட்டெரிக்கும் இவள் பார்வையை தயங்காது எதிர்நோக்கும் அவன், அருமை. நாயகனின் அறிமுகம் எப்படி இருப்பினும் அவன்பால் நம்மை ஈர்த்துவிட்டான். அவனை பற்றி மேலும் அறிய ஆவல்.
 
Top