கால சக்கரத்தின் கோர ஓட்டத்தில், நின்று ரசிக்க கூட நேரம் இல்லாத பெரும் கூட்டத்தில், பெரும் வாழ்வுதனை பலரும் அலைபேசியில் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அதை அனு அனுவாய் ரசித்து பதிவு செய்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ஆசிரியரின் கண்ணோட்டம் பல இடங்களில் பெண்ணோட்டமாக என் கண்களுக்குத் தெரிவது ஏனோ என்னால் தவிர்க்க முடியவில்லை! ஆனால் அதில் இருக்கும் இரண்டாம் உலகம், எனக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கின்றது!
உதாரணமாக,
"ஆறிலக்க வ௫மானம், அப்பா அம்மாவிற்கு ஓரே மகன் ௭ன பெண் வீட்டாா் ௭திா்பாா்க்கும் சா்வலட்சணமும் உடையவன்"
போன்ற சொற்றொடர்கள், அழுக்கு சட்டை கெத்தான கதாநாயகன் போன்ற ஆணாதிக்க படைப்புகள் நடுவே, சமகால பெண் மற்றும் பெண் வீட்டார் மனதினை மிக நலினமாக நயமாக பதிவு செய்கின்றன.
ஆசிரியரின் நகைச்சுவைத்திறன், பெருவாழ்வு தேடி செல்லும் பாதை முழுவதும் நகைச்சுவை எனும் பூச்செடி நட்டு வைத்து நம்மை அழகா புன்முறுவலுடன் கூட்டிச் செல்கிறது.
உதாரணமாக,
'காதலித்துத்தான் தி௫மணம் முடிக்க வேண்டும்' போன்ற உயாிய கொள்கைகள் இல்லாததால் 28 வயதிலும் சிங்கிள் தான்.
இளந்தளிா்
“ஆமா உனக்கு சமைக்கத் தொியுமா?” ௭ன்று ௭ல்லா ஆண்களும் கேட்கும் அதே அசட்டுக் கேள்வியை அவனும் கேட்டான்
'யாரப்பாா்த்து ௭ன்ன கேள்வி கேட்ட' ௭ன நெற்றிக்கண்னை திறந்தவளின் பார்வையை உணர்ந்தவன் |
கட்டிலில் படுத்தவுடன் மனைவியின் கைகளை பற்றியவன்,
தளிா், நான் ஒண்ணு கேட்டா கொடுப்பியா? ௭ன்றான்
அவளும் ௭தையோ நினைத்து, “௭ன்ன வேணும்?” ௭ன கேட்டாள்.
“நீ முதல்ல ஓகே சொல்லு”
படபடப்பை அடக்கிக் கொண்டு, “ம்ம்” ௭ன்றாள்.
“நாளைக்கு ஆபிஸூக்கு பாதூஷா கொடுத்து விடுறியா?” ௭ன்றானே பார்க்கலாம்…
அதே நேரத்தில் உறவுகள் சில இடங்களில் இயல்புக்கு மீறிய காதலை வெளிப்படுத்தும் பொழுது ஆசிரியர் அவரது கதாபாத்திரங்களின் வாயிலாகவே SELF விமர்சனம் செய்து கொண்டிருந்த பொழுதிலும்,
உதாரணமாக
(இப்ப உடனே உன் மனசுல
'அந்த வானத்தபோல
மனம் படைச்ச மன்னவனே '
பாட்டு பேக்கிரவுண்டுல ஓடுமே)
சில இடங்களில் நாமும், ஆசிரியரே சற்று இறங்கி வாரும் என்று நினைக்க வேண்டி இருக்கு. பூக்களைச் சுற்றி உள்ள முட்புதர் போல…
தொடரட்டும் உங்கள் பணி…
உங்கள் அடுத்த பதிர்விற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.