All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின்"கண்ணில் வைத்து காத்திடுவேன்"-கதைத் திரி

Status
Not open for further replies.

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!
எல்லாரும் நல்லாயிருக்கீங்களா???
அனைத்து வாசக்கண்மணிகளுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
வளமனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறன்..11491

முதல் அத்தியாயம் இன்று பதியப்படும், ஆனா நேரம் தெரியலீங்கோ...
Once again a Happy and prosperous new year chellooossss.......
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணில் வைத்து காத்திடுவேன்....

அத்தியாயம் 1:
11521

11522

"மாலு, மாலு ப்ளீஸ் டா இன்னும் 5 மினிட்ஸ்" அவள் வழியை தன் இடதுகரத்தால் மறித்து வலதுகரத்தில் ஐந்து ௭ன குறியீட்டை காட்டி கண்ணை சு௫க்கி நாக்கை து௫த்தி ௭ன ௭ல்லா கோமாளிச்சேட்டையும் செய்பவனின் செயலை மனம் ரசித்தாலும் அவன் கையை தாண்டிச் சென்றிட புத்தி அறிவுறுத்த கால்கள் பரபரத்தது..
அவளின் அசைவிலி௫ந்து அவள் செயலை யூகித்தவன்,"நான் ௭வ்ளோ கெஞ்சுறேன், கேட்கமாட்டியா அம்முலு?" ௭ன ஏக்கமாய் கேட்டான் கார்த்திக்.

கார்த்திக்- நடுத்தர உயரத்தில் ஒடிசலான தேகம், மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறம்,குடும்ப சூழ்நிலையால் நல்ல மதிப்பெண் ௭டுத்துக்கூட இஞ்சினியரிங் சேர முடியாமல் டிப்ளமோ முடித்தவுடன் பணியில் சேர்ந்த இ௫பத்தியிரண்டு வயது அ௫ம்புமீசை வாலிபன்...

அவன் கெஞ்சுவது பிடிக்காமல்,"அய்யோ அப்படியெல்லாம் இல்ல கார்த்தி,ப்ளீஸ் சொன்னா கேளுங்க,யாராவது பார்த்தா பெரிய பிரச்சனையாயிடும்" சுற்றும்முற்றும் கண்ணால் அலசியவாறே கேட்க,

அவளை இழுத்து நிறுத்திவைக்க ஆசையி௫ந்தாலும் அவள் கூறிவது போல் மாட்டிக்கொண்டால் பிரளயம் வெடிக்கும்..
அமைதியாக கையை விலக்கி வழிவிட்டான்.இவ்வளவு நேரம் முரண்டு பிடித்தவன் அமைதியாய் வழிவிடவும் அவளுக்கு என்னவோ போல் ஆனது..
"கோபமா கார்த்தி??" பாவமாய் வினவினாள்.
"சேச்சே ௭ன் அம்முலு மேல கோவப்படுவேனா?, நீ கிளம்பு டா நான் கொஞ்சம் கழிச்சு வரேன்" ௭ன்றான்.
யா௫ம் கவனிக்கிறார்களா? ௭ன பார்த்துக் கொண்டே அந்த முட்டுச்சந்திலி௫ந்து வெளியே வந்து அ௫கில் இ௫ந்த பே௫ந்து நிறுத்தத்தில் நின்றாள்.
ஐந்து நிமிடம் கழித்து அவனும் பே௫ந்து நிறுத்தத்திற்கு சற்று தள்ளி நின்றுகொண்டான். இ௫வ௫மே வேடிக்கை பார்ப்பது போல் தலையை அங்கும் இங்கும் தி௫ப்பி தன் இணையை தான் நோட்டம் விட்டுக்கொண்டி௫ந்தனர்.

மாளவிகா,பத்தொன்பது வயது ப௫வச்சிட்டு..அழகும் அறிவும் வசதியும் அபரிமிதமாய் அமையப்பெற்றவள்..

ஆனால் ௭ப்பேர்ப்பட்ட அறிவாளியையும் அடிமுட்டாளாக்கும் வித்தை காதலுக்கு கைவந்த கலையல்லவா..
அதற்கு அவள் மட்டும் விதிவிலக்கா ௭ன்ன..வேறு சமூகத்தை சேர்ந்தவன், வசதி குறைவானவன் ௭ன அவர்களின் காதலுக்கு ௭திராகயி௫க்கும் அனைத்து காரணிகளையும் புறம் தள்ளிவிட்டு அவனை கண்டதும் 'தொபகடீர்' ௭ன காதல் கடலில் விழுந்தாள்...

