All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் ஐ ஹேட் யூ..! பட்...! கதை திரி...

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I HATE YOU...! BUT...!


வெறுப்பு....
1

நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது… அது கார்காலம்! என்பதால் மழைக்கான மேகங்கள் கருப்பு கம்பளியை போர்த்தியதைப் போல் கருகருவென இருக்க... பூமிப்பந்தை இருள் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது... இடியும்! மின்னலும்! அவ்வப்பொழுதுச் செல்ல சண்டைகளிட்டு வெளிச்சத்தை ஆங்காங்கே தெளித்துக் கொண்டிருக்க.. நிலவும் நட்சத்திரங்களும் இன்று எங்களுக்கு ஓய்வு என்பதைப் போல் பூமியில் தலைகாட்டாமல் விண்வெளியில் ஒளிந்து கொண்டது...

You're my honeybunch, sugar plum
Pumpy-umpy-umpkin
You're my sweetie pie
You're my cuppycake, gumdrop
Snoogums, boogums, you're
The apple of my eye

And I love you so
And I want you to know
That I'm always be right here
And I want to sing
Sweet songs to you
Because you are so dear... ...

என்ற ஆங்கில பாடல், ஒரு மழலையின் இனிய குரலில்! கைபேசியின் அழைப்பொலியாக சத்தமாக அலறி, சில வினாடிகளுக்குபின் மீண்டும் அமைதியாகிப் போனது... முதலில் ஒலித்த கைப்பேசியின் சத்தம் செவிகளுக்கு எட்டாமல் போகவே உறக்கம் கலையாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த அருண்... ஒருநிமிட இடைவெளியில் மீண்டும் கைபேசி ஒலிக்கவே, அருகிலிருந்த கைபேசியை பற்றி அழைப்பை ஏற்கும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது ...

உறக்கம் முழுவதும் கலையாததால் கண்களை கசக்கியவாறே போர்த்தியிருந்த போர்வையை விளக்கி எழுந்து உடலை இடவலமாக முறித்து சோம்பல் முறித்தவன்.. கைபேசியில் மணியை பார்க்க... மணி இரண்டரை எனக் காட்டியது...

' இந்த நேரத்தில் தனக்கு யார் அழைப்பது...? ' என்ற குழப்பத்தில் கால் ஹிஸ்டரி சென்று பார்க்க ஆரம்பிக்கும் முன்... மீண்டும் கைபேசி அலற, சண்முகம் கஸ்டமர் என திரையில் எழுத்துக்கள் மின்னியது...

' இவர் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடறார் ' என யோசனையாய் அழைப்பை ஏற்று, அலைபேசியை காதில் பொருத்தி...

" ஹலோ..! சொல்லுங்கண்ணா..." எனக்கூற..

" சாரி அருண்... நல்லா தூங்கிட்டு இருந்தியா...? தூக்கத்த கெடுத்துடேனா...? " என எதிர்முனையில் இருந்து சண்முகம் சங்கடமாய் வினவ..

" அப்படிலாம் இல்லண்ணா.. நைட்டு லேட்டாதான் துங்கினேன்.. அதான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் சொல்லுங்கண்ணா.. என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க..."

" அது ஒண்ணுமில்லை அருண் எங்க அண்ணனும் அண்ணியும், கோத்தகிரியில இருக்கற எங்க எஸ்டேட்டுக்கு ஒரு பங்சனுக்காக போயிருந்தாங்க.. நாளைக்கு காலைல சென்னைல நடக்கற ஒரு மீட்டிங்ல அண்ணா கண்டிப்பா கலந்துக்கனும்.. பங்சனுக்கு போன இடத்துல லேட்டாயிடுச்சு.. இந்த நேரத்துல கிளம்ப வேண்டான்னு அங்கிருந்தவங்க சொல்லியும் கேக்காம கிளம்பிட்டாங்க... இப்ப திரும்பி வரப்ப கார் ஏதோ..? பிராபளமாகி நடுவழியில நிக்கறாங்க. அது யானையும் சிறுத்தையும் அதிகமா நடமாடற இடம்.. அதான் உன்னைபோய் அவங்களை கூட்டிட்டு வர சொல்லறதுக்கு கால் பண்னேன் " என சண்முகம் தான் அவனை அழைத்த விவரத்தை கூற... பொறுமையாக கேட்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அவனது அமைதியை தவறாக எண்ணிக் கொண்டவர்...

" என்ன அருண்.....? எதுவும் சொல்லாம அமைதியா இருக்க... கொஞ்சம் சிரமம் பார்க்காம எனக்காக இந்த உதவியை மட்டும் செய் அருண்..." என கெஞ்சிக் கொண்டிருந்தார்...

" ஐயோ! என்னண்ணா.. இதுக்கு போய் இப்படி சங்கட படறீங்க... போய் கூட்டிட்டு வா அருண்னு சொன்னா, நான் போகப் போறேன்.. நான் அதை யோசிக்கலண்ணா.. இங்கயே நைட் புல்லா சரியான மழை.. அங்க இதவிட நிலைமை மோசமா இருக்கும்... என் கார்ல போக முடியாது.. பைக்லையும் போக முடியாது... அதான் எப்படி போறதுன்னு யோசிக்கறேன்.." என தன் அமைதிக்கான காரணத்தைக் கூற.. அவனது பதிலில் முகம் மலர்ந்தவர்...

" அருண்...! நான் இப்ப உன் வீட்டுக்கு வெளியிலதான் இருக்கேன்.. என் காரை எடுத்துட்டு போய் அவங்களை கூட்டிட்டு வந்தாலும் சரி... இல்ல அவங்க கிட்ட இந்த காரை குடுத்துட்டு, அவங்க காரை நீ ரெடி பண்ணி எடுத்துட்டு வந்தாலும் சரி.. எனக்கூறி கொண்டிருக்க... சண்முகம் வெளியில்தான் நிற்கிறார் என்று தெரிந்தவுடன்.. அவசர அவசரமாக எழுந்து கைபேசியை அனைத்துவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல, அருண் வருவதை பார்த்து சண்முகமும் கைபேசியை அனைத்துவிட்டு காரிலிருந்து கிழே இறங்கினார்...

" ஏன்..? வெளியவே நின்னுட்டீங்க .. கதவை தட்டி என்னை எழுப்பிருக்கலாம்ல.."

" பரவால அருண்.. உனக்கு ரொம்ப கஷ்டம் குடுக்குறேன்.. சாரி அருண் எனக்கு வேற வழி தெரியல... நானே போய்டுவேன்.. ஆனா..? உன் அளவு எனக்கு கார் ஓட்ட தெரியாது... அதில்லாம மழை நேரத்துல அதுவும் ஹில்ஸ்ல நான் கார் ஓட்டிட்டு போனா..? நான் ஏதாவது பள்ளத்துல காரோட லேண்ட் ஆகியிருப்பேன்.. கண்டிப்பா நாளைக்கு என்ன தேடி ஆம்புலன்ஸ் இல்லைனா ...? போலிஸ் தான் வரணும்... அதான் உன்னை தொந்தரவு செஞ்சுட்டேன்... என சரியாக தூங்காமல் பாதியில் உறக்கம் கலைந்ததால் கண்கள் சிவந்திருக்க, குளிரால் வெடவெடவென உடல் நடுங்கியவாறு தன் அருகில் நின்று கொண்டிருந்த அருணை பார்த்து கூற...

" சன்முகண்ணா... மறுபடியும் தொந்தரவு.! கஷ்டம்.! அப்படி இப்படின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதிங்க ... அப்பறம் நான் கோவிச்சுக்குவேன்... இது என் கடமைண்ணா.. நீங்க கவலை படாதிங்க அவங்களுக்கு ஏதும் ஆகாம பத்திரமா நான் போய் கூட்டிட்டுவரேன்..."

" இப்ப கரெக்ட்டா அவங்க எந்த இடத்துல இருக்காங்கனு ஏதாவது தெரியுமா..? "

" சரியா தெரியல அருண்... ஆனா..? கொடநாடு போற வழில கெங்கரை னு ஒரு ஊர் இருக்கு.. அங்கதான் எங்க எஸ்டேட் இருக்கு... கோத்தகிரியில இருந்து சரியா ஒரு பதினெட்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.. கோத்தகிரிக்கும் கெங்கரைக்கும் இடையிலதான் எங்கையாவது அவங்க கார் பிரேக்டவுன் ஆகி நிக்கணும்..." என சண்முகம் கூறுவதை பொறுமையாக கேட்டவன்...

" சரிண்ணா .. அவங்க நிக்கிற ரோட்ல இந்த நேரம் எந்த வண்டியும் வராது... அதனால பார்கிங் லைட் உட்பட எந்த லைட்டையும் ஆன் பண்ண வேண்டாமுன்னு சொல்லிடுங்க... ஏன்னா..? வெளிச்சத்த பார்த்தா.. எதாவது ஒரு மிருகத்தோட கவனத்தை ஈர்த்து அது காரை நோக்கி வரதுக்கு வாய்ப்பிருக்கு... எல்லாத்தையும்விட முக்கியம்.. எந்த காரணத்துக்காகவும் கார்ல இருந்து கீழ இறங்க வேண்டாம்னு சொல்லிடுங்க.. "

"--------"

" அப்பறம் என் மொபைல் நெம்பர உங்க அண்ணா கிட்ட குடுத்து வாட்ஸ் அப் மூலமா அவங்க லொக்கேஷன எனக்கு ஷேர் பண்ண சொல்லுங்க... நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..? அவ்வளவு சிக்கிரம் அங்க போய்டுவேன்.. பயப்படாம அவங்கள தைரியமா இருக்க சொல்லுங்க... அவங்க எந்த கார்ல..? போயிருக்காங்க... " என அவர்கள் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு.. அடுத்ததாக தான் என்ன..? செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய சண்முகத்திடம் வினவ...

" அது ##### #### சீரிஸ் கார் அருண் " என உயர்ரக கார் ஒன்றை கூற...

" சுத்தம்... கண்டிப்பா ஏதாவது சின்ன எலக்ட்ரிக்கல் கம்பிளைண்ட் தான்... அங்க வச்சு சரி பண்ணறது ரொம்ப கஷ்ட்ம்... என்கிட்ட பிராபளத்த ஐடெண்டிபை பண்ணற டிவைஸ் இல்லண்ணா... அந்த கம்பெனியோட டெக்னீசியன் தான் பார்க்க முடியும்... எதுக்கும் நான் என்னோட டூல்ஸ எடுத்துக்கறேன்.. மைனர் பிராபளம்னா..? நானே ரெடி பண்ணிடறேன்.. மேஜர் பிராபளம்னா..? சர்வீஸ் சென்டர் கொண்டுவந்துதான் பார்க்கணும். பொதுவா இந்த மாடல் கார்கள் பிராபளமே ஆகாது.. எதிர்பாராவிதமா இந்த மாதிரி ஆகிடுது... சரிண்ணா நான் சொன்னத உங்க அண்ணன் கிட்ட சொல்லிடுங்க... ஒரு ஐஞ்சு நிமிசத்துல நான் ரெடியாகி வந்தரறேன்... " என சொல்லிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தவன்...



முகம் கழுவி உடை மாற்றிவிட்டு, மழை மற்றும் குளிரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஜெர்கின் மற்றும் குல்லா என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கடைசியாக தனது டூல்ஸ் பேக்கையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர...

அங்கிருந்த சேரில் அமர்ந்தவாறு அருண் கூறியவற்றையும், அவன் அவர்களை அழைத்து செல்ல வருவதையும் அவர்களுக்கு தெரிவிப்பதற்காக அவரது அண்ணனின் கைபேசியை தொடர்பு கொள்ள முயற்சிக்க...




" This number cann't be reached at the moment.. please try again after some time "

" நீங்கள் தொடர்புகொள்ள முயற்சிக்கும் வாடிக்கையாளர் எண்! தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது.. சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும் நன்றி..."


என கணினியின் பதிவொலி ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறி ஒலிக்க... மீண்டும் மீண்டும் தொடர்ந்து சண்முகம் முயற்சிக்க.. மறுபடியும் அதே பதிலை கணினி தெரிவிக்க... சண்முகத்தின் முகம் பயத்தை பிரதிபலிக்க ஆரம்பித்தது....

" என்னண்ணா ..? நான் சொன்னத அவங்க கிட்ட சொல்லிட்டிங்களா ..? " என தன் அறையிலிருந்து வெளிப்பட்டவாறு சண்முகத்திடம் வினவ...

அவர் 'இல்லை' என்பதைப்போல் மறுப்பாய் தலையசைத்தார்...

" லைன் கிடைக்கலையா...?" என அவரது முகத்தை பார்த்துக் கொண்டே கேட்க

இந்தமுறை ' ஆம் ' என்பதைப்போல தலையசைத்தார்...

" பயப்படாதிங்கண்ணா.. அவங்களுக்கு ஏதும் ஆகாது... அவங்க இருக்கறது ஹில்ஸ் ஏரியா..
அங்க சிக்னல் கிடைக்காம போகறது சகஜம்தான்.. நீங்க தொடர்ந்து ட்ரை பண்ணுங்க... லைன் கிடைச்சதும் நான் சொன்னத சொல்லிடுங்க... நீங்க இங்கயே இருக்கறீங்களா..? இல்ல உங்க வீட்டுல டிராப் பண்ணவா..?.."

" என்ன வீட்டுல டிராப் பண்ணிடு அருண்..." என்று முதலில் கூறியவர்... பின் ஏதோ..? யோசித்தவராய் ...

" வேணும்னா..? நானும் உன்கூட வரட்டுமா..? அருண்..." என தன் அண்ணன் அண்ணியை நினைத்து கவலையாக கேட்க...

" அண்ணா.. நீங்க தேவையில்லாம பயப்படறீங்க.. நீங்க கூட வர்றதும் வராததும் உங்க விருப்பம்தான். ஆனா..? அதுக்கு இப்ப அவசியம் இல்லண்ணா... நானே பார்த்துக்கறேன்

" நீங்க நார்மலா இருந்தாலே என்கூட கார்ல வர்றதுக்கு பயப்படுவீங்க .. நான் இப்ப உங்கள கூட்டிட்டு போனா..? நான் போகிற வேகத்துக்கும், உங்க பதட்டத்துக்கும் உங்களுக்கு இப்பவே ஆம்புலன்ஸ் புக் பண்ண வேண்டியதுதான் " என அவரை சகஜமாக்கும் பொருட்டு சிரித்துக் கொண்டே கூற... சண்முகமும் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி அதை ஆமோதித்தார்...

பின் தன் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் காரிலேறி அமர்ந்தவுடன்.. அருண் காரின் சாவியை திருகி காரை உயிர்பித்து நேராக சாய்பாபா காலனியிலுள்ள சண்முகத்தின் வீட்டை நோக்கி காரை செலுத்தியவன் சண்முகத்தின் வீட்டின் முன் அவரை இறக்கிவிட்டு கிளம்பும் முன்

" அருண் வேகமா போறதோட பாதுகாப்பாவும் போயிட்டு வரணும்.. என் அண்ணன் அண்ணியோட பாதுக்கப்பையும் சேர்த்து உன் பாதுகாப்பும் எனக்கு முக்கியம் " என அவனது நலனிலும் அக்கறை உள்ளவராய் கூற.. அதை ஏற்றுக் கொண்டவன் போல் தலையசைத்து தனது பதிலை தெரிவித்துவிட்டு... சாய்பாபா காலனியின் குறுக்கு சாலைகளை கடந்து மேட்டுப்பாளையம், ஊட்டி செல்லும் பிரதான சாலையை அடைந்தவுடன் ஆக்சிலேட்டரை மிதிக்க... அதனால் கோபம் கொண்ட BMW தயாரிப்பான 7 சீரிஸ் ரக வாகனம் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாவை போல் விர்ர்ர்ரென! சப்தத்தை வெளிப்படுத்தியவாறு புயலென சீறிப் பாய்ந்தது

விருப்பம் தொடரும் .....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெறுப்பு ... 2

அருண்..! நல்ல உயரம்! அதற்கே உண்டான உடல்வாகு ...! மாநிறத்திற்கும் சற்றே அதிகமான சந்தன நிறம்...! முறையான உடற்பயிற்சியின் உதவியால் முறுக்கேறிய தசைகள்...! உறுதியான புஜங்கள்...! நேர்கொண்ட கூர் நாசி...! பார்ப்பவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க தோன்றும் தோற்றம்...! மொத்தத்தில் அருண்!!! ஒரு ஆணழகன்..! பெற்றோர் , உடன்பிறந்தோர், உற்றார் உறவினர் அனைத்தும் கேள்விக்குறியே... அருண் பிறந்து நான்கு நாட்களே ! ஆனா நிலையில், குப்பைத்தொட்டியில் இருந்து ஒரு கால்துறை ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டு நாய்களின் பற்களுக்கு இரையாகாமல் காப்பாற்றப்பட்டு ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தான்.. படிப்பின் மீது அவனுக்கிருந்த ஆர்வம் கண்டு அந்த ஆய்வாளரே அருணின் படிப்பு செலவை முவதும் ஏற்றுக்கொள்ள.. அவரின் தயவில் நன்றாக படித்தவன் , ஆட்டோமொபைல் துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக அது சார்ந்த டிப்ளமோ இன் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் முடித்துவிட்டு... கோவையிலுள்ள உயர்ரக கார்களை பழுது பார்க்கும் பிரபலமான நிறுவனத்தில் இப்பொழுது சீப் மெக்கானிக்காக வேலை செய்து கொண்டிருக்கும் இருபத்தைந்து வயது கட்டிளம் காளை...!