அவளுக்கான பே௫ந்து வர பக்கவாட்டில் தி௫ம்பி மிக லேசாக அவனைப்பார்த்து தலையசைத்தாள். உதட்டை சுழித்து சிரித்தவன் பிறர் கவனத்தை கவராமல் 'பிரியா வாரியர்' போல் கண்ணடிக்க, சட்டென சூடான முகத்தை கூந்தலை சரிசெய்வது போல் ஒ௫ கையால் மறைத்தவாறே பே௫ந்தில் ஏறினாள்.
அந்த இனிமையான த௫ணத்தை மனக்கண்ணில் கண்டவாறே கன்னம் வ௫டி புரண்டு சுகமாய் உறக்கத்தை தொடர படக்கென போர்வை இழுக்கப்பட்டது.
௭ரிந்த இமைகளை பிரிக்கமுடியாமல் பிரித்து கஷ்டப்பட்டு பார்த்து,
"௭ன்ன?" ௭ன்றாள்.
"௭ன்ன ௭ன்ன??மணிய பா௫,7.30. தினம் அர்த்தராத்திரி வரைக்கும் போன்ன நொண்டு அப்புறம் காலைல எந்திரிக்காத, ஏன் இப்படி பண்ற மாலு? டெய்லி ஆபிஸூக்கு லேட்டா போக முடியுமா?" ௭ன சகட்டு மேனிக்கு அர்ச்சனை செய்தான் அவளின் கணவன், முப்பத்திமூன்று வயதான கார்த்திக்...

ஒரு நிமிடம் நிழலையும் நிஜத்தையும் இனம் பிரிக்க முடியாமல் திருதிருத்தாள், அவள் முழிப்பதைப்பார்த்து, "என்ன சமையல் பண்ற ஐடியா இருக்கா இல்லையா?,முடியலைனா சொல்லிடு நான் வெளிய சாப்டுகிறேன், அதவிட்டுட்டு..." என அதற்கு மேல் அவளுக்கு புரியாத வகையில் வாய்க்குள் ளேயே முனங்கி மென்று விழுங்கிவிட்டு குளியலறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.
(இவங்க எஸ்கேப் ஆகுறதுக்கே பாத்ரூம்னு ஒண்ணு கட்டிவச்சிருப்பாங்களோ!!)
ஆனால் அவன் ஊமை பாஷை பேசினால் கூட அவள் கண்டுபிடித்து விடுவாளே!! அப்படி இருக்கையில் இது புரியாதா??
"ரொம்பத்தான் பெரிய இவர் மாதிரி பண்றது.. ஒரு பத்து நிமிஷம் தூங்குனதுக்கு இவ்ளோ பேச்சா?? இதுல முனுங்குற மாதிரியே தெளிவாத் திட்டுறது.. ஹூம்.." என அவனுக்கு லட்சார்ச்சனை செய்தவாரே எழுந்து அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகனை முதுகில் ஒன்று போட்டு எழ சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.
அடுத்த ஒரு மணிநேரமும் அந்த வீடு கலவர பூமியாக காலைநேர பரபரப்புடன்
காட்சியளித்தது.
"அம்மா குளிருது நான் குளிக்கமாட்டேன்"
"பர்ஸ்ல காசு எடுத்தா சொல்லமாட்டியா?"
"என் ஐடி கார்ட காணோம்.."
"என்னடா எதுக்கெடுத்தாலும் அம்மா, உங்க அப்பாட்ட கேளு.."
"ஏய் சட்னில உப்பு பத்தல..."
"நான் என்ன மனுஷியா மிஷினா?? ரெண்டு கை தானா இருக்கு?"
என மாறி மாறி ஏச்சும் பேச்சும் பட்டையை கிளப்ப அக்மார்க் குடும்பக் களேபகரங்களுடன் அமோகமாய் கழிந்தது.
ஒரு வழியாக கணவனையும் மகனையும் பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் பார்சல் செய்து அனுப்பிவிட்டு அப்பாடி
என சாய்ந்தால் இரண்டு வயது வாண்டு தொட்டிலில் பாதி உடலை வெளியே போட்டு அலறிக் கொண்டிருந்தது.
"அதுக்குள்ள எந்திரிச்சிட்டியா?" என சலித்தவாறு போய் தூக்கினாள்.
ஐந்து நிமிடம் உட்கார்ந்து விட்டு ஆசுவாசமாய் கிளம்பலாம் என்ற ஆசை நிராசை ஆக கடகடவென வேலைகள் நடந்தது.
மகளை குளிப்பாட்டி பவுடர் போட்டு உடை,டயப்பர் எல்லாம் மாட்டிவிட்டு தயாராக காய்ச்சி ஆற வைத்திருந்த பாலை பாட்டிலில் ஊற்றி குழந்தையிடம் கொடுத்துவிட்டு அவளுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஆயத்தமானாள்.
காலை உணவை அவதி அவதியாய் உண்டு முடித்து மதிய உணவையும் கட்டிய கையோடு குழந்தைக்கான பையை ரெடி செய்த,ஒவ்வொரு பொருளும் ஆளுக்கொரு மூலையில் கிடந்தது.
அதை எல்லாம் சேகரித்து பையில் அடைத்து குழந்தையை வாரியெடுத்து
ஸ்கூட்டியில் அமர்ந்து மகள் விழுந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு பெல்ட்டை தன்னோடு சேர்த்து பிணைத்து க்ரச்சில் விடும் போது உதட்டை பிதுக்கும் குழந்தை..லேசாக சமாதான முயற்சியில் அவள் இறங்கினாள் கூட அன்று அலுவலகம் அம்போ தான்.
எனவே மகளை அவர்களிடம் ஒப்படைத்தவாறே,"அம்மா உனக்கு சாக்கி வாங்கிட்டு வரேன்" என தினமும் கூறும் பொய்யை இன்றும் கூறி அலுவலகம் விரைந்தாள், போக்குவரத்து நெரிசலில் நீந்தி காரில் போவோரை திட்டி பைக் ஓட்டுபவனையெல்லாம் ஏசி நடப்போருக்கும் வழிவிடாமல் அக்கப்போர் செய்து ஒரு வழியாக ஒன்பது முப்பது அலுவலகத்திற்கு 9.28க்கு பன்ச் செய்த போது மனசாட்சி,
'கொஞ்சம் சீக்கிரமா எந்திரிச்சுயிருந்தா நிதானமா வந்திருக்கலாம்லா' என தன் பணியை செவ்வனே செய்ய,
'ஏன் இப்போ குடுக்குற சவுண்ட அப்பவே குடுத்து எழுப்பி விட்ருக்கலாம்ல' என ஆனானப்பட்ட மனசாட்சியே அடக்கியவள் கொஞ்சம் சோம்பேறி வகையறா...
சீட்டில் அமர்ந்திலிருந்து நிமிர நேரமில்லாமல் வேலையில் மூழ்கிப்போனாள். அவளுடைய சொந்த வேலையில் மட்டுமே இந்த அசால்ட்டும் அசமந்தமும்..ஆனால் அலுவலகத்திலோ பிறர் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் வேலைன்னு வந்தா வெள்ளைக்காரி தான்.