அருணின் தோற்றம், திறமை, மற்றவர்களை மதிக்கும் தன்மை, குறிப்பாக பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் விதம் எல்லாம் சேர்த்து பல பெண்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட கனவு நாயகனாக அருண் இருந்தபோதும்... எந்த பெண்ணும் அருணின் கண்ணை கூட கவரவில்லை... படிக்கும்பொழுதும் சரி, பணிபுரியும் இடத்திலும் சரி பெண்கள் பலர்... அவர்களாகவே வந்து அவனை விரும்புவதாக கூறியும், அவர்களின் மனம் நோகாதவாறு நாகரிகாமாக மறுத்துவிடுவான் ... அவனை நோக்கி வரும் மன்மத அம்புகளில்! இருந்தும், காந்த பார்வைகளில்! இருந்தும் இன்றுவரை தப்பி ஓடிக் கொண்டிருக்கிறான்.. அவன் ஒதுங்கி செல்வதாலையே சில பெண்களுக்கு அவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது... அவர்களும் இன்னுமும் இந்த இளஞ்சிங்கத்திற்கு வலை விரித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்... சில பெண்களோ... அருணின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் நேரடியாகவே அவனை சபிக்க ஆரம்பித்தனர்...

அருணின் நண்பர்களுக்கோ..! தங்களை ஒரு பொருட்டாக கூட மதியாமல், விலகி செல்பவனையே பெண்கள் அவர்களாகவே அவனை தேடி சென்று மொய்ப்பதைக் கண்டு புகைய ஆரம்பித்தது... அதில் மிக முக்கியமானவன்.. கதிர்..! சிறுவயதிலிருந்தே அருணுடன் படித்தவன்.. கோவையின் மிக பிரபலமான ஜவுளிக்கடை அதிபரின் ஒரே மகன்... நண்பன் என்கிற போர்வையில் ஒளிந்து கொண்டு... உதட்டில் புன்னகையையும் உள்ளத்தில் நஞ்சையும் வைத்துக்கொண்டு முதுகில் குத்த சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவன்... செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த தன்னைவிட, பிறந்தநாள் எதுவென்றே அறியாத அருண்.! எல்லவித்திலையும் சிறந்தவனாக இருப்பதை கதிரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அருணை வீழ்த்த அல்லது அசிங்கப்படுத்த கதிர் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அருணின் உயர்வுக்கு வழிவகுக்க, உள்ளம் எரிமலையாக குமுற , உறவாடிக்கெடு ! என்னும் தத்துவத்தை கையிலெடுத்து இன்றுவரை நண்பனாக அருணிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறான் ... கதிரை தவிர மனோஜ் கிஷோர் என்ற இருவரும் அருணின் நெருங்கிய நண்பர்கள்... மனோஜ் நகைக்கடை அதிபரின் மகன்... கிஷோர் பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அதிபரின் மகன்...
(இவர்களை பற்றி விரிவாக கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே !)

BMWவின் முகப்பு விளக்குகளை ஹை பீமில் ஒளிரவிட்டு காரை நூற்றைம்பது கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் விரட்டியதன் பயனாய் மேட்டுப்பாளையத்தை இருபது நிமிடங்களுக்குள்ளாகவே கடந்திருந்தான்... மேட்டுபாளையத்தை கடந்து கோத்தகிரி செல்லும் வளைவில் காரை திருப்பியவுடன் பனித் தூறலாக ! ஆரம்பித்த மழை சில நிமிடங்களுக்குள்ளாகவே வானத்தை பொத்துக் கொண்டு அருவியாக பொழிந்து ! இடிமின்னலுடன் கைகோர்த்து கனமழையாக மாறியிருந்தது... மேட்டுப்பாளையம் வரும்வரை சண்முகத்தின் அண்ணனிடமிருந்து எந்த அழைப்பும் வந்திராததை அருண் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... ஆனால் கோத்தகிரியை நோக்கி செல்ல செல்ல அவர்களை பற்றிய எந்தத்தகவலும் இல்லாது போகவே, அவர்களுக்கு என்ன ஆனதோ? என்ற அச்சம் அவனையும் தொற்றிக் கொள்ள... மழையையும் மற்றும் மலையையும் சட்டை செய்யாமல், காரை விரட்ட ஆரம்பித்தான். இதற்கெல்லாம் நானும் அசரமாட்டேன் என்பதைப்போல் அந்த வாகனம் மலை பாதையிலுள்ள கொண்டை ஊசி வளைவுகளில் "கிரிஈஈச்ச்ச் " என சத்தத்தை எழுப்பியவாறு வழுக்கிக் கொண்டே சென்றது

முள்ளூர் அருகேயுள்ள சோதனை சாவடியின் இடதுபுறம் இரண்டு மூன்று வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரசையாக நிற்க... சோதனை சாவடியில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் மேலே செல்ல முடியாதவாறு தடுத்திருந்தனர்.. அதை பார்த்ததும்


" ம்ப்ச் " என சலித்து கொண்டு தனது வாகனத்தை நேராக தடுப்பின் அருகில் கொண்டு சென்று இயக்கத்தை நிறுத்திவிட்டு, காரிலிருந்து இறங்கி சோதனைசாவடியை நோக்கி மழையில் நனைந்து கொண்டே சென்றவன்.. அங்கிருந்த காவலர்களிடம் நிலைமையை எடுத்து சொல்லி தன்னை போக அனுமதிக்குமாறு வேண்ட... அவர்கள் ஒரே முடிவாக ' முடியாது 'என்று மறுத்துவிட்டனர்... இவர்களிடம் பேசி பயனில்லை என்று புரிந்தவுடன் உடனடியாக சண்முகத்தை தொடர்பு கொண்டு நிலைமையை கூற, அருண் கூறிய தகவலை கேட்டவுடன் இரண்டு நிமிடத்தில் அழைப்பதாக கூறி தொடர்பை துண்டிக்க ... ஈரத்தலையை கைகளால் துவட்டியபடியே சண்முகத்தின் அழைப்பை எதிர்பார்த்து அமைதியாக நின்றிருந்தான்...

சண்முகம் தனது விட்டின் வரவேற்பறையில் அமர்ந்து தொடர்ந்து தனது அண்ணனை தொடர்புகொள்ள முயற்சி செய்து பயனில்லாமல் போகவே மொபைலை சோபாவின் மீது வைத்துவிட்டு கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்க... திடிரென மொபைலில் அழைப்பு வர, தன் அண்ணனாக இருக்கும் என்று மொபைலை எடுத்து பார்த்தவருக்கு ... அழைத்திருப்பது அருண் என்று தெரிந்தவுடன் யோசனையாக அழைப்பை ஏற்று பேசியவர் அருண் கூறிய தகவலில் ஒரு நொடி திகைத்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு அருணின் அழைப்பை துண்டித்துவிட்டு ...தனக்கு தெரிந்த காவல்துறை ஆணையாளருக்கு அழைத்து தகவலை கூறிவிட்டு ஒன்றரை நிமிடங்களில் கான்பிரன்ஸ் காலில் அருணை அழைத்தார்...

சன்முகத்திடமிருந்து அழைப்பு வந்தவுடன் அழைப்பை ஏற்று பேசியவன் அவர்கள் கூறிய படியே மொபைலை அங்கிருந்த காவலரிடம் கொடுத்து பேசுமாறு சைகை செய்ய... அருணிடமிருந்து விரைப்பாக மொபைலை வாங்கி காதில் பொருத்தியவர்... எதிர்முனையில் பேசுவது காவல்துறை ஆணையாளர் என்று தெரிந்தவுடன்... எழுந்து நின்று பணிவாக ...

" ஐயா ! வணகங்கையா !... சொல்லுங்கையா ! "

" ---------- "

" ஐயா ! மேல மழை அதிகமா இருக்குங்கையா...! அதில்லாம யானைக காட்டெருமைக எல்லாம் வழிலேயே நிக்குதுங்கையா...! காலைல ஆறு மணிவரை எந்த வண்டியையும் மேல விட வேண்டாமுன்னு உத்தரவுங்கையா...!"

' ---------- "


" சரிங்கையா... ! உத்தரவுங்கையா...! "
என பேசிவிட்டு கைபேசியை அருணிடம் ஒப்படைத்துவிட்டு அவனது கார் கடந்து செல்ல எதுவாக தடுப்புகளை விலக்க செல்ல... தன் காரை நோக்கி சென்றவன் , அழைப்பு இன்னும் துண்டிக்கப்படாமல் இருக்க காரில் அமர்ந்துகொண்டு ..


" சரிண்ணா .... நான் அவங்களை பார்த்ததும் உங்களுக்கு கூப்பிடறேன் " என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்கும் முன்

" அருண் " என சண்முகம் அழைத்தார்...

" சொல்லுங்கண்ணா..? "

" இவ்வளவு வேகம் வேண்டாம் அருண் ... கொஞ்சம் நிதானமாவே போ அருண்..."

" நான் மறுபடியும் சொல்லறேன் ... அவங்களோட சேர்த்து உன் பாதுகாப்பும் எனக்கு முக்கியம்" என மீண்டும் அக்கறையோடு கூறினார்...

ஏனெனில் பகலில் இப்பொழுது அருண் நின்றிருந்த இடத்திற்கு செல்ல எப்படியும் இரண்டரை மணிநேரமாவது ஆகும்... இரவு வேளையில் போக்குவரத்து அதிகமிருக்காது என்பதால் விரைவாக செல்லலாம் என்றாலும்கூட... குறைந்தபட்சம் எப்படியும் ஒன்றரை மணிநேரமாவது ஆகும் ... ஆனால் அருணோ ! நாற்பது நிமிடங்களில் அங்கு சென்றிருந்தான். அருண் சென்ற வேகத்தை எண்ணித்தான் அவர் பயந்தார்...

" அண்ணா ... நான் ஒரு மெக்கானிக்குங்கறதையும் தாண்டி ஒரு கார் ரேஸ் சர் ... அது உங்களுக்கே தெரியும்... என்ன பத்தி தெரிஞ்சிருந்தும் இந்த பயம் தேவைதானா..? "

" அதெல்லாம் எனக்கும் தெரியும் அருண் ... இருந்தாலும் ஏதோ தப்பா நடக்கறது மாதிரியே ஒரு பிரமை ... மனசு கிடந்தது அடிச்சுக்குது அதான் "

" பயப்படாதிங்கண்ணா .... யாருக்கும் எதுவும் ஆகாது... நான் அவங்களை பார்த்ததும் கால் பண்ணறேன் " எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டு காரை உயிர்ப்பித்து " விர்ர்ர்ரும் ... விர்ர்ர்ரரும் " என சத்தத்தை வெளிபடுத்தியவாறு ஆக்சிலேட்டரை மிதித்து கோத்தகிரியை நோக்கி காரை விரட்ட ஆரம்பித்தான்....


ஆரம்பகாலங்களில் கார் ஓட்டுவது மிகவும் பிடித்தமான ஒன்று என்றாலும், கார் பந்தையங்களில் கலந்து கொள்ள பெயரளவில் கூட ஈடுபாடு இருந்தது இல்லை... அருணுக்கு அதில் ஆர்வமும் இல்லை... கடந்த இரண்டு வருடங்களாகத்தான்.... அருண் ஒரு கார் பந்தைய வீரனாக வரவேண்டும் என்ற நெருப்பு அவனுள் மெல்ல பற்றி, புகைய ஆரம்பித்து... இப்பொழுது கொழுந்துவிட்டு எரிய தொடங்கியிருந்தது.... அதற்கு காரணம், அருண் முதன் முதலில் கலந்து கொண்ட கார் பந்தையத்தில் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினான்...


அருண் நன்றாக கார் ஓட்டுவதை கண்டு அவனது நண்பர்கள், முக்கியமாக கதிர்... அருணை தூண்டி விட, நண்பர்களின் தூண்டுதலால் பந்தையத்தில் கலந்து கொண்டாலும் முழு ஈடுபட்டுடனே பந்தையத்தில் கலந்து கொண்டான்... ஆனால் முறையான பயிற்சியின்மையால் தோல்வியை தழுவினான்...


சாதாரணமாக கார் ஓட்டுவதற்கும், ரேஸ் டிராக்கில் கார் ஓட்டுவதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உணர்ந்தவன், அன்றிலிருந்தே அதற்கு தன்னை தயார் செய்ய ஆரம்பித்தான்... ஒருவேளை அருண் கலந்துகொண்ட முதல் பந்தையத்தில் வெற்றி பெற்றிருந்தால், அதன் பிறகு கார் பந்தையங்களில் கலந்து கொள்ளாமல் கூட இருந்திருப்பான்... ஆனால் தோல்வி அவனுள் ஒரு விதையை விதைத்தது... அருண் வெற்றியை ஆராதிப்பவனுமில்லை, தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் துவல்பவனுமில்லை... மாறாக அந்த தோல்வியை கூட, தான் போராடி தோற்றிருக்க வேண்டும் என எண்ணுபவன்... எளிதில் சரணடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியதை அருணால் ஜீரணிக்க முடியவில்லை... முதலில் தன்னை பற்றிய சுய அலசலில் ஈடுபட்டவன், தனது தோல்விக்கான காரணத்தை பட்டியலிட்டு அதை சரி செய்ய ஆரம்பித்தான்...


ஒருவர் என்னதான் திறமையாக கார் ஓட்டினாலும், கார் ஒத்துழைக்கவில்லை என்றால் பந்தையத்தில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தவன்... முதலில் பந்தையத்திற்கான காரை தயார் செய்ய ஆரம்பித்தான்... தன்னிடமிருந்த சேமிப்பை வைத்து ஒரு நடுத்தரராக பழைய காரை விலைக்கு வாங்கி... அதை ஒரு முழுமையான பந்தையக்காராக மாற்றியமைத்தான்... பெய்ண்டிங், டிங்கரிங் போன்ற வெளிப்புற வேலைகளை வெவ்வேறு இடங்களில் செய்தவன்... இஞ்சின் கியர்பாக்ஸ் பிரேக் சஸ்பென்சன்... உள்ளிட்ட முக்கியமான வேலைகளை... தானே செய்ய ஆரம்பித்தான்...

 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காரை தயார் செய்ததும் பயிற்சிக்காக அருண் தேர்ந்தெடுத்தது இந்த மலைப்பாதையை தான்... அதற்கு காரணமும் உண்டு... பந்தையத்தில், பொதுவாக நேர்கோட்டில் ஒருவரை முந்தி செல்வதென்பது மிகக்கடினமான ஒன்று... ஏனெனில் ஒவ்வொருவரும் மற்றவர்க்கு சமமான வேகத்திலேயே ஒருவரையொருவர் பின் தொடர்வர்... தனக்கு முன் செல்லும் வாகனத்திற்கும், தனக்கும், தன் பின்னால் வரும் வாகனத்திற்கும் நிமிட வினாடிநேர வித்தியாசமே இருக்கும்... அதனால் திருப்பங்களில் மட்டுமே ஒருவரை பின்தள்ளி முன்னேருவதற்கு வாய்ப்பு அதிகம்... அதனால் ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்காக இந்த மலை பகுதியிலுள்ள திருப்பங்களில் கார் ஒட்டிய அனுபவம் அவனுக்கு கை கொடுக்க... எந்தவித சிரமமுமின்றி வெகு சுலபமாக கோத்தகிரியை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான்...

முதல் தோல்விக்கு பிறகு... இன்று வரை அருண் கலந்து கொண்ட கார் பந்தையங்களில் தோல்வியை தழுவவில்லை... முதலில் கல்லூரிகளுக்கு இடையிலான பந்தையங்களில் கலந்து கொண்டவன்... அதன் பிறகு மாவட்ட அளவிலான கார் பந்தையங்களில் கலந்து கொண்டு சிறிது சிறிதாக கார் பந்தைய வீரனாக உருவெடுக்க ஆரம்பித்தான்.... இப்பொழுது தேசிய அளவிவில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்காக கடினமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான்.... அருண் முதல் பந்தயத்தில் தோற்று வாடிய முகத்துடன் வந்ததை கண்டவுடன்... கதிரின் முகத்திலோ அளவில்லாத மகிழ்சி பொங்கி வழிய ஆரம்பித்து, உள்ளம் சந்தோசத்தில் கூப்பாடு போட... எதையும் முகத்தில் பிரதிபலிக்காமல், சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு...

" விட்றா..! மச்சான்... இதெல்லாம் உனக்கு செட்டாகாது... நீ எப்பயும் போல உன் மெக்கானிக் வேலையவே பாரு.." என குத்தலாக கூற... அவனை பற்றி நன்கு தெரியும் என்பதால் புன்னகைத்துக் கொண்டே...

" இல்ல மச்சான்..! இனிமேல் இதுதான் என முதல் வேலை.." என உறுதியுடன் கூற அன்றிலிருந்தே கதிரின் முகம் வாட ஆரம்பித்து விட்டது... அதன் பிறகு அருணை கார் பந்தையங்களில் கலந்து கொள்ள விடமாலிருக்க கதிர் எவ்வளோவோ முயன்று பார்த்தும் கதிரால் எதுவும் செய்ய முடியவில்லை... சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறான் ...


தனது கடந்தகாலத்தை சிந்தித்தபடியே காரை அதிவேகமாக செலுத்திக் கொண்டிருந்த அருணை.. " கிளிக்.. கிளிக்..." என மொபைலில் இருந்து மெசேஜ் டோன் ஒலித்து சிந்தனையை கலைக்க.. காரை ஓரமாக நிறுத்திவிட்டு மொபைலை எடுத்து மெசேஜை ஓபன் செய்து பார்க்க... புதிய எண்ணிலிருந்து அருணை அழைத்ததிற்கான குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது....

சண்முகத்தின் அண்ணனின் எண்ணாக இருக்கும் என்று அந்த எண்ணிற்கு அழைக்க... அந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை... ஒரு வினாடி யோசித்தவன் மீண்டும் அந்த எண்ணிற்கு அழைக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு காரை விரட்ட ஆரம்பித்தான்... முள்ளூரிலிருந்து கிளம்பிய முப்பது நிமிடங்களில் கோத்தகிரியை அடைந்திருந்தான்...

மேட்டுப்பாளையத்தில் பிடித்த மழை கோத்தகிரிய அடையவும் சிறிது சிறிதாக குறைந்து முழுவதுமாக நின்றிருந்தது... கோத்தகிரியிலிருந்து கொடநாடு போகும் பாதையை பிடித்து காரை விரட்டியவன்... அங்கிருந்து நான்கு கிலோமிட்டர் சென்று வலதுபுறமாக சரிவாக செல்லும் பாதையில் காரை திருப்பியவுடன்...

'
கெங்கரை 14 km ' எனும் வழிகாட்டி பலகை முதலில் வரவேற்க...

வனத்துறை எச்சரிக்கை
ஆபத்தான மிருகங்கள் அதிகமாக நடமாடும் பகுதி...
கண்ணிற்கு தெரியாத அபாயகரமான திருப்பங்கள் அதிகமுள்ள பகுதி ...
வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்தாதீர்...
மிருகங்களை தொந்தரவுசெய்யாதீர்..
மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...
கவனமாக செல்லவும்

என தகல்வகளையும், எச்சரிக்கையையும் உள்ளடக்கிய அறிவிப்பு பலகை பலகை அடுத்ததாக வரவேற்றது...

அதை பார்த்துக் கொண்டே கவனமாக காரை இயக்க ஆரம்பித்தான்... மழை பெய்து சற்று நேரத்திற்கு முன் தான் ஓய்ந்திருந்ததால், பனியின் தாக்கம் அதிகாமாக இருந்தது...
ஒரு ஐம்பதடி தூரமே கடந்திருந்த நிலையில் சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை... அருணுக்கு காரை சாலையில் ஒட்டுகிறோமா..? அல்லது வானத்தில் மேகத்தினூடே ஒட்டுகிறோமா..? என்ற சந்தேகமே வந்துவிட்டது... அந்தளவுக்கு வெண்பனி.! அந்த இடத்தை ஆக்கிரமித்து, தனது கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்திருந்தது...

முன்புபோல் வாகனத்தை விரைவாக இயக்க முடியவில்லை... அதோடில்லாமல் காரினுள்ளே குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆடையணிந்து, காரிலிருந்த வெப்பத்தை உருவாக்கும் ஹீட்டரை முழுமையான பயன்பாட்டில் இயக்கியும், தாங்க முடியாதளவு குளிர் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.. காதுகள் வலியெடுக்க, கைகளில் ரத்த ஓட்டமில்லாமல் மரத்துப்போன உணர்வை வெளிப்படுத்த... அனைத்தையும் தாங்கிக் கொண்டு மெதுவாக காரை செலுத்திக் கொண்டிருந்தான்...

ஒரு இரண்டு கிலோமீட்டர்கள் கடந்திருந்த நிலையில் மீண்டும் பழைய படியே மிதமான குளிர் தெளிவான சாலை என இயற்கை தனது மாயாஜாலத்தை காண்பிக்க, கண்ணுக்கெட்டிய தூரம் சாலை தெளிவாக தெரிந்ததால் காரை விரைவாக செலுத்தும் எண்ணத்தில் கியரை மாற்றி
விர்ர்ர்ரென ஆக்க்சிலேட்டரை மிதிக்க, கார் வேகமேடுக்குமுன்... சடாரென மான்களின் கூட்டம் குறுக்கிட

" கிரிஈச்ச்ச் " என பெரும் சப்தத்தோடு பிரேக்கை பிடித்து காரை நிறுத்த... காரின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில், கண்கள் மின்ன! வாலை ஆட்டியபடியே புள்ளிமான்கள் கூட்டம் துள்ளிக்குதித்து வனத்திற்குள் ஓடி மறைந்தன...

அருணுக்கு அந்த படபடப்பு குறையவே சிறிது நேரம் பிடித்தது... ஆழமாக மூச்சை வெளிப்படுத்தி தன்னை சமன்செய்து கொண்டு.. சாலையோரத்தின் இருபுறமும் கண்களை பதித்தவாறே கவனமாக காரை கிழ்நோக்கி செத்தினான்.. அதன்பிறகும் இயற்கையன்னை சில இடங்களில் கருணை காட்டியும் சில இடங்களில் சோதித்தும் கொண்டிருக்க.. அனைத்தையும் கடந்து இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்... கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒருவர் ஏற்றத்தில் மூச்சுவாங்க மலைப்பாதையில் ஓடிவருவதும் அவருக்கு பின்னே பத்தடி தொலைவில் ஒருவர் சாலையில் கிழே விழுந்து கிடக்க... அவர்களை தாண்டி சற்றுதொலைவில் கார் ஒன்று நின்றிருக்க... அங்கே யானை ஒன்று காடே அதிரும் வகையில் பிளிறியபடி, அந்த காரை தன் தந்தங்களால் குத்தி, புரட்டி தள்ளிக் கொண்டிருந்தது....

விருப்பம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" வெறுப்பு... 3 "

பதினைந்து நிடங்களுக்கு முன்...

" ஏங்க..! மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா..? "
காரின் முன்னிருக்கையில் தலை சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த தன் கணவரின் நெஞ்சை நீவிய படியே கவலையோடு வினவினர்... சத்தியமூர்த்தியின் மனைவி செண்பகம்...


" ம்ம்ம்ம் " என ஆழமான முனகல் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்பட..

" இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க.. சண்முகம் அனுப்பின தம்பி முள்ளூர தாண்டிட்டாறாம் எப்படியும் இன்னும் ஒருமணிநேரத்துல வந்துருவார்... உங்க கைய இப்படி வைங்க நான் தேச்சு விடறேன் " என ஒரு மனைவியாக தன் கணவனின் நலனில் அக்கறை கொண்டு கூறினார்...

மெதுவாக கண்திறந்து தன் மனைவியை பார்க்க.. குளிரில் உடல் நடுங்கியவாறே மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு அவரது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல், தன் உடல்நிலையை பற்றி கவலை கொண்டு தனக்கு ஆறுதல் சொல்லும் மனையாளின் வார்த்தையை மதிக்காதது எவ்வளவு பெரிய தவறு என்று அப்பொழுது உணர்ந்தார்...

அவர்களது எஸ்டேட்டிலிருந்து கிளம்பும் முன் செண்பகம் உட்பட அங்கிருந்தவர்கள் தடுத்தும் அதை கேக்காமல் கிளம்பிவந்ததை நினைத்து இப்பொழுது வருந்தினார்... ஆனால் என்ன செய்யமுடியும் வேறு யாராவது வந்து உதவினால்தான் காரின் கதவை கூட திறக்க முடியும்என்ற நிலையில் அவரால் என்ன செய்துவிட முடியும்... காரின் எலெக்ட்ரானிக் சர்க்யுட்டில் ஏதோ பழுது ஏற்பட்டு, கார் மொத்தமாக செயலிழந்து நின்றுவிட்டது... பேட்டரி செயல் படாமல் ஹீட்டர், காரின் கதவு உட்பட எதையும் இயக்க முடியாது... அதனால் உறைய வைக்கும் குளிரிலும்.! சுற்றிலும் பரவியிருந்த இருளிலும்.! திடிரென பெய்யும் மலையிலும்.! செய்வதறியாது சண்முகத்தை தொடர்பு கொண்டு கார் பழுதான தகவலை தெரிவித்துவிட்டு கலக்கத்துடன் அமர்ந்திருந்தனர்...

நேரம் செல்ல செல்ல இருவரையுமே பயம் சூழ ஆரம்பித்தது... மீண்டும் சண்முகத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை... கைபேசியிலும் பேட்டரியின் சார்ஜ் குறைந்து எப்பொழுது வேண்டுமானாலும் தற்காலிகமாக உயிர் துறந்துவிடுவேன் என அச்சமூட்டி கொண்டிருந்தது... தங்களை மீட்க வருவதாக சொன்னவனும் இன்னும் வந்து சேரவில்லை... இன்றைய விடியலை தான் கண் கொண்டு பார்ப்போமா..? என்றெல்லாம்கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டார் சத்தியமூர்த்தி...

அவர்கள் நெடுநேரமாக காருக்குள் இருளில் அமர்ந்திருந்ததால், அந்த இருளுக்கு ஓரளவு கண்கள் பழகியிருந்தது... வெளிப்புறம் நன்றாக தெரியாவிடினும் ஓரளவு வெளிப்புறத்தின் மேல்கண்களை பதிக்க அவர்களால் முடிந்தது... சற்றுதொலைவில் ஏதோ..? ஒன்று அசைந்து வருவதைப்போல தோன்ற, அது என்னவென்று சரியாக தெரியாததால் இருவரும் கண்களை ஒருசேர அந்த உருவத்தின் மீதே பதித்திருக்க... அருகில் வந்ததுமே தெரிந்தது அது ஒரு ஒற்றை யானை.! என்று....

நெடுநெடுவென உயரத்தில்.! பிரம்மாண்டமான தோற்றத்தில்..! மிகப்பெரிய தந்தங்களுடன்.!
துதிக்கையை இடவலமாக ஆட்டியபடி, இந்த கானகத்தை ஆன்டவனும் நானே..! ஆள்பவனும் நானே.! என உரக்க சொல்லவதைப் போல் பிளிறியபடி... தன் கனத்த உருவத்தை சுமந்து கொண்டு அன்ன நடைபோட்டு மெதுவாக அவர்களிருந்த இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது...


யானையை அவ்வளவு அருகில், தாங்களாக செயல்படமுடியாத சூழ்நிலையில், கண்டதும் இருவரின் இதயமும் ஒருநொடி நின்று பின் அதிகமான வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது... அவ்வளவு குளிரையும் மீறி இருவருக்கும் வேர்க்க ஆரம்பித்து பயத்தால் உடல் நடுங்க, ஆறுதலுக்காக ஒருவரின் கையை ஒருவர் பற்றிக் கொண்டு தங்கள் இஷ்ட தெய்வங்களை மனதிற்குள் வேண்டியபடியே அடுத்து என்ன நடக்குமோ..? என்ற பீதியில் உறைந்து போய் அமர்ந்திருந்தனர்...

ஆனால் யானை இவர்களை கண்டுகொள்ளவில்லை... அது இவர்களின் காரின் அருகில் வந்ததும் ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு அவர்களை கடந்தது காரின் பின்புறமாக இருந்த மரத்தை நோக்கி சென்று மரக்கிளையை ஒடித்து தனது வாய்க்குள் திணித்து தன் வயிற்றை நிரப்ப ஆரம்பித்திருந்தது... ஒரு பெரிய மரக்கிளையை பற்றி இழுக்க... மழை பெய்து மண் ஈரமாக இருந்ததால் மரத்தின் வேர்கால்கள் பலமிலந்திருக்க, யானையின் பலத்திற்குமுன் தாக்கு பிடிக்கமுடியாமல் வேரோடு சாய்ந்து காரின் பின்புறமாக " டமார் " என்ற சத்தத்தோடு விழுந்தது...

காரின் மீது மரம் விழுந்த அதிர்ச்சியில்.. கார் திருடுபோகாமல் தடுக்கும் தொழில்நுட்பம் விழித்துக்கொண்டு " கிளிக் கிளிக்.. கிளிக் கிளிக்.." என காரின் பார்க்கிங் விளக்குகளை இருமுறை ஒளிரவிட்டு, எச்சரிக்கை செய்தவாறு மீண்டும் அமைதியாகி போனது.. இப்பொழுது வரும் நடுத்தர ரக கார்களில் கூட இந்த திருட்டு தடுப்பு வசதி வந்துவிட்டது... இவர்கள் காரோ வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரக கார்... இப்படி பட்ட வசதிகள் இல்லைஎன்றால்தான் ஆச்சரியம்... இந்த அமைப்பு முதன்மை எலக்ட்ரிகல் அமைப்பு பளுதடைந்தாலும் வேலை செய்யுமாறு அதற்கென தனியாக ஒரு அமைப்பு உண்டு...

திடீரென அந்த இடத்திற்கு பொருந்தாத சப்தமும், வெளிச்சமும் யானையை ஈர்க்க... மீண்டும் காரின் மீதிருந்த மரத்தை பிடித்து யானை கிழே இழுக்க " சட சட சட வென " கிளைகள் சத்தத்தை எழுப்பியவாறு காரிலிருந்து கிழே விழ இந்தமுறை கார் அதிகமாக குலுங்க...
" கியாங் கியாங் கியாங் கியாங் " என சைரன் சத்தத்தை போல இடைவிடாது விளக்குகளை தொடர்ந்து ஒளிரவிட்டவாறு அலற ஆரம்பித்தது.... முதலில் ஒலித்த சத்தத்தில் காரின் பேட்டரி வேளை செய்வதாக நினைத்து சத்தியமூர்த்தி காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க எந்த பலனும் இல்லாது போகவே, அதை கைவிட்டுவிட்டு கதவை திறக்கும் கைபிடியை இழுத்துக் கொண்டிருக்க... மிண்டும் ஏற்பட்ட அதிர்ச்சியில் கார் கதவின் தானியங்கி அமைப்புகள் ஒருமுறை தானாக திறந்து மூடி காரின் பாதுகாப்பை உறுதி செய்ய... சத்திய மூர்த்தி கைபிடியை இழுத்துபிடித்தவாறே இருந்ததால் வினாடிக்கும் குறைவான நேரத்தில் கதவு திறந்து கொள்ள... சடாரென கதவை திறந்து கொண்டு வெளியேற, செண்பகமும் அந்த வழியாகவே வெளியேறி உயிரை காப்பாற்றிக் கொள்ள இருவரும் ஓட ஆரம்பித்தனர்....


முதலில் ஒலித்த சத்தத்தில் அது என்னவென்று..? தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்ட யானை, இம்முறை இடைவிடாமல் தொடர்ந்து ஒலிக்கவே ஆத்திரம் கொண்டு... துதிக்கையை தலைக்குமேல் தூக்கிக் கொண்டு பயங்கரமாக பிளிரியபடியே தலையை இடவலமாக ஆட்டி எச்சரிக்கை செயும்விதமாக மரத்தை தாண்டி காரை நோக்கி வேகமாக வந்தது...

சத்தியமூர்த்தியும் செண்பகமும் திரும்பிக்கூட பார்க்கவில்லை... இருவரும் தங்களது முழுபலத்தையும் வெளிப்படுத்தி அங்கிருந்து தப்பித்தால் போதும் என ஓடிக் கொண்டிருந்தனர்... காரிலிருந்து ஒரு முப்பதடி தூரமே கடந்திருந்த நிலையில், மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்க நெஞ்சை பிடித்தபடியே மேற்கொண்டு ஓட முடியாமல் கிழே விழுந்தார்...

" மாமா... எந்திரிங்க மாமா... யானை நம்ம கிட்ட வரதுக்குள்ள இங்கிருந்து போயிடலாம்... "
என கண்களில் கண்ணீரோடு செண்பகம் கதறிக் கொண்டிருக்க


" இல்....ல... செ.....ண்பகம்... எ....ன்னால முடி....யல... நீ இங்கிரு...ந்து போய்...டு.... போ...."
என மூச்சு விடமுடியாமல் வார்த்தைகள் திக்கி திணறி அவரிடமிருந்து வந்து கொண்டிருக்க...


" இல்ல.. மாமா... நான் உங்களை விட்டு போக மாட்டேன்..." என அவரின் அருகே அமர்ந்து கண்ணீரோடு கூறிக் கொண்டிருக்க... அந்தவழியாக வாகனம் வரும் சத்தத்தை கேட்டவுடன்... அது அவர்களை தேடிவரும் வாகனம் என்றெலாம் அவருக்கு தோன்றவில்லை... எந்தவாகனமாக இருந்தாலும் அதை நிறுத்தி உதவி கேட்டு தன் கணவரை காப்பாற்றி விடவேண்டும்... என வேகம் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடத்தொடங்கினார்...

இப்பொழுது...

அருண் தூரத்திலிருந்தே அனைத்தையும் கவனித்து தான் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டான்... அவர்களை அந்த நிலையில் கண்டதும்... ஒருவித பதட்டம் அருணையும் தொற்றிக் கொள்ள வேகமாக செண்பகத்தின் அருகில் சென்று காரை நிறுத்தி காரை இயக்கத்திலேயே வைத்துவிட்டு, கார் கிழ்நோக்கி இறங்காதவாறு பார்க்கிங் பிரேக்கை இழுத்துவிட்டு கதவை திறந்து கொண்டு வேகமாக கிழே இறங்கியவன்... காரின் பின்பக்க கதவை திறந்து செண்பகத்தை உள்ளே சென்று அமருமாறு பணித்துவிட்டு, புயலென சத்தியமூர்த்தியை நோக்கி விரைந்தவன் ... அவரை கைகளில் அள்ளி தோளில் போட்டுக்கொண்டு வேகமாக காரை நோக்கி ஓடிவந்தான்...

காரை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த யானை திடிரென்று கண்கூசும் செளிச்சத்தில் ஒரு வாகனத்தையும் மனிதர்கள் நடமாட்டத்தையும் உணர்ந்தவுடன்,, காரை விட்டுவிட்டு பிளிறியபடி இவர்களை நோக்கி வேகமாக ஓடிவர ஆரம்பித்தது....