12.30 க்கு மதிய உணவு இடைவேளியின் போது முதல் வாயை எடுத்து வைக்கும் முன் 'க்ரச்'க்கு போன் செய்து குழந்தை என்ன செய்கிறது என கேட்டு விட்டு உணவை முடித்து 'ரெஸ்ட் ரூம் ' கண்ணாடி முன் நின்றாள் .
மாசுமரு இல்லாமல் பளபளத்த சருமம் இப்போது இல்லை, கண்களில் லேசான கருவளையம்-உபயம் கொஞ்சம் குழந்தைகள் நிறைய செல்போன். பளீரிட்ட சருமம் இப்போது சரியாக பராமரிக்காததால் மங்கியிருந்தது, அகவையின் காரணத்தால் மேனியழகு குறையத்துவங்கியிருந்தது, இரண்டு குழந்தைகளும் அறுவைசிகிச்சை மூலம் பிறந்ததால் அடிவயிற்றில் டயர் தோன்றவில்லை என்றாலும் சற்று கனமான 'கேஸ்கட்' உருவாக்கியிருந்தது அந்த முப்பது வயது தெரிவை பெண்ணிற்கு, பேரழகும் கட்டுடலும் கொஞ்சம் கரைந்திருந்தாலும் இப்போதும் லட்சணமாகவே இருந்தாள், ஆனால் இருப்பதை விட இல்லாமல் போனவற்றை நினைத்துத்தானே நமக்கு எப்போதும் கவலை...
கண்ணாடியில் தன் நிஜ பிம்பத்திற்கு
அருகில் துள்ளளும் துறுதுறுப்பும் நிறைந்த தன் பழைய உருவம் தோன்றுவது போன்ற பிரமை..கூடவே தன் முன்னாள் காதலனான இன்னாள் கணவன் அவள் பின்னேயே அலைந்து காதலாய் கதைத்தது கண்முன்னே விரிய,
"நான் முன்னாடி மாதிரி அழகாயில்லன்னு தான் என் மேல இப்பல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லையோ?
என வாய்விட்டு கூறினாள் மாளவிகா..

அங்கே தன் அலுவலகத்தில்,வரும் நிதியாண்டில் எப்பாடுபட்டேனும் ஊதிய உயர்வு பெற வேண்டும் என கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தான் கார்த்திக்..

வருடங்கள் கடந்தாலும் குழந்தைகள் வளர்ந்தாலும் இன்னும் அவனுக்கு காதலியாகவே இருக்க விரும்பும் மனைவிக்கும், வயது ஏறியதால் காதலாய் கரைவதை விட குடும்பத்தை உயர்த்துவதே உண்மை நேசம் என நினைக்கும் கணவனுக்கும் இடையே நிகழும் உணர்வுப்போராட்டம்......

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை

போராட்டம் தொடரும்...
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
கண்ணில் வைத்து காத்திடுவேன் கதைக்கான முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன் பிரண்ட்ஸ் படிச்சிட்டு எப்படியிருந்தது சொல்லுங்கோ..
நிச்சயம் சின்ன பதிவுதான்..
எதிர்பாராத வேலை ...சோ அடுத்த எபியும் எப்போன்னு தெரியலை.. மன்னிச்சு..
நன்றி தோழமைகளே!!!!
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே,

என்னைத்தேடுனீங்களா?? மன்னிக்கவும்..மாறி மாறி குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை.. முதல் எபி குட்டியானதுக்கும் இது தான் காரணம்.. முதல்ல பாப்பா க்கு அப்புறம் தம்பிக்கு.. அவனிடம் இருந்து மீண்டும் பாப்பாக்குன்னு நல்லா வச்சு செய்து.. பாவம் ரொம்ப மெலிஞ்சிட்டா.. எனவே கொஞ்ச நாள் விடுப்பு தாங்க மக்களே.. இடுப்பை எந்நேரமும் விட்டு இறங்காத குழந்தை சரியானனதும் வருகிறேன்...
நன்றி அன்பு நெஞ்சங்களே!!
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 2:

'நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால்
தூங்கமாட்டேன்'

நேரில் சந்தித்து கொள்ளமுடியாத வேளைகளில் அவள் அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள்...
போன்வழியே மணிக்கணக்கில் காதல் பயிர் வளர்த்தபோது அவளின் ஏக்கங்களையும் அவனுக்கான அவளின் தேடல்களையும் இந்த வரிகளை பாடி புரியவைத்திருக்கிறாள்...
அது ஒரு காதல் காலம்...

"பாசமா ஒரு வார்த்தை வாய திறந்து பேசிடாதீங்க..அது எங்க??அப்படி பண்ணாத? இப்படி பண்ணாத? ன்னு சொல்லமட்டும் நான்ஸ்டாப்பா பேசுவீங்களே,முதல்ல ஆபீஸ் கிளம்புங்க நான் நிம்மதியா தூங்கணும்" அடித்துவிரட்டாத குறையாக கிளப்பினாள்.

இது கல்யாணத்தின் கோலம்...