கணவரை அருண் தூக்கிக்கொண்டு வருவதை காரிலமர்ந்தவாறே பார்த்துக்கொண்டிருந்த செண்பகம் யானை அவர்களை நோக்கி வேகமாக ஓடிவருவதை கண்டவுன்... காரிலிருந்து இறங்கி

" வேகமாக வாங்க... யானை தூரத்திட்டு வருது..." என அருணுக்கு கூற... தலையை திருப்பி ஒரு பார்வை பாத்துவிட்டு அவரை உள்ளே சென்று அமருமாறு சைகைசெய்துவிட்டு, வேகமாக காரை நோக்கி ஓடிவந்தவன்... காரை அடைந்து, காரின் பின்புறமாக சத்தியமூர்த்தியை உள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டு காரில் ஏறி அமரவும், யானை அவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது....

காரை இயக்கத்திலேயே வைத்திருந்ததால், பார்க்கிங் பிரேக்கை விடுவித்துவிட்டு, அவர்களுக்கு முன்னே இரண்டடி தூரத்தில் யானை வந்துவிட்டதால் முன்னோக்கி செல்லவும் முடியாமல், காரை திருப்பவும் முடியாமல், ரிவர்ஸ் கியரை மாற்றி காரை பின்னோக்கி செலுத்த தொடங்கினான்...

யானை தன் துதிக்கையை நீட்டி.. காரை பற்றும் நோக்கில் முன்னேறிவர, அதேசமயத்தில் காரும் பின்னோக்கி நகர தொடங்க, யானையின் துதிக்கை காரின் முன்புற பானெட்டில் அழுத்தமாக பதிந்து, வலுவாக பற்றிக்கொள்ள ஏதுமில்லாததால் வழுக்கிக்கொண்டு காரை விடுவிக்க, படிப்படியாக யானைக்கும் அவர்களுக்குமான இடைவெளி அதிகமாக, நொடிநேர வித்தியாசத்தில் மயிரிழையில் அனைவருமே உயிர் பிழைத்தனர்....

அதன்பிறகு யானைக்கும் அவர்களை துரத்தும் எண்ணம் ஏதும் இல்லாமல்போக, அவர்களை நோக்கிவருவதை விட்டுவிட்டு, முன்னும்பின்னும் அசைந்தவாறு, மீண்டும் ஒருமுறை பிளிறியபடி எச்சரிக்கை செய்துவிட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது... யானை அவ்விடத்தைவிட்டு அகன்று செல்வதை காரிலிருந்தே பார்ர்த்துக் கொண்டிருந்த செண்பகம், யானை காட்டுக்குள் சென்றதை கண்டவுடன், கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தார்...

அருணுக்கோ, உடல் நடுங்கிக் கொண்டிருந்தது... சிலவினாடிகளுக்கு முன் நடந்த களேபரத்தில் அவனது இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கி, இதயத்துடிப்பின் ஒலி அருணின் செவிகளுக்கு எட்டியது... முகம் வேர்த்து விறுவிறுத்து வியர்வை சுரப்பிகள் அந்த குளிரிலும் இயங்கிக் கொண்டிருக்க, கார் அவனது காட்டுபாடில்லாமல் செல்லவது போன்று தோன்ற காரை நிறுத்தியவன், ஸ்டியரிங் மீது தலையை சாய்த்து சிலவினாடிகளில் தன்னை சமன் செய்துகொண்டு, பின்னிருக்கையில் இருந்த சத்தியமூர்த்தியயையும், செண்பகத்தையும் திரும்பி பார்த்தான்... சத்தியமூர்த்தி சுயநினைவில்லாமல் சிரமப்பட்டு மூச்சுவிட்டுக் கொண்டிருக்க ... அவர்மீது சாய்ந்தபடி செண்பகம் அழுதுகொண்டிருந்தார்.... அவரது உயிருக்கு தற்பொழுது எந்த ஆபத்தும் இல்லை என்று உணர்ந்தவன், அவர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு... காரை திருப்பி கோத்தகிரியை நோக்கி காரை விரட்டத் தொடங்கினான்....


இதுவரை அவர்களை சோதித்தது போதுமென இயற்கையன்னை பணிமூட்டமில்லாத தெளிவான சாலையுடன் காட்சியளிக்க... மலைப்பாதையில் ஏற ஆரம்பித்து.. இரண்டு கிலோமீட்டர்கள் கடந்துவந்து, மிருகங்கள் வருவதற்கு வாய்ப்பில்லாத இடமாக ஓரிடத்தைக் கண்டவுடன் காரை நிறுத்தினான்....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார் நிற்பதை உணர்ந்தவுடன் அழுதுகொண்டிருந்த செண்பகம் தலையை நிமிர்த்தி பார்க்க, காரிலிருந்து கிழே இறங்கிய அருண், பின்புற கதவை திறந்து சத்தியமூர்த்தியை நிமிர்வாக அமரவைத்து அவன் அணிந்திருந்த ஜெர்கின் மற்றும் குல்லாவை அவருக்கு அணிவித்து சீட்பெல்ட்டை மாட்டிவிட்டு சென்பகத்தை நோக்கி...

" உங்க சீட்பெல்டை போட்டுக்கோங்க,,, நான் காரை வேகமா ஓட்டுவேன் பயப்படவேண்டாம்...
யாருக்கும் எதுவும் ஆகாது... இவர சிக்கிரம் ஆஸ்பிடல் கூட்டிட்டு போகணும் இல்லைனா மூச்சு திணறல் அதிகமாயிடும் " என செண்பகத்திடம் தெரிவித்துவிட்டு காரில் தன்னிருக்கையில் அமர்ந்தவன்... முன்புறமாக வெப்பத்தை காருக்குள் பரவச்செய்யும் பகுதிகளை மூடி, வெப்பம் முழுவதும் பின்னிருக்கைக்கு செல்லுமாறு அமைத்துவிட்டு, காரை ஹில்ஸ் மோடிலிருந்து(hills mode) ஹைவே மோடிற்கு(highway mode) மாற்றி கிளப்பியவுடன், அந்த வாகனமும் துவக்கம் முதலே அசுரவேகமெடுத்து புயலென சீறிப்பாய்ந்தது....


வரும்பொழுது அதிகமான வேகத்தில் வந்தாலும் சாதாரணமாக கார் ஓட்டும் மனநிலையிலேயே காரை இயக்கியவன்... இப்பொழுது காரை பந்தயத்தில் ஓட்டுவதற்கு ஒப்பான மனநிலைக்கு மாறியிருந்தான்... அதனால் ஒவ்வொரு திருப்பங்களிலும் அந்தவாகனத்தின் சக்கரங்கள் கருக... " கிரிஈச்ச்சச்ச்ச் '' என ஒலியை எழுப்பியவாறு காரின் வேகம் சற்றும் குறையாமல், பிரேக் என்ற சாதனம் இருப்பதையே மறந்தவனாக, சாகசம்..! செய்யும்விதமாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் ..

பதினைந்து நிமிடங்களில் கோத்தகிரியை கடந்து, மேட்டுபாளையத்தை நோக்கி விரைவாக செலுத்தியவன்... இப்பொழுது மலைப்பாதையிலிருந்து கிழே இறங்கி செல்வதால் வேகமாக மேட்டுபாளையத்தை அடைந்து முதலில் எதிர்பட்ட மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று அவசரசிகிச்சை பிரிவின் முன்பு வாகனத்தை நிறுத்தினான்...

கார் ஒன்று அசுரவேகத்தில் வந்து நின்றவுடன் மருத்துவமனை ஊழியர்கள் ஸ்டெச்சரை தள்ளிக்கொண்டு வேகமாக அவர்களை நோக்கிவந்து சத்தியமூர்த்தியை ஸ்டெச்சரில் படுக்க வைத்து ICU விற்குள் தள்ளிக்கொண்டு போக, அவர்கள் பின்னாலேயே செண்பகமும் செல்ல, காரை எடுத்துக் கொண்டு பார்க்கிங் நோக்கி சென்றவன், ஓரமாக காரை பார்க் செய்து காரை லாக் செய்துவிட்டு கைபேசியை எடுத்து சண்முகத்தை அழைத்தான்.... அருணிடமிருந்து அழைப்பு வந்தவுடன் முதல் அழைப்பிலேயே எடுத்துவர்...

" என்ன அருண்..? அவங்கள பார்த்துட்டியா..? அவங்க நல்லா இருக்காங்களா..? ஏன்..? இவ்வளவு நேரம் ஒரு கால்கூட பண்ணல...? '' என அண்ணன் அண்ணியை பற்றி கவலை கொண்டவராய்... ஒருவித பதட்டத்துடன் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க்க... அவரது பாசத்தைக் கண்டு வியந்தவன்..

" அண்ணா எல்லா கேள்வியையும் இப்படி மொத்தமா கேட்டா..? நான் எப்படி பதில் சொல்லறது... பதில் சொல்ல எனக்கும் கொஞ்சம் டைம் குடுங்க" என புன்னகையுடனே கூற... அவனது புன்னகையில் அவர்களுக்கு ஒன்றுமில்லை என்று உணர்ந்து கொண்டவர்...


" ஹா ஹா... மனிச்சுக்கொப்பா... சரி நீயே சொல்லு... இப்ப எங்க இருக்கறிங்க..? அவங்க எப்படி இருக்கறாங்க..? அண்ணா பக்கத்துலதான் இருக்கிறாரா..? " என முதலில் கேட்ட கேள்வியையே கொஞ்சம் மாற்றி இம்முறை இலகுவாக கேட்க...

" மறுபடியுமா...? சுத்தம் " என போலியாக சலித்துக் கொண்டவன்...

" அண்ணா... நாங்க இப்ப மேட்டுப்பாளையம் கவிதா ஆஸ்பிட்டல இருக்கறோம்... உங்க அண்ணனுக்கு, குளிர்ல இருந்ததுனால மூச்சுவிட முடியல... அதனால அவர இங்க அட்மிட் பண்ணிருக்கேன்... உங்க அண்ணன் கூட அவங்க மிஸ்ஸஸ் இருக்கறாங்க... நான் கார் பார்க்கிங்கில இருந்து உங்களுக்கு போன் பண்ணறேன்..." என அவரை கலவரப்படுத்தாதவாறு அவர்கள் அனைவரும் நலமாக இருக்கும் தகவலை மட்டும் கூறினான்...

அருண் மேட்டுப்பாளையத்தில் இருப்பதாக கூறியவுடன் ஒருநொடி திகைத்தவர்...

" அருண்..! நிஜமாகவே... நீ கார ரோட்டுல தான் ஒட்டினியா...? " எனக் கேள்வியாக வினவ... அவர் எதனால் அப்படி கேட்கிறார் என புரிந்துகொண்டாலும் அதற்கு பதிலளிக்காமல்...

" ஏன்ண்ணா..? உங்க கார் பறக்குமா..? நான்தான் அதை கவனிக்கலையோ..! " என கேலியாக கூற

" என்னோட கார் பறக்கும்கிறது எனக்கே இப்பதான் அருண் தெரியுது... நீ ஓட்டினதுக்கு அப்பறம் தான் நானே அதை உணர்றேன்... சரி காரை எங்க அருண் பார்க் பண்ணிருக்க... ஆஸ்பிடல் பக்கத்துல எதவாது பழைய இரும்புக்கடை இருக்குதா...? ஒருவேளை பேரிச்சம்பழத்துக்கு எடைக்கு போட்டா..? என்பங்கு எனக்கு வந்தரனும் " என அதே கேலியோடு சண்முகமும் கூற....

" ஹா ஹா... சன்முகண்ணா... கண்டிப்பா எடைக்கு போட்டறலாம்... ஆனா அதை நாம மட்டும் பங்கு போடா முடியாது.... அதுக்கு இன்னும் நிறைய பேர் இருக்காங்க... " என சத்தியமூர்த்தியின் காரை நினைத்து கூற... அண்ணனுக்கு நடந்த ஏதும் சண்முகத்திற்கு தெரியாததால் அதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு... கேலிப்பேச்சை கைவிட்டுவிட்டு..

" சரி அருண்..! நீ அண்ணிகிட்ட ஃபோன குடுக்ககறிய " என வினவ... அருணும் விளையாட்டுத்தனத்தை ஒதுக்கிவிட்டு... இரண்டுநிமிடங்களில் அழைப்பதாக கூறி தொடர்பை துண்டித்துவிட்டு... I.C.U வை நோக்கி சென்றான்...

ஐ சி யூ வின் உள்ளே சென்றவன் செண்பகத்தை தேட... அந்த அறையின் வலதுபுற ஓரத்தில் இருந்த படுக்கைக்கு அருகில் செண்பகம் சோர்வாக நின்று கொண்டிருந்தார்... சத்தியமூர்த்திக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் மூச்சுவிட ஏதுவாக வெண்டிலேட்டர் எனும் கருவியை பொருத்தி செயற்கையான சுவாசம் குடுத்திருக்க... அவரது உடலுக்கு தெம்பூட்டும் விதமாக நார்மல் சலைன் (NS) என்னும் திரவத்தை இடதுகையின் வழியாக, அரைமணி நேரத்திற்கு 100ml என்ற விகிதத்தில் செல்லுமாறு, சொட்டு சொட்டாக அவரது நரம்புகளுக்குள் செலுத்திக்கொண்டு, பிபி (BP) உட்பட இன்னுன் சில பொதுவான பரிசோதனைகள் செய்துகொண்டிருக்க... அனைத்தையும் கவனித்தவாறே செண்பகத்தின் அருகில் சென்று நின்றவனை செண்பகம் ஏறிட்டு பார்க்க...

" சண்முகண்ணா... உங்ககிட்ட பேசணும்னு சொன்னார்.. உங்க வீட்டுகாரருக்கு மூச்சுத்திணறல்... அதனால ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்குனு மட்டுதான் சொல்லிருக்கேன்... வேற எதுவும் நான் சொல்லல... இப்போதைக்கு நீங்களும் எதுவும் சொல்லவேண்டாம்... " என அறிவுறுத்திவிட்டு சண்முகத்தை அழைக்க... இரண்டு நொடியில் அவர் அழைப்பை ஏற்க... மொபைலை செண்பகத்திடம் குடுத்துவிட்டு... வெளியே சென்று பேசுமாறு சைகை செய்ய... செண்பகமும் அதை புரிந்து கொண்டு வெளியே சென்றார்...

" டாக்டர்... இவருக்கு எப்படி இருக்கு... பயப்படற மாதிரி ஒண்ணுமில்லைல... " என அங்கிருந்த டாக்டருடன் வினவ...

" மூச்சுத்திணறல் கொஞ்சம் அதிகம்தான்... ஆனா சரியான நேரத்துக்கு ஆஸ்பிட்டல் வந்துட்டிங்க.. அதனால பயப்படற மாதிரி எதுவுமில்லை... இந்த டிரிப்ஸ் முடிஞ்சதும் நார்மல் வார்டுக்கு மாத்திக்கலாம்... மத்தியானத்துக்குள்ள அவர் பெட்டரா பீல் பண்ணினா..? டிசார்ஜ் பண்ணிக்கலாம் " என மருத்துவர் கூற " ஒகே டாக்டர் " என பதிலை தெரிவித்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்...

ஐ சி யூ விலிருந்து வெளியே வந்தவன் செண்பகத்தை தேட,, மருத்துவமனை வராண்டாவில் சண்முகத்துடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்தவர் பார்வைக்கு கிடைக்க... அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்....

அங்கு மாட்டபட்டிருந்த சுவர் கடிகாரத்தில் மணி 5.20 என காண்பிக்க... ஒரு இரண்டரை மணிநேரத்தில் நடந்த சம்பவங்களை பின்னோக்கி எண்ணிப் பார்த்தவனுக்கு, நடந்த சம்பங்களை அவனாலேயே நம்ப முடியவில்லை... ஏதோ..? ஒரு திகில் படம் பார்த்த உணர்வை தோற்றுவிக்க அவனது மயிர்கால்கள் சில்லிட்டுக் கொண்டது...

மருத்துவமனை வளாகத்திற்குள் இருக்கும் கேண்டீன் இன்னும் திறக்கப்படாததால் மருத்துவமனைக்கு எதிர்ப்புறமுள்ள பேக்கரியை நோக்கி இருவரும் சென்றனர்...

" தென்றல் தேநீரகம் " என்னும் பெரிய பெயர்பலகையை CFL என்னும் சுருள்வடிவ குழாய் விளக்குகள் தெளிவாக காட்டிக் கொண்டிருந்தது... சற்று நேரத்திற்கு முன்தான் வாசலை பெருக்கி தண்ணிரை தெளித்திருப்பர்கள் போல... மண்வாசனை லேசாக பரவ ஆரம்பித்திருந்தது....

எந்த அலாரமும், யாருடைய தூண்டுதலுமில்லாமல்... தங்களது உள்ளுணர்வால் விடிந்துவிட்டதை அறிந்து கொண்ட காகங்கள், கூட்டம் கூட்டமாக " கா கா கா கா கா " என கரைந்து கொண்டு... இரைதேடி இங்கும் அங்குமாக சுதந்திரமாக சிறகடித்து பறந்து கொண்டிருந்தன..

தேநீரகத்தின் உள்ளே... அந்த கடையின் அளவுக்கு நான்கு விளக்குகளே போதுமானதாக இருந்தபோதிலும், கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட விளக்குகளை பொருத்தியிருந்து அனைத்தையும் ஒளிர செய்திருந்தனர்... அந்த விளக்குகளும் கண்ணை கூசும் பளீர் என்ற பிரகாசமான ஒளியில் ஒளியை உமிழ்ந்து தேநீரகத்தை ஜொலிக்க செய்து கொண்டிருந்தது...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்
அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்
அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும்
ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும்
நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்...


ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்


ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்


சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்
பல வித குணங்களை கொண்டிருக்கும்
எங்கள் கற்பக கருவில் அவை வரும்
போது ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்


நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி
பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே அவன் திருவடி
பணிந்தால் துயர் இல்லையே "


என விநாயகரின் பக்தி பாடல் ஒலிக்க... ஒரு நாற்பத்தைந்து வயதை கடந்திருந்த நபர்... குளித்துவிட்டு நெற்றியில் திருநீரால் பெரியாதாய் பட்டை இட்டுக்கொண்டு... கையிலிருந்த ஒரு கிண்ணத்தில் ஒரு நூறுகிராம் அளவு மிச்சரை எடுத்துக்கொண்டு... வாயிலை தாண்டி சிறிது தூரம் வெளியே வந்தவர்...

" கா கா கா கா " என காகங்களை அழைத்து தான் கையில் கொண்டு சென்ற மிச்சரை அவைகளுக்கு உணவாக வைத்துவிட்டு நேராக இவர்களை நோக்கி உள்ளேவந்தார்... அவர் அங்கிருந்து அகன்றதும் அதுவரை இருந்ததே தெரியமாலிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காகங்கள் தங்களது காலை உணவுக்கு சண்டையிட்டாலும்... ஒன்றையொன்று அரவணைத்து தங்களுக்குள் பகிர்ந்து உண்டு கொண்டிருக்க.... அந்த காட்சியை பார்த்தவாரே அமர்ந்திருந்த அருணை...

" தம்பி என்ன..? சாப்பிடரிங்க.. டீயா..? இல்ல காப்பியா..? " என கேட்டு அருணின் சிந்தனையை அந்த கடைக்காரர் கலைக்க... தன் எண்ணத்தை கைவிட்டுவிட்டு...

" நீங்க என்ன சாப்பிடுவீங்க... டீயா..? இல்ல காப்பியா..? .." என செண்பகத்திடம் வினவ... தனக்கு ஒரு டீ போதும் என முடித்துக் கொண்டார்...

" வேற எதவாது வேணுமா..? " என வினவ... வேண்டாமென மறுப்பாய் தலையசைத்தார்...

கடைகாரரிடம் இருவருக்கும் தேநீர் கொண்டுவருமாறு கூறிவிட்டு, நேராக எழுந்து சென்றவன் கையில் தண்ணிர் பாட்டிலுடன் வந்தான்..

" இந்தாங்க... முதல்ல போய் முகம் கழுவிட்டு வாங்க... உங்களுக்கோ... இல்லை உங்க கணவருக்கோ... எந்த ஆபத்தும் இப்ப இல்லை... நீங்க நூறு சதவிகிதம் பாதுகாப்பா இருக்கறிங்க... நடந்த சம்பவத்துல இருந்து பர்ஸ்ட் வெளிய வாங்க..." என கூறி அவர் முன் தண்ணீர் பாட்டிலை நீட்ட... செண்பகமும் இன்னும் அந்த சம்பவத்தையே தான் நினைத்துக் கொண்டிருந்தார்... இவன் எப்படி நம் மனதிலுள்ளதை அறிந்தான் என கேள்வியாக யோசித்துக் கொண்டிருக்க...

" உங்க மனசுல இருக்கறது எனக்கு எப்படி தெரியுதுன்னு... அப்பறமா தெரிஞ்சுக்கலாம்..
இப்ப ..." என புன்னகையுடனே கூறிக்கொண்டு தண்ணீர் பாட்டிலை உயர்த்தி காண்பிக்க.... அவரும் புன்னகையுடனே தண்ணீர் பாட்டிலை பெற்றுக்கொண்டு வெளியே சென்று முகம் கழுவிவிட்டு... தனது சேலையின் தலைப்பில் முகத்தை துடைத்தபடி வந்து அமரவும்... தேநீர் வரவும் சரியாக இருக்க... இருவரும் ஆளுக்கொன்றாய் தேநீரை எடுத்துக் கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தனர்....



" என் பேர்... அருண்..! "

" தெரியும்... அருண்..! சண்முகம் சொன்னார்... ரொம்ப நன்றி.! அருண்... நீ மட்டும் சரியான நேரத்துக்கு அங்க வரலைனா..? இந்நேரம் நாங்க என்ன ஆகியிருப்போமோ..?.. நினைச்சாலே உடம்பு நடுங்குது.. இதுக்கு என்ன கைமாறு செய்யபோறோமுனு தெரியல " என நடுங்கியவாறே சொல்ல...

" சரி... அதைவிடுங்க... சன்முகண்ணா எப்ப வரார்னு ஏதாவது..? சொன்னாரா..? " என அவரை இயல்பாக்கும் பொருட்டு பேச்சை மாற்றினான்...

" ம்ம்... டிரைவருக்கு போன் பண்ணிட்டாராம்... டிரைவர் வந்ததும் கிளம்பி வர்றேன்னு சொன்னார்... எப்படியும் காலைல ஏழு மணிக்குள்ள வந்திடுவார்... " என கூற...

'' சரிங்க " என கூறிவிட்டு.. இருவரும் தேநீர் அருந்தியதும் தேநீருக்கும், தண்ணீர் பாட்டிலுக்குமான பணத்தை செலுத்திவிட்டு மருத்துவமனையை நேக்கி சென்றார்கள்...

செண்பகம் ஐ சி யூ முன்பாக அமர்ந்து கொள்வதாக கூற... அருண் காரில் இருப்பதாக கூறி, தனது கைபேசியை அவரிடம் குடுத்துவிட்டு... காரை நோக்கி சென்றவன் காரின் பின்னிருக்கையில் சென்று அசதியின் காரணமாக படுத்துவிட்டான்...

காலை ஏழரை மணியளவில் மருத்துவமனைக்கு வந்த சண்முகம் நேராக ஐ சி யூ வை நோக்கி சென்றார்... அங்கே சுவரில் தலை சாய்த்து கண்மூடியவாறு இருந்த தன் அண்ணியை கண்டதும், நேராக அவரை நோக்கி சென்று...

" அண்ணி " என மெதுவாக அழைக்க...

அந்த அழைப்பில் கண்களை திறந்து எதிரில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை கண்டவுடன் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்க... சண்முகம் பதறிபோய்

" அண்ணி ஏன்...? அழறிங்க... அண்ணனுக்கு என்ன ஆச்சு...? " என பதட்டமாக வினவ... யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதைப்போல மறுப்பாய் தலையசைத்துவிட்டு... சில மணிநேரங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை கூற தொடங்கினார்... செண்பகம் கூற கூற அந்த சம்பவங்களை காட்சிகளாக மனத்திரையில் எண்ணிப் பார்த்த சண்முகத்திற்கே... வேர்க்க ஆரம்பித்து உடல் நடுங்க ஆரம்பித்தது...

அருண்.! மட்டும் அவனது உயிரை பற்றி கவலைபடாமல், அசுரவேகத்தில் அங்கு சென்றிருக்காமல் இருந்திருந்தால்... அதை நினைத்து பார்க்கவே சண்முகத்தால் முடியவில்லை... தலையை இடவலமாக ஆட்டி அந்த சிந்தனையிலிருந்து வெளியே வந்தவர்... அழுது கொண்டிருந்த செண்பகத்தை பார்த்து...

" அண்ணி அழாதிங்க... ஏதோ நாம செஞ்ச புண்ணியம்..!. ஒண்ணும் ஆகாம தப்பிச்சுட்டோம்... இனி பயப்பட ஒண்ணுமில்லை.. கவலைபடாம இருங்க... இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்... இப்ப அண்ணனுக்கு எப்படி இருக்கு... " என தைரியமூட்டி அண்ணனை பற்றி விசாரிக்க ..

" அவர ஐ சி யூல வச்சுருக்காங்க... பயப்பட ஒண்ணுமில்லைனு சொல்லிட்டாங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல வார்டுக்கு மாத்திடுவாங்க... அவருக்கு ஓகேனா மத்தியானமா டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க... " என அருண் செண்பகத்திடம் கூறிய அதே தகவலை சற்றுமுன் செவிலியரும் செண்பகத்திடம் கூறியிருக்க ... அதை சண்முகத்திடம் கூறினார்...

" இப்ப அண்ணன பார்க்க முடியுமா..? "

" இப்பவிடமாட்டங்க... அவர் இப்பதான் நார்மலா மூச்சுவிடறார்... கொஞ்சநேரம் தூங்கறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டுருக்காங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல வார்டுக்கு மாத்தினதும் பார்க்கலாம் "
என கூற... அப்பொழுதுதான் அருணின் நினைவு வந்தவராக...


" அண்ணி அருண் எங்க...? "

" அவன் கார்ல இருக்கறேன்னு சொல்லிட்டு போனான்... ஒருவேளை துங்கிட்டானோ..? என்னவோ.. "

" இருக்கலாம் அண்ணி... ஏனா...? நான் போய்.. பாதி தூக்கத்துல எழுப்பறப்பவே கண்ணெல்லாம் சிவந்து போய் ரொம்ப டையார்டா தான் இருந்தான்... அப்படியிருந்தும் அவ்வளவு வேகமா அவன் கார் ஓட்டிட்டு வந்த நினைச்சா..? எனக்கே ஆச்சரியமா ! இருக்கு.." என அருணை நினைத்து சிலாகித்துக் கூற...

அப்பொழுதுதான் அவரும் அருண் கார் ஒட்டிய வேகத்தை நினைத்து பார்க்க ஆரம்பித்தார்...

" ஆமா சண்முகம்... பயங்கர வேகம்... நாங்க இருந்த மனநிலையில அங்கிருந்து எப்படியோ தப்பிச்சா போதும்னு இருந்ததால எதுவும் தெரியல... இதுவே மத்த நேரம்னா..? எனக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துருக்கும் " என கலக்கமாக கூற

" ஹா ஹா ஹா ஹா " என சண்முகம் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார்... சாதாரணமாக பேசிக்கெண்டிருந்த சண்முகம் திடீரென சிரிக்கவும்... செண்பகம் ஏன்..?என்று புரியாமல் முழிக்க ஆரம்பித்தார்

"என்ன ஆச்சு..? சண்முகம் .." என கேள்வியாய் வினவ..

" இல்ல அண்ணி... உங்களை கூட்டிட்டு வரதுக்கு அருண் கிளம்பறப்ப... நானும் கூட வரட்டுமான்னு கேட்டேன்... அதுக்கு... உங்களை கூட்டிட்டு போனா ..? நான் போகிற வேகத்துக்கு உங்களுக்கு ஆம்புலன்ஸ் தான் புக் பண்ணனும்னு சொன்னான்... ஒருவேளை நான் அவன் கூட வந்திருந்தா..? மேட்டுப்பாளையத்தை கூட தாண்டிருக்க மாட்டேன் .. வழியிலேயே ஏதாவது ஒரு ஆஸ்பிடல்ல என்ன அட்மிட் பண்ணிட்டுதான் உங்களை தேடி வந்திருப்பான்... அதை நினைச்சுதான் சிரிச்சேன் ..." என புன்னகைத்துக் கொண்டே கூற ... செண்பகமும் அதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டியபடியே புன்னகைக்க ஆரம்பித்தார்...

திடீரென்று சண்முகத்தின் போன் அலற... அதை எடுத்து பார்த்தவர் யோசனையாய் அட்டென் செய்து காதில் வைக்க...

" சித்தப்பா.... இ... ங்க... டா...டிக்கு.... டாடி...யோட.. கார்... சித்தப்பா...." என வார்த்தைகள் தடுமாற... பயத்தில் மூச்சடைக்க திக்கி திணறி அழுதவாறேபோனில் கதறிக் கொண்டிருந்தாள்... சத்தியமூர்த்தி செண்பகம் தம்பதியரின் ஒரே மகள் ஐஸ்வர்யா...

" ஐஸு... ஒண்ணுமில்லடா... பயப்படாத... முதல்ல அழறத நிப்பாட்டு.... சித்தப்பா சொல்லறத கேளு.."

" இல்ல சித்தப்பா டாடியும் மம்மியும் போன கார... யானை தாக்கிருக்கு.... அவங்களை காணோம்... அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரில சித்தப்பா..." என மீண்டும் கதற ஆரம்பித்தாள்...

" ஐஸும்மா... டாடிக்கும் மம்மிக்கும் எதுவும் ஆகல... இப்ப நான் அவங்க கூடத்தான் இருக்கேன்...
என சண்முகம் கூற.. தன் பெற்றோருக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்தவுடன் தான் அவளால் மூச்சே விட முடிந்தது...


எஸ்டேட்டில் நடந்த விழாவிற்கு சத்தியமூர்த்தி செண்பகம்... அவர்களது மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது தம்பி சண்முகத்தின் மகள் ஹரிப்பிரியா என நால்வராக சென்றிருந்தனர்... பொதுவாக சத்தியமூர்த்தி...இவ்வளவு தொலைவு அதுவும் மலைப்பாதையில் எல்லாம் காரை ஓட்ட மாட்டார்.... எப்பொழுதும் டிரைவருடன் தான் செல்லுவார்... எப்பொழுதும் பிசினஸ் பிசினஸ் என அலைந்து கொண்டிருப்பதால்... தங்களுடன் நேரம் நேரம் செலவிடுவதில்லை என்று ஐஸ்வர்யாவும் ஹரிப்பிரியாவும் குறைபட்டுக்கொள்ள.... இந்த பயணத்தில் அந்த குறையை சரிசெய்து கொள்ளலாம் என்று டிரைவரை தவிர்த்துவிட்டு தானே காரை ஒட்டிக்கொண்டு ... மனைவியையும் மகள்களையும் அழைத்து வந்திருந்தார்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சத்தியமூர்த்தி நினைத்ததை போலவே அவரது மகள்களும் சந்தோசமாகத்தான் இருந்தனர்... அந்த பயணத்தை அனைவருமே ரசித்தனர்... ஆனால் இரண்டுநாள் கழித்து நடக்க வேண்டிய ஒரு முக்கியமான மீட்டிங் திடீரென தேதி மாற்றப்பட்டதாக இரவு ஒன்றரை மணிக்கு தகவல்வர என்ன செய்வதென்று யோசித்தவர், மகள்கள் இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க... அவர்களை காலையில் டிரைவரை அனுப்பி அழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து... அங்கிருந்தவர்கள் தடுத்தும் கேட்காமல் மனைவியை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினார்... காலையில் எழுந்ததும் பெற்றோரை காணாமல் தேடிய சகோதரிகளிடம்... அவர்கள் இரவோடு இரவாக சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்க... பொய் கோபம் கொண்டு தந்தைக்கு கைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா...

எஸ்டேட்டிலிருந்து வேலைக்கு செல்பவர்கள் தங்களது முதலாளியின் காரை யானை புரட்டி போட்டிருப்பதை கண்டவுன் அந்த இடத்தை சுற்றிலும் அவர்களை தேடியவர்கள்.... முதலாளி அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படாமல் போகவே....விரைவாக சென்று ஐஸ்வரியாவிடம் கூற முதலில் நம்ப மறுத்தவள்... மொபைலில் விடியோவாக பதிவு பண்ணியதை காண்பிக்க அதை கண்டவுடன் கதி கலங்கிப் போய் " டாடி " என்று அலறியவள் முதலில் அழைத்தது சண்முகத்தைதான்....

" சித்தப்பா இப்ப டாடி எங்க..? அவர்கிட்ட போன குடுங்க நான் பேசணும்... "

" ஐஸு... டாடிக்கு மூச்சுத்திணறல்டா... மேட்டுப்பளையத்துல இருக்கற ஆஸ்பிட்டல அட்மிட் பண்ணிருக்கோம்... " என கூற மீண்டும் அழத்தொடங்கினாள்... அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் சண்முகம் முழிக்க... அதை கண்ட செண்பகம் சன்முகத்திடமிருந்து மொபைலை வாங்கி ஐஸ்வர்யாவிடம் பேசத் தொடங்கினார்...


" ஐஸு... " என செண்பகம் அழைக்க... அன்னையின் குரலை உணர்ந்தவள்...

" மாம்... டாடிக்கு என்ன ஆச்சு..? ... டாடிய எதுக்காக..? ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கிங்க.."

" ஐஸும்மா..!.. டாடிக்கு ஒன்னும் ஆகலைடா... கார் பிரேக்டவுன் ஆகி, ரொம்ப நேரம் குளிர்ல இருந்ததுனால... மூச்சுவிட சிரமப்படறார்... அதுக்காகத்தான் ஆஸ்பிட்டல சேர்த்துருக்கோம்.."

" இல்ல... நீங்க பொய் சொல்லறிங்க... காரை யானை தாக்கிருக்கு... கார் நொறுங்கி கிடக்கற வீடியோவ நான் பார்த்தேன்... மாம் பிளீஸ்... நான் டாடிகிட்ட பேசணும்... " என அழுது கொண்டே கூற...

" ஐயோ..! ஐஸும்மா... என்ன..? இது..! இப்படி சின்ன பிள்ளையாட்டம் அடம்பிடிக்கற ... காரை யானை தாக்கினது உண்மைதான்... ஆனா அதுக்கு முன்னாடியே நாங்க ரெண்டுபேரும்... கார்ல இருந்து வெளிய வந்துட்டோம்... சித்தப்பா அனுப்பின பையன் வந்து எங்களை பத்திரமா கூட்டிட்டு வந்துட்டார்... "

" இப்ப நானும்,, டாடியும் பாதுகாப்ப இருக்கோம்... சித்தப்பா வந்த காரை... உங்களை கூட்டிட்டு வரதுக்கு டிரைவரோட அனுப்பறேன்... கார் வந்ததும் நீங்க கிளம்பி வாங்க... எல்லாத்தையும் நேர்ல சொல்லறேன்..." என கூறி முடிக்க... அப்பொழுதுதான் தன் அன்னையும் தந்தையுடன் இருந்திருக்கிறார்... அவர் நலனை பற்றி, தான் அறிய முற்படவில்லை என்பது உரைக்க...