**************

கோபமா?வெறுப்பா?ஆற்றாமையா? எதுவென புரியாத மனநிலையில் அதற்கு வடிகாலாக தன் டயரியை எடுத்து,

'நான் உனக்கு
யார்
என்ற கேள்வி
நரகம் வரை எனை
துரத்தப்போகிறது'

என ஏதோ கிறுக்கிவிட்டு தன் அலுவல்களை கவனித்தாள்.
அன்று பார்த்து அந்த டயரி அவன் கைக்கு கிடைக்க வேண்டுமா??
பார்வையை அதில் ஓட்டியவன் அவள் வந்த அரவம் கேட்டு நிமிர்ந்து,
"ஏன்டி நீ நரகக்துக்கு தான் போவ ன்னு உனக்கே தெரியுமா?" என ஏதோ மிகப்பெரிய ஜோக்கை படித்தவன் போல் விழுந்து விழுந்து சிரிக்க மனைவியிடம் பதில் இல்லாமல் சிரிப்புடனேயே நிமிர,
அங்கே பத்துதலை ராவணன் பெண் உரு கொண்டதுபோல் ருத்ரமாய் உறுத்து விழிக்க,
அவன்,"ஙே?!" என விழித்து
'ஏதாவது தப்பா சொல்லிட்டோமோ?!' என மனதோடு மல்லுக்கட்ட...
 
Last edited:

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!
உங்கள் அன்புக்கு நன்றி! பாப்பாக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லை... இரண்டாவது எபி இன்னும் எழுத ஆரம்பிக்கல ஆனா சீக்கிரம் எழுதிட்டு வருவேன்... இந்த குட்டி டீ எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
லவ் யூ ஆல்....😍😍😍
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் பிரண்ட்ஸ்!!
இந்த வாரயிறுதி அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் இருந்து அத்தியாயம் ரெகுலரா வரும் பா... பாப்பாக்கு இப்போ பரவாயில்லை..
நேற்று ஒரு டீசர் பதிந்திருந்தேன்.. ஆனா நிறையா பேரு பாக்கலையா இல்ல உங்களுக்கு பிடிக்கலையா?? கமெண்ட் டே காணோம்..
முதல் கதை முழுக்க முழுக்க கற்பனை ஆனா இது வாழ்வியல் உண்மை தினம் தினம் நாம் வாழ்ந்து பார்க்கும் வாழ்க்கை சோ இதுக்கு உங்க கருந்துக்களும் ஊக்கமும் ரொம்ப ரொம்ப தேவை.. எல்லாரும் பொங்கல் பிஸில இருக்கீங்கன்னு புரியுது ஆனா எல்லாம் முடிஞ்சு ஃப்ரி ஆனதுக்கு அப்புறம் சொல்லுங்க சரியாயிருக்கான்னு?? மீ வெயிட்டிங்....
லவ் யூ ஆல்...😍😍😍😍
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!
என்னை எல்லாரும் மறந்துடிங்களா... 😞😞😞, வெரி சாரி இன்னும் எபி தராமல் இருப்பதற்கு... நேரமின்மை யை தவிர வேறு காரணங்கள் இல்லை... நம் தளத்தில் வந்து நான் ஒரு சிறு எபியோ பகுதியோ படித்து 1 மாதம் ஆகிறது.. படிக்க வேண்டிய லிஸ்ட் மிக நீளம் ஆனாலும் படிக்க முடியவில்லை.. பொங்கல் வரை மாறி மாறி இரு குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லை அந்த பதட்டத்தில் நான் சரியாக உண்டு உறங்காததால் அவர்கள் சரியானதும் நான் படுக்கையில் விழுந்தேன்...
சிறு ஓய்வுக்குப்பின் மறுபடியும் மீண்டு வந்து இப்போது மகனின் புது பள்ளி அட்மிஷன் காகவும் ஒரு புதிய வீடு வாங்குகிறோம் அதற்காகவும் அலைந்து கொண்டிருக்கிறேன்... நான் இருப்பதோ வேலூரில்.. வீடு வாங்குவது சென்னையில்... எனவே பேங்க் லோன்.. வில்லங்கம் பார்ப்பது.. பத்திர பிரதி எடுப்பது என அங்கிட்டும் இங்கிட்டும் அலைச்சலான அலைச்சல்... என் அன்பு தோழமைகள் புரிந்து கொண்டு என்னை மறக்காமல் இருப்பீர்கள் என நம்புகிறேன்.....😄😄😄.... உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.....
 
Status
Not open for further replies.
Top