" மாம்... ஐ அம் சோ சாரி மாம்..." என கவலையாக கூறினாள்... எதற்காக தன் மகள் தன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறாள் என புரியாமல் முழித்தவாறே...

" ஏன்டா..? ஐஸும்மா..." என வாஞ்சையுடன் அழைக்க...

" ம்மா.... உங்களுக்கும் எதுவும் ஆகலைல.." என தயக்கமாக வினவ... அவளது அம்மா என்ற அழைப்பிலேயே அவருக்கு புரிந்து போனது... ஐஸ்வர்யா தன்னை பற்றி கேட்காததை நினைத்து கவலை படுகிறாள் என புரிந்ததும்... உதடுகளில் புன்னகையை தவழவிட்டவாரே... அவளை சீண்டும் விதமாக...

" பரவாலையே செண்பகம்... உன் மகளுக்கு.! உன்ன பத்தின நினைப்பு கூட இருக்குதே..?" என தனக்கு சொல்வது போல ஐஸ்வர்யாவிடம் கூற... மீண்டும் அழ ஆரம்பித்தாள்....

" ஐயோ..! ஐஸு..! என் தங்கமில்ல... என பொண்ண பத்தி எனக்கு தெரியாதடா..! அம்மா எதையும் நினைச்சுக்க மாட்டேன்... அம்மா நல்ல இருக்கறதுனால தான... உன்கூட இப்ப பேசிட்டு இருக்கேன்... என் பொண்ணு.! எதுக்கும் அழக்கூடாது... அதுவும் ஒரு டாக்டரா இருந்துட்டு... இப்படி சின்ன சின்ன விசயத்துக்கு போய் உணர்ச்சிவசப்பட்டு அழலாமா..? " என தன் மகளை தேற்றும் விதமாக கூற....

" சாரிம்மா...! ஐ லவ் யூ ம்மா..!.. " என பாசம் பொங்க கூறினாள்...

" சரிடா... முதல்ல ரெண்டுபேரும் போய் சாப்பிட்டு ரெடியாகுங்க... நம்ம கார் வந்ததும் கிளம்பி
வாங்க .. அப்பறமா அம்மாவை லவ் பண்ணிக்கலாம் சரியா..! " என கூற

" வெவ் வெவ்வ வெவ் வெவே...! " என அழகு காண்பித்தாள்...

" ஹா ஹா ... சரிடா அந்த வாண்டு என்ன பண்ணுது... " என சண்முகத்தின் மகள் ஹரிப்பிரியாவை பற்றி வினவ...

" பக்கத்துல தான் ஒட்டு கேட்டுட்டு இருக்கறா... இருங்க குடுக்கறேன் ..." என கூறி முடிக்கும் முன் அவளிடமிருந்து வெடுக்கென ஹரிப்பிரியா மொபைலை பிடுங்கி தன் பின்புறமாக கொண்டு சென்று மறைத்துக் கொள்ள ...

" பிசாசு...! உன்கிட்டதானடி தர வந்தேன்... அதுக்குள்ளே ஏண்டி..? இந்த அவசரம்... சிக்கிரம் பேசுடி மாம் லைன்ல இருக்கறாங்க " என சண்டை போட...

" ஏய்..! நீ பேசறப்ப நான் உன்னை டிஸ்ட்ரப் பண்ணினேனா..? இல்லைல.. அதே மாதிரி நீயும் நான் பேசி முடிக்கும்வரை, அமைதியா இருக்க முடிஞ்சா இரு.!... இல்லை இடத்தை காலி பண்ணு.. " என தெனாவெட்டாக கூற...

" உன்னை " என ஐஸ்வர்யா அடிக்க துரத்த....

" ஐயோ..! மேக்சிமம் ( பெரியம்மா)... ராட்சசி என்ன அடிக்க வரா... நான் நேர்ல வந்து பேசறேன் " சத்தமாக கத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தாள்...

தன் மகள்களின் உரையாடலை கைபேசியின் வழியாக கேட்டு கொண்டிருந்த செண்பகம்... 'ஆரம்பிச்சுட்டாங்க... இனி அடங்க மாட்டங்க ' என நினைத்துக் கொண்டு மொபைலை அனைத்துவிட்டு சண்முகத்தை ஏறிட்டார்...

சண்முகம் அங்கு என்ன நடந்திருக்கும் என புரிந்தது போல செண்பகத்தை பார்த்து புன்னகைத்து கொண்டிருக்க... செண்பகமும் பதில் புனகையை உதிர்த்துவிட்டு...

" சரி சண்முகம்... நீங்க வந்த காரை நம்ம எஸ்டேட்டுக்கு அனுப்புங்க... பொண்ணுகள கூட்டிட்டு வரட்டும் " என்று கூற

" அது வந்து அண்ணி .." என தயங்கினார்...

" என்ன ஆச்சு..? சண்முகம்.."

" இல்ல அண்ணி ... டிரைவர் வர லேட் ஆச்சு... அதான் நானே கார எடுத்துட்டு வந்துட்டேன்..."

" மப்ச் ... இப்ப என்ன சண்முகம் பண்ணறது... அருண் கிட்ட கேட்டு பார்க்கலாமா..? "

" இல்ல அண்ணி... மறுபடியும் அவன தொந்தரவு பண்ணனுமா..? நைட்டும் அவன் சரியா தூங்கலை...
இப்ப தூங்கிட்டு இருக்கறப்ப எப்படி அண்ணி... அவனை எழுப்பறது... " என கூறிக் கொண்டிருக்கும் பொழுது... சண்முகத்தை பார்த்து புன்னகைத்தவாறே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் அருண்...!

" அண்ணா... நீங்க எப்ப வந்திங்க..? கார்ல சும்மா கொஞ்ச நேரம் படுத்தேன்... அப்படியே தூங்கிட்டேன்.. உங்க அண்ணனுக்கு இப்ப எப்படி இருக்கு..? அவர வார்டுக்கு மாத்திட்டாங்களா..? " என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக...

" ம்ம்...பரவால அருண்.. நைட்டே நீ சரியா தூங்கலை... அதான் வந்ததும் உன்ன எழுப்பல... நான் வந்து கொஞ்ச நேரமாச்சு... அண்ணா இன்னும் அப்சவேசன்ல தான் இருக்கார்... கொஞ்ச நேரத்துல வார்டுக்கு மாத்திடுவாங்க... " என தயக்கமாக வார்த்தைகள் வெளிப்பட... அதை புரிந்து கொண்டவன்...

" என்னண்ணா..? எதாவது பிராபளமா ..? உங்க வாய்ஸ் சரியில்லையே..."

" பிராபளம் ஒண்ணும் இல்லை அருண் ... எங்க பொண்ணுங்களை எஸ்டேட்ல இருந்து கூட்டிட்டு வரணும்... "

" டிரைவர கூட்டிட்டு வரல... அதான் எப்படி கூட்டிட்டு வரதுன்னு யோசிச்சுட்டு இருக்கோம்.." என அவனிடம் கேட்டக தயங்கி கொண்டே கூறினார்...

" இவ்வளவுதான... இத எப்படி என்கிட்ட சொல்லறதுன்னு தான் தயங்கறிங்களா..? " என புருவம் உயர்த்தி கேட்க்க... சண்முகம் தலையை ஆட்டி அதை ஆமோதித்தார்...

" அண்ணா..! நீங்க இன்னும் என்னை சரியா புரிஞ்சுக்கல... என்கிட்ட எதுக்குமே தயங்க வேண்டாம்னா என்ன நினைக்கறிங்களோ... அதை தயங்காம சொல்லிடுங்க... என்னால முடியும்னா அப்பவே அதை செய்வேன்... ஒருவேளை முடியலன்னா.? அதையும் அப்பவே சொல்லிடுவேன்..."

" இப்ப என்ன..? மறுபடியும் நான் கெங்கரை போகணும் அவ்வளவுதான..! " அருண் சாதாரணமாக கூற சண்முகம் வாயடைத்துப் போனார்... உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் நீர் கோர்க்க அருணைஅணைத்துக் கொண்டார்...

சண்முகம் அணைத்துக் கொள்ளவும்.. சங்கடமாக நெளிந்தவன்...

" அண்ணா..! நான் மட்டுமில்லை... எல்லா டிரைவரும் இப்படிதான் யோசிப்போம்... அதனால உணர்சிகளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க... இது ஆஸ்பிட்டல் பிளீஸ்..." என மெதுவான குரலில் கூற... அவனை விடுவித்தவர்...

" நீ செஞ்ச உதவி உனக்கு சாதாரணமா..? தெரியலாம் அருண்... ஆனா நீ இல்லைனா இந்நேரம் என் அண்ணனும் அண்ணியும் உயிரோட இருந்திருக்க மாட்டாங்க... உனக்கு நாங்க என்ன செஞ்சாலும் .. நீ செஞ்ச உதவிக்கு ஈடாகாது... " என நன்றியோடு கூற... இவரை பேசவிட்டா.. விடிய விடிய இதையே தான் பேசுவார் ... என எண்ணியவன்.. பேச்சை மாற்றும் பொருட்டு...

" சரிண்ணா... நான் கிளம்பறேன்... நான் வறேன்னு.. உங்க பொண்ணுங்க கிட்ட சொல்லிடுங்க... கெங்கரைல உங்க எஸ்டேட் எங்க இருக்கு..? "

" நீ அங்க போய் சத்தியமூர்த்தி எஸ்டேட் எங்க..? இருக்குனு யாரை கேட்டாலும் சொல்லுவாங்க.." என்று கூற.. சரி என்றுவிட்டு திரும்பியவன்...

" அண்ணா... நைட் வந்த கார்ல போக முடியாது... ஹில்ஸ்ல வேகமா வந்ததுனால நாலு டையரும் சுத்தமா காலி... கம்பி தெரியுது... " என நாக்கை கடித்தவாறே சொல்ல

" ஹா ஹா ஹா... சரி பரவால விடு... எப்படியும் எடைக்கு போடறதுதான... டையரே இல்லைனாலும் ஒன்னும் பிராபளம் இல்லை..." எனக் கூறிவிட்டு... தான் வந்த காரின் சாவியை அருணிடம் ஒப்படைக்க... புன்னகைத்தவாறே அதை பெற்றுக் கொண்டு... விருப்பையும் வெறுப்பையும் ஒன்றாக காண கிளம்பினான்....

விருப்பம் தொடரும்...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெறுப்பு ... 4



சண்முகத்திடமிருந்து கார் சாவியை பெற்றுக்கொண்டு வெளியே வந்த அருண், காரை எடுத்துக் கொண்டு கோத்தகிரி செல்லும் சாலையில் காரை திருப்பி, இரண்டு கிலோமீட்டர் கடந்து வந்து மேட்டுபாளையத்தில் ஓடும் ஆற்றைக் கண்டதும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, பயணக் களைப்பும் சரியான உறக்கமில்லாமல் இருந்ததால் வந்த சோர்வும் போக ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்குமெனத் தோன்ற பக்கத்திலிருந்த கடையில் துண்டை வாங்கிக் கொண்டு ஆற்றை நோக்கிச் சென்றான்


மழைக்காலமாக இருந்ததாலும் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையினாலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓட, குளிப்பதற்கு ஏதுவான இடத்தை தேடி சிறிது தூரம் நடந்து சென்றவன், ஆற்றில் எங்கு கால் வைத்தாலும் ஆற்றோடு போகவேண்டியதுதான் என்ற நிலைமையில், மேலும் கீழுமாக தன்னை பார்த்தவன், இரவில் அவசரகதியில் ஏனோதானோவென்று உடுத்திய உடையும் கசங்கி போயிருக்க, வேறு வழியில்லை ஓரமாக நின்று முகத்தையாவது கழுவிக் கொள்ளலாம் என்று தண்ணிரை கைகளில் அல்ல, செம்மண் கலந்து செந்நிறமாக வந்த நீரைக் கண்டதும் இந்த தண்ணிரில் குளித்தாலும் சரி முகம் கழுவினாலும் சரி எல்லாமே வீண் என்று முடிவு செய்து மீண்டும் திரும்பி காருக்கே வந்து காரிலிருந்த தண்ணிர் பாட்டிலை எடுத்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு கெங்கரையை நோக்கி காரை செலுத்தினான்...


இரவில் காரை இயக்கியதைப்போல் இல்லாமல் வெகு நிதானமாகவே காரை இயக்கினான்... பலமுறை இதே வழியாக போய் வந்திருந்தாலும், பகலில் வந்ததை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படியே வந்தாலும் அதுவும் வேலை விஷியமாக அறக்கப் பறக்க வந்து சென்றதாகதான் இருந்திருக்கிறது. இப்படி நிதானமாக ஒருநாளும் வந்து சென்றது கிடையாது...


மலைப்பாதையில் மேல நோக்கி செல்லச் செல்ல, தேகத்தை தீண்டும் மெண்மையான குளிர்ந்த காற்றும், பச்சை கம்பளத்தை விரித்ததைப்போலிருந்த தேயிலைத் தோட்டங்களும், தலையில் துணியைக் கட்டிக் கொண்டு அட்டை பூச்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள, தங்கள் ஆடைக்குமேல் ஆண்களின் சட்டையை அணிந்து கொண்டு தேயிலையை பறித்துக் கொண்டிருந்த பெண்களும், தனது குட்டிகளை அடிவயிற்றில் சுமந்து கொண்டு, மரத்துக்கு மரம் தவிச் சென்ற தாய் குரங்குகளும், மனிதர்கள் விட்டுச் சென்ற உணவுப் பொருட்களை எடுப்பதற்காக சண்டை போட்டுக் கொண்டிருந்த சிறு குரங்குகளும், வான்நோக்கி ஓங்கி உயர்ந்திருந்த மரங்களும், அதன் கிளைகளினுடே மின்னல் கீற்றாய் வெளிப்பட்ட இளஞ்சூரிய ஒளியும், அருணின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து அவனுள் ஒரு பரவச நிலையை ஊருவாக்கியிருந்தது...


அங்கிருந்த மேட்டுபாளையம் காட்சிமுனை அருகே சிலர் வாகனத்தை நிறுத்திவிட்டு, வெண்பஞ்சு குவியல் போல திரண்டிருந்த மேகக் கூட்டங்களையும் அதனூடே தோன்றிய வானவில்லையும் தங்களது கைபேசி வழியாக காட்சியாக பதிவு செய்து கொண்டிருக்க, இன்னும் சிலரோ குழுவாகவும், தனித்தனியாகவும் தங்களை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்... அருணும் ஓரமாக காரை நிறுத்திவிட்டு, இறங்கி சென்றவன் சிறிது நேரம் நின்று இயற்கையை ரசிக்க ஆரம்பித்தான்...


அப்பொழுதுதான் நந்தினியின் நினைவும், அவள் எழுந்திரிக்கும் தான் முன் அவள்முன் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டதும் நினைவுக்குவர சுத்தம் என்று தலையில் கைவைத்தவன். அவளை அழைத்து தகவலை தெரியப்படுத்தலாம் என்று மொபைலை எடுத்துப் பார்க்க, சுத்தமாக டவர் இல்லாமல் இருக்க " ம்ப்ச் " என சலித்துக் கொண்டவன்... சிறிது நிமிடம் அவளை எப்படி சமாளிக்கலாம் என்ன்று யோசித்தவன்,


' எதை சொன்னாலும் அவ கேக்கப் போறதில்லை... எப்படியும் கத்தி கத்தி காதை பஞ்சராக்காம விடமாட்டா... எல்லாத்துக்கும் ரெடியா இருடா அருண்..' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு, தனது கைபேசி வழியாக தன்னையும் சில புகைப்படங்கள் எடுதுக் கொண்டு


கருமமே கண்ணாக அங்கிருந்து கெங்கரையை நோக்கி செல்ல காரில் ஏறப்போனவன், அவனுக்கு சற்றுத் தள்ளி ஒருவர் காரின் முன்புற பானெட்டை திறந்து வைத்து தள்ளி நின்றுகொண்டு முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருக்க, அதிகபடியான சூடினால் ரேடியேட்டர் பாயில் ஆகி " குபு குபுவென " ரயில் இன்ஜினைப் போல் கார் புகையை கக்கிக் கொண்டிருந்தது.. காரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமர்ந்திருக்க, ஒருநிமிடம் யோசித்தவன், அவர்களை அப்படியே விட்டு செல்ல மனமில்லாமல் அவர்களை நோக்கிச் சென்றான்...


" சார் நான் மெக்கானிக்தான் ஏதாவது உதவி செய்யணுமா..? என்க


" ஆமா சார்... இந்த சனியன் பிடிச்ச கார் எப்ப நல்லா ஓடுது... எப்ப மக்கார் பண்ணுதுனே தெரிய மாட்டேங்குது... எப்ப குடும்பத்தோட வந்தாலும் எங்கையாவது பாதி வழில நின்னு என் மானத்தை வாங்கிடுது... இந்த காருல ஊட்டிக்கு போகவேண்டாம் பஸ்ல போகலாம்னு சொன்னா எங்க கேக்கறாங்க... எல்லாரும் மாகாராணி மாதிரி காருக்குள்லையே ஜம்னு உக்காந்துட்டு, தெருத் தெருவா என்ன மெக்கானிக்க தேடி அலைய வைக்கறாங்க... எனக்கு வர கோவத்துக்கு காரோட உள்ள இருக்கறவங்களையும் சேர்த்து இந்த மலைல இருந்து உருட்டி விட்டரலாமனு தோனுது " என கோவத்தில் காரின் ரேடியேட்டரை விட அதிகமாக கொதிக்க ஆரம்பித்தார்.


"ஹா ஹா ஹா ஹா " அவர் கூறியதை கேட்டு சத்தமாக சிரித்தவன்


" சார் காருன்னு இருந்தா ரோட்ல ஒடறப்ப ரிப்பேர் ஆகத்தான் செய்யும். இதுக்குபோய் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப் படறீங்க. இது சின்ன பிரச்சனைதான் சரி பண்ணிடலாம். அமைதியா இருங்க " என்று கூற


" இல்ல தம்பி... உங்களுக்கு தெரியாது, எப்பயாவது ரிப்பேரானா பரவால... வீட்டுலையே நிறுத்தி வச்சுருந்தாலும் இந்த சனியன் பிடிச்ச காரு மனசாட்சியே இல்லமா ரிப்பேராகி என் பர்சை காலி பண்ணுது... என் பொண்டாட்டி என்கிட்டே இருந்து பிடுங்கறதை விட, இந்த கார்தான் அதிகமா பிடுங்குது.. நான் ஒருத்தன் சம்பாரிச்சு எத்தனை பேருக்குதான் அழறது..." என நடுத்தர வர்கத்தின் மனிதராய் புலம்ப ஆரம்பித்தார்...


அவர் தனது காரை பற்றிய சோக கதையை கூற கூற, அவர் கூறிய விதத்திலும் அவரது முகபாவங்களிலும் அருணுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வர, முன்பே நொந்து போயிருப்பவரை, தானும் சிரித்து வெறுப்பேற்ற வேண்டாமென்று முடிவெடுத்தவனாக தனது புன்னகையை கட்டுப் படுத்திக்கொண்டு...


" சார் இது வெறும் சின்ன பிராபளம்தான் சீக்கிரம் சரி பண்ணிடலாம்... முதல்ல நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க... " என்று கூறி அவரை சற்று தள்ளி நிற்குமாறு கூறிவிட்டு ரேடியேட்டரின் மூடியை கழற்ற, அதீத வெப்பத்தினால் ரேடியேட்டரின் நீர் " தள தள " என சத்தத்தை எழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அதை கண்டவர்


" என்ன தம்பி இப்படி கொதிக்குது..? " வினவ


" காருக்கு பி பி அதிகமாயிடுச்சு அதான் இப்படி கொதிக்குது... உங்ககிட்ட தண்ணி இருக்கா..? " என வினவ .. காரிலிருந்து சிறிய தண்ணிர் பாட்டிலை எடுத்து குடுத்தவரை மேலும் கீழுமாக பார்த்த அருண் ..


"சார் இதெல்லாம் பத்தாது... நீங்க இருங்க பக்கத்துல கடை ஏதாவது? இருக்கானு பார்த்து நான் தண்ணி வாங்கிட்டு வறேன் " என்று அவரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சற்றுதொலைவு சென்று தண்ணிரை வாங்கி வந்து ரேடியேட்டரில் ஊற்றி காரை ஸ்டார்ட் செய்ய சொல்லி, இஞ்சின் பகுதியில் இருக்கும் தெர்மோஸ்டாட் வால்வு வேலை செய்கிறாதா என்று சோதித்தவன்... அது வேலை செய்யாமல் இருக்க , என்ன பிராபளம் என்பதை புரிந்து கொண்டு


" சார் இஞ்சின்குள்ள ஒரு சின்ன விசியம் போய்டுச்சு. வேலை செய்ய மாட்டேங்குது.. அதை மாத்தினாதான் இந்த பிராபளம் இல்லாம தொடர்ந்து போக முடியும்... நான் கொண்டு வந்த டூல்ஸ் எல்லாம் வேற கார்ல இருக்கு.. அதில்லாம கோத்தகிரி போனாதான் புதுசா ஸ்பேர் வாங்கி மாத்த முடியும்... என்ன பண்ணலாம் " என்று அவரிடம் வினவ


" என்னை கேட்டா எனக்கு என்ன சார் தெரியும் நீங்களே எதவாது பண்ணி சரி பண்ணிகுடுங்க சார்... குடும்பத்தோட இருக்கேன்... " என்று எங்கே அருண் விட்டு சென்றுவிடுவானோ என்ற பயத்தில் கெஞ்ச ஆரம்பித்தார்... சில நொடிகள் யோசித்தவன் காரின் பானெட்டை இறக்கிவிட்டுவிட்டு அவரை நோக்கி


" சார் உங்க பேமிலிய நான் வந்த கார்ல ஏத்திட்டு என் பின்னாடியே ஓட்டிட்டு வாங்க. உங்க காரை நான் ஓட்டிட்டு வறேன்.. கோத்தகிரி போய் நான் மாத்திக் குடுக்கறேன்.. கவலை படாதிங்க பாதில எல்லாம் விட்டுட்டு போகமாட்டேன்..." என்று கூற, நன்றியோடு அருணை ஏறிட்டவர், அருண் கூறியதைப்போலவே தனது குடும்பத்தை அருண் வந்த காருக்கு மாறிவிட்டு அருண் அவரது காரை எடுத்துக் கொண்டு முன்னால் கிளம்ப அருணை பின் தொடர ஆரம்பித்தார்... கோத்தகிரி செல்லும் வழியிலே மேற்கொண்டு இருமுறை சோதிக்க, மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதை போல காருக்கும் காட்டிவிட்டு ஒருவழியாக கோத்தகிரி போய் சேர்ந்ததும், அங்கிருந்த கடையிலே பழுதான உதிரிபாகத்தை வாங்கி, அதை மாற்றுவதற்கு தேவையான உபகரணத்தை தற்காலிகமாக அங்கிருந்தவர்கள் தர மறுத்ததால் அதையும் வாங்கி பழுதை சரி செய்துவிட்டு மேற்கொண்டு வேறு ஏதாவது பழுது இருக்கிறதா.? என்று ஒருமுறை பரிசோதித்துவிட்டு காரை அவரிடம் ஒப்படைத்தவன்


" சார் இது என் நெம்பர்... நீங்க போகவேண்டிய இடத்துக்கு போயிட்டு உங்க வீட்டுக்கு போறவரை ஏதும் ஆகாது... தைரியமா போங்க, வீட்டுக்கு போனதும் நல்ல மெக்கானிக் வொர்க்ஷாப்பா பார்த்து வண்டிய வேலை செய்ங்க... அந்த வேலைய செய்ங்க, இந்த வேலைய செய்ங்கனு சொல்லாம என்ன வேலை இருக்குனு மெக்கானிக் கிட்ட கேளுங்க... என்ன செய்யணும்னு சொல்லறாங்களோ அதை மறுக்காம செய்ங்க... காசை கமி பண்ணனும் ஓட்டவச்சு ஓட்டினா இப்படித்தான் ஆகும்... உங்களுக்கு விருப்பமிருந்தா கோயமுத்தூர் வந்து எனக்கு கூப்பிடுங்க நான் செஞ்சுதறேன் " என்று கூற


" ரொம்ப நன்றி தம்பி... உங்க உதவிய மறக்க மாட்டேன்... நீங்க உதவி செய்யலைனா..? நான் ரொம்ப சிரமப் பட்டுருப்பேன்... கண்டிப்பா நான் கோயமுத்தூர் வந்து உங்களை கூப்பிடறேன்... உங்க நெம்பரை பதிவு பண்ணிக்கறேன்... உங்க பேர் என்ன தம்பி..?" என்று வினவ



" என் பேர் அருண் சார் .." என்று கூற அவனது போன் நெம்பரை பதிவு செய்துவிட்டு தனது நெம்பரை அருணுக்கு தெரியப்படுத்த தனது மொபைலில் இருந்து அருணுக்கு அழைக்க, அவரது பேரை கேட்டு பதிவு செய்து கொண்டு அருண் கிளம்ப முற்படுகையில் வேலைக்கான ஊதியம் எவ்வளவு என்று அவர் கேட்க


" பரவால சார்... இப்ப ஏதும் வேண்டாம். நீங்க வண்டிய வேலைக்கு விடறப்ப சேர்த்து வாங்கிக்கிறேன்.. " என்று கூறினான்...


ஏனெனில் பழுதடைந்த உதிரிபாகத்தை வாங்குபோழுதே அவரிடம் பணம் குறைவாக இருப்பதை உணர்ந்து கொண்டவன் அவர்களது வழிச் செலவுக்காவது உதவட்டும் என்று மறுத்துவிட்டு அவர்களை கிளம்ப சொல்லிவிட்டு தனது காருக்கு வர அருணின் கைப்பேசி அழைக்க புதிய எண்ணாக இருக்கவும் யோசானையாய் அழைப்பை ஏற்று காதில் பொருத்தவும்,


" ஹேய் டிரைவர்... மேட்டுபாளையத்திலிருந்து வரதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா..? நீ கார் ஓட்டரியா இல்ல கட்டை வண்டி ஓட்டரியா..? உன்னையெல்லாம் யார் இந்த வேலைக்கு வர சொன்னது " என்று எதிர் முனையில் ஒரு பெண் பேச, பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தவன்


" ஹலோ லைன்ல இருக்கியா இல்லையா ..? " என்று மீண்டும் எதிர்புறமிருந்து வினவ...


" ம்ம்ம்ம் " என்றவன் , மேற்கொண்டு பேச வாய்திறக்கும் முன்


" ஃபோன குடுடி... யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா..? என்று வேறொரு பெண்ணின் குரல் வர அமைதியாக இருந்தவன்


" ஹலோ டிரைவர் ஏன் இவ்வளவு நேரம்..? சீக்கிரம் வாங்க... இப்ப எங்க இருக்கீங்க ?" என அந்த பெண் பேசியதும்


" கோத்தகிரி வந்துட்டேங்க... சீக்கிரத்துல வறேன் " என்று சொல்லி தொடர்பை துண்டித்தான்


அருணுக்கு மரியாதை குடுக்காமல் பேசினால் சுத்தமாக பிடிக்காது... தன் நண்பர்களை கூட எல்லை மீறி பேச அனுமத்ததுமில்லை அருணும் அவர்களிடம் எல்லை மீறியதும் கிடையாது... அருணிடம் எப்படி வேண்டுமானாலும் பேசக் கூடியவள் நந்தினி ஒருத்தி மட்டுமே... யாரோ முகம் தெரியாத ஒருவர் மரியாதை குறைவாக பேசவும், சில வினாடிகள் என்ன செய்வதென்று அவனுக்கே புரியவில்லை. இருந்தாலும் தன்னை அவர்கள் வீட்டு ஓட்டுனர் என்றெண்ணி பேசுகிறார்கள் என்று தன்னை சமாளித்துக் கொண்டவன்... சண்முகத்தின் நிலையையை கருதி இதை பெரிது படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்து கிளம்ப செல்கையில்


" கிளிக் கிளிக்... கிளிக் கிளிக்... " என குறுந்தகவல் வந்ததிற்கான அறிவிப்பு வர... அனுப்பியது யார் என்று கைபேசியை எடுத்து பார்க்க நந்தினி என்று பெயர் வர புன்னகைத்துக் கொண்டே அதை திறக்க


" I Hate You " என்று குறுந்தகவல் வந்திருந்தது... புன்னகையுடனே நந்தினிக்கு அழைக்க, நந்தினி அழைப்பை ஏற்காமல் துண்டித்துவிட்டு, மீண்டும் குர்ந்தகவலை அனுப்பினாள்... அருண் அதையும் ஓபன் செய்து பார்க்க


" I Hate You.... I Hate You... I Hate You.... But..!" எனக் குறுந்தகவலை அனுப்பியிருந்தாள்



வெறுப்பு தொடரும்....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெறுப்பு....5
மூன்று மணி நேரத்திற்கு முன்....
“ நந்தினி...! ஏய் நந்தினி...! மணி ஒன்பது ஆகுது... எந்திரிடி.... ஒரு வயசுப்புள்ள இவ்வளவு நேரமாவா தூங்குவ..” என மழைக் காலத்திலும் கூட ஏசியை அதிகபட்ச குளிரில் வைத்துவிட்டு, குளிருக்கு இதமாக இரண்டு கம்பளிகளை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்த தன் செல்ல மகளை கடிந்தவாறே எழுப்பிக் கொண்டிருந்தார் சாந்தி...
சாந்தி சிவக்குமார் தம்பதியரின் ஒரே மகள் நந்தினி... கோவையிலுள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் நான்காமாண்டு மருத்துவம் பயின்று கொண்டிருக்கிறாள்... சாந்தி வங்கி ஒன்றில் மேலாளராக பணி புரிகிறார்... சிவக்குமார் குற்றத்தடுப்பு பிரிவில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிகிறார்...
நந்தினியை எழுப்பிவிட்டு வந்த சாந்தி தன் மகளுக்காக காப்பி கலந்துவைத்துக் கொண்டு காத்திருக்க, நந்தினி கிழே இறங்கி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாமல் போகவே சலித்துக் கொண்டு மீண்டும் மாடியிலுள்ள அவளது அறைக்கு சென்று தன் மகளை எழுப்பும் வேலையை ஆரம்பித்தார்... விடுமுறை நாட்களில் நந்தினியை எழுப்புவதே சந்திக்கு வழக்கமான வேலையாகிப் போனது.... இம்முறை குரலில் சற்று கடினத்தை கூட்டிக் கொண்டு சற்று சத்தமாகவே
“ நந்தினி...! இப்ப நீ எழுந்திரிக்கல மம்மி உன்மேல தண்ணிய உத்திடுவேன்..” என்று அருகிலிருந்த தண்ணீர் கோப்பையை எடுத்துக்கொண்டு அவள் மீது ஊற்றுவதைப் போல பாவனை செய்தவாறே மிரட்ட, அப்பொழுதும் கூட நந்தினி அசையவில்லை... அதற்குமேல் பொறுக்க முடியாமல் தண்ணீரை உற்றச் சென்றவர், ஒருநொடி நிதானித்து நந்தினி போர்த்தியிருந்த கம்பளியை விலக்கிப் பார்க்க, உறங்குவதைபோல தலையணையில் செய்து வைத்துவிட்டு, தன் தாயின் கொடுமைகளை அருகிலிருந்த அலமாரியின் பின்புறமாக ஒளிந்து கொண்டு, கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தாள் நந்தினி....
சாந்தி முதல் முறை எழுப்பியதுமே எழுந்து கொண்ட நந்தினி... விடுமுறை நாட்களில் தன் அம்மா தன்னை தூங்கவிடாமல் தொந்தரவு செய்வதாக தந்தையிடம் தொடர்ந்து புகார் வாசிக்க, வாய்மொழியாக புகார் தெரிவித்தால் பயனில்லை. ஏதாவது வலுவான ஆதாரம் இருந்தால் சாந்தியின் மீது நடவடிக்கை எடுப்பதாக சிவக்குமார் கூறியதை ஏற்று, இரவுமுழுவதும் திட்டம் போட்டு சாந்திக்கு எதிரான ஆதராத்தை தயார் செய்து கொண்டிருந்தாள் நந்தினி...
நந்தினியை காணாது சுற்றும் முற்றும் தேடியவர் அலமாரியின் பின்புறமாக கைபேசியுடன் நின்றிருந்த நந்தினியை கண்டதும், அவளின் எண்ணத்தை புரிந்தவராக...
“ அடிக் கழுதை.... உன்னை....” என்று நந்தினியை பிடிக்க முன்னேற, சாந்தியிடம் சிக்காமல் அங்குமிங்குமாக ஓடி போக்கு காட்டியவள், பின் ஒரேதாவாக கட்டிலின் மீது ஏறி அறையை விட்டு வெளியேறி வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த சிவக்குமாரை கண்டதும் “ டாடீஈஈஈ...” என கத்திக் கொண்டே அவரிடம் சரணடைய, பின்னாலே துரத்தி கொண்டே சாந்தியும் ஓடிவர
“ டாடி... உங்க பொண்டாட்டிய அங்கயே நிக்க சொல்லுங்க.... உங்க பொண்டாட்டி என்ன கொடுமை படுத்துனதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு...” என்று மகள் கூறியதை ஏற்று தன் மனைவியை தடுத்தவர், நந்தினியின் கையிலிருந்த மொபைலை வாங்கி அதில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்க்க ஆரம்பித்தார்...
அதில் சாந்தி கோபமாக எழுப்புவது, தண்ணீர் ஜக்கை எடுத்து தண்ணீரை ஊற்றப் போவது, பின் தன மகளை காணாது சுற்றும் முற்றும் தேடுவது, நந்தினியை துரத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்க புன்னகையுடனே பார்த்துக் கொண்டிருந்தார்,
“ டாடி... இது போதும்ல மம்மி மேல ஆக்ஷன் எடுக்க... மம்மிய பிடிச்சு இ.பி.கோ, கி.பி.கோ, கிமு, கிபி-னு ஏதாவது ஒரு செக்சன்ல கேஸ் போட்டு... ஒரு ஆறுமாசம் உள்ள தூக்கி போட்டுருங்க டாடி” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, இப்பொழுது மகளை விடுவித்து தன மனைவியை அனைத்துக் கொண்டு...
“ இல்லடா... மம்மி உன்மேல தண்ணிய ஊத்திருந்தாதான் குற்றம் செஞ்சதா அர்த்தம்... மம்மிதான் உன்மேல தண்ணிய ஊத்தலைல. அதனால மம்மிய அரெஸ்ட் பண்ணினாலும் கேஸ் நிக்காது” என்று கூற
“ மம்மி என்மேல தண்ணிய ஊத்த வந்தாங்கதான டாடி... அதையே அடிப்படை ஆதாரமா வச்சுக்கிட்டு மம்மி மேல ஆக்ஷன் எடுங்க டாடி” என்று விடாபிடியாக கூற
“ நந்தினி..! இப்ப மம்மி குற்றம் செய்ய வந்திருந்தாலும், அதுக்கு காரணம் யாரு ..? நீதான... குற்றம் செஞ்சவங்களை விட குற்றம் செய்ய தூண்டினவங்களுக்குதான் தண்டனை அதிகம்... அதனால டாடி தண்டனை குடுக்கனும்னா உனக்குத்தான் குடுக்கணும்..” என்று கூற, தன் திட்டம் தோல்வியடைந்ததில் சோர்ந்து போனவள்
“ மம்மி... அதான் தண்ணிய ஊத்த வந்திங்கிள்ள.... ஒழுங்க ஊத்த வேண்டியதுதான.. உங்களை யாரு ஊத்த வேண்டாமுன்னு சொன்னது” என்று சாந்தியிடம் எகிறினாள்
“ நீ போலிஸ்காரனுக்கு பொண்ணுனா... நான் அதே போலிஸ்காரனுக்கு பொண்டாட்டி... என்கிட்டயேவா போடி..” என்று சாந்தி விரலை வளைத்து பழிப்பு காண்பிக்க... நந்தினி அழுவதை போன்று முகத்தை வைத்துக் கொண்டு சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, அவளை சமாதானம் செய்யும் விதமாக
“ சரிடா... உன் இஷ்டப்படி நீ தூங்கு. மம்மி ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்று சிவக்குமார் கூறியதில் முகம் மலர்ந்தவள்... சாந்தியை ஏறிட்டு
“ மம்மி... கேட்டுக்கோங்க டாடி எனக்கு பர்மிசன் குடுத்தாச்சு... இனிமேல் லீவ் டேஸ்ல நான் தூங்கினா என்ன தொல்லை பண்ணக்கூடாது...” என்று உத்தரவு போட
“ நீ மறுபடியும் இதேமாதிரி தூங்கு. மம்மி சுடுதண்ணிய ஊத்தறேன்...” என்று கூற
“ வெவ் வெவ் வெவ் வே” என்று அழகு காண்பித்தவள்
“ அப்ப அருண் தூங்கினா மட்டும் ஒன்னும் சொல்லறதில்ல... நந்தினி சத்தம் போடாத அருண் தூங்கறான்... நந்தினி டீவி வால்யும கமி பண்ணு... நந்தினி அத பண்ணாத... நந்தினி இத பண்ணாதனு வார்த்தைக்கு வார்த்தை என் பேர ஏலம் விடறீங்க தான... ஒரே வீட்டுல அவனுக்கு ஒரு ரூல்ஸ் எனக்கொரு ரூல்ஸா..? இது என்ன நியாயம்..?” என்று கேள்வியெழுப்ப
“ ஏண்டி... நீயும் அவனும் ஒண்ணா..? அவன் ஆம்பளை பையண்டி.... அவனே என்னைக்காவது ஒருநாள்தான் வரான்.. எப்ப பார்த்தாலும் அவன்கிட்டயே ஏண்டி நீ போட்டி போடற..” என்று அருணுக்கு சாதகமாக பதில் கூற
“ பசங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம்னா, என்னையும் பையனா பெத்திருக்க வேண்டியதுதான... உங்களை யாரு புள்ளையா பெத்துக்க சொன்னது... என்று விட்டு குடுக்க மனமில்லாமல் எதிர்வாதம் செய்துவிட்டு... தந்தையிடமிருந்து மொபைலை வாங்கி அருணுக்கு அழைக்க... அருனின் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக தகவல் வர சலித்துக் கொண்டே மொபைலை சோபாவின் மீது எறிந்தவள் சாந்தியை நோக்கி...
“ மம்மி... இன்னைக்கு அருண் வந்ததும் நான் சண்டை போடுவேன்... நீங்க குறுக்க வரக் கூடாது... நான் எந்திரிக்கறதுக்கு முன்னாடியே நீ இங்க இருக்கணும்ன்னு அந்த பக்கி கிட்ட நேத்தே சொல்லிட்டேன்... இவ்வளவு நேரமாயும் அந்த பக்கி வரல... அவன் தொலைஞ்சான்..” என்று கூற
“ நந்தினி அவனுக்கு என்ன வேலையோ...? ஒருநாள் லீவ் கிடைச்சாலும் அருண் உன்கூடதான இருக்கான்... சும்மா எதுக்கெடுத்தாலும் அருண் கூட சண்டை போடாதடா...” என்று சிவக்குமார் கூற
“ ஐயோ டாடி... நான் அவன்கிட்ட கோவ பட்டா சண்டை போடறேன்... எனக்கு உரிமை இருக்கு நான் சண்டை போடறேன்... அருண் கூட எது பேசினாலும் மம்மி குறுக்க குறுக்க வராங்க... எனக்கும் அருணுக்கும் இடைல யாருமே வரக்கூடாது... என்று தெரிவிக்க
“ அருணுக்கு நம்மள விட்டா யாருடா இருக்கா..? நீ எதாவது அவன் மனசு கஷ்டப்படற மாதிரி பேசிடுவையோனு எங்களுக்கு பயம்... அதான் மம்மி குறுக்க வராங்க” என்று கூற
“ஹா ஹா ஹா ஹா... டாடி நான் எது பேசினாலும் அருண் ஒன்னும் சொல்ல மாட்டான்... ஏன்னா அவன் என்னோட அருண்” என்று பெருமிதமாக கூற... நந்தினி கூறியதை கேட்டு இருவரும் தங்களுக்குள்ளாகவே அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டு...
“ சரிடா அவன் உன் அருணாவே இருக்கட்டும்... இப்ப போய் ரெடியாகிவா சாப்பிடலாம்” என்று சிவக்குமார் கூறியதும் அருணை பற்றி சிந்தித்துக் கொண்டே தனதறைக்கு சென்றாள் நந்தினி....
தற்பொழுது...
போனில் பேசிய குரல் தனக்கு பரிச்சியமானதைப் போல் தோன்ற அதை பற்றியே சிந்தித்துக் கொண்டு, நந்தினியை பற்றிய சிந்தனைகளை கைவிட்டவனாக ஒருவித அழுத்தமான மனநிலையிலேயே கெங்கரையை நோக்கி காரை செலுத்தினான் அருண்...
சத்தியமூர்த்தியின் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில், சத்தியமூர்த்தியின் காரை... பழுதடைந்த வாகனத்தை சுமந்து செல்லும் வாகனத்தில் சிலர் ஏற்றிக் கொண்டிருக்க, காரிலிருந்து இறங்காமலே சிறிது நேரம் நின்று பார்த்தவன், சண்முகம் ஏற்பாடு செய்திருப்பார் என்று தனக்குள் எண்ணியவனாக அங்கிருந்த பெரியவரிடம்... சத்திய
மூர்த்தியின் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியை விசாரித்துவிட்டு, எஸ்டேட்டை நோக்கி காரை செலுத்தினான்...
எஸ்டேட்டில் நுழைந்ததும் அங்கிருந்த போர்ட்டிகோவின் முன்பாக காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்காமலே " பாம்ம்மம்ம்ம்ம் " என ஹாரன் ஒலியை எழுப்ப, தங்களது காரை கண்டதும் ஐஸ்வர்யாவும், ஹரிப்பிரியாவும் காரை நோக்கி வர, ஹரிப்பிரியாவை கண்டதும், அருணின் முகமோ மலர்ந்து சுருங்கியது.... அருணின் முக மாறுதல்களை கவனித்தவாறே வந்த ஹரிப்பிரியா அருணை முறைத்தவாரே
" ஹலோ மிஸ்டர் மகாராஜா! உங்க பொன்னான பாதம் பூமில பட்டா ஒன்னும் குறைஞ்சு போயிடாது... கிழ இறங்கு மேன்... எங்க லக்கேஜ் எல்லாம் எடுத்து டிக்கில வை..." என திமிராக கூற, இருவரையும் மாறி மாறி பார்த்தவன், பதில் கூற உதடுகள் துடித்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, செயற்கை புன்னகையை உதடுகளில் தவழவிட்டவாறு...
" மாகாராணி..! நீங்க சொல்லி செய்யாம இருக்க முடியுமா..? ஆனா பாருங்க மாகாராணி; ஒரு சின்ன விண்ணப்பம்... அந்த லக்கேஜோட சேர்த்து இந்த லக்கேஜையும் டிக்கில தூக்கி போட்டுட்டா மேட்டுப்பாளையம் போற வரைக்கும் யாருக்கும் தொல்லை இருக்காது.." என்று ஹரிப்பிரியாவை கை காண்பித்துக் கூற...
" ஹேய்..! யூ.. யூ... ராஸ்கல்.. யார பார்த்துடா லக்கேஜுனு சொல்லற " என்று ஹரிப்பிரியா எகிறினாள்...
" ஏன்...? உனக்கு கண்ணு தெரியாதா..? உன்னை பார்த்துதான் சொல்லறேன்" என நக்கலாக கூற, கோபத்தில் முகம் சிவக்க அருணை பார்த்து பேச வாயெடுக்கும் முன், ஒரு முறைப்பிலேயே ஹரிப்பிரியாவை அடக்கிய அருண் ஐஸ்வர்யாவை ஏறிட்டு...
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட போன்ல பேசினது யாரு " என்று கேள்வி எழுப்ப, ஐஸ்வர்யா பதிலேதும் கூறாமல் சங்கடமாக தன் தங்கையை பார்க்க, அதில் புரிந்து கொண்டவன்
" உங்க டிரைவர் வரல நான்தான் வறேன்னு தெரிஞ்சுதான் என்கிட்ட அப்படி பேசினீங்களா..? " என்று ஹரிப்பிரியாவை முறைத்துக் கொண்டே கேட்க...
" எங்க டிரைவர் வரல... சித்தப்பாவோட ஃபிரெண்ட் வாரார்னு மட்டும்தான் தெரியும்... ஆனா அது யார்னு..? தெரியாது " என்று தயங்கியவாறே பதில் கூறிய ஐஸ்வர்யாவை ஏறிட்டு
" இங்க பாருங்க... உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துட்டு பேசாம கார்ல ஏறுங்க... என்கிட்ட இப்படி திமிராவே பேசிட்டு இருந்தா.... ####### இது போச்சுன்னு கார எடுத்துட்டு நான் கிளம்பி போயிட்டே இருப்பேன்... அப்பறம் நீங்க ரெண்டுபேரும் அங்கப்பிரதட்சணம் பண்ணிட்டுதான் மேட்டுப்பாளையாம் போகணும் எப்படி வசதி..." என்று வினவ
" ஹேய்ய்ய்...! " என்று மீண்டும் ஆரம்பித்த ஹரிப்பிரியாவை அடக்கிவிட்டு, அவளது கையை பற்றி அருணை விட்டு சற்று தூரம் இழுத்துச் சென்ற ஐஸ்வர்யா...
" ஹரி... ஏண்டி இப்படி பண்ணற... முதல்ல நான் சொல்லறத கேளு ஹரி.. இவர்.. என் ஜூனியர் நந்தினிக்கு தெரிஞ்சவரா இருக்கணும்... பலதடவை நந்தினிய காலேஜ்ல டிராப் பண்ண வரும்போது பார்த்திருக்கேன்... நந்தினியோட அப்பா அசிஸ்டென்ட் கமிஷனரா இருக்கார்... சித்தப்பாவுக்கும் நந்தினியோட அப்பாவுக்கும் நல்ல பழக்கம் இருக்கும்னு நினைக்கிறேன்... இவர்கிட்ட நீ ஏதாவது பேசினா, அது தேவை இல்லாத பிரச்சனைய உருவாக்கிடும்..." என ஹரிபிரியாவை சமாதானம் செய்யும் விதமாக கூற...
"அவனுக்கு போலீஸ்ல தெரிஞ்சவங்க இருந்தா... அவன் என்ன பெரிய இவனா..? எனக்கு அவன பார்த்தாலே கோவம்தான் வருது... நான் இப்படிதான் பேசுவேன்..." என்று மீண்டும் திமிராகவே கூறினாள்
" ஐயோ...! ஏண்டி இப்படி அடம்பிடிக்கற... இன்னும் கொஞ்ச நேரத்துல நாம மேட்டுப்பாளையம் போய்டுவோம்.. அப்பறம் அவர் யாரோ நாம யாரோ... அதுவரைக்கும் கொஞ்சம் பெருமையா இரு " என்று கூறிய ஐஸ்வர்யாவை சிலநொடிகள் ஏறிட்டு பார்த்தவள்...
'உனக்கு வேணும்னா அவன் யாரோவா இருக்கலாம் ஐஸு... ஆனா எனக்கு அப்படியில்ல... அருண் இனிமேல் தான் இந்த ஹரிபிரியா யாருன்னு நீ தெரிஞ்சுக்கப போற... என்ன விட்டு உன்னால இனி ஓடி ஒழிய முடியாது' என்று மனதில் நினைத்துக் கொண்டு எதுவும் பேசாமல்
காரை நோக்கி செல்ல.. அவள் பின்னாலே சென்ற ஐஸ்வர்யா அருணிடம்...
" நாங்க எதும் பேசல... நீங்க வண்டிய எடுங்க" என்று கூறி காரின் இடது புறமாக ஏறிக்கொள்ள, அருணுக்கு பின்புறமாக ஹரிபிரியா அமர்ந்து கொண்டாள்...
இருவரும் காரிலேறி அமர்ந்ததும் ரியர் வியூ மிரர் வழியாக ஹரிப்பிரியாவை முறைத்தவாரே அருண் அமர்ந்திருக்க, அருணின் பார்வையை தவிர்க்க முயன்று, கடைசியில் ஹரிப்பிரியாவும் தனது பார்வையை ரியர்வியூ மிரர் வழியாக அருணின் பார்வையோடு கலக்கவிட... இருவரது பார்வை பரிமாற்றத்தை கண்டதும் இது எங்க போய் முடியுமோ..? என்ற எண்ணத்தில் இருவரையும் மாறி மாறி பார்த்தவாறே ஐஸ்வர்யாவும் வேறு வழியின்றி அமைதியாகவே அமர்ந்திருந்தாள்...
ஒரு நிலைக்குமேல் ஹரிப்பிரியாவால் தன் கோபத்தை பிடித்து வைத்திருக்க முடியாமல் உதடுகளில் புன்னகைய தவழ விட....
' உன்னோட இந்த சிரிப்புகெல்லாம் மறுபடியும் நான் உன்கிட்ட சிக்க மாட்டேண்டி ' என மனதில் நினைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்தை நோக்கி காரை கிளப்பினான்....
இருவரது பார்வை பரிமாற்றத்தையும் கவனித்த ஐஸ்வர்யாவுக்கு, இருவரும் முன்பே அறிமுகம் ஆனவர்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது... ஆனால் எங்கு..? எப்பொழுது..? அறிமுகம் ஆகியிருப்பார்கள் என்ற கேள்வி எழ அதற்கு அவளிடம் பதில் இல்லை... அதோடில்லாமல் ஹரிப்பிரியா முன்பின் தெரியாவர்களிடம் அநாகரீகமாக பேச கூடியவள் இல்லை... இவரிடம் அப்படி பேசி இருக்கிறாள் என்றால், வருவது யார் என்று முன்பே தெரிந்திருக்க வேண்டும்... ஆனால் அது எப்படி சாத்தியம்..? ஒருவேளை சித்தப்பா மொபைல் நெம்பரை அனுப்பும் பொழுது இவரின் போட்டோவையும் அனுப்பியிருக்க வேண்டும்... ஆனால் இருவருக்குள்ளும் அப்படி என்ன பிரச்சனை என்று குழம்ப, சரி வீட்டிற்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியா அமர்ந்திருக்க...
" ஐஸு... இப்படி கார மெதுவா ஓட்டினா...? கட்ட வண்டி ஓட்டரவன்னு சொல்லாம வேற எப்படி சொல்லறது... கொஞ்சம் வேகமா போக சொல்லு ஐஸு... வேகமா கார் ஓட்ட தெரியலனா தள்ளி உக்கார சொல்லு. எப்படி ஓட்டராதுன்னு நான் சொல்லி தரேன் " என்று தனது அக்காவிடம் சொல்வது போல அருணின் காதுகளில் படுமாறு சத்தமாக கத்தி சொல்ல... காரை ஓரமாக நிறுத்திய அருண் திரும்பி ஐஸ்வர்யாவை பார்த்து சீட் பெல்ட்டை மாட்டிக் கொள்ளுமாறு சைகை காண்பிக்க ஐஸ்வர்யா அவசர அவசரமாக சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டு அருணை ஏறிட, கண்ணாடி வழியாக ஹரிப்பிரியாவை முறைத்தவாரே,' கட்டவண்டி ஓட்டரவன்னா... இன்னைக்கு உன்ன ஒருவழி பண்ணல நான் அருண் இல்லடி என மனதில் நினைக்க, அவனது மனதினை படித்தவள் போல ' அதையும் பார்க்கலாம் போடா'
என கண்களாலே பதில் கூரினாள்... ஹரிப்பிரியாவின் கண்களை பார்த்தவாறே காரின் கியரை மாற்றி ஆக்சிலேட்டரை முழுவதுமாக மித்தித்து, இன்ஜினை முழு குதிரை திறனில் சுழல விட்டு, சடாரென காரை விடுவிக்க... அதிகபட்ச உந்துதல் திறனால் உந்தப்பட்ட வாகனம் தனது முன்புற சக்கரங்கள் இரண்டையும் அந்தரத்தில் மிதக்கவிட்டவாறு விருட்டென கிளம்பி சிறிது தூரம் சென்று தரையை தொட... தனது இஷ்டதெய்வங்களை மனதிற்குள் வேண்டியவாறே பீதியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்யா...
 
Status
Not open for further replies.
Top